தேசிய கடல் பூங்கா, கச்சு வளைகுடா

தேசிய கடல் பூங்கா, கச்சு வளைகுடா (Marine National Park, Gulf of Kutch) என்பது இந்தியாவின் குசாராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் கச்சு வளைகுடாவின் தெற்குக் கரையில் அமைந்துள்ள கடல் பூங்காவாகும். இது 1980-ல் சுமார் 270 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஓகா முதல் ஜோடியா வரையில் கடல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 1982-ல், 110 கி. மீ. மையப் பகுதி இந்தியாவின் வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் விதிகளின் கீழ் தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. தேசிய கடல் பூங்காவில் ஜாம்நகர் கடற்கரையில் 42 தீவுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பாறைகளால் சூழப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமான தீவு பிரோதன் தீவு ஆகும்.[1]

தேசிய கடல் பூங்கா, கச்சு வளைகுடா
குறைந்த ஓதத்தின் போது பல மைல் தூரத்திற்கு கடல் உள்வாங்கும் போது தெரியும் கடற் அடித்தளம்
Map showing the location of தேசிய கடல் பூங்கா, கச்சு வளைகுடா
Map showing the location of தேசிய கடல் பூங்கா, கச்சு வளைகுடா
தேசிய கடல் பூங்கா
அமைவிடம்கச்சு வளைகுடா, துவாரகை, குசராத்து, இந்தியா
அருகாமை நகரம்ஜாம்நகர்
ஆள்கூறுகள்22°28′N 69°37′E / 22.467°N 69.617°E / 22.467; 69.617
பரப்பளவு162.89 km2 (62.89 sq mi)
நிறுவப்பட்டது1982
நிருவாக அமைப்புForest Department of Gujarat

விலங்கினங்கள் தொகு

இங்குக் காணப்படும் விலங்கினங்கள் பின்வருமாறு: 70 வகையான பஞ்சுயிரிகள், 52 பவளச் சிற்றினங்கள் உட்பட 44 வகையான கடின பவளமும், 10 வகையான மென்மையான பவளமும் கிட்டத்தட்ட 90 வகையான பறவைகள்.

 
கடலுக்கு அடியில் இருக்கும் பாறையில் ஒரு கடல் ஸ்லக். கடல் பின்வாங்கும்போது, கடல் உயிரினங்கள் ஆழமான நீரில் பின்வாங்குவதற்கு முன் அல்லது பாறைகளுக்கு அடியில் மறைவதற்கு முன் கடுமையான சூரிய ஒளியில் வெளிப்படும்.
 
மேற்கு கரைக் கொக்கு ப்ரோல். பாறைகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் மறைந்திருக்கும் மீன்கள் மற்றும் ஓடுடைய மீன்களைப் பிடிக்க பறவைகள் குறைந்த ஓதங்களின் போது நாராரா கடற்கரைகளுக்குச் செல்கின்றன.

சொறி மீன், போர்த்துகீச சொறி மீன் மற்றும் கடற்சாமந்தி ஆகியவை இங்குக் காணப்படும் மற்ற புழையுடலிகளாகும். கணுக்காலிகளில் 27 வகையான இறால்கள், 30 வகையான நண்டுகள், கல் இறால், சிங்கி இறால் மற்றும் பிற ஓடுடைய கணுக்காலிகள் அடங்கும். கடல் முத்துச் சிப்பி மற்றும் கடல் நத்தைகள் போன்ற மெல்லுடலிகளும் உள்ளன. நிறத்தை மாற்றும் பேய்க்கணவாய்களும் காணப்படுகின்றன. கடல் விண்மீன், கடல் வெள்ளரி மற்றும் மூரை போன்ற முட்தோலிகளும் உள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட மீன்கள் கோள மீன், கடற்குதிரை, கொட்டும் திருக்கை, சேற்று உளுவை மற்றும் திமிங்கலச் சுறா ஆகியவை அழிந்து வரும் இனங்களாகும். தோணியாமைகள், ஒலிவ நிறச் சிற்றாமை மற்றும் பேராமை போன்ற அழிந்து வரும் கடல் ஆமைகள் இங்கு காணப்படுகின்றன. கடல் பாம்புகளில் மூன்று வகைகள் உள்ளன. ஆவுளியா மற்றும் சிறிய கடற்பாலூட்டி, பின்லெஸ் போர்போயிஸ்கள், பொதுவான ஓங்கில்கள், போத்த்ல் மூக்கு ஓங்கில் மற்றும் சீன ஓங்கல் போன்றவையும் உள்ளன.[2] நீலத் திமிங்கலங்கள்,[3] சேய் திமிங்கலங்கள் போன்ற பெரிய திமிங்கலங்கள்[4] காணப்படுகின்றன.[5] சோவியத் ஒன்றியம் மற்றும் யப்பானின் சட்டவிரோத திமிங்கல வேடையால் கூனல் முதுகுத் திமிங்கிலம்மற்றும் எண்ணெய்த் திமிங்கிலம் கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டிருக்கலாம்.[6] திமிங்கிலச் சுறாக்களை ஆழமான பகுதிகளில் காணலாம்.[7] வியக்கத்தக்கப் பெரிய அளவிலான பெரும் பூநாரை கூட்டம், கச்சு வளைகுடாவில் 20,000க்கும் மேற்பட்ட கூடுகளைக் கட்டுகின்றன என்று அறியப்படுகிறது. நண்டு தின்னி, உள்ளான், கரைக் கொக்கு, பெரிய கொக்கு, பேதை உள்ளான், ஐரோவாசியா சிப்பிப்பிடிப்பான், பச்சைக்காலி, பவளக்காலி, கடல் புறா, வாத்துகள், கூழைக்கடா, பெரிய நாரை, மூக்கன், ஆலா போன்ற பல பறவைச் சிற்றினங்கள் இங்குக் காணப்படுகின்றன.[8] அரபிக்கடலில் பவளப்பாறைகளுடன் 42 தீவுகள் உள்ளன, அவற்றில் ஒன்றில் பூங்கா அமைந்துள்ளது.[9]

பல்லுயிர் மற்றும் பாதுகாப்பு சவால்கள் தொகு

கச்சு வளைகுடா கடல் தேசிய பூங்கா ஒரு பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும்.[10] சமீப ஆண்டுகளில், சீமைக்காரை தொழிற்சாலைகள் பவளப்பாறைகள் மற்றும் மணல்களைப் பிரித்தெடுப்பதாலும், நீரின் அதிகரித்த கலங்கற்றன்மை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், இரசாயன தொழில்கள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் போன்ற பல காரணிகளால் கடல் பூங்காவின் பல்லுயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1] தற்போது, தேசிய கடல் பூங்காவில் 31 வகையான பவளப்பாறைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இரண்டு பேரழிவு மற்றும் பவளப்பாறை சிதைவு நிகழ்வுகளும் நடந்துள்ளன.[11]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Apte, Deepak. Marine National Park, Gulf of Kutchh: A conservation challenge. Bombay Natural History Society. பக். 26–27. http://www.bnhs.org/bo/documents/GulfofKutch.pdf. பார்த்த நாள்: 2009-01-22. 
  2. TNN - The Times of India. 2009. Gulf of Kutch favourite dolphin playground. Retrieved on May 13. 2014
  3. Mammals பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம். Retrieved on May 13. 2014
  4. Jackson J. 2006. Diving with Giants[தொடர்பிழந்த இணைப்பு]. pp.59. New Holland Publishers Ltd. Retrieved on December 17. 2014
  5. The Marine Mammal Conservation Network of India.Balaenoptera borealis பரணிடப்பட்டது 2014-05-13 at the வந்தவழி இயந்திரம். Retrieved on May 13. 2014
  6. Clapham P.. Ivashchenko Y.. Marine Fisheries Review. Retrieved on May 13. 2014
  7. Gujarat Tourism. Marine National Park பரணிடப்பட்டது 2010-12-12 at the வந்தவழி இயந்திரம். Retrieved on May 13. 2014
  8. Thapar V. 1998. Land of the Tiger. p. 161. University of California Press. Retrieved on May 13, 2014
  9. "A marine park in Gujarat on its way to become hot tourist spot". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 10 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610083408/http://www.highbeam.com/doc/1P3-1415322571.html. 
  10. Biswas N.. The Gulf of Kutch Marine National Park and Sanctuary: A Case Study. International Collective in Support of Fishworkers Chennai. Retrieved on May 13. 2014
  11. குமார், ஜே.எஸ்.ஒய், மாரிமுத்து, என்., கீதா, எஸ்., சத்தியநாராயணா, சி., வெங்கட்ராமன், கே. மற்றும் ஆர்.டி.கம்போஜ். 2014. ஜே கோஸ்ட் கன்சர்வ்., 18: 167-175

வெளி இணைப்புகள் தொகு