விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு70
MediaWiki 1.19
தொகு(Apologies if this message isn't in your language.) The Wikimedia Foundation is planning to upgrade MediaWiki (the software powering this wiki) to its latest version this month. You can help to test it before it is enabled, to avoid disruption and breakage. More information is available in the full announcement. Thank you for your understanding.
Guillaume Paumier, via the Global message delivery system (wrong page? You can fix it.). 15:20, 12 பெப்ரவரி 2012 (UTC)
- (இச்செய்தி உங்கள் மொழியில் இல்லாதிருந்தால் பொறுத்தருள்க.) விக்கிமீடியா நிறுவனம் இம்மாதத்தில் மீடியாவிக்கியை (இந்த விக்கியை இயக்கும் மென்கலம்) மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதனை முடுக்கிவிடும் முன்னர், தடைகள், இடையூறுகள் ஏதும் வருவதைத் தவிர்க்கும் முகமாக, நீங்கள் இதனைச் சோதித்துப் பார்க்க உதவலாம். கூடுதலான தகவல்கள் கிடைக்கின்றன: முழு அறிவிப்பு. உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. மேலே (Guillaume Paumier விடுத்த செய்தியின் மொழிபெயர்ப்பு). --செல்வா 16:32, 12 பெப்ரவரி 2012 (UTC)
- முழு அறிவிப்பு உள்ள இப்பக்கம் இப்பொழுது தமிழில் கிடைக்கின்றது இங்கே பார்க்கவும் --செல்வா 04:49, 13 பெப்ரவரி 2012 (UTC) (இந்திய மொழிகளில் முதலாவதாகவும், இடாய்ச்சு, எசுப்பானியம் ஆகிய மொழிகளில் வரும் முன்னரும் தமிழில் இவ் அறிவிப்பு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்).
- நன்று, செல்வா. இந்த இணைப்புகளை விக்கிமூலம் போன்ற இணைத்திட்டங்களிலும் கொடுக்கலாமே! --பவுல்-Paul 05:06, 13 பெப்ரவரி 2012 (UTC)
- நன்றி பவுல், செய்கிறேன் (விக்கிச் செய்திகளில் இவ்வறிவிப்பைப் பார்க்கவில்லை.. விக்கி மூலத்தில் நீங்களே கூட ஒற்றி ஒட்டிவிடலாம்.). --செல்வா 05:30, 13 பெப்ரவரி 2012 (UTC)
- விக்கிசெய்திகள்/விக்கிமூலம் பீட்டாதளம் இந்த பக்கத்தில் இல்லை. பொதுவாக நான் பார்த்த வரை தமிழ் விக்கியை பாதிக்கும் வகையில் 1.19 மீடியாவிக்கியில் ஏதுமில்லை. நாம் பயன்படுத்தும் சில யாவாஸ்கிரிப்ட்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். உடனடியாக எந்த பாதிப்பும் இருக்காது, முடிந்த விரைவில் அதை செய்துவிடுகிறேன். ஸ்ரீகாந்த் 15:21, 13 பெப்ரவரி 2012 (UTC)
- நன்றி. நானும் பார்த்தேன், ஆனால் ஏன் விக்கிச் செய்திகள், விக்கிமூலம் ஆகியவை விக்கிமீடியாவைப் பயன்படுத்தவில்லை? (ஆங்கில விக்கித் திட்டங்கள் யாவும் விக்கிமீடியாவைப் பயன்படுத்துகின்றனவே!). விக்சனரியைத் தவிர்த்த இந்தத் தமிழ்விக்கிப்பீடியா உறவுத்திட்டங்கள் வேறு எந்த அமைப்பின் கீழ் வருகின்றது. விக்கிச்செய்திகள் முகப்புப் பக்கத்தில் "இது ஒரு விக்கிமீடியா திட்டம்" என்று அறிவிக்கின்றதே! கனகு சிறீதரனோ பிறரோ விளக்க முடியுமா? --செல்வா 16:05, 13 பெப்ரவரி 2012 (UTC)
- அனைத்துமே மீடியாவிக்கி தான் பயன்படுத்துகின்றது. ஆனால் பீட்டாத்தளம் அமைந்துள்ள cluster கொள்ளவில் சிறிதென்பதால் சில விக்கித்திட்டங்களை மட்டும் நிறுவியுள்ளார்கள். எவ்வாறு விக்கிமேற்க்கோள், விக்கிநூல்களை தேர்ந்தேடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், நாம் பொதுவாக 1.19 பதிப்பினால் பாதிக்கப்பட மாட்டோம். 1.19 மாற்றக் குறிப்புகள் -- இதை நான் ஒரு நோட்டம் விட்டேன், எதுவும் எந்த தமிழ்விக்கி திட்ட்திற்கும் ஒரு பாதிப்பை எற்படுத்தாது என்பது என் கருத்து. ஸ்ரீகாந்த் 17:08, 13 பெப்ரவரி 2012 (UTC)
- நன்றி. நானும் பார்த்தேன், ஆனால் ஏன் விக்கிச் செய்திகள், விக்கிமூலம் ஆகியவை விக்கிமீடியாவைப் பயன்படுத்தவில்லை? (ஆங்கில விக்கித் திட்டங்கள் யாவும் விக்கிமீடியாவைப் பயன்படுத்துகின்றனவே!). விக்சனரியைத் தவிர்த்த இந்தத் தமிழ்விக்கிப்பீடியா உறவுத்திட்டங்கள் வேறு எந்த அமைப்பின் கீழ் வருகின்றது. விக்கிச்செய்திகள் முகப்புப் பக்கத்தில் "இது ஒரு விக்கிமீடியா திட்டம்" என்று அறிவிக்கின்றதே! கனகு சிறீதரனோ பிறரோ விளக்க முடியுமா? --செல்வா 16:05, 13 பெப்ரவரி 2012 (UTC)
பி.கு : பிப்ரவரி 23 (-24), 23:00-03:00 UTC நேரத்தில் சிறுது நேரத்திற்கு தமிழ் விக்கித் திட்டங்கள் இயங்காமலிருக்கக்கூடும். ஸ்ரீகாந்த் 17:18, 13 பெப்ரவரி 2012 (UTC)
- நான் விக்கித்திட்டங்களில் இருக்கும் நேரம். உங்களுடைய நேரக் குறிப்புகள் மிகவும் பயனுடையன.மிக்க நன்றி.ஸ்ரீ.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
மாநகராட்சி குறித்த வார்ப்புருக்கள்
தொகுவணக்கம். மாநகராட்சி குறித்த வார்ப்புருக்களில் கடந்த மாநகராட்சித் தேர்தலுக்கு முன் பதவி வகித்தவர்களின் பெயர்கள் உள்ளன. இதனை மாற்ற வேண்டும். விவரம் அறிந்தோர் அல்லது அந்தந்த மாநகராட்சியில் உள்ள பயணர்கள் இதற்கு உதவலாமே!--Parvathisri 04:18, 13 பெப்ரவரி 2012 (UTC)
- மாநகராட்சிப் பகுதிகளில் அருகிலுள்ள சில நகராட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக மதுரை மாநகராட்சிப் பகுதியுடன் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற நகராட்சிகள் இணைக்கப்பட்டு விட்டன. இது போல் வேறு மாநகராட்சிகளிலும் சில நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை நகராட்சிகளுக்கான வார்ப்புருக்களிலிருந்து நீக்க வேண்டும். மாநகராட்சிக்கான கட்டுரையில் இவை சேர்க்கப்பட்டுள்ள விவரம் தனித் தலைப்பின் கீழ் சேர்க்கப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:53, 14 பெப்ரவரி 2012 (UTC)
விக்கிமேற்கோள் சீரமைப்பு
தொகுவிக்கிமேற்கோள் சீரமைப்பு தொடர்பாக பரிந்துரைகள் தேவை. விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும்போது தொடர்புடைய சொற்களை விக்சனரியில் சேர்ப்பது போல், நபர்கள், இயல்கள் குறித்த கட்டுரைகள் எழுதும் போது தொடர்புடைய சில மேற்கோள்களைச் சேர்த்தால் மிக இலகுவாக இத்திட்டத்தை ஒரு சிறப்பான நிலைக்குக் கொண்டு வரலாம். நன்றி--இரவி 12:54, 14 பெப்ரவரி 2012 (UTC)
விக்சனரியில் அயல்மொழிச் சொற்கள்
தொகுவிக்சனரியில் நமக்கு நேரடித் தேர்ச்சி இல்லாத அயல்மொழிச் சொற்களை இடுவது குறித்து பயனர்களின் கருத்து அறிய விரும்புகிறேன். தமிழ் விக்கியின் உறவுத் திட்டங்கள் மிகச் சிறிய சமூகங்களையே கொண்டிருப்பதால், இது போன்ற கொள்கை முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இயன்ற அளவு பரந்த, மாறுபட்ட கருத்துகளை உள்வாங்குவதே நோக்கம். நன்றி--இரவி 19:09, 14 பெப்ரவரி 2012 (UTC)
- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிறிய மேம்படுத்தல் தொடர்பான ஒரு உரையாடல் - மாகிர் 03:25, 17 பெப்ரவரி 2012 (UTC)
தனி மாந்தர்களின் பெயர்கள்
தொகுதற்பொழுது பெரியசாமித்தூரன் என்னும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் ஓர் உரையாடல் நடக்கின்றது. அதில் ஒரு பொதுவான கருத்தும் உள்ளதால், அதை இங்கே இடுகின்றேன். முதலில் நான் எழுதியதை இங்கும் இடுகின்றேன், "என்னிடம் பெரியசாமித்தூரன் அவர்கள் எழுதிய கலைக்களஞ்சியத்தில் சில தொகுதிகள் உண்டு. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலும் பார்க்கலாம். இவருடைய பெயர் பெரியசாமித்தூரன் என்றுதான் எழுதவேண்டும். எல்லா எழுத்துகளும் தமிழில் இருப்பதால், சிக்கல் ஏதும் இல்லை. ஒருவர் பெயரை K.V.ஜெயஸுந்தரேஸ்வரன் என்று எழுதினால், தமிழில் எழுதும்பொழுதும் உரோமன் எழுத்தோடும், கிரந்த எழுத்தோடும்தான் எழுதவேண்டும் என்னும் கட்டாயம் ஒருசிறிதும் இல்லை. தமிழ் முறைப்படி, கே.வி.செயசுந்தரேசுவரன் என்று கட்டாயம் எழுதலாம். ஒருவரின் கையெழுத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அது தனியுரிமை, (அது ஒரு மொழி எழுத்துகளால் ஆனதாகக்கூட இல்லாமல் இருக்கலாம்), ஆனால் எழுதும் மொழி தமிழாயின், அதன் முறைப்படி தமிழ் எழுத்துகளில் எழுதுவதில் எந்தத்தடையும் இல்லை- சொல்லப்போனால் அதுவே சரியான முறை. இதை அறியாத சிலர் என் பெயரை மாற்ற உங்களுக்கு உரிமை இல்லை, அது என் பெற்றோர் எனக்கு ஆசையுடன் வைத்தப் பெயர் என்பார்கள். மாற்றுவது அநாகரிகம் என்பார்கள். இதே வாசகத்தை பிறமொழியில் சென்று சொல்லமுடியாது அவர்களால். எனவே ஒருவரின் பெயர் தமிழில் உள்ள 247 தமிழ் எழுத்துகளில் அமைந்து இருந்தால் அவர் எழுதியபடி எழுதுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே பெரியசாமித்தூரன் என்று எழுதுதல் முறை இங்கு." சிரீதரன், சீராமன் என்று வைணவ ஆழ்வார்களே பல இடங்களில் எழுதியிருக்கின்றார்கள். சீனிவாசன் இலட்சுமி, இராசகோபாலன், என்பனவும் பழக்கம் ஆனதே. எனவே சிரீசந்திரகாந்து, சிரீராமன், பத்மசிரீ என்று எழுதுவது தவறு இல்லை, தமிழில் முறையும் ஆகும். இதனைத் தவறாக எடுத்துக்கொள்வோர், முறைமையை அறியாமலோ, தமிழைப் போற்றாமலோ இருப்பதால்தான். இப்படித் தமிழில் எழுதினால் மறுப்புத் தெரிவிக்கும் சிலர், ஜெயமனோகரன், ஜெயசங்கர், ஜெயஸ்ரீ என்பதை ஜயமனோகரன், ஜயஷங்கர், ஜயஸ்ரீ என்று "மாற்றி" எழுதினால் மட்டும் மகிழ்வுடன் ஏற்று வாளா இருக்கின்றனர். தமிழில் செயமனோகரன் என்றும், செயசங்கர் என்றும், செயசிரீ என்றும் எழுதுவது எவ்வாற்றானும் இழுக்கோ, தவறோ அன்று! இது தவிர, தமிழில் வழங்கும் மெய்யொலிக்கூட்டங்களையும் கூடிய மட்டிலும் மதிக்க முற்பட வேண்டும். watchstrap என்பதில் -tchstr- என ஆறு மெய்யொலிகள் கூட்டமாய் வருகின்றன, இதை வாட்ச்ஸ்ட்ராப்(பு) என்று எழுதவேண்டும் என்று கூறுவோர் தமிழ் முறையையும் இயல்பையும் போற்றாததே காரணம். வாட்சுசிற்றாப்பு என்பது போல இடையே உயிரொலி பெய்து எழுதுவது சற்று நீளமாகத் தென்பட்டாலும் (இங்கு அதிக நீளம் இல்லை) அதுவேஅல்லது அது போன்றதே இயல்பான முறை. சப்பானியர் up-to-date என்பதை apputodeito என்றும் escalator என்பதை esukareta என்றும் கூறுகின்றார்கள் (அவர்கள் செல்வக்குமார் என்பதை செரபகுமா என்கிறார்கள்- ல் இல்லை, கடைசி ர் ஐயும் விட்டுவிடுகிறார்கள். ஆனால் நான் சொல்ல வந்தது இடையே உயிரொலி பெய்து எழுதுவதை எசுக்கலேட்டர் என்று நாம் எழுதக்கூடியதை ஒட்டியது என்பதே). எசுப்பானியரும் கூட கீழ்க்காணுமாறு எழுதுகின்றனர் :
எசுப்பானியம் - ஆங்கிலம் escala - scale escalpelo - scalpel escandio - scandium escultor - sculptor escaner - scanner espectador spectator especulacion speculation eslogan slogan eslavo Slavic, Slav esperma sperm espinaca spinach
நாம் தமிழில், அ, இ, உ, எ என உயிரெழுத்தை முன்னே இட்டு எழுதுவது போன்றதே இதுவும்.
--செல்வா 05:55, 15 பெப்ரவரி 2012 (UTC)(சிறு திருத்தத்துடன்) --செல்வா 06:21, 15 பெப்ரவரி 2012 (UTC)
உதவி: கணினி
தொகுகணினி சார் கட்டுரைகளுக்கு எந்தப் பகுப்பு உபயோகம் செய்யப் படுகிறது? அன்புடன், -Pitchaimuthu2050 07:03, 15 பெப்ரவரி 2012 (UTC)
- கணினிசார் பல்வேறு பகுப்புகளில் நீங்கள் உருவாக்கிவரும் கட்டுரைக்கு [[பகுப்பு:மென்பொருள்]] என்ற பகுப்பு பொருத்தமானது.--மணியன் 07:12, 15 பெப்ரவரி 2012 (UTC)
இக்கட்டுரையில் சில மாதங்களாக தற்போதைய நிருவாகத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைத்து உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பல புதிய கணக்குகள் உருவாக்கி உள்ளடக்கங்களை சேர்த்து விட்டு செல்கின்றனர். சான்றில்லாதவை என்று சுட்டிக் காட்டினால், போலிச் சான்றுகள் காட்டிச் சேர்க்கும் முயற்சியும் நடக்கின்றது. தனிமனித அவதூறாகக் கொள்ளக் கூடிய உள்ளடக்கங்கள் சேர்க்கப்படுவதால், தற்காலிகமாகக் கட்டுரையைக் காத்துள்ளேன். இது பற்றி பின்னணி அறிந்தவர்களும் பிற நிருவாகிகளும் சற்று என் செய்கைகளை (காத்தலையும் மீளமைத்தலையும்) சரி பார்க்க வேண்டுகிறேன். (பல்கலைக்கழக உள் அரசியலை, விக்கியில் தீர்த்துக் கொள்வது போல எனக்குப் படுகிறது).--சோடாபாட்டில்உரையாடுக 12:42, 16 பெப்ரவரி 2012 (UTC)
- இது போன்ற தொகுப்புப் போர்களும், பேச்சுப் பக்க அக்கப்போர்களும் :) வளர்ந்த விக்கிகளில் தான் வரும் என்கிறார்களே :)--இரவி 20:04, 16 பெப்ரவரி 2012 (UTC)
- பூட்டி வைப்பது ஏற்புடையதே. இனி, இது போல நிறைய கட்டுரைகளில் நடக்கலாம் என்பதால் பூட்டுவதற்கான விளக்கத்தை அந்தந்தப் பேச்சுப் பக்கங்களில் மட்டும் தெரிவித்தால் கூடப் போதுமானதே. சாதி குறித்த தலைப்புகளில் வரும் சர்ச்சை, இது போன்ற சர்ச்சை ஆகியவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியின் அடையாளமாக, பொதுப் பயன்பாடுக்கு வருவதன் அடையாளமாகப் பார்க்கிறேன். அவ்வளவு தான்--இரவி 20:42, 16 பெப்ரவரி 2012 (UTC)
ஆத்தா நாங்க pass ஆகிட்டோம் :)
தொகுஅனைத்து அளவீடுகளிலும் தமிழ் விக்கிப்பீடியா பசுமையாக உள்ளது :)--இரவி 20:04, 16 பெப்ரவரி 2012 (UTC) விருப்பம்--shanmugam 20:11, 16 பெப்ரவரி 2012 (UTC)
- விருப்பம் நன்றி இரவி! இவ்வலசல் நல்லதோர் முயற்சி. சிச்யுவைப் ("Shiju"-வைப்) பாராட்டுகிறேன், ஆனால் பலவற்றையும் குறித்து கருத்துகள் கூறவேண்டும் (தனியே அவருக்கும் எழுதுவேன்).
- " Marathi for the medium-sized communities, and Tamil amongst the larger communities" என்கிறார். ஆனால் அதே அட்டவனையில் மராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கையை 9 கோடியாகவும், தமிழ் பேசுவோர் எண்ணிக்கையை 6.6 கோடியாகவும் காட்டுகின்றார். எப்படி "medium-sized" (நடுத்தர எண்ணிக்கை கொண்ட) குமுகம் என்று கூறுகின்றார் என்று விளங்கவில்லை.
- கட்டுரை எண்ணிக்கையைத் தரும்பொழுது 200 எழுத்துகளுக்கும் கூடுதலாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையையும் கட்டாயம் தருதல் வேண்டும். 200 எழுத்துகள் என்பதே மிகமிகச் சிறிய எண்ணிக்கை. 250 எழுத்துகள் கொண்ட ஒரு கட்டுரை என்ன பயனுடைய கருத்தைக் கொண்டிருக்க முடியும்?
- கலைக்களஞ்சியத்தின் மொத்த பைட்டு அளவும், சராசரி பைட்டு அளவும் குறிப்பிட்டு ஒப்பிட வேண்டும்.
- விக்கிப்பீடியர்களில் ஆண்/பெண் விகிதம் தர முனைவதும் தேவை.
- ஏற்கனவே அவர் நிறைய செய்திருக்கிறார், மறுக்கவில்லை, ஆனால் ஒப்பீடுகள் போதுமானவை அல்ல (என் கணிப்பில்). விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு என்னும் பக்கத்தில் உள்ள தரவுகளை மற்ற மொழி விக்கிகளுக்கும் விரிவாக்கி இருந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.
- என்னைப் பொருத்த அளவிலே, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு ஆகிய மொழி விக்கிகள் நல்ல முறையிலே வளர்ந்து வருகின்றன, ஆனாலும் இந்தி, தமிழ், மலையாளம் தவிர்த்த பிற மொழிகள் இதுகாறும் தொடர்ந்து சீராக முன்னேறவில்லை. ஒரியா, அசாமி, குசராத்தி ஆகியவை நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றன (முன்பு வங்காளி விக்கி, இந்தியத் துணைக்கண்ட மொழி விக்கிகளில் முன்னணியில் இருந்த ஒன்றாக இருந்தது).
- தமிழ் விக்கிப்பீடியா, கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டுவதைவிட அறிவுப் பயன் மிகுந்த கலைக்களஞ்சியமாக உருவாக்க முனைவது நல்லது என்பது என் தனிக்கருத்து. 100 பேர் ஆளுக்கு ஒரு 100 தரமான கட்டுரைகள் எழுதினாலும், மிகச்சிறந்த 10,000 கட்டுரைகளை நாம் கொண்டிருக்க முடியும். இந்நிலையை நாம் எட்டுவதே சிறந்த ஒரு முதல்நிலை வளர்ச்சியாக நான் கருதுகின்றேன். இப்படிச் செய்தால் 1000-1500 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகள் அடங்கிய தரமான ஒரு கலைக்களஞ்சியத்தை நாம் உருவாக்கியது போல் ஆகும். 200 நண்பர்கள் வெறும் 50 நல்ல கட்டுரைகளை உருவாக்கினாலே இதனை நாம் எட்டலாம்.
- "கட்டுரை எண்ணிக்கை" என்பதையும் தாண்டி, விடாது தர அளவீடுகள் செய்வது கட்டாயம் வேண்டும், இதைச் செய்யத்தயங்கினால் இழப்பு நமதே.
--செல்வா 22:08, 16 பெப்ரவரி 2012 (UTC)
- உங்களின் கடைசி 2 கருத்துகளை முழு மனதோடு வரவேற்கிறேன். நான் விக்கிப்பீடியாவுக்கு வந்தபோதே தீர்மானித்துவிட்டேன். வருடத்திற்கு 100 கட்டுரைகள்தான் என்று. என்னாலும் (முழுமையான, தரமான கட்டுரைகளைத் தர) அவ்வளவுதான் முடியும். --மா. செல்வசிவகுருநாதன் 20:18, 17 பெப்ரவரி 2012 (UTC)
- நன்றி மா. செல்வசிவகுருநாதன்.
- உங்களின் கடைசி 2 கருத்துகளை முழு மனதோடு வரவேற்கிறேன். நான் விக்கிப்பீடியாவுக்கு வந்தபோதே தீர்மானித்துவிட்டேன். வருடத்திற்கு 100 கட்டுரைகள்தான் என்று. என்னாலும் (முழுமையான, தரமான கட்டுரைகளைத் தர) அவ்வளவுதான் முடியும். --மா. செல்வசிவகுருநாதன் 20:18, 17 பெப்ரவரி 2012 (UTC)
- விருப்பம் நம்ம (மலையாள விக்கியர்களையும் சேர்த்து) மேல்நிலைப்பள்ளிக்கு போய்ட்டொம், மற்ற இந்திய விக்கிக்கு இருக்கும் சவால்கள் நமக்கும் இருந்தால் கூட, இனிமேல் நாம் எப்பொழுதும் இதர இந்திய விக்கிகளோடு உயரத்தை சரிபார்த்து குதிக்க வேண்டாமென நினைக்கிறேன். ஸ்ரீகாந்த் 21:16, 16 பெப்ரவரி 2012 (UTC)
- விருப்பம் சமூக வளர்ச்சி மிகவும் முக்கியமானதாக காட்டியுள்ளார். அதில் சென்ற ஆண்டு நாம் முன்னேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய பயனர்களுக்கு உற்சாகமளித்து உதவியும் புரிதலே பேண்தகு வளர்ர்ச்சிக்கு ஆதாரமாக அமையும். தலைப்புப்பட்டி தூண்டல்கள், விக்கியன்பு போன்ற முயற்சிகள் பலனளித்துள்ளன. --மணியன் 01:12, 17 பெப்ரவரி 2012 (UTC)
//மொத்த பைட்டு அளவும், சராசரி பைட்டு அளவும்//
சிச்சு சுட்டியுள்ளபடி கூகுள் மொழிபெயர்ப்பு, மற்ற தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்கத்தின் காரணமாக இந்த அளவீடு கூட உண்மை நிலையைச் சுட்டுவதாக இல்லை.
//என்னைப் பொருத்த அளவிலே, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு ஆகிய மொழி விக்கிகள் நல்ல முறையிலே வளர்ந்து வருகின்றன//
உண்மையில் தமிழ், மலையாளம் தவிர்த்த பிற விக்கிகளில் தேக்க நிலையே உள்ளது. அச்சமூகப் பயனர்களிடம் நேரடியாக உரையாடும் போது இதனை அறிய முடிகிறது. மற்ற விக்கிகளின் வளர்ச்சியில் கூகுள் கட்டுரைகள், தானியங்கிகளின் பங்கு கணிசமாக உள்ளது. இது சமூக வளர்ச்சியைச் சுட்டவில்லை.
// நம்ம (மலையாள விக்கியர்களையும் சேர்த்து) மேல்நிலைப்பள்ளிக்கு பொய்ட்டொம், மற்ற இந்திய விக்கிக்கு இருக்கும் சவால்கள் நமக்கும் இருந்தால் கூட, இனிமேல் நாம் எப்பொழுதும் இதர இந்திய விக்கிகளொடு உயரத்தை சரிபார்த்து குதிக்க வேண்டாமென நினைக்கிறேன்.//
உங்கள் உவமையை இரசித்தேன் :) மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் மலையாள விக்கியும் தமிழ் விக்கியும் கட்டுரை எண்ணிக்கையில் சம அளவில் உள்ளன. ஒரு சில தர அளவீடுகளிலும் மலையாள விக்கி முன்னணியில் நிற்கிறது. தமிழில் விக்கிப்பீடியா தவிர, விக்சனரி, விக்கிமூலம் திட்டங்களும் வளர்ந்து வருகின்றன. இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது விக்கிமீடியா நிறுவனத்திடம் இருந்து இந்திய விக்கிகளைப் பற்றி வரும் முதல் ஒப்பீடு என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. மற்றபடி, நாம் இனி உலக அளவிலான விக்கிகளை உற்று நோக்கி வளர்ச்சியைத் திட்டமிட வேண்டும் என்பதே குறி.--இரவி 10:43, 17 பெப்ரவரி 2012 (UTC)
முதற் பக்கத்தில் இருந்து புதிய பங்களிப்பாளர்களை ஈர்த்தல்
தொகுவிக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறவர்களுக்கும் கூட இங்கே கட்டுரைகள் எழுதலாம் என்பது தெரியாமல் இருக்கிறது என்பது புதிய பங்களிப்பாளர்களை ஈர்ப்பதில் உள்ள முக்கிய சிக்கல். அண்மைக்காலமாக, தள அறிவிப்பில் விக்கிப்பீடியர்களை அறிமுகப்படுத்துவது புதிய பங்களிப்பாளர்களை உதவி வருகிறது. இதே போல், முக்கியமான முதற்பக்கத்தில் இருந்து புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க முயன்றால் என்ன? வலைத்தள வடிவமைப்பில் இதனை call to action, conversion ratio என்று பல வகையில் குறிப்பிடுகிறார்கள்.. அதாவது, நாம் வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதனை முதற்பக்கத்தில் எடுப்பாகவும் குழப்பம் இல்லாமலும் சுட்டிக் காட்ட வேண்டும். அச்செயலை அவர்கள் செய்ய முனையும் போது தெளிவாக வழிநடத்தி உதவ வேண்டும். வாசகர்கள் பங்களிப்பாளர்களாக மாற வேண்டும் என்பது நமது முக்கிய குறிக்கோள் என்றால் அதனை முதற்பக்கத்தில் தெளிவாகச் சுட்ட வேண்டும். உலகின் மற்ற மொழி விக்கிகளில் நான் தேடிப் பார்த்த வரை, எந்த விக்கியும் இதனைச் செய்வது போல் தெரியவில்லை. எனினும், நாம் இதனைச் சோதனை முறையில் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இதனால் முதற்பக்கத்தில் உள்ள மற்ற உள்ளடக்கங்களுக்கான கவனம் குறைவதாகத் தோன்றினால், வெவ்வேறு வடிவமைப்புகளையும் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுப் பயனர்களுக்கு மட்டும் மாறி மாறிக் காட்டுவது போல் A/B testing செய்து பார்க்கலாமா? இது தொடர்பான ஒரு சோதனை வடிவமைப்பை இங்கு காணலாம். அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். நன்றி--இரவி 19:58, 17 பெப்ரவரி 2012 (UTC)
- இந்த புதிய முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது! --மா. செல்வசிவகுருநாதன் 20:02, 17 பெப்ரவரி 2012 (UTC)
- " call to action, conversion ratio" ஆமாம். மிகவும் சரியான அவதானிப்பு. அடுத்தது என்ன செய்யலாம் என்பதை பயனர்களுக்கு உணத்துவதில் தெளிவாக இருந்தால் நன்று. "கட்டுரையைத் தொடங்கவும்", "படங்களை பதிவேற்றவும்", "கருத்துக்களைப் பதியவும்", ....போன்று. --Natkeeran 20:34, 17 பெப்ரவரி 2012 (UTC)
- இரவி, மிக நல்ல சிந்தனை. வரவேற்கின்றேன். நற்பயன் அளிக்கும் என்று நானும் நினைக்கின்றேன்.--செல்வா 20:40, 17 பெப்ரவரி 2012 (UTC)
- " call to action, conversion ratio" ஆமாம். மிகவும் சரியான அவதானிப்பு. அடுத்தது என்ன செய்யலாம் என்பதை பயனர்களுக்கு உணத்துவதில் தெளிவாக இருந்தால் நன்று. "கட்டுரையைத் தொடங்கவும்", "படங்களை பதிவேற்றவும்", "கருத்துக்களைப் பதியவும்", ....போன்று. --Natkeeran 20:34, 17 பெப்ரவரி 2012 (UTC)
- விருப்பம் நல்ல முன்மொழிவாகக் கருதுகிறேன்.இருப்பினும் வடிவமைப்பில் Mainpage v2வை விட MainpageIntro வார்ப்புருவில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். --மணியன் 03:01, 18 பெப்ரவரி 2012 (UTC)
- நல்ல முயற்சி. சிறந்த பலன் கிடைக்கும் என நினைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:56, 18 பெப்ரவரி 2012 (UTC)
- விருப்பம் சிறந்த யோசனை. முதற்பக்கத்துக்கு தினம் 2000-2500 பார்வைகள் கிட்டுகின்றன. விக்கிப்பீடியர் அறிமுகத்துக்கு பதிலாக இது இடம் பெறுமெனில் (அதே இடமெனத் தேவையில்லை) பிற உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் குறையாது. வடிவமைப்பில் ஒரு சிறிய மாற்றம் இருந்தால் கூடுதல் பலனுள்ளதாக இருக்கும் - landing page ஒன்று உருவாக்கி அங்கிருந்து பயனர் கட்டுரை உருவாக்குமாறு செய்யலாம். எத்தனை பேர் முதல் பக்கத்திலிருந்து இங்கு செல்கிறார்கள் என்பதை அளக்க வசதியாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:54, 18 பெப்ரவரி 2012 (UTC)
- விருப்பம் நல்ல முயற்சி, இதனை செய்யும் பொழுது கூடுதல் landing page இல் detailed-walk-through-tutorials உடன் செய்தால் நல்ல conversion ratio இருக்கும் என்பது என் கருத்து. சோதனை வடிவமைப்பின் பேச்சுப் பக்கத்தில் விரிவாக கருத்துக்களை விரைவில் இடுகிறேன். நன்றி. பங்களிப்பாளர் அறிமுகங்களை ஆலமரத்தடிக்கு மாற்றலாம் :) ஸ்ரீகாந்த் 06:03, 18 பெப்ரவரி 2012 (UTC)
- ஆம், இரவி. செயல்படத் தூண்டும் வசதி மிகவும் பயன் தரும். ஆனால், விக்கியில் பங்களிப்பது என்றால் புதுக்கட்டுரைகளைத் தொடங்குவது தான் வழி என்ற எண்ணத்தை உருவாக்கிவிடக் கூடாது. வடிவமைப்பில், இருக்கும் கட்டுரைகளைத் திருத்தத் தூண்டும் வேட்பும் இருக்குமாறு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 06:42, 18 பெப்ரவரி 2012 (UTC)
- மிக நல்ல யோசனை ரவி. சுந்தரின் கருத்துகளுடனும் உடன்படுகிறேன். தொகுப்பதற்கு ஒரு பொத்தானும் புதிய கட்டுரைக்கு ஒரு பொத்தானும் தரலாம். தலைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு கேள்வி. விக்கிப்பீடியாவில் தமிழ் தொகுத்தல் (Ctrl+M) வசதி கொண்டு வந்த பின்னர் தொகுப்புகளின், பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எங்கேனும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா?--சிவக்குமார் \பேச்சு 07:50, 18 பெப்ரவரி 2012 (UTC)
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. எப்படி வடிவமைப்பது, எப்படி அறிவிப்பது, இம்முயற்சியின் நேரடிப் பயனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்ற விசயங்களைப் பொறுமையாக அலசி, சோதித்த பிறகு முதற்பக்கத்தில் காட்டலாம். அவசரம் இல்லை. விரிவான landing page (தமிழில் எப்படிச் சொல்ல? ) செய்து, முதற்பக்கத்தில் இருந்து எடுப்பான இணைப்பாகத் தரலாம். ஆனால், முதற்பக்கத்திலேயே கட்டுரையை உருவாக்குவதற்கான பெட்டியும் பொத்தானும் இருப்பது முக்கியம். நாம் ஒவ்வொரு சொடுக்கைக் குறைக்கும் போதும் கூடுதல் பங்களிப்பைப் பெறுவோம். அதே போல், வெறும் பொத்தானாக இல்லாமல் கண்கவர் வடிவமைப்பாகச் செய்வது பற்றியும் சிந்திக்கலாம்.
இந்த முயற்சிக்காக முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகப் பகுதியையோ வேறு எதையுமோ நீக்கத் தேவை இல்லை. இதனை வேறு எந்தப் பக்கத்தில் காட்டினாலும் தகுந்த கவனிப்பு கிடைக்காது. முதற்பக்கத்தில் கூடுதலான தகவலாகவே இதனைச் சேர்க்கலாம். அல்லது, தள அறிவிப்பில் வெவ்வேறு தகவல்கள் மாறி மாறி வருவது போல், முதற்பக்கத்தில் வெவ்வேறு தகவல்களை மாற்றி மாற்றிக் காட்ட முடியுமா என்றும் பார்க்கலாம். இதன் மூலம் கட்டுரையை எழுதக் கோருவது மட்டுமின்றி, படிமங்கள் சேர்த்தல், ஏற்கனவே உள்ள கட்டுரைகளைத் திருத்துதல் என்பன போன்று வெவ்வேறு தூண்டல்களை இடலாம். பொதுவாக, தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தை ஒரு கலைக்களஞ்சியத்தின் அட்டைப் படம் / உள்ளடக்கம் போன்று பார்க்காமல், இந்தத் திட்டத்துக்குத் தேவையான பங்களிப்புகளைப் பெறுவதற்கான களமாகவும் பார்க்க வேண்டும். குறுந்தட்டு வெளியீடு, ஊடகப் போட்டி முடிவுகள் அறிவித்தல் போன்ற விசயங்களுக்கும் இதே இடத்தை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதும் தகும். நன்றி--இரவி 07:05, 18 பெப்ரவரி 2012 (UTC)
- நல்ல முயற்சி. முதற்பக்கத்தில் இடம் தேவை என்றால் முதற்பக்கக் கட்டுரைகளை இரண்டில் இருந்து ஒன்றாகக் குறைத்து, வாரம் இரு முறை வெளிவரக்கூடியதாக மாற்றலாம். இது எனது பரிந்துரை.--Kanags \உரையாடுக 07:26, 18 பெப்ரவரி 2012 (UTC) விருப்பம் -- சூர்யபிரகாஷ் உரையாடுக 09:08, 21 பெப்ரவரி 2012 (UTC)
Thoughts on implementing mw:MoodBar
தொகுmw:Extension:Moodbar is an extension which allows instant feedback from users making their first edits prompting them their experience. Please see mw:Moodbar,en:Special:FeedbackDashboard,Screenshot. If the community feels having this will make this place better for newbies / interacting with them, we need to complete translating it and request for enabling it through bugzilla. PS: This will add some load on editors since may they need to respond to specific queries, but IMO its worth in getting the newbie thoughts captured, than merely pasting Welcome template and not having any interactions. ஸ்ரீகாந்த் 08:15, 6 பெப்ரவரி 2012 (UTC)
- MoodBar என்பதற்குத் தமிழில் மனநிலைப் பட்டை என்று பெயர் வைக்கலாமா? --மதனாஹரன் 11:26, 6 பெப்ரவரி 2012 (UTC)
முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. --மதனாஹரன் 12:43, 6 பெப்ரவரி 2012 (UTC)
(மறுமுறை கருத்து வேண்டுகிறேன்) -- ஸ்ரீகாந்த் 05:00, 18 பெப்ரவரி 2012 (UTC)
- ஸ்ரீகாந்த், முதல் பார்வையில் இது நல்ல முயற்சியாகவேத் தோன்றியது. ஆனால் பின்னூட்டம் பெறும் வலைவழி செய்தி மற்றும் பிற தளங்களில் இந்திய உலாவுனர்கள் பொறுப்பின்றி எழுதுவதைக் கவனிக்கையில் சற்று பயம் நேர்கிறது. இருப்பினும் இவற்றை வடிகட்டி பயனுள்ள பின்னூட்டம் பெற்று புதுப்பயனர் ஐயங்களைக் களைய இயல வேண்டும். எனவே எனது ஆதரவு. விருப்பம்--மணியன் 06:26, 18 பெப்ரவரி 2012 (UTC)
- பின்னூட்டம், தொகுப்பவர்களுக்கு மட்டும் தான் வரும். அதிகபட்சம் 20 அனானிகள், 5 புதுப்பயனர்கள் ஒரு மட்டுமே வருவார்கள் என்பது என் கணிப்பு, அவற்றில் குப்பை பின்னூட்டங்கள் குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். ஸ்ரீகாந்த் 13:13, 18 பெப்ரவரி 2012 (UTC)
விருப்பம் ஆதரவு! --மதனாஹரன் 12:55, 18 பெப்ரவரி 2012 (UTC)
- அனானிகளை முற்றிலும் தடுக்க முடியுமா? அல்லது குறைந்த அளவிலேயே அனானிகளை கருத்து சொல்ல அனுமதிக்கலாமா? அனானிகளிடம் பட்ட துன்பம் அப்படிபட்டது :((, சர்ச்சை இல்லாத பதிவுக்கே 100 ஒரே கருத்துகளை வெட்டி ஒட்டிட்டாங்க :(. (3 ஆண்டுக்கு முன் எழுதன இடுகைக்கு 100க்கு மேல வந்திருக்கு :( ) நான் கட்டுரையை சிறிதாக துவக்கினேன் பலர் கட்டுரையை விரிவாக்கி பெரிசாக்கினார்கள் அப்ப கருத்து எல்லோருக்கும் போகுமா?--குறும்பன் 03:07, 19 பெப்ரவரி 2012 (UTC)
- நீங்கள் கூறவது வேறு ஒரு பிரச்சனை என நினைக்கிறேன். Moodbar கட்டுரை பற்றி கருத்துப் பின்னூட்டம் கேட்காது. தொகுத்தவரிடம், தொகுத்தவரிடம், அவர்களது மனநிலை, தொகுத்தலைப் பற்றிய கருத்துக்கள் கேட்கும். அக்கருத்துக்கள் கட்டுரையுடன் வராது.தனியாக ஓர் சிறப்பு பக்கத்தில் வரும். ஸ்ரீகாந்த் 04:57, 19 பெப்ரவரி 2012 (UTC)
வழு bugzilla:34560 பதியப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் 09:47, 21 பெப்ரவரி 2012 (UTC)
ஆயிற்று இன்று முதல் கணக்கு தொடங்குபவர்களுக்கு பயனர் பட்டையின் இடப்பக்கத்தில் பின்னூட்டம் கொடுப்பதற்கான இணைப்பு வரும். சிறப்பு:FeedbackDashboard சென்று நாம் அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்து, பதிலளிக்கலாம். நன்றி ஸ்ரீகாந்த் 19:41, 21 பெப்ரவரி 2012 (UTC)
உதவி: அறிவியல்_சொற்கள்_உருவாக்கச்_செயல்முறை
தொகு
விக்கிநூல்கள் உங்களின் உதவியை நாடுகிறது! தமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு தற்போது உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க அனைவரையும் அழைக்கிறோம். பொறியியல் சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் அறிவியல் சொற்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும். http://ta.wikibooks.org/wiki/அறிவியல்_சொற்கள்_உருவாக்கச்_செயல்முறை மேற்கண்ட கட்டுரையில் தமிழ் சொற்களுக்கு அறிவியல் சொற்களை நான் உருவாக்கும் பொழுது சந்திக்கும் இடர்களின் மூலம் சில விதிகளை உருவாக்கி உள்ளேன். இவ்வாறு ஒரு கட்டமைப்பான விதியை உருவாக்கும் பொழுது தமிழ் சமுதாயம் முழுமையும், பிற மொழி கருத்துக்களை மொழிமாற்றம் செய்யும் பொழுது ஒரு தொழில் நுட்பச்சொல்லிற்கு ஒரு சொல்லையே பயன்படுத்தும் முறை உருவாகும், என்பதில் ஐயம் இல்லை. தமிழ் ஆசிரியர்களை பங்களிக்குமாறு வேண்டுகிறோம். தங்களின் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம். பி.கு: ஒரு வேளை இந்த முயற்சித் தேவையற்றது என்றாலும் அதனையும் தெரிவிக்கவும். |
-Pitchaimuthu2050 18:23, 19 பெப்ரவரி 2012 (UTC)
- நல்ல பயன் தரும் முயற்சி. விரைவில் தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் பயன்பாட்டில் consistency குறைவு. இது ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. இதற்கு கலைச்சொற்கள் தனியாகவும், அதன் பயன்பாட்டுச்சூழல்(பாடநூல்கள்,ஊடகங்கள்) வேறாகவும் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். விரிவான கருத்துக்களை விரைவில் பகிர்கிறேன். நன்றி. --Natkeeran 18:45, 19 பெப்ரவரி 2012 (UTC)
- நல்ல முயற்சி. என் தனிக்கருத்து என்னவென்றால், எந்தக் கலைச்சொல் ஆக்கமாக இருந்தாலும் அது சூழல் சார்ந்து, பல்வேறு வகையான பொருட் சூழல்கள் உணர்ந்து, முக்கியமாக கலந்துரையாடி , ஒரு 4-5 வரியாக ஒரு பத்தியாவது எழுதிப் பொருத்தம் பார்த்து செய்தல் நல்லது. 40+ ஆண்டுப் பட்டறிவில் சொல்லுகின்றேன் (இதனால் நான் சொல்வது சரியாக இருக்கவேண்டும் என்னும் நினைப்பில் ஒருசிறிதும் சொல்லவில்லை. அருள்கூர்ந்து கருத்தில் கொள்க.). நீங்கள் சுட்டியிருக்கும் three-phase current போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள். அலைமுகம் என்பதை நான் phase என்று ஆள்கின்றேன். மும்முக மின்னோட்டம் அல்லது மூவலைமுக மின்னோட்டம் என்று ஆக்கலாம். நற்கீரன் சொல்லும் இணக்கச்சீர்மை அல்லது இணக்கவொருமை ("consistency") அடைய முனைவதும் தேவை. இலங்கை வழக்கு, தமிழக வழக்கு, சிங்கப்பூர்-மலேசிய வழக்கு என்பனவும் ஒருமித்து வருமாறு செய்ய முடிந்தால் கூடிய பலனைத் தரும்.--செல்வா 19:47, 19 பெப்ரவரி 2012 (UTC)
- நல்ல பயன் தரும் முயற்சி. விரைவில் தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் பயன்பாட்டில் consistency குறைவு. இது ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. இதற்கு கலைச்சொற்கள் தனியாகவும், அதன் பயன்பாட்டுச்சூழல்(பாடநூல்கள்,ஊடகங்கள்) வேறாகவும் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். விரிவான கருத்துக்களை விரைவில் பகிர்கிறேன். நன்றி. --Natkeeran 18:45, 19 பெப்ரவரி 2012 (UTC)
உதவி: விக்சனரி முதற்பக்கச் சீரமைப்பு
தொகுவிக்சனரி முதற்பக்கம் சீரமைத்து அதனை தெளிவாக காண்பித்தால் நலம் என்று எண்ணுகிறோம். தற்போது உள்ள முதற்பக்க வடிவில் இடைவெளிகள் அதிகம் இடையிடையே இருக்கின்றது. அவற்றை நீக்கினால் நன்று என்று எண்ணுகிறேன். நிலையான தினம் ஒரு என்ற பகுதிக்குப் பதிலாக சிறப்பான சொற்களை முதற் பக்கத்தில் இணைக்கலாம். இதன்மூலம் ஒவ்வொரு முறையும் ஒரு பயனர் செல்லும் பொழுது சிறப்பான சொற்கள் காட்சிப்படுத்தப் படும். இதன் மூலம் அந்தச் சொல்லின் தரத்தை உயரத்த ஒவ்வொரு பயனுறும் உதவ முடியும் என்று எண்ணுகிறோம். இது பற்றி விக்சனரி ஆழ மரத்தடியில் இட்டு உள்ளேன். முதற்பக்க அணுக்கம் உள்ளோர் இதில் பங்கெடுத்தால் சிறப்பாக அமையும் என்றே எண்ணுகிறேன். http://ta.wiktionary.org/wiki/விக்சனரி:ஆலமரத்தடி#.E0.AE.AE.E0.AF.81.E0.AE.A4.E0.AE.B1.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95_.E0.AE.9A.E0.AF.80.E0.AE.B0.E0.AE.AE.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81
அன்புடன், -Pitchaimuthu2050 10:32, 20 பெப்ரவரி 2012 (UTC)
ஆங்கிலம் கலந்த வங்க மொழிப் பயன்பாட்டுக்கு வங்க தேச நீதிமன்றம் தடை
தொகுA Bangladesh court has outlawed the use of English slang known as "Banglish" on television and radio stations, a move welcomed by experts on Friday who worry about a foreign invasion of their language.--இரவி 14:29, 20 பெப்ரவரி 2012 (UTC)
- செய்திக்கு மிக்க நன்றி இரவி! ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து போற்றும் அனைத்துலகத் தாய்மொழி நாள் (இது 2012 இல் பிப்பிரவரி 21 அன்று வரவுள்ளது- நாளை), வங்காளி மொழிக்காக போராடி பலர் மாண்டதன் நினைவாக உருவாக்கிய நாள். ஐ.நா தாய்மொழி நாள். மேலும் அறமன்றங்களிலே போராடி, இப்படியெல்லாம் தடை இடுவது செல்லாது என்று மீண்டும் மாற்றவும்கூடும். ஆனால் ஐ.நா-விலும் மொழியுரிமை என்பது அடிப்படை உரிமை என்று கூறி வலுவூட்டி இருக்கின்றார்கள் இன்று இருக்கும் 6000+ மொழிகளில் இரண்டு கிழமைகளுக்கு ஒரு மொழியாக அறவே அற்று அழிந்து வருகின்றது. கலப்பு என்பது எல்லா காலங்களிலும், எல்லா மொழிகளிலும் நிகழ்வது, அது இயல்பு, ஆனால் வங்காள மொழியைக் காக்க அவர்கள் நடவடிக்கைகள் எடுப்பதுபோல, தமிழை கிரியோல் (creole) மொழிபோல ஆக்கத் துடித்து ஆக்கிக்கொண்டும் இருக்கும் ஊடகங்களிடம் இருந்து தமிழ்நிலங்களில் இருக்கும் அரசுகள் ஏதும் நடவடிககிகள் எடுக்குமா? (தமிழ் விக்கியில் உள்ள அனைத்துலகத் தாய்மொழி நாள் என்னும் கட்டுரையையும் பாருங்கள்).--செல்வா 14:56, 20 பெப்ரவரி 2012 (UTC)
- Government will now prefer ‘hinglish’ words over Hindi translation. என்ன ஒரு ஃபாசிச போக்கு. மொழியை இதுபோல அரசாணை/நீதிமன்ற ஆணை மூலம் காத்துவிடலாம்/மாற்றிவிடலாம் எனக் கருதும் அரசுகள் இருக்கும் வரை,அதனை நம்பும் மக்கள் இருக்கும் வரை, இம்மொழிகள் வளர்ச்சியே அடையாது.இந்திய, வங்கதேச அரசுகள் செய்த இந்த இரண்டுமே கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம்.(இரு வேறு பக்கங்களில்) ஸ்ரீகாந்த் 15:58, 20 பெப்ரவரி 2012 (UTC)
- ஸ்ரீகாந்த், இதுபோல அரசுகள் தலையிடுவதால் நன்மையா தீமையா என்பது தனிக் கேள்வி. ஆனால், அவற்றினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய கேள்வியே இல்லை. எழுத்துக்கள் வரிவடிவம் பெற்ற காலம் முதலாகவே மொழியின் மாற்றத்தில் அன்றாடப் பயன்பாட்டாளர்களைக் காட்டிலும் பெரிய பங்கு சில ஆளுமைக்குழுக்களுக்கே இருந்து வந்திருக்கிறது. ஓலைச்சுவடிகளில் எழுதத் தெரிந்தவர், கல்வெட்டில் எழுதப் பணம் கொடுத்த ஆட்சியாளர், ஆட்சியாளர்களுக்குச் சமய அறிவுரை வழங்கியவர்கள், பின்னாளில் அச்சகங்களைக் கொண்டிருந்தவர்கள், வானொலி, இப்போது தொலைக்காட்சி ஊடகங்கள் என மக்களின் பொதுவழக்கையும் மீறிய சக்திகள் இருந்து வந்துள்ளன. அந்தத் தொலைக்காட்சிகளில் இருக்கும் வங்கமொழி பெரும்பான்மை வங்காளிகளின் மொழியை ஒத்து இருக்குமா? அப்படி இல்லாத போது இது ஒரு ஆற்றல் குழுவுக்கும் மற்றொரு ஆற்றல் குழுவுக்கும் இடையே உள்ள போராட்டம். இதில் creolisation-ஐத் தடுப்பதால் வங்க நீதிமன்றத்தின்
அரசின்தலையீட்டைச் சற்று தயக்கத்துடன் ஆதரிக்கிறேன். ஏனெனில் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் இன்னும் மக்கள் ஊடகங்கள் அல்ல, சில குழுமங்களின் கைகளில் உள்ளவை. இணையம் ஒருவேளை மெய்யான மக்கள் பங்களிக்கும் ஊடகமாக வளரக் கூடும் (இப்போது இல்லை). -- சுந்தர் \பேச்சு 03:53, 21 பெப்ரவரி 2012 (UTC)
- ஸ்ரீகாந்த், இதுபோல அரசுகள் தலையிடுவதால் நன்மையா தீமையா என்பது தனிக் கேள்வி. ஆனால், அவற்றினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய கேள்வியே இல்லை. எழுத்துக்கள் வரிவடிவம் பெற்ற காலம் முதலாகவே மொழியின் மாற்றத்தில் அன்றாடப் பயன்பாட்டாளர்களைக் காட்டிலும் பெரிய பங்கு சில ஆளுமைக்குழுக்களுக்கே இருந்து வந்திருக்கிறது. ஓலைச்சுவடிகளில் எழுதத் தெரிந்தவர், கல்வெட்டில் எழுதப் பணம் கொடுத்த ஆட்சியாளர், ஆட்சியாளர்களுக்குச் சமய அறிவுரை வழங்கியவர்கள், பின்னாளில் அச்சகங்களைக் கொண்டிருந்தவர்கள், வானொலி, இப்போது தொலைக்காட்சி ஊடகங்கள் என மக்களின் பொதுவழக்கையும் மீறிய சக்திகள் இருந்து வந்துள்ளன. அந்தத் தொலைக்காட்சிகளில் இருக்கும் வங்கமொழி பெரும்பான்மை வங்காளிகளின் மொழியை ஒத்து இருக்குமா? அப்படி இல்லாத போது இது ஒரு ஆற்றல் குழுவுக்கும் மற்றொரு ஆற்றல் குழுவுக்கும் இடையே உள்ள போராட்டம். இதில் creolisation-ஐத் தடுப்பதால் வங்க நீதிமன்றத்தின்
- ஓர் பரிந்துரையாக....இவை போன்ற உரையாடல்களை நமது வலைப்பதிவில் மேற்கொண்டால் விக்கிக்கு வெளியே உள்ள பதிவர்களும் பங்கெடுக்கலாம். தவிர வந்தவர்கள் விக்கிக்கும் வர வாய்ப்புண்டு. தற்போது இந்த வலைப்பதிவு துவண்டுள்ளது.
- மக்களாட்சி அரசுகள் வாக்குகள் பெறுவதைக் கொண்டே முடிவெடுக்கின்றன. நீதிமன்றங்கள் சமூக விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும் இயற்கை நீதி, சமத்துவம் உள்ள அரசியலமைப்பு கோட்பாடுகளால் ஓரளவிற்கே கட்டுப்படுத்த முடியும். எனினும் இவை தடையின்றி மொழி அழிவதை சிறிதேனும் தடுக்கும். --மணியன் 04:16, 21 பெப்ரவரி 2012 (UTC)
- நல்ல பரிந்துரை, மணியன். நமது வலைப்பதிவில் இவற்றைப் போட்டால் சிறிது முடுக்கம் பெறும். -- சுந்தர் \பேச்சு 04:20, 21 பெப்ரவரி 2012 (UTC)
- கருத்து - தமிழ் விக்கிப்பீடியாவின் வலைப்பதிவில் இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் இடுவது Activism ஆக பார்க்கப்படும். தவிர்ப்பது நல்லது. ஏற்கனமே நம்மள பல பெயர் வச்சு அழைக்கிறார்கள். வலைப்பதிவில் முதற்பக்கக் கட்டுரைகளை Feeds மூலம் தானாக இற்றைப்படுத்த முடியுமா என சோதிக்கிறேன். ஸ்ரீகாந்த் 06:42, 21 பெப்ரவரி 2012 (UTC)
- நல்ல பரிந்துரை, மணியன். நமது வலைப்பதிவில் இவற்றைப் போட்டால் சிறிது முடுக்கம் பெறும். -- சுந்தர் \பேச்சு 04:20, 21 பெப்ரவரி 2012 (UTC)
வலைப்பதிவில் வருவது தமிழ் விக்கிப்பீடியர்களின் அதிகாரப்பூர்வ கருத்தாகப் பார்க்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால் இது போன்ற மாற்றுக் கருத்து உள்ள செய்திகளை இடுவதைத் தவிர்க்கலாம். மற்றபடி, வலைப்பதிவை எப்படி முடுக்கி விடுவது என்று யோசிக்க வேண்டும். இந்திக்குப் பதிலாக Hinglish (இந்திலம், இங்கிலம்?) பயன்படுத்தலாம் என்பது அரசாணை. ஆனால், வங்க நாட்டில் வந்திருப்பது நீதிமன்ற ஆணை. அரசு தவறும் போது நீதி மன்றம் தலையிடும் போக்கையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது என்ன வகையான நீதிமன்றம் (உச்ச நீதிமன்றமா உள்ளூர் நீதிமன்றமா), இந்த அறிவிப்பை எப்படி நடைமுறைப்படுத்துவார்கள் என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால், மொழி தொடர்பாக நீதி மன்றங்களும் கவனிக்கத் தொடங்கி உள்ளன என்பது முக்கியச் செய்தி. அண்மையில், குசராத்தில் வாழ்பவர்களுக்கு இந்தி அயல்மொழியே என்று ஒரு இந்திய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையும் நினைவு கூரலாம்.
//அரசாணை/நீதிமன்ற ஆணை மூலம் காத்துவிடலாம்/மாற்றிவிடலாம் எனக் கருதும் அரசுகள் இருக்கும் வரை,அதனை நம்பும் மக்கள் இருக்கும் வரை, இம்மொழிகள் வளர்ச்சியே அடையாது.//
மொழியின் போக்கை அரசு மட்டுமே மாற்றி விட முடியாது. ஆனால், அரசு ஒரு மிக முக்கியக் காரணி. உறுதியாக முடிவெடுத்து நடைமுறைப்படுத்தப்படும் எந்த அரசு முடிவும் வலுவான விளைவுகளைக் கொண்டிருக்கும். உலக மக்கள் அனைவரது வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் உள்நாட்டு, வெளிநாட்டு அரசுகள், அவற்றை இயக்கும் நிறுவனங்களின் தவிர்க்க இயலாத ஆளுமை உள்ளது. சுற்றுச்சூழல், பொருளாதாரம் போல பண்பாடும் இதற்கு உட்பட்டதே. --இரவி 06:58, 21 பெப்ரவரி 2012 (UTC)
- //வலைப்பதிவில் வருவது தமிழ் விக்கிப்பீடியர்களின் அதிகாரப்பூர்வ கருத்தாகப் பார்க்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால் இது போன்ற மாற்றுக் கருத்து உள்ள செய்திகளை இடுவதைத் தவிர்க்கலாம்//
- மாற்றுக் கருத்து இருக்கிறதோ,இல்லையோ, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு சம்மந்தமில்லாதவைப் பற்றி வலைப்பதிவில்(கடினமாகப் பார்த்தால் இங்கு கூட) கருத்தாடுவது Activism ஆகப் பார்க்கபடும்.ஆ.விக்கியின் சோப்பா போராட்டத்தைக்கூட activism ஆக பார்த்து கண்டித்தவர்கள் உண்டு. இதனை தவிர்ப்பது நல்லது. ஸ்ரீகாந்த் 08:30, 21 பெப்ரவரி 2012 (UTC)
ஸ்ரீகாந்த், வலைப்பதிவில் விக்கிசெய்திகளை feeds மூலம் இணைக்க முடியுமா?--Kanags \உரையாடுக 08:32, 21 பெப்ரவரி 2012 (UTC)
- கனக்சு, முடியும் என நினைக்கிறேன், விரைவில் உங்களுக்கு மின்னஞல் அனுப்புகிறேன். நன்றி ஸ்ரீகாந்த் 09:37, 21 பெப்ரவரி 2012 (UTC)
ஓர் அறமன்றம் தந்த தீர்ப்பில் ஒருவருக்குக் கருத்து மாறுபாடு இருக்கலாம், மறுக்கவில்லை, ஆனால் அதற்காக "என்ன ஒரு ஃபாசிச போக்கு", "கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம்" என்றெல்லாம் கூறுவது அழகா, இங்குத் தேவையா?! சுந்தர் கூறிய கருத்துகளுடன் உடன்படுகின்றேன். கருதிப் பாருங்கள், சாலை என்பது பொதுப்பயன்பாட்டில் இருப்பது. அங்குச் சாலை விதிகள் இருப்பது ஃபாசிசம் அன்று, கோமாளித்தனம் அன்று, அதுபோலவேதான் மொழி என்பதும் ஒரு பொதுப்பயன்பாட்டுக் கருவி, அதனை வரைமுறையில்லாமல் கெடுப்பதும் சீரழிப்பதும், குற்றுயிராக்குவதும் "உரிமை" அன்று, அப்படியே உரிமை என்று கருதினாலும் , சீரழிக்காமல், கெடுக்காமல் இருக்கச்செய்வதும், மறுப்பதும் உரிமை. மொழி என்பது தலைமுறையைத் தாண்டியும் பயன்தருவது. என் வீடே என்றாலும் நான் நச்சுப்பொருள்களை என் வீட்டில் உற்பத்தி செய்தால், சூழ்ந்திருப்பவர்கள் வந்து தடுப்பதும் அவர்கள் உரிமை (ஏனெனில் அது அவர்களையும் தாக்கும்). கெடுக்க மட்டுமே உரிமை உண்டா? கெடுப்பதைத் தடுக்க உரிமை இல்லையா?, அப்படித்தடுத்தால் அதனைப் பாசிசவாதம், கோமாளித்தனம் என்று கூறுவதா? நம் வீட்டின் முன் குப்பையைக் கொட்டினால், கொட்டாதே என்று சொன்னாலோ, குப்பையை நீக்கினாலோ பாசிசமா? கோமாளித்தனத்தின் உச்சமா? என்ன ஐயா இது?! மொழி வல்லாண்மை (வன்திணிப்பாண்மை) (linguistic imperialism) என்பதும், குறிப்பாக ஆங்கிலத்தின் மொழித்திணிப்பாண்மை பற்றியும் பல நூல்களும், சில நூறு ஆய்வுக்கட்டுரைகளும், அறிவுசார் கட்டுரைகளும் உள்ளன. இது ஓர் அறிவு உள்துறையாகவே வளர்ந்து உள்ளது. குறைந்தது கீழ்க்காணும் 3 நூல்களைப் பரித்துரைப்பேன் (அவற்றில் குறிப்பிட்ட ஆய்வுக்கட்டுரைகள் 500 ஐத் தாண்டும்):
- Phillipson, Robert (1992), Linguistic Imperialism, Oxford University Press. ISBN 0-19-437146-8
- Pennycook, Alastair (1995), The Cultural Politics of English as an International Language, Longman. ISBN 0-582-23473-5
- Pennycook, Alastair (1998), English and the Discourses of Colonialism, Routledge. ISBN 0-415-17848-7
புகழ்பெற்ற இடேவிடு கிறிசிட்டல் (David Crystal) அவர்கள் எழுதிய,
"Crystal, David. (2000). Language death. Cambridge: Cambridge University Press. ISBN 0-521-65321-5." என்பதும் படிக்கத்தக்கது. இரெனெ ஆப்பெல் (Rene Appel) கூறியவாறு பல வழிகளிலும் மொழி சிதையும். ஐயர்லாந்தும், இசுக்காட்லாந்தும் கூட ஆங்கிலத்தில் இருந்து விடுபடத் துடிக்கிறார்கள். உலகில் இன்று எந்தவொரு மொழியையும்விட அதிகமான அறிவிலக்கியம் கொண்டது ஆங்கிலமே, அதனைக் கற்பது மிகவும் நல்லதே. நான் மறுக்கவேயில்லை. அதனால் அம்மொழிச் சொற்களை அளவிறந்து கலந்து தம் மொழியையே அழிக்கவேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது. நாளை அமெரிக்காவில் எசுப்பானியம் பெரும்பான்மையாக இருக்கும் வாய்ப்பு மிகவுண்டு, சீன மண்டரின் வல்லாண்மை மிக்கதாக இருக்க வாய்ப்புண்டு. (நான் வாழும் வாட்டர்லூவில் பல பள்ளிகளில் மண்டரின் படிக்கச்சொல்லிக்கொடுக்கின்றார்கள்). தமிழில் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும், நல்ல தமிழாகவும், ஆங்கிலத்தில் பேசும்பொழுதும், எழுதும் பொழுதும் நல்ல ஆங்கிலமாகவும் இருக்க முயல்வது நல்ல முறை அல்லவா?
--செல்வா 15:46, 21 பெப்ரவரி 2012 (UTC)
- இந்த இழை விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் பற்றிய விவாதமில்லாததால் நான் மேலும் பதிலளிக்க விரும்பவில்லை. ஆம் நான் உரக்கமாகவும் தெளிவாகவும் சொல்கிறேன், மொழி சார் செயற்பாட்டியத்திற்கு இங்கு இடமில்லை. இம்மாதிரியான விவாதங்கள் எவ்வளவு சிறந்த நல்லறிஞர்கள் உரையாடினாலும் விக்கிப்பீடியாவின் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும். ஸ்ரீகாந்த் 16:55, 21 பெப்ரவரி 2012 (UTC)
- ஸ்ரீகாந்த், இந்தச் செய்திக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். இங்கு இந்தச் செய்தியின் அடிப்படையில் எந்தச் செயல்பாட்டையும் நாம் மேற்கொள்ளப் போவதில்லை. ஆனால், இது கேடு விளைவிக்கும் என்பது தேவையற்ற அச்சமே. -- சுந்தர் \பேச்சு 17:00, 21 பெப்ரவரி 2012 (UTC)
- இங்கே மொழி, மொழி நடை பற்றிய செய்திகளும் அது சார்ந்த சிக்கல்கள், கருத்துகள் பற்றியும் இடுவது தவறல்ல. "இடமில்லை" என்று நீங்கள் சொல்வது விக்கிப்பீடியாவைப் பற்றிய மாறுபாடான கருத்தைக் கொண்டிருக்கின்றீர்கள் என்றுதான் கருத வேண்டியது. விவாதம் செய்ய நானும் விரும்பவில்லை, நான் குறிப்பிட வந்தது நீங்கள் பயன்படுத்திய கடுஞ்சொற்களைக் குறித்துதான் (அதற்கு இது இடம் இல்லை!!). நீங்கள் உரக்கமாகச் சொல்வதால் சரியாகாது ஐயா!!--செல்வா 17:18, 21 பெப்ரவரி 2012 (UTC)
சிறீக்காந்த், கடந்த விக்கிமேனியாவுக்குச் சென்ற போது, ஆங்கிலத்தாக்கத்துக்கு உட்பட்ட மொழிகளின் விக்கிப்பீடியர்கள் பலரும் தத்தம் மொழிகளின் போக்குகளைக் குறித்த கவலைகளையும் அதனால் அவர்களின் விக்கிப்பீடியாக்களில் வரும் பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படுத்தினார்கள். ஒரு சமூகத்தில் அயல் மொழி ஒன்று வல்லாண்மை பெறும் போது உள்ளூர் மொழியின் பயன்பாடு குறைவது, அவர்களுக்கான மொழியில் விக்கிப்பீடியாவை உருவாக்க முடியாமல் போவது குறித்தும் சுட்டிக்காட்டினார்கள். இது குறித்த கட்டுரைகளும் கூட வாசித்தார்கள். எனவே, மொழி சார்ந்த செய்திகளைக் கவனித்து உரையாடுவதற்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை என்று கூற முடியாது. SOPA குறித்த செயல்பாட்டில் இறங்க ஆங்கில விக்கிப்பீடியருக்கு உரிமை உள்ளதைப் போல மற்ற விக்கிப்பீடியாக்களுக்கும் உரிமை உண்டு. இங்கு செயற்பாட்டியம் தகுமா கூடாதா என்பதை விட, என்ன பிரச்சினை, அதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் தொடர்பு உள்ளதா, என்ன வகையான எதிர்வினை, அது குறித்த தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்தக் கருத்து என்ன என்பதையே கவனிக்க வேண்டும். இது வரை தமிழ் விக்கிப்பீடியர்கள் இத்தகைய எந்தச் செயற்பாட்டிலும் இறங்கியதில்லை. மொழி சார்ந்த செய்திகளைச் சுட்டி உரையாடி விட்டு நகர்ந்து விடுவோம். வேறு எத்தகைய செய்தி குறித்தும் பேசுவதில்லை. அஞ்சற்க :)--இரவி 21:22, 21 பெப்ரவரி 2012 (UTC)
மீடியாவிக்கி உலகமயமாக்கல் குழுவோடு அனைத்துலகத் தாய்மொழி நாளன்று இணைய அரட்டை
தொகுஅறிவிப்பு. இன்று 18:00 UTC #wikimedia-office அரட்டை அறையில் நடைபெறும். ஸ்ரீகாந்த் 09:41, 21 பெப்ரவரி 2012 (UTC)
இறுவட்டு
தொகுஇறுவட்டு என்பது DVDஐக் குறிக்கும் என விக்சனரியிலும் விக்கிப்பீடியாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை வழக்கில் இறுவட்டு என்பது CDஐயே குறிக்கின்றது. ஆதாரம்: தொடுப்பு-இங்கே அடோப் ரீடரில் ஐந்தாம் பக்கத்தைப் பார்க்கவும். ஆதலால், இது சம்பந்தமாக ஒரு பொதுவான முடிவுக்கு வருவது நல்லது. --மதனாஹரன் 12:31, 21 பெப்ரவரி 2012 (UTC)
- DVD என்பது digital versatile disc என்பதைக் குறித்தது முதலில். சிடி, டிவிடி ஆகிய இரண்டுமே எண்ணிம பதிவுதான் (சிறுசிறு புள்ளிகளாக, ஒளி அவற்றின்மீது பட்டு எதிரும் பொழுது மாறுபாடு கொண்டவையாகச் செய்வது). டிவிடி என்பது அடர்த்தி மிக்கப் புள்ளிகள் கொண்டவை, சிட் என்பது அடர்த்திக் குறைவானவை. குறுவட்டு, இறுவட்டு என்பன முறையே சிடி, டிவிடிக்களைக் குறிப்பதாகக் கொள்கின்றார்கள் தமிழ்நாட்டில் (என்று நினைக்கின்றேன்). இலங்கையில் சிடியை எப்படிக் குறிக்கின்றனர்? டிவிடியைப் பல்திற இறுவட்டு (ப.இ வட்டு) என்று வேண்டுமானால் கூறலாம். இபப்டியான கலைச்சொல் முரண்பாடுகளைக் குறைக்க முற்படுவது நல்லது! இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நான்கு ஆட்சிப்பகுதிகளில் உள்ளவர்கள் கூட்டாக ஒத்துழைத்தால்தான் சீர்மை எய்த முடியும். --செல்வா 16:27, 21 பெப்ரவரி 2012 (UTC)
- இத்தகைய உரையாடல்களை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் மேற்கொள்ளலாம். நன்றி--இரவி 21:38, 21 பெப்ரவரி 2012 (UTC)
இலங்கை வழக்குக்கும் தமிழக வழக்குக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இப்போதைக்கு இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு என்ற பக்கத்தில் ஒரு குறிப்புக் கொடுத்துள்ளேன். --மதனாஹரன் 13:29, 22 பெப்ரவரி 2012 (UTC)