அல்பேனியா

(அல்பானியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அல்பேனியா (Albania, /ælˈbniə, ɔːl-/ (கேட்க) a(w)l-BAY-nee-ə; அல்பேனிய: Shqipëri/Shqipëria[1] அதிகாரபூர்வமாக அல்பேனியக் குடியரசு (Republic of Albania) என்பது ஐரோப்பாவின் தென்கிழக்கேயுள்ள ஒரு நாடாகும். 28,748 சதுரகிமீ பரப்பளவுள்ள இந்நாட்டின் மக்கள்தொகை 3 மில்லியன்கள் as of 2016 ஆகும். இந்நாடு ஓர் ஒற்றை நாடாளுமன்றக் குடியரசு ஆகும். இதன் தலைநகரம் டிரானா. டிரானா இந்நாட்டின் மிகப்பெரும் நகரமும், முக்கிய பொருளாதார மற்றும் வணிக மையமும் ஆகும்.

அல்பேனிய குடியரசு
Republika e Shqipërisë
கொடி of அல்பேனியா
கொடி
கேடயம் of அல்பேனியா
கேடயம்
குறிக்கோள்: "விடுதலையும் வீரமும்"
நாட்டுப்பண்: ரெச் ஃப்லமுரிட் தெ பெர்பசகுவர்
("கொடியின் கீழ் ஒன்றுபட்டோம்")
அல்பேனியாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டிரானா
ஆட்சி மொழி(கள்)அல்பேனியம்
அரசாங்கம்வளர்ந்து வரும் சனநாயகம்
• குடியரசு தலைவர்
அல்பிரட் மொய்சியு
• பிரதமர்
சாளி பெரிசா
விடுதலை 
• நாள்
நவம்பர் 28, 1912
பரப்பு
• மொத்தம்
28,748 km2 (11,100 sq mi) (144வது)
• நீர் (%)
4.7
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
3,130,000 (134வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$16.9 பில்லியன் (116வது)
• தலைவிகிதம்
$4,764 (104வது)
மமேசு (2003)0.780
உயர் · 72வது
நாணயம்அல்பேனிய லெக் (ALL)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மஐகோநே)
அழைப்புக்குறி355
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAL
இணையக் குறி.al

அல்பேனியா பால்கன் குடாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே மொண்டெனேகுரோ, வடகிழக்கே கொசோவோ, கிழக்கே மாக்கடோனியா, தெற்கு, மற்றும் தென்கிழக்கே கிரேக்கம் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் பெருமாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. வடக்கே அல்பேனிய ஆல்ப்சு மலைகள், கிழக்கே கோராப் மலைகள், தெற்கே செரோனிய மலைகள், நடுவே இசுக்காண்டர்பெக் மலைகள் அமைந்துள்ளன. அல்பேனியாவின் கரைப் பகுதிகள் மேற்கே ஏட்ரியாட்டிக் கடல், தென்மேற்கே அயோனியன் கடல் ஆகியவற்றைத் தொடுகிறது.

குழப்பமான வரலாற்றைக் கொண்டிருந்த போதும், 1990 முதல் சனநாயகத்துக்கு திரும்பும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. Giacomo Jungg (1 January 1895). "Fialuur i voghel scc...p e ltinisct mle...un prei P. Jak Junkut t' Scocniis ..." N'Sckoder t' Scc...pniis. பார்க்கப்பட்ட நாள் சூலை 23, 2016 – via Internet Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பேனியா&oldid=4030186" இலிருந்து மீள்விக்கப்பட்டது