ஆரோன் பிஞ்ச்

ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்

ஆரோன் ஜேம்ஸ் பிஞ்ச் (Aaron James Finch, பிறப்பு: 17 நவம்பர் 1986) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். வலது-கை மட்டையாளரான இவர் 2006 இல் இலங்கையில் நடைபெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான உலககிண்ணப் போட்டிகளில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார்.[2]

ஆரோன் பிஞ்ச்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆரோன் ஜேம்ஸ் பிஞ்ச்
பிறப்பு17 நவம்பர் 1986 (1986-11-17) (அகவை 38)
கோலாக், விக்டோரியா, ஆத்திரேலியா
பட்டப்பெயர்ஃபிஞ்சி
உயரம்174 cm (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்)[1]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைஇடதுகை மரபுவழா சுழல்
பங்குமேல்-வரிசை மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 453)7 அக்டோபர் 2018 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு26 திசம்பர் 2018 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 197)11 சனவரி 2013 எ. இலங்கை
கடைசி ஒநாப21 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்16
இ20ப அறிமுகம் (தொப்பி 49)12 சனவரி 2011 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப9 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005–தற்போதுவிக்டோரியா (squad no. 5)
2011–2012டெல்லி டேர்டெவில்ஸ்
2011–தற்போதுமெல்போர்ன் ரெனகேட்ஸ்
2012ஆக்லாந்து ஆசஸ்
2013புனே வாரியர்சு இந்தியா
2014சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2014–2015யோர்க்சயர் கவுன்டி (squad no. 20)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 5 132 66 88
ஓட்டங்கள் 278 5,232 2,149 4,915
மட்டையாட்ட சராசரி 27.80 41.85 37.70 35.87
100கள்/50கள் 0/2 17/29 2/12 7/33
அதியுயர் ஓட்டம் 62 153* 172 288*
வீசிய பந்துகள் 12 284 12 464
வீழ்த்தல்கள் 0 4 0 5
பந்துவீச்சு சராசரி 64.75 63.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/2 1/0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 63/– 29/– 81/–
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, 28 திசம்பர் 2020

2013 ஆகத்து 29இல் இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 156 ஓட்டங்கள் எடுத்து இ20ப வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த சாதனையைப் படைத்தார்.[3] பின்னர் சூலை 2, 2018இல் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 172 ஓட்டங்கள் எடுத்து தனது முந்தைய சாதனையைத் தகர்த்தார்.

பன்னாட்டுப் போட்டிகள்

தொகு

சனவரி 12, 2011இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். இவரின் அதிரடியாக மட்டையாடும் திறனைக்கண்ட ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம் இருபது20 போட்டிக்காக இவரை அணியில் சேர்த்தது. பின் சனவரி 11, 2013 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.

ஆகத்து 29, 2013ஆம் ஆண்டில் ரோஸ் பவுலில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 63 பந்துகளில் 156 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதில் 14 ஆறுகளும், 11 நான்குகளும் அடங்கும். இதன்மூலம் அதிக ஆறுகள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[4] இதற்கு முன் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் வீரர் பிரண்டன் மெக்கல்லம் 123 எடுத்ததே சாதனையாக இருந்தது.[5] சனவரி 14, 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 122 ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.

பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 150 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். திசம்பர் 3, 2014இல் டாம் கூப்பர், மற்றும் மைக்கல் கிளார்குடன் இணைந்து பிலிப் ஹியூசின் பிணப்பேழையைத் தூக்கினார்.[6]

பின்ச், 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் அணியில் இடம் பிடித்தார். இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 135 ஓட்டங்கள் எடுத்து ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 111 ஓட்டங்களால் வெற்றி பெறுவதற்கு இவர் உதவினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.

2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அணியைத் தேர்வுசெய்பவர்களான மார்க் வா மற்றும் லீமன் ஆகியோர் இவரைத் தேர்வு செய்யவில்லை. ஆனால் அதன்பின் வந்த போட்டிகளில் இவருக்கு இடம் வழங்கப்பட்டதால் சிறப்பாக செயல்பட்டு அந்தாண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின், பன்னாட்டு இருபது20 மட்டையாளருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ஆகத்து 31, 2016 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 18 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் மிக குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்த ஆத்திரேலிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சைமன் ஓ டோன்னல் இந்தச் சாதனையைப் படைத்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Aaron Finch". espncricinfo.com. ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2014.
  2. "Youth One-Day International Matches played by Aaron Finch (10)". CricketArchive. Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2010-01-24.
  3. John Mehaffey (30 ஆகத்து 2013). "Finch breaks McCullum's T20 world record". stuff.co.nz. http://www.stuff.co.nz/sport/cricket/9105241/Finch-breaks-McCullums-T20-world-record. பார்த்த நாள்: 30 ஆகத்து 2013. 
  4. "Records | Twenty20 Internationals | Batting records | Most runs in an innings | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/slc-twenty20-15/content/records/284262.html. 
  5. John Mehaffey (30 August 2013). "Finch breaks McCullum's T20 world record". stuff.co.nz. http://www.stuff.co.nz/sport/cricket/9105241/Finch-breaks-McCullums-T20-world-record. பார்த்த நாள்: 30 August 2013. 
  6. Lessons of Hughes' life unforgettable in death
  7. "Finch scores 18 ball fifty". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 August 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோன்_பிஞ்ச்&oldid=3986669" இலிருந்து மீள்விக்கப்பட்டது