வாருங்கள்!

வாருங்கள், Itzkavin, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- மாதவன்  ( பேச்சு ) 16:10, 20 சனவரி 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் தொகு

 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   பாலாஜீ,   மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 தொகு

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு தொகு

 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம் தொகு

 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   மாதவன்,   உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2017 தொகு

 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:21, 9 திசம்பர் 2016 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்! தொகு

குறுக்கு வழி:
WP:TIGER2
 

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)Reply

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:10, 25 நவம்பர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி தொகு

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:59, 4 சனவரி 2020 (UTC)Reply

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:40, 17 சனவரி 2020 (UTC)Reply

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients தொகு

 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021) தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

வேங்கைத்திட்டப் பயிற்சி 2022 தொகு

வணக்கம்.

இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --உழவன் (உரை) 11:18, 9 சூன் 2022 (UTC)Reply

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Itzkavin&oldid=3605401" இலிருந்து மீள்விக்கப்பட்டது