விஷ்ணுவர்த்தன் (இயக்குநர்)
இந்தியத் திரைப்பட இயக்குநர்
விஷ்ணுவர்த்தன் குலசேகரன், பரவலாக விஷ்ணுவர்த்தன் (Vishnuvardhan), ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர். ராம் கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றிய விஷ்ணுவர்த்தன் 2003ஆம் ஆண்டு குறும்பு படம் மூலம் தமது இயக்குநர் வாழ்வைத் தொடங்கினார். அறிமுகப் படம் வணிக ரீதியில் வெற்றியடையாத நிலையில் அடுத்து வெளியாகிய அறிந்தும் அறியாமலும்(2005),பட்டியல் (2006) மற்றும் பில்லா (2007) ஆகியன வணிக ரீதியில் வெற்றி பெற்றது.
விஷ்ணுவர்த்தன் | |
---|---|
இயற் பெயர் | விஷ்ணுவர்த்தன் குலசேகரன் |
பிறப்பு | கும்பகோணம், இந்தியா |
வேறு பெயர் | விஷ்ணு |
தொழில் | திரைப்பட இயக்குனர், திரைக்கதாசிரியர், நடிகர் |
நடிப்புக் காலம் | 1990-நடப்பு |
துணைவர் | அனு வர்தன் |
திரைப்படங்கள்தொகு
ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | மொழி | குறிப்புகள் |
2003 | குறும்பு | அல்லரி நரேஷ், தியா, நிகிதா துக்ரல் | தமிழ் | |
2005 | அறிந்தும் அறியாமலும் | நவதீப், ஆர்யா, பிரகாஷ் ராஜ், சமிக்ஷா | தமிழ் | |
2006 | பட்டியல் | பரத், ஆர்யா, பூஜா உமாசங்கர், பத்மப்பிரியா | தமிழ் | |
2007 | பில்லா | அஜித் குமார், நயன்தாரா, நமிதா | தமிழ் | |
2009 | சர்வம் | ஆர்யா, திரிஷா, ஜே. டி. சக்கரவர்த்தி, | தமிழ் | |
2013 | ஆரம்பம் | அஜித், நயன்தாரா, ஆர்யா, | தமிழ் | |
2015 | யட்சன் | ஆர்யா, கிருஷ்ணா, கிஷோர் | தமிழ் |