நிருபேந்திர மிஸ்ரா

நிருபேந்திர மிஸ்ரா ( Nripendra Misra பிறப்பு  மார்ச் 8, 1945) ஓய்வு பெற்றது 1967 2014 முதல் 2019 வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய உத்தரபிரதேச இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். [1]இவர் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும், இந்திய தொலைத் தொடர்பு செயலாளராகவும், இந்திய உர துறையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். [2] 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் இவருக்கு வழங்கப்பட்டது. [3] [4]

நிருபேந்திர மிஸ்ரா
12ஆவது இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர்
பதவியில்
28 மே 2014 – ஆகஸ்ட் 30, 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்புலோக் சட்டர்ஜி
பின்னவர்பிரமோத் குமார் மிஸ்ரா
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவை நபர்
பதவியில்
22 மார்ச் 2006 – மார்ச் 22, 2009
முன்னையவர்பிரதீப் பைஜல்
பின்னவர்ஜே. எஸ். சர்மா
பதவியில்
சனவரி 2004 – மார்ச் 2005
பதவியில்
சனவரி 2002 – சனவரி 2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச் 8, 1945 தியோரியா, உத்திரப்பிரதேசம்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்
ஜான் எஃப் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்ண்மென்ட், ஆர்வர்டு பல்கலைக்கழகம்

கல்வி

தொகு

இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஜான் எஃப். கென்னடி ஸ்கூல் ஆப் கவர்மென்டில் பொது நிர்வாகத்தில் ம்துகலைப் பட்டம் பெற்றார். [5] [6] அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

தொகு

ஆட்சிப்பணி அதிகாரியாக

தொகு

மிஸ்ரா இந்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளில் ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றினார். முதன்மைச் செயலர் ( உள்துறை -II), உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சரின் முதன்மைச் செயலர், உத்திரப் பிரதேச வருவாய் பிரிவின் முதன்மைச் செயலர் நொய்டா பெருநகரின் மற்றும் உத்தரபிரதேச அரசாங்கத்தில் நிதித் துறையில் சிறப்பு செயலாளராகவும் [5] [6] தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர், வர்த்தக அமைச்சகத்தில் உலக வர்த்தக அமைப்பு விவகாரங்களை கவனிக்கும் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி அமைச்சகத்தின் இணை செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

 
இந்தியப் பிரதமர் நரேந்திராவுடன் நிருபேந்திர மிஸ்ரா, மே 26, 2015 அன்று புதுதில்லியில்




சான்றுகள்

தொகு
  1. . New Delhi. 27 May 2014. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/former-telecom-regulator-nripendra-misra-appointed-principal-secretary-to-narendra-modi/articleshow/35624499.cms. 
  2. नृपेंद्र मिश्रा ही क्यों हैं प्रधान सचिव पद पर मोदी की पसंद, जानिए 5 कारण [Why is Nripendra Misra the choice of Modi for the post of principal secretary, know 5 reasons]. Rajasthan Patrika (in Hindi). New Delhi. 12 July 2018. Archived from the original on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 7 August 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Padma Awards 2021 announced". Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 26 January 2021.
  4. "Shinzo Abe, Tarun Gogoi, Ram Vilas Paswan among Padma Award winners: Complete list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  5. 5.0 5.1 "Nripendra Misra". Public Interest Foundation. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
  6. 6.0 6.1 "Telecom Regulatory Authority of India — 2006-07 Annual Report" (PDF). Telecom Regulatory Authority of India. pp. 2–4. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபேந்திர_மிஸ்ரா&oldid=3315488" இலிருந்து மீள்விக்கப்பட்டது