மாத்தியூ எய்டன்

ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்

மாத்தியூ லாரன்சு எய்டன் (Matthew Lawrence Hayden) பிறப்பு அக்டோபர் 29, 1971) குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியா) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் தொடக்க மட்டையாளராக களமிறங்குவார். இவர் ஆட்டத் தொடக்கத்தில் அதிவேகமாக ஓட்டங்களைக் பெறுவதில் திறமை மிக்கவராவார். பதினைந்து ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடினார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மாத்தியூ எய்டன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மாத்தியூ இலாரன்சு எய்டன்
பிறப்பு29 அக்டோபர் 1971 (1971-10-29) (அகவை 52)
Kingaroy, Queensland, ஆஸ்திரேலியா
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 359)4 மார்ச் 1994 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு3 ஜனவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 111)19 மே 1993 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப4 மார்ச் 2008 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்28
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1991–2009குயீன்ஸ்லாந்து புல்ஸ்
1997ஹாம்ப்ஷயர் மாகாண அணி
1999–2000நார்த்தம்டன்ஷயர்
2008–2010சென்னை சூப்பர் கிங்ஸ்
2011–2012பிரிஉசுபேன் ஹீட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 103 161 295 308
ஓட்டங்கள் 8,625 6,133 24,603 12,051
மட்டையாட்ட சராசரி 50.73 43.80 52.57 44.63
100கள்/50கள் 30/29 10/36 79/100 27/67
அதியுயர் ஓட்டம் 380 181* 380 181*
வீசிய பந்துகள் 54 6 1,097 339
வீழ்த்தல்கள் 0 0 17 10
பந்துவீச்சு சராசரி 39.47 35.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/7 0/18 3/10 2/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
128/– 68/– 296/– 129/–
மூலம்: CricketArchive, 17 ஜனவரி 2009

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீர்ர்களில் முதலிடத்தில் உள்ளார். இவர் 380 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையை புரிந்தார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அதன் சொந்த மண்னில் சென்னையில் 201 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரும் ஜஸ்டின் லங்கரும் துவக்க வீரர்களாகக் களம் இறங்கியதே அனைத்துக் காலத்திற்குமான ஆத்திரேலிய அணியின் சிறந்த துவக்க இணை ஆகும்.[1] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அடம் கில்கிறிஸ்ற் உடன் இணைந்து வீரராக களம் இறங்கினார். ஜனவரி 2009 இல் இவர் ஓய்வினை அறிவித்த போது இவரின் தேர்வு துடுப்பாட்ட சராசரி 50.7 ஆகும். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த் துவக்க வீரர்களில் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளார். மேலும் சர்வதேச தரவரிசையில் 6 வது இடத்தை ஜாக் கலிசுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் துவக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்களில் இவர் முதலிடத்தில் உள்ளார்.[2]

செப்டம்பர் 2012 இல் மாத்தியூ எய்டன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.[3] 2017 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய துடுப்பாட்ட வாரியம் இவரை ஹால் ஆஃப் ஃபேமாக அறிவித்தது.[4]

உள்ளூர் துடுப்பாட்டம்

தொகு

ஏப்ரல் 2008 இல் தொடக்க இந்தியன் பிரீமியர் லீக்கில் ( ஐபிஎல் ) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மாத்யூ எய்டன் விளையாடினார். 375,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவர ஒப்பந்தம் செய்யப்பட்டார்.. எய்டன் இந்த லீக்கில் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தார்.மேலும் 2009 ஆம் ஆண்டில் 572 புள்ளிகளுடன் இந்தப் பருவத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

2011-12 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட்டிற்காக பங்கேற்க எய்டன் குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வாரியங்களில் தனது பதவிகளில் இருந்து விலகினார்.

மார்ச் 11, 2010 அன்று, எய்டன் 2010 ஐபிஎல் போது, இருபது 20 துடுப்பாட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு மட்டையினை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இவர் மங்கூஸ் துடுப்பாட்ட மட்டையினைப் பயன்படுத்துவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார். இவரின் கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. மங்கூஸைப் பயன்படுத்துவதற்கு முன்பு 'இரண்டு முறை' யோசிப்பேன் என்று ஸ்டூவர்ட் லா கூறினார். அதே நேரத்தில் எம்.எஸ். தோனி ஹேடனின் திறனைப் பற்றிக் கூரும் போது 'அவர் எந்த மாதிரி மட்டையினைப் பயன்படுத்துகிறார் என்பது முக்கியமல்ல' என்று தான் நம்புவதாகக் கூறினார். ஐ.பி.எல்லின் மூன்றாம் பதிப்பிற்கு மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, எய்டன் ஒரு போட்டியில் 43 பந்துகளில் 93 ஓட்டங்கள் எடுத்தார்.[5]

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு எய்டன் மற்றும் மைக்கேல் ஸ்லேட்டர் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஸ்லேட்டர் சுற்றுப்பயண பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு துணைத் தலைவரான மார்க் டெய்லருடன் துவக்க வீரர் இடத்தைப் பெற்றார். எய்டன் 4-8 மார்ச் 1994 அன்று ஜோகன்னஸ்பர்க் துடுப்பாட்ட அரங்கத்தில் தென் ஆப்ரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பட்டப் போட்டியில் ஸ்லேட்டர் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக விளையாடி முதல் ஆட்டப் பகுதியில் 15 மற்றும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 5 ஓட்டங்கள் எடுத்தார்.[6]

அவரது அடுத்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி 1996-97 ஆம் ஆண்டில் , மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தலா மூன்று போட்டிகளில் விளையாடினார். அவர் தனது முதல் நூறு ஓட்டத்தினை அடிலெய்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 125 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் நான்கு முறை ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆறு ஆட்டப் பகுதிகளில் சராசரியாக 24.1 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். தேர்வாளர்கள் மற்ற தொடக்க வீரர்கள்ஆதரித்ததால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார், ஆரம்பத்தில் டெய்லர் மற்றும் மேத்யூ எலியட், பின்னர் ஸ்லேட்டர் மற்றும் கிரெக் பிளெவெட், அடுத்த சில ஆண்டுகளுக்கு இவௌக்குப் பதிலாக விளையாடினர். அந்த நேரத்தில், அவர் எப்போதாவது சிறந்த உள்நாட்டு நடிகரான கிரேம் ஹிக் உடன் ஒப்பிடப்பட்டார்.

இந்த ஆண்டுகளில், குயின்ஸ்லாந்து முதல் தர அணிக்கு ஹேடன் ஒரு சிறந்த மட்டையாளராக இருந்தார். உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இவர் 1999-2000 நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்காகவும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த 2000-01 தொடருக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேத்தியூ எய்டன் மொத்தமாக 160 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். 1993 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 1993-1994 ஆம் ஆண்டுகளில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பின் இவரை 2000 ஆம் ஆண்டு வரை அணியில் சேர்க்கவில்லை.

இவர் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் விளையாடினார். 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் நிலையான திறனை வெளிப்படுத்தத் தவறியதால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. பின் 2006-2007 ஆம் ஆண்டில் இவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஷேன் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

பெப்ரவரி 20, 2007 ஆம் ஆண்டில் ஆமில்டன், நியூசிலாந்து, செட்டன் பார்க்கில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 181 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும். மேலும் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்களின் அதிகபட்ச ஓட்டமாகவும் இது அமைந்தது. தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய இரண்டுவடிவங்களிலும் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். பின் 2011 ஆம் ஆண்டில் ஷேன் வாட்சன் ஒருநாள் போட்டிகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 185* ஓட்டங்கள் எடுத்து இவரின் சாதனையை தகர்த்தார்.[7] மேலும் தோல்வி அடைந்த ஒருநாள் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சார்லஸ் கவென்ட்ரி 194* ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.[8]

சான்றுகள்

தொகு
  1. The Langer-Hayden pairing was only the second to go past 6,000 runs, averaging over fifty.
  2. "Highest test scores at each batting positions". cricinfo.
  3. "Matthew Hayden retires from all cricket". Wisden India. 20 July 2012 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140326181150/http://www.wisdenindia.com/cricket-news/matthew-hayden-retires-cricket/26095?single_col_view=true. 
  4. "Hayden, Boon, Wilson to join Hall of Fame". Cricket Australia. 22 January 2017. பார்க்கப்பட்ட நாள் 22 January 2017.
  5. "Hayden launches Mongoose bat". Yahoo News இம் மூலத்தில் இருந்து 14 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100314081428/http://in.news.yahoo.com/43/20100311/377/tsp-hayden-launches-mongoose-bat.html. பார்த்த நாள்: 10 November 2010. 
  6. "Matthew Hayden". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
  7. Black Caps sweep Australia. abc.net.au. 20 February 2007
  8. "Highest ODI scores in a losing cause". cricinfo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தியூ_எய்டன்&oldid=3986795" இலிருந்து மீள்விக்கப்பட்டது