மகாராஜா (2024 திரைப்படம்)
மகாராஜா (Maharaja) என்பது 2024 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான அதிரடித் திரைப்படமாகும். 2017இல் வெளியான குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கியிருந்தார். தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது.[6][7] விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி, அருள்தாஸ், முனீஷ்காந்த், மணிகண்டன், சிங்கம்புலி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
மகாராஜா (2024 திரைப்படம்) | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | நித்திலன் சுவாமிநாதன் |
தயாரிப்பு | விஜய் சுதன் சுந்தரம் |
கதை | நித்திலன் சுவாமிநாதன் |
Dialogues by | சண்முகநாதன் கவுண்டர் இராம் முரளி[1] |
இசை | பி. அஜ்னேஷ் லோக்நாத் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | தெனேஷ் புருசோத்தமன் |
படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
கலையகம் | தி ரூட் திங் ஸ்டுடியோ பேஷன் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | see below |
வெளியீடு | 14 ஜூன் 2024 |
ஓட்டம் | 141 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹20 கோடி[4] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹109 கோடி[5] |
கதைச் சுருக்கம்
தொகுபடத்தில் விஜய் சேதுபதி ஒரு முடிதிருத்துபவராக நடித்துள்ளார். தனது வீடு கொள்ளையடிக்கப்பட்ட பிறகு தனது லட்சுமி என்ற இரும்பு குப்பைத் தொட்டியை காணவில்லை என்று காவல் துறையிடம் புகார் கூறுகிறார். ஆனால் அவரது உண்மையான நோக்கங்களை போலீசார் சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள்.
தயாரிப்பு
தொகுசேதுபதியின் 50வது திரைப்படமாக இது இருப்பதால், இந்த படம் பிப்ரவரி 2023 இல் தற்காலிகமாக வி. ஜே. எஸ் 50 என்ற தலைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி அதே மாதத்தில் தொடங்கியது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவை மேற்கொள்ள மற்றும் பிலோமின் ராஜ் படத் தொகுப்புப் பணிகளை மேற்கொண்டார்.
வெளியீடு
தொகு14 ஜூன் 2024 உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 2024 இன் அதிக வசூல் செய்த தமிழ் படமாக உருவானது.[8] [9] [10]
நடிகர்கள்
தொகு- மகாராஜாவாக விஜய் சேதுபதி
- செல்வமாக அனுராக் காஷ்யப்
- ஆசிபாவாக மம்தா மோகன்தாஸ்
- காவல் ஆய்வாளர் எஸ். வரதராஜனாக நடராஜன் சுப்பிரமணியம்
- செல்வத்தின் மனைவி கோகிலாவாக அபிராமி
- மகாராஜாவின் மனைவியாக திவ்யபாரதி
- நல்லசிவமாக சிங்கம்புலி
- உதவி ஆய்வாளர் ஆர். கே. பெருமாள்சாமியாக அருள்தாஸ்
- காவலர் குழந்தைவேலுவாக முனீஷ்காந்த்
- சபரியாக வினோத் சாகர்
- மணிகண்டன்
- சலூன் கடைக்காரராக பி. எல். தேனப்பன்
- கோபால் தாத்தாவாக பாரதிராஜா
- மருத்துவராக மோகன் ராமன்
- லிசி ஆண்டனி
இசை
தொகுஇசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசை மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார்.[11] படத்தின் இசை உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.[12] [13] கவிஞர் வைரமுத்து எழுதி சித் ஸ்ரீராம் பாடிய "தாயே தாயே" என்ற தனிப்பாடல் ஜூன் 2024 ன்று வெளியிடப்பட்டது.[14] "ராஜா பய ஒண்ணு" என்ற இரண்டாவது பாடம் படம் வெளியான பிறகு 15 ஜூன் 2024 அன்று வெளியிடப்பட்டது.[15]
வீட்டு ஊடகம்
தொகுஊடகச் சேவை உரிமையை நெட்பிளிக்சு நிறுவனமும், தொலைகாட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சியும் பெற்றுள்ளனர்.[16] [17] இந்தப் படம் 12 ஜூலை 2024 முதல் நெட்பிளிக்சில் திரையிடப்பட்டது.[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vijay Sethupathi's Maharaja earns over Rs 30 crores at global box office". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 2024-06-17. Archived from the original on 18 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-20.
- ↑ "Maharaja". British Board of Film Classification (in ஆங்கிலம்). Archived from the original on 17 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-20.
- ↑ Suri, Ridhi (15 June 2024). "Maharaja Box Office Collection Day 1: Strong Opening For Vijay Sethupathi's Tamil Movie". Jagran English (in ஆங்கிலம்). Archived from the original on 19 June 2024. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
- ↑ According to தைனிக் ஜாக்ரண், Maharaja was made on a budget of 20 crore which included promotion costs.[3]
- ↑ "Vijay Sethupathi's Maharaja Becomes The Highest-Grossing Tamil Film Of 2024". News18 (in ஆங்கிலம்). 2024-07-10. பார்க்கப்பட்ட நாள் 2024-07-10.
- ↑ "Maharaja". Toronto International Film Festival. Archived from the original on 10 July 2024. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
A barber sets out for revenge after his home is broken into in this Tamil-language action thriller
- ↑ "'Maharaja' Kerala box office collections day 3: Vijay Sethupathi starrer collects Rs 1.25 crore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
Tamil actor Vijay Sethupathi has made a massive return to the silver screen with his latest action-packed thriller 'Maharaja,' which has been met with enthusiastic acclaim from Kerala audiences.
- ↑ "'Maharaja' Box Office Collection Day 6: Vijay Sethupathi starrer hits ₹50 crore in record time". 20 June 2024 இம் மூலத்தில் இருந்து 20 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240620141010/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box-office/maharaja-box-office-collection-day-6-vijay-sethupathi-starrer-hits-50-crore-in-record-time/articleshow/111131294.cms.
- ↑ "With Maharaja, Garudan and Aranmanai 4, is Tamil cinema back on track?". OTTPlay (in ஆங்கிலம்). 20 June 2024. Archived from the original on 10 July 2024. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.
- ↑ "Massive first weekend collection for Vijay Sethupathi's Maharaja". 123telugu.com (in ஆங்கிலம்). 2024-06-17. Archived from the original on 19 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-20.
- ↑ "Vijay Sethupathi's new movie with 'Kantara' connection goes on floors". IndiaGlitz.com. 1 February 2023. Archived from the original on 25 March 2023. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
- ↑ C K, Mohammed (3 June 2024). "Vijay Sethupathi's 50th Film 'Maharaja' Trailer Released". Heytamilcinema (in ஆங்கிலம்). Archived from the original on 15 June 2024. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
- ↑ "Maharaja: Vijay Sethupathi's 50th film is as intriguing as it gets!". MovieCrow. 10 June 2024. Archived from the original on 12 June 2024. பார்க்கப்பட்ட நாள் 12 June 2024.
- ↑ "Hype Grows for 'Maharaja' as Vairamuthu Praises Vijay Sethupathi's Latest Hit!". IndiaGlitz.com. 8 June 2024. Archived from the original on 15 June 2024. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
- ↑ "'Raja Paya Onnu' song from Vijay Sethupathi's Maharaja out". சினிமா எக்ஸ்பிரஸ். 16 June 2024. Archived from the original on 19 June 2024. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
- ↑ "'The Wait Is Almost Over': Vijay Sethupathi's 50th Film Maharaja's Trailer To Release On This Date". News18 (in ஆங்கிலம்). 29 May 2024. Archived from the original on 31 May 2024. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
- ↑ "Vijay Sethupathi's Maharaja seals its satellite partner". 123telugu.com (in ஆங்கிலம்). 9 June 2024. Archived from the original on 15 June 2024. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
- ↑ "Latest: Vijay Sethupathi's Maharaja seals its OTT release date". 123telugu.com. Archived from the original on 10 July 2024. பார்க்கப்பட்ட நாள் 8 July 2024.