ஜொகூர் மந்திரி பெசார்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஜொகூர் மந்திரி பெசார் அல்லது ஜொகூர் முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Johor அல்லது First Minister of Johor; மலாய்: Menteri Besar Johor; சீனம்: 柔佛州务大臣) என்பவர் மலேசிய மாநிலமான ஜொகூர் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் என்று அழைப்பது வழக்கம். இவர் ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் (Johor State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.

ஜொகூர் மந்திரி பெசார்
Menteri Besar of Johor
Menteri Besar Johor
ஜொகூர் மந்திரி பெசார் கொடி
தற்போது
ஓன் அபீஸ் காசி
(Onn Hafiz Ghazi)

15 மார்ச் 2022 முதல்
ஜொகூர் மாநில அரசு
உறுப்பினர்ஜொகூர் மாநில ஆட்சிக்குழு
அறிக்கைகள்ஜொகூர் மாநில சட்டமன்றம்
வாழுமிடம்சவுஜானா, ஜொகூர் பாரு, ஜொகூர்
அலுவலகம்Bangunan Dato' Jaafar Muhammad, கோத்தா இசுகந்தர் 79000 இசுகந்தர் புத்திரி, ஜொகூர் பாரு, ஜொகூர்
நியமிப்பவர்சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்
ஜொகூர் சுல்தான்
பதவிக் காலம்5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது
முதலாவதாக பதவியேற்றவர்அம்சா அப்துல்லா
(Hamzah Abdullah)
உருவாக்கம்1886; 139 ஆண்டுகளுக்கு முன்னர் (1886)
இணையதளம்www.johor.gov.my/kerajaan/info-kerajaan/menteri-besar

தற்போது ஜொகூர் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் ஓன் அபீஸ் காசி (Onn Hafiz Ghazi). இவர் 15 மார்ச் 2022 முதல் மாநில முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.

நியமனம்

தொகு

ஜொகூர் மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, ஜொகூர் சுல்தான் முதலில் மந்திரி பெசாரை நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும்.

ஜொகூர் மந்திரி பெசார் இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் ஜொகூர் சுல்தான் நியமிப்பார்.

ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். ஜொகூர் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு

தொகு

மாநில அரசாங்கம் தனது சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது சுல்தானின் பொறுப்பு ஆகும். சுல்தான் அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பதவியில் இருப்பார்.

ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராகச் சுல்தான் நியமிப்பார்.

ஆளுமைகள்

தொகு

ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்று அரசாங்கத்தில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.

தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார்

தொகு

மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.

ஜொகூர் மந்திரி பெசார் பட்டியல்

தொகு

1886-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான ஜொகூர் மாநிலத்தின் மந்திரி பெசார்களின் பட்டியல் பின்வருமாறு:[1][2]

அரசியல் கட்சிகள்:
      சுயேச்சை       அம்னோ       கூட்டணி       பாரிசான் நேசனல்       பாக்காத்தான் அரப்பான்

# தோற்றம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தொகுதி
பதவியில் கட்சி[a] தேர்தல் கூட்டத் தொடர்
பதவியேற்பு பதவி விலகல் பதவி காலம்
1   டத்தோ
ஜாபர் முகம்மது
(Jaafar Muhammad)
(1838–1919)
1886 3 சூலை
1920
இல்லை
காலி
(3 சூலை 1919 – 16 சூலை 1920)
2   டத்தோ
முகம்மது மகபூப்
(Mohamed Mahbob)
(1852–1923)
16 சூலை
1920
1 செப்டம்பர்
1922
2 ஆண்டுகள், 47 நாட்கள் இல்லை
காலி
(1 செப்டம்பர் 1922 – செப்டம்பர் 1923)
3   டத்தோ
அப்துல்லா ஜாபார்
(Abdullah Jaafar)
(1875–1934)
செப்டம்பர்
1923
16 செப்டம்பர்
1928
இல்லை
4   டத்தோ
முசுதபா ஜாபார்
(Mustapha Jaafar)
(1862–1946)
16 செப்டம்பர்
1928
23 நவம்பர்
1931
3 ஆண்டுகள், 68 நாட்கள் இல்லை
5   டத்தோ
அப்துல் அமீது யூசுப்
(Abdul Hamid Yusof)
(1876–1934)
23 நவம்பர்
1931
28 டிசம்பர்
1934
3 ஆண்டுகள், 35 நாட்கள் இல்லை
காலி
(28 டிசம்பர்1934 – ஏப்ரல் 1935)
6   டத்தோ
உங்கு அப்துல் அசீஸ் உங்கு மஜித்
(Ungku Abdul Aziz Ungku Majid)
(1887–1951)
ஏப்ரல்
1935
1 சூன்
1947
இல்லை
7   டத்தோ
ஓன் ஜாபர்
(Onn Jaafar])
(1895–1962)
1 சூன்
1947
18 மே
1950
2 ஆண்டுகள், 351 நாட்கள் அம்னோ
காலி
(18 மே 1950 – 18 பிப்ரவரி 1952)
8   டத்தோ
சையது அப்துல் காதிர் முகமது
(Syed Abdul Kadir Mohamed)
(1900–1960)
18 பிப்ரவரி
1952
5 சூன்
1955
3 ஆண்டுகள், 107 நாட்கள் அம்னோ
கூட்டணி
(அம்னோ)
காலி
(5 சூன் – 1 அக்டோபர் 1955)
9   டத்தோ
வான் இட்ரிஸ் இப்ராக்இம்
(Wan Idris Ibrahim)
(1888–1973)
1 அக்டோபர்
1955
16 சூன்
1959
3 ஆண்டுகள், 258 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
காலி
(16 – 27 சூன் 1959)
10   டான் ஸ்ரீ
அசன் யூனுஸ்
(Hassan Yunus)
(1907–1968)
புக்கிட் செரம்பாங் சட்டமன்ற உறுப்பினர்
27 சூன்
1959
31 சனவரி
1967
7 ஆண்டுகள், 218 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1959 1-ஆவது சட்டமன்றத் தொடர்
1964 2-ஆவது சட்டமன்றத் தொடர்
11   டான் ஸ்ரீ
ஒசுமன் சாத்
(Othman Saat)
(1927–2007)
ஜோராக் சட்டமன்ற உறுப்பினர் (1974 வரையில்)
கீசாங் சட்டமன்ற உறுப்பினர் (1974 தொடக்கம்)
4 பிப்ரவரி
1967
4 ஏப்ரல்
1982
15 ஆண்டுகள், 59 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1969 3-ஆவது சட்டமன்றத் தொடர்
கூட்டணி
(அம்னோ)
1974 4-ஆவது சட்டமன்றத் தொடர்
1978 5-ஆவது சட்டமன்றத் தொடர்
12   டத்தோ
அப்துல் அஜீப் அகமது
(Abdul Ajib Ahmad)
(1947–2011)
எண்டாவ் சட்டமன்ற உறுப்பினர்
29 ஏப்ரல்
1982
12 ஆகஸ்டு
1986
4 ஆண்டுகள், 105 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1982 6-ஆவது சட்டமன்றத் தொடர்
13   டான் ஸ்ரீ
முகிதீன் யாசின்
(Muhyiddin Yassin)
(பிறப்பு 1947)
புக்கிட் செரம்பாங் சட்டமன்ற உறுப்பினர்
12 ஆகஸ்டு
1986
3 மே
1995
8 ஆண்டுகள், 264 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
1986 7-ஆவது சட்டமன்றத் தொடர்
1990 8-ஆவது சட்டமன்றத் தொடர்
14   டத்தோ
அப்துல் கனி ஒசுமான்
(Abdul Ghani Othman)
செரோம் சட்டமன்ற உறுப்பினர்
(பிறப்பு 1946)
3 மே
1995
14 மே
2013
18 ஆண்டுகள், 11 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
1995 9-ஆவது சட்டமன்றத் தொடர்
1999 10-ஆவது சட்டமன்றத் தொடர்
2004 11-ஆவது சட்டமன்றத் தொடர்
2008 12-ஆவது சட்டமன்றத் தொடர்
15   டத்தோ
முகமது காலித் நோர்டின்
(Mohamed Khaled Nordin)
(பிறப்பு 1958)
பெர்மாஸ் சட்டமன்ற உறுப்பினர்
14 மே
2013
12 மே
2018
4 ஆண்டுகள், 363 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
2013 13-ஆவது சட்டமன்றத் தொடர்
16   டத்தோ
ஒசுமான் செபியான்
(Osman Sapian)
(1951–2021)
கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர்
12 மே
2018
14 ஏப்ரல்
2019
0 ஆண்டுகள், 337 நாட்கள் பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2018 ஜொகூர் மாநிலத் தேர்தல் 14-ஆவது சட்டமன்றத் தொடர்
17   டத்தோ
சகாருதீன் ஜமால்
(Sahruddin Jamal)
(பிறப்பு 1975)
புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர்
14 ஏப்ரல்
2019
28 பிப்ரவரி
2020
0 ஆண்டுகள், 320 நாட்கள் பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
18   டத்தோ
அசுனி முகமது
(Hasni Mohammad)
(பிறப்பு 1959)
பெனுட் சட்டமன்ற உறுப்பினர்
28 பிப்ரவரி
2020
15 மார்ச்
2022
2 ஆண்டுகள், 15 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
19   டத்தோ
ஓன் அபிஸ் காசி
(Onn Hafiz Ghazi)
(பிறப்பு 1978)
மாச்சாப் சட்டமன்ற உறுப்பினர்
15 மார்ச்
2022
பதவியில் உள்ளார் 2 ஆண்டுகள், 300 நாட்கள் பாரிசான் நேசனல்
(அம்னோ)
2022 ஜொகூர் மாநிலத் தேர்தல் 15-ஆவது சட்டமன்றத் தொடர்
  1. இந்த நெடுவரிசையில் மந்திரி பெசார் சார்ந்த கட்சியின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; அவை இங்கே பட்டியலிடப்படவில்லை.

வாழும் முன்னாள் மந்திரி பெசார்கள்

தொகு
பெயர் பதவியின் காலம் பிறந்த தேதி
முகிதீன் யாசின் 1986–1995 15 மே 1947 (வயது 77)
அப்துல் கனி ஒசுமான் 1995–2013 14 நவம்பர் 1946 (வயது 78)
முகமது காலித் நோர்டின் 2013–2018 30 நவம்பர் 1958 (வயது 66)
சகாருதீன் ஜமால் 2019–2020 26 மே 1975 (வயது 49)
அசுனி முகமது 2020–2022 27 மார்ச் 1959 (வயது 65)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bibliografi Menteri Besar Johor". Johor State Government. Archived from the original on 4 August 2014. பார்க்கப்பட்ட நாள் 30 August 2015.
  2. "Johore". WorldStatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 15 April 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_மந்திரி_பெசார்&oldid=3950119" இலிருந்து மீள்விக்கப்பட்டது