விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு61
விக்கிநூல்கள்- உதவி
தொகுவிக்கிநூல் அநாதையாகியுள்ளது, உதவுங்கள்! , விக்கிநூலின் முகப்பினை தற்காலிகமாக மாற்றங்கள் செய்துள்ளேன், தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தரவும்.பிழைகளை திருத்த உதவுவீர். --மொஹமட் சமீர் 10:22, 27 ஆகத்து 2011 (UTC)
- அழகாக உள்ளது. சிறு மாற்றங்கள் செய்துள்ளேன். இலக்கியவியல் என்று கூறுவதை விட இலக்கியம் என்று கூறவதே வழமை என்று நினைக்கிறன். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். --Natkeeran 16:48, 28 ஆகத்து 2011 (UTC)
- சரிதான். ஒரே ஒரு புத்தகத்தை ஒரு இலக்கியம் என்று கூறலாம். ஆனால் ஒரு நூலகத்தில் பல பிரிவுகள் இருக்கிறன. அங்கு பல பிரிவுகள் உள்ளன. அறிவியல், கணிதவியல், சமுக அறிவியல், மொழியியல், என்றும் இறுதியாக இலக்கிய புத்தகங்கள் உள்ள பகுதியை இலக்கியம் பிரிவு என்று கூறுவதா அல்லது இலக்கியவியல் பிரிவு என்று கூறுவதா என்ற சந்தேகம் உருவாகிறதே. விக்கிநூல்கள் என்பது ஒரு நூலகம் என்று கொண்டால் இலக்கியவியல் பகுதி என்றே கூறுவது முறைமை எனத் தோன்றுகிறதே. --Pitchaimuthu2050 14:01, 10 செப்டெம்பர் 2011 (UTC)
- ஒரு நூல் என்றாலும் பல நூல்கள் என்றாலும் அவற்றின் பகுப்பை இலக்கியம் என வகைப்படுத்தலாம். அதில் தவறில்லை. இலக்கியவியல் என்ற சொல்லை முன்னர் எவரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லையே. இலக்கியவியலில் இரு தடவைகள் ”இயல்” பயன்படுத்தப்பட்டுள்ளதோ?--Kanags \உரையாடுக 22:45, 10 செப்டெம்பர் 2011 (UTC)
- தாங்கள் கூறுவதும் சரியே. அப்படியே இலக்கியம் என்றே வகைப்படுத்தலாம். விக்கிபீடியாவில் இருக்கும் அன்பர்களை அவரவர் துறை சார்ந்த நூல்களையோ அல்லது பிற நூல்களையோ தொகுக்க விக்கிநூல்கள் தளத்திற்கு அழைக்கிறேன். இதுவரை மிக மிக சொற்பமான பக்கங்களையே 538(தற்போதுவரை) அங்கு நமது தமிழ் சமுதாயம் உருவாக்கி இருக்கிறோம். பாடநூல்கள், அறிவியல், பொறியியல் சார்ந்த நூல்களை அங்கு தொகுக்கப்பட வேண்டும். நமது மொழியை வளப்படுத்த விக்கிநூல்களை சிறந்த கருவியாக உபயோகித்துக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். எனவே அவரவர் துறை சார்ந்த ஏதேனும் ஒரு புத்தகத்தின் முதல் பக்க பொருளடக்கப் பக்கத்தை உருவாக்குவதன் மூலம் ஆரம்பித்து வைக்கலாம் என எண்ணுகிறேன். விக்கிபீடியா தமிழ் அன்பர்களின் மேலான கருத்துக்களுக்கும் ஆக்கங்களுக்கும் எனது நன்றிகளை முன்னமே தெரிவித்துக் கொள்கிறேன்.--Pitchaimuthu2050 21:34, 14 செப்டெம்பர் 2011 (UTC)
பார்வையற்றோர் கல்வியும் மலையாள விக்கியும்
தொகுஅண்மையில் மலையாள விக்கியர் ஷிஜு அலெக்ஸ் இந்திய விக்கிமீடியா மின்னஞ்சல் குழுமத்துக்கு அனுப்பியது:
Dear Wikimedians
I would like share an unusual story (unusual - especially for Indic language wiki communities) that Malayalam wiki community had faced few months back.
In the month of February 2011, I had received an SOS call from a school teacher (Satyasheelan) who is teaching at the Government School for the Blind in the Kasargod district of Kerala. Satyasheelan was seeking Malayalam wikipedian's support to fix few issues that he and his students faced with few Malayalam alphabets when they read Malayalam wikipedia using a speech synthesizing software called eSpeak. His phone call was surprise to us since Malayalam wikimedians were not aware that visually challenged people are using Malayalam wikipedia. (We were aware about the existence of a software by Santhosh (named Dhawni) to read unicode Malayalam (and other Indic languages also) which is in its early stages of development). So Satyasheelan's call was surprising.
After his phone call few Malayalam wikipedians (Junaid, Thachan Makan, and I) contacted Jonathan Duddington, the primary developer (?) of eSpeak, and we worked with him to fix the issues for Malayalam that Satyasheelan had pointed out. Jonathan fixed the issues pretty fast and later Satyasheelan informed us that now they are able to use Malayalam wikipedia without any issues.
Later while we were planning for the 4th Malayalam wiki meetup (2011 July 11) at Kannur, we decided to invite Satyasheelan to conduct a session, since Malayalam wikimedians liked to hear the experience of students of Blind school (using Malayalam wikipedia). But when Satyasheelan came for the meetup we were surprised and taken aback when we learnt that Satyasheelan is also a visually challenged person. Few of the his colleagues (who are also visually challenged) also attended the meetup. Satyasheelan was accompanied by his son, Nalin.
The meetup was attended by more than 80 Malayalam wikipedians. Few photos are available here. We are happy that Bishaka, Hisham, and Tory were kind enough to join us for this meetup. There were various programs conducted as part of this meetup (the report of the meetup is available at various locations (in Malayalam)). Definitely the highlight of the meetup was the demonstration by Satyasheelaman. So this mail is about that.
Malayalam wikimedian Ajay Kuyiloor took extra efforts to record Satyasheelan's session. We are sharing an edited version of this session assuming that this information will help other Indic language wiki communities.
The video of Satyasheelan's session is available here: http://www.youtube.com/watch?v=gr1T3HeBTvU The duration of the video is around 9 minutes. We specially thank Ajay Kuyiloor, Girish Mohan, and Jithin who worked on this video. We admit the low quality of video since we were not prepared for such a session. Inconvenience due to this is deeply regretted.
Malayalam community is welcoming your comments regarding this story so that the discussion regarding this will benefit rest of the Indic wiki communities also. We are actually humbled by the fact that work we do in wikipedia is reaching out to people from all wakes of life.
NOTE: Satyasheelan specially thanked Malayalam wikimedians for creating a special navigational template for reaching out easily to wikipedia articles. I still remember in 2008 when Malayalam wikipedia user:Sadhik Khalid created this template, some of us had doubted the need of such a template. Our doubt was, why such a template is required when users can reach out to articles easily using serach box. Now to our surprise we understood this template is very much useful for the visually challenged people (whom we never thought about before).
Video of Satyasheelan's session is available here: http://www.youtube.com/watch?v=gr1T3HeBTvU
Thanks
Shiju Alex
தகவலுக்கு நன்றி. மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி. --Natkeeran 16:40, 28 ஆகத்து 2011 (UTC)
Bilingual brain stays 'flexible' longer: Study
தொகு"The bilingual brain is fascinating because it reflects humans' abilities for flexible thinking – bilingual babies learn that objects and events in the world have two names, and flexibly switch between these labels, giving the brain lots of good exercise," said Patricia Kuhl, --Natkeeran 03:53, 31 ஆகத்து 2011 (UTC)
ரமழான் வாழ்த்துகள்
தொகுரமழான் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து விக்கி நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.--Kanags \உரையாடுக 08:22, 31 ஆகத்து 2011 (UTC)
- பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து விக்கி நண்பர்களுக்கும், எனது பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.--கலை 08:28, 31 ஆகத்து 2011 (UTC)
- பண்டிகை கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் ஈகை திருநாள் வாழ்த்துகள் !--மணியன் 09:35, 31 ஆகத்து 2011 (UTC)
- அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள். --Natkeeran 18:23, 31 ஆகத்து 2011 (UTC)
- விழாக் கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த ஈகை நாள் வாழ்த்துகள்!--பவுல்-Paul 18:30, 31 ஆகத்து 2011 (UTC)
- இப்பொழுதுதான் இந்த பகுதியைக் கண்டேன். இதுபோன்ற பொதுவான வாழ்த்துக்களை பயனர் பக்கங்களில் தெரிவிப்பதை விட ஆலமரத்தடியில் எழுதுவதால் குறிப்பிட்ட அந்த பண்டிகை தொடர்பான கட்டுரைகளும் வளர்ச்சியடையும் என்பது எனது கருத்து -- மாகிர் 08:07, 15 செப்டெம்பர் 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? சிறு சந்தேகம்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெறும் தகவல்களுக்கான கட்டுரையில் பங்களித்த பயனர் பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா திட்டம்” எனும் தலைப்பில் அது வெளியிடப்பட்ட விவரம் குறித்து வார்ப்புரு மூலம் தகவல் அளிப்பது , குறிப்பிட்ட பயனருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு செய்திதான். எனக்கு வந்த சந்தேகம்... இந்த வார்ப்புரு தகவலுக்கான கட்டுரையைத் தொடங்கியவருக்கான பயனர் பக்கத்தில் சேர்க்கப்படுகிறதா? இல்லை, குறிப்பிட்ட கட்டுரையில் பங்களித்தவர்களிலிருந்து அந்தத் தகவலைக் கட்டுரையில் சேர்த்தவரைக் கண்டறிந்து அவருக்கான பயனர் பக்கத்தில் சேர்க்கப்படுகிறதா? விவரம் அளிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:56, 3 செப்டெம்பர் 2011 (UTC)
- கட்டுரையில் குறிப்பிட்ட அளவு பங்களித்தவர்கள் அனைவருக்கும் அந்த வார்ப்புரு இடப்படும். எனவே தான் “பங்களிப்பு” என்ற சொல் அந்த வார்ப்புருவில் இடம்பெறுகிறது. ஒரே கட்டுரைக்கு பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்திருந்தாலும் அனைவருக்கும் அந்த வார்ப்புரு இடப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:11, 3 செப்டெம்பர் 2011 (UTC)
- நன்றி. என் சந்தேகம் தீர்ந்தது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:17, 3 செப்டெம்பர் 2011 (UTC)
sodabottle, குறிப்பிட்ட அளவு என்றுள்ளீர்கள்.. ஏதேனும் KB அளவு உள்ளதோ?--தென்காசி சுப்பிரமணியன் 07:40, 5 செப்டெம்பர் 2011 (UTC)
- kb அளவென்று தற்போதும் எதுவும் இல்லை. உரைதிருத்தஙகள், உள்ளிணைப்புகள், விக்கியாக்கம் தவிர பிற பங்களிப்புகள் செய்தவர்கள் அனைவருக்கும் தற்போது வார்ப்புரு இட்டு வருகிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:46, 5 செப்டெம்பர் 2011 (UTC)
வார்ப்புரு birth date மற்றும் death date பற்றிய பரிந்துரை
தொகுநபர்களைப்பற்றியக் கட்டுரைகளில் நாம்
- {{birth date and age|mf=yes|1991|08|9}} என பயன்படுத்தும் போது, தானாக அவ்வார்ப்புரு [[பகுப்பு:1991 பிறப்புகள்]] என கட்டுரையை பகுக்க வழிசெய்யலாமே?
- இதே போல், birth date, death date and age, death date முதலிய வார்ப்புருக்களுக்கும் செய்யலாமே?
இதைக்குறித்து உங்களின் கருத்து என்ன? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:29, 5 செப்டெம்பர் 2011 (UTC)
- நல்ல யோசனை ஜெயரத்தினா. வேலையை வெகுமளவு குறைக்கும். செய்து விடுங்கள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 13:31, 5 செப்டெம்பர் 2011 (UTC)
- ஆயிற்று நன்றி ஐயா. வார்ப்புரு:Death date, வார்ப்புரு:Death date and age, வார்ப்புரு:Birth date மற்றும் வார்ப்புரு:Birth date and age ஆகியவற்றிற்க்கு செய்திருக்கின்றேன். கட்டுரைகள் சிலவற்றிலும் பரிசோதித்தேன். சரியாக வருவதாகத் தோன்றுகின்றது. ஆனாலும் எங்கேனும் வார்ப்புரு உடைந்து காணப்பட்டால், தயவு செய்து திருத்தத்தை முன்னிலையாக்கிவிடவும்.--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:47, 5 செப்டெம்பர் 2011 (UTC)
- சோதித்துப் பார்த்து விட்டேன் ஜெயரத்தினா. பிழை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. அட்டகாசமான இந்த யோசனை + செயலாக்கத்துக்கு உங்களுக்கு ஒரு பெரும் நன்றி :-) --சோடாபாட்டில்உரையாடுக 15:55, 5 செப்டெம்பர் 2011 (UTC)
- தங்களின் வாழ்துக்கும் பதக்கத்திற்கும் மிக்க நன்றி ஐயா--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:25, 5 செப்டெம்பர் 2011 (UTC)
- சோதித்துப் பார்த்து விட்டேன் ஜெயரத்தினா. பிழை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. அட்டகாசமான இந்த யோசனை + செயலாக்கத்துக்கு உங்களுக்கு ஒரு பெரும் நன்றி :-) --சோடாபாட்டில்உரையாடுக 15:55, 5 செப்டெம்பர் 2011 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி
தொகுஏனைய மொழி விக்கிப்பீடியாக்களுடன் போட்டியிட்டு இப்போது நாம் 62 ஆம் இடத்தில் இருக்கிறோம். இன்னும் ஒரு சில கட்டுரைகளால் நாம் சாவக மொழி விக்கிப்பீடியாவைப் பிடித்து விடுவோம். இந்த வளர்ச்சியை அடைவதற்கு நூற்றுக் கணக்கிலும், சிலர் ஆயிரக் கணக்கிலும் கட்டுரை எழுதி உதவியிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த ஓராண்டு காலத்தினுள் நாம் அடைந்த வளர்ச்சி அளப்பரியது. இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.--பாஹிம் 15:11, 6 செப்டெம்பர் 2011 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் உவகையடைகிறோம். தொடர்ந்து முன்னேறுவோம்.--சஞ்சீவி சிவகுமார் 15:23, 6 செப்டெம்பர் 2011 (UTC)
தற்போது நாம் சாவக மொழி, லட்விய மொழி விக்கிபீடியாக்களுடன் போட்டி போடுகிறோம். அதற்காக நாம் கட்டுரை எண்ணிக்கை அதிகரிப்பில் மாத்திரம் கவனம் செலுத்துவது சரியல்ல. முதலில் இருக்கிற 36000க்கும் அதிகமான கட்டுரைகளை சிறந்தமுறையில் உருவாக்கவேண்டும். இத்தனை கட்டுரைகள் இருந்தும் சிறப்புக் கட்டுரைகள் 10 மட்டுமே என்பதை நாம் கவனிக்கவேண்டும். லட்விய மொழியில் 42 சிறப்புக் கட்டுரைகள் உள்ளன.--Prash 06:17, 7 செப்டெம்பர் 2011 (UTC)
- Prash, பொதுவாக பெரும்பாலான மொழி விக்கிப்பீடியாக்களிலும், முதற் பக்கத்தில் காட்சிபடுத்த கட்டுரைகளைத் தேர்நெத்டுக்கவே சிறப்பு கட்டுரைகள் முறை பின்பற்றப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தமிழ் விக்கியிலும் அதே பழக்கம் இருந்தது. ஆனால் குறைவான சிறப்பு கட்டுரைகளே உருவானதாலும், ஒரு சிறப்புக் கட்டுரையை நியமனம் செய்ய ஏற்பட்ட உழைப்பு/முயற்சி அதிகமாக இருந்ததாலும், பல பயனர்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி ஒவ்வொரு வாரமும் நடைமுறையில் முடியவில்லை என்பதாலும் முதற்பக்கத்தில் கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படாமல் பல மாதங்கள் தேங்கின. இதனால் சிறப்புக் கட்டுரைக்கு மாற்றாக “முதற்பக்கக் கட்டுரை” என்ற புதிய தரப் பகுப்பு உருவாக்கப்பட்டது. இது நடைமுறையில் சிறப்பு கட்டுரைக்கு அடுத்த கட்ட தரப்பகுப்பாக அமைந்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக தொய்வின்றி வாரம் இருமுறை நல்ல கட்டுரைகளை முதற்பக்கத்தில் காட்சிபடுத்தவும் முடிந்துள்ளது. இன்று 400 முதற்பக்கக் கட்டுரைகள் உள்ளன. தமிழ் விக்கி முனைப்பாக செயல்படத் தொடங்கி ஆறாண்டுகள் கழித்து 36,500 இல் 10 முதல் தரக் கட்டுரைகளும் 400 அடுத்த தரக் கட்டுரைகளும் இருப்பது ஓரளவு நல்ல ஆரோக்கியமான சூழலே.
- எனினும் நீங்கள் கூறும் எண்ணிக்கை எதிர். ஆழம்/தரம் கவனிக்கத்தக்கதே. இதனைப் பலமுறை இங்கு விவாதித்துள்ளோம். எண்ணிக்கையும் வேண்டும் ஆழமும் வேண்டும். ஆனால் இதில் ஏதேனும் ஒன்றுக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதில்லை. இரண்டிற்கும் வெவ்வேறு பலங்களும், நற்கூறுகளும் உள்ளன. அகல உழுவோரும் ஆழ உழுவோரும் சமமாக நமக்கு வேண்டும். மொத்த கட்டுரை எண்ணிக்கை என்பது உடனடியாக ஒப்பீடு செய்து பார்க்கக்கூடிய ஒரு எளிய அளவு கோலாக உள்ளதால் அதனை வெளிப்படையாக இனங்காட்டி மகிழவும் உற்சாகம் கொள்ளவும் முடிகிறது. ஆனால் தரம் அப்படியன்று, வெளிப்படையாக எண் அடிப்படையில் கூற இயலாது. எ. கா ”சிறப்பு கட்டுரைகள்” என்பதன் தகுதி விக்கிக்கு விக்கி மாறுபடும். ஆங்கில/டாய்ச்சு விக்கிகளின் சிறப்புக் கட்டுரைத் தரம் பிற விக்கிகளுடன் ஒப்பிடுகையில் மிகக் கடுமையானது. எனவே நாம் 10, அவர்கள் 42 என்பதும் சற்று நெருடலான ஒரு ஒப்பீடே (மொத்த கட்டுரை எண்ணிக்கையைப் போலவே). --சோடாபாட்டில்உரையாடுக 07:54, 7 செப்டெம்பர் 2011 (UTC)
- நல்லகருத்து Prash. எனக்கொரு சந்தேகம் சிறப்புக் கட்டுரைகள் 10 உள்ளதாகக் தெரிவித்துள்ளீர்கள். இந்த சிறப்புக் கட்டுரைகள் எந்த அடிப்படையில் சிறப்புக் கட்டுரைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன? சிறப்புக் கட்டுரைகளுக்கான விதிமுறைகள் என்ன? சிறப்புக் கட்டுரைகளை யார் தேர்ந்தெடுக்கின்றார்கள்? அறியமுடியுமா--P.M.Puniyameen 06:50, 7 செப்டெம்பர் 2011 (UTC)
- விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் என்ற பக்கத்தில் நியமனம், தகுதிகள் பழைய சிறப்பு கட்டுரைகள் போன்ற தகவல்கள் உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 07:26, 7 செப்டெம்பர் 2011 (UTC)
- சோடாபோட்டிலின் கருத்துடன் பெருதும் உடன்படுகிறேன். அகல உழும் போது நாம் கட்டுரைகளின் பல்வகைத்தன்மை பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். சில சிறிய விக்கிகளில் இருப்பது மாதிரி எம்மால் தானியங்கி மூலம் ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஊர்கள் பற்றி ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் உருவாக்கிவிடலாம். ஆனால் அது தமிழ் விக்கியின் தரத்தை அதிகரிக்காது. மாற்றாக எதாவரு ஒரு கட்டுரைப் பொத்தானை பத்து முறை செடுக்கினால் ஒன்பது முறையும் ஐ.அ இடங்கள் பற்றிய கட்டுரையே வரும். இது புதுப் பயனர்களுக்கு, ஊடகங்களுக்கு ஒரு தவறான பார்வையைத் தரக் கூடும். --Natkeeran 23:40, 7 செப்டெம்பர் 2011 (UTC)
குறுகிய இணைப்பு வேலைசெய்யவில்லையா?
தொகுதமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளுக்கான குறுகிய இணைப்பைச் சொடுக்கியபோது Cannot find file: /home/yuvipanda/apps/shortify/public/parking.php என்றுவருகிறது. எடுத்துக்காட்டாக ஓணம் கட்டுரையின் இணைப்பு http://tawp.in/r/bih வேலைசெய்யவில்லை. யாராவது தெரிந்தால் சரிசெய்ய இயலுமா?--உமாபதி \பேச்சு 17:29, 6 செப்டெம்பர் 2011 (UTC)
- ஆம் வேலை செய்யவில்லை. ஸ்ரீகாந்துக்கு தெரியப்படுத்தியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:49, 6 செப்டெம்பர் 2011 (UTC)
- ஸ்ரீகாந்த் சரி செய்துவிட்டார்.--சோடாபாட்டில்உரையாடுக 18:16, 6 செப்டெம்பர் 2011 (UTC)
- நன்றி சோடாபாட்டில். இப்போது வேலைசெய்கிறது. --உமாபதி \பேச்சு 18:22, 6 செப்டெம்பர் 2011 (UTC)
எண்களின் பாகுபாடு
தொகுநான் எண் கொள்கை எனும் தலைப்பில் கட்டுரையொன்று எழுதியுள்ளேன். எனினும் எண்கள் பகுக்கும் விதத்தில் குழப்பமாக உள்ளது. யாரேனும் இவ்விடயமாக உதவினால் நல்லது. இது விடயமான கருத்துக்களை அறிய விழைகிறேன்--Prash 05:52, 7 செப்டெம்பர் 2011 (UTC)
- கட்டுரையின் பேச்சு பக்கத்தில் இந்த செய்தியை இடுங்கள். கணிதமறிந்தவர்கள் அங்கு ஆலோசனைகள் தருவர் பயனர்:Profvk இடம் கேட்டுப் பாருங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 06:31, 7 செப்டெம்பர் 2011 (UTC)
நாடுகள் திட்டம்
தொகுதமிழ் விக்கிபீடியாவில் பல நாடுகளிலிருந்தும் பங்களிப்பாளர்கள் பங்களிக்கின்றனர். எனவே அவர்கள் தத்தமது நாடுகளைப் பற்றிய பல விடயங்களை அவ்வவ் கட்டுரைகளில் எழுதி அக்கட்டுரைகளை விரிவாக்கலாம். இது எனது தாழ்மையான கருத்து.--Prash 11:27, 8 செப்டெம்பர் 2011 (UTC)
தட்டச்சுக் கருவி நீட்சி
தொகுநமது தமிழ் தட்டச்சு கருவியின் புதிய பதிப்பு (நரையம் மீடியாவிக்கி நீட்சி) விக்கி மூலத்திலும், விக்கி நூலகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நீட்சி பதிப்பினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்
- அனைத்து திட்டங்களுக்கும் பொதுவான ஒரே இடத்தில் நிரல் இருப்பதால் - மாற்றங்கள், வழு களைதல் எளிது
- ஒரு முறை தேர்வு செய்து விட்டாலே ஒரு பக்கத்தில் உள்ளீடு செய்ய வேண்டிய அனைத்து இடங்களிலும் தட்டச்ச முடியும் (இப்போது ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியே தேர்வு செய்ய வேண்டும்)
- கருவி வேண்டாம் என்று கருதுபவர் விருப்பத் தேர்வுகள் வழியாக கருவியை நீக்கி விடலாம்
- கருவிக்கான இணைப்பு இப்போது தேடு பெட்டிக்கு அருகில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. புதிய நீட்சி மேலே இருப்பதால் இட சிக்கல் தீர்கிறது.
- வேகமான தட்டச்சு / பக்கம் தோன்றுதல்
முன்பு நீட்சியை நேரடியாக தமிழ் விக்கியில் நிறுவியதால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டு அதனை நீக்க வேண்டியதானது. ஆகையால் இம்முறை குறைவான பயனர்கள் செல்லும் திட்டங்களான விக்கி நூல்களிலும், விக்கி மூலத்திலும் நிறுவியுள்ளோம். இதனை நன்றாக சோதித்து குறைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன். குறிப்பாக தமிழ்99 பயன்படுத்துவோரின் உதவி தேவைப்படுகிறது. இதில் குறைகள் ஏதும் இல்லையென்று உறுதி படுத்தியபின்னர் விக்சனரி, விக்கி செய்தி மற்றும் விக்கிப்பீடியாவிலும் நிறுவப்படும்.
கருவிக்கான சில இணைப்புகள் தற்போது ஆங்கிலத்தில் தெரியும், அவற்றை தமிழில் மாற்றியிருக்கிறேன். அவை தெரிய ஒரு நாளாகலாம். தற்போது (விக்கி நூல் மற்றும் விக்கி மூலத்தில்) பக்கத்தின் மேல் உங்கள் பயனர் பெயருக்கு இடப்புறம் “input method" அல்லது “தமிழில் எழுத” என்று தோன்றும் இணைப்பை சொடுக்கி இக்கருவியை சோதித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். சோதனையில் தோன்றியவற்றை இங்கு பதிவு செய்யுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 18:50, 12 செப்டெம்பர் 2011 (UTC)
- சோடாபாட்டில், இக்கருவியை விக்கிசெய்தியிலும் இணைத்து விடுகிறீர்களா?--Kanags \உரையாடுக 21:12, 12 செப்டெம்பர் 2011 (UTC)
- கனக்ஸ், இது புதிய பதிப்பென்பதால் தற்போதைக்கு சோதனை செய்வதற்காக பயனர் குறைவாகச் செல்லும் திட்டங்களில் மட்டும் சேர்த்திருக்கிறோம். அதிகம் பேர் செல்லும் திட்டத்தில் ஏதேனும் முறிந்து விடக்கூடாது என்ற சாக்கிரதை உணர்வு உள்ளது :-). எனவே விக்கி செய்திகளில் இப்போதைக்கு நிறுவவில்லை. சென்ற முறை விக்கிப்பீடியாவில் நிறுவி பிரச்சனையானது போல நடக்காமல் இருக்க இவ்வேற்பாடு. இது சோதனை ஓட்டம் மட்டுமே. சோதித்து வழுக்கள் இல்லை, சிக்கல் இல்லை என்று உறுதியானவுடன் அடுத்த வாரம் பிற திட்டங்களில் நிறுவி விடலாம். --சோடாபாட்டில்உரையாடுக 21:17, 12 செப்டெம்பர் 2011 (UTC)
- சோடாபாட்டில், விக்கிமூலத்திலும் விக்கி நூல்களிலும் Input கருவியைப் பயன்படுத்தி தமிழ் இடுகை செய்து பார்த்தேன். நான் தமிழ்99 பயன்படுத்துவதில்லை. பெயர்ப்பு முறையில் குழப்பம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பாராட்டு!--பவுல்-Paul 23:23, 12 செப்டெம்பர் 2011 (UTC)
- find & Replace பெட்டியிலும் (மேம்பட்ட->find & replace) இக்கருவி வந்தால் நன்றாயிருக்கும் -- மாகிர் 11:36, 13 செப்டெம்பர் 2011 (UTC)
- தமிழ்99 (Mac Os+FF) சோதித்துப் பார்த்தேன்; shift+m அழுத்தினால் '/' வரவேண்டும் , ஆனால் 'ர' தான் வருகிறது. Toggling சற்று கடினமாக உள்ளது. மாக்கில் (Ctrl+M) வேலை செய்வதில்லை. (மினிமைசு ஆகிறது). மேலும் வழுக்கள் தென்பட்டால் பதிகிறேன். --மணியன் 09:08, 16 செப்டெம்பர் 2011 (UTC)
- கூட்டெழுத்துகளிலும் பிரச்சினை உள்ளது..(உ-ம்) பககம் தஙகம் அமமா ...ஒற்று வருவதில்லை. இந்தப் பிரச்சினை Mac OS+Safariயில் இல்லை.ஒழுங்காக வருகிறது. --மணியன் 09:12, 16 செப்டெம்பர் 2011 (UTC)
- நான் இரண்டு தளத்திலும் பயன்படுத்தினேன். ""அaலnஙbஊe"" இவ்வாரு நான் ஒரு பொத்தானை அழுத்த அங்கு அதற்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்து என்று இரண்டு எழுத்துக்கள் வருகிறது. ஒரு வேளை எனது கணினியில் மட்டும் தான் இந்த விடயமா?.--இராஜ்குமார் 10:06, 16 செப்டெம்பர் 2011 (UTC)
இராஜ்குமார், கேச்சை தூக்கிவிட்டு பார்த்தீர்களா? வழு பதியும் பொழுது, எந்த தட்டச்சு முறை, இயங்குதளம்,உலாவி அவைகளின் பதிப்பு இருந்தால் நல்லது. மணியன், நீங்களும் தனித்தனியாக அவ்வாறு இட்டால் சுலபமாக இருக்கும். நன்றி. ஸ்ரீகாந்த் 20:21, 17 செப்டெம்பர் 2011 (UTC) ஸ்ரீகாந்த்.
- உலாவி குரோம்,வின்டோஸ் 7, எழுத்துபெயர்வு. கேச்சை தூக்கிவிட்டு பார்க்கவில்லை. பார்த்து கூறுகிறேன். நன்றி. --இராஜ்குமார் 04:23, 18 செப்டெம்பர் 2011 (UTC)
- ஸ்ரீகாந்த். சஃபாரி உலாவியில் சரியாக வருகிறது. ஆனால் கூகிள் குரோமில் ""அaலnஙbஊe""(எழுத்துப்பெயர்வு) இவ்வாறு வருகிறது. எக்ஸ்பி, விண்டோஸ் 7 இரண்டிலும் அப்படித்தான் வருகிறது. தமிழ்99-இல் "அaகhனiலn" இவ்வாரு வருகிறது. --இராஜ்குமார் 07:33, 18 செப்டெம்பர் 2011 (UTC)
- ஸ்ரீகாந்த், நான் சோதித்தது தமிழ்99 மட்டுமே..."/ " வழு பொதுவானது. shift+m இதனைத் தரவேண்டும். வேறு ஏதாவது கீ காம்பினேசனில் உள்ளதா?
- மற்ற வழு பற்றி முன்னரே இயங்குதளம்+உலாவி குறிப்பிட்டுள்ளேன். எனினும் சஃபாரியில் பிழையில்லை. மாக் ஓஸ் 10.4.11, சஃபாரி: 4.1.3 (4533.19.4)
- (Mac Os+FF) கூட்டெழுத்துப் பிழை வருகிறது. மாக் ஓஸ் 10.4.11, Mozilla/5.0 (Macintosh; U; Intel Mac OS X 10.4; en-US; rv:1.9.2.22) Gecko/20110902 Firefox/3.6.22--மணியன் 07:56, 18 செப்டெம்பர் 2011 (UTC)
- விக்கிநூலில் உள்ள தட்டச்சி வழுக்கள் உள்ளது, ( amma ==> அம்ம்ம்மா) pls fix the bug. விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படும் தட்டச்சுக்கருவியை எனது தனிப்பட்ட தோலில் அமைத்து பயன்படுத்துகின்றேன், அது நன்றாகவே இருக்கிறது. --சமீர் 04:32, 20 செப்டெம்பர் 2011 (UTC)
- சமீர், எந்த உலாவி + இயங்குதளத்தில் இவ்வழு? --சோடாபாட்டில்உரையாடுக 04:43, 20 செப்டெம்பர் 2011 (UTC)
சோதித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் வழுக்களை விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு/நரையம் பட்டியலில் இடுங்கள். நானோ / சோடாபாட்டிலோ அதனை சரிபார்த்து பின் விக்கியூடக வழு பதிவு செய்வோம். மணியன், Shift m = ர, தமிழ் விக்கியிலும் அவ்வாறே வருகின்றதே :|. ஸ்ரீகாந்த் 05:28, 20 செப்டெம்பர் 2011 (UTC)
விக்கிநூல்கள் அனைத்து பாடங்கள் பகுப்புகள்
தொகுமிகவும் கவலைக்கிடமாக இருந்த நமது விக்கிநூலில் உள்ள அனைத்து வகைப்பகுப்புகளையும் ஒரு வழியாக ஒழுங்கு படுத்திவிட்டேன். கடந்து மூன்று நாட்களாக வார்ப்புருக்கள் உருவாக்கும் பொழுது ஏற்படும் கொடுமையான வழுக்களுடன் மங்காத்தா விளையாடி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். அதில் உள்ள தாய்ப்பகுப்பை இங்கு பார்க்கலாம். பின் அனைத்துப் பாடங்கள், பாடம், துணைப்பாடம், முடிவுற்ற நிலை போன்ற பகுப்புப் பக்கங்களையும் பார்க்க. இன்னும் அகர வரிசைகள், நூலின் பக்கங்கள், போன்றவைகளை உருவாக்க வேண்டும். விரைவில் செய்து முடிக்கவிருக்கிறேன். உங்கள் அனைவரது கருத்துக்களையும் அறிய ஆவல். நன்றி. --இராஜ்குமார் 23:20, 15 செப்டெம்பர் 2011 (UTC)
- மிகமுக்கியமான பங்களிப்பு இராஜ்குமார். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 23:44, 15 செப்டெம்பர் 2011 (UTC)
- தற்போது விக்கிநூல்கள் ஓரளவிற்கு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் இராஜ்குமார்.--Pitchaimuthu2050 08:09, 16 செப்டெம்பர் 2011 (UTC)
தமிழ் விக்சனரி: நிகழ்தரவிகளின் (Messenger) மூலம் பிணைக்கப்படலாமே?
தொகுஒரு பயனர் தமிழ் விக்சனரி'யில் உள்ள சொற்களைத் தேட http://ta.wiktionary.org செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு வேளை இந்த தமிழ் விக்சனரி நிகழ்தரவிகளின் சேவைகளில் இனைப்பதன் மூலம் http://ta.wiktionary.org தளத்திற்குச் செல்லாமலே ஒரு சொல்லின் பொருளை நிகழ்தரவி உபயோகிப்பாளர்கள் தெரிந்து கொள்ளலாமே. இப்படிப்பட்ட சேவையை வழங்க http://ta.wiktionary.org விரும்புகிறது என்றால், மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
- உதாரணமாக ஒருவர் TALK என்னும் நிகழ்தரவிகளின் சேவையை பயன்படுத்தினால். அவர் wikidcitionary என்னும் பெயரையும் (at contacts list) அவரது நிகழ்தரவியில் கொண்டு இருக்கிறார், அவருக்கு ஒரு சொல்லின் பொருள் தேவைப்படுகிறது எனில் wikidcitionary என்ற தொடர்புடன் அரட்டை சன்னலை (Chat Window) திறந்து அதில் அவருக்குத் தேவையான சொல்லை எழுதி அனுப்பினால் நமது தமிழ் விக்சனரி அந்தச் சொல்லுக்குறிய பொருளை அனுப்பும்.
இதனால் உருவாகும் நன்மைகள்
- http://ta.wiktionary.org செல்ல முடியாதவர்களும் http://ta.wiktionary.org சேவையைப் பெற்றிட முடியும்.
- மேலதிக சொற்கள் http://ta.wiktionary.org க்கு கிடைக்கும், அவற்றைத் தொகுக்க http://ta.wiktionary.org அன்பர்களை இணையத்தில் அழைக்கலாம்.--Pitchaimuthu2050 08:04, 16 செப்டெம்பர் 2011 (UTC)
விக்சனரி கலைச்சொற்கள்
தொகுதமிழ் விக்சனரியில் கலைச்சொற்கள் தெடுவோருக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பக்கத்தைப் பார்க்கவும். இதில் எத்தனை விதமாக ஒரு சொல்லை தொகுக்க முடியுமோ அத்தனை விதமாக தொகுத்துள்ளார்கள். கலைச்சொற்களுக்கு தயவு செய்து ஒன்று அல்லது இரண்டு சொல்லை மட்டும் கொடுங்கள். இது போன்ற கற்பனைகளையெல்லாம் பேச்சுப்பக்கதில் தொகுத்து வையுங்கள். பல பொருள் இருந்தால் கூடப் பரவாயில்லை. ஒரே சொல்லை வேறு வேறு விதமாக எழுதுவதில் பயனில்லை. viscosity. ஒரு பக்க பொறியியல் பாட நூலை மொழிபெயர்ப்பதற்குள் உயிர் போய் உயிர்வருகிறது. ஏழு இடத்தில் சரிபார்க்க வேண்டிய நிலை. ஏற்கனவே தரப்படுத்திய சொற்களுக்கே இந்த நிலைமை. நான் இதனை ஒரளவிற்கு சரிசெய்கிறேன். நீங்களும் இனி விக்சனரியில் தேடும் பொழுது ஏதேனும் இப்படி இருந்தால் திருத்துங்கள்.
volume - கனவளவு என்று இருக்கிறது. கன அளவு என்பதை யார் இப்படி எழுதினார்கள் என்று தெரியவில்லை. இவ்விரண்டு சொல்லையும் சேர்த்து எழுத முடியுமா? கனம் + வளவு என்று தான் வருகிறது. கனஅளவு என்று தான் எழுதவேண்டும். --இராஜ்குமார் 20:00, 17 செப்டெம்பர் 2011 (UTC)
- இப்பக்கத்தில் உள்ளவையெல்லாம் சரிதானா என்று யாரேனும் பார்த்து சொல்லுங்கள். --இராஜ்குமார் 20:06, 17 செப்டெம்பர் 2011 (UTC)
- அச்சொல்லின் வரலாற்றைப் பார்த்தீர்களா? அவற்றின் மூலம் அதில் உள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகத்திலிருந்து எடுத்து போடப்பட்டுள்ளது. அங்குள்ள படியேதான் இங்கும் உள்ளது. புற தரவுகளில் இருந்து எடுத்து இடப்படும் சொறகளை மூலம் என்னவென்று பாராமல் “கற்பனை” என்று வர்ணனை செய்ய வேண்டாம். பல கலைச்சொற்கள் இருப்பவையெல்லாம், இலங்கை வழக்கு, தமிழ்நாடு வழக்கு, முன்பு பாடநூற்களில் இருந்தவை, இப்போது இருப்பவை என்பவை, யாரும் இங்கு இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கவில்லை. எது பொருத்தமானது என்று தெளிவாக உரையாடாமல் இது தான் சரியான வடிவம் என்று நாமாகத் தன்னிச்சையாகத் தேர்வு செய்து பிறதை நீக்க முடியாது. மொழிபெயர்ப்பு எளிதாக அமையவேண்டுமென்பதற்காக உரையாடாமல் எதையும் நீக்க வேண்டாம். ”ஒரே சொல்லை வேறு வேறு விதமாக எழுதுவதில் பயனில்லை” இதில் என்ன சிக்கல் என எனக்குத் தெரியவில்லை. இலக்கணப்பிழை இல்லையெனில் பல்வேறு பிரித்தெழுதும் வடிவங்கள் இருப்பது நல்லதே. பல விதமாகத் தேடுவோருக்கும் இவை பலனுள்ளதாக இருக்கும்.-சோடாபாட்டில்உரையாடுக 03:05, 18 செப்டெம்பர் 2011 (UTC)
சோடாபாட்டில். உங்கள் கருத்துக்கு நன்றி. இதனை பாருங்கள்.
thermal conductivity.
இயற்பியல். வெப்பங்கடத்துந்திறன்; வெப்பம் கடத்தும் திறன்
பொறியியல். வெப்பக் கடத்துமை; வெப்பங் கடத்து திறன்; வெப்பங் கடத்துமை
மாழையியல். வெப்பம் கடத்தும்திறன்
வேதியியல். வெப்பங் கடத்துதிறன்
இவ்வாறு விக்சனரியில் உள்ளது. இதற்கு பதிலாக வெப்பம் கடத்தும் திறன்; வெப்பம் கடத்துமை என்று இரண்டு சொற்களை மட்டும் எழுதினால் போதும். எதற்கு ஏழுமுறை எழுதுகிறோம். ஒரு வேளை விக்சனரியில் ஒரு பக்கத்திற்கு 500 பைட்கள் தரவு இருக்க வேண்டும் என்பதால் இப்படி எழுதிகிறோமா. எல்லாத் துறைகளிலுமே ஒரே மாதிரி சொல் பயன்படுத்தும் பொழுது ஏன் துறை வாரியாக பிரிக்க வேண்டும். வெப்பம் கடத்தும் திறன் என்பதை நீங்கள் எப்படி தேடினாலும் தேடு பொறி நிச்சயம் காண்பிக்கும். அதுவும் அல்லாது ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் கலைச்சொற்கள் தேடப்படுகின்றன. அது காரணமல்ல. மற்றொன்று பிரித்து எழுதிக் காட்டுவதெல்லாம் விளக்கம் என்ற பகுதியில் காண்பிக்கலாமே. ஏன் பொருள் பகுதியிலேயே அனைத்தையும் போட்டு புதைக்கிறோம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அச்சுப்பிரதி என்னிடம் உண்டு. அதில் ஒரு சொல்லுக்கு ஒரு கலைச்சொல் தான் உள்ளது. இலக்கணப்பிழையும், இவ்வகையான சொற்களும் ஒன்றிரண்டு அல்ல. ஏராளமாக உள்ளது. கலைச்சொற்களுக்கும், மற்ற சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணருவீர்கள் என்று நினைக்கிறேன். கலைச்சொற்களைப் பற்றி மட்டும் தான் நான் தெளிவாக எழுதச்சொல்கிறேன். இதுவொன்றும் புதிய கலைச்சொல்லல்ல. பத்து ஆண்டுகளாவது பழமையானதாக இருக்கும். நான் கற்பனை என்று வர்ணனை செய்து தவறாக சொல்லவில்லை. கற்பனைக்கு மதிப்புக் கொடுத்துத் தான் பேச்சுப்பக்கதிலோ, விளக்கம் பகுதியிலோ எழுதுங்கள் என்கிறேன். பாடநூலில் உள்ள சொற்கள் போன்ற தரப்படுத்திய அச்சுப்பிரதியில் உள்ள அல்லது கல்நது உரையாடிய சொற்கள் மட்டும் பொருள் பகுதி இட வேண்டும் என்பது என் கருத்து. தமிழின் சொல்வளத்திற்கு நம் கற்பனைக்கேற்றார் போல் எப்படி வேண்டுமானாலும் எழுதலால். அவ்வாறு எழுதி குழப்ப வேண்டாம் என்கிறேன். இது என்னுடைய மொழிப்பெயர்ப்பிற்காக மட்டும் சொல்லவில்லை அனைவரும் இவ்வாறே பயன்படுத்துவர் என்பதால் கூறுகிறேன்.
பாகுநிலை; பாகு நிலை. இப்படி பிரித்து எழுதினால் தான் தேடமுடியுமா? அப்படியென்றால் பிரித்தே எழுதுங்கள். சேர்த்தே எழுத வேண்டாம்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அச்சுப்பிரதியில் எந்த இடத்தில் பிரித்து எழுத வேண்டும். எந்த இடத்தில் சேர்த்து எழுத வேண்டாமென்ற தெளிவு உள்ளது. அதனை பார்த்து எழுதிய நம் விக்சனரியில் தான் தெளிவில்லை. --இராஜ்குமார் 06:30, 18 செப்டெம்பர் 2011 (UTC)
- மீண்டும் மீண்டும் “கற்பனை” என்றே சொல்லி வருகிறீர்கள். ஏன் என்று புரியவில்லை. இது த.இ. கல்விக்கழகத்தின் இணையப் பதிப்பில் இருந்தவற்றை அப்படியே இறக்குமதி செய்தலால் ஏற்பட்ட விளைவுகள். யாரும் 500 kb க்கு மேல் இருக்க வேண்டுமென்றோ, கற்பனை செய்து போட வென்றுமென்றோ இட்டதல்ல. துறை வாரியாகப் பிரித்து இட்டது நல்லதல்ல இணைத்து விடலாமென்றும் சில ஆண்டுகளுக்கு முன்னரே விக்சனரியில் முடிவு செய்து விட்டனர். அது தவிர, அச்சுப்பிரதியில் சீர்மையாக இருந்தால் அது போலவே இங்கும் சீர் செய்யுங்கள். நீங்கள் இந்த இடுகையை இடுவதற்கு முன்னால், அந்த சொற்கள் எந்த ஆண்டு இடப்பட்டவை, இட்டது யார் என்று வரலாற்றுப் பக்கத்தில் பார்த்திருக்கலாம். அதன்பின்னர் ஏதேனும் அது குறித்து உரையாடல் நிகழ்ந்துள்ளனவா, இப்போது அதே போல் பழக்குமுள்ளதா என்று விக்சனரியில் இட்டு கேட்டிருக்கலாம். (மீண்டும் அதையே கோருகிறேன்) இந்த இடுகைக்குத் தேவையே இராது. --சோடாபாட்டில்உரையாடுக 02:59, 19 செப்டெம்பர் 2011 (UTC)
இராஜ்குமார், ஆங்கிலத்தில் உள்ள கலைச்சொல் ஒன்றுக்குப் பல கலைச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன. தமிழ்க் கலைச்சொல் உருவாக்கத்தில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், கலைச்சொற்கள் பல்வேறு காலகட்டங்களில் பல அமைப்புக்களால் உருவாக்கப்பட்டதாலும் இந்த நிலை. இலங்கை கல்வித் திணைக்களம், தமிழ்நாடு அரசின் பல அமைப்புக்கள், கலைக்கதிர் என்று பல அமைப்புக்கள் கலைச் சொற் தொகுதிகளை வெளியிட்டன. அவற்றையெல்லாம் தமிழ் இணையக் கல்விக்கழகம் தனது இணையத் தளத்தில் அப்படியே சேர்த்திருந்தது. அங்கிருந்துதான் பெரும்பாலான சொற்கள் விக்சனரிக்கு வந்தன. எனவே இந்தக் கலைச்சொற்கள் அனைத்துமே வெவ்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் பயன்பாட்டில் உள்ளவைதான். விக்சனரியின் நோக்கம் புதிய கட்டுரைகளை எழுதுபவர்களுக்குப் பயன்படுவது மட்டும் அல்ல. தமிழ் நூலொன்றில் காணப்படும் தமிழ்க் கலைச்சொல்லொன்று எதைக் குறிக்கிறது என்று அறிய விரும்புபவர்களுக்கும் விக்சனரி பயன்பட வேண்டும். எனவே தமிழில் பயன்பாட்டில் உள்ள எல்லாக் கலைச் சொற்களும் விக்சனரியில் இருப்பது அவசியம். எனவே தயவுசெய்து எதையும் நீக்க வேண்டாம். மயூரநாதன் 18:48, 29 செப்டெம்பர் 2011 (UTC)
கனவளவு
தொகுகனவளவு என்ற சொல் பற்றிய உரையாடலை இங்கு காணுக.--இராஜ்குமார் 07:20, 18 செப்டெம்பர் 2011 (UTC)
கனவளவா, கன அளவா?
தொகு- "கனவளவு" என்னும் பயன்பாடு இலக்கண முறையானதே என்று இங்கே இடுகை செய்துள்ளேன். காண்க. --பவுல்-Paul 14:34, 21 செப்டெம்பர் 2011 (UTC)