கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)
கலக்கப் போவது யாரு என்பது 2005 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மேடைச் சிரிப்புரை அடிப்படையாகக் கொண்ட உண்மைநிலை நகைச்சுவை நிகழ்ச்சி ஆகும்.
கலக்கப் போவது யாரு? | |
---|---|
வகை | நகைச்சுவை உண்மைநிலை நிகழ்ச்சி |
வழங்கல் | பருவம் 1 உமா ரியாஸ்கான் பருவம் 2 சொர்ணமால்யா பருவம் 3 சேது திவ்யதர்சினி பருவம் 4 சேது ரம்யா பருவம் 5-7 ரக்சன் ஜாக்லின் பருவம் 8 ஈரோடு மகேஸ் தாடி பாலாஜி பருவம் 9 அஜார் நவீன் |
நீதிபதிகள் | பருவம் 1 மதன் பாப் சின்னி ஜெயந்த் பருவம் 2 பாண்டியராஜன் சடகோபன் ரமேஷ் பருவம் 3 உமா ரியாஸ்கான் வி. சேகர் பருவம் 4 பாண்டியராஜன் உமா ரியாஸ்கான் பருவம் 5 தாடி பாலாஜி ஈரோடு மகேஸ் சேது பிரியங்கா ஆர்த்தி மதுமிதா நந்தினி பருவம் 6-7 தாடி பாலாஜி ஈரோடு மகேஸ் சேது பிரியங்கா ஆர்த்தி பருவம் 8 கோவை சரளா ராதா பருவம் 9 ரம்யா பாண்டியன் வனிதா விஜயகுமார் ஈரோடு மகேஸ் மதுரை முத்து (நகைச்சுவையாளர்) ஆதவன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 9 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 2005 ஒளிபரப்பில் | –
இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி 9 பருவங்களாக நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் வெற்றிபெறும் நபர்களுக்கு காமெடி கிங் என்ற பட்டமும் பணங்களும் பரிசாகக் கிடைக்கின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயன்[1] மற்றும் ரோபோ சங்கர் போன்றோர் தமிழ்த் திரைப்படத்துறையில் கதாநாயகனாக மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்து வெற்றியும் கண்டுள்ளனர். இதன் வழித்தொடராக 'கலக்கப் போவது யாரு? சாம்பியன்' (2017-2020) என்ற நிகழ்ச்சிகயும் ஒளிபரப்பானது.
வெற்றியாளர்கள்
தொகுஆண்டு | பருவம் | வெற்றியாளர் |
---|---|---|
2005 | 1 | கோவை குணா |
2006 | 2 | சிவகார்த்திகேயன் |
2007 | 3 | ஆதவன் |
2008 | 4 | அர்ஜுன் |
2015-2016 | 5 | முகமது குறைஷி |
2017 | 6 | வினோத் & பாலா |
2018 | 7 | அஜார் & டி எஸ் கே |
2019 | 8 | நிரஞ்சனா |
2020 | 9 | ஜெயச்சந்திரன் |
பருவங்கள்
தொகுபருவம் 1
தொகுஇந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 2005 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கான நேரடி தேர்வுகள் தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் நடந்தது. இந்த பருவத்தை உமா ரியாஸ்கான் என்பவர் தொகுத்து வழங்க, மதன் பாப் மற்றும் சின்னி ஜெயந்த் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர் கோவை குணா ஆவார்.
பருவம் 2
தொகுமுதல் பருவத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பருவம் 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த பருவத்தை நடிகை சொர்ணமால்யா என்பவர் தொகுத்து வழங்க, பாண்டியராஜன் மற்றும் சடகோபன் ரமேஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர் சிவகார்த்திகேயன் ஆவார்.
பருவம் 3
தொகுஇந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த பருவத்தை சேது மற்றும் திவ்யதர்சினி ஆகியோர் தொகுத்து வழங்க, உமா ரியாஸ்கான் மற்றும் வி. சேகர் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர் ஆதவன் ஆவார்.
பருவம் 4
தொகுஇந்த நிகழ்ச்சியின் நான்காம் பருவம் 25 சனவரி 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கான நேரடி தேர்வுகள் தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் நடந்தது. இந்த பருவத்திற்க்கான நேரடி தேர்வில் 10000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 60 நபர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பருவத்தின் வெற்றியாளருக்கு 5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் திரைப்படத்தில் நடிப்பதற்க்கான வாய்ப்பும் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த பருவத்தை சேது மற்றும் திவ்யா ஆகியோர் தொகுத்து வழங்க, பாண்டியராஜன் மற்றும் உமா ரியாஸ்கான் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர் அர்ஜுன் ஆவார்.
பருவம் 5
தொகுஇந்த நிகழ்ச்சியின் ஐந்தாம் பருவம் 26 ஜூலை 2015 முதல் 14 ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி 54 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த பருவத்தை ரக்சன் மற்றும் ஜாக்லின் ஆகியோர் தொகுத்து வழங்க, தாடி பாலாஜி, ஈரோடு மகேஸ், சேது, பிரியங்கா, ஆர்த்தி, மதுமிதா மற்றும் நந்தினி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் முதலாவது வெற்றியாளர் முகமது குறைஷி என்பவருக்குகு 5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்பட்டது, இரண்டாவது வெற்றியாளர் நிஷா என்பவருக்கு 3 லட்சம் பணம் வழங்கப்பட்டது. KPY Season 5 [2]
பருவம் 6
தொகுஇந்த நிகழ்ச்சியின் ஆறாவது பருவம் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.[3] இந்த பருவத்தை ரக்சன் மற்றும் ஜாக்லின் ஆகியோர் தொகுத்து வழங்க, தாடி பாலாஜி, ஈரோடு மகேஸ், சேது, பிரியங்கா மற்றும் ஆர்த்தி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர்கள் வினோத் மற்றும் பாலா ஆவார்கள்.
பருவம் 7
தொகுஇந்த நிகழ்ச்சியின் ஏழாவது பருவம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த பருவத்தை ரக்சன் மற்றும் ஜாக்லின் ஆகியோர் தொகுத்து வழங்க, தாடி பாலாஜி, ஈரோடு மகேஸ், சேது, பிரியங்கா மற்றும் ஆர்த்தி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர்கள் அஜார் மற்றும் டி எஸ் கே ஆவார்கள்.[4]
பருவம் 8
தொகுஇந்த நிகழ்ச்சியின் எட்டாவது பருவம் 19 சனவரி 2019 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பானது.[5][6] இந்த பருவத்தை ஈரோடு மகேஸ் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் தொகுத்து வழங்க,கோவை சரளா மற்றும் ராதா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர்கள் நிரஞ்சனா ஆவார்.[7]
பருவம் 9
தொகுஇந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது பருவம் 9 பெப்ரவரி முதல் 27 திசம்பர் 2020 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை அஜார் மற்றும் நவீன் தொகுத்து வழங்குகின்றனர். தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் இருந்தனர்.[8]
இந்த பருவத்தின் வெற்றியாளர் ஜெயச்சந்திரன், இரண்டாவது வெற்றியாளர் சிவா மற்றும் கிரி, மூன்றாவது வெற்றியாளர் மைகேல் ஆவார்கள்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kollywood Movie Actor Sivakarthikeyan Biography, News, Photos, Videos". nettv4u.
- ↑ "Kalaka Povathu Yaru 5 set to start soon". timesofindia.indiatimes.com.
- ↑ "Kalakka Povadhu Yaaru season 6 on August 21". timesofindia.indiatimes.com.
- ↑ "Kalakka Povadhu Yaaru Season 7 Grand Finale on 1 April". timesofindia.indiatimes.com.
- ↑ "விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு சீசன் 8'". 4tamilcinema.com. Archived from the original on ஜனவரி 21, 2019. பார்க்கப்பட்ட நாள் Jan 19, 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'Kalakkapovathu Yaaru' season 8 kick starts from today". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் Jan 19, 2019.
- ↑ "Kalakka Povadhu Yaaru Season 8 Grand Finale Winners". totalreporter.com.
- ↑ "Comedy show Kalakka Povadhu Yaaru Season 9 to premiere on February 9". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் Feb 6, 2020.
- ↑ "Kalakka Povathu Yaaru Season 9 Winner, Runner Up and Grand Finale Special Guests Revealed!". thenewscrunch.com. பார்க்கப்பட்ட நாள் Dec 25, 2020.