விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்

(விக்கிப்பீடியா:முதற்பக்கப் படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் காலவரையறையற்ற ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழைய சிறப்புப் படங்களின் தொகுப்புகள் கீழே ஆண்டு வாரியாகத் தரப்பட்டுள்ளன.

சேமிப்பக படம்

தொகு

திட்டத்தின் எதிர்பார்ப்புகள்

தொகு
  • கிழமைக்கு இரண்டு சிறப்பு படங்களை காட்சிப்படுத்துவது. (இப்போது புதனன்றும் ஞாயிறன்றும் படங்கள் இற்றைப்படுத்தப்படுகின்றன)
  • காட்சிப்படுத்தப்படும் படங்களின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கப் படம்}}

படங்களின் தெரிவு/சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்

தொகு
  • தற்பொழுது, சிறப்புப் படங்களைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு ஏதும் இல்லை. ஒவ்வொரு பயனரும் கீழ் வரும் வரையறைகளுக்குட்பட்ட சிறப்புப் படிமங்களை தெரிவு செய்யலாம்.
  1. கருத்து முக்கியத்துவம் அல்லது அழகு வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
  2. தெளிவான உரிம விவரங்கள் தரப்பட்டிருக்க வேண்டும். விக்கிமீடியா காமன்சிலிருந்து சிறப்புப் படங்களை எடுப்பது நல்லது. நியாயப் பயன்பாட்டுப் படிமங்களைத் தவிர்க்க வேண்டும்.
  3. கூடுமானவரை படவணு அளவு அதிகமான படங்களாக இருக்க வேண்டும்.
  4. வெறும் படமாக இல்லாமல் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைக் கொண்டு விளக்கக்கூடியதாகவோ கட்டுரைகளுக்குத் தொடர்புடையதாகவோ இருக்க வேண்டும். படத்துடன் நான்கு அல்லது ஐந்து வரிகளுடனான விளக்கம் இருக்க வேண்டும்.
  5. சிறுவர்களும் காணத்தகுந்த படங்களாக இருக்க வேண்டும்.
  6. பரிந்துரைகளை விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் பக்கத்தில் தரலாம்.

காட்சிக்குத் தயார் செய்தல்

தொகு

சிறப்புப் படமொன்றை இனங்கண்ட பின்னர் அதனை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தத் தக்கவாறு தயார் செய்ய வேண்டும். எல்லாச் சிறப்புப் படங்களும் ஒரே முறைமையின் கீழ்த் தயார் செய்யப்பட்டால் அதனைக் காட்சிப்படுத்துவது எளிதாகும்.

  1. மேற்கண்ட பெட்டியில் தேவையான மாதம் (தமிழில்), தேதி (எண்), ஆண்டு (எண்) இவற்றைக் கொடுத்து உருவாக்குக எனும் பொத்தானைச் சொடுக்கவும். பின்னர் கிடைக்கும் பக்கத்தில் உரியவற்றைத் தரவும்.
  2. படத்தின் பெயர் image என்பதிலும், படத்தின் அளவை size என்பதிலும் படத்தின் உயரத்தை colsize என்பதிலும் (விருப்பத்திற்குரியது) படவிளக்கத்தை caption என்பதிலும் கொடுக்கவும்.
  3. முன்னோட்டத்தைப் பார்த்த பின் சேமிக்கலாம்.
  4. எடுத்துக்காட்டொன்று கீழே தரப்பட்டுள்ளது.

விக்கிநிரல் வடிவ உள்ளீடு (Wiki Mark-up input)

தொகு
{{இன்றைய சிறப்புப் படம்
|image=Sugar apple with cross section.jpg
|size=400
|colsize=280
|texttitle=சீதாப்பழம்
|caption='''[[சீத்தாப்பழம்|சீதா]]''' முதன் முதலில் [[அமெரிக்காக்கள்|வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில்]] விளைந்த ''அனோனா'' என்ற [[தாவரம்|தாவர]] இனமாகும்.

இது 8 [[மீட்டர்|மீ]] உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில்

அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக [[கலோரி|கலோரிகள்]] கொண்டதாகவும் [[இரும்புச்சத்து]] மிக்கதாகவும் இருக்கும். [[பேன்|தலைப்பேன்களை]] ஒழிக்கும் மருத்துவ குணத்தை

சீதாப்பழம் கொண்டிருப்பதால், [[இந்தியா|இந்தியாவில்]] இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்
காட்டப்பட்டுள்ளது.
}}

பல்லூடக வடிவ வெளியீடு (Multimedia output)

தொகு
 

சீதா முதன் முதலில் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் விளைந்த அனோனா என்ற தாவர இனம். இது 8 மீ உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்