தாஜ் விடுதிகள்

இந்திய விடுதி நிறுவனம்

தாஜ் விடுதிகள் (Taj Hotels) என்பது இந்தியாவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் மற்றும் உலகின் சில நகரங்களிலும் தனது வணிகத்தை ஏற்படுத்தியது.[1] 1902 ஆம் ஆண்டில் ஜம்சேத்ஜீ டாட்டாவால் டாட்டா குழுமத்துடன் இணைக்கப்பட்டது.[2] இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் 20,000இற்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது. [3][4]

தாஜ் விடுதிகள்
Taj Hotels
வகைகிளை நிறுவனம்
நிறுவனர்(கள்)ஜம்சேத்ஜீ டாட்டா
முதன்மை நபர்கள்
தொழில்துறைவிருந்தோம்பல்
சேவைகள்விடுதிகள்
தாய் நிறுவனம்இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட்

வரலாறு

தொகு
 
தாஜ் விடுதிகளின் நிறுவனர் ஜம்சேத்ஜீ டாட்டா (1839-1904),.

டாட்டா குழுமத்தின் நிறுவனர் ஜம்சேத்ஜீ டாட்டா, 1903 டிசம்பர் 16 அன்று மும்பையில் அரபிக்கடலை நோக்கிய தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர் என்ற ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதியை திறந்து வைத்தார். பிரபலமான வாட்சன் விடுதிக்குள் நுழையக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக டாட்டா தாஜ் விடுதியைக் கட்டினார் என பலரால் நம்பப்படுகிறது. வாட்சன் விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இந்த கோபத்தில்தான் ஜாம்சேதிஜி டாட்டா இந்த தாஜ் விடுதியைக் கட்டினார் எனவும் குறிப்பிடுகின்றனர்.[5] மேலும் சிலர் மும்பைக்கு மதிப்பு கூட்டும் வகையில் ஒரு விடுதி வேண்டும் என தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியர் வலியுறித்தியதால் கட்டப்பட்டது எனவும் கூறுகின்றனர். ஐரோப்பிய விருந்தினர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் விடுதிகள் அப்போது பிரித்தானிய இந்தியா முழுவதும் மிகவும் பொதுவானவையாக இருந்தன. ஜம்சேத்ஜீ டாட்டா இலண்டன், பாரிசு, பெர்லின் மற்றும் தியூசல்டோர்ஃபு போன்ற இடங்களுக்குச் சென்று தனது விடுதிக்கான பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள், தளவாடங்கள் மற்றும் பிற உட்புற அலங்காரப் பொருட்களை ஏற்பாடு செய்தார்.[6]

 
மும்பையிலுள்ள தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர் தாஜ் குழுமத்தின் முதல் விடுதியாகும். இது 1903 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இந்தியாவில் விரிவாக்கம்

தொகு

1974 ஆம் ஆண்டில், இந்தக் குழுமம் இந்தியாவின் கோவாவில் தனது முதல் சர்வதேச ஐந்து நட்சத்திர கடற்கரை சொகுசு விடுதியைத் திறந்தது. 1970களில், தாஜ் குழுமம் பெருநகரங்களிலும் தனது விடுதி வணிகத்தைத் தொடங்கியது. 1974இல் சென்னையில் ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதியான தாஜ் கோரமண்டலைத் திறந்தது. 1977இல் மும்பையிலும், 1978இல் தில்லியிலும் விடுதிகளைத் திறந்தது.

இந்தக் குழு 1970களில் இருந்து இந்தியாவில் உள்ள அரச அரண்மனைகளை ஆடம்பர விடுதிகளாக மாற்றி வருகிறது. 1971 ஆம் ஆண்டில் உதய்பூரிலுள்ள ஏரி அரண்மனை தாஜ் சொகுசு விடுதியாக மாற்றப்பட்ட முதல் அரண்மனையாகும்.[7] ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் அரண்மனை, ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனை மற்றும் ஐதராபாத்திலுள்ள பாலாக்ணுமா அரண்மனை ஆகியவையும் பின்னர் விடுதிகளாக மாற்றப்பட்டது.

 
கோவாவிலுள்ள தாஜ் ஃபோர்ட் அகுவாடா பீச் ரிசார்ட் விடுதி.

உலகளாவிய விரிவாக்கம்

தொகு

1980 ஆம் ஆண்டில், தாஜ் குழுமம் இந்தியாவுக்கு வெளியே யெமனிலுள்ள சனா என்னுமிடத்தில் தாஜ் ஷெபா விடுயைத் திறந்தது. பின்னர், 1980 களின் பிற்பகுதியில் இங்கிலாந்திலும், 2005 ஆம் ஆண்டில், நியூயார்க் நகரிலும் தொடங்கியது.[8]

மார்ச் 9,2022 அன்று, துபாயில் தாஜ் எக்ஸோடிகா ரிசார்ட் & ஸ்பா என்ற பெயரில் திறக்கப்பட்டது. தாஜ் ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ் துபாய் மற்றும் தாஜ் துபாய் ஆகியவையும் குழுமத்தின் பிற சொத்துக்களில் அடங்கும்.[9][10][11]

குறிப்பிடத்தக்க விடுதிகள்

தொகு
 
உதய்பூரில் உள்ள தாஜ் ஏரி அரண்மனை
 
தாஜ்மஹால் விடுதி, புது தில்லி

அங்கீகாரம்

தொகு

தாஜ் குழுமத்தின் பத்து விடுதிகள் உலகின் முன்னணி விடுதிகளின் பட்டியலில் இடம் பெற்ருள்ளன.[12] தாஜ் குழுமத்தின் இரண்டு விடுதிகள், ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் அரண்மனை விடுதி மற்றும் மும்பையில் உள்ள தாஜ் மஹால் அரண்மனை விடுதி ஆகியவை 2013 ஆம் ஆண்டில் காண்டே நாஸ்ட் டிராவலர் என்ற இதழின் "உலகின் சிறந்த 100 விடுதிகளின் பட்டியலில்" இடம்பிடித்தன.[13] காண்டே நாஸ்ட் டிராவலர் 2014 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள தாஜ்மஹால் அரண்மனை விடுதிக்கு "சிறப்பாக பராமரிக்கும் விடுதிகளின்" பட்டியலில் 13 வது இடத்தை அளித்தது.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "IHCL to reserve Taj tag only for luxury units – Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/business/india-business/ihcl-to-reserve-taj-tag-only-for-luxury-units/articleshow/64535051.cms. 
  2. "THE INDIAN HOTELS COMPANY LIMITED". Zauba Corp.
  3. "Taj Hotels Resorts & Palaces: Private Company Information". Bloomberg Businessweek. 13 October 2012 இம் மூலத்தில் இருந்து 13 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121013190710/http://investing.businessweek.com/research/stocks/private/snapshot.asp?privcapId=13433120. 
  4. "Crowne Plaza, Dow Corning & Taj Hotels Resorts and Palaces". The Economic Times. 21 June 2010. https://economictimes.indiatimes.com/crowne-plaza-dow-corning-taj-hotels-resorts-and-palaces/articleshow/6071384.cms. 
  5. "From Parsee priests to profits: say hello to Tata – Asia, World". The Independent. 1 February 2007 இம் மூலத்தில் இருந்து 26 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220526/https://www.independent.co.uk/news/world/asia/from-parsee-priests-to-profits-say-hello-to-tata-434575.html. 
  6. "Hotel Association of India" (PDF). Archived from the original (PDF) on 23 November 2010. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
  7. Walsh, John (8 May 2015). "Taj Lake Palace, Udaipur: Raj before beauty, but this luxury is". The Independent. https://www.independent.co.uk/travel/hotels/taj-lake-palace-udaipur-raj-before-beauty-but-this-luxury-is-timeless-10235728.html. 
  8. "The Pierre: New York's Taj". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/services/travel/the-pierre-new-yorks-taj/articleshow/22453874.cms. 
  9. "Taj Exotica Resort opens on Dubai's Palm Jumeirah with a 70-metre-long swimming pool". The National (in ஆங்கிலம்). 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 27 March 2022.
  10. Staff Writer; TradeArabia. "325-room Taj Exotica Resort & Spa, The Palm opens in Dubai". www.zawya.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 March 2022.
  11. "Sonu Koithara has been appointed Executive Chef at Taj Exotica Resort & Spa, The Palm, Dubai". Hospitality Net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 March 2022.
  12. "Hotel List". Lhw.com. Leading Hotels of The World. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.
  13. "Top 100 Hotels & Resorts in the World". Condé Nast Traveler. 15 October 2013. Archived from the original on 8 September 2014. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.
  14. "GOLD STANDARD HOTELS 2014". Cntraveller.com. Archived from the original on 8 September 2014. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஜ்_விடுதிகள்&oldid=4121989" இலிருந்து மீள்விக்கப்பட்டது