Sitenotice மாற்றங்கள் உடனடியாக அனைத்துப் பயனர்களுக்கும் தெரிய புதிய செய்தியைச் சேர்த்தவுடன் மீடியாவிக்கி:Sitenotice id பக்கத்தைத் தொகுத்து அதிலுள்ள எண்ணுடன் ஒன்றைக் கூட்டி (எ.கா 2+1 =3) சேமியுங்கள்

பிழை திருத்துங்கள் செய்தி

தொகு

தற்போதுள்ள செய்தியைக் கீழ்க்காணும்படி மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

இந்தக் கட்டுரைப் பக்கத்தில் ஏதேனும் பிழை உள்ளதாகக் கருதுகிறீர்களா? இந்தப் பிழைகளை நீங்களே திருத்த முடியும். கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள “தொகு” பொத்தானைச் சொடுக்கிப் பிழையைத் திருத்தி உதவுங்கள். நன்றி!

மேலும் தற்போதுள்ள சொற்றொடரில் “பொத்தானை அழுத்தி, பிழையைத் திருத்த உதவுங்கள். நன்றி!” என்றிருப்பது எனக்கு சரியானதாகத் தோன்றவில்லை. இந்த சொற்றொடரையேப் பயன்படுத்த வேண்டும் என்கிற நிலையில் “பொத்தானை அழுத்தி, பிழையைத் திருத்தி உதவுங்கள். நன்றி!” என்று இருப்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:00, 2 மே 2011 (UTC)Reply

ஆம், பிழையைத் திருத்த உதவுங்கள் என்பது ஏற்கனவே அறியப்பட்ட பிழையைத் திருத்துவதற்காக அழைக்கப்பட்டது போலத் தென்படுகிறது. திருத்தி என்பது சரியாக இருக்கும். நீளம் பொருட்டில்லை என்றால் தேனியாரின் பரிந்துரையும் நன்றாக உள்ளது. அத்தோடு இந்தச் செய்தி காக்கப்பட்ட பக்கங்களில் (குறிப்பாக முதல் பக்கத்தில்) வராமல் செய்ய முடியுமா? -- சுந்தர் \பேச்சு 11:00, 3 மே 2011 (UTC)Reply
சுந்தர் சொன்னது போல முதற்பக்கத்தில் இது வரக்கூடாது.--Kanags \உரையாடுக 11:23, 3 மே 2011 (UTC)Reply
முதற்பக்கத்தில் தோன்றாவண்ணம் செய்ய ஆங்கில விக்கியில் உதவி கேட்டுள்ளேன். இதைப் பற்றி யோசிக்கையில் இன்னொரு ஐயம் எழுந்தது. இந்த செய்தி புகுபதிகை செய்த நபர்களுக்குத் தேவையா?. அனானிகளுக்கு மட்டும் வரும்படி செய்யலாமா? (அதற்கு anonnotice என்றொரு வழியுள்ளது)--சோடாபாட்டில்உரையாடுக 11:34, 3 மே 2011 (UTC)Reply
புகுபதிகை செய்தவர்களுக்குத் தேவையில்லை என்றாலும் இருக்கட்டும் என நினைக்கிறேன். ஏனெனில், நம் வாசகர்களுக்கு எவ்வாறு தெரிகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளலாம், தவிர வேறு விக்கிக்களில் புகுபதிகை செய்து இன்னும் இங்கு தொகுக்கத் தொடங்காதவர்களை நாம் விடவேண்டாம். -- சுந்தர் \பேச்சு 05:17, 4 மே 2011 (UTC)Reply
இப்பக்கத்தில் திருத்தங்கள் மற்றும் தொகுப்பு செய்ய வேண்டுமாயின் பக்கத்தின் மேல் உள்ள “தொகு” பொத்தானைச் சொடுக்கி திருத்தி உதவுங்கள். நன்றி!என அமைப்பது பொருத்தமாயிருக்கும் என்பது என் கருத்து.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 15:24, 3 மே 2011 (UTC)Reply
சஞ்சீவி, உங்கள் பரிந்துரை நன்றாக உள்ளது. ஆனால், கேள்விக்குறி வாசகர்களின் கவனத்தை ஈர்க்குமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:17, 4 மே 2011 (UTC)Reply
இந்த அறிவித்தல் முதல் பக்கத்தில் தெரிவது அவ்வளவு அழகாகத் தெரியவில்லை. என்ன செய்யலாம்? சோடாபாட்டில் ஆங்கில விக்கியில் ஏதாவது உதவி பெற்றாரா?--Kanags \உரையாடுக 12:22, 4 மே 2011 (UTC)Reply
இதனை ஜாவாஸ்கிரிப்ட் நிரலிலிருந்து உருவாக்கவேண்டும். அதன் மூலம் தேவையில்லாத பக்கங்களில் வருவதை தவிர்க்கலாம். -- மாகிர் 14:09, 4 மே 2011 (UTC)Reply
கட்டுரைப் பெயர்வெளியில் மட்டும் அறிவிப்பு வருவதற்கு வார்ப்புரு:Main other பயன்படுத்தலாம். ஆனால் இதைப்பயன்படுத்தினால். கட்டங்களும் நிறங்களும் மறைந்து விடுகின்றன. எழுத்துக்கள் மட்டும் தெரிகின்றன. அப்படியென்றால் பரவாயில்லையா?--சோடாபாட்டில்உரையாடுக 15:10, 4 மே 2011 (UTC)Reply

நிரல்

தொகு

இந்த நிரல் துண்டு edit,main page, மற்றும் சில பக்கங்களில் இந்தப் பெட்டி வருவதை தவிர்க்கிறது. இதனை சோதிக்க உங்கள் vector.js ல் இதனைப் வெட்டி ஒட்டி பார்க்கவும். (clear cache=ctrl+f5) wgClearEditNotice=true என்று கொடுத்தால் நமக்கு(விக்கி அனுபவம் உள்ளவர்கள்) கடைசி வரைக்கும் எங்கும் தோன்றாது. தற்போது localNotice id க்கு பதில் வேறு id அதாவது மேற்கண்ட பெட்டிக்கு table tagக்கு id="EditEncourage" என்று கொடுக்கவும். பின்னர் #localNotice என்பதை #EditEncourage என்று மாற்றிவிடலாம்.


wgClearEditNotice=false;   if(wgAction!='edit' && wgIsArticle && wgArticleId>0){ $j('#localNotice').show(); } if(wgClearEditNotice || wgAction=='edit' || wgNamespaceNumber==8 || wgArticleId==0 || wgArticleId==3){
$j('#localNotice').hide();  }

copy without <pre>

மாகிர், என் பயனர் வெளியில் இந்த நிரலைச் சேர்த்தும் பலன் இல்லையே. நான் செய்ததில் ஏதும் தவறு உள்ளதா? உங்களுக்கு வேலை செய்கிறது என்றால் மீடியாவிக்கி வெளியிலேயே மாற்றி விடுங்கள். -- சுந்தர் \பேச்சு 09:56, 5 மே 2011 (UTC)Reply

சுந்தர், இந்தப் பயனர் வெளியில் சோதித்துப் பாருங்கள். கவணிக்க v சிறிய எழுத்து. மீடியாவிக்கியில் சோதிக்க எனக்கு அணுக்கம் கிடையாது.

(step2(optional, to avoid hiding entire box): site notice பக்கத்தில் {| class="messagebox standard-talk" id="EditEncourage" id சேர்த்து பின் மேலுள்ள நிரலில் localNotice என்பதற்கு பதில் EditEncourage என்றிருக்கவேண்டும்.) -- மாகிர் 11:56, 5 மே 2011 (UTC)Reply

இன்னும் எனக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது, மாகிர். ஒருவேளை கூகுள் குரோமில் வேலை செய்யாதா? மேற்கொண்டு சோதித்துவிட்டுச் சொல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 08:09, 7 மே 2011 (UTC)Reply

இறுவட்டு செய்தி

தொகு

மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா இறுவட்டுத் திட்டம் முடக்கிவிடப்பட்டுள்ளது. உங்களது பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.? -- மாகிர் 11:02, 1 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு குறித்த அறிவிப்பு

தொகு

இந்திய விக்கி மாநாடு குறித்த அறிவிப்பும் தள அறிவிப்பில் சேர்ந்துள்ளதால், கட்டுரைகள் மிகவும் கீழே தள்ளியே காணப்படுகின்றன. இந்த அறிவிப்பை குறித்த காலத்துக்குப் பிறகு நீக்கலாமா? எப்படி நீக்குவது?அல்லது, பங்களிப்பாளர் அறிமுகங்களுடன் மாறி மாறி வருவது போல் இடலாம்--இரவி 12:05, 29 சூலை 2011 (UTC)Reply

முதற்பக்கப் படம்

தொகு

விக்கிப்பீடியா:முதற்பக்கப் படம் என்ற இணைப்பு சிவப்பாக இருக்கிறது. சூரியப்பிரகாசு கவனிக்க.--Kanags \உரையாடுக 12:14, 3 அக்டோபர் 2011 (UTC)Reply

கட்டுரைகளில் படம் சேர்ப்போர் மிகக் குறைவானோரே? எனவே, அவர்களை நோக்கிய அறிவிப்பாக இல்லாமல், "உங்களுக்குத் தெரியுமா பரிந்துரை வேண்டல்" போல அனைவருக்குமான பொதுவான அறிவிப்பாக இடலாம். "தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் உள்ள ஏதேனும் சில படங்களைச் சிறப்பு வாய்ந்தனவாக கருதுகிறீர்களா? அவற்றை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த பரிந்துரையுங்கள்" என்பது போல் செய்தி இடலாம். --இரவி 14:35, 3 அக்டோபர் 2011 (UTC)Reply

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

தொகு

வெறுமனே நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்று உள்ளதே. அதில் வாக்களிக்க வேண்டும் என்பது எப்படி அனைவருக்கும் தெரியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:35, 9 சனவரி 2013 (UTC)Reply

Hello, the current sitenotice has the last image on a second row on 1024px wide screens, so it take twice as much vertical space as intended. Please remove one image or make them slimmer. Thanks, Nemo (பேச்சு) 13:34, 12 ஏப்ரல் 2013 (UTC)

எழுத்துரு மாற்ற அறிவிப்பு

தொகு

இயல்பு எழுத்துரு மாற்றப்பட்டுள்ளதால், அதற்கான வழிகாட்டியை தள அறிவிப்பில் இடுவது தேவைப்படாது. புகுபதியாமல் பார்ப்பவர்கள் சிலருக்கு இணைய எழுத்துருக்கள் தோன்றக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சில நாட்கள் கழித்து இந்த அறிவிப்பை நீக்கிவிடலாம்--இரவி (பேச்சு) 14:10, 29 சூன் 2013 (UTC)Reply

நன்றி இரவி, நான் உண்மையில் இணைப்புக் கொடுக்க நினைத்தது எழுதுகருவியை இயக்குவதற்கான வழிமுறைக்கான இணைப்பையே. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.--Kanags \உரையாடுக 14:40, 29 சூன் 2013 (UTC)Reply
ஓ.. இப்ப தட்டச்சு வழிகாட்டியை இட்டுள்ளேன்--இரவி (பேச்சு) 14:55, 29 சூன் 2013 (UTC)Reply

அறிவிப்பு வடிவம்

தொகு

தற்போது ஒரு சட்டகத்துக்குள் படம் உள்ள வடிவமைப்பு நிறைய இடத்தை எடுத்துக் கொள்வது போல் தோன்றுகிறது. முன்பிருந்த வடிவத்துக்கே மாற்றலாமா?--இரவி (பேச்சு) 01:33, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

இப்போதுள்ள வடிவுக்கே எனது ஆதரவு. சுருக்கமாக எழுதினால் இடம் பிடிக்காது.--Kanags \உரையாடுக 01:47, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
சிறீதரன், அருள்கூர்ந்து முன்பிருந்த வடிவத்துக்கு மாற்ற விரும்புகிறேன். காணரங்கள்:
  1. சிறிய திரைகளில் கட்டுரையின் முதல் வரி மிகவும் கீழே இறங்குகிறது.
  2. பெட்டிக்கு வெளியே தட்டச்சு உதவி இருப்பது வடிவெழிலைக் கெடுக்கிறது.
  3. பத்தாண்டுச் சின்னம் தேவையற்று இரு முறை வருகிறது (ஏற்கனவே தளத்தின் மேல் மூலையில் வழமை போல் ஒன்று உள்ளது). பத்தாண்டுகள் திட்டப்பக்கத்துக்கான அறிவிப்பையும் நீக்க வேண்டும். தற்போது அங்கு பெரும் செயற்பாடுகள் ஏதும் இல்லை.
  4. கூடிய விரைவில் கட்டுரைப் போட்டி விளம்பரப் பதாகைகளை இட வேண்டி வரும். அப்போது இந்தப் பெட்டி கூடுதல் இடத்தை எடுக்கும்.--இரவி (பேச்சு) 17:05, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
எனது திரையிலும் சில உடைசல்கள் ஏற்படுகின்றன. எனவே, முன்பிருந்த வடிவத்திற்கோ வேறேதுனும் நீள் பட்டை வடிவிற்கோ மாற்ற ஆதரவு. பெட்டி வேண்டாம். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:55, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
வெவ்வேறு உலாவிகளில் வெவ்வேறாகத் தெரிகிறது. தட்டச்சு வழிகாட்டியைக் காணவில்லை (மொசில்லாவில்). ஆனால், IE இல் பெட்டிக்கு வெளியில் தெரிகிறது. முன்னர் போலப் பெட்டி இல்லாமலேயே ஆக்குங்கள்.--Kanags \உரையாடுக 20:54, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
விக்கிப்பீடியா பத்தாண்டுகள் இலச்சினை அழகாக எல்லா பக்கங்களிலும் தெரியுமாறு உள்ளது. இருப்பினும் அதே படம் இன்னொரு முறை பெட்டியில் வருவது வேண்டாமென்று எண்ணுகிறேன். இனி ஆங்காங்கே ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் விக்கிமீடியா பயிலரங்குகள், தமிழகமெங்கும் நடக்கும். எனவே, முதல்மூன்று பயிலரங்குகள் நடக்கும் இடங்களை இப்பெட்டியில் தெரியசெய்வது நல்ல பலனைத்தரும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். இச்செய்திப் பெட்டிக்கு சற்று நீளமாக்கினால் போதுமான இடம் கிடைக்கும் என்றே கருதுகிறேன். வரும் 9ந்தேதியும் பயிலரங்கு சேலம் பெரியார் பல்கலையில் நடக்க உள்ளது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். வணக்கம் --≈ உழவன் ( கூறுக ) 17:17, 28 அக்டோபர் 2013 (UTC)Reply
ஆம், இலச்சினையை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 20:10, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

முக நூல் இணைப்பு

தொகு

இந்த முக நூல் இணைப்பு தமிழ் விக்கிச் சமூகத்தால் நிர்வாகிக்கப்படுகிறதா ?--Natkeeran (பேச்சு) 18:43, 20 நவம்பர் 2013 (UTC)Reply

ஆம், ஏற்கனவே புதுப்பயனர் வார்ப்புருவில் இணைப்பு தரப்பட்டுள்ளது. இக்குழுமத்தில் தற்போது ஏறத்தாழ 500+ பேர் உள்ளனர். இங்கு ஐயங்கள், கருத்துகளைப் பகிராதோர் அங்கு பகிர்ந்து தீர்வுகள் பெறுவதைக் காண முடிகிறது. பரப்புரைக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. இது போல் உள்ள குழுக்களை இதனோடு இணையுமாறு வேண்டி வருகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 18:54, 20 நவம்பர் 2013 (UTC)Reply
பொதுவாக அறிமுகப்படுத்தல்களுக்கும், அறிவித்தல்களுக்கும் மட்டும் முகநூலைப் பயன்படுத்தவும். செயற்பாட்டு/கொள்கை உரையாடல்களையோ அல்லது முன்னெடுப்போக்களையோ முகநூலையோ பிற சமூக வலைத்தளங்களையோ பயன்படுத்த வேண்டாம். --Natkeeran (பேச்சு) 20:27, 20 நவம்பர் 2013 (UTC)Reply
தயந்து மேலதிக விபரங்களை விக்கிப்பீடியா:சமூக ஊடகப் பராமரிப்பு சேர்க்கவும். குறிப்பாக யார் யார் account admin என்பதைக் குறிப்பிடவும். --Natkeeran (பேச்சு) 20:30, 20 நவம்பர் 2013 (UTC)Reply

நிறைய பேர் அதில் அட்மினாக (என்னையும் சேர்த்து) உள்ளனர். எனக்குத் தெரிந்து தமிழ் விக்கி அதிகாரி-நிர்வாகிகள்-தொடர் பயனர்கள் அனைவரும் இருக்கின்றனர். ஒருவர் தான் டிமிக்கி கொடுக்கிறார். அவரின் முகநூல் இணைப்பு கிடைத்தால் நன்று. அவர்தான் Natkeeran. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:13, 21 நவம்பர் 2013 (UTC)Reply

தகவலுலுக்கு நன்றி தென்காசி. அணுக்கம் உள்ள மூன்று செயற்படு பயனர் பெயர்களை பராமரிப்புப் பக்கத்தில் சேர்க்கவும். facebook.com/TamilWikipedia இதனோடு இணைக்க முடியுமா என்று பார்க்கவும். என்ன மாதிரி விடயங்கள் அங்கு பகிரப்படலாம், உரையாடப்படலாம் என்பதை நெறிப்படுத்த ஒரு வழிகாட்டல் பக்கத்தை உருவாக்க உதவவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:27, 21 நவம்பர் 2013 (UTC)Reply
பரப்புரை தவிர்த்த செயல்பாடுகளுக்கு முகநூலைப் பயன்படுத்துவதில் எனக்கு ஏற்பில்லை.
  • பல உரையாடல்கள் விக்கியில் பதியப்படாமல் முகநூல் வெள்ளத்தில் சென்றுவிடுகின்றன. நம்மில் சிலர் முகநூலில் இருக்க விரும்பாமல் இணையவில்லை. அத்தகைய சூழ்நிலையில் உரையாடல்கள் அங்கு நிகழும்போது தேவையற்ற தகவல் குறைபாடு (information asymmetry) ஏற்படுகிறது. இது தொடர்பில் இங்கும் சிறிது எழுதியுள்ளேன். முகநூல் உரையாடலில் பங்கேற்கும் நான்கு பங்களிப்பாளர்கள் ஒன்றைப் பற்றி உரையாடிப் புரிந்துணர்வை எட்டிவிடலாம், பிறகு அங்கு அதைப் பார்க்காத விக்கிப்பயனர் தேவையில்லாமல் அதைப்பற்றிய கேள்வியை இங்கு எழுப்பவும் மற்றவர்கள் அதைத்தான் உரையாடியாயிற்றே என்று கூறுவதும்போல அமையக்கூடும்.
  • அதே போல இங்கு விக்கியில் நிகழும் உரையாடல்கள் பொதுவாக சூழல், புரிந்துணர்வு ஆகியவற்றின் துணைகொண்டு நிகழும் வாய்ப்பு மிகுதி. விக்கியில் அல்லாதவர்கள் பலர் உலவும் முகநூலில் ஒருவருடைய கருத்தைத் தவறாகப் புரிந்துகொள்ள நிறைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் முகநூல் பகிர்வில் புயல்போல பரவியும் விடக்கூடும். இதையொத்த காரணத்தினால்தான் பேச்சுப் பக்கங்களை தேடுபொறிகளில் மேலெழும்பாமல் இருக்கச் செய்ய முயன்றார்கள் என நினைக்கிறேன்.
  • தவிர மீடியாவிக்கி மென்பொருளில் இருக்கும் பல வசதிகள் வேறு எந்தக் களத்திலும் இல்லை. வரலாறு பேணப்படுவது நமக்கு இன்றியமையாத ஒன்று.

விக்கிக்கு வருபவர்களை அந்தக்குழுமத்துக்கு அனுப்பும் இவ்விணைப்பை நாம் கலந்தாலோசித்துச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதுவரை இந்த இணைப்பை நீக்க வேண்டுகிறேன். (யாருக்கும் மறுப்பில்லையெனில் நான் நீக்கிவிடுகிறேன்.) அங்கு நேரடியாக வரும் புதுப்பயனர்களின் கேள்விக்குச் சிறிது விடையளித்து, ஒத்தாசைப்பக்கத்துக்கும் திருப்பிவிடத் தொடங்கினால் சரியாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 11:39, 27 நவம்பர் 2013 (UTC)Reply

சுந்தர் நீங்கள் கூருவது எல்லாம் புரிகிறது. அதற்கு முகநூல் குழுமத்தில் நாம் என்னென்ன பேசலாம் என ஏதாவது வரையறைவைக்கலாம். இணைப்பை நீக்கத் தேவையில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:15, 27 நவம்பர் 2013 (UTC)Reply

நான் இடைநீக்கமாகத்தான் பரிந்துரைத்தேன், தென்காசி சுப்பிரமணியன். மேலும் அங்கு வருபவர்களை விக்கிக்கு அழைத்து வருவதுதானே நமது நோக்கம்? இங்கிருப்பவர்களையும் வருபவர்களையும் முகநூலுக்கு அழைத்துச் செல்வதால் இங்குள்ள உரையாடல்களும் அங்கு நகரும்தானே? அதைத் தவிர்க்கும் வழிவகைகளை அறிந்துகொண்டுவிட்டு இணைப்பைச் சேர்க்கலாமென்றே பரிந்துரைக்கிறேன். மற்றபடி இடைநீக்கம் செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்த அணுகுமுறை பற்றி விரைவில் உரையாட வேண்டும். இல்லையெனில் அங்கு உரையாடல் இழைகள் தொடங்கிவிட்டால் இங்கும் அங்குமாகப் பிரிந்து நிற்கும் இழைகள். -- சுந்தர் \பேச்சு 14:13, 27 நவம்பர் 2013 (UTC)Reply

அவசரத்துக்கு உருவாக்க விதி இது என்பதாக எனக்குத் தோன்றுகிறது. முகநூல் குழுமத்தில் ஒரு கட்டுரையை ஒருவர் பகிர்கிறார் என்றால் அதை பார்த்துவிட்டு இந்த விக்கிப்பக்கத்தில் தான் உரையாட வேண்டும் என்ற இணைப்பை கொடுக்கச்சொல்லலாம். முகநூலில் தான் உடனடி கவனம் பெறுகிறது அல்லவா. அதனால் முகநூலில் கவனத்தை ஈர்த்துவிட்டு விக்கிப்பீடியாவில் உரையாடச் சொன்னால் நலம் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:48, 27 நவம்பர் 2013 (UTC)Reply

அவசரமாக விதியை எதையும் பரிந்துரைக்கவில்லையே, தென்காசி சுப்பிரமணியன். சில நாட்கள் உரையாடியே முடிவெடுக்கலாம். அதுவரை முகநூல் குழுவையும் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. மேலே தெரியும் இணைப்பை மட்டும்தான் இடைக்காலத்திற்கு நிறுத்திவைக்குமாறு கேட்டேன். அதிலும் இடர் இருக்குமென்றால் நான் வலியுறுத்தவில்லை. மற்றபடி கட்டுரைகளை முகநூலில் பகிர்வது போன்ற செயல்பாடுகளை நான் பெரிதும் வரவேற்கிறேன். முகநூல் வழியாகக் கூடுதல் பங்களிப்பாளர்களைப் பெற எண்ணவெல்லாம் செய்ய வேண்டுமோ செய்யலாம். இங்கிருந்து அங்கு இணைப்பு தந்து விக்கியில் நுழையும் ஒருவரை அந்தக்குழுமத்துக்கு அழைத்துச் செல்வதால் பயன் இருக்கிறதா என அறியாமல் செய்ய வேண்டாமே என்பதுதான் எனது கருத்து. இதற்கு முன்னர் SEO நோக்கில் பல மாற்றங்களை இரவி வெள்ளோட்டமாகச் செய்து விளைவை அளந்து பார்த்து முடிவெடுத்த நினைவுள்ளது. அதுபோலச் செய்தும் பார்க்கலாம் (மொத்த பங்களிப்பாளர்களுக்கும் இணைப்பளிக்காமல்). இதுகுறித்து நான் மேலும் வலியுறுத்தவில்லை. -- சுந்தர் \பேச்சு 15:02, 27 நவம்பர் 2013 (UTC)Reply
ஆம். சுந்தரின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். நாம் முகநூலுக்கு விளம்பரம் செய்வது போல் ஆகிவிடக் கூடாது. வேறு எந்த சமூக வலைத்தளம் என்றாலும் இவ்வாறு இணைப்புத் தரலாமா?--Natkeeran (பேச்சு) 15:53, 27 நவம்பர் 2013 (UTC)Reply

முகநூல் விளம்பரமாக இதை எண்ணமாட்டார்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே கருவிப்பெட்டியில் முகநூல் பகிர்தல் உள்ளது. இடிவிட்டரில் நான் இருந்ததில்லை. இடிவிட்டர் பயனர்களிடம் தமிழ் பயனர்கள் அதிகம் இடிவிட்டரை பயன்படுத்துகிறார்களா? என்பதை கேட்டறிய வேண்டும். வேறு எந்த சமூக வலையிலும் இது போல் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். மலையாள விக்கிப்பீடியர்களுக்கு கூட தனிக்குழுமம் முகநூலில் உளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:16, 27 நவம்பர் 2013 (UTC)Reply

தள அறிவிப்பில் இடுவது மட்டும் பிரச்சினை இல்லை. ஏற்கனவே புதுப்பயனர் வரவேற்பு வார்ப்புருவிலும் சமூக ஊடக ஒருங்கிணைப்புப் பக்கத்திலும் இக்குழுமம் இணைக்கப்பட்டுள்ளதால் இது தமிழ் விக்கிப்பீடியாவின் அலுவல் முறை குழுமமாக கருத இடம் உண்டு. அந்த அலுவல் முறை தகுதிக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.

இது ஒரு கோழி - முட்டை பிரச்சினை. சில காலம் முன்பு வரை இக்குழுமம் அவ்வளவு முனைப்பாக இல்லை. தற்போது புதிதாக பல உறுப்பினர்கள் சேர்வதால், பல்வேறு உரையாடல் போக்குகளைக் கவனிக்க முடிகிறது. இதில் பெரும்பான்மையோர் மற்ற வழமையான விக்கிப்பீடியா மடற்குழுமங்களில் பங்கு பெற்றிராதவர்கள். எனவே, ஒரு அலுவல் முறை குழுமத்தின் நெறிமுறைகள் அறியாமல் இருக்கலாம். சுந்தர் சுட்டியுள்ள கருத்துகளைக் குழுமத்தில் முன்வைத்து, அலுவல் முறை முகநூல் குழுமம் என்ற அடிப்படையில் நெறிமுறைகளை உருவாக்க முனைந்துள்ளேன். தக்க இடங்களில் விக்கிப்பீடியா நோக்கி உரையாடலைத் திருப்பும் பணியையும் கவனித்து வருகிறேன். இதில் இன்னும் பல விக்கிப்பீடியர்களும் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.

குழுமத்தில் எழக்கூடிய இன்னும் மற்ற பல உரையாடல் போக்குகளையும் கவனித்து குழமப் பண்பாட்டையும் நெறிமுறைகளையும் சீராக்க 1500 தொடக்க உறுப்பினர்களாவது தேவை என்று கொள்வோம். அதற்குப் பிறகு தள இணைப்பைத் தற்காலிகமாக நீக்கிக் கொள்ளலாம். அதற்குப் பிறகு குழுமம் பக்குவமடைய சில காலம் தந்து, அலுவல் முறை தகுதிக்கு ஏற்ப செயற்படுகிறது என்று கருதினோமானால், மீண்டும் தள அறிவிப்பு வாயிலாகவும் வேறு வழிகள் மூலமாகவும் ஆதரவை வழங்கலாம். இக்குழுமம் நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறினால், உரிய நெறிமுறைகளை இங்கு விக்கியிலேயே வகுத்து அவற்றைப் பின்பற்றும் குழுமத்துக்கு ஆதரவை வழங்கலாம்.

விக்கிப்பீடியாவில் இருந்தோ முகநூலோ முகநூலில் இருந்து விக்கிப்பீடியாவோ விளம்பரம் பெறும் நிலையில் இருவரும் இல்லை :) எல்லா இணையத்தளங்களுக்கும் யூடியூபு, முகநூல், துவிட்டர் மற்ற பல சமூக ஊடகங்களில் அலுவல் முறை பரப்புரைக் களங்கள் இருப்பது போல இதனையும் கருதலாம். இதற்கு விக்கிப்பீடியா இயக்கத்தில் இருந்து உலகளவில் ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன. இத்தகைய அலுவல் முறை களங்களுக்கான நெறிமுறைகளை வகுத்து அவற்றைப் பின்பற்றுவதை உறுதி செய்தால் மட்டும் போதும்.

பயன்கள்:

1. மலையாள விக்கியர் குழுமத்தில் 3000+ பேர் உண்டு. அவர்களின் பல முன்னெடுப்புகளுக்கு முகநூல் குழுமம் மிகவும் உதவிகரமாக இருப்பதை அறிய முடிகிறது. அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக ஊடகப் பரப்புரை குறித்த தெளிவான அணுகுமுறையுடன் இயங்கி வருகிறார்கள். நமக்கும் ஊடகப் போட்டி காலத்திலும் தமிழ்விக்கி10 கொண்டாட்டங்களுக்கும் முகநூல் நல்ல பரப்புரைக் களமாக இருந்தது. இக்குழுமத்தில் தமிழிணைய ஆர்வலர்கள், பிற மொழி விக்கிப்பீடியர்கள், இதழாளர்கள் உள்ளனர். இதனைத் தக்க முறையில் தமிழ் விக்கிப்பீடியாவின் நலனுக்குப் பயன்படுத்த முடியும்.

2. தமிழ் விக்கிப்பீடியா புரிபடாத புதுப்பயனர்கள் இக்குழுமத்தில் கேள்விகள் கேட்டால், வழிகாட்டி மீண்டும் இங்கு திருப்பி விட முடியும். ஒரு புதுப்பயனருக்கு விக்கியில் எங்கு எப்படி கேள்வி கேட்பது என்பது அவ்வளவு இலகுவாக புரிவதில்லை.

3. விக்கிப்பீடியாவின் தன்மை காரணமாக உள்ள இறுக்கமான சூழலைத் தளர்த்தும் வகையில் ஒரு நட்புறவுக் களமாக விக்கிப்பீடியர்களுக்கு இடையேயான இக்குழுமம் செயற்பட முடியும்.

விக்கிப்பீடியாவின் வழமையான செயற்பாடுகளுக்கு இடையூறாகவோ மாற்றாகவோ இல்லாமல், ஒரு வலுவான பரப்புரைக் களமாக இக்குழுமத்தை வளர்த்தெடுக்கும் வாய்ப்பு உண்டு. எனவே, இதனை வளர்முகமாக அணுக வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 19:39, 28 நவம்பர் 2013 (UTC)Reply

பின்வரும் காரணங்களுக்காக, தற்காலிகமாக முகநூல் குழுமத்துக்கான இணைப்பை நீக்கியுள்ளேன்:

  • தற்போது முகநூல் குழுமத்தில் 1600+ உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 1000 பேர் ஒரு மாத காலத்துக்குள் சேர்ந்தவர்கள். இவர்களையும் அரவணைத்து ஒரு பக்குவமான குழுமமாக வளர போதிய காலம் தேவை. மூன்று மாத காலத்துக்குப் பிறகு மீண்டும் தள அறிவிப்பின் மூலம் அடுத்து ஒரு 1500 பேரைச் சேர்க்கலாம்.
  • தொடர்ந்து ஒரே இணைப்பு எப்போதும் தள அறிவிப்பில் இருப்பதைத் தவிர்க்கலாம்.
  • முகநூல் குழும வேலைப்பளுவைக் குறைத்து வழமையான விக்கிப்பீடியா பணிகளில் கவனம் குவிக்கலாம். --இரவி (பேச்சு) 04:22, 19 திசம்பர் 2013 (UTC)Reply

முகநூல் இணைப்பில் சிக்கல்

தொகு

முதற்பக்கத்தில் இருக்கும் போது முகநூலுக்கான இணைப்பை சொடுக்க இயலவில்லை. சரி செய்ய வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:50, 21 நவம்பர் 2013 (UTC)Reply

13திசம்பர்2013 - ஈரோட்டில் பயிலரங்கு

தொகு

புகுபதிகை செய்த பயனர்களும், விக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் என்பதனைக் காண, இணைக்க எண்ணுகிறேன். --≈ உழவன் ( கூறுக ) 01:05, 27 நவம்பர் 2013 (UTC)Reply

இது போன்ற நிகழ்வுகளுக்கு இரு வாரம் முன்பாக அறிவிப்பு இடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களைப் போன்ற நிருவாக அணுக்கம் உள்ள எந்தப் பயனரும் தயங்காது இத்தகைய அறிவிப்புகளைச் சேர்க்கலாம். மாற்றுக் கருத்து இருந்தால் மற்ற பயனர்கள் பேச்சுப் பக்கத்தில் தெரிவிப்பார்கள். --இரவி (பேச்சு) 18:16, 28 நவம்பர் 2013 (UTC)Reply
கற்றுத்தந்தமைக்கு நன்றி!--≈ உழவன் ( கூறுக ) 23:45, 28 நவம்பர் 2013 (UTC)Reply
கல்லூரியின் பெயரை நேரிடியாக வெளிப்படுத்துவது, உந்துதலாக இருக்கும். --≈ உழவன் ( கூறுக ) 18:55, 5 திசம்பர் 2013 (UTC)Reply
அறிவிப்பு சுருக்கமாக இருப்பது தகவலை எளிதில் உள்வாங்க ஏதுவாக இருக்கும். தள அறிவிப்பும் நெரிசல் இல்லாமல் இருக்கும். தொடர்ந்து கல்லூரிகள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் தள அறிவிப்பில் இருப்பது விளம்பரமாகவும் பார்க்கப்படலாம். இதற்கு முன்பு நானும் இவ்வாறு நிறுவனப்பெயர்களுடன் அறிவிப்புகளை இட்டுள்ளேன். இருந்தாலும், இது தொடர்பான ஒரு வழிகாட்டலை உருவாக்குவது நன்று. நன்றி.--இரவி (பேச்சு) 16:45, 7 திசம்பர் 2013 (UTC)Reply

புதுப்பயனர் தூண்டல்கள்

தொகு

புதிய பயனர்களைத் தொகுக்கத் தூண்டும் வகையில், சோதனை முறையில் சில அறிவிப்புகளைச் சேர்த்துப் பார்க்க எண்ணியுள்ளேன். இது தொடர்பான அறிவிப்புகள் வரும் நாட்களில் இடம்பெறும். ஏதேனும் மாற்றம் தேவையெனில் இங்கு தெரிவியுங்கள்.--இரவி (பேச்சு) 22:18, 6 செப்டம்பர் 2014 (UTC)

இந்திய விக்கிமீடியா கிளை சார்பாக ஒரு வேண்டுகோள்

தொகு

வணக்கம். இந்திய விக்கிமீடியா கிளையின் சமூக ஊடகத் தளங்கள் மூலம் தமிழ் உட்பட இந்திய, உலகளாவிய விக்கிமீடியா செய்திகளை அறியத்தருகிறோம். இந்தத் தளங்களை இன்னும் பரவலான மக்களுக்குக் கொண்டு செல்ல உதவி தேவை. தமிழ் விக்கிப்பீடியாவின் தள அறிவிப்பில் ஒரு மாத கால அளவு மட்டும் இதற்கான இணைப்புகளைத் தருமாறு வேண்டுகிறேன். பின்வருமாறு செய்தி இருக்கலாம்:

"விக்கிமீடியா செய்திகளை அறிய இந்திய விக்கிமீடியா கிளையின் முகநூல் பக்கத்தை விரும்புங்கள். துவிட்டர் பக்கத்தைப் பின்தொடருங்கள்."

நன்றி.--Ravidreams (WMIN) (பேச்சு) 11:09, 3 நவம்பர் 2014 (UTC)Reply

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:55, 4 நவம்பர் 2014 (UTC)Reply

நீக்குக

தொகு

Hello, good news! Thanks to FreedomFighterSparrow and Brion, unregistered users can now hide the sitenotice again. Previously, they were forced to see it continuously.

In all cases, please use the sitenotice with care, and keep in mind that occasional visitors see sitenotices on all their visits, if they visit less than once a month or they don't click "dismiss" and save a cookie. Nemo 15:45, 24 மார்ச் 2015 (UTC)

பங்குபற்றி அல்ல பங்குபெற்று

தொகு

/* விக்கிக்கோப்பை போட்டியில் பங்குபற்றி, சிறந்த தொகுத்தல் மேற்கொள்ளும் தமிழ் விக்கிப்பீடியராகுங்கள்!*/ - பங்குபெற்று என மாற்றவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:42, 7 சனவரி 2016 (UTC)Reply

பங்கு + பற்று = பங்குபற்று. Participate என்னும் பொருளில் பங்குபற்று என்பது பயன்படுத்தப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 14:14, 7 சனவரி 2016 (UTC)Reply
பங்குபற்று என்றாவது குறிப்பிடலாம், பங்குபற்றி = பங்கு குறித்த ?? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:41, 7 சனவரி 2016 (UTC)Reply

முடிந்துவிட்டது

தொகு

ஆகஸ்ட் 28, 2017 மலையக விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை முடிவுற்றது. அவ்விணைப்பை நீக்கலாம்.--Maathavan Talk 10:32, 12 செப்டம்பர் 2017 (UTC)

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை

தொகு

தமிழ் மற்றும் பஞ்சாபி விக்கிபீடியர்களுக்கு திசம்பர் 6 முதல் 9, 2018 வரை பயிற்சி நடைபெற உள்ளது. அதற்கான விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரவேற்க அறிவிப்பு தேவை. நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:12, 4 நவம்பர் 2018 (UTC)Reply

தேதி முடிந்துவிட்டதால் இந்த அறிவிப்பை நீக்கிவிடக் கேட்டிக்கொள்கிறேன்.-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:47, 11 நவம்பர் 2018 (UTC)Reply

ஐயம்

தொகு

கொரானாவைரசு குறித்த விழிப்புணர்வை நாம் தரலாமா? என்பது குறித்து எனக்கு ஐயம் இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:01, 20 மார்ச் 2020 (UTC)

இதனைச் சார்ந்து விக்கித்தரவில் பங்களிப்புகள் நடைபெறுகின்றன. நாமும் அவர்களுடன் இணையலாம். பல்வேறு ஆய்வுகள் இது குறித்து நடந்துவருகின்றன. அத்தகயை முன்னணி மருத்துவ அமைப்புகளைக் குறித்து நாம் எழுதலாம். போதுமான விழிப்புணர்வு மக்களிடம் தற்போது இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். பகுப்பு:கொரானா இருந்தல் சிறப்பாகும். --உழவன் (உரை) 00
55, 22 நவம்பர் 2020 (UTC)

புதிய அறிவித்தலுக்கான வேண்டுகோள்

தொகு

@Neechalkaran: செப்டம்பர் 25 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்தான அறிவிப்பினை வெளியிட உதவி தேவை.

செப்டம்பர் 25 அன்று 24 மணி நேரமும், விக்கி மாரத்தான் நடைபெறுகிறது. நீங்களும் பங்கேற்கலாமே?

முந்தைய அறிவிப்பு

 

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:51, 19 செப்டம்பர் 2022 (UTC)

@Neechalkaran: படிமம் இன்னும் பெரிதாக தெரியும்படி செய்ய இயலுமா? பெட்டி சற்று பெரிதாகும். ஆனால், இடம் இருக்கிறதென்று நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:42, 19 செப்டம்பர் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியாவிக்கி_பேச்சு:Sitenotice&oldid=3517312" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Sitenotice" page.