குருதேவ் அதிவிரைவு தொடருந்து
தமிழ்நாடு மாநிலத்தின் நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திலிருந்து மேற்கு வங்காளம் மாநிலம் ஷாலிமர் நிலையத்திற்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும், தென்னிந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான அதிவிரைவு தொடருந்து குருதேவ் அதிவிரைவு தொடருந்து ஆகும். இந்த தொடருந்து 12659, 12660 ஆகிய எண்களில் இயக்கப்பட்டு வருகிறது. [1]
குருதேவ் அதிவிரைவு தொடருந்து | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | Superfast | ||
முதல் சேவை | 1 சூலை 2001 | ||
நடத்துனர்(கள்) | தென்னிந்திய ரயில்வே துறை | ||
வழி | |||
தொடக்கம் | நாகர்கோவில் சந்திப்பு | ||
இடைநிறுத்தங்கள் | 42 | ||
முடிவு | ஷாலிமர் சந்திப்பு | ||
ஓடும் தூரம் | 2,579 km (1,603 mi) | ||
சேவைகளின் காலஅளவு | இரு வழிகளிலும் வாரம் ஒரு முறை | ||
தொடருந்தின் இலக்கம் | 12659 / 12660 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஈரடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பொது பெட்டிகள் | ||
இருக்கை வசதி | வசதி உண்டு | ||
படுக்கை வசதி | வசதி உண்டு | ||
உணவு வசதிகள் | உண்டு | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | Standard Indian Railways Coaches | ||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge | ||
வேகம் | 55.5 km/h (34 mph) | ||
|
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஒடியா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் வழியாக இயக்கப்படும் இந்த தொடருந்து நாகர்கோவில் முதல் ஷாலிமர் வரை 12659 என்ற எண்ணிலும், ஷாலிமர் முதல் நாகர்கோவில் வரை 12660 என்ற எண்ணிலும் இயங்கி வருகிறது.
பெயர்க்காரணம்
தொகுகேரள மாநிலத்தின் ஸ்ரீநாராயணகுரு மேற்கு வங்காள வங்காள மாநிலத்தின் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் நினைவாக, நாகர்கோவில் முதல் ஷாலிமர் வரை இயக்கப்படும் இந்த தொடரிக்கு குருதேவ் அதிவிரைவு தொடருந்து என பெயரிடப்பட்டது.
பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு
தொகுஈரடுக்கு குளிர்சாதனப்பெட்டி ஒன்று, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இரண்டு, முன்பதிவு வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டிகள் பதிமூன்று, முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் மூன்று, அமரும் வசதி கொண்ட சரக்கு பெட்டிகள் இரண்டு, அதிக கொள்ளளவு கொண்ட சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் இருபத்து நான்கு பெட்டிகளை கொண்டு குருதேவ் அதிவிரைவு தொடருந்து இயக்கப்படுகிறது. ஆனால் இந்த தொடருந்தில் சமையலறை பெட்டி வசதி இல்லை.[2]
பயணிகளின் எண்ணிக்கை, திருவிழாக் காலம், நிர்வாக காரணங்களுக்காக பயணப் பெட்டிகளின் எண்ணிக்கை ரயில்வே துறையினரால் மாற்றப்படலாம். [3]
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
VP | GRD | VP | GEN | S1 | S2 | S3 | S4 | S5 | S6 | S7 | S8 | S9 | S10 | S11 | S12 | B1 | B2 | A1 | GEN | GEN | GRD |
நேர அட்டவணை
தொகுவண்டி எண் | நிலையக் குறியீடு | புறப்படும் நிலையம் | புறப்படும் நேரம் | புறப்படும் நாள் | சேரும் நிலையம் | சேரும் நேரம் | சேரும் நாள் |
---|---|---|---|---|---|---|---|
12660 | SHM | ஷாலிமர் (கொல்கத்தா) | 11:05 PM | புதன்கிழமை | நாகர்கோவில் சந்திப்பு | 9:55 PM | வெள்ளிக்கிழமை Friday |
12659 | NCJ | நாகர்கோவில் சந்திப்பு | 2:45 PM | ஞாயிற்றுக்கிழமை Sunday | ஷாலிமர் (கொல்கத்தா) | 1:50 PM | செவ்வாய்க்கிழமை Tuesday |
வழித்தடமும் நிறுத்தங்களும்
தொகுகுருதேவ் அதி விரைவு தொடருந்து, நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சந்திப்பு , எர்ணாகுளம், கோட்டயம், பாலக்காடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா சந்திப்பு, ஏலூரு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கட்டக், கரக்பூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டு ஷாலிமர் நிலையத்தை வந்தடைகிறது. [4]
இழுவை இயந்திரம்
தொகுநாகர்கோவில் முதல் ஷாலிமர் வரையிலான இருப்பு பாதை முழுவதும் மின்சார மயமாக்கப்பட்டுள்ளதால் ஈரோடு சந்திப்பு அல்லது ராயபுரம் மூலம் பராமரிக்கப்படும் WAP-4 என்ற மின்சார இழுவை இயந்திரத்தின் மூலம் விசாகப்பட்டினம் வரை இயக்கப்படுகிறது. அதன்பின்பு ஹவுரா சந்திப்பு நிலையம் மூலம் பராமரிக்கப்படும் WAP-4 என்ற மின்சார இயந்திரத்தின் மூலம் இறுதி நிலையம் வரை இயக்கப்படுகிறது.
வண்டி எண் 12659
தொகுகுருதேவ் அதிவிரைவு தொடருந்து வண்டியானது நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சந்திப்பு , எர்ணாகுளம், கோட்டயம், பாலக்காடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு , ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா சந்திப்பு, ஏலூரு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கட்டக், கரக்பூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டு 42 நிறுத்தங்களையும் 449 நிலையங்களையும் கடக்க மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 47 மணி 5 நிமிடங்கள் பயணித்து ஷாலிமர் தொடருந்து நிலையத்தை இரண்டாம் நாள் (செவ்வாய்க்கிழமை) மதியம் 01.50 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2579 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் சில நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி இந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[5]
வண்டி எண் 12660
தொகுமறுமார்க்கமாக 12660 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடர்வண்டியானது ஷாலிமர் தொடருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இரவு 09.05 மணிக்கு இயக்கப்பட்டு42 நிறுத்தங்களையும் 449 நிலையங்களையும் கடக்க மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 47 மணி 5 நிமிடங்கள் பயணித்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தை மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 9.55 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2579 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக சந்திரகாசி நிலையம் முதல் கூடூர் நிலையம் வரை மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இந்தத் தொடருந்து இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ untitled; South Central Railway; 13 October 2014
- ↑ [1], thehindu.com, 5 July 2017
- ↑ Sleeper Coaches Added to Trains; 24 August 2016; thehindu.com; retrieved July 2017
- ↑ Gurudev Express Derails; 12 June 2007; thehindu.com; retrieved July 2017
- ↑ https://indiarailinfo.com/train/-train-gurudev-sf-express-12659/576/801/1913.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ https://indiarailinfo.com/train/-train-gurudev-sf-express-12660/577/1913/59.
{{cite web}}
: Missing or empty|title=
(help)