விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012

புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.


ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்






டிசம்பர் 30, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

பாசிக்குடா மட்டக்களப்பிலிருந்து 35 கிமீ வட மேற்கில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசம். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இது உள்ளது. அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புகளாகும்.

படம்: அன்ரன் குரூஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



டிசம்பர் 23, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

மீட்பரான கிறித்து பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக இது கருதப்படுகின்றது. இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. மீட்பரான கிறிஸ்துவின் சிலை பல புனைகதை மற்றும் ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளது. '2012' என்னும் படத்தில், உலக அழிவின் போது இச்சிலை அருகில் உள்ள மலையில் மோதி உடைவதைப்போல் இடம் பெருகின்றது. இதனால் இப்படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



டிசம்பர் 16, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

நாண் லியான் பூங்கா ஹொங்கொங்கில் மாணிக்க மலை நகரில் அமைக்கப்பட்டிருக்கும் சீனப் பாரம்பரியக் கட்டடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு பூங்காவாகும். பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் சீனக் கட்டக்கலையின் தொன்மையை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. இயற்கை அழகுமிகு மலைத்தொடர்கள் மத்தியில், வானுயர் தற்கால குடியிருப்புத் தொகுதிகளின் மையத்தில் இந்த சீனத் தொன்மையின் சிறப்பை எடுத்துக்காட்டும் பூங்கா அமைந்துள்ளது இன்னுமொரு சிறப்பாகும். இந்தப் பூங்கா 35,000 மீட்டர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நாண் லியான் பூங்காவின் உள்ளே கட்டப்பட்டுள்ள டாங் அரசவம்சக் கட்டட வடிவம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: அருண்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



டிசம்பர் 9, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

பச்சைக் குக்குறுவான் என்பது ஒரு ஆசிய குக்குறுவான் பறவை. குக்குறுவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது. இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை. தடித்த செவ்வலகும் புல்லின் நிறமுங்கொண்ட இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு, பின்புறத்தின் மேல்பகுதி அனைத்தும் பழுப்பு நிறத்தில் வெண்கீற்றுகளுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



டிசம்பர் 2, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை என்பது இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட வரி வசூல் செய்பவரும், பாவிகளும் அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நல்லவர்களாக, பாவம் அறியாதவர்களாக எண்ணிக்கொண்ட மதகுருக்கள் தமக்குள், இவர் பாவம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு போன்ற உவமைகளைத் தொடர்ந்து ஊதாரி மைந்தன் உவமையை இயேசு கூறினார். இது லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் நல்லவர்கள் நல்வழியில் வாழ்வதை பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரே கெட்டமனிதனால் இறைவன் மிகுந்த இன்பம் அடைவார் என்பது இதன் செய்தியாகும்.

படம்: பொம்பெயோ பட்டோனி (1773)
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 25, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
நீந்தும் கலைமான்

நீந்தும் கலைமான் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள, 13,000 ஆண்டுகள் பழமையான ஒரு சிற்பம் ஆகும். மாமூத் தந்தத்தின் நுனிப் பகுதியில், இரண்டு கலைமான்கள் நீந்துவது போல் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பிரான்சில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிற்பத்தை 1866 ஆம் ஆண்டில் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடித்தனர். ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே என்றி பிரேயில் என்பவர் இவ்விரு துண்டுகளும் பொருந்தக்கூடியன என்றும் அவை, இரண்டு கலைமான்கள் ஒன்றின் பின்னால் இன்னொன்று நீந்துவதுபோல் அமைந்த ஒரே சிற்பத்தின் பகுதிகள் என்றும் உணர்ந்தார்.

படம்: பிளிக்கர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 18, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வெற்றிலைத் தட்டம்

வெற்றிலைத் தட்டம் பித்தளை உலோகத்தினாலான பாதமும் ஒரு சாண் வரை உயரும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த வளைவான மேற்புறமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் ஆகும். இந்தியா, இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிலையும் வெற்றிலைத் தட்டமும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழர் விருந்தோம்பலிலும், வாழ்வோட்ட சடங்குகளிலும் இவை சிறப்பான ஒர் இடத்தைப் பெறுகின்றன. தென்னிந்தியாவில் வெற்றிலைக் காளாஞ்சி எனவும் இலங்கையின் வடபுறத்தில் கால் தட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது. விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது.

படம்: ஆனந்தி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 11, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
கயோட்டி கோநாய்

கயோட்டி கோநாய் என்பது நாய் என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு. இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது. பார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களின் நகுவாட்டில் மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும் அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம்.கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 4, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பட்டாம்பூச்சி

ஜெசபெல் மத்திய அளவு பீரிடே வகை பட்டாம்பூச்சி ஆகும். இவ்வகை தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் குறிப்பாக, இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது டேலியஸ் இனக் குடும்பத்தில் காணப்படும் ஒரு பொதுவான பட்டாம்பூச்சி ஆகும். கூட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் ஜெசபெல் பட்டாம்பூச்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 28, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 28, 2012
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 21, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
மரப் புதைபடிவம்

இந்தோனேசியாவின் பண்டுங் புவிச்சரிதவியல் அருங்காட்சியகத்தில் உள்ள 3.2 மில்லியன் ஆண்டுகள் பழைமையான மரப் புதைபடிவம். இந்தோனேசியாவில் இதுவரை கிடைத்துள்ள மரப் புதைபடிவங்களில் இதுவே மிகப் பெரியது. உலகிலேயே மிகப் பெரிய மரப் புதைபடிவமாகவும் இது கருதப்படுகிறது.

படம்: பாகிம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 14, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
செம்பருந்து

செம்பருந்து, செம்மண் நிற இறக்கைகளையும் வெண்ணிற உடலின் நடுப்பகுதியையும் உடைய ஒரு பருந்து ஆகும். இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா மற்றும் ஆத்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்துக்கள் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன் என்ற பெயரில் வணங்குவர்.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 6, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
முறுக்கு

முறுக்கு, தமிழர்கள் பெரிதும் விரும்பி உண்ணும் பலகாரம் ஆகும். இது உளுந்து மாவும் அரிசிமாவும் கலந்தும் சில இடங்களில் கோதுமை மாவும் கலந்து உருவாக்கப்படுகிறது. இந்த மாவுடன் எள், ஓமம், நெய் போன்றவை கலந்து சிறிது கெட்டியாகப் பிசைந்து முறுக்குக்கான அச்சில் இட்டு பிழிந்து எடுக்கின்றனர். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சுட வைத்து அந்த எண்ணையில் பிழிந்து வைத்த முறுக்கைப் போட்டு எடுப்பர்.

படம்: எஸ்ஸார்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 30, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஐந்தருவி

ஐந்தருவி குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

படம்: Aronrusewelt
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 23, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
விண்மீன்கள் நிறைந்த இரவு

விண்மீன்கள் நிறைந்த இரவு (The Starry Night) என்பது நெதர்லாந்து பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர் வின்சென்ட் வான் கோ என்பவரால் 1889 இல் வரையப்பட்ட ஓவியம். தெற்கு பிரான்சிலுள்ள தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரியும் காட்சியைச் சித்தரித்து, அவர் நினைவிலிருந்து வரையப்பட்டது. இது வான் கோவின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும், பரவலாக தலைசிறந்த ஒன்றாகவும் புகழப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 16, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
நாற்று

நாற்று என்பது தாவரங்களில், அவற்றின் விதைகளிலிருக்கும், முளையத்திலிருந்து, முளைத்தல் என்னும் செயன்முறை மூலம், வெளியே வரும் இளம் தாவரமாகும். தாவர நாற்றுக்கள் சிறப்புப் பராமரிப்புடன் வளர்க்கப்படும் இடம் நாற்றுமேடை எனப்படும். படத்தில் தமிழ்நாட்டு விவசாயி ஒருவர் வளர்ந்த நாற்றுகளைப் பிடுங்கிச் சேகரிக்கிறார்.

படம்: பாலு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 9, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மட்டக்களப்பு வாவி இலங்கையின் மட்டக்களப்பில் மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமானதும் 27,527 ஏக்கர் பரப்பளவினையும் கொண்ட இது இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் மறைவதால் படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 2, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வண்டி வேடிக்கை தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் குகை பகுதியில் நடைபெறும் ஒரு வழிபாட்டு நிகழ்வு. ஆடித்திருவிழாவின் போது, சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறது. கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் விண்ணுலக கடவுளர்களின் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவது தான், வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பம்சம். திருவிழாவின் போது பக்தர்கள் நோன்பு இருந்து கடவுள் உருவங்களைத் தரித்து, வண்ண வண்ண வண்டிகளில் வலம் வருவர். பெரும்பாலும் புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். பெண்கள் இந்நிகழ்வில் பங்குபெறுவதில்லை. ஆண்களே பெண் வேடமிட்டு வருவர்.

படம்: சிவானந்தன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகஸ்ட் 26, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆவாரை அல்லது ஆவாரம்பூ ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரம். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடிகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். சங்க காலத்தில் மடல்-மா ஏறி வருகையில் பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

படம்: டி. சிறிநிவாசன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகஸ்ட் 19, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மெட்டி என்பது தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன். இது பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்பட்டிருக்கும். பழங்காலத்தில் இது ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது. உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் பொதுவாக பிச்சியா என்று அழைக்கப்படும் மெட்டிகளை அணிவர். தென்னிந்தியாவில் பெண்கள் தங்களது கால்விரல்களில் (முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) மெட்டிகளை அணிகின்றனர். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் மெட்டி அணிவது கருப்பை நரம்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

படம்: கார்த்திக் முருகன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 12, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

குக்குரங்கு தென்னமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் கீழ்நிலைப் பகுதிகளில் வாழும், மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், குரங்கு. வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ கொண்ட சிற்றுருவம். மேற்கு பிரேசில், தென்மேற்குக் கொலம்பியா, கிழக்கு ஈக்வெடார், கிழக்குப் பெரு, வடக்கு பொலிவியா போன்ற நாட்டுப்பகுதிகளில் உள்ள காடுகளில் கடல்மட்டத்தில் இருந்து 200மீ முதல் 940மீ உயரமான பகுதிகள் வரையில் இவை பெரும்பாலும் வாழ்கின்றன. குக்குரங்குங்கள் இயற்கையில் ஏறத்தாழ 11-12 ஆண்டுகளைத் தம் வாழ்நாளாகக் கொண்டுள்ளன, ஆனால் உயிர்க்காட்சி சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன.

படம்: மாலீன் தைசன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 5, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஊதாப்பிட்டு தேன்சிட்டு இந்திய உபகண்டத்திலுள்ள ஒரு தேன்சிட்டு வகைப் பறவை. ஏனைய தேன்சிட்டுக்களைப் போன்று இவை சிறிய அளவான பறவையாகும். உணவாக மலர்த்தேனையும் சிலவேளைகளில் சிறிய பூச்சிகளையும், குறிப்பாக குஞ்சுகளுக்கு கொடுக்கின்றன. இவற்றின் கூடு தொங்கும் பை போன்ற அமைப்பையுடையது. இது ஒட்டடை, மரப்பாசி மற்றும் தாவரப் பொருட்கள் கொண்டு அமைக்கப்படும். ஆண் (படத்தில் உள்ளது) பிரகாசமான நிறத்தைக் கொண்டும், பெண் மங்கலான மஞ்சள் மற்றும் ஒலிவ் நிறத்தையும் கொண்டு காணப்படும்.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 1, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற இந்துக் கோயில். இது யாழ்ப்பாண நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12 தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்துள்ளது.

படம்: மயூரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 29, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆன்டைனின் தூக்கம் என்பது ஒரு செருமானிய நாட்டுப்புறக் கதை ஆகும். ஆன்டைன் என்பவள் அமரத் தன்மை உடைய அழகியதொரு நீரணங்கு ஆவாள். அவள் மனிதரைக் காதலிப்பாளேயாயின் அவளது சாகா வரம் போய் விடும் என்பது அவளது விதி. ஆன்டைனின் சாபம் என்பது பிறவி மைய குறைமூச்சுக் கூட்டறிகுறியின் இன்னொரு பெயர் ஆகும். இந்நோயர்கள் தானாகவே மூச்சு விடும் திறனை இழந்தவர்கள். ஒவ்வொரு மூச்சையும் இவர்கள் வலியத் துவங்க வேண்டும். இவர்கள் உறங்கினால் மூச்சு விடுதல் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு விடும். ஜான் வாட்டர்ஹவுஸ் என்பவர் 1872 ஆம் ஆண்டில் வரைந்த ஓவியம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 25, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து பெறப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் எனப்படும். தமிழ்நாட்டில் தூத்துக்குடி பகுதியிலும் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்கள் உள. உப்பளத்திலிருந்து உப்பு சுமந்து செல்லும் தொழிலாளி. ஊடகப்போட்டியில் முதல் பரிசு பெற்றது.

படம்: அரவிந்த் ரங்கராஜன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 22, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உலகில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று இரும்பு . தூய இரும்பு அலுமினியத்தைவிட மிருதுவானது. இரும்பின் உருகுநிலை 1538°செ (2800 °ப) ஆகும். உருக்காலை ஒன்றில் இரும்பு உருக்கப்படுவது இங்கு காட்டப்பட்டுள்ளது. ஊடகப்போட்டியின் ஒரு பகுதியாகப் பதிவேற்றப்பட்டது.

படம்: பி. சக்தி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 18, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
தீவுத் திடல்

சென்னையின் வட பகுதியிலுள்ள கூவம் ஆற்றினுள் 19ம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுத் திடலின் இரவு நேரக் காட்சி. ஊடகப்போட்டியில் மூன்றாம் பரிசைத் தட்டிக் கொண்ட படம். சென்னை ஜிம்கானா கழகம், பல்லவன் இல்லம் மற்றும் பெருநகர போக்குவரத்து கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் ஆகியன இங்கு உள்ளன. இங்கு சந்தையும் கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன.

படம்: Prinzy555
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 15, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பாலாடைக்கட்டி அல்லது பாற்திரட்டி என்பது பாலிலிருந்து உருவாக்கப்படும் ஒரு திட உணவாகும். இது பாலிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதால் உருவாகிறது. அதிக நாள் கெடாதிருக்க இது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படுகிறது. இதில் புரதச்சத்தும் கொழுப்புச் சத்தும் மிக அதிகமாகவும் உயிர்ச்சத்து ஏ, கால்சியம், பாசுபரசு போன்ற சத்துக்களும் உள்ளன.

படம்: மிரபெல்லா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 12, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
டிஸ்கவரி விண்ணோடம்

டிஸ்கவரி விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டது. இது விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 8, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஃபாலிங்வாட்டர் (Fallingwater) என்னும் இந்த வீடு 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. உரிமையாளரின் பெயரால் இது "மூத்த எட்கார் காஃப்மன் வீடு" எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது 1935 ஆம் ஆண்டில், பிட்ஸ்பர்க்கிலிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள தென்மேற்குப் பென்சில்வேனியாவின் நாட்டுப்புறப் பகுதியொன்றில் கட்டப்பட்டது. இவ் வீட்டின் ஒரு பகுதி அருவியொன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இவ் வீடு கட்டி முடிக்கப்பட்டதும், "ரைட்டின் மிக அழகான கட்டிடம் இதுவே" என டைம் இதழ் புகழ்மாலை சூட்டியது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 4, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கதகளி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்நடனத்தின் கருப்பொருள்களாக அமைகின்றன. முகபாவமும் கையசைவுகளும் கதகளியின் முதன்மையான அம்சங்களாகும்.

படம்: க்யூநான்சென்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 1, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஹேலியின் வால்மீன் என்பது 75 முதல் 76 ஆண்டுகளுக்கொரு முறை புவிக்கு அருகில் வரும் ஒரு வால்நட்சத்திரம் ஆகும். இது குறுகிய நேரத்துக்கு தெளிவாக சாதாரண கண்களுக்குத் தெரியக்கூடியதாகும். இது சூரியக் குடும்பத்துக்குள் கடைசித் தடவையாக பிப்ரவரி 9, 1986இல் வந்துபோனது. அடுத்ததாக இது 2061இன் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம்: ஃபிலிப் சால்ஸ்கெபெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 6, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கருப்பு அன்னம் என்பது முதன்மையாக ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் வாழும் பெரிய அளவிலான ஒரு நீர்ப்பறவை. நியூசிலாந்து நாட்டில் இவ்வினம் கிட்டத்தட்ட முற்றாக அழியும் அளவிற்கு வேட்டையாடப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பண்டைத் தமிழிலக்கியங்களில் உரையாசிரியர்களால் காரோதிமம் எனும் பெயரிலே குறிக்கப்பட்டுள்ள இது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் ஆகும்.

படம்: ஜேஜே ஹாரிசன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 10, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கையின் கிழக்கே பொத்துவில் நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்துள்ள மண்ணாலான மலை போன்ற அமைப்பு பொத்துவில் மண்மலை ஆகும். இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின் போது, இந்த மண்மலை ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்தது.

படம்: தாரிக் அஸீஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 13, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
முப்பிரிவுகள் விதி

முப்பிரிவுகள் விதி என்பது ஓவியம், புகைப்படம் ஆகியவற்றில் கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும். ஒரு படத்தினைக் குறுக்கு நெடுக்கான இரு கோடுகள் மூலம் 9 சமமான பாகங்களாகப் பிரிக்கலாம் இதனால் கிடைக்கும் 4 வெட்டுப்புள்ளிகளும் அந்தப் படத்தின் குவியப் புள்ளிகள் ஆகும். ஒருவருடைய கண்கள் இயற்கையாக நாடும் இடங்களை இவை குறிக்கின்றன. இதுவே முப்பிரிவுகள் விதியாகும். இதன்படி எடுக்கப்பட்ட படம் ஒன்று கோடுகளோடும் கோடுகளின்றியும் அசைபடமாகக் காட்டப்பட்டுள்ளது.

அசைபடம்: மூன்டிக்கர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 17, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஏர்பஸ் ஏ380 என்பது உலகின் மிகப்பெரிய, நீண்டதூர, அகலவுடல் கொண்ட பயணிகள் வானூர்தியாகும். பிரான்சு நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இது, எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்தால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இது இரு அடுக்குகள் கொண்டதால் ஒரே நேரத்தில் குறைந்தது 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆற்றலுடையது. வானில் பறக்கும்போது எடுக்கப்பட்ட படம் காட்டப்பட்டுள்ளது.

படம்: ஆக்ஸ்வெல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 20, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ரோடியம் என்பது அரிதாகக் கிடைக்கும் வெள்ளிபோன்ற நிறமுடைய ஒரு தனிமம். பொதுவாக பிளாட்டினம் தாதுவுடன் சேர்ந்தே கிடைக்கும் இது உலோகக்கலவைகளிலும் உள்ளெரிபொறிகளின் தீப்பொறியூட்டிகளிலும் தானியங்கி ஊர்திகளிலும் பயன்படுகிறது. இது மிகவும் விலை அதிகமான ஓர் உலோகம் ஆகும். படத்தில் முறையே, இதன் 1கி பொடி, அழுத்தப்பட்ட உருளை, உருக்கப்பட்ட உருண்டை ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

படம்:அல்கெமிஸ்ட்-எச்பி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 24, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மங்குஸ்த்தான் என்பது வெப்பவலயத்துக்குரிய பசுமைமாறாத் தாவரமாகும். இது சுண்டாத் தீவையும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியையும் தாயகமாகக் கொண்டது. இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாற்றுத்தன்மையும் சிறிதளவு நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும் இது வெள்ளை நிறமுடையது. இதன் வெளிப்புறம் ஊதா நிறமுடையது ஆனால் இது உண்ணப்படுவதில்லை. படத்தில் மங்குஸ்த்தானின் முன்-பின் குறுக்குவெட்டுத்தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

படம்: எஸ்மாஸ்டர்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 27, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆரஞ்சு சிட்ரஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழ மரமாகும். இப்பழத்தில் சி உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. உலக அளவில் இது முறையே பிரேசில், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இம்மரங்கள் 15.5oC முதல் 29oC வரையிலான வெப்பநிலையில் நல்ல பலனைத்தரும்.

படம்: விவசாய ஆய்வுச் சேவையகம், அமெரிக்க விவசாயத் துறை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 2, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு

கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானியப் பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது. எசுப்பானிய அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படையை ஆங்கிலக் கால்வாயில் முறியடித்து, பின்னர் தரைப்படைகளை இங்கிலாந்து மண்ணில் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் தலைமையிலான இங்கிலாந்து கடற்படை எசுப்பானியக் கடற்படையைத் தோற்கடித்து விரட்டியதால், ஃபிலிப்பின் திட்டம் தகர்க்கப்பட்டது. படத்திலுள்ள ஓவியம் பிலிப்-ஜாக் டி லூதர்பர்க் எனும் ஓவியரால் தீட்டப்பட்டது. எசுப்பானியக் கடற்படையின் தோல்வியினைக் காட்டுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 5, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
கடாவெட்டு

பலி கொடுத்தல் ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். பலி கொடுத்தல் கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும். யாகம், பூசை போன்ற சடங்குகளோடு இது இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்து சமயத்தின் பெரும்பான்மைக் கோயில்களில் பலி கொடுத்தல் நெடுங்காலமாக வழக்கத்தில் இல்லை. ஆனால் பல கோயில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

படம்: அருணன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 9, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வளையல்

வளையல் இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்தியா மற்றும் வங்க தேசம் போன்ற தென் ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்துப் பெண்களாலும் ஓரளவு ஆண்களாலும் வளையல் அணியப்படுகிறது.

படம்: ஜெயசீர் லூர்துராஜ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 13, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அந்திரொமெடா பேரடை

அந்திரொமேடா பேரடை‎ ஒரு நாள்மீன்பேரடை. புவி இருக்கும் பால் வழி பேரடைக்கு அருகே இருக்கும் பேரடை இதுவாகும். சுருள் வகைப் பேரடையான இது, புவியில் இருந்து 2,500,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 16, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

தெப்பக்குளம் இந்து சமயக் கோயில்களின் உள்ளேயோ அல்லது வெளியிலோ அமைக்கப்படுகிறது. தெப்பக் குளங்கள் பொதுவாக சதுர வடிவில்தான் அமைக்கப்படுகின்றன. அவை இந்து சமய விழாக்களுடன் தொடர்புடையதாய் இருக்கின்றன. படத்தில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 20, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
உப்பு

உப்பு உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. படத்தில் பொலிவியா நாட்டில் உள்ள உப்புக் குவியல்கள் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 23, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பறையாட்டம்

பறை ஆட்டம் தமிழர்களின் பாரம்பரிய நடனம். அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது. பறை ஆட்டத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளன. சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உள்ளன.

படம்: Joelsuganth
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 30, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் ஓவியம். கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை

உலகளாவிய அளவிலே தலைசிறந்த ஓவியச்சிறப்பு கொண்டதாகக் கருதத்தக்க சமணர் குகை ஓவியம் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் என்னும் மலைக்குன்றுப் பகுதியில் உள்ளது. மிகவும் அழியும் தறுவாயில் இருக்கும் பேரழகான ஓவியம் மகாராட்டிராவில் உள்ள உலகப்புகழ் பெற்ற அசந்தா குகை ஓவியங்களுக்கு ஈடாகக் கருதப்படுகின்றன. கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை.

படம்: செ. இரா. செல்வக்குமார்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 1, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சீன வங்கிக் கோபுரம் இது ஆங்காங்கில் அமைக்கப்பட்டுள்ள சீன வங்கியின் தலைமையகம் ஆகும். உலகில் அதிக அளவு உயரிய கோபுரங்களைக் கொண்ட நாடாக ஆங்காங் விளங்கியபோதும் ஆங்காங் கட்டக்கலையின் தனித்துவமான சின்னமாக இந்த சீன வங்கிக் கோபுரம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆங்காங்கின் அடையாளச் சின்னம் என்று குறிப்பிடப்படுகிறது. படத்தில் இக்கட்டடத்தின் முழு அளவிலான கட்டமைப்பும் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 4, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா குருத்தோலைத் திருவிழா. இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு இது நிகழும். நற்செய்தி நூல்கள் தரும் தகவல்படி, இயேசு தாம் துன்புற்று இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னால் எருசலேம் நகருக்குள் கழுதை மீதேறி மிகுந்த மாட்சிமையோடு நுழைந்தார். அவர் சென்ற வழியில் மக்கள் தங்கள் மேலுடைகளை விரித்தார்கள்; வேறு சிலர் இலைதழைகளைப் பரப்பினார்கள். இந்த ஓவியம் 1900களில் வரையப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 8, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று ஊலூரூ. இதனால் இது பச்சோந்திக் குன்று எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆத்திரேலியாவின் வடக்கு மாநிலத்தில் உள்ளது. 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது இக்குன்று. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான சித்திரங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன. உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 11, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாம்பல் கதிர்க்குருவிகள் (Ashy Prinia) இந்தியா, நேபாளம், வாங்காளதேசம், பூட்டான், இலங்கை, மேற்கு மியன்மர் ஆகிய இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் காணப்படுகின்றன. 13-41 செ.மீ. நீளமுடையவை. நகர்ப்புறத் தோட்டங்களில் வாழும் இவற்றை, இதனுடைய சிறிய அளவு, வேறுபாடான நிறம், செங்குத்தான வால் என்பனவற்றைக் கொண்டு எளிதில் இனங்காணலாம். தென் பகுதி பறவைகள் பின்புறத்தே சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தைக் கொண்டு காணப்படும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 15, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அமெரிக்கத் தச்சர்

மரவேலை செய்யும் ஒருவரைத் தச்சன் எனக் குறிப்பிடுவர். தமிழ் நாட்டில், சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருப்பதால், தச்சர் என்பது மரவேலையாளர் சாதியையும் குறிக்கும். படத்தில் தச்சுவேலை செய்யும் அமெரிக்கர் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 18, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஒரு கோயில் பல்லக்கு

பல்லக்கு அல்லது சிவிகை மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வகை வாகனம். சிவிகைகளில் பல வகைகள் உள்ளன. வரலாற்றில் பல நாடுகளில் பல வகை சிவிகைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். சிவிகைகளில் ஒருவரோ ஒரு சிலரோ அமர்ந்து கொண்டோ சாய்ந்து கொண்டோ பயணிக்க முடியும். பயணிகள் இருக்கைக்கு முன்னும் பின்னும் உள்ள நீண்ட கம்பங்களை தோள்களிலும் கைகளிலும் சுமந்து பணியாளார்கள் நடக்க, சிவிகை நகருகின்றது. மலைப் பகுதிகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற சில இடங்களிலும் கோயில்களில் தெய்வத்தின் சிலைகளைச் சுமந்து செல்லவும் மட்டும் இன்றளவும் பயன்படுகின்றன.

படம்: இரவீந்திரபூபதி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 22, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
கல்லடிப் பாலம்

கல்லடிப் பாலம் மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட இது லேடி மனிங் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 25, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன்

முருகன் இந்து சமயத்தினரின் கடவுள்களுள் ஒருவர். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் ஒன்றாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். படத்தில் வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக எடுத்துச் செல்லப்படும் முருகன் சிலை உள்ளது.

படம்: மகிந்தன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 29, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
உறுமி மேளம்

உறுமி மேளம் இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தாள தோல் இசைக்கருவி. இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமிவது போல இசையெழுப்புவர். படத்தில் தமிழ்நாட்டின் நாயக்கர் திருமணத்தில் உறுமி மேளம் வாசிக்கப்படுகிறது.

படம்: கார்த்திக்பாலா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 4, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

டோக்கியோ ஸ்கை ட்ரீ டோக்கியோவில் கட்டமைக்கப்பட்டு வருகின்ற ஒலிபரப்பு, விருந்தகம், ஆய்வு ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்ட கோபுரம். இதன் பழைய பெயர் புதிய டோக்கியோ கோபுரம் என்பதாகும். இது 2010 முதல் சப்பானில் உள்ள மிக உயரமான கட்டடம் மற்றும் உயரம் கூடிய செயற்கைக் கட்டமைப்பு எனும் பதிவுகளைப் பெற்றது. இது 2012 மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கோபுரத்தின் முழு அளவும் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 7, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அலன் தோட்டம் என்பது டொரன்டோவிலுள்ள பூங்காவுடன் இணைந்த உள்ளகத் தாவரவியல் தோட்டம் ஆகும். 1879இல் கட்டப்பட்ட இது கண்ணாடி மாளிகையினுள் அமைந்த ஒரு தோட்டமாகவும் பொது நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும் இருந்து வந்தது. 1902ஆம் ஆண்டு இது தீப்பிடித்து அழிந்து, அதன்பின்னர் 1910ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட கட்டடமே தற்போது உள்ளது. படத்தில் தோட்டத்திலுள்ள கண்ணாடி மாளிகை காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 11, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உலகின் பல நாடுகளிலும் குழந்தைத் தொழிலாளர் முறை நடைமுறையில் உள்ளது. இதற்கு எதிராகப் பல நாடுகளில் சட்டமியற்றப்பட்டிருந்தாலும் இதனை ஒழிக்க முடியவில்லை. இடது புறம் உள்ள படம் 1908ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் எடுக்கப்பட்டது. அங்குள்ள நூற்பாலை ஒன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஒரு சிறுமி நூற்பு எந்திரங்களுக்கு இடையில் நிற்கிறாள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 14, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களிலும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. இம்மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது. மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாக பெரிதும் பயிலப்படுகிறது. இது ஓர் ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். படத்தில் மற்போரில் ஈடுபடும் இரு இந்திய இளைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 18, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அங்கூர் வாட் என்பது கம்போடியாவிலுள்ள ஓர் இந்துக் கோவில் தொகுதியாகும். இது இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. கெமர் மொழியில் வாட் என்றால் கோவில் என்று பொருள்படும். ஓர் அகழியும் மூன்று மண்டபங்களும் நடுவிலுள்ள ஐந்து கோவில்களைச் சுற்றியுள்ளன. மதிய வேளையில் எடுக்கப்பட்ட கோவிலின் படம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 21, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இயேசுவின் உயிர்த்தெழுதல்

பாலஸ்தீனாவில் வாழ்ந்து, கடவுளாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இதை இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் பதிவு செய்துள்ளன. இயேசு உயிர்த்தெழும் காட்சியைச் சித்தரிக்கும் ஒரு சுவரோவியம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 25, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
சூரியன்

சூரியன் சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 28, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
கியூப தேசிய சரணாலயத்தில் அமெரிக்கப் பூநாரை

பூநாரை என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும். படத்தில் கியூப தேசிய சரணாலயத்தில் உள்ள அமெரிக்கப் பூநாரை காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 29, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
தனுஷ்கோடி புயல், 1964

டிசம்பர் 23, 1964 அன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டு அழிந்து போனது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்து நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு போய்க் கொண்டிருந்த தொடருந்தும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. மொத்தம் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. படத்தில் தனுஷ்கோடி தேவாலயத்தின் இடிபாடுகள் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 26, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பெக்டினாரிடே அல்லது தும்பிக்கைப் புழுக்கள் அல்லது பனிக்கூழ் கூம்புப் புழுக்கள் என்பவை கடலில் வாழும் கால்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட ஒரு புழுக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இவை தங்களின் மீது மணல் குழாய்களைத் தோராயமாக 5 செமீ நீளத்திற்கு வளர்த்துக் கொள்கின்றன. படத்தில் மேலே மணல்கூடுடனும் கீழே கூடின்றியும் இந்தப் புழு காட்டப்பட்டுள்ளது. இரு வகையிலும் தலை வலப்புறத்தில் உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 22, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நாசாவின் விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்படும் விண்கலம். இது அதிகாரபூர்வமாக ”விண்வெளி போக்குவரத்து முறை” என அழைக்கப்படுகிறது. கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் என கட்டப்பட்ட ஐந்து விண்ணோடங்களில் சேலஞ்சர் மற்றும் கொலம்பியா விண்வெளி பயணத்தின் போது விபத்துக்குள்ளாகி அழிந்து விட்டன. பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து அட்லாண்டிஸ் விலகிச் செல்கையில் எடுக்கப்பட்ட படம் இடப்புறம் உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 19, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்


{{{texttitle}}}

மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூர் பேரரசை ஆண்ட இவர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியுடன் பல முறைப் போரிட்டவர். ஆர்த்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான ஆங்கிலப் படைகளுடன் நடைபெற்ற நான்காவது ஆங்கிலேய மைசூர்ப் போரில் திப்பு மரணமடைந்தார். படத்தில் காணப்படும் ஓவியம் 1800ம் ஆண்டு என்றி சிங்கில்டன் என்பவரால் வரையப்பட்டது. இதில் போரிட்டு மடியும் திப்புவின் இறுதி நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 15, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆஃப்னியம் - சாம்பல் நிறம் கொண்ட தனிமமமான இது கோப்பன்ஹேகனில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. நியூட்ரான்களை அதிகமாக உட்கவரும் பண்பைப் பெற்றிருப்பதால் அணு உலைகளில் கட்டுப்படுத்தும் கழிகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையில் தனியாகக் கிடைக்காமல் சிர்க்கோனியத்துடன் சேர்ந்தே கிடைக்கிறது. உலகில் மலாவி, பிரேசில், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் அதிகமாக இது கிடைக்கிறது. மக்கள்தொகை கூடக்கூட இதன் தேவை பெருகினால் இன்னும் 10 ஆண்டுகள் வரை மட்டுமே இது கிடைக்கும் என்று கணித்துள்ளனர். படத்தில் ஆஃப்னியம் துண்டுகள் குவித்துவைக்கப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 12, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பியானோ என்பது விசைப்பலகையால் வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. அளவில் பெரியதாக மேற்கத்திய இசையில் தனித்து வாசிப்பதற்கும் அறையிசையில் வாசிப்பதற்கும் இசையமைப்பதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் கூட உதவியானதாக இருக்கும். 1700ஆம் ஆண்டு இதனை கிறிஸ்டிஃபோரி என்ற இத்தாலிய இசைக்கருவியாளர் கட்டமைத்தார். இதில் பின்னப்படாத துணியால் சுற்றப்பட்ட சுத்தியலை உருக்குக் கம்பிகளின் மீது அடித்து ஒலி பெறப்படுகிறது. படத்தில் பெரிய அளவிலான பியானோ ஒன்று காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 8, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆர்க்டிக் ஓநாய் பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் விலங்கினம் ஆகும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இவை துருவ ஓநாய்கள் என்றும் வெள்ளை ஓநாய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. -112oC வரை கடுங்குளிரைத் தாங்கும் ஆற்றல் வாய்ந்த இவை ஐந்து மாதங்கள் வரை தொடர்ந்து இருளில் வாழும். சராசரியாக 11 ஆண்டுகள் உயிர்வாழும் இவை பரவலாக கனடா, அலாஸ்கா, கிரீன்லாந்து போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 5, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இருகண் நோக்கி என்பது சற்று தொலைவில் உள்ள காட்சியைச் சிலமடங்கு பெரிதாக்கி, இரண்டு கண்களாலும் நேரடியாக நாம் காண உதவும், ஒரு சிறுதொலைவு நோக்கிக் கருவி. இக்கருவியைக் கொண்டு பார்க்கும் பொழுது தொலைவில் உள்ளவை மிக அருகில் இருப்பது போல இருக்கும். படத்தில் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் இரு கண்ணோக்கி ஒன்று காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 1, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சூறாவளி என்பது ஒரே திசையில் சுற்றும் அடர்த்தியான உருண்டையான நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு ஆகும். பெரிய அளவில் தோன்றும் சூறாவளிகள் பெரும்பாலும் குறைந்தக் காற்றழுத்தப் பகுதிகளில்தான் உருவாகின்றன. இவை, புவியில் மட்டுமின்றி செவ்வாய், நெப்டியூன் போன்ற கோள்களிலும் உருவாகின்றன. எல்லா சூறாவளிகளும் ஒரு பகுதியில் இருக்கும் குறைவான காற்றழுத்தப் பகுதியிலேயே மையம் கொள்கின்றன. படத்தில் இசபெல் எனும் சூறாவளி பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 29, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆளி உலகம் முழுதும் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் வாழும் மெல்லுடலி மீன் வகையைச் சார்ந்த ஓடுடைய உயிரினமாகும். இதன் உடலின் வெளிப்பகுதி இரு ஓடுகளால் மூடப்பட்டும் உட்பகுதிகள் புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்த சதைப்படலமாகவும் காணப்படுகின்றன. படத்தில் உண்பதற்காகத் தட்டில் பரிமாரப்பட்டுள்ள ஆளிகள் உள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 25, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும் வட்ட வடிவ படகு போன்ற கலம். இது பெரும்பாலும் மூங்கிலால் கட்டப்பட்டு, எருமைத் தோலால் போர்த்தப்பட்ட கலம் ஆகும். இதனைச் செலுத்த பரிசல்காரர் ஒரு நீண்ட துடுப்பால் உந்தி நகர்த்துவார். இது பெரும்பாலும் விரைவாக நீரோடாத ஆறுகளிலும், அமைதியாயுள்ள நீர்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதன் பயன்பாடு அருகி வருகிறது. படத்தில் பரிசலில் துடுப்பிடுவதும் மக்கள் பயணிப்பதும் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 22, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

குண்டுமணி குன்றிச் செடியின் விதையாகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறமானவொரு மறுவைக் கொண்ட தோற்றத்தைக் கொண்ட இந்த விதையின் பெயரான குண்டுமணி என்பது, "குன்றிமணி" என்ற சொல்லின் திரிபு ஆகும். மிகவும் நச்சுத்தன்மை உடைய இந்த விதை கடினமான தோலைக் கொண்டுள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் குண்டுமணி காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 18, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கஞ்சன்சங்கா இமயமலைத்தொடரில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும். கஞ்சன்சங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்ற பொருள்தரும். இதில் மொத்தம் சிகரங்கள் உள்ளன. அவற்றில் நான்கு மீ உயரத்திற்கு அதிகமானவை. 1852ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான சிகரமாகக் கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட்டே உயர்ந்தது என்று முடிவு செய்யப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 15, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கரும்பு சர்க்கரை உற்பத்திக்கு முக்கியமாகப் பயன்படும் தின்பதற்கு இனிக்கும் ஓர் இடைத் தட்ப வெட்ப நிலைத் தாவரம். தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட இது கி. பி. 636இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் 70%க்கும் மேற்பட்ட சர்க்கரை கரும்பிலிருந்துதான் உற்பத்தியாகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில், இந்தியா, சீன மக்கள் குடியரசு முறையே முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. தமிழர் விழாவான தைப்பொங்கலில் கரும்பு முதன்மையான இடம் வகிக்கிறது. படத்தில் வெட்டப்பட்ட கரும்புக் கரணைகள் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 11, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நரம்பிணைப்பு என்பது நரம்பு மண்டலத்தில் மின் சமிக்ஞையையோ வேதி சமிக்ஞையையோ ஒரு நியூரானிலிருந்து இன்னொன்றுக்குக் கடத்தும் ஓர் அமைப்பாகும். Synapse (நரம்பிணைப்பு) என்ற சொல்லானது சர் சார்லஸ் ஸ்காட் செரிங்டன் குழுவினரால் உருவாக்கப்பட்டது. நரம்பிணைப்புகளைப் பொதுவாக வேதி நரம்பிணைப்பு, மின் நரம்பிணைப்பு என இரு வகையாகப் பிரிக்கலாம். படத்தில் வேதி நரம்பிணைப்பு சமிக்ஞை கடத்துதலின் மாதிரி வடிவம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 8, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அலகு குத்துதல் என்பது இந்துக் கோவில் திருவிழாக்களில் பால்குடம், காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். பக்தரின் வாயில் ஒருமுனையில் குத்தப்படும் இந்தக் கூரிய உலோக ஊசி மறுமுனை வழியே வேகமாக இழுக்கப்படும். ஊசியின் கூர் முனைக்கு எதிர்முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கி நாக்கலகு குத்துவதுமுண்டு. படத்தில் அலகு குத்தித் தெருவில் வலம் வரும் பக்தர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 4, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாவக்கட்டு அல்லது சேவல் சண்டை என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். கிராமப்பகுதிகளில் இரு சேவல்களுக்கிடையிலான சண்டையை விளையாட்டாகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்து வந்தனர். இதே போன்ற விளையாட்டுகள் வட அமெரிக்கா, ஆசியாவின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன. படத்தில் சண்டையிடும் இரு சேவல்கள் காணப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 1, 2012 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நீராவிப் பொறி என்பது நீராவியைப் பணிப் பாய்மமாகக் கொண்டு இயந்திரவியல் வேலையைப் பெற உதவும் ஒரு வெப்பப் பொறி. இது ஒரு வெளியெரி பொறியாகும். இந்த அசைபடத்தில் நீராவியால் இயங்கும் ஒரு தொடருந்து இழுபொறியின் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது. பாகம் 1, 2 முறையே அச்சாணியும் வணரியும் ஆகும். பாகம் 4 உந்துதண்டை வழிப்படுத்தும் அமைப்பாகும். நீராவி பாகம் 7இன் வழியே உருளையினுள் நுழைகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு