விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு66
தாவரப் பெயரீட்டுத் தரவுகள்
தொகுமுன்னர் பதிவிட்டவர்கள் ஏராளமான தாவரங்களின் பெயரீட்டுச் சட்டகங்களில் தரவுகளைப் பிழையாக வழங்கியுள்ளனர். அவற்றைப் பார்த்துத் திருத்த வேண்டும்.--பாஹிம் 17:28, 15 திசம்பர் 2011 (UTC)
- அத்தகைய தாவரங்களைத் தனிப் பகுப்பாக இட்டால் அவற்றை திருத்துவதற்கு வசதியாக இருக்கும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
ஊடகப் போட்டி பற்றி தி இந்துவில் செய்தி
தொகுஊடகப் போட்டி பற்றிய செய்தி இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து நாளிதழில் இன்று (டிசம்பர் 16) இறுதி பக்கத்தில் வெளியாகியுள்ளது - Contest to add files to Tamil Wikipedia gathers steam. பத்திரிக்கையாளர் ரேணுகா தெளிவாகவும் அருமையாகவும் போட்டி பற்றி விளக்கியுள்ளார். மேலும் தேசிய செய்திகள் வெளியாகும் பக்கத்தில் வெளியாகியுள்ளதால், இந்துவின் அனைத்து பதிப்புகளிலும் வெளியாகியிருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:01, 16 திசம்பர் 2011 (UTC)
- இன்றைய சென்னைப் பதிப்பில் காணவில்லை; இராசத்தான் அரசின் மூன்றுபக்க விளம்பரம் இதனை தள்ளிப்போட்டிருக்கலாம்.--மணியன் 05:18, 16 திசம்பர் 2011 (UTC)
- பெங்களூர் பதிப்பிலும் காணவில்லை என்று சொன்னார்கள். சில பதிப்புகளில் மட்டும் வெளியாகியுள்ளது என நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:37, 16 திசம்பர் 2011 (UTC)
- "Foreign contribution" ..ம்ம் No. இதைத் தவிர செய்திக் கட்டுரை நன்றாக உள்ளது. --Natkeeran 17:20, 24 திசம்பர் 2011 (UTC)
Summary and perspectives from Discussions with Indic language wikimedians - 2011
தொகுDear All,
I have sent a detailed note to the various local language and India community mailing lists summarizing my discussions with various Indic editors. In this note, I have also shared my perspectives on a series of issues related to community building (keeping existing editors, welcoming back old editors, attracting newbies, improving outreach, encouraging communication, collaborating on articles, and celebrating success), project quality (discouraging the use of bots for content creation and being more selective in adoption of English wikipedia policies) as well as on readership. It is a long post but I request you to go through this page in meta wiki. Please share your comments and feedback as a reply below this, or on the meta talk page of my post, or directly to me. I am really keen on hearing from as many of you as I can - and to start working together. --Shijualex 13:11, 16 திசம்பர் 2011 (UTC)
மாற்றங்கள் தெரிவதில்லை
தொகு- தொகுத்து முடித்த ஒரு பக்கத்தை கவனிக்கவும் என்ற தேர்வை இயக்கிய பின்னரும், அதில் செய்யப்படுகின்ற மாற்றங்கள் எனது முகப்பில் அறிவிப்புகளாக வருவதில்லை. என்ன பிரச்சனையாக இருக்கக்கூடும்?--ஏர்னஸ்டோ பாலாஜி 14:35, 17 திசம்பர் 2011 (UTC)
- மாற்றங்கள் உங்கள் முகப்பில் அறிவிப்புகளாக வராது. பதிலாக, அவை சிறப்பு:RecentChanges பகுதியில் தடிமனாகக் காட்டப்படும். --சூர்யபிரகாசு உரையாடுக... 17:50, 17 திசம்பர் 2011 (UTC)
- ஆங்கில விக்கியில் அவ்வாறு வரும் என நினைக்கிறேன்.--ஏர்னஸ்டோ பாலாஜி 18:08, 17 திசம்பர் 2011 (UTC)\\
- ஓ! அதுவா? அது ஒரு பயனர் நிரல்வரி (user script). முன்பு தமிழ் விக்கியில் நான் மட்டும் அது போன்றதொரு நிரல்வரியைக் கொஞ்சநாள் பயன்படுத்திவந்தேன். பின்னர், அது ஒருங்குறி சிக்கல்களைத் தந்ததால் மேலும், ஆங்கில விக்கியைப் போலக் கட்டுரைகள் பலரால் அதிக நேரங்களில் தொகுக்கப்படாமலிருந்ததால் அது பயனற்ற ஒன்றாகவே இருந்தது. மேலும், தொகுத்துக் கொண்டிருக்கும்போது இடையிடையே "செய்திப் பெட்டி" வந்து எரிச்சலூட்டுவதாய் அமையும். :( எனவே, அந்த நிரல்வரியை நீக்கிவிட்டேன். உங்களுக்கு வேண்டுமெனில் கேளுங்கள், ஓரிரு நிமிடங்களில் உருவாக்கிவிடுகிறேன். --சூர்யபிரகாசு உரையாடுக... 18:24, 17 திசம்பர் 2011 (UTC)
த.விக்கி கொள்கைகள்
தொகுதமிழ்நாடு கட்டுரையை பார்த்தபோது பகுப்பு:All articles with specifically-marked weasel-worded phrases என்கிற பகுப்பு தானியக்கமாக சேர்ந்திருந்ததை கண்டேன். பின்னர் ஆவிக்கியில் இதுபற்றி தேடியபோது இந்தப் பக்கம் கிடைத்தது. en:Wikipedia:Manual of Style/Words to watch. விக்கி நிரல், 'சொல்லப்படுகிறது' போன்ற சொற்களை தானியக்கமாக தேடி மேற்கண்ட பகுப்பை சேர்க்கிறது. தவிக்கியில் ஏற்கெனவே இதுபோன்ற சொற்கள் பயன்பாடுகள் பற்றிய கொள்கைகள் பற்றிய கையேடு உள்ளதா?. இல்லையென்றால் அவற்றை உருவாக்கவேண்டும். (தமிழ்நாடு கட்டுரை மேற்கோள்களுடன் இன்னும் மேம்படுத்தப்படவேண்டும்). -- மாகிர் 15:12, 17 திசம்பர் 2011 (UTC)
தமிழ் விக்கி புள்ளிவிவரம் சேமிக்கும் தானியங்கி
தொகுஅண்மையில் சோடாபாட்டில் அரபு விக்கி மாநாட்டிற்கு சென்ற பொழுது, அங்கு அரபு விக்கியருடன் பேசும் பொழுது அரபு விக்கியில் புள்ளிவிவரம் சேகரிக்கும் தானியங்கி பற்றி அறிந்தார்.அத்தானியங்கி தினந்தோறும் புள்ளிவிவரங்களைச் சேர்த்து வருகிறது. நான் அதனை மொழிபெயர்த்து ஓர் சோதனை ஒட்டம் செய்தேன் -- பயனர்:Logicwiki/Stats/December_2011 . இது நல்லதெனில் ஒரு தானியங்கி கணக்கு மூலம் தினந்தோறும் புள்ளிவிவரங்களை சேமிக்கலாம். நன்றி ஸ்ரீகாந்த் 20:50, 17 திசம்பர் 2011 (UTC)
- +1 மிக மிக நல்லதே. கிழமை வாரியாக நடக்கும் தொகுப்புப் பாணிகளை அறிய இது பெரிதும் உதவும். தினம் utc 00.00 இல் இயங்கும்படி இதனை ஏவலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:19, 18 திசம்பர் 2011 (UTC)
- நன்றி, தானியங்கி அணுக்கம் பெற வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஸ்ரீகாந்த் 08:30, 18 திசம்பர் 2011 (UTC)
- திட்டப் பக்கம் - விக்கிப்பீடியா:புள்ளிவிவரம்--சோடாபாட்டில்உரையாடுக 10:32, 26 திசம்பர் 2011 (UTC)
எனக்கும் திரு சோடாபாட்டில் அவர்களுக்கும் நடந்த உரையாடலை இங்கு வெளியிட்டுள்ளேன். பசுமை வேதியியல்:
அன்புடையீர் நான் தொடங்கி எழுத நினைத்த பசுமை வேதியியல் கட்டுரையில் நான் செய்யும் மாற்றங்கள் அவ்வப்பொழுது நீக்கப்பட்டு விடுகின்றன.எனவே இந்தக் கட்டுரயைத் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சரியான காரணஙகளைத் தெரிவிக்காமல் என்னுடைய பங்களிப்புகளில் மாற்றம் செய்வது தொடருமேயானால் விக்கிபீடியாவுக்கு "குட் பை" சொலவது தவிர வேறு வழி இல்லை.நன்றி. அன்புடன்--MUTTUVANCHERI NATARAJAN 15:29, 18 திசம்பர் 2011 (UTC)
நீங்கள் தொடங்கி இரு நாட்களாக பாதியில் இருந்த அக்கட்டுரையில் நான் செய்த மாற்றங்கள் - 1)வேலை நடந்து கொண்டிருக்கிறது வார்ப்புரு சேர்ததது 2) விக்கியாக்க மாற்றங்கள் (விக்கிப்பீடியா நடைக்கையேற்ப) 3) விக்கியிடை இணைப்புகள் - பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு - சேர்த்தது. இவை கட்டுரையை மேம்படுத்தத் தான். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி. ஒருவர் எழுதுவதை இன்னொருவர் மேம்படுத்தியே விக்கிப்பீடியா இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது. நீங்கள் தொடங்கி பாதியில் விட்ட எவ்வளவோ கட்டுரைகளை நானும் பிறரும் மேம்படுத்தி மாற்றியுள்ளோம். நீங்கள் தொடங்கிய கட்டுரைகளின் வரலாற்றைப் பார்த்தாலே இது புலனாகும். கட்டுரை வெளியில் இரு வரிகளை எழுதிவிட்டு அடுத்து அந்தப்பக்கமே பல நாட்கள் வராமல் பின் யாராவது அதை மாற்றினால், “சரியான காரணம் தெரிவிக்கவில்லை” என்று சொல்வதற்கும் நாம் சரிவரச் செய்யாததை/பாதியில் விட்டுச் செல்வதை பிறர் திருத்தி மேம்படுத்துவதை ஏற்றுக் கொண்டு இங்கு பங்களிக்க இயலவில்லை என்று சொல்வதற்கும் என்னிடம் வேறு பதில் கிடையாது.--சோடாபாட்டில்உரையாடுக 15:49, 18 திசம்பர் 2011 (UTC)
அன்புடையீர் வெறும் விளம்பரத்திற்காகவோ அல்லது கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவோ நான் விக்கியில் எழுதவில்லை.தொடர்ந்து எழுதுவதில்லை என்பது நேரமின்மை என்ற ஒரே காரணத்தினால்தான்.விக்கியில் எத்தனையோ கட்டுரைகள் இன்னும் மூன்று வரியிலேயே நிற்கின்றன.அவற்றை தாங்கள் இன்னும் மேம்படுத்தவில்லை.என்னுடைய கட்டுரைகளில் இதுவரையில் செய்யப்பட்டுள்ள பல மாற்றங்ககள், அவற்றின் உள்ளடக்கத்தில் செய்யப்படவில்லை.ஆனால் தற்பொழுது உள்ளடக்கம் நீக்கப் படுவது ச்ரியானதாகத் தெரியவில்லை.தமிழுக்குத் தொண்டு செய்ய இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நன்றி!குட் பை! --MUTTUVANCHERI NATARAJAN 16:42, 18 திசம்பர் 2011 (UTC)
நாமெழுதும் கட்டுரைகளை பிறர் மாற்றுவதை எற்கும் மனமுதிர்ச்சி இல்லையெனில் இங்கு தொடர்ந்து பங்களிக்க இயலாது. உங்கள் தமிழ்த்தொண்டை வேறெங்கினும் செய்ய வாழ்த்துக்கள். --சோடாபாட்டில்உரையாடுக 17:04, 18 திசம்பர் 2011 (UTC)
பிறருடைய பணிகளில் சரியான முகாந்திரம் இன்றி தலையிடுவதுதான் மனமுதிர்ச்சி இன்மைக்கு அடையாளம்.எனக்கு இந்தப் பட்டம் தேவையானதுதான்.வாழ்க உங்கள் விக்கி சேவை.முடிந்தால் நமது உரையாடலை ஆலமரத்தடியில் வெளியிடுங்கள்.இதற்குமேல் நான் இதைப்பற்றி எழுத விரும்பவில்லை.--MUTTUVANCHERI NATARAJAN 17:11, 18 திசம்பர் 2011 (UTC)
”சரியான முகாந்திரம்” என்ற வார்த்தைகளே காட்டுகிறது உங்களுக்கு விக்கி என்றால் என்ன என்பதே புரியவில்லை என்பது. நீங்கள் பாதியில் விட்டுப்போனதை /விக்கி நடையில் எழுதாதை மாற்ற யாருக்கும் எந்த முகாந்திரமும் தேவையில்லை. இதை ஆலமரத்தடியில் வெளியிட விருப்பமென்றால் நீங்களே வெளியிடுங்கள், அதற்கு எதற்கு நான்?. --சோடாபாட்டில்உரையாடுக 17:19, 18 திசம்பர் 2011 (UTC)
--MUTTUVANCHERI NATARAJAN 17:23, 18 திசம்பர் 2011 (UTC)
- வணக்கம் நடராஜன், உங்கள் கட்டுரையில் சோடாபாட்டில் செய்த மாற்றங்கள் விக்கி நடைமுறை, கொள்கைகளுக்கேற்பவே அமைந்துள்ளது. நானும் இதே மாற்றங்களையே செய்திருப்பேன். இதில் விவாதிப்பதற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. விக்கி நடைமுறையைப் புரிந்து கொண்டு மீண்டும் விக்கியில் பங்குபற்ற வருமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:49, 18 திசம்பர் 2011 (UTC)
- நானும் கட்டுரையில் செய்யப்பட்ட மாற்றங்களை ஆராய்ந்தேன். அவை முற்றிலும் விக்கிப்பீடியா நடைமுறை, கொள்கைகளுக்கேற்பவே செய்யப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவின் அடிப்படைத் தத்துவமே இங்குள்ள கட்டுரைகளை எவரும் தொகுக்கலாம் என்பதே. கூட்டு முயற்சி இதன் ஆதாரமாகும். இருவருமே உணர்ச்சிவயப்பட்டுள்ளீர்கள்.சற்றே கால இடைவெளி எடுத்துக்கொண்டு சிந்திப்பீர்களேயானால் இது ஒரு பிரச்சினை அல்ல என உணருவீர்கள் என நம்புகிறேன். புரிதலுடன் மீண்டும் உங்கள் பங்களிப்புகளை தொடர்வீர்கள் என நம்புகிறேன்.--மணியன் 05:02, 19 திசம்பர் 2011 (UTC)
தமிழ் இடைமுகம்
தொகுபன்னாட்டு நிறுவனங்களின் படைப்புகளில் தமிழ் இடைமுகத் தெரிவு அளிக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்பதற்கு அண்மையில் ஒரு எடுத்துக்காட்டு சிக்கியது. சூர்யா தனது சம்சுங் எண்ணிம புகைப்படக் கருவியில் தமிழ் இடைமுகப்பு உள்ளதைக் கண்டுபிடித்துக் கூறினார். சேலம் பட்டறை படநடையின் போது த.உழவன் அதனைப் படம்படித்து காமன்சில் ஏற்றியுள்ளார். அதன் படம் வலப்புறம் உள்ளது.
விக்சனரி பார்! - கருவி
தொகுவிக்சனரி பார்! என்பது தமிழ் விக்கித் திட்டங்களில் சில இடங்களில் பொருள் தெரியாச் சொற்களுக்கு ஒவ்வொரு முறையும் விக்சனரிக்கு ஓடாமல், தெரியாச் சொல்லின் மீது இரு சொடுக்கல் (Double Click) செய்வதன் மூலம் அவற்றுக்கான விளக்கத்தை அதே பக்கத்தில் சொல்லுக்கு அருகிலேயே சிறிய பெட்டியில் பெற முடியும். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று பக்கம் மறு ஏற்றம் (Reload) ஆகாது. எனவே, இதனைப் பயன்படுத்துவது இணையப் பயன்பாட்டு அளவையும் குறைக்கும்.
இக்கருவி குறித்த மேலதிக விபரங்களும் எப்படி பெறுவது என்பது குறித்த தகவல்களும் விக்சனரி பார்! என்ற பக்கத்தில் உள்ளன. அருகிலுள்ள படத்தில் அதன் பயன்பாட்டைப் பார்க்கவும். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 09:51, 20 திசம்பர் 2011 (UTC)
- அருமை!. திட்டப்பக்கத்தில், தொடர்புடைய js கோப்புகள அனைத்தையும் பட்டியிலிட்டு விடுங்கள் (விக்சனரியில் சேர்த்ததது உட்பட).
- மேலும் ஒரு ஐயம் - விக்சனரியில் சொல் இல்லையென்றால் இருவிதமான செய்திகள் வருகின்றன. “பிழை: The page you specified does not exist" என்றொரு செய்தியும் வேறு சில சொற்களுக்கு ”XXX என்பதன் வரையறை கிடைக்கவில்லை” என்றொரு செய்தியும் வருகின்றன. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?--சோடாபாட்டில்உரையாடுக 13:56, 20 திசம்பர் 2011 (UTC)
- இரட்டைச் சொடுக்கல் செய்தால் புதிய சாளரத்தில் விக்சனரி பக்கம் திறக்கிரதேயன்றி சிறு பெட்டி தோன்றவில்லை. நான் உபயோகிப்பது கூகிள் குரோம் உலவி. --ஏர்னஸ்டோ பாலாஜி 15:28, 20 திசம்பர் 2011 (UTC)
- பயன்தரும் விடயம். ஆனால் சோடாபாட்டில் கூறியதுபோல் சில சொற்களுக்கு “பிழை: The page you specified does not exist" என்ற செய்தியும், வேறு சில சொற்களுக்கு ”XXX என்பதன் வரையறை கிடைக்கவில்லை” என்ற செய்தியும் வருகின்றன. பின்னர் ”XXX என்பதன் வரையறை கிடைக்கவில்லை” என்பதற்குக் கீழே உள்ள 'உருவாக்குக' என்பதை அழுத்தினால், அந்த சொல்லுக்கு விக்சனரியில் உள்ள பக்கத்திற்குப் போகின்றது. எனவே விக்சனரியில் உள்ள சொற்களுக்கும் இந்த செய்தி வருகின்றது.--கலை 00:20, 21 திசம்பர் 2011 (UTC)
- @சோடாபாட்டில் @கலை,
பட்டியலிடுகிறேன். Doesn't exist என்ற பிழை மெய்யாலுமே விக்சனரியில் சொற்கள் இல்லாதவற்றுக்கும் Couldn't define the word (வரையறை கிடைக்கவில்லை) என்ற பிழைச்செய்தி சொல் ஏற்கனவே இருந்தும் அதனை நிரல் மூலம் பிரித்தெடுக்கமுடியாத நேரத்தில் கிடைக்கும். :) இது கருவி வழுவன்று. மாறாக, விக்சனரியில் சொற்கள் ஒரு பக்கத்தில் வரையறுக்கப்பட்டிருக்கும் விதம். இந்த பெட்டி போன்ற அமைப்பில் அடங்காதவை அவ்வாறு வரும். ஏற்கனவே நான் அல்லது போன்ற சொற்களுக்குச் செய்து பார்த்துவிட்டேன். குறிப்பிடத் தவறிவிட்டேன். :( இது விக்சனரியில் சொற்கள் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் (எப்படி விக்கிப்பீடியா கட்டுரை வடிவமைப்பு உள்ளதோ அதுபோல விக்சனரிக்கும் ஏதாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன்.) இருந்தாலொழிய பொருள் பெறுவது கடினம். :) எடுத்துக்காட்டு: wikt:en:ta:அந்த - என்ற சொல்லின் முதல் வரியைப் பாருங்கள். தவறான விக்கிக்குறியீட்டினால் அப்பக்கம் வடிவமைப்பின்றி இருக்கிறது. இதுபோன்ற பக்கங்களே அவ்வாறு வருகின்றன.
- @பாலாஜி,
நான் கூகுள் குரோம் எப்போதும் பயன்படுத்தியதில்லை. நான் பயர் பாக்சு-காரன். :) மேலும், புதிய பக்கம் திறப்பது குறித்தான வழுவை நான் இக்கருவி ஆக்குனர்களுக்கு விரைவில் தெரியப்படுத்திக் களைய முயல்கிறேன். (@பாலாஜி, சூர்யபிரகாசின் தனிப்பட்ட கோரிக்கை: ஃபயர்ஃபாக்சுக்கு மாறுங்கள்!) :)
- அனைவரது மேலான கருத்துகளுக்கு நன்றி, கூடிய விரைவில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 14:21, 21 திசம்பர் 2011 (UTC)
- பயனுள்ள, அவசியமான கருவி. இணைத்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள். -- மாகிர் 14:51, 21 திசம்பர் 2011 (UTC)
விருப்பம் ஸ்ரீகாந்த் 15:38, 21 திசம்பர் 2011 (UTC)
Open Call for 2012 Wikimedia Fellowship Applicants
தொகுI apologize that you are receiving this message in English. Please help translate it.
- Do you want to help attract new contributors to Wikimedia projects?
- Do you want to improve retention of our existing editors?
- Do you want to strengthen our community by diversifying its base and increasing the overall number of excellent participants around the world?
The Wikimedia Foundation is seeking Community Fellows and project ideas for the Community Fellowship Program. A Fellowship is a temporary position at the Wikimedia Foundation in order to work on a specific project or set of projects. Submissions for 2012 are encouraged to focus on the theme of improving editor retention and increasing participation in Wikimedia projects. If interested, please submit a project idea or apply to be a fellow by January 15, 2012. Please visit https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Fellowships for more information.
Thanks!
--Siko Bouterse, Head of Community Fellowships, Wikimedia Foundation 03:07, 22 திசம்பர் 2011 (UTC)
Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)
Writers, Publishers Asked To Write More Books In Tamil (மலேசியா)
தொகு- Writers, Publishers Asked To Write More Books In Tamil
- Malaysia to have Tamil announcements at international airports
--Natkeeran 11:34, 22 திசம்பர் 2011 (UTC)
- சர்ச்சைக்குரிய இண்டர்லொக் புதினம் மலேசியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது, விக்கிசெய்தி, திசம்பர் 22, 2011
தேதிகளுக்கு தொடுப்புகள் மற்றும் மைக்ரோபார்மட் implementation
தொகுகட்டுரைகளில் அநாவசியத் தொடுப்புகளை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. பார்க்க:en:Wikipedia:Manual_of_Style/Linking, அந்த அடிப்படையில் பிறந்த தேதிகளில் வரும் தொடுப்புகளை நீக்கியிருக்கிறேன். அதாவது ஆவி வார்ப்புருவை இங்கு பதிந்திருக்கிறேன். இது அநேக கட்டுரைகளில் இம்மாற்றம் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதால் உங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். ({{Birth date|2011|8|2}} = ஆகத்து 2, 2011 (தொடுப்புகளில்லாமல்) முன்பு ஆகத்து 2, 2011 என்றிருந்தது.) எனினும் ஆண்டு பிறப்புகள் பகுப்பை நீக்கவில்லை. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மற்ற வார்ப்புருக்களிலும் மாற்றங்களை செய்யலாம்.
அத்துடன் சில வார்ப்புருக்களில் மைக்ரோபார்மட்டை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன். அதற்கும் உங்கள் கருத்துக்களை அறியத்தந்து பங்கெடுக்கவும். -- மாகிர் 05:54, 24 திசம்பர் 2011 (UTC)
- மாகிர் ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இரு மில்லியன் தாண்டிய பின்னரே (2008 வாக்கில் என நினைக்கிறேன்) ஆண்டுகள், தேதிகளை இணைப்பதை நிறுத்தினர். (after date linking started crashing "what links here" feature for date/year articles and article rendering became difficult because of number of links). அதற்கு முன் அந்த அந்தத் தேதி மற்றும் ஆண்டுக் கட்டுரைகளை இற்றைப்படுத்த அவை மிக அவசியமாக இருந்தன. நாம் 42000 கட்டுரைகள் தான் கொண்டுள்ளோம் நமது கட்டுரை சொல் அளவும் ஆங்கில விக்கியின் சராசரி அளவுகளை விட மிக மிகக் குறைவு. மேலும் நமது ஆண்டு மற்றும் தேதிக் கட்டுரைகளை இற்றைப்படுத்த இவை அவசியமானது. தமிழ் விக்கி சூழலில் இது overlinking அல்ல. அவசியமான தொடுப்புகளே. இவறை நீக்க வேண்டாம். நாம் ஆங்கில விக்கிச்சூழலுக்குச் செல்ல பல பத்தாண்டுகள் ஆகும்.--சோடாபாட்டில்உரையாடுக 14:32, 24 திசம்பர் 2011 (UTC)
- விளக்கத்திற்கு/கருத்துக்கு நன்றி சோடாபாட்டில். மீட்டுவிடுகிறேன். மாகிர் 16:09, 24 திசம்பர் 2011 (UTC)
- மைக்ரோபார்மட் பயனர்களின் வேலையைக் கூட்டாதெனில் தாராளமாகச் செய்யலாம். ஆனால் தொடங்கி விட்டு ஒன்று போல் இருக்க வேண்டும் என்று அனைவரையும் கட்டாயம் செய்யச் சொல்லும் mandatory feature ஆக ஆகிவிடக்கூடாது. --சோடாபாட்டில்உரையாடுக 14:35, 24 திசம்பர் 2011 (UTC)
- வார்ப்புருக்களில் மட்டும் தான் மாற்றம் செய்யப்போகிறோம். கட்டாயமில்லை எனினும் விரும்பத்தக்கது எனும் அடிப்படையில் இந்த வசதியை தேவைப்படும் இடங்களில் கடைபிடிப்பது நல்லது. (few html tags with css class) -- மாகிர் 16:09, 24 திசம்பர் 2011 (UTC)
59 வது இடத்தில் தமிழ்விக்கிப்பீடியா
தொகுதமிழ் விக்கிப்பீடியா இன்று மற்றுமொரு மைற்கல்லை தாண்டியுள்ளது. 282 மொழி விக்கிப்பீடியாக்கள் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியா 59வது இடத்திற்கு வந்துள்ளது. இந்த அடைவிற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து விக்கிப்பீடியா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை நாங்கள் கூட்டிணைப்பாக செயல்பட்டு பாதுகாப்போம்--P.M.Puniyameen 13:24, 24 திசம்பர் 2011 (UTC)
- எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் ஓரிரு தினங்களில் மொத்தத் தொகுப்புக்களின் எண்ணிக்கையும் 1 மில்லியனைத் தாண்ட இருக்கிறது. -- மயூரநாதன் 13:57, 24 திசம்பர் 2011 (UTC)
- வாழ்த்துக்கள் அனைவருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 15:56, 24 திசம்பர் 2011 (UTC)
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
தொகுஅனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்--Parvathisri 20:42, 24 திசம்பர் 2011 (UTC)
- விக்கிப்பீடியா பயனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இனிய நத்தார் நாள் வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 00:15, 25 திசம்பர் 2011 (UTC)
- அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 00:25, 25 திசம்பர் 2011 (UTC)
- அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் !!--மணியன் 01:15, 25 திசம்பர் 2011 (UTC)
இன்று இயேசு கிறிஸ்து பிறந்த நாளைக் கொண்டாடும் எல்லோருடனும் நத்தார் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்--P.M.Puniyameen 01:59, 25 திசம்பர் 2011 (UTC)
- இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 15:32, 25 திசம்பர் 2011 (UTC)
- அனைவருக்கும் நத்தார் மற்றும் விடுமுறை நல்வாழ்த்துக்கள். --Natkeeran 16:05, 25 திசம்பர் 2011 (UTC)
மொத்தத் தொகுப்புக்களின் எண்ணிக்கை 1 மில்லியன்
தொகுஇன்று தமிழ் விக்கிப்பீடியாவின் மொத்தத் தொகுப்புக்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. (ஒரு பக்கத்திற்கான சராசரி தொகுப்புக்கள்:8.79) இந்த அடைவிற்கு 2003 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வரும் அனைத்து விக்கிப்பீடியா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 14:06, 25 திசம்பர் 2011 (UTC)
விருப்பம் --சூர்யபிரகாசு உரையாடுக... 10:49, 26 திசம்பர் 2011 (UTC)
புத்தாண்டில் மேலும் பல ஆயிரம் புதிய பயனர்கள் பங்குபெற அழைப்பு
தொகுவரும் புத்தாண்டில் மேலும் பல ஆயிரம் புதிய பயனர்கள் பதிகை செய்து விக்கிபீடியாவின் வளர்ச்சியில் பங்குபெற வருக! வருக! அழைக்கின்றேன்.--ஸ்ரீதர் /பேசுக 14:30, 25 திசம்பர் 2011 (UTC)
+1 --சூர்யபிரகாசு உரையாடுக... 10:49, 26 திசம்பர் 2011 (UTC)
- விருப்பம் --≈கிருஷ்ணபிரசாத் /பேசுக 11:04, 29 திசம்பர் 2011 (UTC)