வாருங்கள், நரசிம்மவர்மன்10/தொகுப்பு 1!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--டெரன்ஸ் \பேச்சு 11:30, 3 செப்டெம்பர் 2007 (UTC)

வரவேற்கிறேன் தொகு

நரசிம்மவர்மன், உங்களை த்.விக்கிக்கு வரவேற்கிறேன். உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன். அருள்கூர்ந்து தொடர்ந்து பங்களியுங்கள்!--செல்வா 12:21, 7 செப்டெம்பர் 2007 (UTC)

நரசிம்மவர்மன், நீங்கள் வானியல் மற்றும் இயற்பியலில் அருமையான கட்டுரைகளைத் தருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நீங்கள் எழுதிய Albedo கட்டுரையைத் தற்காலிகமாக ஆல்பேடோ பக்கத்துக்கு மாற்றியுள்ளேன். தமிழ் விக்கி மரபின் படி தலைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். Albedoக்கு நல்ல தமிழ்ச் சொல் கண்டுபிடிக்கும் வரை தற்காலிகமாக இவ்வாறு மாற்றியுள்ளேன். ஆட்சேபனை இராது என்று நம்புகிறேன். நன்றி.--Kanags 11:06, 10 செப்டெம்பர் 2007 (UTC)

மறுமொழி தொகு

நரசிம்மவர்மன், என் பயனர் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் இட்ட செய்திகளுக்கு மறுமொழி தருகிறேன். சற்று விரிவாக எழுதவேண்டும். உங்கள் "தீந்தமிழ் நிகரி" என்னும் சொல்லாட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது :) Albedo என்பதற்கு ஒள் எகிர்வு (ஒள்ளெகிர்வு), எகிர்வு விகிதம், ஒள் எகிர்ச்சி, வெண்ணெகிர்வு என்று பலவாறு கூறலாம். --செல்வா 15:34, 11 செப்டெம்பர் 2007 (UTC)

மாழை பற்றி தொகு

மாழைக் கலவை தொகு

தங்களின் வெண்கலம் கட்டுரையில் "மாழைக் கலவை"யென்ற சொல்லாட்சி கண்டேன், அஃது alloy என்பதன் நிகர்ப்பதம் என உனர்ந்தாலும், "மாழை" என்பதன் பொருளும் அப்பதத்தின் மூலம் (etymology) பற்றியும் அறிய விழைகின்றேன்! -நரசிம்மவர்மன்10 06:36, 18 செப்டெம்பர் 2007 (UTC)

தமிழில் மழமழ என்று உள்ளது, மழமழப்பு என்று கேட்டிருப்பீர்கள். கத்தி, ஊசி போன்றவைமழுங்கி விட்டது என்று கேட்டிருப்பீர்கள். சிவபெருமான் கையில் உள்ள உருகிய உலோகக்கட்டி எரிந்து கொண்டிருப்பதைக்கொண்டு அவருக்கு மழுவேந்தி (மழு = உருகிய உலோகக்கட்டி + ஏந்தி) என்னும் பெயர் இருப்பதையும் அறிவீர்கள். மாழை என்றால் இளகக்கூடியது, (<--மழ என்பது இளமை; மழலை திருந்தாத குழந்தை பேச்சு), ஆங்கிலத்தில் malleable, ductile என்னும் பொருளது. மாழை<-->malleable என்பதன் ஒலிப்பொற்றுமையும் நோக்கத்தக்கது. மழுங்குதல் என்பது இந்த மழ என்னும் சொல்லின் அடிப்படையில் கூர் இளகி விட்டது (மழுங்கி விட்டது) என்னும் பொருளில் ஆளப்படுவது. மாழை என்பது தட்டி கொட்டி நீட்டி வளைக்க வல்லதால் அதற்கு மாழை என்று பெயர் வந்தது. மழமழப்பு ஏற்றவல்லதாலும் மாழை. பளபளப்பு ஏற்ற வல்லதாலும் மாழை. (மாழை என்றால் பளபளப்பு என்றும் பொருள் உண்டு. பெண்களின் கண்களை மாழை என்று சொல்வதுண்டு; மான்களின் கண்களையும் மாழை என்று சொல்வதுண்டு.). சிறப்பாக தங்கம், வெள்ளிக்கு மாழை என்று பொருள் உண்டு (பளபளப்பாக இருப்பதால்; மாழை என்றால் அழகு என்று பொருள் ஏற்பட்டது). பொன் என்பதும் பொதுவாக ஒரு உலோகம்தான், தங்கம் என்னும் பொருள் சிறப்பாக ஏற்பட்டது. இரும்பை கரும்பொன் என்றும் வெள்ளியை வெண்பொன் என்றும் சொல்வதைப் பார்க்கலாம். Metal என்பதற்கு பொன் என்பதே அருமையான சொல். பொன், மாழை என்பன உலோகம் என்பதைக் குறிக்கும் பொதுச்சொற்கள். --செல்வா 14:32, 18 செப்டெம்பர் 2007 (UTC)

பாராட்டுகள்! + ஒரு சிறு வேண்டுகோள்! தொகு

நரசிம்மவர்மன், நீங்கள் மிகவும் அழகாக தமிழ்விக்கிக்கு ஆக்கம் அளித்து வருகின்றீர்கள். அருள்கூர்ந்து தொடர்ந்து பணியாற்றுங்கள் என வேண்டிக்கொள்கிறேன். ஒரேயொரு சிறு வேண்டுகோள். என்னைக் குறிப்பிடும்பொழுதாவது, "உயர்திரு" என்று ஏதும் அடைமொழி இல்லாமல், செல்வா என்றே அழையுங்கள், குறிப்பிடுங்கள். இங்கே நம் விக்கியில் அப்படித்தான் வழக்கம். அடுத்து, உங்கள் கலைச்சொல்லாக்கம் அருமையாக உள்ளது. ஒருசிலவற்றைப் பற்றி நான் கூறும் சில கருத்துக்களை, வளர்முகக் கண்ணோட்டத்துடன் எதிர்நோக்குவீர்கள் என நம்புகிறேன். Meridian என்பதற்கு நீங்கள் நடுவரை என மொழிபெயர்த்துள்ளீர்கள். நல்ல ஆக்கம், ஆனால் அது நெடுவரை என்று இருத்தல் வேண்டும். (கிடைவரை, நெடுவரை). நடுவரை எனப்து நடுக் கிடவரையைக் குறிக்கும் சுருக்க மொழி. கிடைவரையில், நடுவென்று சொல்ல ஒன்றுண்டு, ஏனெனில் அதுவே மிகப்பெரியதும், புமியை இரண்டாக குழப்பம் இன்றி பிரிக்கப் பயன்படும் ஒரு கற்பனைக் கோடும் ஆகும். ஆனால் நெடுவரைகள் எல்லாம் ஏறத்தாழ ஒரே அளவுடையவை. மெரிடியன் எனச்சொல்லப்படும் ஒரு நெடுவரைக்கோடு, கிரீன்விச் வழியாகச்செல்லும் அது முதல் நெடுவரை எனலாம். எனவே மெரிடியன் என்பதை முதல்நெடுவரை எனலாம். சுழற்சிக்காலம் பற்றி எழுதி வருகின்றீர்கள், .கோண உந்தம் பற்றி ஒரு கட்டுரை முன்னர் சிறிதாகத் தொடங்கினேன், அதனையும் பாருங்கள் இங்கே.--செல்வா 14:53, 20 செப்டெம்பர் 2007 (UTC)

நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் இட்ட கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் பக்கத்தில் உள்ள அருமையான குறள் கண்டு மிக மகிழ்ந்தேன். விக்கிப் பணிக்கு மிகவும் பொருத்தமான ஒன்றும் கூட!--செல்வா 14:50, 21 செப்டெம்பர் 2007 (UTC)

உங்கள் பணி வளரட்டும் தொகு

நரசிம்மவர்மன், தமிழ் விக்கியில் நீங்கள் எழுதும் கட்டுரைகள் சிறப்பாக இருப்பது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் ஆளும் தமிழ்க் கலைச்சொற்களும் நன்றாக உள்ளன. உங்கள் வரவினால் தமிழ் விக்கிப்பீடியா மேலும் சிறப்புறும் என நம்புகிறேன். நன்றி. Mayooranathan 18:03, 21 செப்டெம்பர் 2007 (UTC)

நரசிம்மன் மேலே மயூரநாதனின் கருத்தே என்னுடையதும். தங்களின் கட்டுரைகளைப் படித்து வருகின்றேன். நான் +2 (AL) படிக்கும் போது இயற்பியலில் (பௌதீகவியல்) மிகவும் ஆர்வமாகப் படித்தேன் இப்போது தமிழ் விக்கிப்பீடியா ஊடாக அந்த சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்ததையிட்டுப் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.--Umapathy (உமாபதி) 05:45, 25 செப்டெம்பர் 2007 (UTC)

கிண்ணம்-கோப்பை தொகு

கோப்பை ஈழத்திலும் பயன்படும் சொல்தான். ஆனால் plate போன்றவையும் கோப்பை எனப்படுகின்றன. கிண்ணம் நல்ல தமிழ்ச் சொல்தானே. அது தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லையா? கோபி 05:55, 25 செப்டெம்பர் 2007 (UTC)

:-) இருக்கின்றது, ஆனால் அஃது சிறிய அளவிலான பாத்திரத்தை (கோப்பையை) குறிக்கும். மேலும், இங்கே வழக்கில் "உலகக்கோப்பை" என்றுதான் மொழிபெயர்கிறார்கள்
-நரசிம்மவர்மன்10 06:07, 25 செப்டெம்பர் 2007 (UTC)

வணக்கம் தொகு

வணக்கம் நரசிம்மவர்மன்10. உங்கள் பங்களிப்புகள் நன்று. நீங்கள் தமிழ் வழியத்தில் பயின்றவரா என்றும் (ஆம் என்றால் எது வரை என்றும்) அறிந்து கொள்ளலாமா?--Ravishankar 11:30, 26 செப்டெம்பர் 2007 (UTC)

உங்கள் உடன்மொழிக்கு நன்றி நரசிம்மவர்மன்10. த.இ.பல்கலையில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று விரிவாகச் சொன்னால், திரைப்பிடிப்புகளை அனுப்பி வைத்தால் என்னால் உதவ முடியும். இங்கு உள்ள மென்பொருள்கள், எழுத்துருக்களை நிறுவிக் கொண்டிருக்கிறீர்கள் தானே?--Ravishankar 09:02, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

நல்லது. http://www.textbooksonline.tn.nic.in/ தளத்தையும் பயன்படுத்தலாம்.--Ravishankar 14:26, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

கலைச்சொல் மற்றும் மறுமொழி பற்றி தொகு

நரசிம்மவர்மன், என் மறுமொழிகளை உங்கள் பயனர் பக்கத்தில்(/லும்) இடுகின்றேன். உங்கள் உடன்மொழி என்னும் சொல்லாட்சி கண்டு மகிழ்ந்தேன் (உடன்படு, உடன்பாட்டு மொழி). ஆனால் மறு மொழி என்பது மறுப்பு தெரிவிக்கும் மொழி இல்லை என்பது நீங்கள் அறிவீர்கள் என்றாலும், சிலருக்கு ஏன் மறுமொழி என்று கூறுகிறார்கள் என்பது தெரியாமல் இருக்கலாம். மறுபுறம் என்றால் எதிர்ப்புறம். மறுகரை என்றால் எதிர்க்கரை (அக்கரை), மறுகால் என்றால் அடுத்த கால், மறுபடியும் என்றால் இன்னொருமுறையும். மறுமடியும் மறுபடியும் கூறுவதால் இறைவனை வாழ்த்தும் மந்திர நூல்களுக்கு மறை (மறைந்த உட்பொருள் உள்ளது என்பது பிரிதொரு கோணத்தில் உள்ள பொருள் - அதாவது மற்றொரு பொருள் ) என்றும் பெயர். ஒரு நாணையத்தின் மறுபக்கத்தை (மாற்றுப் பக்கத்தை, மறுதலையான பக்கத்தை) என்று கூறும் பொழுது மறு என்பது இன்னொரு அல்லது எதிர்ப்பக்கம் என்று பொருள் படுகின்றது. பேச்சு வழக்கிலும் "உனக்கு மறுதலயா ஒருவன் வருவான்" என்றால் உனக்கு ஈடாக (திறமை ஈடு) ஒருவன் வருவான் என்று பொருள். மறுதலை என்பதற்கு ஈடு என்றும் பொருள் (ஒருவருடைய கருத்துக்கு மறுமொழியாக இன்னொரு கருத்து சொல்வதற்கும் ஈடு என்று கூறும் வழக்கு உண்டு. வைணவ சம்பிரதாயத்திலே திருவாய்மொழிக்கு ஈடு என்னும் ஒரு நூல் உண்டு "ஈடு முப்பத்தாறாயிரம்"". விரித்தால் வளரும்!). எனவே சுருக்கமாக எதிர்ப்புறத்தே இருந்து வரும் மொழி மறுமொழி. மறுமொழி வேறு மறுப்பு அல்லது மறுப்புமொழி வேறு. --செல்வா 16:35, 1 அக்டோபர் 2007 (UTC) கலைச்சொல் பற்றி உங்கள் கருத்துக்களை நானும் வரவேற்கிறேன்.--செல்வா 16:35, 1 அக்டோபர் 2007 (UTC)நான் உடன்மொழி தந்தாலும் உடனே தருவது பலநேரங்களில் நிகழ்வதில்லை.--செல்வா 16:35, 1 அக்டோபர் 2007 (UTC)Reply

redirect தொகு

இது வரை தமிழ் விக்கிப்பீடியாவில், ஒரு கொள்கை நடைமுறையாக, torque, force போன்ற ஆங்கிலத் தலைப்புப் பக்கங்களை வழிமாற்றுக்காகக் கூட உருவாக்குவதில்லை..அகர வரிசை பட்டியலில் தேடும்போது இந்த ஆங்கிலப் பக்கங்கள் தேவையில்லாமல் முதலில் வருவது, தேவையற்று ஒட்டு மொத்தப் பக்கங்களை உயர்த்தி தமிழ் விக்கியின் தரப் புள்ளிகளைக் குறைப்பது, துப்புரவுப் பணிக்கு சிரமமளிப்பது ஆகியவை சில காரணங்கள். இந நடைமுறையில் மாற்றம் தேவை எனக் கருதினால் ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். நன்றி. --Ravishankar 06:15, 2 அக்டோபர் 2007 (UTC)Reply

நான் force என்று நடத்திய தேடலில் "விசை" என்ற கட்டுரை இருந்தும் அஃது தேடல் முடிவுகள் பக்கத்தில் முதலில் இடம்பெறவில்லை, இதனால் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில் பொருத்தமான ஒரு கட்டுரை இருந்தும் அஃது அறியப்படாமல் மறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதன் பொருட்டே அவ்வாறு வழிமாற்று பக்கத்தை உருவாக்கினேன்! இப்பிரச்சனைக்கு வேறு நல்ல தீர்வு தோன்றுமாயின் ஆலமரத்தடியில் பகர்கிறேன் :-)
-நரசிம்மவர்மன்10 08:05, 2 அக்டோபர் 2007 (UTC)Reply

இந்தக் காரணமாகத் தான் இருக்கும்னு நினைத்தேன்..முன்பு தளத் தேடல் நல்லா வேலை செஞ்சிச்சு. இப்ப தற்காலிக கோளாறு தான்..மீடியாவிக்கி தளத்தில் சொல்லித் தீர்க்கப் பார்ப்போம்..அது தான் முழுமையான தீர்வு. த.வி-யில் இருக்கிற 1000க்கணக்கான கட்டுரைகளுக்கும் இப்படி வழிமாற்று உருவாக்குவது ஒரு தற்காலிகத் தீர்வாக இருப்பினும், பின்னர் அவற்றை அழித்துத் துப்புரவாக்குவது சிரமம். அதனால், தற்போதைக்கு இந்தத் தற்காலிகத் தீர்வை நிறுத்தி வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்..--Ravishankar 09:07, 2 அக்டோபர் 2007 (UTC)Reply

நிச்சயம் ரவி! விக்கிப்பீடியால குப்பைகூலம் சேர்பது என் நோக்கம் இல்ல! பிரச்சனை தீரும்வரை பொருத்திருக்கிறேன் :-)
-நரசிம்மவர்மன்10 09:17, 2 அக்டோபர் 2007 (UTC)Reply

பணிப்பொறுப்புகள் தொகு

நரசிம்மவர்மன், உங்கள் குறிப்புக்கு நன்றி. பணிப்பொறுப்புகள் கூடுவதும் மாறுவதும் இயல்பு. பணியிலும் வாழ்க்கையிலும் நல்வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்! --செல்வா 14:56, 13 அக்டோபர் 2007 (UTC)Reply

மீண்டும் வருக வருக! தொகு

நரசிம்மவர்மன், உங்களை மீண்டும் தமிழ் விக்கிக்கு வருக வருக என்று வரவேற்பதில் மகிழ்கிறேன். --செல்வா 17:43, 18 ஏப்ரல் 2008 (UTC)

கருத்துக் வேண்டுதல் தொகு

வணக்கம் நரசிம்மவர்மன்:

உங்களைப் போன்ற துறைசார் வல்லுனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி.


ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 02:47, 19 டிசம்பர் 2009 (UTC)

மறுமொழி தொகு

நற்கீரரே, வணக்கம், நன்றி! நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்கியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். மெல்லதான் நான் வேகமெடுக்க வெண்டும், அதனின் ஆண்டறிக்கைக்கு பயனுள்ள கருத்துக்களை அளிக்க இயலுமா எனத்தெரியவில்லை, என்னால் முடிந்ததை முயல்கிறேன். பொறுத்தருள்க... --நரசிம்மவர்மன்10 05:43, 19 டிசம்பர் 2009 (UTC)

நன்றி. நரசிம்மவர்மன். உங்களின் பொதுவான கருத்துக்களை முன்வைக்கலாம். --Natkeeran 15:34, 20 டிசம்பர் 2009 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இயற்பியல்

துணைத் துறைகளை சரி பாத்து, முழுமைப்படுத்தவும். நன்றி. --Natkeeran 17:27, 3 ஜனவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல் தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:49, 18 பெப்ரவரி 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:03, 21 சூலை 2011 (UTC)Reply

விரைவில்... தொகு

கூடிய விரைவில் நான் என் பங்களிப்பைத் தரத் தொடங்குவேன்... --நரசிம்மவர்மன்10 03:59, 8 செப்டெம்பர் 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் நரசிம்மவர்மன்10,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Return to the user page of "நரசிம்மவர்மன்10/தொகுப்பு 1".