விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2015

Oneminute.png புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.


சனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்

திசம்பர் 27, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Carnavalesco.jpg

மயில் இந்தியாவின் தேசியப் பறவை. ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. அவற்றின் தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும் ஆண்மயில் ஒன்றை படத்தில் காணலாம்.

படம்: கேப்ரியல் கசுட்டால்டீனி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுதிசம்பர் 20, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Maker unknown, India - Krishna and Radha - Google Art Project.jpg

ராதை பகவத புராணத்திலும், இந்து மதத்தின் வைஷ்ணவ பரம்பரையின் கீத கோவிந்தத்திலும் கிருஷ்ணரின் முதன்மை பக்தை. ராதா எப்போதும் கிருஷ்ணரின் பக்கத்தில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறார். ஃபிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு ஓவியத்தில் கிருஷ்ணருடன் ராதை இருப்பதை படத்தில் காணலாம்

படம்: கூகுள் கலைத்திட்டம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுதிசம்பர் 13, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Curcuma longa roots.jpg

மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகை. 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் இச்செடியின் இலைகள் கொத்தாக இருக்கும். இதன் தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் பொடி இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

படம்:சைமன் ஏ. யூக்ஸ்டர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுதிசம்பர் 6, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Bergen city centre and surroundings Panorama edited.jpg

பேர்கன் நோர்வே நாட்டில் இரண்டாவது பெரிய நகரமாகும். முன்பு நோர்வேயின் தலைநகரமாகவும் இருந்தது. ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்கும் இந்நகர் ஏழு மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்தது. பேர்கன் நகர மையப்பகுதியின் அகலப்பரப்புக் காட்சியைப் படத்தில் காணலாம்.

படம்:அக்விஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 29, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Ara ararauna 01.jpg

நீல மஞ்சள் ஐவண்ணக் கிளி அல்லது நீலமஞ்சள் பெருங்கிளி என்பது கிளிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்காவ் என்னும் பெருங்கிளி வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவைகள் தென்னமெரிக்கக் காடுகளில் காணப்படுகின்றன. இப்பெருங்கிளி 76 முதல் 83 செ.மீ நீளமும் 900 முதல் 1300 கிராம் எடை வரையும் வளரக்கூடியது. இப்பறவை பார்ப்பதற்கு அழகாக நீல இறக்கை, வாலுடனும் கருநீல கன்னமுடனும், உடலின் அடிப்பகுதி பொன்மஞ்சளாகவும் இருக்கும்.

படம்:எச். செல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 22, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Blind monks examining an elephant.jpg

குருடர் தடவிய யானை நீதிக்கதை பலவகைப்பட்ட உண்மைகளையும், பொய்மைகளையும் கேட்போருக்கு உணர்த்த பயன்படுகிறது. சில குருடர்கள் (அல்லது இருட்டில் சில மனிதர்கள்) ஒரு யானையைத் தடவிப் பார்க்கிறார்கள். தங்கள் கைகளின் மூலம் யானை எப்படிப்பட்டது என்று உணர முயலுகிறார்கள். யானையைப் பற்றிய கருத்து வேறுபாடு முற்றி அவர்களிடையே சண்டை மூளுகிறது. படத்தில் சப்பானிய ஓவியர் அனபூசா இட்ச்சோ வரைந்த ”யானையைத் தடவும் குருட்டுத் துறவிகள்” என்ற மர அச்சு ஓவியத்தைக் காணலாம்

படம்:அனபூசா இட்ச்சோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 15, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Radial engine.gif

விசைப்பொறி அல்லது இயக்கி என்பது ஆற்றலைப் பயனுள்ள இயந்திர இயக்கமாக மாற்றுகின்ற ஓர் இயந்திரம் ஆகும். உள்எரி பொறிகளும் நீராவிப் பொறிகள் போன்ற வெளி எரி பொறிகளும் எரிபொருளை எரித்து வெப்பத்தை உண்டாக்கி அவ்வாற்றலை இயக்கமாக மாற்றுகின்றன. படத்தில் ஆரவாக்கு விசைப்பொறிகளின் இயக்க அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: டக்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 8, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Salinas del Carmen 01.jpg

உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. கேனரி தீவுகளில் உள்ள ஒரு உப்பளத்தைப் படத்தில் காணலாம்.

படம்:எச். செல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 1, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Alfeniques of day of the dead.jpg

இறந்தோர் நாள் மெக்சிக்கோ நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருநாள். மூன்று நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்களில் மக்கள் தங்கள் உறவினருடன் ஒன்று கூடி தங்கள் குடும்பங்களில் மாண்டவரை நினைவுகூருவர். இறந்தோருக்கெனத் தனியாக பூசை மேடைகள் கட்டி அவற்றில் சர்க்கரையால் ஆன மண்டையோடுகள், மரிகோல்ட் மலர்கள், இறந்தவர்களுக்குப் பிடித்த உணவுகள், பானங்கள் ஆகியவற்றைப் படைப்பது மரபு. படத்தில் இறந்தோர் நாள் கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒருவகையான ஆல்ஃபெனிக்குகள் - மண்டையோடு வடிவ மிட்டாய்கள் உள்ளன.

படம்:தோமாசு காசுட்டெலாசோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 25, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Arundhati Roy W.jpg

அருந்ததி ராய் ஒரு இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர், அரசியல் கட்டுரையாளர். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர். 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் க்காக இப்பரிசு பெற்றார். அணு ஆயுத எதிர்ப்பு, இந்து தேசிய எதிர்ப்பு, நர்மதை அணை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்ற பல இயக்கங்களில் பங்கேற்பவர்.

படம்:அகசுட்டசு பினு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 18, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Battle at Lanka, Ramayana, Udaipur, 1649-53.jpg

இராமாயணம் ஒரு பெருங்காவியம். அதில் இராவணனிடமிருந்து சீதையை மீட்க இராமன், இலங்கை மீது வானரப் படையுடன் படையெடுத்தார். இராமனின் வானரப்படைக்கும், இராவணனின் அரக்கர் படைக்கும் நடந்த போரை இராமாயணத்தின் யுத்த காண்டம் கூறுகிறது. அப்போரைச் சித்தரிக்கும் ஓவியத்தைப் படத்தில் காணலாம். சாகிப் தின் என்ற பதினேழாம் நூற்றாண்டு ஓவியர் வரைந்த இந்த ஓவியம் முகலாய, ராஜபுதான ஓவியப்பாணிகளின் கலவையாக உள்ளது.

படம்: சாகிப்தின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 11, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Bald.eagle.closeup.arp-sh.750pix.jpg

கொன்றுண்ணிப் பறவைகள் என்பன எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் நகத்தால் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. படத்தில் கொன்றுண்ணிப் பறவைகளுள் ஒன்றான “சொட்டைக் கழுகு” ஒன்றைக் காணலாம்.

படம்:ஏட்ரியன் பிங்ஸ்டோன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 7, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Simple CV Joint animated.gif

இயங்குவியல் என்பது மரபார்ந்த விசையியலின் ஒரு பிரிவாகும். இது ஒரு புள்ளியின் இயக்கத்தையோ ஒரு பொருளின் இயக்கத்தையோ பற்றி விவரிக்கும் பிரிவாகும். இதில் விசை, திசைவேகம், முடுக்கம் போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. படத்தில் மாறாத் திசைவேகம் கொண்ட இணைப்பின் அசைவுப்படம் காட்டப்பட்டுள்ளது.

படம்:சிமெல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 4, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Chaplin The Kid edit.jpg

சார்லி சாப்ளின் ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. எனினும் தனித்துவமான நகைச்சுவைப் பாணிக்காகவே பரவலாக அறியப்படுகிறார். படத்தில் சாப்ளின் நடித்த “தி கிட்” திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி காட்டப்பட்டுள்ளது.

படம்: ”தி கிட்” திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 30, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Mozambique - traditional sailboat.jpg

பாய்மரம் என்பது பண்டையக் கால சிறிய கப்பல்களில் கட்டப்பட்டிருக்கும் ஒரு வகை பாய் அல்லது துணி ஆகும். இதன் மூலம் தான் பண்டைக் கால கடல் வாணிபத்தில் பயன்படுத்திய கப்பல்கள் காற்றின் மூலம் பயணம் செய்தன. பண்டைத் தமிழர் இந்தப் பாய்மரத்தைச் செலுத்துவதில் திறமை பெற்றிருந்தனர். படத்தில் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் பாய்மரப் படகைக் கொண்டு மீன்பிடிப்பது காட்டப்பட்டுள்ளது.

படம்: ஸ்டீவ் எவான்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 27, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Foot US - Ours vs Kangourous - 2013-03-02 - 20.jpg

அமெரிக்கக் காற்பந்தாட்டம் உலகில் காற்பந்து வகைகளின் ஒரு வகை ஆகும். இந்த விளையாட்டு அமெரிக்காவில் மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. இந்த ஆட்டத்தில் தலா 11 ஆட்டக்காரர்கள் கொண்ட இரு அணிகள் மோதிக்கொள்ளும் ஒரு ஆட்டத்தில் நான்கு 15-நிமிடப் பகுதிகள். இரு அணிகளும் எதிரணியின் ஆட்டக்காரர்களை சமாளித்து எதிரணியின் களமூலைக்கு கொண்டு சென்று புள்ளிகளைப் பெறுவர்.

படம்:பியர் செலிம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 23, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Gear-kegelzahnrad.svg

பற்சக்கரம் ஒரு அடிப்படை இயந்திர பாகம் ஆகும். இது ஒரு சக்கரத்தையும் அதன் மீது பற்களையும் கொண்டது. ஒரு பற்சக்கரத்தின் பற்களும் வேறு ஒரு பற்சக்கரத்தின் பற்களும் பொருந்தி, ஒரு சில்லில் இருக்கும் இயக்க ஆற்றலை மற்ற பற்சக்கரம் பெறக்கூடியதாக அமைவதே பற்சக்கரத்தின் செயற்பாடுகளில் முக்கியமானது. இது கடிகாரம், மிதிவண்டி, பல்வேறு தானுந்து உறுப்புகள், மின்னோடிகள் உட்பட பல்வேறு இயந்திரங்களில் ஒரு பாகமாக இருக்கிறது.

படம்: மிரியம் தையெசு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 20, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Capture-of-Blackbeard.jpg

கடல் கொள்ளை சில ஆயிரம் ஆண்டுகளாக உலகில் நடந்துவரும் குற்றம். கடல் கொள்ளையின் பொற்காலமெனக் கருதப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கரிபியக் கடலில் கடல் கொள்ளையர் நடவடிக்கைகள் அதிகமாகின. அவர்களுள் புகழ்பெற்றவர் “கருந்தாடி” எட்வர்ட் டீச். கடற்கொள்ளையன் கருந்தாடி பிடிபடல், 1718 என்னும் இந்த ஓவியம் கருந்தாடிக்கும் கடற்படை அதிகாரி இராபர்ட் மேய்னார்டிற்கும் இடையில் ஓக்ரகோக் வளைகுடாவில் நடந்த சண்டையைச் சித்தரிக்கிறது. சண்டையின் விளைவாக கருந்தாடி பிடிபட்டு பின் தூக்கிலிடப்பட்டார்.

படம்: ழான் லியோன் செர்ரோம் ஃபெர்ரிசு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 16, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Unload wheat by the combine Claas Lexion 584.jpg

இணை அறுவடை இயந்திரம் என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும். முந்திய காலத்தில் மனிதர்களே இந்த செயற்பாடுகளில் உழைப்பு செலுத்த வேண்டி இருந்தது. அதன் பின்னர் அறுவடை இயந்திரம், கதிரடி இயந்திரம், உமி நீக்கி போன்ற இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. பின்னர் இவை எல்லாவற்றையும் ஒருங்கே செய்யும் இணை அறுவடை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது

படம்: மைக்கேல் கெய்ப்லெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 13, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
XO-Beta1-mikemcgregor-2.jpg

ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி திட்டம் எம் ஐ டி மீடியா லேப் என்னும் அமைப்பைச் சார்ந்த பேராசிரியர் குழுவால் நிக்கொலசு நெக்ரொபாண்டே என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்டது. குறைந்த விலையில் (நூறு அமெரிக்க டாலர்) குழந்தைகள் பலரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய ஒரு மடிக்கணினியை உருவாக்குவதாகும். எக்ஸ்-ஓ (XO) என்னும் லினக்சு இயங்குதளத்துடன் கூடிய ஒரு மடிக்கணினி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அக்கணினியின் பீட்டா வெளியீட்டு மாதிரியைக் காணலாம்.

படம்:மைக் மெக்கிரகர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 9, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Dolceacqua43 - Artista locale mentre dipinge un acquarello.jpg

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் இன்ன பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளை உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டையும் கருத்தியல் நோக்கங்களையும் வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும். படத்தில் நீர்மவண்ணத்தைப் பயன்படுத்தி ஓர் ஓவியர் வரைந்து கொண்டிருக்கிறார்.

படம்: டோஞ்சியோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 6, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Lama 1 Luc Viatour.jpg

இலாமா தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்கானது பொதியேற்றிச் செல்ல ஆண்டீய மலைத்தொடரை ஒட்டி வாழும் இன்காக்கள் முதலான இனக்குழுக்களால் பயன்படுத்தப்படுகிறது. இவ்விலங்கு இன்று பணி விலங்காக சுமை ஏற்றிச் செல்லவும், இதன் மயிர், இறைச்சி ஆகியவற்றுக்காகவும் வளர்க்கப்படுகிறது.

படம்:லூக் வியாடூர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 2, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Flaming cocktails.jpg

காக்டெயில் (Cocktail) என்பது மதுபானங்கள் கலந்த ஒரு குடிவகையாகும். வழக்கமாக ஒருவகை மதுவோ பலவகை மதுவோ, பழம், பழரசம், தேன், பால் இன்னபிற வாசனைப் பொருட்களுடன் கலக்கப்பட்டுப் பருகப்படும். இவை மேற்கு நாடுகளில் 200 ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகின்றன. படத்தில் எரியும் காக்டெயில் காட்டப்பட்டுள்ளது. இதில் அதிகச் செறிவுள்ள ஆல்ககால் குடிக்கும் முன் பற்ற வைக்கப்படுகிறது.

படம்: நிக் ஃப்ரேய்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 30, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
2013 Australian Open - Guillaume Rufin.jpg

டென்னிசு எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து ஆடும் விளையாட்டு. அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாட வேண்டும். படத்தில் 2013 ஆத்திரேலிய ஓப்பன் போட்டியின் டென்னிசு ஆட்டமொன்று காட்டப்பட்டுள்ளது

படம்:பிரெண்டான் டென்னிசு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 26, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Child with Smallpox Bangladesh.jpg

சின்னம்மை (Smallpox) என்பது நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பு வைரசின் (VZV) தொற்று காரணமாக ஏற்படும் அதிகமான தொற்றும் பண்புடைய உடல்நலக் குறைவாகும். சின்னம்மையின் நோய்காப்புக் காலம் 10 லிருந்து 21 நாட்களாகும். இது நோயுற்ற ஒருவர் தும்முவதினாலும் இருமுவதினாலும் சுலபமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. படத்தில் 1973ஆம் ஆண்டு சின்னம்மையால் பாதிக்கப்பட்ட வங்காள தேசச் சிறுமியின் படம் காட்டப்பட்டுள்ளது.

படம்: நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 23, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Thomas Hicks - Leopold Grozelier - Presidential Candidate Abraham Lincoln 1860 - cropped to lithographic plate.jpg

ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். அதற்காக அமெரிக்க உள்நாட்டுப் போரை எதிர்கொண்டு வென்றார். அமெரிக்காவின் பெருந்தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் லிங்கனின் ஒளிப்படங்களும் ஓவியங்களும் பொதுவாக அவர் தாடியுடன் இருப்பதையே காட்டுகின்றன. அவர் தாடி வளர்ப்பதுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் படத்தில் உள்ளது.

படம்: தாமசு ஹிக்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 19, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Quito Accordion player.jpg

அக்கார்டியன் (Accordion) என்பது கையில் எடுத்துச் செல்லதக்கக் காற்றிசைக் கருவியாகும். இதிலுள்ள காத்தூதிகளை கையால் இயக்கினால், காற்று உள்ளிருக்கும் உலோகத் தகடுகளை அதிர்வடையச் செய்து ஒலி எழுப்பும். படத்தில் அக்கார்டியன் வாசிக்கும் ஒரு தெரு இசைக்கலைஞர் காட்டப்பட்டுள்ளார்.

படம்: காயம்பி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 16, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
MontBlanc2c.jpg

மோண்ட் பிளாங்க் அல்லது மோன்தே பியாங்கோ என்னும் மலை மேற்கு ஐரோப்பாவிலேயே மிக உயரமான மலை. மோண்ட் பிளாங்க் என்பது வெண்மலை என்று பொருள் தரும். இம்மலை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 4808 மீ (15,774 அடி) ஆகும்.

படம்: நிக்கோலசு சான்ச்சேசு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 12, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Heaven Shall Burn 2012 RdelS 011.jpg

கித்தார் (Guitar) என்பது அதிர்கம்பிகள் கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி. இது மிகவும் பிரபலமான இசைக்கருவியாகும். இதிலுள்ள உள்ள ஆறு வேவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கின்றது. மின்னாற்றலால் இயங்கும் கித்தார்கள் 1930களிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவை நவீன காலத்திற்கு ஏற்புடைய இசையைத் தருவிப்பதால், மேற்கத்திய இசைகளான புளூஸ், ஜாஸ், சோலோ, ராக், பாப் போன்றவற்றில் இன்றியமையாத இடத்தை இவை பிடித்துள்ளன. படத்தில் செர்மனியின் மெட்டல்கோர் இசைக்கலைஞர் அலெக்சாண்டர் டியெட்சு ஒரு மின்-கித்தாரை வாசிப்பது காட்டப்பட்டுள்ளது.

படம்: ஸ்டெஃபான் கிராவுசு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 9, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Catrinas 2.jpg

இறந்தோர் நாள் மெக்சிக்கோ நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருநாள். மூன்று நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்களில் மக்கள் தங்கள் உறவினருடன் ஒன்று கூடி தங்கள் குடும்பங்களில் மாண்டவரை நினைவு கூறுவர். இறந்தோருக்கெனத் தனியாக பூசை மேடைகள் கட்டி அவற்றில் சர்க்கரையால் ஆன மண்டையோடுகள், மரிகோல்ட் மலர்கள், இறந்தவர்களுக்குப் பிடித்த உணவுகள், பானங்கள் ஆகியவற்றைப் படைப்பது மரபு. படத்தில் இறந்தோர் நாள் கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான "எழிலான மண்டையோடு” (La Calavera Catrina) உள்ளது.

படம்:தோமாசு காசுட்டெலாசோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 5, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Corp2400 - Flickr - NOAA Photo Library.jpg

பனியடுக்கு (Ice shelf) என்பது பனியாறு, பனிவிரிப்பு முதலியன கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்று, பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனித் திணிவாகும். அண்டார்க்டிக்கா, கிரீன்லாந்து, கனடா ஆகிய இடங்களிலேயே இவ்வாறான பனியடுக்குகள் காணப்படுகின்றன. படத்தில் ராஸ் பனியடுக்கின் அண்மைத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

படம்: NOAA
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 2, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Apollo 17 Moon Panorama.jpg

அப்பல்லோ 17 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் பதினோராவது மற்றும் கடைசிப் பயணமாகும். திசம்பர் 7, 1972 அன்று ஏவப்பட்ட இப்பயணத்தில் யூகன் செர்னான், ரொனால்டு எவான்சு மற்றும் காரிசன் சுமிட் ஆகிய விண்வெளி வீரர்கள் பங்கேற்றனர். இறுதியாக மாந்தரை நிலவிற்கு கொண்டு சென்ற திட்டம் இதுவே. படத்தில் அப்பல்லோ 17 இன் போது நிலவில் எடுக்கப்பட்ட அகலப்பரப்பு காட்சி உள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 29, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Alexander Hamilton portrait by John Trumbull 1806.jpg

அலெக்சாண்டர் ஆமில்டன் (Alexander Hamilton) ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களில் ஒருவராகவும் தளபதி வாசிங்டனுக்கு முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்து தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நிதி முறைமையை நிறுவியவரும் முதல் அமெரிக்க அரசியல் கட்சியை தோற்றுவித்தவரும் இவரே. அமெரிக்கப் பத்து டாலர் நோட்டில் இவருடைய முகமே இடம்பெற்றுள்ளது.

ஓவியம்: ஜான் ட்ரம்புள்; மூலம்: வாசிங்டன் பல்கலைக்கழக சட்டப் பள்ளி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 26, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Renoir, Pierre-Auguste - The Two Sisters, On the Terrace.jpg

உணர்வுப்பதிவுவாதம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் உருவான ஓவியப்பாணி. குளாட் மோனே என்பவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் என்ற ஓவியத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே இவ்வியக்கத்தின் பெயர் உருவானது. படத்தில் பியர்-ஆகஸ்த்தே ரெனோயர் வரைந்த உணர்வுப்பதிவுவாத பாணி ஓவியமான “இரு சகோதரிகள்” காணப்படுகிறது.

படம்:பியர்-ஆகஸ்த்தே ரெனோயர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 22, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Goiaba vermelha.jpg

கொய்யா மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட குறுமரமாகும். இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. உலக அளவில் இந்தியா கொய்யா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இப்பழங்களில் நார்ச்சத்தும் உயிர்ச்சத்து சி-யும் நிறைந்து காணப்படுகிறது. படத்தில் பச்சை ஆப்பிள் வகைக் கொய்யாப் பழத்தின் முழுத் தோற்றமும் குறுக்கு வெட்டுத் தோற்றமும் காட்டப்பட்டுள்ளது.

படம்:ரோட்ரிகோ அர்சென்டான்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 19, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Bicycle evolution-numbers.svg

மிதிவண்டி மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை. படத்தில் மிதிவண்டி வடிவமைப்பின் படிவளர்ச்சி காட்டப்பட்டுள்ளது.

படம்: பியேசிட்டோஃபோரோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 15, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Neptune Full.jpg

நெப்டியூன் (Neptune) சூரியக் குடும்பத்தின் எட்டாவதும் மிக தொலைவில் உள்ளதுமான ஒரு கோளாகும். 1846ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 1930ஆம் ஆண்டு புளூட்டோ கண்டறியப்படும் வரை இதுவே சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளாக இருந்துவந்தது. ஆனால், 2006ஆம் ஆண்டு புளூட்டோ கோள் எனும் தகுதியிலிருந்து நீக்கப்பட்டதால் மீண்டும் இது கடைசிக் கோள் என்ற நிலையைப் பெற்றது. கண்டறியப்பட்ட பிறகு 164.8 ஆண்டுகள் கழித்து இது 2011ஆம் ஆண்டு சூலை 12 அன்று முதன்முறையாகச் சூரியனை முழுமையாக வலம் வந்துள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 12, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Toledo Skyline Panorama, Spain - Dec 2006.jpg

டொலேடோ மத்திய எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்நகரத்தில் பற்பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. எசுப்பானியாவின் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசமான கஸ்டிலே லா மஞ்சாவின் தலைநகரம் இதுவாகும். இங்குள்ள அளவுகடந்த நினைவுச்சின்னங்களால் இது 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது. படத்தில் டொலேடோ நகரின் அகலப்பரப்புக் காட்சியைக் காணலாம்.

படம்: டிலிஃப்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூலை 5, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Roasted coffee beans.jpg

காப்பி பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு. காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். படத்தில் வறுத்த காப்பிக் கொட்டைகள் காட்டப்பட்டுள்ளன.

படம்:மார்க் ஸ்வீப்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 3, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Bihoreau Gris.jpg

இராக்கொக்கு என்பது நீர்நிலைகளை சார்ந்திருக்கும் வாத்தினை ஒத்த உடலளவுடைய பறவையினம். இவற்றின் பேரினப்பெயரான நிக்டிகோரக்சு என்பதற்கு "இரவின் காகம்" என பொருள். இவை பெரும்பாலும் இரவில் வேட்டையாடுவதாலும், இவற்றின் ஒலி காகம் கரைவதைப்போல் இருப்பதாலும் இப்பெயர் பெற்றது. படத்தில் இராக்கொக்கு அதன் முக்கிய உணவான மீனை விழுங்குதல் காட்டப்பட்டுள்ளது.

படம்:அலைன் கார்பென்டிர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 17, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பாம்பாட்டிகள் என்போர் பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவர் ஆவர். இவர்கள் பொதுவாக மகுடி ஊதி பாம்பினை ஆடச்செய்வர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட படமான இதில் மொரோக்கோ நாட்டின் பாம்பாட்டிகள் உள்ளனர். இக்கலையானது இந்தியாவில் தோன்றி தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு பரவியது. பண்டையத்தமிழர் பாம்பாட்டுதலை கூத்தின் ஒருவகையாகப் பகுத்தனர்.

படம்: தூமாஸ்; சீரமைப்பு: லிசெ பிரோஎர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 10, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் என்பவர் ஆங்கிலேய மெய்யியலாளரும், கத்தோலிக்க கர்தினாலும் ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளாலும் கவரப்பட்டு 1845 அக்டோபர் 9ம் நாள் கத்தோலிக்க மறையில் இணைந்தார். இவர் ஆற்றியப்பணிக்காக திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ மே 15, 1879இல் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இவருக்கு 19 செப்டம்பர் 2010இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அருளாளர் பட்டம் அளித்தார்.

படம்: ஜான் எவரெத் மிலாயிஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 6, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தில் இந்திய சிற்றினமான Mangiferra indica இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படும் வகையாகும். இவ்வகையே மிகவும் உயரமாக வளரக்கூடிய பழமரவகை என்பதும் குறிக்கத்தக்கது.

படம்: en:User:Fir0002
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 29, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கண்ணாடி தொழிற்சாலையில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களாலான அடிபந்தாட்ட அணி. இதனை லூயிஸ் ஹைன் என்பவர் ஆகஸ்ட் 1908இல் படம்பிடித்தார். லூயிஸ் ஹைன் (1874–1940) அமெரிக்க சமூகவியலாளர் ஆவார். இவர் கல்வி மற்றும் சமூக மாற்றத்துக்கானக்கருவியாக ஒளிப்படவியலினைப் பயன்படுத்த ஊக்குவித்தவர் ஆவார். 1908 தொடங்கி பத்து ஆண்டுகள் தேசியக் குழந்தைத் தொழிலாளர் ஆணையத்துக்காக குழந்தைத் தொழிலாளர்களை புகைப்படம் எடுத்தார். ஆபத்தான இத்திட்டத்துக்காக தொழிற்சாலை காவலர் மற்றும் கண்காணிப்பாளரிடமிருந்து தப்பிக்க இவர் தீயணைப்பு துறை ஆய்வாளர், அஞ்சலட்டை விற்பனையாளர், விவிலிய விற்பனையாளர் மற்றும் தொழில்துறை புகைப்படக்கலைஞர் போன்ற பல மாறுவேடங்களில் அவ்விடங்களுக்குச் சென்றார்.

படம்: லூயிஸ் ஹைன்; புதுப்பித்தது: லிசே புரோயேர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 22, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஜிக்மே கேசர் நாம்கியல் என்பவர் வாங்சுக் குடும்பத்தைச் சேர்ந்த பூட்டானின் டிரக் கியால்ப்போ என்று அழைக்கப்படும் அரசுத்தலைவரும் மன்னரும் ஆவார். உலகிலேயே மிகவும் குறைந்த அகவையுடைய நாட்டுத் தலைவர் இவர் ஆவார். இவரின் தந்தை ஜிக்மே சிங்கே வாங்சுக் 9 டிசம்பர் 2006இல் தனது பதவியினை இவருக்காகத் துறந்தார். வாங்சுக் குடும்பம் பூட்டானை ஆளத்தொடங்கியதன் நூறாம் ஆண்டும், நற்குறியுள்ள ஆண்டாகவும் கருதப்பட்ட 2008இல் இவருக்கு முடிசூட்டப்பட்டது.

படம்: பூட்டான் அரச குடும்பம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 19, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சூரிய உதயத்தின் போது தாய்வானின் தலைநகர் தாய்பெயின் அகலப்பரப்பு காட்சி இது. பின்னணியில் தாய்ப்பே 101 கட்டிடம் தெரிகின்றது. இந்த நகர் தாய்வானின் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது.

படம்: Chensiyuan / தொகுப்பு: DXR
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 29, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

டில்மா வானா ரூசெஃப் பிரேசில் நாட்டின் அரசுத்தலைவர் ஆவார். இப்பதவியினை வகித்த முதல் பெண்மணி இவராவார். இப்பதவியினை வகிப்பதற்கு முன்னர் இவர் 2005 முதல் 2010 வரை லுலா ட சில்வாவின் அமைச்சரவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். ஜனவரி 9, 2011இல் எடுக்கப்பட்ட படமான இது, பிரேசில் அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் எடுக்கப்பட்டதாகும்.

படம்: ரோபெர்தோ ஸ்டக்கெர்ட் ஃபில்ஹோ / பிரேசில் அரசு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 25, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தாமி (selfie) என்பது புகைப்படக் கருவி மூலமாகவோ அல்லது செல்லிடத் தொலைபேசி மூலமாகவோ தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்வதை குறிக்கும். பெருவாரியான தாமிகள் புகைப்படக் கருவியினை முகத்தை நோக்கி முழங்கை அளவுநீட்டி பிடித்தவாறோ அல்லது கண்ணாடியினை நோக்கிப் பிடித்தவாறோ எடுக்கப்படுகின்றன. டேவிட் ஸ்லேடர் என்னும் புகைப்படக்கலைஞரின் கருவியினைத் திருடியக் குரங்கு ஒன்று எடுத்த தாமி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 22, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மூன்று வகையான நகம்வெட்டிகள் இப்படத்தில் உள்ளன. இவை விரல் நகம் மற்றும் விலங்குகளின் உகிர் நகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் கைக் கருவி ஆகும். இடப்புறம் உள்ளது குறடு வகை நகம்வெட்டி ஆகும். மற்ற இரண்டும் நெம்புகோல் வகை ஆகும்.

படம்: இவான்-அமோஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 18, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தூய யோசேப்பு என்பவர் விவிலியத்தின்படி இயேசு கிறித்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். கன்னி மரியாவின் கணவரான இவர், கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார். இவர் குலமுதல்வர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார். தூய யோசேப்பும் குழந்தை இயேசுவும் என்னும் பெயருடைய இந்த ஓவியம் குயிதோ ரெய்னி என்பவரால் வரையப்பட்டது ஆகும். இது தற்போது ஹியூஸ்டன் நகரில் உள்ள நுண்கலைகள் அருங்காட்சியகத்தில் உள்ளது.

ஓவியம்: குயிதோ ரெய்னி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 15, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Mysore Palace Morning.jpg

மைசூர் அரண்மனை இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூரில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இது 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது. 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. பதினைந்து ஆண்டு கால முடிவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனைக்கு ஆன செலவு 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 ரூபாய் ஆகும். இது தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி, மாட மாளிகை, கூட கோபுரங்கள் என கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், வேட்டை அறை, படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.

படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 11, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.

படம்: இயாத்தின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 8, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஈரான் நாட்டின் குங்குமப்பூ இழைகளின் குவியல். இதன் ஒவ்வொன்றின் நீளமும் சுமார் 20 மிமீ இருக்கும். இது சாஃப்ரன் குரோக்கசு என்னும் செடியின் மலரில் இருந்து பெறப்படும் மசாலாப் பொருள் ஆகும். எடையின் அடிப்படையில் உலகின் விலை உயர்ந்த மசாலாப் பொருள் இது ஆகும். உணவாக மட்டுமல்லாது நறுமணப் பொருளாகவும், சாயம் ஏற்றவும், மருந்தாகவும் இது பயன்படுகின்றது.

படம்: இரெய்னர் சென்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 4, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

காலணி காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்தும் காக்கவும், அழகுக்காகவும் காலில் காலணி அணிவர். கட்சிப்படுத்தப்பட்டுள்ள காலணி சேன்டில் வகையினைச் சேர்ந்த அளவு 10 உடைய ஒரு காலணி ஆகும்.

படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 1, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

விடை இராசி அல்லது ரிஷப இராசி என்பது என்பது காளை அல்லது மாடு என்ற பொருள் கொண்ட பன்னிரண்டு இராசிகளில் இரண்டாம் இராசியாக கருதப்படும் இராசியாகும். இது விண்ணின் 30 முதல் 60 பாகைகளை குறிக்கும் (30°≤ λ <60º). மேற்கத்திய சோதிட நூல்களின் படி (குறி: ♉) ஏப்ரல் 20 முதல் மே 20 வரை பிறந்தோரை விடை ராசியினர் என்று அழைப்பர். இந்த இராசியின் இச்சித்தரிப்பு சிட்னி ஹால் என்பவரால் இலண்டனிலிருந்து வெளிவந்த நூல் ஒன்றிற்காக வரையப்பட்டது ஆகும்.

படம்: சிட்னி ஹால்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 25, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

துலிப் என்பது தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப்பூக்களைக் கொண்ட தாவரமாகும். இது லிலியாசே என்றழைக்கப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவ்வினம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவாண்ட், ஈரான் முதல் உக்ரேனின் வடக்குப்பகுதி, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பகுதியைத் தாயகமாகக் கொண்டது.

படம்: ஜான் ஒ'நீல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 22, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஜாக்குலின் கென்னடி, அப்போது அமெரிக்க மேலவையின் உறுப்பினராக இருந்த ஜான் எஃப். கென்னடியை செப்டம்பர் 12, 1953 அன்று மணந்தப்பின்னர், அந்த நாட்டு வழக்கப்படி பூங்கொத்தை எறிகிறார். றோட் தீவுவில் நடந்த இத்திருமண நிகழ்வில் சுமார் 700 நபர்கள் பங்கேற்றனர். மணப்பெண்ணின் உடையினை வடிவமைத்தவர் ஆன் லோ ஆவார். இவ்வுடை தற்போது பாஸ்டன், மாசச்சூசெட்சின் கென்னடி நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

படம்: டோனி ஃபிரிசெல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 18, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
முள்முடி சூட்டப்படுதல்

முள்முடி சூட்டப்படுதல் என்பது நற்செய்திகளின்படி முட்களால் பின்னப்பட்ட முடி ஒன்று இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட நிகழ்வினைக்குறிக்கும். இதனால் இயேசுவைக்கைது செய்தவர்கள் அவரின் சாவுக்கு முன்பு அவரை ஏளனம் செய்யவும், துன்புறுத்தவும் முனைந்தனர். இந்த நிகழ்வை சித்தரிக்கும் கரவாஜியோவின் ஓவியமான இது, தற்போது வியன்னாவில் உள்ள கலை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது.

ஓவியர்: கரவாஜியோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 15, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
கடுகு வகைகள்

கடுகு விதைகள் (மேல் இடப்புறம்) அரைத்து மாவாக்கி (மேல் வலப்புறம்) சமைக்கப்பயன்படுத்தப்படலாம். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை முறையே மஞ்சளோடும் (நடு இடப்புறம்), பவேரிய முறைப்படி இனிப்பாகவும் (நடு வலப்புறம்), பிரான்சின் டிஜியோன் முறைப்படி (கீழ் இடப்புறம்) கருப்புக்கடுகு விதைகளிலிருந்து (கீழ் வலப்புறம்) சமைக்கப்பட்டவை ஆகும்.

படங்கள்: இரெய்னர் சென்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 11, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம், 1846

1846ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றத்தின் படம். இதில் தெரியும் பச்சை செப்பு குவிமாடத்தின் வடிவமைப்பாளர் சார்லசு புல்பின்ச் ஆவார். பிற்காலத்தில் தேவைப்பட்ட பிரிவுகளுக்காக வடக்கு மற்றும் தெற்கு நீட்சிகள் கட்டப்பட்டன. இப்போதுள்ள வெள்ளை வார்ப்பிரும்பு குவிமாடம் 1866இல் இணைக்கப்பட்டது.

படம்: ஜான் புலூம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 8, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Kuchipudi Performer DS.jpg

குச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிப்புடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது. கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது.

படம்: Augustus Binu
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 4, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Lutte sénégalaise Bercy 2013 - Mame Balla-Pape Mor Lô - 32.jpg

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். படத்தில் உலக ஆப்பிரிக்க மறப்போரில் மாமே பல்லாவிற்கும் பாபே மோர்க்கும் நடைபெற்ற மறப்போர் காட்டப்பட்டுள்ளது.

பைப்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 1, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Corallus caninus.JPG

மரகத மர போவா (அல்லது பச்சை மர போவா) என்பது ஒரு நஞ்சற்ற போவா வகையைச் சேர்ந்த ஒரு பாம்பு. இது பச்சை நிறத்தில் காணப்படும். மேலும் இது மரத்தின் மீதே வாழ்கிறது. இப்பாம்பு தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படுகிறது. இது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் பரவலாக கொலம்பியா, ஈக்வெடார், பெரு, பிரேசில், வெனிசுவேலா, சுரினாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. பச்சை மர போவாவின் படம் காட்டப்பட்டுள்ளது.

ஜோதிஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 28, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Bi-crystal.jpg

படிகம் என்பது அதனை உருவாக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழுங்கில் முப்பரிமாணங்களிலும் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு திண்மமாகும். படிகம் என்பதைப் பளிங்கு என்றும் சொல்வதுண்டு.

படம் ஆல்கெமிஸ்ட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 25, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Complete neuron cell diagram en.svg

நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் (Neurons) என்பவை மின்புலத்தால் தூண்டலைப் பெற்று, தகவல்களை முறைப்படுத்தி, உடலின் பல பகுதிகளுக்கும் மின்சார வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் ஆகும். வேதி சமிக்ஞைகள், மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான நரம்பிணைப்புகளின் (synapse) மூலமாக நிகழ்கிறது. படத்தில் நரம்பணு மண்டலத்தின் வரைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம் ஸாங்கொக்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 21, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
20090726 Birds on stick Shanghai Qibao Imgp1996.jpg

இறைச்சி என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்கு மற்றும் பறவையின் திசுக்களைக் குறிக்கும். விலங்குகளின் தசைகள் மற்றும் அவற்றின் உறுப்புக்களான நுரையீரல், ஈரல் போன்றவையும் இதில் அடங்கும். படத்தில் சாங்காய் நாட்டு பறவையின் உணவு காட்டப்பட்டுள்ளது.

படம் ஜக்குபாய்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 18, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Maasai woman with stretched ears.jpg

மாசாய் இனக்குழு, கெனியாவிலும், வடக்கு தான்சானியாவிலும் வாழுகின்ற அரை-நாடோடித் தொல்குடி ஆகும். இவர்களுடைய தனித்துவமான வழக்கங்களும், உடைகளும், பெரும்பாலான வேட்டைக் காடுகளுக்கு அருகில் வாழ்வதும், இவர்களை உலகில் அதிகமாக அறியப்பட்ட இனக்குழுக்களில் ஒன்றாக ஆக்கியுள்ளன. படத்தில் மாசாய் இனக்குழுப் பெண் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.

படம் மேக்னஸ் மான்ஸ்கீ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 14, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Humanitarian aid OCPA-2005-10-28-090517a.jpg

மனித நேயம் சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதைக் குறிக்கும். இதில் உயிரிரக்கப் பண்பு, பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் போன்றவை மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. படத்தில் சிறுமி ஒருவருக்கு தண்ணீர் அளிக்கும் மனித நேயப்படம் காட்டப்பட்டுள்ளது.

படம் டிரயல்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 11, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Plastic Protractor Polarized 05375.jpg

பாகைமானி அல்லது கோணமானி (Protractor) கோணங்களை அளவிடுவதற்காக வடிவவியலில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஊடுபுகக்கூடிய பொருளாலன ஒரு சதுர, வட்ட அல்லது அரைவட்ட வடிவக் கருவியாகும். இதில் பயன்படுத்தப்படும் அளவை அலகுகள் பொதுவாக பாகை (°) ஆகும்.

படம் நெவித்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 7, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

கோல்டன் கேட் பாலம் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். அமெரிக்கப் பொதுவியல் பொறியாளர் கழகம் இப்பாலத்தை நவீன உலக அதிசயங்களுள் ஒன்றாக அறிவித்தது. 1937இல் திறக்கப்பட்ட இது 1964 வரை உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக விளங்கியது. இது உலகில் மிகவும் அதிகமாகப் புகைப்படம் எடுக்கப்பட்ட அழகான பாலமாகக் கருதப்படுகிறது. காணொளியில் பாலத்தில் செல்லும் ஊர்திகளும் சந்தியில் படகுகள் செல்வதும் காட்டப்பட்டுள்ளது.

காணொளி: யூடியூப் பயனர் எடிட்டர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 4, 2015 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Bangles Ornaments.jpg

வளையல் என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஓர் அணிகலனாகும். பொதுவாக வட்ட வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம், அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, மரம் எனப் பலதரப்பட்ட பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. படத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கண்ணாடி வளையல்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு