பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 8


முதற்பக்கச் செய்திகள் குறித்து தொகு

எதற்காக முதற்பக்கச் செய்திகளில் செய்தி பற்றிய முதன்மைக் கட்டுரையின் தடிப்பு நீக்கப்படுகிறது? அக்கட்டுரையை எளிதில் கண்டுணரவே அதற்கு தடிப்பு வடிவமைப்பு தரப்படுகிறது. காரணம் அறிய விருப்பம். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:23, 12 நவம்பர் 2013 (UTC)Reply

பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை. அளவுக்கதிகமான தடிப்புச் சொற்கள் முழுப்பக்கத்துக்கும் அழகாக இல்லை என்ற ஒரே காரணமே. அவற்றை மீள்வித்து விடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:19, 12 நவம்பர் 2013 (UTC)Reply

நிழற்படம் தொகு

முகநூலில் இருந்தால் மட்டும் தான் பெரும்பாலானவர்களின் நிழற்படம் (புகைப்படம்) தெரியுமாட்டக்குது :). முன்பு நீச்சல், இப்ப மீசை இல்லாத கனகு :) --குறும்பன் (பேச்சு) 16:59, 17 நவம்பர் 2013 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

உங்கள் வானொலிப் பேட்டி கேட்டேன். சிறப்பாக இருந்தது. இந்த ஏழெட்டு ஆண்டுகளில் முதன் முறையாக உங்கள் படத்தையும் பார்த்துக் குரலையும் கேட்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. மகிழ்ச்சி. --மயூரநாதன் (பேச்சு) 03:29, 18 நவம்பர் 2013 (UTC)   விருப்பம் --மணியன் (பேச்சு) 19:55, 18 நவம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 05:15, 18 நவம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம். விக்கியில் இணைந்த நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் உங்கள் தரிசனம் கிடைத்திருக்கின்றது :)--அராபத் (பேச்சு) 06:10, 18 நவம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:48, 18 நவம்பர் 2013 (UTC)Reply
மற்றவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிட்டுமா?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:45, 18 நவம்பர் 2013 (UTC)Reply
மயூரநாதனின் கருத்தே என்னுடையதும். செல்வகுரு, நீங்களும் இந்த இணைப்பில் கேட்கலாம். -- சுந்தர் \பேச்சு 05:58, 18 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி சுந்தர், செவ்வியை வீட்டிற்கு சென்றபின்னர் கேட்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:54, 18 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி. பேட்டியை நானும் பின்னர் வீடு சென்ற பின்னர் கேட்கின்றேன். சிறீதரனுக்கு வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 11:20, 18 நவம்பர் 2013 (UTC)Reply
எழுத்தே தனது அறிமுகமாக இருக்க வேணும் என்று அஞ்ஞாதவாசம் புரிந்தவரின் படமும் பேச்சும் மனதிற்கு நிறைவாக இருந்தது. தமிழ் விக்கியூடகத்திற்கு தங்கள் பங்களிப்பு அளப்பரிது. தங்களை செவ்வி கண்ட ஆத்திரேலிய நிறுவனத்தின் தமிழ் பிரிவிற்கும் அவர்களுக்கு போட்டுக் கொடுத்த பார்வதிசிறீ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !! :) உங்களுக்கு வாழ்த்துகள் பல !! --மணியன் (பேச்சு) 19:55, 18 நவம்பர் 2013 (UTC)Reply
அமைதியான புயல்.   விருப்பம் --Natkeeran (பேச்சு) 20:21, 18 நவம்பர் 2013 (UTC)Reply
ஆயத்தப்படுத்தாமல் நடந்த நேர்காணல். வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.--Kanags \உரையாடுக 20:08, 18 நவம்பர் 2013 (UTC)Reply
இதுபோன்ற செவ்வியைப் பதிவிறக்கம் செய்து ஆவணபடுத்துவதால், ஏதேனும் உரிமை இடர் வருமா? மயூரநாதன், இரவி, பார்வதி போன்றோரின் உரைகளும் முறைப்படி ஆவணப்படுத்த என்ன செய்யவேண்டும். ஆயுத்தப்படுத்தாமலேயே, அருமையாக அணியப்படுத்திவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

--≈ உழவன் ( கூறுக ) 10:24, 19 நவம்பர் 2013 (UTC)Reply

இளந்தமிழா!! தொகு

தங்களின் உரையாடுக ஆவணத்தொகுப்பு 7ல் துடித்த நொஞ்சம் இன்று மகிழ்கிறது.

மேலும் அன்பு கனக்ஸ் "பாவலர்" ஓம் முத்துமாரி அவர்களை நன்கு அறிந்தவர்களில் நானும் ஒருவன் என்பதாலும் தமுஎகச-வின் கலை இலக்கிய இரவு என்கிற கலை நிகழ்ச்சி மேடைகளில் பல நிகழ்வுகள் இணைந்து பணியாற்றியவன் என்கிற நிலையிலேயே "பாவலர்" ஓம் முத்துமாரி என நகர்த்தினேன். தலைப்பு மீண்டும் ஓம் முத்துமாரி என மாற்றப்பட்டுள்ளதே? மீண்டும் "பாவலர்" ஓம் முத்துமாரி என மாற்றலாமா? அருள் கூர்ந்து கருத்திடுக. --யோகிசிவம் (பேச்சு) 15:46, 19 நவம்பர் 2013 (UTC)Reply

நடப்புத் திட்டம் தொகு

கனக்ஸ், தற்போது அந்த ஆண்டு நிறைவுகளை முடிந்தவரை ஆங்கில விக்கியுடன் ஒத்திருக்கும் வகையில் (அதே வேளையில் தமிழ்/தமிழர் தொடர்பான தகவல்களும் அற்றுப்போகாமல்) இற்றைப்படுத்தத் தொடங்கியுள்ளேன். இதனால் முக்கியக் கட்டுரைகள் (பொதுவாக மிக முக்கியமானவையே ஆ.வியின் முதற்பக்கத்தில் தோன்ற வைப்பர்) பல உருவாக வாய்ப்புள்ளது. மேலும், நமது இன்று பகுதியும் பன்னாட்டுத் தகவல்களைக் கொண்டு பல்துறை நோக்கு கொண்டதாய் விளங்கும் என்று நினைக்கிறேன். இப்போதுவரைக்கும் சனவரி 1ஆம் தேதியை இற்றைப்படுத்தியதில் 3 புதிய கட்டுரைகள் (அரசியல், விழா, மதம்) தொடங்கினேன். மேலும், பல இணைப்புகளையும் துப்புரவு செய்யவும் நேர்ந்தது. உங்களுக்கு விருப்பமிருப்பின் என்னோடு திட்டத்தில் இணையவும் கனக்ஸ் :) ஏனெனில் கிட்டத்தட்ட அந்தப் பல ஆண்டு நிறைவு வார்ப்புருக்களும் நீங்கள் உருவாக்கியதே. எனக்கும் முக்கியமானது எது என்று அறிய ஒரு ஆள்துணை கிடைத்தாற்போல் இருக்கும். (என் பயனர் பக்க அறிவிப்பைப் பாருங்கள்) நன்றி :) --Surya Prakash.S.A. (பேச்சு) 11:03, 24 நவம்பர் 2013 (UTC)Reply

பெயரிடல் மரபு கொள்கை மாற்றம் - கருத்து வேண்டல் தொகு

வணக்கம். பேச்சு:புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் (திரைப்படம்) போன்ற உரையாடல்களைத் தொடர்ந்து இங்கு வேண்டப்படும் கொள்கை மாற்றம் குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 17:10, 24 நவம்பர் 2013 (UTC)Reply

ஜெயரத்தினாவின் iwt கருவி தொகு

இந்த கருவியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை, தயவு செய்து உதவவும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 07:21, 29 நவம்பர் 2013 (UTC)Reply

உதவி தொகு

பேச்சு:இசைக்கவி ரமணன் பார்த்து அதற்கு மாற்றம் தேவையிருப்பின் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:08, 3 திசம்பர் 2013 (UTC)Reply

வார்ப்புரு உதவி தொகு

Infobox laboratory என்ற வார்ப்புரு இருக்கிறதா ?? சிவகார்த்திகேயன் (பேச்சு) 15:22, 4 திசம்பர் 2013 (UTC)Reply

Infobox laboratory என்ற வார்ப்புரு வழங்கியதற்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 17:01, 5 திசம்பர் 2013 (UTC)Reply

வார்ப்புரு:Dts/fmt பயன்படுத்த முடியவில்லை உதவவும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 17:01, 5 திசம்பர் 2013 (UTC)Reply

மையெசுக்கியூயெல் அல்லது மையெசுக்யூயெல் அல்லது மைசீக்குவெல் தொகு

வணக்கம் ஐயா! நான் எனது கருத்தினை மையெசுக்யூயெல் பேச்சு பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். உங்கள் கருத்தினை தெரியபடுத்துங்கள். ஏழாண்டுகளாக நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து வருகிறீர்கள் என்பதை பார்த்தேன். எனது மரியாதைகள். நன்றி. அண்ணாமலை 03:58, 5 திசம்பர் 2013 (UTC)

கிரந்த எழுத்துமுறை தொகு

[1] இந்த கட்டுரை எப்போது முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது என அறிந்துகொள்ளலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:46, 10 திசம்பர் 2013 (UTC)Reply

அது என்னுடைய தவறு. இணைப்பு இருந்ததைப் பார்த்து தவறாக எண்ணி விட்டேன். கண்டுபிடித்தமைக்கு நன்றி. அவ்வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:05, 10 திசம்பர் 2013 (UTC)Reply

பார்வைக்கு தொகு

தமிழ் எண் வரலாறு கட்டுரையில் நீக்கத்தைப் பாருங்கள்.
என்ன செய்கிறோம் என்பது விளங்கவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 23:10, 13 திசம்பர் 2013 (UTC)Reply

ஒரு தகவல்: விக்கியில் 2014 அந்தமான் படகு விபத்து என்ற தலைப்பில் தொகுக்கும்போது சிறு தடங்கல் ஏற்ப்பட்டது. ஆகையால் கொஞ்சம் தான் தட்டச்சு செய்யமுடிந்தது. இப்போது சரிபார்க்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 11:15, 27 சனவரி 2014 (UTC)Reply

உதவி தொகு

புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் இதில் வங்கதேசமும் ஒன்று ஆனால் ஏற்கனவே உள்ள வங்க தேசம் என்ற கட்டுரை இன்றைய வங்காள தேசத்தைக் குறிக்கிறது. இந்த வங்கதேசமென்ற கட்டுரை வங்காளத்தைப் பற்றியது அல்ல, இதன் எல்லை காசியிலிருந்து இன்றைய கொல்கத்தா வரையிலுமே எனவே வங்காளதேசம் என்ற கட்டுரையின் முந்தைய கட்டுரைப் பெயரான வங்கதேசம் என்று இருப்பதால் இந்த வங்கதேசம் என்ற கட்டுரையை சேமிக்க இயலவில்லை எனவே வங்கதேசம் என்ற பெயரில் கட்டுரை அமைய உதவவும்--Yokishivam (பேச்சு) 03:05, 15 திசம்பர் 2013 (UTC)Reply

வங்கதேசம் என்று இன்று வழங்கப்படுவது வங்காளதேசம் மட்டுமே. இதனால் அந்நாட்டுக்கே அது வழிமாற்றாக இருக்க வேண்டும். புராதன தேசத்திற்கு வங்கதேசம் (புராதனம்) என்ற தற்போதுள்ள தலைப்பே சிறந்தது என எனக்குப் படுகிறது. அல்லது வங்கதேசம் (புராதன இந்தியா) எனவும் தலைப்பிடலாம். இந்த 56 தேசங்களைப் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் உண்டா?--Kanags \உரையாடுக 03:53, 15 திசம்பர் 2013 (UTC)Reply

புத்தகம் தொகு

56 தேசங்களைப் பற்றி ஆங்கிலத்தில் PURANIC INDIA or THE OLD 56 KINGDOMS-P.V.JAGADEESA IYER-First Edition:1918-Published by-P.R.Rama Iyer-chennai

இந்த புத்தகம் மட்டுமே மிகவும் நைந்து போன நிலையில் கிடைத்தது- P.V.JAGADEESA IYER-அன்றைய சென்னை ஆர்க்யலாஜிகல் இலாகா மானேஜராக பணியாற்றியுள்ளார்.--Yokishivam (பேச்சு) 14:48, 15 திசம்பர் 2013 (UTC)Reply

புரிந்து கொண்டேன் தொகு

நன்றி. இனிமேல் இவ்வாறே எழுதுகிறேன். --ஆர்.பாலா (பேச்சு) 09:13, 15 திசம்பர் 2013 (UTC)Reply

புதியவருக்கான உதவொ தொகு

vmbbala என்ற பயனர் படிமம் தொடர்பான கேள்வி கேட்டுள்ளார். அவருக்கு உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:35, 16 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கித்திட்டம் வானியலில் பங்கேற்க அழைப்பு தொகு

 
திரைகடலோடித் திரவியம் தேடு

வணக்கம், Kanags/தொகுப்பு 8!

  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
  • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
  • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் விக்கித் திட்டம் வானியலில் இணைந்து கொள்ள உங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:04, 17 திசம்பர் 2013 (UTC)Reply

பகுப்பு: வானொலி ஆர்வலர் தொகு

வானொலி தொடர்பான பகுப்புகளில் வானொலி ஆர்வலர் என்ற பகுப்பை சேர்க்க முடியுமா? - (பேச்சு)

மொழிபெயர்ப்பு உதவி தொகு

GRB 130427A என்னும் கட்டுரை ஆங்கிலத்தில் இத்தலைப்பில் உள்ளது இதை தமிழில் மொழிபெயர்க்கும்போது இதன் தலைப்பை ஆங்கிலத்தில் உள்ள படியே இட்டு விடுவதா அல்லது தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமா இதை தயவுசெய்து எப்படிமொழிபெயர்ப்பது என்பதிற்கான உதாரணத்தை தரவும்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:20, 20 திசம்பர் 2013 (UTC)Reply

பயனர் தடை குறித்து தொகு

பயனர் பேச்சு:YArukkuyArsonhthamenpathu இப்பயனரின் தடைக்கு காரணம் பொருத்தமில்லாத உள்ளடக்கங்களை சேர்த்தார் எனக் குறிப்பிஅட்ப்பட்டுள்ளது. அவர் அவருடைய பேச்சுப்பக்கத்தில் ஒரு கருத்தும் இடவில்லை. அவருக்கு அப்படி ஒரு பக்கம் இருக்கிறது எனத் தெரியுமா எனவே தெரியவில்லை. கட்டுரைப் பக்கத்துக்கு பேச்சுப்பக்கம் இருக்கிறது எனத் தெரிந்திருக்கலாம். அதனால் தடையை நீக்கக் கோருகிறேன். மேலும் இதைப் போல் ஒரு நிர்வாகியிடம் கேட்பது எனக்கு இரண்டாவது முறை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் அப்பயனரை பேச்சுப்பக்கத்தில் பதில ளிக்கச் சொல்லலாம். அதிலும் அவர் விக்கிக் கொள்கைக்கு முரண்ம்பாட்டார் எனில் மீண்டும் தடை செய்யலாம். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:27, 20 திசம்பர் 2013 (UTC)Reply

குறித்த பயனரின் மின்னஞ்சல் செல்லுபடியாகக்கூடிய முகவரி அல்ல.--Anton·٠•●♥Talk♥●•٠· 13:13, 21 திசம்பர் 2013 (UTC)Reply
தென்காசியார், பொதுவாக பயனர்களுக்கு விக்கிப்பீடியா கட்டுரைகள் அல்லது உரையாடல்கள் குறித்து நான் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்வதில்லை. அவரது பயனர் பேச்சுப் பக்கம் இருப்பது அவருக்கே தெரியா விட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவரது கட்டுரைகளைப் பல முறை நான் மட்டுமல்ல பலர் நீக்கியுள்ளார்கள். எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அவர் உங்களுடன் தொடர்பு கொண்டாரா? எனினும், அவரது தடையை நீக்குவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அவரது விசமக் கட்டுரைகளை நீக்குவதில் பெரும் சிரமம் எதுவும் இல்லை. ஏனென்றால் அவரது கட்டுரைகளின் தலைப்பு எல்லாமே மிக மிக நீண்ட தலைப்புகளைக் கொண்டவை.--Kanags \உரையாடுக 08:26, 22 திசம்பர் 2013 (UTC)Reply

ஆம். அவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் உள்ளட்க்கங்களை ஆராய்ச்சிக்கருத்துகள் போல் சேர்ப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அவரை முதலில் அவரின் பேச்சுப்பக்கத்தில் மட்டும் உரையாடச் சொல்லலாம். ஆய்வுக்கருத்துகளை எழுதுவதற்கு பதிலாக ஒரு நூலில் படித்தை ஒரு பத்தி மட்டும் நடுநிலை தவறாமல் எழுதுங்கள் எனச் சொல்லிப்பார்க்கலாம். அதன் படி அவர் செயல்படவில்லை எனில் அவரை தடை செய்வது பொருந்திவரும்.

என்னுடைய முதல் 5 கட்டுரைகளும் விக்கிப்பீடியாவில் அழிக்கப்பட்டது. பின்னர் சோடாபாட்டில் கைப்பேசியில் எப்படி விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று என்னுடன் உரையாடித்தான் நான் தொடர்ச்சியான பங்களிப்புகளை அளித்தேன். அந்த ஐந்து கட்டுரைகளும் இவர் எழுதியதை விட மிகக் கொடூர பயங்கரமாக இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இவர் பயங்கரக் கொடூரமாக எழுதுகிறார். சொல்லிப்பார்த்து கேட்கவில்லை எனில் தடை செய்து விடலாம்.

அவர் முகநூல் குழுமத்தில் சந்திரசேகர் ஆறுமுகம் என்ற பெயரில் இருக்கிறார். [www.facebook.com/chandrasekaran.arumugam.90] இது தான் அவர் முகவரி. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:52, 23 திசம்பர் 2013 (UTC)Reply

அவர் உங்களுடன் தொடர்பு கொண்டாரெனில் அதனை நீங்கள் முன்னரே தெரிவித்திருக்கலாம். ஏதோ நீங்களே என்மீது பிழை கண்டுபிடித்தது போல எழுதியிருக்கிறீர்கள். உங்கள் முதல் ஐந்து கட்டுரைகளும் எவ்வாறிருந்தன என்பது எனக்குத் தெரியாது. அல்லது மறந்து விட்டேன். நீங்கள் இது குறித்து இரகசியமாக ஏனைய பயனர்களுடன் தொடர்பு கொண்டதும் எனக்கு எப்படித் தெரியும்? அல்லது தெரிய வரும். அனைத்தையும் வெளிப்படையாகவே உரையாடுங்கள். இந்தப் பயனருடைய கட்டுரைகள் பயங்கரக் கொடுமையானதாகவா அல்லது மிக மிகப் பயங்கரமானதாக இருந்ததா என்பதை நான் அளவிடவில்லை. உங்களுடன் அவர் உரையாடியதில் இருந்து அவரது பதில் உங்களுக்குத் திருப்தி என்றால் நீங்களே அவரது பயனர் தடையை நீக்கி விடுங்கள். உங்களுக்கு அந்த உரிமை உண்டு.--Kanags \உரையாடுக 12:07, 23 திசம்பர் 2013 (UTC)Reply

நான் முதலில் அவர் பேச்சுப்பக்கத்தில் மட்டும் முதலில் உரையாடத் தயாரா எனக் கேட்டுப்பார்க்கிறேன். அவர் சரி என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 23 திசம்பர் 2013 (UTC)Reply

நான் உங்களைக் குறை சொல்லவில்லை. ஒரு புதுப்பயனர் போய்விடக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுக் காட்டினேன். எனக்கு அத்தனை இடங்களையும் கேள்விகளையும் பார்த்து உரையாட தற்போதைக்கு நேரமில்லை. அதனால் அனைத்தையும் கவனிக்க முடியாத நிலைமை. அதைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:14, 23 திசம்பர் 2013 (UTC)Reply

இது சரியா? தொகு

\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என உள்ளது. கலந்துரையாடவும்--Yokishivam (பேச்சு) 12:55, 21 திசம்பர் 2013 (UTC)Reply

எந்தக் கட்டுரையில் இது பற்றிய கருத்துள்ளது. இணைப்புத் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:14, 22 திசம்பர் 2013 (UTC)Reply

தமிழ்நாடு தொகு

தமிழ்நாடு கட்டுரையில் பொருளாதாரம் பகுதியில் சேர்த்துள்ள தகவல்களுக்கு மேற்கோள்கள் சேர்த்துள்ளேன். நன்றி

உதவி தொகு

மிக மிக முக்கியமான அசைவு விபரியல் (Kinematics) எனும் கட்டுரை கவனிப்பாரற்று உள்ளது. இது போன்ற கட்டுரைகளை விரிவாக்க பலரது உதவி அவசியம். --G.Kiruthikan (பேச்சு) 07:28, 26 திசம்பர் 2013 (UTC)Reply

வார்ப்புரு:Topics related to India வார்ப்புரு மாற்றங்கள் வலைவாசளில் ஏன் தெரியவில்லை உதவவும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 01:25, 21 சனவரி 2014 (UTC)Reply

பார்வைக்கு தொகு

பொன்னேர் உழுதல் பேச்சு --Sengai Podhuvan (பேச்சு) 21:38, 26 திசம்பர் 2013 (UTC) == தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா ==Reply

நான் விக்கி தமிழில் பதிவேற்றம் செய்த கட்டுரை நீக்கப் பட்டிருக்கிறது. சொந்த ஆய்வு என காரணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொந்த ஆய்வு செய்வது தவறா? அல்லது அந்தக் கட்டுரையின் கருத்துக்களில் தவறு ஏதேனும் உள்ளதா? தயவு செய்து மீள்பார்வை செய்து, நீக்கப்பட்டதை மீண்டும் அனுமதித்தால் நல்லது.

நான் விக்கிதமிழுக்கு புதியவன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளைச் சரி செய்கிறோம். இல்லாமல் அழிப்பது எங்களை மிகவும் சோர்படையச் செய்கிறது. விக்கி தமிழில் நீ எழுதக் கூடாது என நீங்கள் சொல்கிறீர்களா? என்பதும் தெளிவாக எனக்கு புரியவில்லை. ஆவலுடன் மீள்பதிவுக்காக காத்திருக்கிறேன்.

வார்ப்புரு:சூரியக்குடும்பம் தொகு

விக்கியில் ஒரு சிறு மாற்றம் செய்ய வேண்டும் அதாவது குறுங்கோள் எனும் கட்டுரை குறள்கோள் (dwarf planet) எனும் தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அத்துடன் வார்ப்புரு:சூரியக்குடும்பத்தில் சிறுகோள்கள் என்று நீங்கள் இணைப்பு இட்டிருக்கிறீர்கள் அதை குறுங் கோள்கள் என மாற்றி விடுங்கள். ஏனெனில் குறுங் கோள் என்பதற்கு ஆங்கிலப் பதம் (minor planet) ஆகும். சிறு கோள்களுக்கு ஆங்கிலத்தில் (asteroids) எனப் பெயர் சிறுகோள்கள் எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. குறுங்கோள்களுக்கு/ள் தான் சிறுகோள்கள் அடங்கும். asteroids belongs to minor planets.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:48, 29 திசம்பர் 2013 (UTC)Reply

கல்கி எழுத்தாளர் தொகு

இந்தக் கட்டுரையை நீங்கள் தொடங்கியதாக வரலாற்றில் பார்த்தேன். கல்கி பத்திரிகை ஆசிரியராக இருந்தது, மீரா திரைப்படத்தை சதாசிவத்துடன் சேர்ந்து தயாரித்தது, காற்றினிலே வரும் கீதம் என்ற காலத்தால் அழியாத பாடலை இயற்றியது போன்ற தகவல்கள் கட்டுரையில் இடம் பெறவில்லை. ஏதாவது காரணம் உண்டா அல்லது சேர்க்கலாமா? நன்றி. வணக்கம் Uksharma3 (பேச்சு) 14:40, 30 திசம்பர் 2013 (UTC)Reply

Give me a minute தொகு

I am still compiling பலுசிஸ்தான் விடுதலை இராணுவம். give me a minute to complete it. thanks.--ஆர்.பாலா (பேச்சு) 10:28, 31 திசம்பர் 2013 (UTC)Reply

ஏன் அவ்வாறு தலைப்பிட்டீர்கள்? அறிய ஆவல்.--Kanags \உரையாடுக

சில வேளைகளில் முரண்பாடான தொகுப்பு ஏற்பட்டிருக்கலாமோ?! ஏனெனில் எனக்கு ஏற்பட்டது.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 22:10, 31 திசம்பர் 2013 (UTC)Reply

உண்மை, அது தான் நடந்தது. ஆனாலும், பாலா புரிந்து கொண்டார்.--Kanags \உரையாடுக 22:11, 31 திசம்பர் 2013 (UTC)Reply

திருப்பாம்புரம் தொகு

அமைவிடத்தை குறிப்பாகவும், விக்கிமேப்பியா படமாகவும் கொடுத்திருந்தேன். அவை நீக்கப்பட்டுள்ளன. என்ன காரணம் எனத் தெரியலாமா? Uksharma3 (பேச்சு) 04:11, 1 சனவரி 2014 (UTC)Reply

அமைவிடம் நீக்கப்படவில்லை. விக்கிமேப்பியா இணைப்பு குறிப்பிட்ட கட்டுரைக்குத் தேவையற்றது என நினைத்தேன். திருப்பாம்புரம் கட்டுரை ஒன்று எழுதினால் அதில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 04:34, 1 சனவரி 2014 (UTC)Reply

அமைவிடத்தை நான் குறிப்பாக சேர்த்திருந்தேன். அதைக் காணாதபடியால் நீக்கப்பட்டதாக தவறுதலாக எண்ணிவிட்டேன். மன்னிக்கவும். உங்கள் ஆலோசனைப்படி திருப்பாம்புரத்தை தனிக் கட்டுரையாக எழுதி, அமைவிடத்தையும், விக்கிமேப்பியா இணைப்பையும் அங்கே சேர்த்துவிட்டேன். Uksharma3 (பேச்சு) 05:44, 1 சனவரி 2014 (UTC)Reply

நடப்பு நிகழ்வு வார்ப்புரு தொகு

நடப்பு நிகழ்வு வார்ப்புருவில் நான் செய்த மாற்றத்தை மீளமைத்துள்ளமையைக் கண்டேன். தற்போது அந்த வார்ப்புரு பயனபடுத்தும் கட்டுரைகளுக்குச் சென்றால் அங்கே as of எனும் ஆங்கில வார்த்தை பகுப்புகளில் தோன்றுகின்றது. இதற்கு ஏதும் தொழில்நுட்பக் காரங்கள் உள்ளதா? அறியும் அவாவில் கேட்கின்றேன் மற்றும்படி எந்தப்பிரச்சனையும் எனக்கில்லை ;) --ஜெ.மயூரேசன் (பேச்சு) 05:49, 2 சனவரி 2014 (UTC)Reply

சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை தொகு

இவர் யாழ்ப்பாணம் இராமநாதன் அகாதமியில் அதிபராக பணியாற்றியுள்ளார். காலப் பகுதி தெரியவில்லை. முடிந்தால் அறிந்து சேர்த்து விடுகிறீர்களா? நன்றி. வணக்கம். Uksharma3 (பேச்சு) 13:59, 3 சனவரி 2014 (UTC)Reply

கட்டுரை தொகு

வணக்கம். இங்கு பயனர் பக்கத்‌தில் உள்ள கட்டுரையை புதிய பக்கத்‌திற்கு நகர்த்துவது சரியா?--நந்தகுமார் (பேச்சு) 20:17, 4 சனவரி 2014 (UTC)Reply

இம்மாதிரியான கட்டுரைகள் கூகுள் மொழிபெயர்ப்புக் குழுவினரால் பிற்காலத்தில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள். தற்காலிகமாக இவற்றை நாம் அந்தந்தப் பயனர் பெயர்வெளிகளுக்கு மாற்றியிருந்தோம். இது போன்ற பல கட்டுரைகள் உள்ளன. நகர்த்தும் போது கூகுள் வார்ப்புரு இவற்றுக்கு சேர்க்கப்படவில்லை போல் தெரிகிறது. இவற்றை இனங்கண்டு தனியான ஒரு பகுப்புக்குள் சேர்ப்பதும் நல்லது..--Kanags \உரையாடுக 21:16, 4 சனவரி 2014 (UTC)Reply

கேள்வி தொகு

தமிழ்நாட்டுப் பொருளாதாரம், இதில் தமிழ்நாட்டின் பொருளாதாரம், பெட்டியை மாற்றுவது எப்படி? "தொகு" பக்கத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்ற பெட்டி இல்லை. Raghukraman (பேச்சு) 13:27, 6 சனவரி 2014 (UTC)Reply

உதவி தேவை தொகு

translatewiki.net இல் பங்களிக்க நான் புதிய கணக்கை உருவாக்க வேண்டுமா அல்லது புகுபதிகை செய்ய வேண்டுமா? ஏனெனில் என் பெயரையும் கடவுச்சொல்லையும் சரியாக உள்ளிட்டும் புகுபதிகைத் தவறு "Shrikarsan" என்ற பெயரில் பயனர் எவருமில்லை.பயனர் பெயர், பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்ற வித்தியாசத்திற்குட்பட்டது. எழுத்துப் பிழைகளைச் சரி பார்க்கவும், அல்லது புதிய பயனர் கணக்கொன்றை உருவாக்கவும். என்று வருகின்றது தயவுசெய்து உதவுங்கள். (என் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் சரியாகவே உள்ளிட்டேன்)--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:36, 11 சனவரி 2014 (UTC)Reply

வானொலி ஆர்வலர்கள் தொகு

இந்தப் பெயரில் கட்டுரை எழுதியுள்ளேன். அதே பெயரின் பகுப்பு இருப்பதால் கட்டுரையின் தலைப்பு மாற்றப் பட வேண்டுமா? வானொலி ஆர்வலர்கள் (கட்டுரை) என மாற்ற வேண்டுமா? ஆம் எனில் நீங்களே மாற்றிவிடுகிறீர்களா? நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 11:46, 19 சனவரி 2014 (UTC)Reply

தலைப்பு ஒருமையிலும், பகுப்பு பன்மையிலும் இருப்பதே உகந்தது. மாற்றியுள்ளேன். நல்ல கட்டுரை. ஆங்கில விக்கியிலேயே இது பற்றிக் கட்டுரை இல்லை.--Kanags \உரையாடுக 20:14, 19 சனவரி 2014 (UTC)Reply

ஆங்கிலத்தில் கட்டுரை இங்கே உள்ளது. விக்கியில் இணைப்பு கொடுத்துள்ளேன். அவர்கள் பெரும்பாலும் தொழிநுட்பத்தை முன்நிறுத்தி எழுதியுள்ளார்கள். நான் மக்கள் பயன்பாடு என்ற கோணத்திலிருந்து எழுதியுள்ளேன். மலையாளத்திலும் கட்டுரை உள்ளது. அதிலும் டி-எக்ஸிங் என்றே தலைப்பிட்டு ஆங்கில கட்டுரை போலவே தொழிநுட்ப கோணத்தில் எழுதியிருக்கிறார்கள் போலிருக்கிறது. (மலையாளம் தெரியாததால் நிச்சயமாக கூற முடியவில்லை.)
தமிழ் விக்கிக்கு ஒரு புதிய subject கொடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன். வானொலி, ஒலிபரப்புக் கலை என்ற தமிழ் கட்டுரைகள் பார்த்தேன். திருத்தி எழுத வேண்டும், இப்போதைக்கு என்னால் முடியாது. பார்ப்போம். - Uksharma3 (பேச்சு) 02:12, 20 சனவரி 2014 (UTC)Reply

உதவி... தொகு

வணக்கம்! இந்தியப் பொதுத் தேர்தல், 2014 எனும் கட்டுரையில் 'எதிர்காலத் தேர்தல்கள்' எனும் பகுப்பினை நீக்க இயலவில்லை. வார்ப்புருவில் திருத்தம் தேவைப்படும் என உணர்கிறேன். உரியன செய்யுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:47, 23 சனவரி 2014 (UTC)Reply

 Y ஆயிற்று ongoing = yes என்பதில் no ன மாற்றினால் சரியாகிவிடும். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:59, 23 சனவரி 2014 (UTC)Reply

மிக்க நன்றி, அண்டன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:05, 23 சனவரி 2014 (UTC)Reply

தமிழ் தட்டச்சு தொகு

ஆலமரத்தடியில் நடக்கும் உரையாடலை சற்றுக் கவனியுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:11, 24 சனவரி 2014 (UTC)Reply

கவனத்திற்கு தொகு

இந்த வலைப்பக்கத்தைப் பார்க்கவும். - Uksharma3 (பேச்சு) 12:37, 26 சனவரி 2014 (UTC)Reply

உங்கள் வழிகாட்டுதல் தேவை தொகு

எனது கட்டுரை ஒன்று புதிதாக கண்டறியப்பட்ட தொல்பழங்கால பாறை ஓவியங்களை பற்றியது. இப்போது காணவில்லை அருள் கூர்ந்து விளக்கவும். இது யாரையும் புண்படுத்தாத, விக்கியின் மன்புகளுக்கு சேதம் விளைவிக்காத ஒரு கட்டுரை. மேலும் தமிழகத்தின் தொன்மையை உலகறியச் செய்யும் ஒரு நடுநிலையான கட்டுரை. இது தொடர்ந்து தடையில் இருந்தால் ஒரு அட்மின் ஆகும் வரை மருத்தவ விடுப்பில் விக்கியில் செயலாற்றுவதை தவிர எனக்கு வேறு வாய்ப்பில்லை. நடுநிலயான கட்டுரைகள் சப்பையான காரணங்களை கொண்டு ஒடுக்கப் படுவது முறையல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நன்றிகளுடன் மது --மது 04:03, 2 பெப்ரவரி 2014 (UTC)

இது ஒடுக்கப்படுதல் அல்ல. உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிப்புரிமை மீறல் பற்றி இரு பயனர்களால் விளக்கப்பட்டுள்ளதே. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:43, 2 பெப்ரவரி 2014 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? தொகு



வணக்கம் தொகு

வணக்கம், நீங்கள் இந்த கட்டுரையை மேம்படுத்த உதவ முடியும், நன்றி: காண்டெலேரியா லேடி பசிலிக்கா.--83.41.94.194 12:41, 9 பெப்ரவரி 2014 (UTC)


உதவி தேவை தொகு

வணக்கம் என்னுடைய கட்டுரையின் தலைப்பை மாற்ற எனக்கு உதவிடுமாறு வேண்டுகிறேன். வேட்டுவ கவுண்டர் என உள்ள தலைப்பை கொங்கு வேட்டுவ கவுண்டர் என மாற்ற வேண்டும்.

சந்தேகம் தொகு

இசுபிரிட் தளவுளவி- ’Rover’ என்பது தளவுளவியா அல்லது தளவுலவியா (தள உலவி) என்ற சந்தேகம் வருகிறது. தெளிவுபடுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:10, 16 பெப்ரவரி 2014 (UTC)

பார்வைக்கு தொகு

அடி (கால்-அடி) - இணைப்புக் குறியீடு --Sengai Podhuvan (பேச்சு) 05:13, 22 பெப்ரவரி 2014 (UTC)

  • இதனைச் சரிசெய்தமைக்கு நன்றி
  • பேச்சு:கட்டுரை-தொகுத்தல் பாருங்கள் முறைமையை அறிவுறுத்துங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 04:29, 25 பெப்ரவரி 2014 (UTC)
  • ஏதோ நல்லவர்கள் நன்னோக்கோடு என் மணல் தொட்டியைப் பொதுத்தொட்டியாக அமைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. என் மணல் தொட்டி முழுமையாக எனது பழகும் தொட்டியாக இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும். உதவுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 17:21, 25 பெப்ரவரி 2014 (UTC)

நாம் என்ன செய்கிறோம் தொகு

பேச்சு:மொழிமுதல் குற்றியலுகரம் பாருங்கள்.--Sengai Podhuvan (பேச்சு) 18:57, 26 பெப்ரவரி 2014 (UTC)

அடாவடித்தனம் தொகு

நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் உரையாடலில் நீங்கள் நடந்து கொண்டது தொடர்பாக சில கருத்துக்கள். மரியாதையாக கருத்துடன் பண்பாக உரையாடுங்கள். சொற்கள் அகராதியில் இருக்கிறதென்பதற்காக எடுத்து வீச வேண்டாம். மரியாதையாகத்தான் உங்களுடன் உரையாடுகிறேன் அதையே எதிர்பார்க்கிறேன். முன்பும் என்ன கேள்வி? யார் எழுப்பியது? அவர்களையே இனி இற்றைப்படுத்தச் சொல்லுங்கள் என்று பொதுவிடத்தில் பேசுவது போன்றல்லாது உரையாடினீர்கள். விக்கிக்கு ஏற்புடையதாயினும், உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அழைக்காது பண்பாக, பல இடங்களில் உங்கள் உரையாடலைத் தவிர்த்தும் உள்ளேன். அப்படியிருக்க என்னை அடாவடித்தனம் செய்பவனாக குறிப்பிட்டு, அடாவடித்தனம் என்பதற்கு புது வடிவமும் கொடுக்க முற்படுகிறீர்கள். என் விட்டுக் கொடுப்புக்களை பலவீனமாகக் கருதாதீர்கள். உங்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ளலாம் என்றால், நீங்களோ கல்லூரி, பள்ளி மாணவர்கள் போன்று நடந்து கொள்கிறீர்கள். தயவு செய்து இங்குள்ள மற்றப் பெரியவர்கள் பழகுவதுபோல் பெரிய மனிதராகப் பழகுங்கள். நன்றி! --AntonTalk 01:48, 27 பெப்ரவரி 2014 (UTC)

முறைகேடான முறையில் நிருவாக அணுக்கத்தை நீக்குவது அடாவடித்தனமா இல்லையா? அடாவடித்தனம் என்றால் என்ன என்பதை அறிஞர்களிடம் கேட்டு வாருங்கள். நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதில் தரப்படவில்லை. கேள்வி எழுப்புவற்கு நாள் கடந்து விட்டது என்று சாட்டுச் சொல்லாதீர்கள். அடிப்படையிலேயே தவறான முறையில் அணுகப்பட்ட இப்பிரச்சினைக்கு நீங்கள் இருவரும் அவசரப்பட்டு முடிவு காண நினைக்கிறீர்கள். உங்கள் அறிவுரைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 04:32, 27 பெப்ரவரி 2014 (UTC)
அடாவடித்தனம் என்றால் என்ன? இதன் கருத்து என்ன? நீங்களே சொல்லுங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் அறிஞர்களிடம் போக முடியாது. முறையான முறையில்தான் நிருவாக அணுக்கத்தை நீக்குவது தொடர்பாக உரையாடப்படுகிறது. அது தொடர்பில் நீண்ட உரையாடல் நடைபெற்றுள்ளது. இறுதியாக ஐவர் கருத்திட்டுள்ளனர். உங்கள் கேள்விகளுக்கும் பதில் தரப்பட்டள்ளது. மேலும் கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. இங்கு அவசப்படவில்லை, 10 ஆண்டு விழாவிலிருந்து இன்று வரை பல மாதங்கள் கடந்துவிட்டன. உங்களுக்கு முதலிலிருந்து சொல்லவும் வேண்டுமா? தேனி தவறுகள் குறித்து எதுவும் பேசாமல் மெளனம் காக்கும் நீங்கள் அடாவடித்தனம் பற்றிக் குறிப்பிடுவதனை என்னவென்று சொல்வது? --AntonTalk 05:03, 27 பெப்ரவரி 2014 (UTC)

நிருவாக அணுக்கம் நீக்கல் பக்கத்தில் பதில் தந்திருக்கிறேன். இன்னும் உங்கள் கேள்விகளுக்கு விடை ஏதும் இல்லை என்றால் இங்கு தெரியப்படுத்தவும். பதில் அளிக்க அணியமாக உள்ளேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:03, 27 பெப்ரவரி 2014 (UTC)

சோ. சிவபாதசுந்தரம் தொகு

இந்தக் கட்டுரையில் பெரும்பாலும் நீங்கள் பங்களித்திருப்பதால் இதனை எழுதுகிறேன்.
தமிழோசையில் 1974ல் சேர்ந்ததாக எழுதப்பட்டுள்ளது. அதனை சரி பார்க்கவும். பிபிசி யில் தமிழ் ஒலிபரப்பு 1941ல் தொடங்கியது. அப்போது அதற்கு பெயர் எதுவும் இல்லை.
1947 இல் சிவபாதசுந்தரம் "தமிழோசை" எனப் பெயரிட்டார். வாரத்தில் இரண்டு நாட்கள் (செவ்வாய், வியாழன்) ஒலிபரப்பானது.
சிவபாதசுந்தரம் 1991 இல் பிபிசி தமிழோசை சங்கரண்ணாவுக்கு அளித்த பேட்டியின் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. அதனை இணையத்தில் ஏற்ற முடிந்தால் கட்டுரையில் இணைப்பு கொடுத்துவிடுகிறேன். - Uksharma3 (பேச்சு) 13:18, 27 பெப்ரவரி 2014 (UTC)

ஆண்டுகளில் மிகப் பெரும் சிக்கல் ஏற்பட்டு விட்டது. 1947 ஆக இருக்கலாம். ஆனால் 1947 இல் இலங்கை திரும்பியதாகவும் எழுதியிருக்கிறது. நான் திருமதி பராசக்தி (சுந்தா) சுந்தரலிங்கம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவரிடம் கேட்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:06, 27 பெப்ரவரி 2014 (UTC)

அவரது பேட்டியை இப்போது தான் தெளிவாகக் கேட்க முடிந்தது. அவரே தகவல்கள் தந்துள்ளார். அவற்றை கட்டுரையில் சேர்த்துள்ளேன். எப்போது இலங்கை திரும்பினார் என்பது தெரியவில்லை. பேட்டியை இணையத்தில் ஏற்றியபின் இணைப்பு கொடுக்கிறேன். - Uksharma3 (பேச்சு) 03:23, 28 பெப்ரவரி 2014 (UTC)

முடிவுறாத கோழி-முட்டைக் கதை தொகு

கோழி-முட்டை முட்டை-கோழி கதை முடிவுறாதது அல்ல. வழக்கமாக தவறாக புரிந்து கொள்பவர்கள் அதை முடிவுறாதது என்று கருதுகின்றனர். கோழியில் இருந்து முட்டை வரும். முட்டையில் இருந்து கோழி வராது. குஞ்சு தான் வரும். கதை முடிவுற்றது. :) --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:27, 27 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம் அரிய கண்டுபிடிப்பு தென்காசியார் நோபல் பரிசிற்கு முயற்சி செய்யலாம். பரிசிற்கான துறை மருத்துவம் அல்ல அமைதி!--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:53, 27 பெப்ரவரி 2014 (UTC)

அன்பு சிறீகர்சன், நமக்குத் தொடர்பில்லாத விடயங்களில் (இடங்களில்) தேவையற்ற கருத்துகளை எழுதுவதை நாம் தவிர்க்கலாம். உங்களைவிட வயதில் மூத்தவன் என்பதாலும், உங்களைவிட சற்றுக் கூடுதலாக உலக அனுபவம் பெற்றிருப்பதன் காரணமாகவும் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:40, 27 பெப்ரவரி 2014 (UTC)

ஆலோசனைக்கு நன்றி செல்வசிவகுருநாதன் அவர்களே--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:35, 27 பெப்ரவரி 2014 (UTC)

தென்காசி, இதே கண்டுபிடிப்பை ஒருக்கால் இரவியின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவித்து விடுங்கள். அவரும் இது தெரியாது முழித்துக் கொண்டிருக்கிறார்.--Kanags \உரையாடுக 20:02, 27 பெப்ரவரி 2014 (UTC)

அப்பாடா, நகைச்சுவை உணர்வோடு ஒரு உரையாடலை இங்கே இப்போது தான் படிக்க முடிந்தது. :) - Uksharma3 (பேச்சு) 03:28, 28 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம்தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:10, 1 மார்ச் 2014 (UTC)
//வழக்கமாக தவறாக புரிந்து கொள்பவர்கள் அதை முடிவுறாதது என்று கருதுகின்றனர். //--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:50, 28 பெப்ரவரி 2014 (UTC)
இதனை ஏன் எனக்குச் சொன்னீர்கள்? சீண்டல் உங்களுக்குக் கை வந்த கலையா?--Kanags \உரையாடுக 10:17, 28 பெப்ரவரி 2014 (UTC)

இது சீண்டல் அல்ல. நான் மேற்கூறியதை மீண்டும் படியுங்கள். கோழி முட்டைக் கதையை வாக்கெடுப்புப் பக்கத்தில் கூறினால் தொடர்பில்லாமல் இருக்கும் என்பதால் இங்கே கூறினேன். நீங்கள் தான் வாக்கெடுப்பு பக்கத்தில் கோழிமுட்டை கதையை தொடங்கி வைத்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:30, 28 பெப்ரவரி 2014 (UTC)

அப்படியா, புதுக்கதை எல்லாம் சொல்கிறீர்கள்? உங்கள் கதையைப் பார்த்தால் நீங்கள் உறுதியாகத்தான் சொல்லுகிறீர்கள் போலிருக்கிறது. //நீங்கள் தான் வாக்கெடுப்பு பக்கத்தில் கோழிமுட்டை கதையை தொடங்கி வைத்தது// இதற்கு உங்களிடம் ஆதாரம் உண்டா? --Kanags \உரையாடுக 10:43, 28 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம்:எம்பெருமான்!. சுப்பிரமணிய சுவாமிகளின் கதைகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது ஓகோ!.. எனினும் அவரிடம் ஆதாரம் தான் இல்லை, என்ன செய்வது பரமேஸ்வரா? எல்லாம் அந்தப் பார்வதியின் செயல் தான். இது மட்டும் பிள்ளையாருக்குத் தெரிந்தால் கதி அதோ கதிதான் தன் மாமன், மாமி என பட்டாளங்களையே கூட்டி வந்து விடுவார். எல்லாம் அந்த நாராயணன் கையில் தான் உள்ளது. பிரம்மனே இச்சோதனையில் இருந்து சுப்பிரமணிய சுவாமிகளைக் காப்பாற்று.--aho;- பேச்சு 08:00, 1 மார்ச் 2014 (UTC)

நீங்கள் கடைசியாக என் பேச்சுப் பக்கத்தில் கருத்திடும் முன்னர் நான் கோழி செய்யவில்லை. தற்போது தான் செய்து பார்த்தேன்.

//தப்பியோடப் பார்க்காதீர்கள்.//

ஆமாப்பா. உங்களைப் பார்த்து நான் அப்படியே பயந்து நடுங்கிவிட்டேன். தப்பி ஓடி திருப்பி இப்போ தான் வந்திருக்கிறேன். எனக்கு வேலைநேரம் மதியம் முதல் இரவு வரை அப்படின்னு சொன்னாலும் மதியம் முதல் அடுத்த நாள் காலை வரை இழுத்துவிடும். இன்னைக்கு தொலைநிலைக்கல்வி வகுப்பு முடிஞ்சு இப்போதான் வாரேன். அதனால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நான் கிளைன்டு விர்டுவல் மிசினுக்கும் விக்கிப்பீடியாவுக்கும் முகநூலுக்கும் தாவிக்கிட்டே இருப்பேன். எங்க விரைவா பதிலளிக்க முடியுமோ அங்க பதிலளித்து விடுவேன். தப்பி ஓடுவது என்பது கீழ்வரும் வகையினருக்கு தான் பொருந்தும்.

  1. தெரிந்தே தப்பு செய்துவிட்டு ஓடிப்போகிறவர்கள்.
  2. தெரியாமல் தவறு செய்துவிட்டு அதை எடுத்துக்காட்டிய பிறகும் ஒத்துக்கொள்ளாமல் வெளியில் தியாகி என்று சொல்லிவிட்டு ஓடிப்போகிறவர்கள்.

அது சரி. நான் நேற்று உங்களுக்குப் பதிலளித்து நீங்கள் மறுமொழி தரும் வரை 11 மணி நேர இடைவேளை இருந்தது. அப்போ நீங்க ஓடிப்போயிட்டா வந்தீங்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:36, 1 மார்ச் 2014 (UTC)

//பிரம்மனே இச்சோதனையில் இருந்து சுப்பிரமணிய சுவாமிகளைக் காப்பாற்று.//

User:L.Shriheeran ஆகா இத விட கத விட முடியுமா என்ன? பிரம்மன் சுப்பிரமணியனை காப்பாத்தியதாக எந்தக் கதையும் இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. மாறாக சுப்பிரமணியன் தான் பிரம்மனை வேதத்துக்கு பொருள் தெரியாதலால் தலையில் குட்டி சிறையில் அடைத்தான். கௌமாரம் படி சுப்பிரமணியனே முதற்கடவுள். பரப்பிரம்மமான சுப்பிரமணியன் இவ்வுலகின் இன்பம் பெற தான் உருவாக்கிய சிவனுக்கே மகனாய் பிறந்து இன்புற்றாராம். சுப்பிரமணியன் தன்னையே தான் காத்துக் கொள்வார். அவருக்கு பிரம்மன் உதவி எல்லாம் தேவையே படாது.

மேலும் யாம் கடவுளும் அல்ல. உம்மை மாதிரி தளபதியும் அல்ல. ஒரு பாவப்பட்ட புலவன் மட்டுமே. :)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:48, 1 மார்ச் 2014 (UTC)

)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:10, 1 மார்ச் 2014 (UTC)

ஆகா! என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு--aho;- பேச்சு 15:29, 1 மார்ச் 2014 (UTC)

அக்காவாஆஆஆஆஆஆஅ.............................. :) என்னடா இது??? தென்காசிக்கு வந்த சோதனை--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:54, 1 மார்ச் 2014 (UTC)

ஆஆஆஆஆஆஆஆஆஆஆதவா அது ஆகா!...--aho;- பேச்சு 16:20, 1 மார்ச் 2014 (UTC)

சரி எப்படியோ, நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை. நீங்கள் நக்கல், பகிடிகளை விட்டுத் தப்பிக்கலாம் எனப் பார்க்கிறீர்கள். பகிரங்கமாக எனது பயனர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இது நான் பகிடிக்குச் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்ட இரு வகைக்கும் (தப்பியோடல்) நீங்களே பொருத்தம் என்பதை இப்போது ஒப்புக் கொண்டுவிட்டீர்கள். உங்கள் நக்கல்களுக்கும் பகிடிகளுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மறவாதீர்கள். கோழி செய்து பார்த்ததில் நீங்கள் கண்டது என்ன? பகிரங்கமாகக் கூறுங்கள். ஒரு பொதுப்பக்கத்தில் இவ்வாறு நக்கல் அடிப்பது குறித்து நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இது முதல் முறையல்ல. இங்கு எல்லோரும் தன்னார்வப் பயனர்களே.--Kanags \உரையாடுக 20:33, 1 மார்ச் 2014 (UTC)
தயவுசெய்து இங்கு தேவையற்ற கருத்துகள் இடுதலை மற்றவர்கள் நிறுத்துங்கள்! குறிப்பிட்ட இருவருக்கிடையே நடைபெறும் ஒரு வித்தியாசமான உரையாடலில் மற்றவர்கள் ஏன் தேவையற்ற கருத்துகளை எழுத வேண்டும்?!
  • இது கலைக்களஞ்சியத்தின் ஒரு பேச்சுப் பக்கமா? அல்லது அரட்டை அரங்கமா?
  • இந்த உரையாடலின் பின்புலத்தை அறிந்தே மற்றவர்கள் செயல்படுகிறார்களா? அல்லது அறியாமல் செயல்படுகிறார்களா என்பது எனக்குப் புரியவில்லை!
  • நகைச்சுவை என்பது வேறு; தேவையற்ற நையாண்டி என்பது வேறு!
  • இங்கு நாம் பதியும் ஒவ்வொரு எழுத்தும் ஒரு வரலாறாக பதிவாகிறது என்பதனை நினைவில் கொள்வோம்!
  • நம்முடைய கருத்துச் சுதந்திரத்தில் தலையிட இவர் யார்? என மற்றவர்கள் நினைக்கக்கூடும்; என்னை வெறுக்கவும்கூடும். ஆனால், ஒரு நல்ல பங்களிப்பாளரின் பேச்சுப் பக்கமும், அவரின் நேரமும் வீணாதலைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க என்னால் இயலாது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:43, 1 மார்ச் 2014 (UTC)
  விருப்பம்--aho;- பேச்சு 02:47, 2 மார்ச் 2014 (UTC)
  விருப்பம்--  ♦khjtd;♦ ♣பேச்சு♣ 03:28, 2 மார்ச் 2014 (UTC)

மறுமொழி தொகு

//என்னுடைய பேச்சுப் பக்கத்தில் தான் மறுமொழி தரச் சொல்லிச் சொன்னேன்.//

ஏன் என் பேச்சுப்பக்கத்தில் அவசரத்தில் பதில் தந்தேன் என நான் விளக்கிவிட்டேன்.

// நீங்கள் உங்கள் பக்கத்தில் போட்டு விட்டு ஒளிந்து கொண்டீர்கள். //

ஒழிந்து கொள்ளவில்லை என்று ஏற்கனவே விளக்கிவிட்டேன். ஒழிந்து கொள்பவர்கள் பெரும்பாலும் பயந்தவர்களாக இருப்பார்கள்.

//அப்படித்தானே. சரி எப்படியோ, நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை. கோழி செய்து பார்த்ததில் நீங்கள் கண்டது என்ன? பகிரங்கமாகக் கூறுங்கள். //

கோழி-முட்டை கதையை நீங்கள் முதலில் ஆரம்பிக்கவில்லை. நீங்கள் முதலில் ஆரம்பித்ததாகச் சொன்னதை திருப்பிப் பெற்றுக்கொள்கிறேன்.

//பகிரங்கமாக எனது பயனர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.//

) கேட்க முடியாது.

//இது நான் பகிடிக்குச் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்ட இரு வகைக்கும் (தப்பியோடல்) நீங்களே பொருத்தம் என்பதை இப்போது ஒப்புக் கொண்டுவிட்டீர்கள். //

நான் தப்பி ஓடினால் தான் ஒப்புக்கொள்வது/கொள்ளாதது எல்லாம். தப்பி ஓடுபவன் இப்படி எல்லாம் பதில் தந்து கொண்டிருக்க மாட்டான்.

//உங்கள் நக்கல்களுக்கும் பகிடிகளுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மறவாதீர்கள். ஒரு பொதுப்பக்கத்தில் இவ்வாறு நக்கல் அடிப்பது குறித்து நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.//

வாக்கெடுப்புப் பக்கத்தில் அடாவடித்தனம் என்று ஆரம்பித்த பிறகுதான் இந்த உரையாடல் என்பதை நினைவில் வைக்கவும். அதற்கும் முன்னர் கூட நீங்கள் கூறிய கருத்துகளை நான் ஏதும் சொல்லவில்லையே. திருத்திக்கொள்வதை பற்றி நானும் உங்களுக்கு நிறையச் சொல்லலாம். அங்கு மாற்றுக்கருத்தை இன்னொரு பயனரும் தான் தெரிவித்தார். அவரின் கருத்தை நான் ஏதும் சொல்லவில்லையே. எங்கு எப்போது எப்படி பேச வேண்டும் என்று நீங்கள் சொல்லித்தர வேண்டாம்.

//இது முதல் முறையல்ல. //

இதையே நானும் உங்களுக்கு திருப்பிச் சொல்லலாமே. அடாவடித்தனம், சீண்டல் எனக்கு கைவந்த கலை, தப்பி ஓடி விட்டேன், அதை வேறு ஒப்புக்கொண்டதாக சொல்லியது. இப்படி எல்லாம் பேசியது யார்? என்னைப் பொறுத்தவறை விக்கிப்பீடியாவில் மன்னிப்பு கேட்பது என்பது எல்லாம் பெரிய வார்த்தை. திருப்பிப் பெற்றுக்கொள்வது, வருத்தம் தெரிவிப்பது, அடித்துத் திருத்துவதே போதுமானது.

நான் செய்த தவறு கோழிமுட்டைக் கதையை நீங்கள் ஆரம்பித்தது எனச் சொல்லியது தானே. அதை திருப்பிப் பெற்றாகிவிட்டது. உங்களைப் போல் அடாவடித்தனம், ஓடி ஒழிதல், சீண்டல் உங்களுக்கு கை வந்த கலை என்றெல்லாம் தீர்மானமான பழியை நான் யார் மேலும் போடவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:03, 2 மார்ச் 2014 (UTC)

டென்மார்க் சண் தொகு

ஒரு infobox சேர்த்துவிடுகிறீர்களா? நன்றி. - Uksharma3 (பேச்சு) 03:31, 2 மார்ச் 2014 (UTC)

விளக்கம் தேவை தொகு

விக்கிப்பீடியாவின் கொள்கைகளின்படி வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது என்றிருக்க www.katturai.com தளத்தினை எப்படி நீங்கள் விளம்பரங்கள் அல்ல எனக் கருதலாம்? --AntonTalk 10:54, 3 மார்ச் 2014 (UTC)

www.katturai.com தளத்திற்குரிய பயனர் வேறு கட்டுரைகளில் இத்தளம் உட்பட்ட பல முகவரிகளைச் சேர்த்துள்ளார். இதனடிப்படையில் விக்கிப்பீடியாவின் கொள்கைகையின்படி எப்படிச் செயற்படுவது? --AntonTalk 10:59, 3 மார்ச் 2014 (UTC)

ஆஸ்திரேலியா கட்டுரையில் இவ்விணைப்புகளைத் தந்தது கட்டுரை.கொம் பயனர் அல்ல. இங்குள்ள எமது பயனர் ஒருவரே. இவை குறிப்பிட்ட கட்டுரை பற்றிய தகவல்களையே தருகிறது. விளம்பர நோக்கில் அவை இணைக்கப்படவில்லை என்பதாலேயே அவற்றை மீள்வித்தேன். நீங்கள் நீக்கிய ஏனைய இணைப்புகளை நான் சோதிக்கவில்லை. இணையதள நிருவாகியே இணைத்தால் அவற்றை நீக்குவதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 11:16, 3 மார்ச் 2014 (UTC)
வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது என்பதன் அர்த்தம் என்ன? என்னுடைய இணையத்தளத்திற்கு வேறு ஒருவர் இணைப்புக் கொடுக்கலாமா? --AntonTalk 11:18, 3 மார்ச் 2014 (UTC)
அப்படியல்ல. www.chennaishopping.com என்பது ஒரு வணிக நோக்குள்ள இணையதளம். இவை போன்றவற்றுக்கு இணைப்புக் கொடுப்பது நல்லதல்ல. மேலும், வணிக நோக்கல்லாத katturai.com போன்ற இணையதளங்களை இணையதள உரிமையாளரே வந்து இணைப்பது ஒரு விளம்பரமாகவே கருதலாம். அவ்விணையதளத்துடன் சம்பந்தமில்லாத ஒருவர் இணைத்தால் அதனைப் பரிசீலிக்கலாம். குறிப்பிட்ட கட்டுரைக்குத் தகுந்ததாக இருப்பின் ஏற்றுக் கொள்ளலாம். இது குறித்து ஏற்கனவே உரையாடியுள்ளோம். தனது வலைப்பதிவைத் தானே இணைப்பது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 11:29, 3 மார்ச் 2014 (UTC)
எங்கு உரையாடப்பட்டுள்ளது? katturai.com ஒரு வணிக நோக்கில் அமைந்துள்ளது. ஆ.வி Affiliate, tracking or referral links, i.e., links that contain information about who is to be credited for readers that follow the link. If the source itself is helpful, use a neutral link without the tracking information. இப்படியிருக்க எப்படி வணிக நோக்கல்லாமல் அமைந்துள்ளது? katturai யின் referral link இங்கு http://www.fly2pattaya.com/ (Pattayaa @ Rs. 24,000 only) போகிறது. --AntonTalk 11:42, 3 மார்ச் 2014 (UTC)
அபாண்டமான குற்றச்சாட்டு. அது referral link அல்ல. தளத்தில் இடம்பெற்றுள்ள விளம்பரம். அதில் affiliate, tracking, referral லிங்க் எதுவுமே அல்ல என்பது அதனைப் பார்க்கும் யாருக்குமே தெரியும். --மாயவரத்தான் \உரையாடுக 13:58, 3 மார்ச் 2014 (UTC)

மாயவரத்தான், http://www.fly2pattaya.com/?page_id=43 - இங்குள்ள இரமேசும் http://www.katturai.com/?page_id=1891 இங்குள்ள மாயவரத்தானும் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்? அப்படியென்றால், ஒரே நபர் தன்னுடைய இன்னொரு தளத்துக்கு விளம்பரம் தர affiliate tracking தேவையில்லை :) நிற்க !

ஆத்திரேலியா பக்கத்தில், கட்டுரை.காம் இணைப்புகளைச் சேர்த்தவர் கலையரசி. இவருடைய செயற்பாட்டிலோ குறிப்பிட்ட இணைப்புகளிலோ வணிக நோக்கம் இருப்பதாக கருத இடம் இல்லை.

ஆனால், தேனி சுப்பிரமணியின் நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொண்டு செய்தி வெளியிடுகிறீர்கள். பிறகு, அதையே மேற்கோளாகச் சுட்டி தேனி சுப்பிரமணி தனது கட்டுரையில் சேர்க்கிறார். அவரை நீங்கள் பேட்டி எடுப்பீர்கள். பிறகு, அவர் அதை ஊடக இணைப்பாக தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்த்து விடுவார். தொடர்ந்து தன்னைப் பற்றி தங்கள் தளத்தில் வந்துள்ள செய்திகளுக்கு இணைப்பு தந்து விடுவார். இவையெல்லாம் என்ன வகையான விக்கிப்பீடியா கொள்கையின் கீழ் வருகிறது என்று தெரியவில்லை. --இரவி (பேச்சு) 14:37, 3 மார்ச் 2014 (UTC)

மீண்டும் ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு. ஆஸ்திரேலியா குறித்து அந்தக் கட்டுரையை இங்கே இணைத்த பயனர் கலையரசி யார் என்பது எனக்குத் தெரியாது. தவிர இப்படி இங்கே அந்தக் கட்டுரை இணைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இன்று தான் தெரியும். தேனி சுப்ரமணியனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது, நண்பர்கள் ஆண்டோ பீட்டர், ராம சுகந்தன் ஆகியோரின் அழைப்பின்பேரினாலும், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களுடன் இருந்த பழக்கத்தினாலும் அவர் வெளியிட்ட நூல் விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது. நண்பர் தேனி சுப்ரமணியன் அவர்களையும் ஏற்கனவே தெரியும். எனவே அது குறித்து கட்டுரை.காம்-ல் செய்தி வெளியிடப்பட்டது. ஆக, இந்த இரண்டு கட்டுரைகளையும் விக்கிப்பீடியாவில் இணைத்தது நான் அல்ல. எனவே, இதில் வணிக நோக்கம் என்பது தவறான கட்டுக்கதை. மற்ற பயனர் அதனை இணைத்தால் அதனை அப்போதே மட்டுறுத்தியிருக்கலாமே? இப்போது ஒரு நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பில் கலந்து என் கருத்தை சொன்ன பிறகு அதையெல்லாம் தோண்டி எடுத்து என்னவோ நானாக அந்த இணைப்புகளை இணைத்திருப்பது போல ஒருவர் சொல்லுவதும், அதற்கு சம்பந்தமேயில்லாமல் என்னை இங்கே இழுத்து தேனி சுப்ரமணியம் இணைத்த கட்டுரைகளைப் பற்றி சொல்வதும் சரியல்ல. கட்டுரை.காம்-ல் என்னென்ன செய்திகள் வெளியாகலாம், யாருடைய பேட்டிகள் வெளியாகலாம் என்று முடிவு செய்யவேண்டியது என்னுடைய முழு உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமையை நான் பகிர்ந்தளிக்கவில்லை. நான் சொல்லி, இன்னொருவர் கட்டுரை.காம் இணைப்புகளை இங்கே இணைத்திருப்பார்கள் என்று நீங்களாக கற்பனை செய்து கொள்வதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எதுவாக இருந்தாலும் ஆதாரம் தேவை. அது இருக்கிறதா? கட்டுரை.காம் என்பது தனிப்பட்ட ஒருவர் எழுதும் வலைப்பூ அல்ல. அதில் பலர் எழுதி வருகிறார்கள். இது நாள் வரை பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அப்படி விக்கிப்பீடியா மூலம் விளம்பரம் (எதுவும் வரும்?!) என்று நினைத்திருந்தால் இந்நேரம் நான் பல விக்கிப்பீடியா வெளியிணைப்புகளை நேரடியாகக் கொடுத்திருந்திருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றை கவனித்து யாரும் வேறு பயனர் நீக்கும் வரைக்கும் அவை விக்கியில் இருந்திருக்கும். ஆனால் இப்படிப்பட்ட கவனிப்புகள் கட்டுரை.காம்க்கோ, மாயவரத்தானுக்கோ தேவையில்லை.

விக்கிப்பிடியா எந்த ஒரு தனிமனிதரின் சுய விருப்பு, வெறுப்புகளுக்கோ, குழு மனப்பான்மைகளுக்கோ இடமல்ல. எனவே தனிமனிதக் காழ்ப்புணர்ச்சியை விட்டு விட்டு எதுவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. -மாயவரத்தான் (பேச்சு) 14:46, 3 மார்ச் 2014 (UTC)

ஓ, நீங்கள் தளத்தில் தரபட்டுள்ள விளம்பரங்களைக் கூறுகிறீர்கள் போல் தெரிகிறது? அப்படிப் பார்க்கப் போனால், இப்போதுள்ள தளங்கள் எதனையும் நாம் வெளி இணைப்பாகக் கொடுக்க முடியாது போலிருக்கிறது. எனினும் ஆ.வி. யில் உள்ளதை மொழிபெயர்த்து ஒரு கொள்கைப் பக்கமாகச் சேர்க்கலாம் (ஏற்கனவே இல்லாவிட்டால்) . நீங்கள் மொழிபெயர்ப்பீர்களா?--Kanags \உரையாடுக 11:51, 3 மார்ச் 2014 (UTC)
விளம்பரம் மட்டுமல்ல என்னுடைய கருத்து. இதனை முழுமையாகப் பாருங்கள். ஆ.வி.யில் உள்ள வெளியிணைப்பு கொள்கை போன்று இங்கு பெரிதாகக் கவனிப்பதில்லை. இங்குள்ள மொழிபெயர்ப்பும் சிறிதளவே உள்ளது. கடைப்பிடிக்கப்படும் என்றால் மொழிபெயர்க்கலாம். --AntonTalk 12:00, 3 மார்ச் 2014 (UTC)

பார்க்க: விக்கிப்பீடியா:வணிக இணைப்புகள் கண்காணிப்பு. இணைக்கபட்டுள்ள தளத்தின் பக்கம், குறிப்பிட்ட கட்டுரைத் தலைப்பு தொடர்பாக நேரடியாக வணிக நோக்கு கொண்டிருந்தால், வணிக இணைப்பு என்று கருதி நீக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, ஆத்திரேலியா தொடர்பான கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள பக்கம் ஆத்திரேலியாவுக்குச் சுற்றுலா விற்பனை செய்தாலோ ஆத்திரேலியா பற்றிய ஒரு நூலை விற்பனை செய்தாலோ வணிக இணைப்பாக கருதலாம். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் வேறு ஏதாவது ஊர் தொடர்பாக விற்பனை, பொதுவான விளம்பரங்கள் இருந்தாலோ வணிக இணைப்பாக கருத இயலாது.

தமிழ் இணையத்தில் உள்ளடக்கம் குறைவு, தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்கள் குறைவு ஆகியவற்றை முன்னிட்டு வெளியிணைப்புகள், மேற்கோள்கள் தொடர்பாக மிகவும் நெகிழ்வான ஒரு நடைமுறையையே கொண்டிருக்கிறோம். இவற்றில் இன்னும் கூடுதல் தரத்தைக் கொண்டு வர வேண்டும் எனில் தொடர்புடைய கொள்கைகளில் மாற்றங்கள் கோரலாம்.

குறிப்பிட்ட பயனர் தன்னுடைய தளத்தை தானே இணைக்காவிட்டாலும் அவருக்கு அறிமுகமான இன்னொருவர் தொடர்ந்து அத்தகைய இணைப்புகளைத் தரலாம். இது போன்ற விசயங்களை கொள்கைகள் மூலம் தடுக்க முடியாது. வெளி இணைப்பு குறிப்பிட்ட தலைப்புக்குப் பொருத்தமான உயர் தரமுடைய இணைப்பா என்று மட்டும் காணலாம். --இரவி (பேச்சு) 12:31, 3 மார்ச் 2014 (UTC)

வெளி இணைப்புகள் தொடர்பானவை என்றால் ஆலமரத்தடியில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் உரையாடலாமே. மேலும் எட்டாவது விதியைப் பார்க்கவும்.

//ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.//

அதாவது ஒரு உதாரணத்துக்கு கனக சிறீதரனும் நானும் பேசி வைத்துக்கொண்டு என்னுடைய தென்மதுரை முதல் தென்காசி வரை வலைபூவை அவரும் அவருடைய வலைபூவை நானும் கமுக்கமாக இணைத்து இருவரும் ஆதாயம் அடைய முடியும். ஆனால் இவர்கள் ஆதாயமுரண் தேடத்தான் அப்படிச் செய்கிறார்களா என்பதை எப்படி உறுதிப்படுத்த முடியும்? கட்டுரை.காமை கொடுக்கும் போது அது ஒரு பொதுத்தளம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு வரலாற்று சிக்கல் பற்றிய கட்டுரையில் கட்டுரை.காம் போன்ர தளங்களை கொடுக்கும் போது அதில் வரலாறு பற்றி எழுதுபவர் வரலாற்று நிபுணரா என்று எப்படித் தெரியும். ஆக வெளி இணைப்புகலில் வணிக நோக்கம், கட்டுரை தொடர்பு தரம் என பலவற்றை பார்க்க வேண்டுமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:03, 3 மார்ச் 2014 (UTC)

மேற்படி ஆஸ்திரேலியா குறித்த கட்டுரையை எழுதியவர் ஆஸ்திரேலியாவில் பல ஆண்டு காலம் வசித்து வருபவர். ஆஸ்திரேலிய வானொலியில் தமிழ்ப் பிரிவில் பல்லாண்டு காலம் சேவையாற்றி வருபவர். தவிர பல கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்டுள்ளவர். #தகவலுக்காக --[User:மாயவரத்தான்|மாயவரத்தான்]] \உரையாடுக 14:49, 3 மார்ச் 2014 (UTC)

இங்குள்ள உரையாடல் ஆஸ்திரேலியா கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வெளியிணைப்பு பற்றியது. அதை இணைத்தவர் வணிக நோக்கில் இணைக்கவில்லை. ஆனால் அது தேவையில்லை என்பதுதான் என் நிலை. சில செயற்பாடுகள்/சிலருடைய செயற்பாடுகள் சில ஐயங்களுக்கும், அது சோதனைகளுக்கு இட்டுச் செல்லும். இதனைச் செய்ய முடியாது என்று எவரும் சொல்ல முடியாது. எ.கா: விக்கிப்பீடியா:கைப்பாவை சோதனை அல்லது ஆட்டுவிப்பவர் (Sockmaster) / கையாட்கள் (Meatpuppets) பற்றிய அறிதல். எனவே, இங்கு விளக்கம் கேட்கப்பட்டது பயனர் பற்றியதல்ல. தேவைப்பட்டால் தேவைப்படும் இடத்தில் கேட்கப்படும். ஆதாரம், ஆதாயம் என்ற நிலைப்பாட்டிலிருந்து என்றால் இங்கிருந்தே ஆரம்பிக்கலாம். புரிதலுக்காக: //ஆக்கப்பூர்வமாக செயல்பட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்// என்னுடைய ஆக்கப்பூர்வமாக பங்களிப்புக்கள் விக்கியினுள் இருக்கின்றன. நான் திடீரென்று முளைத்து வந்தவனோ, யாருக்கும் சார்புடையவனும் அல்ல. என் பயனர் பக்கத்தில்கூட என் மென்பொருள் வலைப்பக்கங்களில் ஒன்றையாவது இணைக்கவில்லை, எனக்குத் தெரிந்தவர் என்பதற்காக யாருக்கும் கட்டுரையும் உருவாக்கவில்லை. என் கைகள் அழுக்காக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாகவுள்ளேன். உரையாடல் தொடர்ச்சியின் நிமித்தம் இங்கு பதிலளிக்கிறேன். மேலும் இது பற்றி உரையாட வேண்டுமாயின் குறிப்பிட்ட வெளியில் தொடரலாம். --AntonTalk 17:08, 3 மார்ச் 2014 (UTC)

யாருமே இங்கே திடீரென முளைத்து வந்தவர்கள் இல்லை. யாருக்கும் யாரும் சார்புடையவர் இல்லை என்றோ அல்லது தான் இன்னாருடைய கையாள், இவருடன் வர்த்தக ரீதியாக உறவுள்ளதால் மறைமுகமாக இவருக்கு ஜல்லியடிக்கிறேன் என்றோ யாரும் ஒத்துக் கொள்ளப்போகிறார்களா என்ன? கட்டுரை.காம் என்னுடைய இணைய தளம். அதில் நான் மட்டுமே எழுதுவதில்லை. கட்டுரை.காம் ஆஸ்திரேலியா குறித்த கட்டுரையில் வெளி இணைப்பில் கட்டுரை.காம் குறித்த இணைப்பை நான் இணைக்க வில்லை. அதை இணைத்த பயனர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. எனவே இதில் உள்நோக்கம் கற்பித்து பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. தவிர அந்த இணைப்புகள் எல்லாம் பல மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது. இப்போது திடீரென வந்து இதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பிப்பது சரியல்ல. இது குறித்து மேலும் விவாதிப்பது என் தகுதிக்கு சரியானதல்ல. உள்நோக்குடன் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பதிலுக்கு பதில் அளிப்பது எனக்கு கால விரயம். [User:மாயவரத்தான்|மாயவரத்தான்]] \உரையாடுக 18:45, 3 மார்ச் 2014 (UTC)

மீண்டும் என் உரையாடலைப் பார்த்து, விரும்பினால் அதற்குப் பதிலளிக்கவும். --AntonTalk 18:27, 3 மார்ச் 2014 (UTC)

User:மாயவரத்தான் இந்த உரையாடல் எதுவும் உங்களை வைத்து தொடரவில்லை. உள்நோக்கம் கொண்டு உங்கள் மீது பழி போடுகிறோம் என்பது எல்லாம் உங்களின் அதீத கற்பனையே. இதில் உள்நோக்கத்துக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

//இப்போது திடீரென வந்து இதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பிப்பது சரியல்ல. //

திடீரென ஆர்ம்பிப்பது சரியில்லையா? அப்படி ஏதும் விக்கி விதி இல்லையே. இதைப்போல் தரக்கண்கானிப்பிலும், தவறாகச் செய்த சில விடயங்களை விக்கியில் திருத்துவதும் ஏற்கனவே நடந்துள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:57, 3 மார்ச் 2014 (UTC)

நடப்பு திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் தொகு

தற்போது வெளியாகி அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் பற்றி, அப்படத்தின் பெயர் தலைப்பாக இடப்பட்டு, கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதேபோல தொலைக்காட்சித் தொடர்கள் அவற்றின் பெயர் தலைப்பாக இடப்பட்டு கட்டுரைகள் எழுதப் படுகின்றன. இவை எவ்விதம் அனுமதிக்கப் படுகின்றன? அப்படியானால் கடைகளில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி கட்டுரை எழுதலாமா? உதாரணமாக "கம்ப்ளான்" என ஒரு கட்டுரை எழுதலாமா? - Uksharma3 (பேச்சு) 02:28, 8 மார்ச் 2014 (UTC)

விளம்பரமாக இல்லாமல் நடுநிலையில் நின்று இவ்வாறான கட்டுரைகளை எழுத வேண்டும். காம்ப்ளான் (en:Complan) பற்றி எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 03:44, 8 மார்ச் 2014 (UTC)

உதவி தொகு

ஜார்வா மற்றும் ஜாரவா பழங்குடியினர் கட்டுரைகளில் ஒன்றிணைப்பு தொடுப்பிணைப்பினை இணைத்திருந்தேன். இரண்டாவது கட்டுரையைத் தொடங்கிய பயனர் கிருஷ்ணமூர்த்தி, கிட்டத்தட்ட முதல் கட்டுரைகளில் இருந்த அதிகப்படியான விவரங்களை இரண்டாவதில் சேர்த்துவிட்டு கட்டுரைகளை இணைத்துவிடும்படி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். நான் என்னால் இயலாது, நிர்வாகிகள் மட்டுமே செய்ய முடியும் என்று பதிலளித்தேன். இப்பொழுது ஜார்வா கட்டுரையின் உள்ளடக்கங்களை அவர் நீக்கியிருக்கிறார். அதனை மீளமை செய்து இரு கட்டுரைகளின் வரலாறும் காக்கப்படும் வகையில் அவற்றை ஒன்றிணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:45, 8 மார்ச் 2014 (UTC)

சந்தேகம் தொகு

ஐயா, முதற்பக்கக் கட்டுரைகள் இற்றை செய்யப் படவில்லை. கவனிக்கவும்...--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:18, 10 மார்ச் 2014 (UTC)

ஆமாம்--aho;- பேச்சு 11:49, 10 மார்ச் 2014 (UTC)

!!!வில்லுப்பாட்டு!!! ஞாபகம் வருகிறது... :) :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:31, 10 மார்ச் 2014 (UTC)
ஆமாம்--aho;- பேச்சு 11:51, 12 மார்ச் 2014 (UTC)

உங்கள் பார்வைக்கு தொகு

சிறீதரன் ஐயா இராமதேவ சித்தர் என்ற கட்டுரை ஒரு பொய்யான தகவல்களை ஆவ‌ணப்ப‌டுத்தும் முயற்சி ( இராமதேவ சித்தர் ) அக்கதை நீக்க வேண்டும் நன்றி----- Mohamed ijazz

அன்பின் கனகா அவர்களே நான் எழுதிய பக்கத்தில் நடுநிலைமீறியதாக ஐயம் ஏற்படும் பகுதியை நீக்கி விட்டேன். இதே கருத்தை ஒத்த மற்றொரு சமயத்தை குற்றம் சாட்டும் பக்கத்தையும் பார்வையிடவும். நன்றி.--ஹிபாயத்துல்லா (பேச்சு) 14:38, 28 மே 2014 (UTC) Reply

சரி பார்க்க தொகு

எனது கையொப்பத்தை வைத்து தாங்கள் என்னை கிண்டல் செய்தீர்கள் இது ஒரு சரியான பழக்க வழக்கம் அல்ல, இவ்வாறு நடந்து கொள்வதால் மற்றப் பயனர்களின் மனம் புண்படும் என்பது உங்களுக்கும் தெரியும், எனினும் தெரிந்தும் தெரியாதவாறு கிண்டல் செய்வது நல்லதற்கல்ல, நான் செல்வகுருநாதன் ஐயாவின் வழியைக் கடைப்பிடிக்க உள்ளேன்,இப்பொது இங்குள்ள கையொப்பம் ஒழுங்காக உள்ளதா எனப் பார்க்கவும்--User:L.Shriheeran பேச்சு 12:25, 12 மார்ச் 2014 (UTC)

தம்பி, இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்..., அவர் தங்கள் கையொப்பத்தை எங்கு கிண்டல் செய்துள்ளார்???, தனக்குத் தோன்றியதை கூறினார். செல்வகுருநாதன் ஐயா சிறந்தவர், எங்களைப் போன்ற மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டி, அவர் அறிவுரைகளை பின்பற்றல் சிறந்தது. மாணவர்களாகிய நாங்கள் வயதில் சிறியவர்கள், அனுபவத்தால் இளையவர்கள்...., மற்றவர்களை மதித்து நடக்கவேண்டும். தம்பி தாங்கள் அப்போதே தங்கள் பேச்சுப் பக்கத்தில் அதைக் கோரியிருக்கலாம்..., (என்னை அவ்வாறு விழிக்கவேண்டாம் அல்லது இவ்வாறு அழையுங்கள் அல்லது நான் எனது கையொப்பத்தை மாற்றுகிறேன்..; இது இப்பிரச்சினையை அங்கே முடித்திருக்கும்) , குறிப்பு: யாழ்ஸ்ரீ தங்களை அஹோ என முதலில் விளித்தது நான் தான். தாங்கள் என்னுடனும் மற்ற சிலருடனும் நகைச்சுவையாகவே உரையாடுவதால் இதை பெரிதாக எடுக்க மாட்டீர்கள் என நினைத்தேன். மன்னிக்கவும், இனித் தங்களுடன் தவிர்த்துக் கொள்கிறேன்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:19, 12 மார்ச் 2014 (UTC)

தனக்குத் தோன்றியதை கூறினார் எனக்கூறினீர்கள், அவ்வாறு கூறுவது சரியல்ல என்பது அவருக்குத் தெரியாதா? ஏனெனில் நான் அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவன் தானே அறிமுகமாகாத பயனர் என்றால் பரவாயில்லை--User:L.Shriheeran பேச்சு 11:03, 13 மார்ச் 2014 (UTC)

யாழ்ஸ்ரீ, உங்கள் குற்றச்சாட்டு தொடர்பான உரையாடல் அனைவரினதும் பார்வைக்கு இங்கு உள்ளது..--Kanags \உரையாடுக 11:50, 13 மார்ச் 2014 (UTC)
@யாழ்ஸ்ரீ , //தனக்குத் தோன்றியதை கூறினார்// என்பது அவரது கணினியில் அகோ (AHO) என தோன்றியதால் கூறினார். என் கணினியில் யாழ்ஸ்ரீ என தெரிவதால் அவ்வாறு அழைப்பது போல்... ஊர்க்கணினியில் அகோ தான்.. மீண்டும் மன்னிக்கவும்... :( :) :P --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:07, 13 மார்ச் 2014 (UTC)

தம்பி. இத எதுக்குப்பா பெருசுப்படுத்துற? என்னை அகோன்னு அழைக்க வேண்டாம். யாழ் ஸ்ரீன்னு கூப்டுங்கன்னு சொல்லிட்டாப் போச்சு. உனக்கு மனவருத்தம்னு தெரிஞ்சதுக்கு அப்றம் உன்ன யாரும் அப்படிக் கூப்ட மாட்டாங்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:48, 13 மார்ச் 2014 (UTC)

எனக்கும் நீண்ட நாட்களாக இந்த ஐயம் இருந்து வந்தது. இப்பொழுது புலனானது. பயனர்கள் அருள்கூர்ந்து ஒருங்குறி பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். ♦khjtd;♦ என்பது ஆதவனின் சகோதரர் மாதவன் என எண்ணுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:59, 13 மார்ச் 2014 (UTC)

:) எல்லாம்....! ,, நல்ல வேளை நான் தப்பிச்சன் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:19, 13 மார்ச் 2014 (UTC)

நன்றி தொகு

தங்கள் பாராட்டுக்கு நன்றி. எழுதுவதை விட மற்றவர்களை ஊக்குவிக்கும் உங்களைப் போன்றவர்கள் அதில் இருப்பது தான் விக்கிக்கு பெருமளவு நன்மை செய்யும். வாழ்க, வளர்க உங்கள் தொண்டு. - Uksharma3 (பேச்சு) 01:04, 14 மார்ச் 2014 (UTC)

  விருப்பம்--User:L.Shriheeran பேச்சு 07:57, 14 மார்ச் 2014 (UTC)

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:24, 14 மார்ச் 2014 (UTC)

  • உங்களின் கேள்விக்கு நன்றி. இவர் (List of Indian Ambassadors to the United States.

ஆசப் அலி (1947-1948), பெனகல் ராமா ராவ் (1948-1949), விஜயலட்சுமி பண்டிட் (1949-1952)) தூதுவர்களில் மூன்றாவது நபர். ஆனால் பெண் என்ற முறையில் முதல் நபர். நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 06:48, 5 சூன் 2014 (UTC)Reply

மே 12 - இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமெரிக்காவிற்கான முதல் பெண் தூதராக விஜயலட்சுமி பண்டிட் (1949-1952)பதவியேற்றார். இவர் இந்திய சுதந்திரத்திற்க்குப் பிறகு பதவியேற்ற அமெரிக்காவிற்கான மூன்றாவது தூதராவார். இந்த வாக்கியம் சரியா? இதை கொஞ்சம் சரிபாருங்கள் --Muthuppandy pandian (பேச்சு) 07:02, 5 சூன் 2014 (UTC)Reply

2014 ஜனவரி 11ஆம் தேதி தி இந்து தமிழ் நாளிதழின் துணை பதிப்பில் 4ஆம் பக்கத்தில் ஆச்சரியமும் அதிச்சியும் என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியா இந்திய மொழிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தலைப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் குறைந்த அளவாவது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்று செய்யப்படுவதில்லை என்பது ஒரு வருத்தம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் (Disease) என்ற நோய் இதில் ஆங்கிலத்தில் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழில் சொர்ப்ப அளவே தமிழ் படுத்தப்பட்டுள்ளது. இந்த விசயம் பற்றி எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்--Muthuppandy pandian (பேச்சு) 06:23, 18 சூன் 2014 (UTC)Reply

ஆங் சான் சூச்சி, பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர், சனநாயகப் போராளி. இந்த தகவலை திருத்தி உதவியதற்க்கு மனமார்ந்த நன்றி. திருத்துக்கொள்ளுறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 07:29, 21 சூன் 2014 (UTC)Reply

அதிசய மனிதர் என்ற கட்டுரையை நீக்கிவிடுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 04:36, 9 சூலை 2014 (UTC)  Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 9 சூலை 2014 (UTC)Reply

படிமங்களை காமன்சுக்கு ஏற்றுதல் தொகு

தமிழ் கட்டுரைக்காக பதிவேற்றிய படிமத்தை விக்கி காமன்சிலும் கிடைக்குமாறு செய்து பின் அதனை ஆங்கிலக் கட்டுரைக்கு பயன்படுத்த முடியுமா? ஆம் எனில் எவ்வாறு செய்வது? - Uksharma3 (பேச்சு) 05:56, 14 மார்ச் 2014 (UTC)

விக்கி நூல்கள் தொகு

தமிழியல் கட்டுரைத் தலைப்பினை அதன் முதல் பக்கத்தில் உரிய இடத்தில் இணைத்து உதவுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 02:27, 15 மார்ச் 2014 (UTC)

தமிழ் என்ற பகுப்பின் கீழ் சேர்த்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:25, 15 மார்ச் 2014 (UTC)

வார்ப்புரு: தகவல் பெட்டி தொகு

ஆர். அனந்த கிருஷ்ண சர்மா பக்கத்தில் ஒரு தகவல் பெட்டி இணைத்துள்ளேன். அது ஆங்கில கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. ஆனால் இது infobox writers என் உள்ளதால் ஒரு இடத்தில் "இலக்கிய வகை" எனக் காட்டுகிறது. infobox musician என உண்டா என்று தேடிப்பார்க்க முயற்சி செய்தேன். தகவல் சட்டங்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை. உதவி ஆவணங்கள் பக்கதில் தகவல் சட்டம் பற்றி காணோம். எனது கட்டுரை ஒன்றில் நீங்கள் முன்னர் இணத்த தகவல் சட்டத்தை முன்னைய எனது சில கட்டுரைகளில் பிரதி பண்ணி பயன்படுத்தினேன். இந்தக் கட்டுரையில் ஆங்கிலக் கட்டுரையில் இருந்ததுபோல விரிவான தகவல் இருக்கட்டுமே என நினைத்து ஆங்கில கட்டுரையிலிருந்து பிரதி பண்ணி இங்கே ஒட்டி தகவலை தமிழில் எழுதினேன். இலக்கிய வகை என்பது தவிர மற்றவை சரியாக இருக்கின்றன. infobox musician என்ற தகவல் சட்டம் இருக்கிறதா? தகவல் சட்டங்களை எங்கே எப்படி எடுப்பது? - Uksharma3 (பேச்சு) 13:37, 17 மார்ச் 2014 (UTC)

உங்கள் பார்வைக்கு தொகு

ரோமன் ரோலண்ட் நூலகம், புதுச்சேரி கட்டுரை முதலில் பயனர் Prabhupuducherry ஆல் உருவாக்கப்பட்டு, பின்னர் பயனர் ஆதவனால் சரியான தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஆனால் புதுத் தலைப்பிலுள்ள கட்டுரையின் வரலாற்றில் பிரபுவின் பங்களிப்பு காட்டப்படவில்லை. பழைய கட்டுரை ஆதவனால் நீக்கல் வேண்டுகோள் இடப்பட்டு காணப்படுகிறது. இது நகர்த்தலில் ஏதாவது சிக்கலால் ஏற்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் உங்கள் பார்வைக்கு இதனைக் கொண்டு வந்தேன். ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:35, 19 மார்ச் 2014 (UTC)

ஆதவன் வழிமாற்றுப் பக்கத்தை நகர்த்தியதால் தான் இவ்வாறு ஏற்பட்டிருக்கின்றது. ரோமன் ரோலண்ட் நூலகம், புதுச்சேரி பக்கத்தை நீக்கிப் பின்னர் ரோமன் ரோலண்ட் நூலகம்,, புதுச்சேரி பக்கத்தை ரோமன் ரோலண்ட் நூலகம், புதுச்சேரி பக்கத்திற்கு நகர்த்தினால் சரியாகிவிடும் என நினைக்கின்றேன்.

இதுவே ரோமன் ரோலண்ட் நூலகம், புதுச்சேரி பக்கத்தின் முதல் தொகுப்பு.

இந்த இரண்டாவது தொகுப்பில் தான் ஆதவன் உள்ளடக்கங்களைச் சேர்த்திருக்கின்றார். வழிமாற்றுப் பக்கத்தை நகர்த்தியதால் தான் பிரபுவின் தொகுப்பு இல்லாமல் போனது. நகர்த்தல் பதிகையைப் பார்த்தால் தெளிவாக விளங்கும்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:07, 19 மார்ச் 2014 (UTC)

 Y ஆயிற்று--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:42, 20 மார்ச் 2014 (UTC)

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:19, 20 மார்ச் 2014 (UTC)

என்ன செய்யலாம் தொகு

  • தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களையும் அதனைப் பாடிய புலவர்களையும் அழிய விடலாமா? --Sengai Podhuvan (பேச்சு) 22:43, 22 மார்ச் 2014 (UTC)
  • தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களை மேற்கோளாகக் காட்ட இயலாது எனின் சங்கப்பாடல்களை மேற்கோளாகக் காட்டி எழுதப்பட்ட அத்தனைக் கட்டுரைகளுக்கும் இந்தக் குறியீடு இடவேண்டி வரும் என்பது தங்களுக்குத் தெரியாதா? --Sengai Podhuvan (பேச்சு) 23:17, 22 மார்ச் 2014 (UTC)
பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுவது வேறு. ஆனால் நபர்கள் பற்றிய கட்டுரையில் எவ்வித வேறு மேற்கோள்களும் சுட்டிக் காட்டப்படாதவிடத்தில், அவர் இயற்றிய பாடலை மட்டும் மேற்கோள் காட்டுவது போதாது என்பதையே சுட்டிக் காட்டினேன். மேற்கோள் இல்லாதததற்காக கட்டுரைகள் எதுவும் அழிக்கப்பட மாட்டாது.--Kanags \உரையாடுக 23:30, 22 மார்ச் 2014 (UTC)

எந்தக் கட்டுரை பற்றி இதில் பேசுகிறீர்கள் எனத் தெரிந்தால் ஏதாவது மேற்கோள் காட்டமுடியுமா என முயற்சி செய்யலாம். - Uksharma3 (பேச்சு) 01:53, 23 மார்ச் 2014 (UTC)

கூகுள் கட்டுரைகள் தொகு

வணக்கம்! கனக சிறீதரன் நான் கூகுள் கட்டுரை உரைகளை திருத்த ஆர்வமாக உள்ளேன் கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளில் மேம்படுத்தக் கூடிய கட்டுரைகளை உயர்தரமான கட்டுரைகளாக மாற்ற என்னிடம் பொறுமை உள்ளது மேலும் (புதிய ஏழு உலக அதிசயங்கள்,ஐதராபாத்து (இந்தியா),2008 இந்தியன் பிரீமியர் லீக்) போன்ற கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை தற்போது திருத்தி தரமுயர்த்தம் செய்துள்ளேன் இவற்றை மேம்படுத்தும் பொது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன சோதரா。◕‿◕。  ??--✍mohamed ijazz © (பேச்சு) 10:30, 28 மார்ச் 2014 (UTC)

தமிழ் எளிது தொகு

சொடுக்கிப் பாருங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 21:29, 3 ஏப்ரல் 2014 (UTC)

சிந்தாமணி நிகண்டு பாராட்டுக்குக் கடப்பாடு. --Sengai Podhuvan (பேச்சு) 10:47, 24 ஏப்ரல் 2014 (UTC)

நல்ல கருவி தொகு

அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. நேரத்தையும், உழைப்பையும் இது மீதப்படுத்த உதவும். இதை உருவாக்கியவரின் உழைப்பை எப்படி விபரிப்பதென்று தான் தெரியவில்லை. --G.Kiruthikan (பேச்சு) 10:50, 25 ஏப்ரல் 2014 (UTC)

எனக்கும் அக்கருவியைப்பற்றிக் கொஞ்சம் கூறுங்களேள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:12, 25 ஏப்ரல் 2014 (UTC)

உரையாடல் பகுதியைக் கவனியுங்கள் தொகு

இக்கட்டுரையின் உரையாடல் பகுதியைக் கவனிக்காமல் வார்ப்புருவை நீக்கிவிட்டீர்கள் என எண்ணுகிறேன். --ஆர்.பாலா (பேச்சு) 10:37, 30 ஏப்ரல் 2014 (UTC)

 Y ஆயிற்று--Kanags \உரையாடுக 11:38, 30 ஏப்ரல் 2014 (UTC)

பாராட்டுகள் தொகு

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்தை இற்றைப் படுத்தியதற்குப் பாராட்டுகள்! --பொன்னிலவன் (பேச்சு) 10:26, 5 மே 2014 (UTC)Reply

  விருப்பம் எனது நன்றிகள். நான் முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தலை பொறுப்பெடுத்துச் செய்துகொண்டிருக்கின்றேன். தினமும் அதிகாலையில் என்னால் இற்றைப்படுத்த முடியும் ஆயினும் நான் நிர்வாகியில்லை ஆதலால் வார்ப்புரு:Mainpage v2 இல் மாற்றம் செய்ய முடியவில்லை. உங்களால் முடிந்தால் திங்கள் தோறும் காலையில் இற்றைப்படுத்தி உதவுங்கள்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:05, 6 மே 2014 (UTC)Reply

அடுத்த கட்டுரைகள் இங்கு உள்ளன. நாளை காலையில் இற்றைப்படுத்தி உதவுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:21, 11 மே 2014 (UTC)Reply

ஆலோசனை தேவை... தொகு

வணக்கம்! திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை, திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை எனும் கட்டுரைகளை அண்மையில் எழுதினேன். இவர்கள் 'திருவீழிமிழலை சகோதரர்கள்' என அக்காலத்தில் பிரபலமாக அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இக்கட்டுரைகளை 'திருவீழிமிழலை சகோதரர்கள்' எனும் பெயரில் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் ஒன்றில் சேர்க்கலாமா? அல்லது ஏற்கனவே இருக்கும் தலைப்புகளில் (திருவீழிமிழலை சகோதரர்கள்) என சேர்க்கலாமா? கட்டுரையின் உள்ளே திருவீழிமிழலை சகோதரர்கள் என சிறப்பாக அழைக்கப்பட்டவர்களில் இவர் மூத்தவர் ஆவார் என இருக்கிறது. ஆனால் 'திருவீழிமிழலை சகோதரர்கள்' என தலைப்பிட்டு தேடினால், உடனடியாக கிடைக்காது.

செல்வசிவகுருநாதன், போதியளவு தகவல் இருந்தால் தனித்தனிக் கட்டுரைகள் இருக்கலாம். இப்போதுள்ள கட்டுரைகளில் குறுங்கட்டுரை அளவுக்கேற்ப தகவல் உள்ளன. தகவல்கள் சேரும் போது மேம்படுத்துங்கள். திருவீழிமமிழலை சகோதரர்கள் எனத் தனிப் பக்கவழி தேவையில்லை. மூத்தவருக்கு வழி மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 10:16, 12 மே 2014 (UTC)Reply

நன்றி! தங்களின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:33, 12 மே 2014 (UTC)Reply
வழிமாற்றுப் பக்கத்தின் தலைப்பிலிருந்த பிழையினை திருத்தியமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 13 மே 2014 (UTC)Reply

சந்தேகம் தொகு

வணக்கம் கனக்ஸ் என்னால் பதிவேற்றப்பட்ட படிமங்கள் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உண்டா ???--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 09:19, 13 மே 2014 (UTC)Reply

வாழும் நபர்கள் பற்றிய படிமங்கள் மிகக் கடுமையாகக் கவனிக்கப்படும். இறந்தவர்களின் படிமங்கள் நியாயமான பயன்படுத்தலுக்கு உகந்தவையே. அவை நீக்கப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு.--Kanags \உரையாடுக 09:22, 13 மே 2014 (UTC)Reply
விக்கிப்பீடியாவில் உள்ள துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளுக்காக சுமார் 1826 படிமங்கள் சேகரித்து வைத்துள்ளேன் அதில் வாழும்,இறந்தவர்களினதும் படிமங்கள் உள்ளன கோப்பைப் பதிவேற்றும் பொது எந்த அனுமதியின் கீல் பதிவேற்ற வேண்டும் கனக்ஸ் --✍ mohamed ijazz ☪® (பேச்சு) 09:53, 13 மே 2014 (UTC)Reply
விக்கிமீடியா பொதுவகத்தில் படிமங்கள் உள்ளனவா என்பதைப் பாருங்கள். அங்கு இருப்பவற்றை முதலில் பயன்படுத்துங்கள். (இங்கு அவற்றை மீண்டும் தரவேற்றத் தேவையில்லை). இறந்தவர்களின் படிமங்களை நியாயமான பயன்பாட்டு அடிப்படையில் இங்கு பதிவேற்றலாம். ஏனையவற்றின் பதிப்புரிமைகளைக் கவனியுங்கள். இல்லாவிட்டால் தரவேற்ற வேண்டாம்.--Kanags \உரையாடுக 11:13, 13 மே 2014 (UTC)Reply

ஒரு வேண்டுகோள் தொகு

 

வணக்கம் Kanags! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:27, 17 மே 2014 (UTC)Reply

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் தொகு

அடுத்த கட்டுரைகள் இங்கு உள்ளன. நாளை காலையில் இற்றைப்படுத்தி உதவுங்கள். வாராவாரம் இற்றைப்படுத்தல் உதவியை இப்பகுதியிலேயே கேட்டுவிடுகின்றேன்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:51, 18 மே 2014 (UTC)Reply

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 18:59, 18 மே 2014 (UTC)Reply
நன்றி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:19, 19 மே 2014 (UTC)Reply

விளக்கம் தேவை தொகு

தமிழ்நாட்டின் அடையாளங்கள் பக்கத்தில் தங்களது திருத்தல்களுக்கு நன்றி. எனது ஆய்வில் காந்தள், செங்காந்தள் அல்லது கார்த்திகை பூ என அழைக்கப்படும் மலரே தமிழ்நாட்டின் மாநில மலராக கருதப்படுகிறது. உயிரிய பெயரை குறிப்பிட்டதற்கான காரணம் என்ன? பூவிற்கு பதிலாக மலர் என்ற சொல்லை பயன்படுத்தியதில் பிழை உள்ளதா? தயவுக்கூர்ந்து விளக்கவும். தங்களது விளக்கம் எமது தவறுகளை திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும். நன்றி. Ahmasmi (பேச்சு) 17:41, 24 மே 2014 (UTC)Reply

இந்தக் கட்டுரையில் நான் செய்துள்ள திருத்தங்களை ஒருமுறை சரிபார்க்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:13, 26 மே 2014 (UTC)Reply

ஆண்டுகளில் முக்கிய தவறுகளைத் திருத்தியமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 08:34, 26 மே 2014 (UTC)Reply

கவனிக்கவும் தொகு

அஷ்ரப் ஷிஹாப்தீன்--✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 06:34, 31 மே 2014 (UTC)Reply

இஜாசு, இவ்வாறான கட்டுரைகளுக்கு நீக்கல் வார்ப்புரு இடக்கூடாது. பதிலாக, இணைப்பு வார்ப்புரு (mergeto) சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 06:40, 31 மே 2014 (UTC)Reply

உதவி தொகு

மெத்தை போடுதல் ஊசி கட்டுரையின் (சிறு)உள்ளடக்கத்தை தையல் ஊசி கட்டுரையில் இணைத்திருக்கிறேன். கட்டுரைகளை ஒன்றிணைத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:46, 1 சூன் 2014 (UTC)Reply

அண்மைய மாற்றங்கள் பகுதியில் இது காட்சிப்படுத்தப்படிருப்பதால், இப்போதைக்கு ஒன்றிணைக்க முடியாது. உங்கள் கோரிக்கையை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தருகிறேன். ஏனையவர்களின் கருத்தை அறிந்து இணைக்கலாம். எனக்கும் இணைப்பதே சிறந்ததாகப் படுகிறது.--Kanags \உரையாடுக 04:56, 1 சூன் 2014 (UTC)Reply

மேற்கோள்கள் தொகு

தேவைப்படும் கட்டுரைகள் என்பதால், என்னால் இயன்றதை செய்துள்ளேன். தங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறேன்.நன்றி--ஹிபாயத்துல்லா (பேச்சு) 13:45, 4 சூன் 2014 (UTC)Reply

அவசர உதவி தேவை தொகு

வணக்கம் கனக சிறீதரன் எனக்கு இந்த வார்ப்புரு Non-free magazine cover தேவைபடுகிறது லிங்க் தந்து உதவுங்களேன் நன்றி --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 05:21, 13 சூன் 2014 (UTC)Reply

@மொஹம்மத் இஜாஸ் அவர்களே வார்ப்புரு:Non-free magazine cover இன்னும் தமிழில் உருவாக்கப்படவில்லை. ஆங்கிலத்தில் உள்ளது (காண்க:en:Template:Non-free magazine cover)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:34, 13 சூன் 2014 (UTC)Reply
ஸ்ரீகர்சன் இதனை தமிழில் உருவாக்கி தர முடியுமா--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 05:44, 13 சூன் 2014 (UTC)Reply
மொழிபெயர்க்க முயற்சிக்கின்றேன்:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:47, 13 சூன் 2014 (UTC)Reply
@மொஹம்மத் இஜாஸ் அவர்களே  Y ஆயிற்று (காண்க:வார்ப்புரு:Non-free magazine cover)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:04, 13 சூன் 2014 (UTC)Reply

2014 உலகக்கோப்பை காற்பந்து... தொகு

விக்கிசெய்தியில் பணியாற்றிவிட்டு விக்கிப்பீடியா வந்தவன், (ஒரு உற்சாகத்தில்)சரியாக கவனிக்காது... இன்னொருமுறை விக்கிசெய்திகளுக்கு இணைப்பு தந்துவிட்டேன். உடனடியாக திருத்தியதற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:38, 14 சூன் 2014 (UTC)Reply

உதவி தொகு

இப்பக்கத்தின் இறுதியில் பயனர்:குழலியால் கேட்கப்பட்டுள்ள சந்தேகத்திற்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இங்கு நான் தெரிவித்துள்ளதற்கு உங்கள் ஆலோசனையையும் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறேன், நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:37, 18 சூன் 2014 (UTC)Reply

இன்னொரு உதவி... இங்கு கொஞ்சம் கவனியுங்கள். நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் நியூசிலாந்து வரலாறு நன்கு தெரிந்திருக்கலாம். தேவைப்படின் உரிய திருத்தங்களை செய்து உதவ இயலுமா? நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:09, 18 சூன் 2014 (UTC)Reply
நியூசிலாந்து கட்டுரையைக் கவனிக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:40, 18 சூன் 2014 (UTC)Reply
உதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:01, 20 சூன் 2014 (UTC)Reply

நடப்பு நிகழ்வுகள் தொகு

கனக்ஸ்: நடப்பு நிகழ்வுகளில் இதையும் சேர்க்கப் பரிந்துரைக்கிறேன். ஸார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கை நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 09:34, 19 சூன் 2014 (UTC)Reply

பாலா, இந்நடவடிக்கை தொடர்பான புதிய பழைய செய்திகளை (மேற்கோளுடன்) நீங்களே இங்கு இணைக்கலாம். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 10:48, 20 சூன் 2014 (UTC)Reply
நன்றி Kanags. புரிந்துகொண்டேன்.--ஆர்.பாலா (பேச்சு) 03:30, 22 சூன் 2014 (UTC)Reply

ஆலோசனை வேண்டும் தொகு

கனக சிறீதரன், வலைவாசல்:துடுப்பாட்டம்,விக்கிப்பீடியா:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள் பக்கங்கள் பற்றிய உங்களது கருத்து என்ன?--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 08:07, 20 சூன் 2014 (UTC)Reply

[[இஜாசு, நல்ல முயற்சி. பாராட்டுகள். என்னால் அதிக அளவு பங்களிக்க முடியாதுள்ளது.--Kanags \உரையாடுக 10:50, 20 சூன் 2014 (UTC)Reply

இயாசு அண்ணா அவர்களே! துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள் இப்பக்கத்திற்கு சில வலைத்தளங்களை உதவியாகப் பயன்படுத்தலாம். மேலும் வலைவாசல் பக்கத்தில் தாங்கள் துடுப்பாட்டம் கிரிக்கெட் என குறிப்பிட்டு இருந்தீர்கள். அதன் அழகு குன்றி இருந்தது ஆகவே தற்போது துடுப்பாட்டம் (Cricket) என மாற்றி அழகாக்கி உள்ளேன் தற்போது எவ்வாறு உள்ளது.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:15, 22 சூன் 2014 (UTC)Reply

  விருப்பம் நன்றி யாழ்ஸ்ரீ --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 08:17, 22 சூன் 2014 (UTC)Reply

தமிழ்ச் சொல் தொகு

’ஹோட்டல்’ என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஹோட்டல் குறித்த கட்டுரைகளுக்கான பகுப்பினை உருவாக்க உதவியாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:16, 21 சூன் 2014 (UTC)Reply

@Booradleyp1... உண்டுறை விடுதி. நீங்கள் பகுப்பு உருவாக்க நினைக்கும் ஹோட்டல்களுக்கு இந்த தமிழ்ச் சொல் பொருந்தும் என நினைக்கிறேன் (Boarding - To receive meals or food and lodging as a paying customer). சரவண பவன் (சென்னை), அன்னபூர்ணா (கோவை) ஆகிய ஹோட்டல்களுக்கு உணவகம் பொருந்தும் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:38, 21 சூன் 2014 (UTC)Reply

உதவி தொகு

பயனர் திலக்சன் உருவாக்கிய பகுப்புகளில் திருத்தங்கள் செய்தேன். ஆனால் இப்பணி எனக்குக் கொஞ்சம் ’புலிவால் பிடித்த கதை’யாக இருந்ததால், நானும் என்பங்குக்கு ஏதாவது குழப்பியிருப்பேனோ எனச் சந்தேகமாக இருக்கிறது. அவை சரியாக அமைந்துள்ளனவா என்று சற்று மேற்பார்த்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:21, 4 சூலை 2014 (UTC)Reply

பெயர் மாற்றியதன் காரணம் தொகு

வணக்கம் Kanags நான் நாதன் கிரேஸ் பற்றி கட்டுரை எழுதி இருந்தேன் அதை தாங்கள் நேத்தன் கிரெஸ் என்ற பெயரில் மாற்றி உள்ளீர் ஆனால் ஆங்கிலம் மொழியில் Nathan Kress எற்ற பெயரில் தானே உள்ளது? பெயர் மாற்றியதன் காரணம்? Thilakshan (பேச்சு) 14:23, 04 ஜூலை 2014 (UTC)

கோடான கோடி நன்றிகள் தொகு

  70,000 தொகுப்புகள்
ஐயா! உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள்.தமிழ் விக்கியில் 70,000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
உங்கள் பங்களிப்பு வேகத்தை கண்டு வியந்து இந்த பதக்கத்தை வழங்குகிறேன் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன் நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கிடைத்த அரிய சொத்து என்று கூறிக் கொள்வதில் மகிழ்கிறேன். --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 10:58, 11 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம் வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து 100 000 ஐயும் தாண்ட வாழ்த்துகின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:25, 11 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம் வாழ்த்துக்கள்! --மணியன் (பேச்சு) 12:52, 11 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:12, 11 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் Thilakshan (பேச்சு) 02:06, 12 ஜூலை 2014 (UTC)
  விருப்பம் -- மயூரநாதன் (பேச்சு) 04:35, 12 சூலை 2014 (UTC)Reply

சிறீ, தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் 70,000 தொகுப்புக்களைத் தாண்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி. இத்தொகுப்புக்களூடாகத் தமிழ் விக்கிப்பீடியாவின் பல துறைகளிலும் மிகச் சிறப்பான பங்களிப்புக்களைச் செய்துள்ளீர்கள். தரமான கட்டுரைகள் எழுதுவது மட்டுமல்லாமல், பிற பயனர்களை ஊக்குவித்தல், புதிய பயனர்களுக்கு உதவுதல், நுட்ப உதவி, பொதுக் கருத்துக்களை எட்டுவதில் பங்களித்தல், வளர்ச்சிக்கான பரப்புரை, துப்புரவுப் பணி என நீங்கள் செய்த பங்களிப்புக்கள், தரத்திலும், அளவிலும் தமிழ் விக்கிப்பீடியா இன்று இருக்கும் நிலையை எட்டுவதில் கணிசமான பங்காற்றியுள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கிடைத்த மிகப் பெறுமதியான பயனர்களுள் நீங்கள் மிகவும் முக்கியமானவர். பாதகமான நிலைமைகள் ஏற்பட்ட நேரங்களிலும்கூடப் பங்களிப்புச் செய்வதில் சற்றும் தளர்ச்சி அடையாமல், முன்னோக்கி மட்டுமே சென்ற உங்கள் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும், பயன் கருதாத உழைப்பும் என்னை வியப்புக்கு உள்ளாக்கின. எத்தனை பேர்களால் இவ்வாறு செய்யக்கூடும் என எனக்குத் தெரியவில்லை. தமிழ் மக்களுக்குப் பயன் தரும் வகையில் உங்கள் பணி மென்மேலும் தொடர்வதற்கு வேண்டிய எல்லா நலங்களும் உங்களுக்குக் கிடைக்க எனது வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 04:31, 12 சூலை 2014 (UTC)Reply

அழகானதொரு பதக்கம் வழங்கி வாழ்த்திய இஜாசிற்கும், வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி.--Kanags \உரையாடுக 05:02, 12 சூலை 2014 (UTC)Reply
இடையறா உழைப்புக்கு வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:21, 12 சூலை 2014 (UTC)Reply
உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.(365 நாட்களும் பங்களிப்பு நல்கும் ஒரே நபர் :) ) -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:44, 12 சூலை 2014 (UTC)Reply
எனது நன்றிகளும் உரித்தாகுகின்றன! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 13 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் வாழ்த்துக்கள். ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 07:56, 13 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் வாழ்த்துக்கள் சிறீதரன். உங்கள் விக்கிப் பங்களிப்பைக் கண்டு பல தடவைகள் ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.--கலை (பேச்சு) 08:25, 14 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 08:30, 14 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:21, 30 சூலை 2014 (UTC)Reply

காற்பந்துப் பதக்கம் தொகு

  காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , Kanags/தொகுப்பு 8 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:05, 15 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:07, 15 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:36, 15 சூலை 2014 (UTC)Reply

உதவி (தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது) தொகு

வணக்கம் Kanags :) சாக் எபிரோன்‎, கெல்லன் லூட்ஸ், அலெக்ஸ் பெட்டிஃபேர் போன்ற கட்டுரைகளில் திரைப்படங்களை தமிழாக்கம் செய்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். Thilakshan (பேச்சு) 16:30, 14 சூலை 2014 (UTC)Reply

திலக்சன், இவ்வாறான பெரிய உதவிகளைப் பயனர்களிடம் கேட்பதைத் தவிருங்கள். உங்களால் அவற்றைத் தமிழ்ப் படுத்த முடியாவிட்டால் கட்டுரைகளில் இருந்து அவற்றை நீக்கி விடுவதே நல்லது. முழுப் பட்டியலையும் தமிழ்ப் படுத்துமாறு கேட்பது அதிகம்:). மேலும் கட்டுரைகளின் உட்பகுதியில் உள்ள தடித்த எழுத்துகளை உடனடியாக நீக்குங்கள். இவற்றைத் திருத்தி விட்டுப் புதிய கட்டுரைகளை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 20:52, 14 சூலை 2014 (UTC)Reply

நடப்பு நிகழ்வுகள் தொகு

கனக சிறீதரன் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றிய Operation Protective Edge எனும் ஆங்கில கட்டுரையை தமிழில் எழுதலாம் என நினைக்கிறேன்.அதுக்கு பொருத்தமான தலைப்பு வைக்கணும் என்ன வைக்கலாம்.-- mohamed ijazz(பேச்சு) 10:44, 15 சூலை 2014 (UTC)Reply

இஜாசு, இப்போதைக்கு "பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை" எனத் தலைப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 10:51, 15 சூலை 2014 (UTC)Reply

உதவி... தொகு

வணக்கம்! வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை எனும் கட்டுரைக்காக தகவல்களைத் திரட்டியபோது சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலடியில் வசித்துள்ளனர் எனும் தகவலும் கிடைத்ததன்பேரில் அத்தகவலை இக்கட்டுரையில் சேர்த்துள்ளேன். நாச்சியார் கோயிலா? அல்லது நாச்சியார் கோயிலடியா?. சரிபார்க்க வேண்டுகிறேன். முடிந்தால் கூடுதல் தகவல் சேர்க்க இயலுமா என பாருங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 16 சூலை 2014 (UTC)Reply

செல்வசிவகுருநாதன், அக்கட்டுரையை நான் முன்னர் படித்திருக்கிறேன். நாச்சிமார் கோவிலடி என்பதே சரியான பெயர். மேலும் இக்கட்டுரையில் தரப்பட்ட தகவல்கள் முழுமையும் சரியானதென்று கூற மாட்டேன். உ+ம்: //1927-இல் சென்னை மகாண சட்டசபைத் தேர்தலில்-எழும்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டவர் யாழ்ப்பாணத்துக் கலைப்புலவர் நவரத்தினத்தின் மாமியார் மங்களம்மாள் (மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் பெரிய அம்மா)// இது ஒரு மிகத் தவறான செய்தி என்றே நான் நம்புகிறேன். ஆனாலும், வலங்கைமான் பற்றிய தகவல் உண்மையாக இருக்கலாம். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு தவில், நாதசுரக் கலைஞர்கள் பலர் வந்து தங்கியிருந்தனர் என்பது உண்மை.--Kanags \உரையாடுக 11:29, 16 சூலை 2014 (UTC)Reply

ஒன்றுக்கு மேற்பட்ட பகுப்புகளை, ஹாட்கேட் முறையில் ஒரே திருத்தத்தில் சேர்ப்பது எப்படி என விளக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:41, 19 சூலை 2014 (UTC)Reply

இதனைப் பாருங்கள். நான் இதுவரையில் இந்த வசதியைப் பயன்படுத்தியதில்லை.--Kanags \உரையாடுக 05:58, 19 சூலை 2014 (UTC)Reply

தமிழ் சொல் தொகு

வணக்கம் Kanangs :) model என்றால் தமிழ் சொல் என்ன? (விளம்பர நடிகர் / மாதிரி நடிகர்) Thilakshan (பேச்சு) 02:020, 10 ஜூலை 2014 (UTC).

திலக்சன், விளம்பர நடிகர்/நடிகை எனலாம்.--Kanags \உரையாடுக 01:12, 20 சூலை 2014 (UTC)Reply

நன்றி :) Thilakshan

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் தொகு

முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப் படவேண்டும். புதிய கட்டுரைகள் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 20, 2014 இல் உள்ளன. வார்ப்புரு:Mainpage v2 இல் மாற்றி உதவுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:17, 21 சூலை 2014 (UTC)Reply

ஸ்ரீகர்சன், பால் தாக்கரே கட்டுரை அறிமுகம் சரியானதல்ல. நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விலாவாரியாக முதற் பக்கத்தில் தேவையில்லை. அவரது சிறப்புகளை மட்டுமே தர வேண்டும். ஒரே பிரிவில் அடுத்தடுத்துக் கட்டுரைகள் இடம்பெறுவதையும் தவிருங்கள்.--Kanags \உரையாடுக 10:26, 21 சூலை 2014 (UTC)Reply

அவசர உதவி தேவை தொகு

வணக்கம் கனக சிறீதரன் எனக்கு இந்த வார்ப்புரு (காண்க:en:Template:Infobox Athletics Championships) தேவைபடுகிறது இதனை தமிழில் உருவாக்கி தர முடியுமா நன்றி -- mohamed ijazz(பேச்சு) 10:42, 24 சூலை 2014 (UTC)Reply

உருவாக்கியிருக்கிறேன். இப்போதைக்கு இதனைப் பயன்படுத்துங்கள். இன்னும் சில சொற்கள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். கட்டுரையை ஆரம்பியுங்கள். அதற்கேற்ப வார்ப்புருவிலும் மாற்றங்கள் ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 10:51, 24 சூலை 2014 (UTC)Reply
கனக சிறீதரன் en:Template:Infobox Commonwealth Games event இந்த வார்ப்புரு தேவைபடுகிறது இதனை தமிழில் உருவாக்கி தர முடியுமா நன்றி-- mohamed ijazz(பேச்சு) 10:55, 26 சூலை 2014 (UTC)Reply

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தொகு

  வணக்கம் Kanags/தொகுப்பு 8 அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
 

நீண்ட‌ ஆயுளோடும் ந‌ல் ஆரோக்கிய‌த்துடனும் மன அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வர/ வளர வாழ வாழ்த்துக்கள். -- mohamed ijazz(பேச்சு) 00:25, 29 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:05, 29 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் மகிழ்ச்சி மிகு பிறந்த நாளை கொண்டாடுங்கள். வாழ்த்துக்கள்!! :) 04:12, 29 சூலை 2014 (UTC)
  விருப்பம் பிறந்த நாள் வாழ்த்துகள்!! -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:55, 29 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!! --மணியன் (பேச்சு) 03:35, 30 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்நீங்கள் மென்மேலும், சிறப்புர செயல்பட வாழ்த்துக்கள். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 03:55, 30 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்சற்றுப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கனக்ஸ் அவர்களே!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:21, 2 ஆகத்து 2014 (UTC)Reply

  விருப்பம் :) பிறந்த நாள் வாழ்த்துகள் :) Thilakshan (பேச்சு) 22:31, 2 ஆகஸ்ட் 2014 (UTC)

உங்களின் கவனத்திற்கு... தொகு

இங்கு கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 2 ஆகத்து 2014 (UTC)Reply

மொழி பெயர்ப்பு உதவி தொகு

வணக்கம் Kanags:) இந்த பெயர்களை தமிழில் மொழி பெயர்த்து தரவும்.

  • The Hobbit: The Battle of the Five Armies
  • The Hunger Games: Mockingjay – Part 1

Thilakshan (பேச்சு) 22:28, 2 ஆகஸ்ட் 2014 (UTC)

மன்னிப்பு! தொகு

நன்றி --Kanags \உரையாடுகஅவர்களே! நான் இது பற்றி முன்னர் அறிந்திருக்கவில்லை. நான் செய்தது மிகப்பெரிய தவறு. தயவு செய்து மன்னித்து விடும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். இனிமேல் இத்தவறு இடம்பெறாமல் பார்த்துக் கொள்கின்றேன். நன்றி --Jey \உரையாடுக

ஜெய், இதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்பார்களா? நீங்கள் அறியாமல் செய்த தவறு என்பதைத் தெரிந்து கொண்டே அதற்கான உதவிப் பக்கக் குறிப்பையும் தந்திருந்தேன். உங்கள் பங்களிப்புகள் அனைத்தும் மிக நன்று.--Kanags \உரையாடுக 06:41, 17 ஆகத்து 2014 (UTC)Reply

கவனிக்கவும் தொகு

சிறீதரன் ஐயா ஒருவர் பயனர்:Zubair ,பயனர்:Mohamedtet என இரண்டு பயனர் கணக்குகளை வைத்துள்ளார்.-- mohamed ijazz(பேச்சு) 06:59, 17 ஆகத்து 2014 (UTC)Reply

Return to the user page of "Kanags/தொகுப்பு 8".