கருந்தலை மீன்கொத்தி

பறவை இனம்

கருந்தலை மீன்கொத்தி (black-capped kingfisher) இவை வெப்ப மண்டல ஆசியாவின் பலபகுதிகளிலும், சீனா, கொரியா, தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை மரங்களில் வாழும் மீன்கொத்தி இனத்தைச் சார்ந்தது ஆகும். இவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இலங்கை, ஜாவா, தாய்லாந்து, மற்றும் புருனே போன்ற தீவு நாடுகளுக்குச் செல்லுகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்கள் நீர் நிலைகளுக்கு அருகில் என்றாலும் சில நேரங்களில் சதுப்பு நிலக்காடுகளிலும் காணலாம்.

கருந்தலை மீன்கொத்தி
மேற்கு வங்காளம் சுந்தர வனக்காட்டில் ஒரு ஆண் பறவை.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. pileata
இருசொற் பெயரீடு
Halcyon pileata
Boddaert, 1783
இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ள சுஹாரி நதியில் காணப்படும் ஒரு ஆண பறவை

விளக்கம்

தொகு

கருந்தலை மீன்கொத்தி மைனாவை விட சற்று பெரியதாக சுமார் 28 செ. மீ. (11 அங்) நீளம் இருக்கும். இதன் அலகு சிவப்பாகவும், விழப்படலம் செம்பழுப்பாகவும், கால்கள் பழுப்புத் தோய்ந்த சிவப்பாகவும் இருக்கும். இதன் தலை, கழுத்து, கன்னம் ஆகியன கறுப்பாக இருக்கும். உடலின் மேற்பகுதி கத்தரிப்பூ நிறம் தோய்ந்த நீலமாக இருக்கும். கழுத்தில் அகன்ற வெண்பட்டை காணப்படும். இறக்கைகள் கறுப்பாகவும், மோவாய், தொண்டை, கழுத்தின் பக்கங்கள், மார்பு ஆகியன வெண்மையாகவும், வயிறும் வாலடியும் கருஞ்சிவப்புத் தோய்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இவை பொதுவாக கடற்கரைகள், ஆற்றுக் கழிமுகங்கள் சார்ந்த சதுப்புநிலக் காடுகள், உப்பங்கழிகளில் ஆகியவற்றைச் சார்ந்து திரிகின்றன. நீர் வளமற்ற பகுதிகளில் காண இயலாது.

இனப்பெருக்கம்

தொகு

இவை பொதுவாக கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. ஆற்றங்கரை முதலியவற்றில் நீளமாக தோண்டபட்ட வங்கில் இறுதியில் அறைபோல அமைத்து முட்டை இடுகின்றன. ஒரு தடவைக்கு 4 முதல் 5 முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறன.[2]

பண்பாட்டில்

தொகு

மற்ற மீன்கொத்திகளைப்போலவே இவற்றையும் இதன் நீல நிற இறகிற்காவே வேட்டையாடப்படுகின்றனர். சீனா நாட்டில் இதன் இறகுகளைக்கொண்டு விசிறி செய்யப்படுகிறது. ஆங்காங் நாட்டில் இதன் இறகுகள் கொண்டு பெண்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள் செய்யப்படுகின்றது.[3][4]

குறிப்புகள்

தொகு
  1. "Halcyon pileata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Baker, E.C. Stuart. The Fauna of British India including Ceylon and Burma. Birds. Volume IV (2nd ed.). London: Taylor and Francis. pp. 271–272.
  3. Sharpe, R. B. (1871). A monograph of the Alcedinidae: or family of Kingfishers. pp. 169–170.
  4. Robert Swinhoe (1860). "The ornithology of Amoy (China)". Ibis 2 (1): 45–68. doi:10.1111/j.1474-919X.1860.tb06351.x. 

வெளி இணைப்பு

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Halcyon pileata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தலை_மீன்கொத்தி&oldid=3928601" இலிருந்து மீள்விக்கப்பட்டது