பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 3
|
ஆங்கிலச் சொல்லிடல்
தொகுஎனது கட்டுரைகளின் தலைப்புப் பத்தியில் (காட்டாக,மேற்கு அரைக்கோளம்) ஆங்கிலச் சொல்லை அடைப்புக்குறிக்குள் இடுவதைத் தங்கள் தொகுத்தலில் காண்கிறேன். குழப்பம் விளைவிக்கும் பிறநாட்டுப் பெயர்ச்சொற்களில் இதன் தேவையை உணர்கிறேன்.இக்கட்டுரைகளில் ஏன் தேவை என்ற உங்கள் வழிகாட்டலை வேண்டுகிறேன். --மணியன் 06:32, 15 அக்டோபர் 2009 (UTC)
விக்கிமேற்கோள் : கவனம் தேவை
தொகுhttp://ta.wikiquote.org/wiki/மேட்ரிக்ஸ்
நான் விக்கிமேற்கோளில் கட்டுரைகளைத் தொடங்குதல் மற்றும் மேம்படுத்தும் பணியில் உள்ளேன்.எனக்கு உதவுவீர்களா? Vatsan34 12:42, 15 அக்டோபர் 2009 (UTC)
ஆங்கில விக்கியிலிருந்து உள்ளிடல்களைச் சேர்த்தல்
தொகுகனகு! நீங்கள் கூறுவது சரி. ஆங்கில விக்கியிலிருந்தோ (அல்லது) பிற விக்கிகளிலிருந்தோ கருத்துகளை இடும்போது அவற்றை மேற்கோள்கள் பட்டியலில் இட வேண்டிய அவசியமில்லைதான். கருத்துக்கு நன்றி. விக்கியிலும் விக்கி செய்திகளிலும் உங்கள் அயராத, தளராத பங்களிப்பு, தரக்கண்காணிப்பு என்னை வியப்பிலாழ்த்துகிறது. தொடர்ந்து செய்யுங்கள். --பரிதிமதி 12:48, 25 அக்டோபர் 2009 (IST)
வாழ்த்துக்களுக்கு நன்றி
தொகுகனகு! உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! கண்டிப்பாக சிறப்பாகவும் முனைப்பாகவும் செயல்படுவதற்கு நிருவாக அணுக்கம் உதவும். மீண்டும் நன்றி! --பரிதிமதி 10:58, 7 நவம்பர் 2009 (இந்திய நேரம்) கனகு,உங்கள் வாழ்த்துகளுக்கு நானும் நன்றி கூறுகிறேன்.உங்களைப் போன்றவர்கள் உடன் வருகையில் புதிய பொறுப்பு முனைப்பாகச் செயல்பட உதவும்.நன்றிகள்!!--மணியன் 05:56, 7 நவம்பர் 2009 (UTC)
நன்றி
தொகுவணக்கம் கனகு ஐயா, தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஔவையார் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில், ஆதிமந்தியார் என்ற பெயருக்கு உள்ளிணைப்புக் கொடுக்கப் பல தடவை முயன்றும் என்னால் முடியவில்லை. மென்பொருள் கோளாறுதான் காரணம் என்று கருதுகிறேன். இதை எவ்வாறு திருத்துவது என்று தயவு செய்து கூறவும். நன்றி
திரைப்படப் பட்டியல்
தொகுநல்ல வேளை,நீங்கள் சொல்லியதால் எனது வேலைப்பளு குறைந்தது. நன்றி! -- Vatsan34 09:54, 24 நவம்பர் 2009 (UTC)
- சரி! அதில் ஏதேனும் abuse/defamation இருப்பின்?? -- Vatsan34 10:36, 24 நவம்பர் 2009 (UTC)
- நாளிதழ் மற்றும் புத்தகங்களிலிருந்து ஸ்கேன் செய்து இங்கே புகைப்படங்களைப் பதிவேற்றலாமா? அது எந்த copyright கீழ் வரும்?? -- Vatsan34 09:13, 25 நவம்பர் 2009 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுகனகு, முன்னணியில் நின்று நீங்கள் எடுத்த நடவடிக்கைகளினால் விக்கிச் செய்திகளும், விக்கி மேற்கோளும் தப்பிப் பிழைத்துள்ளன. உங்களுக்கும் இதற்காக உழைத்த பிற பயனர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 04:28, 4 டிசம்பர் 2009 (UTC)
பெருமைக்குரிய பேரரசர் அக்பர்
தொகு"பெருமைக்குரிய பேரரசர் அக்பர்" என்னும் வழிமாற்றுப் பக்கத்தை நீங்கள் "பேரரசர் அக்பர்" பக்கத்துக்கு நகர்த்தியபோது "பெருமைக்குரிய பேரரசர் அக்பர்" கட்டுரையை எழுதியவர் பற்றிய தகவல்கள் வரலாற்றுப் பக்கத்தில் இல்லாது போய்விட்டன. அதனை மீள்வித்தால் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இப்போதுள்ள "பேரரசர் அக்பர்"கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தில் பெரும் பகுதி அப்பயனர் எழுதியவையே. மயூரநாதன் 19:08, 5 டிசம்பர் 2009 (UTC)
- கனகு, நீங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் விட்டிருந்த விளக்கத்துக்கு நன்றி. பக்கங்களை இணைக்கும்போது இரண்டு வரலாறுகளையும் இணைப்பது எப்படி? அப்படி இணைக்க முடியாது என்று நினைத்திருந்தேன். ஆங்கில விக்கியில் கட்டுரைகளை இணைப்பதற்கான வழிகாட்டல்களில் இது பற்றிய தகவல்கள் இருப்பதாகத் தெரியவில்லையே. கூகிள் வழி மொழிபெயர்க்கப்பட்ட இன்னும் சில கட்டுரைகளை முன்னைய கட்டுரைகளுடன் இணைக்க வேண்டியிருக்கிறது. மயூரநாதன் 15:35, 6 டிசம்பர் 2009 (UTC)
விக்கிமூலம்
தொகுவிக்கி மூலத்தில் நீக்க வேண்டிய பக்கங்களை எனக்கு முன் கோபி விரைந்து அழித்து விட்டிருக்கிறார் :) !--ரவி 06:59, 6 டிசம்பர் 2009 (UTC)
மன்னிக்கவும்
தொகுமார்வெல் காமிக்ஸ் பக்கத்தை நான் தான் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். துரதிருஷ்டவசமாக இங்கே மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால்,அப்படியே சேமித்து விட்டேன். பின் இப்பொழுது தான் வந்து பார்க்கிறேன். நான் அதை மீண்டும் ஆரம்பிக்கலாமா? பாதியில் விட்டுச் சென்றதற்கு மன்னிக்கவும்!-- Vatsan34 17:17, 22 டிசம்பர் 2009 (UTC)
- மீட்டெடுத்ததுக்கு நன்றி. தமிழாக்கம் செய்தாயிற்று. மீண்டும் நன்றி. :) -- Vatsan34 18:26, 23 டிசம்பர் 2009 (UTC)
2010 செயல்திட்டம்
தொகுவணக்கம் கனகு:
உங்களின் பங்களிப்பு பல ஊடகவியலாளர்களின் வேலையை இலகுவாக்கி உள்ளது. அண்மையில் ஒரு வானொலிக்குச் சென்று இருந்த போது அவர்கள் பல நபர்கள்/நிகழ்வுகள் பற்றித் த.வி இருந்து செய்திகள் பெறுவது அறிந்தேன். பொதுவாக பெரும்பாலனவை நீங்கள் ஆக்கியவைதான். எப்படி உடனே விக்கியில் வருகிறது என்பதுதான் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
- விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
- விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
2010 செயல்திட்டம் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் த.வி மேலும் அறிமுகப் படுத்துவது பற்றி. பிற விக்கித் திட்டங்கள் பற்றியும் கருத்துக்கள் கூறினால் நன்றி. நன்றி. --Natkeeran 03:04, 26 டிசம்பர் 2009 (UTC)
உயிரியலாளர்கள் -->உயிரியலாளர்
தொகுஉங்களின் தானியங்கி 1.பகுப்பு:அமெரிக்க உயிரியலாளர்கள், 2.பகுப்பு:பிரெஞ்சு உயிரியலாளர்கள் என்று பகுத்திருந்தது. மயூரனாதன் ஆரம்பித்த பகுப்பு:உயிரியலாளர் என்பதன் துணைப் பகுப்புகளாகும். தமிழ் இலக்கணப்படி, உயிரியலாளர்கள் என்ற அந்த இரு பகுப்புகளும், உயிரியலாளர் என்று அமைப்பதே சிறப்பு. அதற்கு உரிய காரணத்தை, பகுப்பு_பேச்சு:அமெரிக்க_உயிரியலாளர்கள் பகுதியில் தெரிவித்துள்ளேன். அதன்படி பகுப்பு:அறிவியலாளர்கள் என்பதனையும், அதன் துணைப்பகுப்புகளையும், உங்கள் தானியங்கி மாற்றினால் சிறப்பாக இருக்கும்.த* உழவன் 14:39, 29 டிசம்பர் 2009 (UTC)
நீக்கவும்
தொகுநான் தொடங்கிய நாமகிரிப் பேட்டை பிரிவு என்ற பக்கத்தையும் நாமகிரிப் பேட்டை என்ற பக்கத்தையும் நீக்க வேண்டுகிறேன் . நாமகிரிப்பேட்டை என்பது சரியானது . - இராஜ்குமார் 12:55, 31 டிசம்பர் 2009 (Riyadh).
ஆடி ( இயற்பியல் )
தொகுஇயற்பியலில் ஆடி என்றால் என்ன ? - இராஜ்குமார் 12:55, 31 டிசம்பர் 2009 (Riyadh).
பகவத் கீதை
தொகுபகவத் கீதை என்ற கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் யாரோ விளம்பரம் செய்ததாகத் தெரிகிறது அதைக் கவனிக்கவும் . - இராஜ்குமார் 12.51 Jan 6 2010 riyadh
இந்திய நீள்காது முள்ளெலி
தொகுஇந்திய நீள்காது முள்ளெலி என்பதில் நீங்கள் அண்மையில் செய்த சிறு மாற்றங்களை அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றி விடுகிறேன்.உயிரியலில் எனக்கு ஆர்வமுண்டு. அதைவிடத் தமிழில் அவ்வப்போது நடைபெறும் அறிவியல் மாற்றங்களை இல்லையே என்ற ஏக்கமும் உண்டு. அதன்படி அமைத்த சில வாழ்விட வரிகள் ஆங்கிலக்கட்டுரையில் இல்லை. ஆனால், இதனை மொழிபெயர்த்து எழுதி இருந்தேன்.
இதற்குரிய தொடுப்பும் மேற்கோள் பகுதியில் கொடுத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அறிவியலாளர் கண்டறிந்த உண்மை. (Typically found in the intertidal zone at the water's edge at a mean distance from sea level of -15 meters (-48 feet).[1])
நீங்கள் இதன் மொழிபெயர்ப்பை முற்றிலும் நீககி விட்டீர். ஏன் என்ற காரணம் எனக்குப் புரியவில்லை. அதற்குரிய உரையாடல் பக்கத்திலும் இல்லை. ஆங்கில விக்கியில் இல்லாதது தமிழில் இருக்கக் கூடாது. இங்கு வந்துள்ள இப்புதியப் பங்களிப்பாளனுக்கு நீங்கள் தரும் விளக்கம் இன்றியமையாததாகும். த* உழவன் 02:29, 8 ஜனவரி 2010 (UTC)
- மன்னிக்கவும்.2மணிநேர மின் தடைக்குப் பிறகு இப்பொழுதே வரமுடிந்தது. அவசரத்தால் (நீக்கியதுபற்றி) உங்களிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். வரலாற்றுப் பகுதியைச் சரிவரப் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறேன். விக்கிமூலத்தில் பாரதியாரின் இந்தியா இதழின் கட்டுரைகளைச்(1908) சேர்க்க எண்ணியுள்ளேன். அங்கு நாளை சென்றால், நான் பதிவு செய்த முறை பற்றிக் கூறவும். நன்றி.த* உழவன் 04:47, 8 ஜனவரி 2010 (UTC)
யோகசுவாமிகள்
தொகுஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி சிறிதரன்.
யோகசுவாமிகள் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ அடியவர்கள் அவரின் சீடராக இருந்தனர். ஆனால் அவர்களில் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றித் துறவுச்சீடராகப் பரிணமித்தவர்கள் மார்க்கண்டு சுவாமி, சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்பவர்களே. நீங்கள் குறிப்பிட்ட ஏனைய வெளிநாட்டவர்கள் அவரிடம் அடியவர்களாக இருந்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் யாவரும் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றியவர்கள் அல்லர். தற்காலத்தில் இவர்களும், இவர்கள் வழி வந்தோரும் மேற்கொள்ளும் ஆடம்பரமான செயற்பாடுகள் எதனையும் சுவாமிகள் குறிப்பிடவில்லை. ”நீங்களும் சுவாமி பண்ணவேண்டாம், மற்றவர்களையும் சுவாமி பண்ண விடவேண்டாம்” என்பது சுவாமிகளின் வாக்கு. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு தடவையேனும் இவ்வாறான ஆடம்பரத்திற்கு அனுமதி தந்ததில்லை. மேலும் தற்காலத்தில் இவர்களின் ஆச்சிரமங்களில் தங்கள் பாதத்திற்குப் பாதபூசை செய்யும் வழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர். சுவாமிகள், திருவடி வழிபாட்டினை ஊக்குவித்தாரேயன்றி மனிதரது பாதத்திற்குப் பூசை செய்யும் ஆடம்பரத்தினை அன்று. சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் இவர்களைப்பற்றி ”இவர்கள் சும்மா இருக்கமுடியாமல், சும்மா இரு என்று பச்சை குத்திக் கொண்டு திரிபவர்கள்” என்று பேசியுள்ளார். (ஜேர்மன் சுவாமி என்பவர் கையில் அவ்வாறு பச்சை குத்தியிருந்தார்). இவ்வாறு எத்தனையோ விடயங்களைக் கூறிக்கொண்டு செல்லலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டது போன்று பலரும் சுப்பிரமணிய சுவாமி போன்றோரைச் சுவாமிகளின் சீடர்கள் என்றே எழுதுகின்றனர். அவ்வளவு ஏன், இலங்கை சமயப் பாடப்புத்தகத்தில் கூட, இவர்களையே சீடராகக் காட்டியுள்ளனர். இவ்வெழுத்தாளர்கள் அனைவரும் சுவாமிகளைச் சித்தர் வரிசையிலும் சேர்த்துள்ளனர். சுவாமிகளைச் 'சித்தர்' என்னும் நிலைக்கும் அப்பால் சென்று, ஒரு 'ஞானி' என்னும் நிலையினை அடைந்தவர் என அடையாளம்காண முடியாதவர்கள் இந்தப் புத்தகக்காரர்கள்! ஆத்மஜோதி அவர்கள்தாம், சுவாமிகளை முதன்முதலில் சித்தராக வகைப்படுத்தியவர். ரமண மகரிசிகளின் உபதேசங்கள் பற்றி எத்தனையோ புத்தகங்கள் எழுந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். அவற்றை அவருடன் இருந்து, அவரின் உண்மை நிலையினை நன்கறிந்து, அவர் காட்டிய வழியில் சென்றவர்களே எழுதியுள்ளனர். இதனாலேயே ரமண மகரிசியை உலகம் ஒரு தலைசிறந்த ஞானியாக மதிக்கிறது. ஆனால், யோகசுவாமிகளைப் பற்றி எழுதிய பலரும், அவர் ரமண மகரிசியைப் போன்று ஒரு ஞானி என்பதை மதிக்கத் தவறினர்; தங்கள் சுயலாபம் கருதி அவரிடம் சென்றனர்; ஈற்றில் அவரை ஒரு சித்தராகக் கண்டதோடு, அவர் மறைந்ததன்பின், ஆடம்பரக்காரர்களின் பின்சென்று ஏமாந்து திரிகின்றனர். தற்காலத்தில் பலர் சுவாமிகளைத் தங்களது குரு என்று கூறுவதினூடாகத் தங்களுக்கு ஓர் அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
ஆனால் மார்க்கண்டு சுவாமி, சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்பவர்கள், தாள மேளமில்லாத சீடர்கள். அவர்களைப் பற்றி இவ்வுலகம் அறியாது. ஏனெனில் இந்தப்பகட்டு ஆடல்கள் எவற்றையும் அவர்கள் காட்ட வில்லை. சந்த சுவாமி, தன்னுடைய நாட்டிற்குச் சென்ற பின்னர்ச் சாதாரண மக்கள் உடையிலேயே இருந்தாரன்றி இவ்வாறான ஆடம்பரங்கள் எவற்றையும் இங்கிலாந்தில் காட்டவில்லை. 'குருபரம்பரை' ஒன்று உருவாவது, அக்குரு காட்டிய வழியில் செல்பவர்களாலேயே அன்றித் திசைமாறிச் செல்பவர்களால் அல்ல.
நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன், நீங்கள் யோகசுவாமியினை வரலாற்று நூலினூடாகச் சென்று அவரைக் காண்டற்குப் பதிலாக அவருடைய உபதேசங்களை நன்கு கற்று உணருங்கள். ஒரு ஞானியினை, வாழ்க்கைக் குறிப்பினூடாகவன்றி அவருடைய உபதேசங்களினூடாகவே அறியலாம். குறிப்பாக நற்சிந்தனை, அருள்மொழிகள் (Words of our master) என்பவற்றை நன்கு கற்று உணருங்கள். இதன்பின் நீங்களே அவருடைய துறவுச்சீடர் யாவர் என்பதை நன்கு உணரலாம். மேலும், சுவாமிகளால் உருவாக்கப்பட்ட சிவதொண்டன் நிலையம், சிவதொண்டன் சபை என்பவற்றால் வெளியிடப்படும் பிரசுரங்களைக் கற்பது நல்லது. சிவதொண்டன் சபையும், சிவதொண்டன் நிலையங்களும் ஒருபோதும் இவர்களைச் சுவாமிகளின் சீடராகக் குறிப்பிடுவதில்லை.
(1980)எண்பதுகளுக்கு முற்பட்ட காலத்தில், கவாய் ஆதீனத்தில் இருந்த மாஸ்ரர் குமார் என்னும் ஆங்கிலேயரால் எழுதப்பட்ட கடிதத்தின் scanned image நீங்கள் விரும்பும் பட்சத்தில் அனுப்பி வைக்கலாம். சுவாமிகளின் சிந்தனைகளையும், அவரின் பின்வந்த குருபரம்பரையினையும் உண்மையாக இணைய உலகத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மீண்டும் நான் அப்பகுதிகளை நீக்குகின்றேன். தயவு செய்து நீங்கள் சுவாமிகளின் உபதேசங்களைக் கற்றபின் இதனைப் பாருங்கள். நன்றி --Santharooban 04:25, 13 ஜனவரி 2010 (UTC)
நன்றிகள்
தொகுகனகு, உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்களும், பிற தமிழ் விக்கிப்பீடியர்களும் தரும் ஊக்கமும் ஒத்துழைப்பும் தான் எனது உந்துசக்தி. உங்கள் எல்லோருடனும் சேர்ந்து தமிழில் நல்ல கலைக்களஞ்சியம் உருவாக நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மயூரநாதன் 15:33, 13 ஜனவரி 2010 (UTC)
யோகசுவாமிகள்
தொகுதங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஆனால் நான் குறிப்பிட்ட விடயங்களை நீங்கள் பூரணமாக விளங்கிக் கொள்ளவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. அவர்களைச் சீடர்களாக குறிப்பிடுவதோ, குறிப்பிடாமல் விடுவதோ என்னுடைய விருப்பமன்று. ஒரு ஞானியின் சீடர் என்பவர், அவர் காட்டிய வழியில் செல்பவரேயன்றி வேறலர் என்பதுவே நான் குறிப்பிட்டது. மாறாக, இவர்களைச் சீடர்களாகக் கூறுதல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவன்று. மேலும், அவர்களது வாழ்க்கைமுறை எனக்குப் பிடிக்கவில்லை என்றும் நான் உங்களுக்குக் குறிப்பிடவில்லை. அவர்களது வாழ்க்கை முறை, சுவாமி காட்டிய வழியில் இல்லை என்பதே நான் குறிப்பிட்டது. பூரண ஞானி ஒருவரின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது என்பதனை ஏனைய ஞானியரின் (உ-ம் ரமண மகரிஷி) வாழ்க்கை முறையில் இருந்து அறியலாம். நீங்கள் கேட்டது போன்று அக்கடிதத்தினை அனுப்பி வைக்கின்றேன். --Santharooban 08:18, 19 ஜனவரி 2010 (UTC)
கடிதங்கள் சில
தொகுசிறிதரன் நீங்கள் கேட்டது போன்று ஒரு சில கடிதங்களை மாத்திரம் இங்குப் பதிவுசெய்கிறேன்.
--Santharooban 05:24, 22 ஜனவரி 2010 (UTC)
பதிப்புரிமை என்பது, இக்கடிதம் எழுதியவர் கோரவேண்டியது; அல்லது, கடிதத்தினைப் பெற்றவர் கோரவேண்டியது. உண்மையில் இக்கடிதம் எழுதியவரது நோக்கம், பதிப்புரிமை கொண்டு இதனை வெளியிடுவதைத் தடுத்து வைப்பதன்று. பலபடக் கூறுவானேன், எழுதியவரது நோக்கம் இதனைப் பலரும் அறிவதற்கு உதவியாக வெளியிடுவதே. அதனை நன்கு வாசிப்பீர்களாயின் இது நன்கு புலனாகும். கடிதத்தினைப் பெற்றவர் பதிப்புரிமை பற்றி எண்ணியிருப்பின் இதனை இங்குப் பதிக்க அனுமதியளித்திருக்க மாட்டார். பதிப்புரிமையுடன் சம்பந்தப்பட்ட இவ்விருவரும் கேளாதவிடத்து, வேறு யாருளர் இதைக் கேட்பதற்கு?. தாங்கள் நீக்கியதன் நோக்கம், பதிப்புரிமை என்பது இல்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.
எது எப்படியோ, நீங்கள் அக்கடிதத்தினை வாசித்தால் போதுமானது. --Santharooban 10:25, 25 ஜனவரி 2010 (UTC)
நன்றி
தொகுசிறீதரன் கனகு, என் பேச்சுப் பக்கத்தின் ஆவணத் தொகுப்பைச் சரிசெய்தமைக்கு மிக்க நன்றி. ஒரு மாதத்துக்கும் மேலான என் இந்தியப் பயணம் நிறைவுற்று, இப்பொழுதுதான் மீண்டும் விக்கிப் பணியைத் தொடர்கிறேன். --செல்வா 21:43, 23 ஜனவரி 2010 (UTC)
ஈழை நோய்
தொகுநீங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்ட பின்னர்தான் 'மூச்சுத்தடை நோய்' என்ற கட்டுரை இருப்பதையே பார்த்தேன் :(. தற்போது, அந்தக் கட்டுரையை ஈழை நோய்க் கட்டுரையுடன் இணைப்பதாயின், 'மூச்சுத் தடை நோய்' கட்டுரையின் உரையாடல் பகுதியில் முதலில் எழுத வேண்டுமா? அல்லது நேரடியாக அங்கிருக்கும் மேலதிகத் தகவல்களை ஈழைநோய்க் கட்டுரையுடன் இணைத்துவிட்டு, நிருவாக அணுக்கம் உள்ள ஒருவரிடம் கூறினால் போதுமா?--கலை 16:20, 26 ஜனவரி 2010 (UTC)
மாற்றம் செய்திட வேண்டுகிறேன்
தொகு117.207.67.65 என்கிற இணைய விதிமுறை இலக்கம் (Internet Protocol (IP) Number)மூலம் வழியாக ஒரு பயனர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் 'வடுகபட்டி' எனும் ஊர் குறித்த புதிய கட்டுரையைத் தொடங்கியிருக்கிறார்.தாங்கள் அதை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 'வடுகப்பட்டி' எனும் கட்டுரைப் பக்கத்திற்குத் தவறுதலாக வழிமாற்றம் செய்து விட்டீர்கள். பயனர் (இணைய விதிமுறை இலக்கம் 117.207.67.65) செய்த வடுகபட்டிக் கட்டுரையை மீண்டும் இடம்பெறச் செய்திட வேண்டுகிறேன். தாங்கள் வடுகப்பட்டி (ஈரோடு), வடுகபட்டி (தேனி) என்று கூடத் தனித்து அடையாளப்படுத்தினால் மிக நன்றாக இருக்கும்.--Theni.M.Subramani 00:54, 1 பெப்ரவரி 2010 (UTC)
விண்மீன் பதக்கம்
தொகுவியக்கவைக்கும் பல்துறைவிக்கியர் | ||
கனகிற்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பரிதிமதி | பரிதிமதி --பரிதிமதி 16:12, 1 மார்ச் 2010 (UTC) |
பதில்
தொகுவணக்கம் திரு.கனகு அவர்களே! விக்கிபீடியாவிற்கு புதியவனான நான் தெரியாமல் செய்த தவற்றைத் திருத்தியமைக்கு நன்றி!
ஈழத் தமிழர்கள் மீது அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்ட எனக்கு விக்கிபீடியாவில் என் முதல் படைப்பை வெளியிட்ட அன்றைக்கே ஓர் ஈழவர் நண்பராகக் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி!! விரைவில் மீண்டும் வருவேன். நன்றி! வணக்கம்!
கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி
தொகுகனகு சிறீதரன்! கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)
இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.
மேலும் பேசுவோம்.
அமைச்சர், செயலாளர் சந்திப்பின் சாரத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். தயந்து பார்க்கவும்.
நன்றி. பரிதிமதி
மதிப்பிற்குரிய நண்பர் திரு.கனகரத்தினம் சிறீதரன் அவர்களுக்கு இ.பு.ஞானப்பிரகாசனின் அன்பு வணக்கம்!
நீங்கள் கடந்த மார்ச் 2 அன்று எனக்கு எழுதியிருந்த மடலை இன்றுதான் படித்தேன். விக்கிபீடியாவில் எழுதுவது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்குமாறு கூறியிருந்தீர்கள். மிக்க நன்றி!
தொடர்ந்து என் கட்டுரைகளைப் படித்து உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவியுங்கள்!
நன்றி! வணக்கம்!
நன்றி!
தொகுமதிப்பிற்குரிய நண்பர் திரு.கனகரத்தினம் சிறீதரன் அவர்களுக்கு ஞானப்பிரகாசனின் அன்பு வணக்கம்!
'மணல்தொட்டி' பகுதி தொடர்பாக நான் திரு.நற்கீரன் அவர்களிடம் கேட்டிருந்த கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த விளக்கம் கண்டேன். பயனுள்ளதாக இருந்தது. மிகவும் நன்றி!--இ.பு.ஞானப்பிரகாசன் 12:59, 28 மார்ச் 2010.
கோரிக்கை
தொகுமதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்!
நண்பரே! எனக்கு இரண்டு ஐயங்கள். அன்பு கூர்ந்து விளக்கம் தாருங்கள்!
முதலாவது, தாங்களும் மற்ற விக்கியர்களும் ஒரு சொல்லுக்கு முன் [ என்னும் குறியை இரண்டு முறையும், சொல்லுக்குப் பின் ] என்னும் குறியை இரண்டு முறையும் உள்ளிட்டால் அது நீலநிற Hyperlink-ஆக உருப்பெறுகிறது. ஆனால் அதையே நான் செய்தால் சொற்கள் சிவப்பு நிற Hyperlink-ஆகத்தான் உருப்பெறுகின்றன. தங்களுக்கே தெரியும், ஒரு சொல் சிவப்பு நிறத்தில் Hyperlink ஆகியிருந்தால், அந்தச் சொல் தொடர்பாகத் 'தமிழ் விக்கிபீடியா'வில் எந்தக் கட்டுரையும் இல்லையெனப் பொருள் என்று.
தாங்கள் நினைக்கலாம், ஒருவேளை நான் Hyperlink ஆக்க முயற்சித்த சொற்கள் தொடர்பாக உண்மையிலேயே எந்தக் கட்டுரையும் விக்கிபீடியாவில் இல்லையோ என்று. ஆனால் அப்படியில்லை நண்பரே. திரு.நக்கீரன் அவர்களின் 'பேச்சு'ப் பக்கத்தில் நேற்று நான் 'ஐயம்' என்ற தலைப்பில் ஒரு மடல் எழுதியிருந்தேன் இல்லையா? தாங்கள் கூட அதைப் படித்துப் பார்த்து விட்டு, அவர் சார்பாக எனக்கு நேற்று பதிலளித்திருந்தீர்களே? அந்த மடலைச் கொஞ்சம் போய்ப் பாருங்கள்! அதில் 'மணல்தொட்டி', 'உசாத்துணை', 'நடைக்கையேடு' ஆகிய சொற்களை நான் Hyperlink ஆக்க முயன்றிருப்பதையும், அவை கூடச் சிவப்பு நிறத்திலேயே Hyperlink ஆகியிருப்பதையும் தாங்கள் காணலாம். இப்படித்தான்; நான் எந்தச் சொல்லை Hyperlink ஆக்க முயற்சித்தாலும், அந்தச் சொல் பற்றி ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் இருந்தாலும், அது சிவப்பு Hyperlink-ஆகப், பயனற்ற Hyperlink-ஆகத்தான் உருப்பெறுகிறது. இது ஏன்?அன்பு கூர்ந்து விளக்கவும்!
அடுத்து, கையெழுத்தின் முடிவில் (UTC) என்று குறிப்பிடுவதன் பொருளும் பயனும் என்ன? அனைவருமே இப்படிக் குறியிடுவது அவசியமா என்றும் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!--இ.பு.ஞானப்பிரகாசன்\உரையாடு 6:53pm, 28 மார்ச் 2010.
உதவி! உதவி!
தொகுமதிப்பிற்குரிய நண்பருக்கு நேச வணக்கம்! மேற்கண்ட எனது கேள்விக்குத் தாங்கள் பதிலளிப்பதற்குள் எனக்கு இன்னொரு பிரச்சினை வந்து விட்டது! அதாவது என் 'பேச்சுப்' பக்கம் இதற்குள் நிறைந்து விட்டது! ஏனெனத் தெரியவில்லை. தங்களைப் போல் மடல்களையெல்லாம் தொகுத்துத் தனியே வைக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. அன்பு கூர்ந்து அது எப்படி என்று எனக்குக் கற்பிப்பீர்களா? மேலும், இன்றோடு என் ஏர்செல் பாக்கெட் இணையச் சேவை நிறைவு பெறுகிறது. மீண்டும் நான் இச்சேவைக்கு ரீசார்ஜ் செய்ய நாட்கணக்கில் ஆகும். அதுவரை எனக்கு யாரும் மடல் அனுப்ப முடியாத நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு, அன்பு கூர்ந்து தாங்களே இந்த ஒரு முறை என் பேச்சுப் பக்கத்தைத் தாங்களே தொகுத்துத் தர முடியுமா? மிகவும் தொல்லைப்படுத்துகிறேனா?--இ.பு.ஞானப்பிரகாசன் 4:20pm, 29 மார்ச் 2010 (UTC)
நன்றி! (ம) ஐயம்!
தொகுமதிப்பிற்குரிய நண்பருக்கு நேச வணக்கம்!
பேச்சுப் பக்கம் பற்றிய என் ஐயத்திற்கு உடனடியாக விளக்கம் அளித்ததற்கு மிக மிக நன்றி!! தாங்கள் கூறியது சரிதான். பேச்சுப் பக்கம் நிரம்பியிருந்திருந்தால் என்னால் எப்படித் தங்களுடைய இந்த விளக்கத்தையும் அதற்கு முன் வந்த மடலையும் படிக்க முடிந்திருக்கும்? எனவே தாங்கள் கூறுவது சரிதான். இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மடல்கள் சேர்ந்த பிறகும் அவ்வளவு பெரிய பக்கத்தை நான் அப்படியே தொகுக்க முயன்றதால் ஏற்பட்ட குழப்பம் இது. அதேபோல் Hyperlink பற்றியும் சரியாகப் புரிந்து கொள்ளாமலே கேள்வி கேட்டு விட்டேனென்று புரிந்து கொண்டேன. தவறுதலாகத் தொல்லைப்படுத்தியதற்கு வருந்துகிறேன்!
ஆனால் நண்பரே, என் பேச்சுப் பக்கத்தில் பொருளடக்கம் பகுதி பாதியில் உருவாகி இருக்கிறதே, அதற்கு என்ன செய்வது?--இ.பு.ஞானப்பிரகாசன் 6:33pm, 29 மார்ச் 2010 (IST)
- தாங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மின்னஞ்சல் கண்டேன். விபரம் புரிந்து கொண்டேன். நீங்கள் சொல்வது சரியே. நானும் ஒப்புக் கொள்கிறேன். நன்றி.--Theni.M.Subramani 04:20, 30 மார்ச் 2010 (UTC)
அமில மழை
தொகுநான் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது அமில மழை என்றும் , காடிநீர் மழை என்றும் ஒரே உள்ளடக்கம் கொண்ட இரு கட்டுரையை கண்டேன் . தாங்கள் அதனை கவனித்து சரி படுத்த வேண்டுகிறேன் . - இராஜ்குமார் 19:45 ரியாத் , 01 ஏப்ரல் 2010 .
- தாங்கள் இதனை கவனித்தீர்களா ? - இராஜ்குமார் 09:53 ரியாத் , 02 ஏப்ரல் 2010 .
வார்ப்புரு இணைத்தல்
தொகுநான் பேர்கன் மருத்துவனை கட்டுரையில் ஆங்கில விக்கிப்பீடியாவில் பெட்டிக்குள் இருந்த விபரங்களை த.வி. யில் இணைப்பதற்கு, அவற்றை அப்படியே வெட்டி ஒட்டினேன். ஆனால் அது வரவில்லை. நீங்கள் அதை சரி செய்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் அதை எப்படி செய்வது என்று கூறுவீர்களா? நான் வேறு கட்டுரைகளை தொகுக்கும்போது செய்ய உதவியாக இருக்கும். நன்றி.--கலை 00:21, 2 ஏப்ரல் 2010 (UTC)
முதற்பக்கக் கட்டுரை
தொகுஇயேசுவின் உயிர்த்தெழுதல் என்னும் பதிவை இந்நாள்களில் முதற்பக்கக் கட்டுரையாக அமைத்தமைக்கு நன்றி! Pieta என்னும் சொல்லில் இட வேண்டிய grave accent எழுதும் முறை அறிய விழைகின்றேன். --George46 00:10, 3 ஏப்ரல் 2010 (UTC)george46
Diacritic mark/accent
தொகுவிக்கிப்பீடியா கட்டுரை தொகுக்கும் போது acutue, grave, circumflex போன்ற diacritic marks/accents உள்ளிடுவது தெரியவில்லை. காண்க: http://en.wikipedia.org/wiki/Diacritic பாராட்டுக்கு நன்றி! --George46 11:16, 3 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி!
தொகுAccent இடுதல் பற்றி அளித்த வழிகாட்டலுக்கு நன்றி!--George46 11:57, 3 ஏப்ரல் 2010 (UTC)
விக்கி நூல்கள்
தொகுவிக்கி நூல்களில் தொகுக்கும் பொழுது , விக்கிபீடியா கட்டுரையில் இருந்து சில பகுதிகளை எடுத்து கொள்ளலாமா ? -- இராஜ்குமார் 10:56, 4 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி
தொகுநான் நினைத்ததை நீங்கள் செய்து விட்டீர்கள் . நன்றி . நான் கீற்று முடைதல் என்ற பக்கத்தை கிடுகு பின்னுதல் என்று வழி மாற்ற நினைத்தேன் . தென் தமிழ் நாட்டிலும் கிடுகு பின்னுதல் என்று வழக்கில் இருந்து வந்திருகிறது என்று நான் நினைக்கிறேன் . இதனை பற்றி எனது அறியாமைக்காக நான் வருந்துகிறேன் . enathu peyaril aen link varuvathillai . naan naangu murai ithai ~ type seithaen . aanaal link varavillai . -- இராஜ்குமார் 11:13, 5 ஏப்ரல் 2010 (UTC)
ரெசின் மற்றும் பிசின்
தொகுரெசின் , பிசின் என்று இரு கட்டுரை இருக்கிறது . தான்கள் அதனை கவனிக்க வேண்டும் . --இராஜ்குமார் 06:25, 8 ஏப்ரல் 2010 (UTC)
wikimania 2009 or 2010?
தொகுIn the banner it is showing as wikimania 2009 scholarship instead of 2010. please correct. மாஹிர் 12:39, 8 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி
தொகுசிறீதரன் கனகு மீப்பெரு பொது வகுத்தி என்னும் கட்டுரையில் நீங்கள் திருத்தங்கள் செய்து, ஈழவழக்கையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி. --செல்வா 00:28, 9 ஏப்ரல் 2010 (UTC)
தங்கம் கட்டுரை
தொகுஅன்புடன் சிறிதரன் தங்கம் கட்டுரையின் தங்கள் திருத்தங்களுக்கு பாராட்டுக்கள். ஆயினும் கலப்புலோகம் பற்றி தொகுக்கும் போது இது குழப்பத்தைத் தரலாம். தமிழ்நாட்டில் பயன்படுத்தும் சொல்லாடல்களில் எனக்குப் பரீட்சயம் இல்லை. ஆதலால் தெளிவான முடிவை எடுக்கமுடியாதுள்ளது. தமிழ்கூறும் நல்லுலகெல்லாம் ஒத்த மொழியாடல் ஒன்றை பயன்படுத்தத் தூண்டுதல் நம்முன்னுள்ள முக்கிய சவாலாகும். மேலும் ஓரிடத்தான்கள் என்பதற்குப் பதிலாக "சமதானிகள்" என்ற பதமே இங்கு பயன்படுத்தப்படுகின்றது. சஞ்சீவி சிவகுமார் 17 ஏப்ரல் 2010
போயிங் எக்ஸ் 37 பி
தொகுஎனது கட்டுரையை சரியானத் தலைப்பிற்கு மாற்றி மேம்படுத்தியமைக்கு நன்றி. --மணியன் 04:54, 26 ஏப்ரல் 2010 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகுகட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகள் சில நேரடியாக விக்கியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்ததாகவும், அவற்றை நீங்கள் ஒருங்குறிக்கு மீள்வித்து ஒருங்குறிக்கு மாற்றியிருப்பதையும் ஆலமரத்தடியில் பார்த்தேன். அந்த கோப்புக்களை நீங்களே பார்த்து நடுவர்களுக்கானவற்றை மட்டும் தனியாகவும், எஞ்சியவற்றை தனியாகவும் எனக்கு அனுப்பி வைப்பீர்களா? ஏற்கனவே நானும் உங்களுக்கு 106 கோப்புக்களை அனுப்பியிருந்தேன். அவற்றையும் பார்வையிட உங்களுக்கு போதிய நேரம் இருக்குமா? --கலை 11:24, 20 மே 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் சிறீதரன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிறீதரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:48, 25 மே 2010 (UTC)
தொடருந்து விபத்து பற்றிய செய்தி
தொகுகனகு! தொடருந்து விபத்து பற்றிய செய்தியில் "...தொடருந்து இருப்புப்பாதை தகர்க்கப்பட்டதால் தடம்புரண்டு சரக்கு வண்டியுடன் மோதியதில்..." என்று வந்துள்ளது. அச்சொற்றொடர் "...தொடருந்து தடம்புரண்டு, (பின்னர்) அப்பாதையில் வந்த சரக்கு வண்டி தொடருந்து மீது மோதியதில்..." என்று இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஏனெனில், தொடருந்து சரக்கு வண்டியுடன் மோதிற்றதோ என்றொரு தோற்ற மயக்கத்தை முதல் சொற்றொடர் ஏற்படுத்துகின்றது என்பது என் எண்ணம். நன்றி.
நன்றி! கனகு அவர்களே! கைத்தொலைபேசி என்ற கவிதை பற்றித் தங்களின் நெறிகாட்டலுக்கு நனி நன்றி! தங்களின் கருத்தைக் கவனத்தில் கொள்வேன். அடுத்து ஒருகேள்வி; காப்புரிமை அற்ற படைப்புக்களைப் பதிவுசெய்வதாயிருந்தால் அதற்கு என்ன நடைமுறை? அவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கவேண்டுமா? அப்படி வாங்கினால் அதனை எப்படித் தங்களுக்கு-விக்கிப்பீடியாவுக்கு- தெரிவிப்பது? விளக்கி உதவ வேண்டுகின்றேன். தங்களைப் போன்று தொண்டு உள்ளத்தோடு எந்தவிதமான பலனும் எதிர்பாராது உழைப்பவர்களின் வழிகாட்டுதலில் அதிகப்பணிபுரிய ஆவல்! நன்றி! வாழ்த்துக்கள்!--Meykandan 01:49, 1 ஜூன் 2010 (UTC)
மதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்!
திரு. சூர்யப்பிரகாசு அவர்கள் ஆலமரத்தடியில் எழுதியிருந்த மடலைக் கண்டும் 4 நாட்களாகியும் யாருமே அதற்குப் பதில் எழுதாதைக் கண்டும்தான் நான் "உதவுவீர்" என்று ஓர் மடலைப் பதிவிட்டேனே தவிர மற்றபடி நான் அவருடைய எந்தப் பங்களிப்பையும் பார்க்கவில்லை.
உண்மையில் நான் பார்க்க முயன்றேன் ஆனால் முடியவில்லை அல்லது எனக்குப் பார்க்கத் தெரியவில்லை. மன்னிக்கவும்!
எனவேதான் நான் அவருக்கு, அவரது ஆலமரத்தடி மடலின் அடிப்படையில் பரிந்துரைத்திருக்கிறேனே தவிர அவரது படைப்புடைய தரத்தின் அடிப்படையில் இல்லை.
அது இருக்கட்டும்! நான் அந்த மடலைப் பதிவிட்டு ஓரிரு மணி நேரத்திற்குள் நீங்களும் , ரவியும் எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறிர்கள்!
இது மட்டுமில்லை, சக விக்கியர்களுக்கு உதவுவதிலும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலும், த.வி-யின் எல்லாச் செயல்பாடுகளிலும், எல்லா இடங்களிலும் நீங்கள் இருவரும்தான் முன்னணி வகிக்கிறீர்கள்! உளமார்ந்த பாராட்டுகள்!--இ.பு.ஞானப்பிரகாசன் 16:00, 4 ஜூன் 2010 (UTC)
71.231.31.80ஐத் தடுத்ததற்கு நன்றி.
தொகுவணக்கம் கனகு!
71.231.31.80ஐத் தடுத்ததற்கு நன்றி - அவர் மாற்றங்கள் செய்திருந்த மற்றப் பக்கங்களையும் அதற்கு முந்தைய தொகுப்பிற்கு முன்நிலையாக்கம் செய்தமைக்கும். --பரிதிமதி 03:08, 6 ஜூன் 2010 (UTC)
பாராட்டுகளுக்கு நன்றி
தொகுவணக்கம் சிறிதரன். பாராட்டுகளுக்கு நன்றி. பணவீக்கம் , பண வீக்கம் என இரு கட்டுரைகள் விக்கியில் உள்ளன.இவற்றை இணைக்க உதவுவீர்களா?--சஞ்சீவி சிவகுமார் 07:38, 7 ஜூன் 2010 (UTC)
கின்னஸ் சாதனை
தொகுகின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற செய்தி இன்று தான் வெளியாகியிருக்கிறது. -- மாஹிர் 04:33, 10 ஜூன் 2010 (UTC)
Request
தொகுHi! Could you translate simple:Pichilemu (at least a bit) to Tamil please? :) --Diego Grez 19:02, 10 ஜூன் 2010 (UTC)
- Apparently Pichilemu in Tamil is "பிழீலெமோ". I dunno, :) Please translate a bit of the article =) --Diego Grez 02:36, 11 ஜூன் 2010 (UTC)
பெயர் மாற்றம்
தொகுவிக்கியில் ஆங்கிலத்திலுள்ள என் பயனர் பேரை (Surya Prakash.S.A.) தமிழில் மாற்ற விரும்புகிறேன். மாற்ற முடியுமா? எவ்வாறு என யாரேனும் கூறினால் நன்று...பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 06:17, 21 ஜூன் 2010 (UTC)
தானியங்கி மாற்றம்
தொகுசிறீதரன், தவறுக்கு வருந்துகிறேன். இது இயல்பிருப்பு நிலையில் பைவிக்கிப்பீடியாபாட் செய்த மாற்றம் என்பதால் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணி விட்டேன். முன்னிருந்த நிலைக்கு மாற்றியதற்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 14:18, 22 ஜூன் 2010 (UTC)
அனுமதி
தொகுஉயர்திரு நிர்வாகி அவர்களுக்கு --சூர்ய பிரகாசு.ச.அ. 11:12, 24 ஜூன் 2010 (UTC) எழுதுவது. டுவிட்டரில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தேன். ஆனால் இடுகைகள் குறைவாக உள்ளன! நான் அப்பணியையும் சேர்த்துச் செய்ய விழைகிறேன்! இது குறித்து யாரேனும் கருத்து கூறுங்கள்! தமிழ் விக்கியின் பேரில் நான் டுவிட்டரில் ஒரு புதிய கணக்கு தொடங்க உள்ளேன்! அனுமதி வேண்டிக் காத்துள்ளேன்!
டுவிட்டர் மக்கள் அதிகம் புழங்கும் ஒரு சமூக தளம் எனவேதான் இவ்வேண்டுகோள். அருள் கூர்ந்து ஏற்பீர் என நினைக்கிறேன்.
--சூர்ய பிரகாசு.ச.அ. 11:12, 24 ஜூன் 2010 (UTC)
முயற்சிக்குப் பாராட்டு
தொகு"தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்" என்ற கட்டுரையை எழுதியுள்ள பயனரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதையவர் எழுதியுள்ள விதம் நன்று! உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம்! அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை! அரசு இச்செம்மொழி மாநாட்டின் இறுதியில் வெளியிடப்போகும் தீர்மாணங்களிலொன்றாக இதுவுமிருக்க விக்கியிலுள்ளோர் ஆவண செய்ய வேண்டுகிறேன்!
இயலவில்லை எனில் நாம் (விக்கியர்) அனைவரும் இணைந்து திட்டமான, தரமான பெயர்களைத் தயாரித்து அரசுக்களிப்போம்! தமிழ் விக்கியில் கிட்டத்தட்ட 10000 பயனர்கள் பதிந்துள்ளதாக அறிந்தேன். இருப்பதோ 118 தனிமங்கள் (அடையாளம் காணப்பட்டவை) மட்டுமே! 84 பேருக்கு ஒரு தனிமம் மட்டுமே! அவ்வெண்பத்துநால்வரும் (முடிந்தால்) அல்லது குறைந்தபட்சம் 10 பேராவது இணையம் மூலம் குழுவாகச் செயல்பட்டு குறிப்பிட்ட தனிமங்குறித்து விரிவாக ஆய்ந்து ஒரு தூய்தமிழ்ப் பெயரிட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
இது குறித்து நிர்வாகி அவர்கள் கட்டுரைப்போட்டி வலைவாசல் பக்கத்திற்குச் செல்ல ஓர் அறிவிப்பை முகப்புப் பக்கத்தில் வெளியிட்டது போல, இக்குழுவாக்கத்திற்கு ஓர் அறிவிப்பு தேவை!
--சூர்ய பிரகாசு.ச.அ. 15:08, 25 ஜூன் 2010 (UTC)
பக்கங்களின் பெயர்களை மாற்றுவதற்கான காரணம்
தொகுதங்களுக்கு அன்பு வணக்கம். என்னால் உருவாக்கப்படும் ஆலயப் பக்கங்களின் பெயர்களில் சிறிய மாற்றத்தைச் செய்து பக்கத்தை நகர்த்துவதற்கான காரணத்தைக் கூறவும். விக்கிபீடியாவில் என்னால் தொடங்கப்பட்ட ஆலயப் பக்கங்களின் பெயர்கள் அவ் ஆலயங்களிற்குரிய பதிவுப் பெயர் அல்லது அவ் ஆலயங்கள் தங்கள் ஆவணங்களில் பயன்படுத்தும் பெயர்களையே கொடுத்து வருகின்றேன். எனவே அப்பெயர்களில் மாற்றம் செய்து பக்கத்தை நகர்த்தும் போது கவனம் எடுக்கவும். முடியுமானால் அப்பக்கங்களின் பக்க நகர்த்தலை நீக்கவிடவும். நன்றி.--Sasitharagurukkal 06:42, 27 ஜூன் 2010 (UTC)
கோவில் பெயர்கள்
தொகுவணக்கம், சிறப்பு விளிப்புப் பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும் எனும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். இருப்பினும் ஆலயப் பெயர்களில் அருள்மிகு, ஸ்ரீ என்பன சிறப்பு விளப்புப் பெயர்களாக பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் பல ஆலயங்களில் ஸ்ரீ என்பது அவ்வாலய பெயருடன் சிறப்பு விளிச் சொல்லாக இல்லாது ஆலயப் பெயராகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதை அவ்வாலயத்தின் காணி உறுதி, அரசாங்கப் பதிவு ஆவணங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. தங்களின் பயனர் பக்கத்தில் அவுஸ்திரேலியா, வெஸ்லி, மொஸ்கோ, குயின்ஸ், பெல்பாஸ்ட் ஆகிய சொற்களில் கிரந்த எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொற்களில் கிரந்த எழுத்தை தவிர்ப்பது சிரமாக இருக்கும் என நான் கருதுகிறேன். அது போன்றே சைவசமயம் சார்ந்த சொற்களில் வரும் கிரந்த எழுத்துக்களை அப்படியே பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என கருதுகின்றேன். அதுமட்டுமல்லாது அபிஷேகம், பூஜை போன்ற சமயச் சொற்களில் கிரந்த எழுத்தை மாற்றியமைத்து அபிடேகம், பூசை என பயன்படுத்துவது என்பது ஓர் இயல்பான மாற்றமாக இருக்கின்றது. இது போன்று எல்லா இடங்களிலும் கிரந்த எழுத்தை தவிர்ப்பது என்பது இயல்பான மாற்றமாக இருக்காது என்பது எனது கருத்து. இவ்விடத்தில் எனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். நன்றி.--Sasitharagurukkal 13:14, 27 ஜூன் 2010 (UTC)
அறிவியல் கட்டுரைகள்
தொகுநீங்கள் கூறியவாறே செய்துவிட்டேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா.--Jenakarthik 03:35, 28 ஜூன் 2010 (UTC)
நன்றி
தொகுவணக்கம் சிறிதரன். எனது பல திருத்தங்களை சீர்செய்துள்ளீர்கள். குறிப்பாக பிரீட்ரிக் கையக் கட்டுரை படத்தை சீர் செய்தமைக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 04:56, 29 ஜூன் 2010 (UTC)
பொருளடக்கம்
தொகுசைவக் கிரியை, ஆன்மார்த்தக் கிரியை ஆகிய பக்கங்களில் பொருளடக்கம் தானாக உருவாக வில்லை. இதற்கான காரணத்தை விளக்கவும். பொருளடக்கத்தை உருவாக்குவதோடு, எவ்வாறு உருவாக்குவது என்பதையும் தெரியப்படுத்தவும். நன்றி. --Sasitharagurukkal 09:05, 29 ஜூன் 2010 (UTC)
திரு kanags அவர்களுக்கு:
வணக்கம். ஆரியபட்டாவில் மாற்றங்கள் செய்ததாக அறிந்தேன். தாமதமாக பதில் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய மொழி பெயர்ப்பில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். என்னுடைய தரத்தை விகி அளவிற்கு மாற்றியமைக்க உதவு மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Tamil09
கோரிக்கை
தொகுமதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்! உலக மக்கள் தொகை திருத்தம் முடிந்தது-மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்: Expression error: % population data error and வார்ப்புரு:நாட்டுத் தகவல் to be checked and updated/ I request Mr. Kanags to please look into this issue. Sorry for the inconvenience Tamil09-5-7-2010. திரு Kanags அவர்களுக்கு;
வணக்கம். உலக மக்கள் தொகை கட்டுரையில் உடனுக்குடன் மாற்றங்கள் செய்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை தொந்தரவு செய்ததற்கு தயவு செய்து மன்னிக்கவும்.
நன்றி-வணக்கம்
tamil-09
This is an photo created by AFP, not created by VOA and so it is not public domain. Only files from VOA that have VOA authorship indicated are pubic domain. See commons:Template:PD-USGov-VOA. Regards, --Martin H. 00:41, 9 ஜூலை 2010 (UTC)
நன்றி -விளக்கங்களும் வேண்டுகோள்களும்
தொகுதங்கள் வரவேற்புக்கு நன்றி.
உங்களுக்குத் தெரியுமா?
தொகுகடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் 7 செய்திகளுக்கும் 7 படிமமிணைத்திருந்தார்கள். அதனால் அதுவே வழக்கம் என்று எண்ணி விட்டேன். இனி படங்களை அளவோடு பயன்படுத்துவேன். செய்திகளின் எண்ணிக்கை வரம்பு எவ்வளவு ? வழிகாட்டுதல் பக்கத்தில் 5 செய்திகள் என்றுள்ளது. பின் ஏன் 7 செய்திகள் ?
ஹ வும் உற வும்
தொகுநான் தமிழ்த் தட்டச்சு பயின்ற போது அங்கே ஹ வை உற என்று அடித்த பழக்கமே இன்றும் தொடர்கிறது. தற்போது தான் பாமினியில் ஹ வைக் கவனித்தேன்.
வேண்டுகோள்
தொகுசங்கப் புலவர் வரலாறு பற்றி செய்திப் பெட்டி போடலாமே. பெயர்
இயற்பெயர்
சிறப்புப்பெயர்
பெயர்க்காரணம்
பாடல்கள்
இவரால் பாடப்பட்ட மன்னர்கள்
இவரைப் பாடிய மன்னர்கள்
சமயம்
சமகாலப் புலவர்கள் --Karthi.dr 13:44, 11 ஜூலை 2010 (UTC)
உங்களுக்குத் தெரியுமாவில் பல படிமங்கள் இணைத்தல்
தொகுKanags, வணக்கம். உங்களுக்குத் தெரியுமாவில் பல படிமங்களை இணைத்தது நான் தான். (Karthidr-இடம் உரையாடுவதற்காக அவரது பயனர் பேச்சுப் பக்கம் சென்றபோது நீங்கள் கூறியிருந்த கருத்தைக் கண்டேன்) வேற்றொரு மொழி விக்கிப்பீடியாவில் அவ்வாறு பல படங்களுடன் உ.தெ. பகுதி இருப்பதைக் கண்டேன். பார்க்க நன்றாக இருந்தது. அதனால் அவ்வாறு இணைத்தேன். எழுத்து மட்டுமே இருப்பதை விட படங்களுடன் இருக்கும் போது தகவல்களை அதிகம் பேர் காண்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். --பரிதிமதி 12:35, 11 ஜூலை 2010 (UTC)
வணக்கம்
தொகுஇடைவெளிக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. விக்கி செய்திகளில் சில நடைமுறை பிரைச்சனைகள் காரணமாகப் பங்களிக்க முடியவில்லை. நீங்கள் தொடர்ந்து எழுதிவருவது கண்டு மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது மீள சில செய்திகளை எழுதுகின்றேன். --ஜெ.மயூரேசன் 10:35, 15 ஜூலை 2010 (UTC)
நன்றி
தொகுஉங்கள் வரவேற்பிற்கு நன்றி kanags அவர்களே..--சி. செந்தி 01:24, 17 ஜூலை 2010 (UTC)
செம்மை செய்தமைக்கு நன்றி
தொகுஇசபெல்லா கட்டுரையை அழகாக செம்மை செய்தமைக்கு நன்றி. புதிய உங்களுக்குத் தெரியுமா ஏன் இன்னும் இன்றைப்படுத்தாமல் இருக்கிறது ?--Karthi.dr 10:50, 19 ஜூலை 2010 (UTC)
விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்
தொகுஒரு பயனர் அறியாமல் பெரும்பாலான பெயர்களை அழித்து விட்டிருக்கிறார். அதை மீட்டுவிக்கவும் --Karthi.dr 13:24, 25 ஜூலை 2010 (UTC)
கோலா கரடி
தொகுகோலா கரடி சூழல் முடுக்கைச் (”ecological niche”) சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பார்கள். அதாவது வேறெந்த விலங்கும் நாற்றமடிக்கும், குறைந்த ஆற்றலளிக்கக் கூடிய யூகலிப்டஸ் இலைகளை உண்பதில்லை. அதனால் கோலாவிற்கு உணவுக்குப் போட்டியில்லை. ஆனால் குறைந்த ஆற்றலை ஈடுகட்ட உறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அருமையான தகவலைத் தந்துள்ளீர்! நன்றி! --Karthi.dr 13:32, 25 ஜூலை 2010 (UTC)
உதவி
தொகுaquagenic pruritis - ?நீர் அரிப்பு ?நீர் உண்டாக்கும் அரிப்பு ?நீர் தோற்றுவிக்கும் அரிப்பு
aquadynia - ?நீர் வலி
வேறு நல்ல சொல் இருந்தாலும் கூறவும். --- --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 13:28, 27 ஜூலை 2010 (UTC)
பிறந்தநாள் வாழ்த்துகள்!!
தொகு--இ.பு.ஞானப்பிரகாசன் 03:19, 31 ஜூலை 2010 (UTC)