ஜெய்ஹிந்த்புரம்

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

ஜெய்ஹிந்த்புரம் (ஆங்கில மொழி: Jaihindpuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5]

ஜெய்ஹிந்த்புரம்
Jaihindpuram
ஜெய்ஹிந்த்புரம் Jaihindpuram is located in தமிழ் நாடு
ஜெய்ஹிந்த்புரம் Jaihindpuram
ஜெய்ஹிந்த்புரம்
Jaihindpuram
ஜெய்ஹிந்த்புரம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°54′18″N 78°06′28″E / 9.905100°N 78.107800°E / 9.905100; 78.107800
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
160 m (520 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625 011
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்செல்லூர் கே. ராஜூ
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′18″N 78°06′28″E / 9.905100°N 78.107800°E / 9.905100; 78.107800 (அதாவது, 9°54'18.4"N, 78°06'28.1"E) ஆகும். மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

ஜெய்ஹிந்த்புரத்தில் இந்துக்கள் வழிபடும் வீரமாகாளியம்மன் கோயில் ஒன்று உள்ளது.[6] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாண்டுரங்கன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.[7]

மதுரை அவனியாபுரம் பகுதியில், 2023-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 250 மாடுபிடி வீரர்களில் முதலிடம் வகித்த மாடுபிடி வீரர் விஜய், ஜெய்ஹிந்த்புரத்தைச் சார்ந்தவர்.[8]

ஜெய்ஹிந்த்புரம் பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[9] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Tiyākarājan̲, Aru (1992). Mutalamaiccar Mun̲iyammā. Kaṇmaṇip Patippakam.
  2. Vināyakamūrtti, A. (1994). Patippuc cintan̲aikaḷ. Pālamurukan̲ Patippakam.
  3. Ganeshraj, N. (2018-03-22). Iyarkkaiyai Seerkulaitha 'Aararivu'. Pustaka Digital Media.
  4. Mukherjee, Amitava; Agnihotri, V. K. (1993). Environment and Development: Views from the East & the West (in ஆங்கிலம்). Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-788-5.
  5. Kannan, Padmasani. Letters for All Occasions (in ஆங்கிலம்). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7254-172-9.
  6. சின்னதுரை, அருண் (2022-04-08). "ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழா-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
  7. "Arulmigu Pandirengan Temple, Jaihindpuram, Madurai - 625011, Madurai District [TM032496].,pandurengan". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
  8. "ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவிக்கும் மாடுபிடி வீரர் ஜெய்ஹிந்த்புரம் EB விஜய்.. இவரை ஞாபகம் இருக்கா?". News18 Tamil. 2023-01-31. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
  9. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ஹிந்த்புரம்&oldid=3728893" இலிருந்து மீள்விக்கப்பட்டது