புகாரா நகரம், உசுபெகிசுதான் நாட்டின் புகாரா மாகாணத்தின் தலைநகராகும். 263,400 பேர் வாழும் இந்நகரம், உசுபெகிசுதானின் ஐந்தாவது மிகப் பெரிய நகராகும். புகாரா நகரைச் சூழவுள்ள பகுதி மிகக் குறைந்தது ஐயாயிரம் ஆண்டு காலமாக மக்கள் வாழிடமாக உள்ளது. பட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்நகரம் பன்னெடுங்காலமாக வணிகம், அறிவு, பண்பாடு மற்றும் சமயம் என்பவற்றுக்கான புகழ் மிக்க மையமாக இருந்துள்ளது. ஏராளமான பள்ளிவாசல்கள், மதரசாக்களைக் கொண்டுள்ள புகாரா வரலாற்று மையம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. புகாராவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் உசுபெக்கு இனத்தினர். ஏராளமான தாஜிக்கு இனத்தினரும் யூதர்கள் உட்படப் பல்வேறு சிறுபான்மை இனத்தினரும் இந்நகரைத் தாயகமாகக் கொண்டுள்ளனர். மேலும்...
தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்பதை அறிவீர்களா?இன்றே உங்கள் முதல் கட்டுரையைத் தொடங்குங்கள்.
கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருக்க வேண்டும். பார்க்க: தமிழ்த் தட்டச்சு உதவி
நீங்கள் வாழும் ஊர், அண்மையில் படித்த நூல், பார்த்த திரைப்படம், புகழ்பெற்ற ஆளுமைகள் என பல வகையான தலைப்புகள் குறித்தும் எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதலாம். காப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
கட்டுரைகள் சரியான தகவலை மட்டும் முன்னிறுத்தி சொந்தக் கருத்துகள் இன்றி, நடுநிலையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விளம்பரங்கள், உயர்வு நவிற்சிகள், அனுபவ வலைப்பதிவுக் கட்டுரைகளைத் தவிர்க்கவும். பார்க்க: சில மாதிரிக் கட்டுரைகள்.
ஃபாலிங்வாட்டர் (Fallingwater) என்னும் இந்த வீடு 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. உரிமையாளரின் பெயரால் இது "மூத்த எட்கார் காஃப்மன் வீடு" எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது 1935 ஆம் ஆண்டில், பிட்ஸ்பர்க்கிலிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள தென்மேற்குப் பென்சில்வேனியாவின் நாட்டுப்புறப் பகுதியொன்றில் கட்டப்பட்டது. இவ் வீட்டின் ஒரு பகுதி அருவியொன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இவ் வீடு கட்டி முடிக்கப்பட்டதும், "ரைட்டின் மிக அழகான கட்டிடம் இதுவே" என டைம் இதழ் புகழ்மாலை சூட்டியது.