சங்கரன்கோவில் தொடருந்து நிலையம்
சங்கரன்கோவில் தொடருந்து நிலையம் (Sankarankovil railway station, நிலையக் குறியீடு:SNKL) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் நகரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையமாகும். இது தெற்கு இருப்புப் பாதை மண்டலத்திற்குட்பட்ட மதுரை இருப்புப்பாதைப் பிரிவின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுடனும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[1]
சங்கரன்கோவில் | |
---|---|
தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | இரயில்வே பீடர் ரோடு, சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா |
ஆள்கூறுகள் | 9°27′08″N 77°33′37″E / 9.4522°N 77.5604°E |
ஏற்றம் | 175 m (574 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | செங்கோட்டை - விருதுநகர் வழித்தடம் |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 2 |
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | SNKL[1] |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | மதுரை |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | இல்லை |
அமைவிடம்
தொகுஇத்தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் நகரிலுள்ள இரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது. இதனருகில் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையமும்[2] மற்றும் 153 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையமும் அமைந்துள்ளது.[3]
வழித்தடங்கள்
தொகுஇத்தொடருந்து நிலையம் சென்னையை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.[4][5]
- விருதுநகர் வழியாக வடக்கு நோக்கி மதுரைச் செல்லும் அகல இருப்புப் பாதை.
- தென்காசி வழியாக மேற்கு நோக்கி கொல்லம் செல்லும் அகல இருப்புப் பாதை.
வண்டிகளின் வரிசை
தொகுஎண். | பெயர் | புறப்படும் இடம் | சேரும் இடம் | நேரம் | சேவை நாட்கள் | வழித்தடம் |
---|---|---|---|---|---|---|
16101 | கொல்லம் விரைவு தொடருந்து | சென்னை எழும்பூர் | கொல்லம் சந்திப்பு | 02.48/02.50 | தினமும் | தென்காசி சந்திப்பு, செங்கோட்டை, புனலூர் |
06036 | வேளாங்கன்னி எர்ணாகுளம் விரைவு சிறப்பு தொடருந்து | வேளாங்கன்னி | எர்ணாகுளம் சந்திப்பு | 03.16/03.17 | திங்கள் | செங்கோட்டை, புனலூர், கொல்லம் சந்திப்பு, காயன்குளம் சந்திப்பு, செங்கன்னூர், செங்கனஞ்சேரி, கோட்டயம் |
06040 | வேளாங்கன்னி எர்ணாகுளம் விரைவு சிறப்பு தொடருந்து | வேளாங்கன்னி | எர்ணாகுளம் சந்திப்பு | 03.16/03.17 | புதன் | செங்கோட்டை, புனலூர், கொல்லம் சந்திப்பு, காயன்குளம் சந்திப்பு, செங்கன்னூர், செங்கனஞ்சேரி, கோட்டயம் |
06029 | மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு தொடருந்து | மேட்டுப்பாளையம் | திருநெல்வேலி சந்திப்பு | 04.18/04.20 | சனி | கடையநல்லூர், தென்காசி சந்திப்பு, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி |
12661 | பொதிகை அதி விரைவு தொடருந்து | சென்னை எழும்பூர் | செங்கோட்டை | 06.28/06.30 | தினமும் | தென்காசி சந்திப்பு |
20681 | சிலம்பு அதி விரைவுத் தொடருந்து | சென்னை எழும்பூர் | செங்கோட்டை | 06.53/06.55 | ஞாயிறு, வியாழன், சனி | தென்காசி சந்திப்பு |
16848 | செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு தொடருந்து | செங்கோட்டை | மயிலாடுதுறை சந்திப்பு | 07.58/07.59 | தினமும் | ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு ,தஞ்சாவூர் சந்திப்பு, கும்பகோணம் |
06504 | மதுரை செங்கோட்டை விரைவு தொடருந்து | மதுரை சந்திப்பு | செங்கோட்டை | 09.06/09.07 | தினமும் | தென்காசி சந்திப்பு, |
06664 | செங்கோட்டை மதுரை விரைவு தொடருந்து | செங்கோட்டை | மதுரை சந்திப்பு | 12.44/12.46 | தினமும் | இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு |
06663 | மதுரை செங்கோட்டை விரைவு தொடருந்து | மதுரை சந்திப்பு | செங்கோட்டை | 13.36/13.38 | தினமும் | தென்காசி சந்திப்பு |
16102 | கொல்லம் விரைவு தொடருந்து | கொல்லம் சந்திப்பு | சென்னை எழும்பூர் | 15.59/16.00 | தினமும் | விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாச்சலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம் |
06503 | செங்கோட்டை மதுரை விரைவு தொடருந்து | செங்கோட்டை | மதுரை சந்திப்பு | 16.36/16.37 | தினமும் | ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு |
20682 | சிலம்பு அதி விரைவுத் தொடருந்து | செங்கோட்டை | சென்னை எழும்பூர் | 17.43/17.45 | ஞாயிறு, வியாழன், சனி | விருதுநகர் சந்திப்பு ,மானாமதுரை சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு ,புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாச்சலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு ,தாம்பரம் |
12662 | பொதிகை அதி விரைவு தொடருந்து | செங்கோட்டை | சென்னை எழும்பூர் | 19.15/19.17 | தினமும் | விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாச்சலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம் |
16847 | மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு தொடருந்து | மயிலாடுதுறை சந்திப்பு | செங்கோட்டை | 20.11/20.12 | தினமும் | தென்காசி சந்திப்பு |
06035 | எர்ணாகுளம் வேளாங்கன்னி விரைவு சிறப்பு தொடருந்து | எர்ணாகுளம் சந்திப்பு | வேளாங்கன்னி | 21.01/21.02 | சனி | சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, நாகப்பட்டினம் |
06030 | திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு தொடருந்து | திருநெல்வேலி சந்திப்பு | மேட்டுப்பாளையம் | 21.13/21.15 | வியாழன் | இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,பழனி,பொள்ளாச்சி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு |
06039 | எர்ணாகுளம் வேளாங்கன்னி விரைவு சிறப்பு தொடருந்து | எர்ணாகுளம் சந்திப்பு | வேளாங்கன்னி | 22.22/22.23 | திங்கள் | சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, நாகப்பட்டினம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "சங்கரன் கோவில் தொடருந்து நிலையம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
- ↑ "மதுரை விமான நிலையம் திசை வரைபடம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
- ↑ "திசை வரைபடம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
- ↑ "சங்கரன்கோவில் தொடருந்து நிலையத்து வரும் தொடர்வண்டிகள்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
- ↑ "சங்கரன்கோவில் தொடருந்து நிலையத்து புறப்படும் தொடர்வண்டிகள்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.