விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு87
வழக்கமில்லா கூடியத் தொகுப்புகள்
தொகுவழக்கமாக காணும் ஆசிரத்திற்கும் குறைவான தொகுப்புக்களை விட நேற்றைய நாளில் (மார்ச்சு 8, 2013) மிகப் புதுமையாக தமிழ் விக்கிப்பீடியாவில் 13376 தொகுப்புக்களைக் காண்கிறேன். என்ன காரணம் ?--மணியன் (பேச்சு) 05:14, 9 மார்ச் 2013 (UTC)
- Addbot இன் பங்களிப்புகள் அதிகம்.--Kanags \உரையாடுக 05:20, 9 மார்ச் 2013 (UTC)
- ஆம் addbot விக்கியிடை இணைப்புகளை விக்கிதரவுக்கு நகர்த்தும் தொகுப்புகள் இவை.--சோடாபாட்டில்உரையாடுக 17:04, 9 மார்ச் 2013 (UTC)
ஆங்கில விக்கி இணைப்புகளை சரி செய்ய உதவும் கருவி
தொகுஆங்கில விக்கி உள் இணைப்புகளை சரி செய்ய உதவும் கருவி ஒன்றை செய்திருக்கின்றேன். பயனர்:Jayarathina/iwt இங்கே சென்று அதனைப்பற்றி மேலும் அறியலாம். இது போன்ற கருவிகள் முன்பே உள்ளன என்றாலும் இது விக்கி தொகுப்பானிலேயே வேலை செய்யும். மேலும் இதனைக்கொண்டு அடிக்கடி பயன்படுத்தும் உங்கள் விறுப்பத்துரை சார்ந்த சொற்களை ஒரே நேரத்தில் தேடிக்கண்டுபிடித்து மாற்றலாம். இதில் திருத்தந்தையரின் பெயர்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் (கட்டுரைகள் இல்லாவிடிலும்) மொழிபெயர்கலாம். இக்கருவி குறித்தக்கருத்துகளை தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி. (பி.கு: இக்கருவியை நீங்கள் பயன் படுத்தினால், தயவு செய்து உங்கள் பெயரை இங்கு இடவும்) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:29, 9 மார்ச் 2013 (UTC)
- நன்றி மாதரசன், உங்கள் கருவியைச் சோதித்துப் பார்த்தேன். மிக அருமை. விக்கியிடை இணைப்புகளைத் தர இலகுவான கருவி. நேரம் மிச்சம் மட்டுமல்ல, தேவையற்ற சிவப்பு இணைப்புகளையும் தவிர்க்கலாம். அனைவரும் இதனைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். இக்கருவி பற்றிய அறிவிப்பை இங்கு தந்தால் நல்லது.--Kanags \உரையாடுக 23:13, 9 மார்ச் 2013 (UTC) விருப்பம்--மணியன் (பேச்சு) 03:52, 10 மார்ச் 2013 (UTC)
- மிக்க நன்றி Kanags. நீங்கள் கூறியுள்ள படி செய்துள்ளேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:16, 10 மார்ச் 2013 (UTC)
Convert complex templates to Lua to make them faster and more powerful
தொகு(Please consider translating this message for the benefit of your fellow Wikimedians)
Greetings. As you might have seen on the Wikimedia tech blog or the tech ambassadors list, a new functionality called "Lua" is being enabled on all Wikimedia sites today. Lua is a scripting language that enables you to write faster and more powerful MediaWiki templates.
If you have questions about how to convert existing templates to Lua (or how to create new ones), we'll be holding two support sessions on IRC next week: one on Wednesday (for Oceania, Asia & America) and one on Friday (for Europe, Africa & America); see m:IRC office hours for the details. If you can't make it, you can also get help at mw:Talk:Lua scripting.
If you'd like to learn about this kind of events earlier in advance, consider becoming a Tech ambassador by subscribing to the mailing list. You will also be able to help your fellow Wikimedians have a voice in technical discussions and be notified of important decisions.
Guillaume Paumier, via the Global message delivery system. 20:25, 13 மார்ச் 2013 (UTC) (wrong page? You can fix it.)
விக்கித்தரவு - புதிய பயனர்கள்
தொகுபுதிய பயனர்கள் விக்கித்தரவூடாக விக்கியிணைப்புக்களை ஏற்படுவதில் சிரமத்தினை எதிர்நோக்குவதுபோன்று தெரிகின்றது. அவர்களுக்கான வழிகாட்டுதலை புதுப் பயனர் வரவேற்பில் ஏற்படுத்துவது சரியாக இருக்குமா? --Anton (பேச்சு) 13:58, 26 மார்ச் 2013 (UTC)
- விக்கித்தரவில் செய்யப்படும் மாற்றங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட விக்கிகளில் தெரிவதில்லை. உடனடியாகத் தெரிவதற்கு purge பண்ண வேண்டும் என்கிறார்கள். ஆனாலும் அதுவும் சில வேளைகளில் வேலை செய்வதில்லை. ஆனாலும், ஒரு சில மணி நேரங்களில் மாற்றம் தெரிகிறது.--Kanags \உரையாடுக 11:39, 1 ஏப்ரல் 2013 (UTC)
- புதுப்பயனர் வரவேற்பில் இடுவது குழப்பலாம். உதவி தேவைப்படுவதாக உணரக்கூடிய பயனர்களுக்கு உதவி:விக்கியிடை இணைப்புகள் பக்கம் பற்றி தெரிவிக்கலாம். ஆங்கில விக்கிப்பீடியா உதவிப் பக்கத்தில் ( http://en.wikipedia.org/wiki/Help:Interlanguage_links ) இருந்து இன்னும் விரிவாக வளர்த்து எழுத வேண்டியிருக்கிறது.--இரவி (பேச்சு) 14:12, 1 ஏப்ரல் 2013 (UTC)
இந்திய விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சி நிலைகள்
தொகுஇந்திய விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சி நிலைகள் பற்றிய ஒரு பார்வை. பல்வேறு அளவீடுகளின் படி தமிழ் விக்கிப்பீடியாவின் நிலையை அறியலாம்.--இரவி (பேச்சு) 15:37, 29 மார்ச் 2013 (UTC)
Wikidata phase 2 (infoboxes) coming to this Wikipedia
தொகுSorry for writing in English. I hope someone can translate this. If you understand German better than English you can have a look at the announcement on de:Wikipedia:Kurier.
A while ago the first phase of Wikidata was enabled on this Wikipedia. This means you are getting the language links in each article from Wikidata. It is soon time to enable the second phase of Wikidata (infoboxes) here. We have already done this on the [first 11 Wikipedias] (it, he, hu, ru, tr, uk, uz, hr, bs, sr, sh) and things are looking good. The next step is English Wikipedia. This is planned for April 8. If everything works out fine we will deploy on all remaining Wikipedias on April 10. I will update this part of the FAQ if there are any issues forcing us to change this date. I will also sent another note to this village pump once the deployment is finished.
What will happen once we have phase 2 enabled here? Once it is enabled in a few days you will be able to make use of the structured data that is available on Wikidata in your articles/infoboxes. It includes things like the symbol for a chemical element, the ISBN for a book or the top level domain of a country. (None of this will happen automatically. Someone will have to change the article or infobox template for this to happen!)
How will this work? There are two ways to access the data:
- Use a parser function like {{#property:p169}} in the wiki text of the article on Yahoo!. This will return “Marissa Mayer” as she is the chief executive officer of the company.
- For more complicated things you can use Lua. The documentation for this is here.
We are working on expanding the parser function so you can for example use {{#property:chief executive officer}} instead of {{#property:p169}}. The complete plan for this is here.
Where can I test this? You can already test it on test2.
Where can I find more information and ask questions? We have collected the main questions in an FAQ for this deployment. Please ask questions you might have on the FAQ’s discussion page.
I want to be kept up to date about Wikidata To stay up-to-date on everything happening around Wikidata please subscribe to the newsletter that is delivered weekly to subscribed user’s talk pages.
--Lydia Pintscher 17:12, 5 ஏப்ரல் 2013 (UTC)
Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)
இந்தியாவிற்கு இந்தி தேசிய மொழி கிடையாது
தொகுஇன்று இந்தி இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் ஒன்று என்ற தவறான தகவலை நீக்கினேன். இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்பதற்கு எந்த ஒரு துளிச் சான்றும் கிடையாது. இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே. அதனால் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறான தகவல் எங்கிருந்தாலும் நீக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:01, 6 ஏப்ரல் 2013 (UTC)
- ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இதுபோன்று இருந்தன. நீக்கிவிட்டேன், சட்டத்தில் இல்லாத ஒன்றை ஒரு சாரார் பரப்பி வருகின்றனர். அரசுக்கு இது எதிரானது :(. மக்களை ஏமாற்றுவதும் ஆகும். :( இத்தகைய கருத்துக்கள் உள்ள ஆங்கிலக் கட்டுரைகளை கவனித்து விசமிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். (சான்று தேவையே இல்லை. அது முதலில் தேசிய மொழியே கிடையாது.) அது இந்திய அரசின் ஆட்சி மொழி அல்ல. இந்தியக் குடியரசின் மத்திய அரசின் ஆட்சி மொழி மட்டுமே. இந்திய அரசானது மாநில, மத்திய அரசுகளின் சேர்ப்பே ஆகும். _தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:50, 10 ஏப்ரல் 2013 (UTC)
50,000 பயனர்கள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் பயனர்களின் எண்ணிக்கை 50,000 ஐ இன்று தாண்டியுள்ளது.--Kanags \உரையாடுக 09:05, 6 ஏப்ரல் 2013 (UTC) விருப்பம் -- சூர்யபிரகாஷ் உரையாடுக 07:14, 7 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம் --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 16:02, 8 ஏப்ரல் 2013 (UTC)
- ஆ..50 000 மா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:38, 8 ஏப்ரல் 2013 (UTC)
புதிய கருவி
தொகுஇடப்பக்கக் கருவிப்பட்டையை மறைக்கப் புதிய கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே பக்கப்பட்டை மறை -- சூர்யபிரகாஷ் உரையாடுக 07:14, 7 ஏப்ரல் 2013 (UTC)
- எனது விருப்பத்தேர்வில் நிறுவியுள்ளேன். இத்தனைநாள் பழகிய பக்கப்பட்டை இல்லாமல் புதிய அனுபவமாக இருந்தது ;) நீண்ட கட்டுரைகளைப் படிக்கும்போது பயனுள்ளதுதான். ஆங்கில விக்கி வசதியை தமிழுக்கு தனிப்பயனாக்கியதற்கு நன்றியும் பாரட்டுக்களும் !!--மணியன் (பேச்சு) 08:43, 7 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:41, 8 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி. மேலும் பலவற்றை தனிப்பயனாக்கலாம் என்றுள்ளேன். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 11:46, 11 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:41, 8 ஏப்ரல் 2013 (UTC)
தொடர்பங்களிப்பாளர் பக்கம்
தொகுதொடர்பங்களிப்பாளர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:34, 9 ஏப்ரல் 2013 (UTC)
- ஆம் நானும் சொடுக்கிய போதுஅது நீக்கப்பட்டதாகவே தெரிகின்றது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:16, 10 ஏப்ரல் 2013 (UTC)
விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
தொகுஇப்பக்கம் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளி மாணவர்களுக்கென பல திட்டங்கள் இனிவருங்காலத்தில் நடைமுறைக்கு வர இருக்கின்றன.அந்த வகையில் பள்ளி மாணவர்கள் இப்பக்கத்தில் சேர விரும்பினால் இங்கே தங்கள் பற்றிய விபரத்தை தரவும்.நன்றி--aathavan jaffna 13:19, 11 ஏப்ரல் 2013 (UTC)
Vacancy for Programme Officer, Pilot Projects (Access to Knowledge)
தொகுThe Centre for Internet & Society (CIS) is seeking applications for the post of Programme Officer, Pilot Projects for its Access to Knowledge (A2K) Programme. The position will be based in its Bangalore office. Programme Officer will collaboratively work with the A2K Team and would report to the Programme Director, Access to Knowledge at CIS.
You can read the detailed job description here. --Nitika.t (பேச்சு) 07:42, 17 ஏப்ரல் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுங்கள். புத்தகங்களை வெல்லுங்கள் !
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதைத் தூண்டும் நோக்கில், சிறு புத்தகப் போட்டி ஒன்றை முயன்று பார்க்கிறேன். இந்த முயற்சிக்கு வரும் வரவேற்பைப் பொருத்து மேலும் சில நூல்களைப் பகிர முயல்வேன். அனைத்து விக்கிப்பீடியர்களும் இது போல் தங்களிடம் உள்ள நூல்களைப் பகிர முன்வந்தால், இதனைத் தமிழ் விக்கிப்பீடியாவின் முறையான போட்டியாக அறிவிக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 07:34, 20 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்.--Kanags \உரையாடுக 12:53, 20 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--Anton (பேச்சு) 13:50, 20 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம் நான் புத்தகங்கள் வாங்கித் தருகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:30, 20 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:04, 21 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பங்களுக்கு நன்றி :) பார்வதி, இந்த முயற்சியின் நோக்கமே, இருக்கிற நூல்களைப் பகிர்ந்து கொள்வது தான். விக்கிப்பீடியர்களுக்கு இடையே ஒரு புத்தகச் சங்கம் போல் ! எனவே, புதிதாக நூல்களை வாங்கித் தர வேண்டாம். விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி முயற்சி உரையாடல் நிலையிலேயே இருக்கிறது. அதற்குத் தேவைப்பட்டால், புத்தகப் புரவலர்களை நாடலாம்.--இரவி (பேச்சு) 19:31, 20 ஏப்ரல் 2013 (UTC)
இரண்டையும் சேர்த்துச் செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:42, 7 மே 2013 (UTC)
ஒருங்குறியில் ஔ
தொகுநம்மில் பலர் ஒருங்குறியில் ஔ என்ற எழுத்தை o+La எனத் தட்டச்சிடுகிறார்கள். இது தவறு. a+u என்றே தட்டெழுத்த வேண்டும். vauvaal என எழுத வேண்டும். veLavaal என எழுதக்கூடாது. pauththam சரி, peLaththam தவறு.--Kanags \உரையாடுக 12:53, 20 ஏப்ரல் 2013 (UTC)
- ஒரு சிறு விளம்பரம்: தமிழ்99ல் இந்தப் பிரச்சினை வராது :)--இரவி (பேச்சு) 19:32, 20 ஏப்ரல் 2013 (UTC)
- ஔ(a+u)விற்கும், ஒள(o+La)விற்கும் என்ன வேறுபாடு. எப்படி தட்டச்சு செய்தாலும் ஒன்று போலத்தானே காட்சியளிக்கிறது. --இராஜ்குமார் (பேச்சு) 07:10, 21 ஏப்ரல் 2013 (UTC)
- ஒள இரண்டு எழுத்துக்கள், ஔ ஓர் எழுத்து. சோதித்துப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:19, 21 ஏப்ரல் 2013 (UTC)
- ஒ+ள+வையார் என்று எழுதினால் ஔ+வையார் என்று தேடுவோருக்குச் சிக்காது. அகர வரிசை மாறும். பொருளும் மாறும்.--இரவி (பேச்சு) 07:38, 21 ஏப்ரல் 2013 (UTC)
- புரிந்து கொண்டேன். text select செய்யும் பொழுதும் வேறுபாடு தெரிகிறது. மிக்க நன்றி. --இராஜ்குமார் (பேச்சு) 08:09, 21 ஏப்ரல் 2013 (UTC)
- ஔ(a+u)விற்கும், ஒள(o+La)விற்கும் என்ன வேறுபாடு. எப்படி தட்டச்சு செய்தாலும் ஒன்று போலத்தானே காட்சியளிக்கிறது. --இராஜ்குமார் (பேச்சு) 07:10, 21 ஏப்ரல் 2013 (UTC)
- உற்றுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். எனினும், மலையாளத்தில் வருவது போல் வேறுபாடுகள் இன்னும் தெளிவாக இருந்தால் நல்லாயிருக்கும். தமிழில் உள - ஊ, மலையாளத்தில் ഉ (உ) - ഊ (ஊ), ഒ (ஒ) - ഔ (ஔ) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:53, 24 ஏப்ரல் 2013 (UTC)
நீக்கல் பதிவு தொடர்பான உதவி
தொகுஇங்கு பல புதிய பயனர்கள் பல புதிய கட்டுரைகளை பதிகின்றனர். அவற்றுள் சில கட்டுரைகளை நீக்க வேண்டி வருகின்றது. இவ்வாறு நீக்கும் போது, கட்டுரையை எழுதியவரின் பேச்சுப்பக்கத்திற்கு தானியக்கமாக செய்திகள் அனுப்ப இயலுமா? உதாரனமாக கட்டுரையை நீக்கும் போது, சோதனை முயற்சி என தெரிவு செய்தால்..
உங்களது XXXXX கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. கட்டுரையாக்க பயிற்சி பெற மணல்தொட்டியை பயன்படுத்தவும். என்பது போல செய்தி செல்ல வேண்டும்.
இதற்கான தானியங்கிகள் உள்ளனவா? இல்லையெனில் உருவாக்க முடியுமா?--அராபத் (பேச்சு) 05:21, 24 ஏப்ரல் 2013 (UTC)
- வார்ப்புருக்களில் parameter பயன்படுத்திப் பார்க்கலாம். எ.கா: {.{கட்டுரைநீக்கம்|கட்டுரை=xxx|காரணம்=ஆஆஆஆ}} என்பது போல். -ஃகி ஃகி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:46, 25 ஏப்ரல் 2013 (UTC)