ஈழப்போரில் கிழக்குப் போர்முனை

நான்காம் ஈழப்போரின் ஒரு பகுதி

நான்காம் ஈழம் போரின் கிழக்கு போர்முனையாது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு திருக்கோணமலை மாவட்டத்தில் நெல்வயல்களுக்கான நீர் விநியோகத்தை புலிகள் துண்டித்ததைக் காரணமாக கொண்டு 2006, யூலை, 21 அன்று மோதலாக துவங்கியது. ஏறக்குறைய ஓராண்டு சண்டைக்குப் பிறகு, 2007, யூலை, 11 குடும்பிமலையை (பரோனின் தொப்பி) கைப்பற்றிய பின்னர் கிழக்கு மாகாணத்தின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.[1] இச்சமயத்தில் சம்பூர், வாகரை, கஞ்சிகுடிச்சாறு, கொக்கடிச்சுளாய், குடும்பிமலை ஆகிய இடங்களில் பெரும் போர்கள் நடந்தன. இராணுவம் மற்றும் பொதுமக்கள் இறப்புகள் இருபுறமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. இந்த மோதலின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்து பல இராணுவ உபகரணங்களை அரச படைகள் கைப்பற்றின. பொதுமக்கள் போர் மண்டலங்களை விட்டு வெளியேற முடிந்தது, மேலும் இது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைத்தது, அதே நேரத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உலக சுகாதார அமைப்பு (WHO) ~200,300 Idp களை மதிப்பிட்டுள்ளது, மேலும் அவர்களை மீள்குடியேற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறியது.[2] தங்களிடம் இருந்து கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியதற்கு பதிலடி கொடுப்பதற்காக நாடு முழுவதும் இலங்கையின் இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகளை தாக்குவதாக புலிகள் சபதம் செய்தனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு. ப. தமிழ்ச்செல்வன், 2007 யூலை 12ஆம் தேதி அசோசியேட்டட் பிரெசுக்கு அளித்த அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.[சான்று தேவை]

ஈழப்போரில் கிழக்குப் போர்முனை
Eastern Theatre of Eelam War IV
நான்காம் ஈழப்போர் பகுதி

மட்டக்களப்பு வாகரையில் பல்குழல் உந்துகணை செலுத்தியிலிருந்து செலுத்தபட்டு வெடிக்காத 122 மிமீ எறிகணை சேற்று நிலத்தில் சிக்கிய நிலையில் உள்ளது.
நாள் 21, யூலை 2006 – 11, யூலை 2007
இடம் இலங்கை
இலங்கை அரச படைகள் வெற்றி
பிரிவினர்
 இலங்கை* இலங்கைப் படைத்துறை,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
ஜெனரல் சரத் பொன்சேகா,
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டிய
கருணா அம்மான்
பிரிகேடியர் சொர்ணம்,
பிரிகேடியர் பானு
பலம்
20,000 (தோராயமாக.) 3,000 (தோராயமாக.)

போரின் துவக்கம்

தொகு

புலிகள் மாவிலாறு (மாவில் ஓயா) நீர்த்தேக்கத்தின் மதகை யூலை 21 அன்று மூடினர். இதனால் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள 15,000 கிராமங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இது ​​போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பிறகு பெரிய அளவிலான முதல் சண்டைக்கு வழிவகுத்த ஒரு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியது. மதகைத் திறக்க மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர், யூலை 26 அன்று விமானப்படை புலிகளின் நிலைகளைத் தாக்கியது. மேலும் தரைப்படைகள் அணை மதகைத் திறக்கும் நடவடிக்கையைத் தொடங்கின. அரசு செய்தித் தொடர்பாளர், போர் நிறுத்தத்தில் அரசு உறுதியாக இருப்பதாகக் கூறினார்.[3] அதேபோல், போர் நிறுத்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக புலிகளும் கூறினர்.

அணை மதகுகள் இறுதியாக ஆகத்து 8 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன, உண்மையில் யார் திறந்தார்கள் என்பது குறித்த முரண்பட்ட அறிக்கைகள் இருந்தன. முதலில், நீர்வழித் தடையை நிபந்தனையுடன் நீக்குவதற்கு விடுதலைப் புலிகளை வற்புறுத்த முடிந்தது என்று இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறியது.[4] இருப்பினும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கிளர்ச்சியாளர்களால் "அத்தியாவசியப் பொருட்களை பேரம் பேசும் கருவிகளாகப் பயன்படுத்த முடியாது" என்று கூறினார்[5]. மேலும் அரசாங்கப் படைகள் நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள புலிகளின் நிலைகள் மீது புதிய தாக்குதல்களைத் துவக்கின. இந்த தாக்குதல்களுக்கு இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைமை அதிகாரியிடமிருந்து கண்டணங்கள் எழுந்தன, அவர் "(அரசாங்கத்திடம்) புலிகள் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளனர் என்ற தகவல் உள்ளது," என்று கூறினார்... "அவர்கள் தண்ணீர் குறித்து ஆர்வம் காட்டவில்லை என்பது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது. அவர்கள் வேறொன்றில் ஆர்வமாக உள்ளனர்."[5] போர் சூடுபிடித்த நிலையில், புலிகள் "மனிதாபிமான அடிப்படையில்" அணை மதகுகளைத் திறந்ததாகக் கூறினர், இருப்பினும் இது குறித்து இராணுவ நிருபர்களோ சர்ச்சைக்க்றிய வகையில் பாதுகாப்புப் படையினர் மாவாறு அணைக்கட்டின் மீது துல்லியமான குண்டுத் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து உடனடியாக நீர் வெளியேறத் தொடங்கியது என்று கூறினர்.[6] இறுதியில், போராளிகளுடனாக கடும் சண்டையைத் தொடர்ந்து, அரசாங்க துருப்புக்கள் ஆகத்து 15 அன்று மாவிலாறு நீர்த்தேக்கத்தின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றினர்.[7]

மூதூர், சம்பூர் சமர்கள்

தொகு

செப்டம்பர் 4, 2006 அன்று கிழக்கு திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் நகரத்தை இலங்கை இராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்பகுதியைத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் திருகோணமலை துறைமுகத்தைத் தாக்க பீரங்கி ஏவுதளமாக பயன்படுத்திவந்தனர்.[8] இலங்கை இராணுவத் தாக்குதல் 2006 ஆகத்தில் துவங்கியது இப்பகுதி பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுவந்தது.[9] ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சின் 55 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபகச சம்பூரைக் கைப்பற்றுவதாக அறிவித்தார்.[10]

மூதூருக்கு அருகில் உள்ள சம்பூர் சமர் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நீடித்தது. கடுமையான சண்டைக்குப் பிறகு செப்டம்பர் 4, 2006 அன்று இலங்கை தரைப்படை அப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.[11]

வாகரை சமர்

தொகு

2007 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் நாள் கிழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர நகரமான வாகரையை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது, தமிழீழ விடுதலைப் புலிகள் வாகரை மருத்துவமனையில் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியதாகவும் மருத்துவமனை வளாகத்தை பீரங்கி ஏவுதளமாக பயன்படுத்தியதாகவும் இராணுவம் குற்றம் சுமத்தியது.[12][13][14] வாகரையை கைப்பற்றுவதற்கான இலங்கை இராணுவத்தின் போர் 30, அக்டோபர், 2006 முதல் 15, சனவரி, 2007 வரை கிட்டத்தட்ட 3 மாதங்கள் நீடித்தது. வாகரை என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர நகரமாகும். அங்கு விடுதலைப் புலிகள் தங்கள் சொந்த குடிமை நிர்வாகத்தையும் காவல்துறையையும் கொண்டு சில காலமாக ஆட்சி செலுத்திவந்தனர்.[15]

வாகரைப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக துவக்கபட்ட இராணுவ நடவடிக்கை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டதாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்டமாக இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதற்கு வசதி செய்யபட்டது. இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஊடுருவி, அவர்கள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தியது. இந்த தந்திரோபாயம், இலங்கையின் இராணுவக் கட்டுப்பாட்டு வலயத்திற்குத் தப்பிச் செல்லும் பொதுமக்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்துடன் மோதலில் ஈடுபட வழிவகுத்தது.[16] இரண்டாம் கட்டம் 2006, திசம்பர், 4 அன்று தொடங்கியது. இலங்கையின் இராணுவப் படையினர் திரிகோணமடு, கிரிமிச்சியை, கட்ஜுவத்தை ஆகிய மூன்று முனைகளிலும் முன்னேறி, பின்னர் 15 கி.மீ தூரம் திரிகோணமடு காட்டுப்பகுதியை அலசி ஆராய்ந்தனர். இந்த நடவடிக்கையின் போது, ​​கட்டமுரவிகுளம், கருவப்பஞ்சேனை, மதுரங்கேணிக்குளம் ஆகிய இடங்களில் உள்ள புலிகளின் இலக்குகள் அழிக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு திசம்பர் 9 ஆம் நாள் மகிந்தபுரம் தெற்கில் இருந்து துவக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் இரண்டாவது முன்னேற்றம் ஈச்சலன்பத்துவை பிரதேசத்தைச் சுற்றியுள்ள புலிகளின் முகாம்களைக் கைப்பற்றியது. இலங்கை இராணுவத்தின் 3வது மற்றும் 4வது கட்ட முன்னேற்றங்கள் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் திரிகோணமடு மற்றும் கட்ஜுவத்தை ஆகிய இடங்களிலிருந்து துவங்கியது.[17]

அம்பாறை-கஞ்சிக்குடியாறு அல்லது கஞ்சிக்குடிச்சாறு சமர்

தொகு

"வெற்றி நிச்சயம் நடவடிக்கை" என பெயரிடப்பட்ட அம்பாறை இராணுவ நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில், லாகுகல காடுகளில் நடந்தது. 2007 சனவரி முதல் வாரத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள புலிகளின் இராணுவ வளாகத்தை கைப்பற்றிய நடவடிக்கையில் எஸ்.டி.எப் எனப்படும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.[18] எஸ்.டி.எப் துருப்புக்கள் ஜனக், ஸ்டான்லி, ஜீவன் தளம் போன்ற புலிகளின் முக்கிய தளங்கள் உட்பட 20 முகாம்களைக் கைப்பற்றின. இந்த வளாகங்கள் இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலி போராளிகளுக்கின உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தன.[19]

விடுதலைப் புலிகளின் பெரிய உள்கட்டமைப்பு வசதிகளைக் கைப்பற்றிய பின்னர், எஸ். டி. எஃப் துருப்புக்கள் வெடிபொருட்கள் நிரம்பிய ஒரு சரக்குந்தையும் ஒரு மோட்டார் சைக்கிளையும் கண்டுபிடித்தனர். இந்த பொருட்கள் கொழும்பில் தற்கொலைப்படை தாக்குதலுக்காக தயாரிக்கப்பட்டதாக இராணுவம் நம்பியது. எஸ். டி. எஃப் அதிக அளவு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், சவப்பெட்டிகள், பணியாளர் எதிர்ப்பு கண்ணிவெடிகள், வானொலி ஏற்பிகள், புவியிடங்காட்டி அமைப்புகள், மின்னியற்றிகள், "சேவ் தி சில்ட்ரன்" என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் பெயர் மற்றும் சின்னம் கொண்ட படகுகள், "யுஎன்எச்சிஆர்" சின்னம் கொண்ட கூடாரங்கள் ஆகியவற்றையும் மீட்டது. இதில் ZOA Refugee Care என்ற டச்சு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கபட்ட மருத்துவமனை திலீபன் நினைவு மருத்துவமனை என்ற பெயரில் புலிகளால் நடத்தபட்டுவந்தது.[20]

குடும்பிமலை சமர்

தொகு

இப்பகுதியில் உள்ள சிகரம் குடும்பிமலை (பிரித்தானியர் இதை பரோனின் தொப்பி, என அழைத்தனர் சிங்களர்கள் இதை தொப்பிகலை என்று அழைத்தனர்) என்பதாகும். இப்பகுதி மதுரு ஆறு மற்றும் மட்டக்களப்புபொலன்னறுவை எல்லை அருகில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படை பயிற்சி தளத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இப்பகுதியானது ~800 சதுர கிலோமீட்டர்கள், பாறை மலைகள் (திம்புலாகல - இலாகுகலை மலைத்தொடர்), அடர்ந்த காடுகள் மற்றும் பழங்கால நீர்ப்பாசன ஏரிகளைக் கொண்டுள்ளது. 25, ஏப்ரல், 2007 அன்று புலிகளிடமிருந்து இப்பகுதியைக் கைப்பற்றுவதற்கான தமது இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவம் துவக்கியது. காட்டில் முழு அளவிலான போர் தொடங்கியது, விடுதலைப் புலிகள் கிழக்கு இலங்கையில் தங்கள் கடைசி கோட்டையைப் பாதுகாக்க முயன்றனர். அகழிகள் மற்றும் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பில் சுமார் 500-700 புலிப் போராளிகள் அந்தப் பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக இலங்கை இராணுவம் மதிப்பிட்டுள்ளது.

புலிகளின் தளங்களை கைப்பற்றுதல்

தொகு

8-9, சூன் 2007 காலப்பகுதியில் இலங்கை இராணுவம் பன்குடாவெல்லை வடக்கில் இப்பன்விலை, அக்கரதீவு, மாவடி-ஓடை, வேப்பன்வெளி, குடும்பிமலை பிரதேசத்தின் தெற்கே நாரக்முல்லை ஆகிய புலிகளின் நான்கு இராணுவ தளங்களை கைப்பற்றியது. மோதலின் போது, ​​சுமார் 30 விடுதலைப் புலிகளும், ஒரு இலங்கை இராணுவ வீரரும் கொல்லப்பட்டனர். இச்சமயத்தில் இலங்கை இராணுவம் எஸ். எல். ஏ 06 பல்நோக்கு இயந்திர துப்பாக்கிகள் (எம். பி. எம். ஜி), 21 டி -56 தாக்குதல் ரைஃபிள்ஸ், 04 ராக்கெட் ப்ரொப்பல்லர் கையெறி குண்டு (ஆர்பிஜி) ஏவுகணைகள் மற்றும் அதிக அளவு ஆண்டி பர்பஸ்னல் (ஏபி) கண்ணிவெடிகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியது.[21]

19, சூன், 2007 அன்று, குடும்பிமலை பிரதேசத்தில் நாரக்கமுல்லை கிழக்கே 03 புலிகளின் துணை முகாம்கள் இலங்கை படையினரால் முற்றாக அழிக்கப்பட்டன. இராணுவத்தின் ஆதாரங்களின்படி சுமார் 25-30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், பெருமளவிலான ஆள் எதிர்ப்புக் கண்ணிவெடிகள் (ஏ.பி.எம்.கள்) மற்றும் ஏனைய இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.[21]

இறுதி தாக்குதல்

தொகு

2007 சூன், 22-24 இக்கு இடையில் நரகமுல்லை, குடும்பிமலை பகுதியில் உள்ள பெய்ரூட் வளாகத்தில், விடுதலைப் புலிகளின் இறுதி முன்னோக்கி பாதுகாப்பு எல்லைக் கோட்டில் (எஃப். டி. எல்) விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை தரைப்படைக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்தது. எல்லைக் கோடு 6 பதுங்கு குழிகள் மற்றும் 3 சிறிய முகாம்களுடன் பலப்படுத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தின் கடும் பீரங்கி மற்றும் கவச வாகன பீரங்கி சூடுகளுக்குப் பிறகும் விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை விட்டு விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியாக, இலங்கை இராணுவத்தின் சுமார் 50 அதிரடிப்படையினர் புலிகளின் பதுங்கு குழிகளில் ஊடுருவி அவர்களில் 30 பேரைக் கொன்றனர். மூன்று விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தத் தொடர் நிகழ்வுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குடிமிமலைப் போரின் போக்கை மாற்றின.[22]

2007 ஆம் ஆண்டு யூலை 6 ஆம் நாள் நரகமுல்லைக்கு வடக்கே குடுமிமலை பிரதேசத்தில் நடந்த கடுமையான போரில், விடுதலைப் புலிகளின் கடும் மோட்டார் வீச்சு குண்டு வீச்சுக் காரணமாக இலங்கை இராணுவத்தினர் 6 பேர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயமடைந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த இலங்கை ராணுவம் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது.[23]

குடும்பிமலையை பிடித்தல்

தொகு

13 ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் இறுதிக் கோட்டையான குடும்பிமலையை (பரோனின் தொப்பி) கிட்டதட்ட ஒரு ஆண்டு போருக்குப் பிறகு இலங்கை இராணுவம் 2007 ஆம் ஆண்டு யூலை 11 ஆம் தேதி காலை கைப்பற்றியது. நாட்டின் இராணுவ வரலாற்றின் படி, இந்திய அமைதி காக்கும் படை, சுமார் 20,000 சிப்பாய்களுடன் 1988 ஆம் ஆண்டு இந்தப் பகுதியைத் தாக்கினாலும், இந்தப் பகுதியைக் கைப்பற்றத் தவறிவிட்டது (அப்போது விடுதலைப் புலிகள் கிழகில் கேணல் கருணா தலைமையில் இருந்தனர்). 1994 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம் இந்த பகுதியிலிருந்து தங்கள் இராணுவ தளங்களை திரும்பப் பெற்றது.[24]

சமர் பற்றிய கருத்துகள்

தொகு

குடுமிமலையைக் கைப்பற்றியமை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அரசாங்கம் கருதுவதை இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்தார். தென்னிலங்கையின் தலைநகரான காலியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில், குடுமிமலைப் பிரதேசம் என்பது கொழும்பு மாவட்டத்தை விட பெரிய காட்டுப் பிரதேசம் எனவும், அதில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், 2007 செப்டம்பரில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, கிழக்கில் புலிகளின் தோல்வியைக் கருத்தில் கொண்டு தன் கூட்டாட்சி கொள்கை நிலைப்பாட்டை கைவிட்டு, கட்சி நிலைப்பாட்டை அறிவித்தது.[25] இது கிழக்குப் போர் முனையின் போரின் தொலைநோக்கு தாக்கத்தைக் காட்டுவதாக உள்ளது.

கிழக்கு வெற்றியின் கொண்டாட்டங்கள்

தொகு

விடுதலைப் புலிகள் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு யூலை 19 அன்று காலை அடைந்த இராணுவத் தோல்வியை இலங்கை அரசாங்கம் "கிழக்கிற்கு புதிய விடியல்" என்று அழைத்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் தலைநகரான, கொழும்பில், சதுக்கத்தை சுற்றி இராணுவ அணிவகுப்பு நடந்தது. ஒரே நாளில் நாடு முழுவதும் பல வெற்றிவிழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றவும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்காக நல்ல நேரத்தில் விளக்கு ஏற்றவும் அரசு அழைப்பு விடுத்தது.[26]

சனாதிபதி மகிந்த ராசபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், " சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து வாழக்கூடிய, ஒரே தாயின் பிள்ளைகளாக சிரிக்கக்கூடிய ஒரு நிலத்தை அவர்களுக்கு வழங்குவோம். துப்பாக்கிகள், குண்டுகள், சயனைடு குப்பிகள் மூலம் தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தர முடியாது.[சான்று தேவை] இராணுவ உபகரணங்களின் கண்காட்சி மற்றும் பல்வேறு இராணுவ பிரிவுகளை உள்ளடக்கிய அணிவகுப்பு ஆகியவை விழாவின் மைய புள்ளிகளில் சிலவாக இருந்தன. விழாவின் இறுதி நிகழ்வாக விமானப்படை போர் விமானங்களின் காட்சிப்படுத்தபட்டன. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட பாரிய அரசியல் மற்றும் இராணுவ தாக்கங்களின் பின்னணியில் இந்த விழாவை பார்க்க வேண்டியுள்ளது.[27]

பொதுமக்கள் வாழ்க்கையில் போரின் தாக்கம்

தொகு

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக சம்பூர் (மூத்தூர்), செருவில்லா, வெருகல் (எச்சலம்பட்டு), வாகரை பகுதிகளில் இருந்து 10,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர். 2006 திசம்பர் முதல் 2007 ஏப்ரல் வரை கடும் மோதல்கள் நடந்த காலகட்டத்தில், பலர் வீடுகளை விட்டு வெளியேறி இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தனர்.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. World Press report, lrrp.wordpress.com. Accessed 3 January 2024.
  2. 2.0 2.1 situation report from UN relief groups, June 2007 பரணிடப்பட்டது 2008-09-11 at the வந்தவழி இயந்திரம்
  3. Sri Lanka Newspapers – Sri Lanka News Updates around the clock பரணிடப்பட்டது 2007-12-21 at the வந்தவழி இயந்திரம்
  4. slmm attempt
  5. 5.0 5.1 . 
  6. The Sunday Times Situation Report, Eelam war IV rages on several fronts
  7. Iqbal Athas, Janes Defence Weekly, Full-scale fighting flares in Sri Lanka
  8. "Sri Lankan troops take key town". BBC News. 2006-09-04. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5311620.stm. 
  9. "Army 'consolidates' Sampur gains". BBC News. 2006-09-05. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5315192.stm. 
  10. "LTTE admits defeat in Sampoor". BBC News. 2006-09-04. http://www.bbc.co.uk/sinhala/news/story/2006/09/060904_sampoor_defeat.shtml. 
  11. "Tigers kill 100 refugees, Sri Lanka says, amid new moves to halt bloodshed". AFP. பார்க்கப்பட்ட நாள் 2006-08-05.
  12. "Sri Lanka troops 'take key town'". BBC News. 2007-01-19. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6278349.stm. 
  13. "'Last civilian' leaves Vakarai". BBC News. 2007-01-19. http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/01/070119_vakarai_civilians.shtml. 
  14. "Government forces take Vakarai". BBC News. 2007-01-19. http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/01/070119_vakaraitaken.shtml. 
  15. "Sri Lanka captures rebel town as thousands flee". January 19, 2007. http://uk.reuters.com/article/homepageCrisis/idUKCOL86071._CH_.242020070119. 
  16. "Sri Lanka troops hunt rebels as refugees flood camps". Reuters. January 20, 2007 இம் மூலத்தில் இருந்து January 14, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080114010758/http://www.reuters.com/article/homepageCrisis/idUSCOL229984._CH_.2400. 
  17. "Sri Lanka's displaced face uncertainty". January 22, 2007. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6287887.stm. 
  18. World-press report
  19. Sunday Times report
  20. "World-news". Archived from the original on 2009-01-16. பார்க்கப்பட்ட நாள் 2007-09-29.
  21. 21.0 21.1 "Sunday Observer". Archived from the original on 2007-11-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-01.
  22. "Sri Lanka says 33 Tigers die in battle". Reuters. June 9, 2007. http://uk.reuters.com/article/worldNews/idUKCOL2375920070609. 
  23. "Six Sri Lankan troops are killed". BBC News. July 6, 2007. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6277236.stm. 
  24. "Sri Lanka declares fall of rebel east, Tigers defiant". Reuters. July 11, 2007. https://www.reuters.com/article/worldNews/idUSCOL15933520070711. 
  25. BBC news report
  26. BBC news report
  27. "Report in the hindunet". Archived from the original on 2008-04-17. பார்க்கப்பட்ட நாள் 2009-08-01.