1
ஆண்டு 1 (I) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சீசர், பவுலுசு தூதர்களின் ஆண்டு" (Year of the Consulship of Caesar and Paullus) எனவும், "ஆண்டு 754" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 1 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது முதலாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கி.மு. 1 ஆகும். ஜூலியன் நாட்காட்டியில் 0 ஆண்டு இருக்கவில்லை.
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1 I |
திருவள்ளுவர் ஆண்டு | 32 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 754 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2697-2698 |
எபிரேய நாட்காட்டி | 3760-3761 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
56-57 -77--76 3102-3103 |
இரானிய நாட்காட்டி | -621--620 |
இசுலாமிய நாட்காட்டி | 640 BH – 639 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 251 |
யூலியன் நாட்காட்டி | 1 I |
கொரிய நாட்காட்டி | 2334 |
நிகழ்வுகள்
தொகுஇடம் வாரியாக
தொகுரோமப் பேரரசு
தொகு- அகஸ்டசின் பணிப்பின் பேரில் டிபேரியசு செருமானியாவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்கினான் (1–5).
- கையசு சீசர், லூசியசு பவுலசு ஆகியோர் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
- உரோமில் பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது[1].
ஆசியா
தொகு- சீனாவில் ஹான் அரசமரபின் யுவான்சி காலம் ஆரம்பம்.
- பிங் பேரரசனானான்.
ஆப்பிரிக்கா
தொகு- இன்றைய எத்தியோப்பியா, எரித்திரியாவை மையப்படுத்திய ஆக்சும் இராச்சியம் உருவானது (அண்ணளவான காலம்).
அமெரிக்கா
தொகு- மெசோஅமெரிக்கா பகுதியில் தியோட்டிஹுவாக்கன் பண்பாடு ஆரம்பம்.
சமயம்
தொகு- இயேசு பிறப்பு (அனோ டொமினி முறையை அறிமுகப்படுத்திய டயோனீசியசு எக்சிகூஸ் என்பவரின் படி[2][3].) ஆனாலும், டயோனீசியசு கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பை கிமு 1 ஆகக் குறித்தார் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[2][3].
- சீனாவில் பௌத்தம் அறிமுகமானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ The Silkroad Foundation's silk road chronology
- ↑ 2.0 2.1 Georges Declercq, Anno Domini: The origins of the Christian Era (Turnhout, Belgium: Brepols, 2000), pp.143–147.
- ↑ 3.0 3.1 G. Declercq, "Dionysius Exiguus and the introduction of the Christian Era", Sacris Erudiri 41 (2002) 165–246, pp.242–246. Annotated version of a portion of Anno Domini.