இரத்தினவேலு
வேண்டுகோள்
தொகுஐயா, உங்கள் பயனர் பக்கத்தையும் வலைப்பதிவுகளையும் பார்த்தபின் உங்களைப் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை மற்றவர்களும் அறிய வேண்டும் என்ற ஆவலில் பதிவேற்றி வருகிறீர்கள் என்று புரிந்து கொண்டோம்.
அதே நேரம் உங்களிடம் விக்கிபீடியாவைப் பற்றிய சில தகவல்கலைக் கூற வேண்டியதுள்ளது. வலைப்பதிவிற்கும் விக்கிபீடியாவிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அவை,
- விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம் ஆகும்.
- இதற்கென ஒரு குறிப்பிட்ட எழுத்து நடை உண்டு. எடுத்துக்காட்டாக, இங்கு தன்னிலையிலோ (நான், எனது), முன்னிலையிலோ (நீ, நீங்கள், உங்கள்) எழுதக் கூடாது. படர்க்கையில் தான் எழுத வேண்டும். உணர்வுப் பூர்வமாக அல்லாமல் தகவல்களை நடுநிலையோடும் மிகைப்படுத்தாமலும் தெரிவிக்க வேண்டும். மேலும் இது போன்ற நெறிமுறைகளுக்கு நடைக் கையேட்டை ஒருமுறை கண்டிப்பாக வாசிக்கவும். ஏதேனும் ஐயம் இருந்தால் ஆலமரத்தடியில் கேளுங்கள்.
- மொத்த கட்டுரையும் ஒரே பக்கத்தில் வரும் வகையில் சுருக்கமாகவும் பொது அறிமுக நடையிலும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இந்தியா கட்டுரையைப் பாருங்கள். அங்கு இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய பத்தியில் ஒரு சுருக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது. விரிவான விளக்கம் இந்தியாவின் பொருளாதாரம் என்ற துணைக் கட்டுரையில் தரப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்.
மேலே நீங்கள் பார்த்தவை ஒரு சிறு அறிமுகமே. விக்கிபீடியாவைப் பற்றி மேலும் ஆரிந்து கொள்ள இங்குள்ள பிற கட்டுரைகளை ஒரு முறை பாருங்கள். பின்னர் விவசாயம், அரிசி, நீர்ப்பாசனம் போன்ற கட்டுரைகளில் உங்கள் பங்களிப்பைத் தரலாம்.
உங்கள் கருத்துக்களை ஆலமரத்தடியிலோ எனது பேச்சுப் பக்கத்திலோ தயங்காமல் தெரிவியுங்கள். நன்றி. -- Sundar \பேச்சு 09:47, 14 செப்டெம்பர் 2005 (UTC)
- திரு. இரத்தினவேலு, உங்கள் மின் மடல் பார்த்தேன்.
- தாங்கள் தயவு செய்து விடை பெற வேண்டாம். தங்களை போன்றவர்களின் பங்களிப்பு விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியத்தை தமிழில் உருவாக்க மிகவும் அவசியமாகும். சில பயனர்கள் வேண்டுமென்றே முறையற்ற பங்களிப்புகளை செய்வது வழக்கம். அந்த விதத்தில் முதலில் தங்களைப்பற்றி தவறாக புரிந்து கொள்ள நேர்ந்ததால் தான், தங்களுக்கு எச்சரிக்க விடும்படி நேர்ந்தது. ஆனால், தாங்கள் அறிந்ததை எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியே பங்களித்து விருகிறீர்கள் என்பதை தற்பொழுது புரிந்து கொள்ள இயல்கிறது. அதனால், நான் முன்னர் உங்களுக்கு விடுத்த எச்சரிக்கைகளை மனதில் கொள்ள வேண்டாம். விக்கிபீடியாவில் உள்ள சிறப்புக் கட்டுரைகளை ஒரு முறை பார்வையிட்டீகளானால், விக்கி பீடியா கட்டுரை நடை குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலலாம். என்ன சந்தேகம் என்றாலும் என்னிடமோ பிற விக்கி பீடியா நிர்வாகிகளான சுந்தர், ஸ்ரீநிவாசன், மயூரநாதன் ஆகியோரிடமோ ஒத்தாசை பக்கத்திலோ தயங்காமல் கேளுங்கள். நாங்கள் உதவக்காத்திருக்கிறோம்.
- உங்களிடம் இருந்து தொடர்ந்து பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன். நன்றி
- (பின்வருவது, சில நிமிடங்கள் முன், இரத்தினவேலு எனக்கு அனுப்பிய மின் மடல் செய்தி-ரவி வணக்கம், தற்போது கொடுத்துள்வைகள் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் அவ்வாறு இல்லை என்றால் சொல்லங்கள் சரிசெய்து கொள்கிறேன்; இல்லையென்றால் விடைபெறுகிறேன் நன்றி-இரத்தினவேலு
)--ரவி (பேச்சு) 10:27, 14 செப்டெம்பர் 2005 (UTC)
எங்கள் வேண்டுகோளை ஏற்று பயனுள்ள உங்கள் அனுபவ அறிவை அரிசி கட்டுரையில் பகிர்ந்து கொள்ள முனைந்ததற்கு நன்றி. -- Sundar \பேச்சு 10:46, 14 செப்டெம்பர் 2005 (UTC)
- வணக்கம் இரத்தினவேலு ஐயா:
- உங்களை பற்றி சில செய்திகளை உரையாடல்கள் மூலம் அறிந்து கொண்டேன். நீங்கள் வலைப்பதிவது பற்றியும் அறிவேன். நல்ல தமிழ், பொது உணர்வுடன் எழுதுகின்றீர்கள்.சிறு வயதில் ஊமைத்துரை, வீர பாண்டிய கட்டப்மொம்மன் போன்றவர்களின் கதைகளை படித்திருக்கின்றேன். உங்கள் பதிவுகளில் மேலும் சிலரை பற்றி அறியகூடியதாக இருந்தது.
ஆரம்பத்தில் உங்களை போலவே நாமும் தடுமாறித்தான் விக்கிபீடியாவின் போக்கை புரிந்துகொள்ள முனைந்தது. குறிப்பாக தமிழ் விக்கிபீடியாவின் நடை கூடியவரை சார்பற்ற, யாரையும் முன்நிறுத்தாத, அறிவுரைக்காத நடை; பலருக்கும் பயிலப்படவேண்டியதொன்றாகவே இருக்கின்றது. எனவே, நீங்கள் தொடர்ந்து விக்கிபீடியாவில் தகுந்த வகையில் பங்களிக்குமாறு, மற்ற பயனர்களுடன் இணைந்து வேண்டி கொள்கின்றேன். நன்றி.
--Natkeeran 15:43, 14 செப்டெம்பர் 2005 (UTC)
இரத்தினவேலு அவர்களுக்கு, உங்களுடைய எழுத்துக்கள் சம்பந்தமான விவாதங்களில் நான் பங்குபற்றாவிட்டாலும் அதனைத் தொடர்ந்து அவதானித்து வந்தேன். நீங்கள் எழுதிய கட்டுரைகளையும் வாசித்தேன். உங்களுடைய கட்டுரைகள் பற்றிய ரவியின் அவதானிப்புகள் சரிதான். ஆனாலும், நீங்கள் எழுதியவற்றில் பலரும் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் இருந்தன என்பதுடன், விக்கிபீடியாவுக்கு மிகவும் தேவையான வகையில் நீளமுள்ளனவாகவும் இருந்தன. நிச்சயமாக உங்கள் கட்டுரைகளின் நடையில் திருத்தங்கள் தேவை என்பதுடன், வர்ணனைகளும், பக்கச்சார்பான அம்சங்களும் நீக்கப்படவேண்டும். இது பெரிய விடயம் அல்ல. அவற்றைப் படிப்படியாகத் திருத்திக் கொள்ளலாம். இதுவே நீங்கள் வெளியேறவேண்டும் என்பதற்குக் காரணமாக வேண்டியதில்லை. உங்கள் நோக்கம் தூய்மையாக இருக்கும் வரையிலும், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது திருத்திக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இருக்கும் வரையிலும் விக்கிபீடியா மூலம் தமிழ்ச் சமுதாயத்துக்கு நீங்கள் செய்யும் சேவைகளை நான் மனப்பூர்வமாக வரவேற்பேன். உங்கள் பங்களிப்பைத் தொடருங்கள். Mayooranathan 17:37, 14 செப்டெம்பர் 2005 (UTC)
இலவச மதிய உணவுத் திட்டம்
தொகுஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது, அது தொடர்பான அனைத்தையம் ஒரே பக்கத்தில் கொடுக்கவும். உதாரணமாக, இலவச மதிய உணவுத் திட்டம் பற்றிய தகவல்களை 'இலவச மதிய உணவுத் திட்டம்', 'ஆலோசனை', 'எட்டையபுரத்தில்' போன்ற பக்கங்களில் தனித்தனியாக கொடுப்பதற்கு பதில், அனைத்தையும் இலவச மதிய உணவுத் திட்டம் என்ற ஒரே பக்கத்திலேயே கொடுக்க வேண்டும். இது தொடர்பாக நான் செய்த மாற்றங்களை அப்பக்கத்தில் கவனிக்கவும். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என் பேச்சுப்பக்கதிலோ, இங்கோ கேட்கவும் -ஸ்ரீநிவாசன் 17:08, 23 செப்டெம்பர் 2005 (UTC)
உலகப் போர்
தொகுஉலகப் போர்களைப் பற்றி தாங்கள் உருவாக்கிய கட்டுரைகள் கண்டு மகிழ்ந்தோம். தொடர்க உங்கள் பயனுள்ள பங்களிப்பு. -ஸ்ரீநிவாசன் 08:05, 24 செப்டெம்பர் 2005 (UTC)
முந்தைய செய்திகள்
தொகுவிக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- புதுப் பயனர் பக்கம்
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிபீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி (பேச்சு) 9 ஜூலை 2005 13:36 (UTC)
Rathnavelu, I am happy to see u contributing to wikipedia. Kindly note that your articles should note the style of writing in a encyclopedia. Please see விக்கிபீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி for more guidelines. I have blanked your entry in muthu raama linga thevar since i found it to be very subjective. Thanks--ரவி (பேச்சு) 13:53, 10 ஜூலை 2005 (UTC)
உங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை நீக்கவும். உண்மைக்குப் புறம்பானவைகளையோ, நடுநிலைப் பார்வையற்றவைகளையோ இங்கு பதிய வேண்டாம்.
எச்சரிக்கை
தொகுஇரத்தினவேலு, தயவுசெய்து உங்கள் ஆக்கங்களை கலைக்களஞ்சிய நடைக்கேற்ப தகுந்த பக்கங்களில் எழுதவும். இது குறித்து ஏற்கனவே உங்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இது போல் செயல்பட்டு வந்தால், உங்கள் பயனர் கணக்கை முடக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.--ரவி (பேச்சு) 11:55, 31 ஜூலை 2005 (UTC)
இரத்தினவேலு, ஏற்கனவே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் நீங்கள் தொடர்ந்து கலைக்களஞ்சிய நடைக்கு ஒவ்வாமல் எழுதி வருவது வருத்தமளிக்கிறது. அதுவும் தங்களது அண்மைய பதிவுகள் தலைப்புக்கும் உள்ளடக்கதிற்கும் பெரிய தொடர்பு ஏதும் இல்லாமல் இருக்கிறது. கலைக்களஞ்சிய நடை குறித்து உங்களுக்கு ஐயங்கள் இருக்கும் பட்சத்தில் தயவு செய்து ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். இனி உங்களிடமிருந்து நடுநிலையான பயனுள்ள பங்களிப்புகள் வரும் என நம்புகிறேன்--ரவி (பேச்சு) 08:27, 7 செப்டெம்பர் 2005 (UTC)
வேண்டுகோள்
தொகுபேச்சு:உரல் பக்கத்தில் தமிழக கிராமங்களில் பரிச்சயமுடைய சில தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தலைப்புகளில் உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்தி சிறந்த கட்டுரைகளை உருவாக்க இயலும் என நம்புகிறேன். அவ்வாறே செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி.--ரவி (பேச்சு) 08:08, 12 அக்டோபர் 2005 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:11, 21 சூலை 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் இரத்தினவேலு,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
உங்களுக்குத் தெரியுமா திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 27, 2012 அன்று வெளியானது. |