தேசிய நெடுஞ்சாலை 183 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 183 (National Highway 183 (India)) இந்தியாவில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் கேரளத்தின் உள்ள கொல்லத்தினை தமிழ்நாட்டின் தேனியையுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[2] கொல்லத்திலிருந்து தொடங்கி வடக்கு நோக்கிச் சென்று கோட்டயத்தில் கிழக்கே திரும்பி பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் வடக்கு எல்லை வழியாகத் தமிழக எல்லையைக் கடந்து திண்டுக்கல் அருகே முடிவடைகிறது. இது தே. நெ. 83 (கோவை - நாகப்பட்டினம்) உடன் இணைகிறது. இந்த நெடுஞ்சாலை முன்பு தே. நெ. 220 என்று அழைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை 183 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 350 km (220 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திண்டுக்கல், தமிழ்நாடு[1] | |||
தே.நெ. 83, திண்டுக்கல் தே.நெ. 85, குமுளி தே.நெ. 183A, வண்டிப் பெரியாறு மா. நெ. 1, கோட்டயம் தே.நெ. 183A, பரணிக்காவு தே.நெ. 66, கொல்லம் | ||||
முடிவு: | கொல்லம் நகரம், கேரளா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 134 கி. மீ.[1] கேரளா: 216km [1] | |||
முதன்மை இலக்குகள்: | திண்டுக்கல், தேனீ, உத்தமபாளையம், கம்பம், குமுளி பீர்மேடு, கஞ்சிரப்பள்ளி, பம்பாடி, கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், கொல்லக்கடவு, சாரும்மூடு, பரணிக்காவு, குந்தாரா, அஞ்சாலூமூடு, கொல்லம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுகேரளம்
தொகுகொல்லம் → அஞ்சலுமூடு → அடூர் → செங்கனூர் → திருவல்லா → சங்கனாசேரி → கோட்டயம் → பாம்பாடி → கொடுங்கூர் → பொன்குன்னம் → கஞ்சிரப்பள்ளி → பொடிமட்டம் குன்றம் → முண்டகயூர் பெர்க்கமாவண்டி →
தமிழ்நாடு
தொகுகூடலூர் → கம்பம் → உத்தமபாளையம், சின்னமனூர் → வீரபாண்டி → தேனி, பெரியகுளம் → தேவதானப்பட்டி → பட்லகுண்டு → திண்டுக்கல்[3]
தேசிய நெடுஞ்சாலை 183A
தொகுபுதிய நெடுஞ்சாலை 183A (இந்தியா) மார்ச் 2014-ல் அறிவிக்கப்பட்டது. இது பன்மனா டைட்டானியம் சந்திப்பிலிருந்து (கொல்லம் அருகே) தேவலக்கரை - கோவூர் - சாஸ்தாங்கோட்டை - பரணிகாவு - கடம்பநாடு - மணக்காலா - அடூர் - ஆனந்தப்பள்ளி - தட்டையில் - காய்பட்டூர் - ஓமாலூர் - பத்தனம்திட்டா – மயிலாப்ரா – கும்பலாம்பொய்கா – வடசேரிகரை – பெருநாடு – லஹை – பிளாப்பள்ளி – கானமலை – முக்கூட்டுதாரா – எருமேலி – முண்டக்காயம் வழியாகச் செல்கின்றது. இந்த நெடுஞ்சாலை, கோட்டயத்திலிருந்து நீண்ட பாதையை விட, அடூரிலிருந்து, கைப்பட்டூர், பத்தனம்திட்டா வழியாக வண்டிப்பெரியாருக்குச் செல்லும் தூரம் குறைவானப் பாதையாகும்.