விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2007


டிசம்பர் 25, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Nihâl Chand 001.jpg

ராஜபுதன ஓவியப் பாணி என்பது, இந்தியாவின் ராஜபுதனப் பகுதியில் உருவாகி வளர்ந்த ஓர் ஓவியப் பாணியாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. ராஜபுதன ஓவியங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சார்ந்த நிகழ்வுகள், கண்ணனுடைய வாழ்க்கை, அழகிய நிலத்தோற்றங்கள், மனிதர் போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களைக் கொண்டவையாக விளங்குகின்றன.

மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 11, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Mpbhartidayal.jpg

மதுபானி ஓவியப் பாணி அல்லது மிதிலா ஓவியப் பாணி என்பது, இந்தியாவின், பீஹார் பகுதியில் நடைமுறையில் உள்ள ஒரு ஓவியப் பாணி ஆகும். மதுபானி ஓவியப் பாணி மிகவும் பழமையானது. இதன் தோற்றம் பற்றித் தெரியவில்லை. மரபுவழிக் கதைகள் இதை, இராமாயண காலத்துடன் தொடர்பு படுத்துகின்றன. ஜனகரின் மகளான சீதையின், திருமணத்துக்காக, ஒவியர்களை ஜனகர் அமர்த்தியதாக அவை கூறுகின்றன.

மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 04, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Claude Monet, Impression, soleil levant, 1872.jpg

உணர்வுப்பதிவு, சூரியோதயம் (Impression, soleil levant) என்பது குளோட் மொனெட் (Claude Monet) என்பவர் வரைந்த ஓவியமொன்றுக்கு இடப்பட்ட பெயராகும். இந்தப் பெயரை ஒட்டியே 19 ஆம் நூற்றாண்டின் ஓவிய இயக்கம் ஒன்றுக்கு உணர்வுப்பதிவுவாத இயக்கம் (Impressionist Movement) என்ற பெயர் ஏற்பட்டது. 1872 எனத் திகதியிடப்பட்டிருந்தாலும், 1873 இல் வரையப்பட்டதாகக் கருதப்படும் இவ்வோவியம், லெ ஹாவ்ரே துறைமுகத்தைக் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டது. எனினும் இதன் தளர்வான தூரிகைக் கோடுகள் கருப்பொருளைத் துல்லியமாகக் காட்டாமல், அதனைக் கோடிகாட்டுகின்ற வகையில் அமைந்துள்ளன.

மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 29, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
"Allereerste Gedachten" Willem den Broeder.png

அடிமன வெளிப்பாட்டுவாதம் (Surrealism) என்பது, ஒரு பண்பாட்டு, சமூக மற்றும் இலக்கிய இயக்கம் ஆகும். இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேலோங்கியிருந்தது. மனித மனத்தை விடுதலை செய்வதன்மூலம், தனிமனிதனையும், சமூகத்தையும் விடுதலை செய்யலாம் என்று இதன் சார்பாளர்கள் நம்பினர். இதை மனிதனது அடிமனத்தின் கற்பனா சக்தியைச் செயற்படுத்துவதன் மூலம் அடைய முடியும் என்று அடிமன வெளிப்பாட்டுவாதம் வலியுறுத்தியது. இயல்புநிலையிலும் மெய்மையான இந்த நிலை, தனிமனித, பண்பாட்டு மற்றும் சமூகப் புரட்சியையும், கட்டற்ற வாழ்க்கையையும், கவிதை, இலக்கியம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும் என்றும் இக் கொள்கையினர் நம்பினர். இந்தக் கருத்துருவை முதன் முதலில் முன்வைத்த அண்ட்ரே பிரெட்டன் (André Breton) என்பவர், இவ்வாறாக வெளிப்படுத்தப்பட்ட உண்மை அழகியல் சார்ந்தது என்றார். அடிமன வெளிப்பாடு என்ற இந்தக் கருத்துருவைப் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களும் பயன் படுத்தியபோது இது அடிமன வெளிப்பாட்டுவாத இயக்கம் எனப்பட்டது.

மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 19, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Vassily Kandinsky, 1913 - Composition 7.jpg

கூட்டமைவு VII (Composition VII) என்பது, ரஷ்யாவில் பிறந்த, புகழ் பெற்ற ஓவியரான வசிலி கண்டின்ஸ்கி வரைந்த ஓவியம் ஆகும். 1913 ஆம் ஆண்டில் வரையப்பட்ட இவ்வோவியம், முதலாம் உலகப் போருக்கு முற்பட்ட, கண்டின்ஸ்கியின் சாதனைகளின் உச்சக்கட்டம் எனக் கருதப்படுகின்றது.

கண்டின்ஸ்கி இந்த ஓவியத்தை நேரடியாக வரையத் தொடங்கவில்லை. இதனை வரையுமுன், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் போன்றவற்றைப் பயன்படுத்தி முப்பது ஓவியங்களைச் சோதனை நிலையில், வரைந்துள்ளார். இவருடைய இந்தச் சோதனைக் கட்டத்தின் பின் நான்கு நாட்களுக்கும் குறைவான காலத்தில் இறுதி ஓவியத்தை வரைந்து முடித்தார்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 05, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Henri de Toulouse-Lautrec 028.jpg

புத்தியல் ஓவியம் (Modern art) அல்லது நவீன ஓவியம் என்பது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறத்தாழ 1970கள் வரை உருவான பலவகையான ஓவியப் பாணிகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர் ஆகும். புத்தியல் ஓவியம், அக்காலத்திய ஓவியம் தொடர்பான புதிய அணுகுமுறையைக் குறித்தது. இந்த அணுகுமுறையில், பொருட்கள், அவை இருப்பது போன்றே வரையப்பட வேண்டும் என்பதில்லை. நிழற்படத் தொழில் நுட்பத்தில் தோற்றம், ஓவியத்துக்கு இருந்த அந்தத் தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதனால் கலைஞர்கள், இயற்கை, பொருட்கள், கலையின் செயற்பாடுகள், ஆகியவை தொடர்பாகப் புதிய சிந்தனைகளுடன், கலையை நோக்குவதற்கான புதிய முறைகள் பற்றிய சோதனைகளில் ஈடுபட்டார்கள். இது, கலையைப் பண்பியற் தன்மைக்கு (abstraction) நெருக்கமாகக் கொண்டு வந்தது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 29, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Kandinsky white.jpg

தற்காலத்தில் பண்பியல் ஓவியம் (Abstract art) என்பது, உலகப் பொருட்களை வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இயல்பான உருவங்களை எளிமையான வடிவில், அவற்றின் உலக இயல்பு குறைக்கப்பட்ட நிலையில் வரைவதையே குறித்தது. இந்த ஓவியங்கள் உலகப் பொருட்களை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிக்காட்டின. அக்காலத்தைச் சேர்ந்த கியூபிசம் மற்றும் இது போன்ற பிற கலை இயக்கங்கள் சார்ந்த ஓவியங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இவ்வாறான நுட்பம், உலகப் பொருட்களின், வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு உதவியது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 21, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Meister des Rasikapriyâ-Manuskripts 001.jpg

முகலாய ஓவியம் என்பது, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 19 ஆம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் இருந்த முகலாயப் பேரரசுக் காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது பொதுவாகப் புத்தகங்களிலும், சிறு அளவினதாகவுமே வரையப்பட்டன.

இரண்டாவது முகலாயப் பேரரசனான ஹுமாயூன், தப்ரீசில் இருந்தபோது, அவனுக்குப் பாரசீக ஓவியங்கள் அறிமுகமானது. ஹுமாயூன் இந்தியா திரும்பியபோது, பாரசீக ஓவியப் பாணியில் திறமை பெற்ற இரண்டு ஓவியர்களையும் அழைத்து வந்தான். இவர்கள் மூலம் இந்தியாவுக்கு அறிமுகமான இப்பாணி, பின்னர் உள்ளூர்ப் பாணிகளுடனும் கலந்து முகலாயப் பாணி எனப்பட்ட புதிய பாணியொன்றை உருவாக்கியது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 14, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Indischer Maler des 6. Jahrhunderts 001.jpg

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்களே அஜந்தா ஓவியங்களாகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரையப்பட்டுள்ளன. பௌத்த மதக் கொள்கைகளை முதன்மைபடுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 08, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Sikh Gurus with Bhai Bala and Bhai Mardana.jpg

தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களினூடாக ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களினூடாக மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரினூடாக மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு30 செப்டெம்பர், 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Ayyan Thiruvalluvar Statue.JPG

திருக்குறள், மனிதகுலம் என்றென்றும் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஓர் ஒப்புயர்வற்ற நீதி இலக்கியமாகும். அத்தகைய நெறிகளை அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளிய திருவள்ளுவரை காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல் வெளியில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழ, திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 25, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Ravi Varma-Ravana Sita Jathayu.jpg

ராஜா ரவிவர்மாவின் ஓவியம்: ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன்.

இராமாயணத்தில் தீய கதாபாத்திரமாக கூறப்படும் இராவணன் அந்த நூலில் இலங்கை மன்னனாவான். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றான். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாக இருந்தது எனப்படுகிறது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 23, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Edison and phonograph edit2.jpg

தாமஸ் ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 2, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 300 வகை இனங்கள் உள்ளன. புறாக்கள் உலகெங்கிலும் உள்ளன என்றாலும் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா முதலிய தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இது வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுபெரியவை. படத்தில் காட்டுப் புறா ஒன்று காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 17, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|px|{{{texttitle}}}]]

வெளிப்பாடு பிழை: எதிர்பாராத >= ஆபரேட்டர். படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் என்பது, அடிமன வெளிப்பாட்டுவாத ஓவியரான ரேனே மார்கிரிட்டால் வரையப்பட்ட இதில் எழுதப்பட்டுள்ள இது சுங்கான் அல்ல (Ceci n'est pas une pipe) எனும் தொடருக்காகப் பெயர் பெற்றது. இது ஒரு முரண்பாடு போலத் தோன்றினாலும் இது "சுங்கானின் வெறும் ஓவியமே" என்று அவர் இதற்கு விளக்கம் கூறினார். இப்பொழுது, லாஸ் ஏஞ்சலிசில் உள்ள கவுண்டி ஓவிய அருங்காட்சியகத்தில் இது வைக்கப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 12, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா என்பது ஓவியர் லியொனார்டோ டா வின்சியால் பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு
பெப்ரவரி 13, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Colosseum-interior.01.JPG

கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும்.

பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 11, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பனை ஒரு மரம் என்று தமிழில் வழங்கப்படினும், தாவரவியல் ரீதியில் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா என்பதாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை; இயற்கையில் தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும். அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. அரிதாக சில இடங்களில் கிளைகளுடன் கூடிய பனைகளும் தென்படும். இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். படத்தில் இரு பனை மரங்களின் உச்சிகள் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 7, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Ring tailed lemur and twins.jpg

லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் என்னும் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம்(simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 6, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள ஒரே பாலூட்டி விலங்கு. இதனை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வினத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் இவை மட்டும் 20% இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வகைப்பாட்டியல் அறிஞர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனும் வரிசையில் வைத்துள்ளனர். இவற்றின் முகம் நரியின் முகம் போலும் இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றைப் பறக்கும் நரி என்றும் அழைப்பர். பெரும்பாலும் இவை இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து உண்டு வாழ்கின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 5, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Keel-billed toucan, costa rica.jpg

டூக்கான் பறவை அல்லது பேரலகுப் பறவை என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனமாகும். நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் குயிலும் பறவை இனத்தைச் சேர்ந்தது. இவைகளில் சுமார் 21 இனம் கொலம்பியா நாட்டிலும், சுமார் 17 இனங்கள் பிரேசில், வெனிசூலா, ஈக்வெடார் போன்ற நாடுகளில் வாழ்கின்றன. அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 4, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Paon bleu faisant la roue - peacock.JPG

மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜனவரி 14, 2007 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
No image.jpg

இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மகாவீரரைப் முதன்மையாகப் பின்பற்றி வடிவம் பெற்ற சமயம் சமணம் ஆகும். இவருக்கும் முன்பு 23 தீர்தங்கரர் என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள். காந்தி அவர்கள் பின்பற்றிய அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள். பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் தமிழர்கள் ஆவார்கள்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு