விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2016

Oneminute.png புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.


சனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்

திசம்பர் 25, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செவீயா பெருங்கோவிலில் உள்ள குறுக்குப் பகுதியின் கீழ்ப்பகுதி. கோதிக் கட்டிடக்கலையின்படி அமைந்த இக்கோயில் 1987 இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இங்கு கொலம்பசுவின் கல்லறை அமைந்துள்ளது.

படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுதிசம்பர் 18, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

டென்மார்க்கில் உள்ள வடகடல் கடற்கரைப் பகுதி. இக்கடல் 600 மைல் நீளமும் 350 மைல் அகலமும் கொண்டது. இதன் பரப்பு 222,000 சதுர மைல்கள்.

படம்: Slaunger
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுதிசம்பர் 4, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு சட்டமியற்றும் ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற கூட்டங்களுக்கான இடம் ஆகும். வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள இது தேசிய பல்கடை அங்காடி கிழக்கு முனையில் மாமன்றக் குன்றின் மேல் அமைந்துள்ளது.

படம்: Martin Falbisoner
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 16, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பாலைவனக் கீரி என அழைக்கபடுகின்ற இவ்வகை விலங்கு பாலுட்டு இனத்தை சேர்ந்ததாகும். இவை கீரி வகை கும்பத்தை சேர்ந்தவை. பாலைவனக் கீரி ஆப்பிரிக்க கண்டத்திலே அதிகம் காணப்படுகின்றன. நமீபியாபில் உள்ள நமிப் பாலைவனத்திலும், தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வகை கீரிகளை காணலாம்.

படம்: Charlesjsharp
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 2, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே உலகைச் சுற்றிவரும் ஒரு விண்நிலையம். பலநாடுகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய, நெடுங்காலம் நிலைத்து விண்ணிலே இயங்கவல்ல ஒரு விண்வெளி நிலையம். இது புவியில் இருந்து 360 கி.மீ. உயரத்தில் வளிமண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியில் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை உலகைச் சுற்றி வருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

படம்: NASA
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 16, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ISS-32 American EVA b3 Aki Hoshide.jpg

சப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் இருந்து எடுத்த தாமி. தாமி எடுப்பது இன்று பரவலாகி வருவதுபோல், விண்வெளியில் இருந்து தாமி எடுப்பதும் அதிகரித்துள்ளது. அவை விண்வெளி தாமி என்று அழைக்கப்படுகின்றன.

படம்: NASA
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 2, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Cinnamomum verum spices.jpg

கறுவா ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள் மரத்தின் அடித்தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது.

படம்: Simon A. Eugster
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 31, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Lotus flower (978659).jpg

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது.

படம்: Hong Zhang
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 28, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Tonle Sap Siem Reap Cambodia Girl-begging-for-money-with-snake-01.jpg

சியெம் ரீப் (தொன்லே சாப்) என்பது வடமேற்கு கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சியெம் ரீப் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இந்த இடத்தில் தன் குடும்பத்தினருக்காக பாம்பினைக் காட்டி யாசகம் பெறும் ஒரு சிறுமி.

படம்: CEphoto, Uwe Aranas
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 24, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Ring tailed lemur portrait.jpg

வரிவால் லெமூர் முதனி வகையைச் சேர்ந்த ஒரு லெமூர். இது நீண்ட கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட வாலினைக் கொண்டுள்ளதால் லெமூர்களிலேயே நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. இது லெமூர் குடும்பத்தைச் சேர்ந்தது. மற்ற லெமூர்களைப் போலவே மடகாட்கர் தீவினைத் தாயகமாகக் கொண்டது.

படம்: Francis C. Franklin
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 21, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Cast sitting victim Pompeii.jpg

பொம்பெயி அழிவிலிருந்து தப்பியவரைக் குறிக்கும் சிற்பம். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட வெசுவியுசு எரிமலையின் காரணமாக அருகிலுள்ள கெர்குலானெயும் நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது.

படம்: Jebulon
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 17, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Augustus Bronze X23322 NAMAthens.jpg

அகஸ்ட்டஸ் உரோமப் பேரரசை ஆண்டவர். கையஸ் ஒக்டேவியஸ் துரினஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர் கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார்.

படம்: Jebulon
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 14, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Gazelles of Sunset.jpg

வனப்புமிக்க சிறுமான் என்பது மறிமான் வகைகளில் உள்ள ஓர் இனமாகும். இதில் ஆறு இனங்கள் இரண்டு வகைகளைக் கொண்டு காணப்படுகின்றன. வனப்புமிக்க சிறுமான்கள் வேகமாக ஓடும் விலங்குகளில் ஒன்றாகும். இவற்றின் உச்ச வேகத்தில் மணிக்கு 60 மைல் வேகத்தில் (97 கிலோமீட்டர்) ஓடக்கூடியது.

படம்: Anass Errihani
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 10, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Little grebe in Sakai, Osaka, February 2016.jpg

முக்குளிப்பான் என்பது முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். இதன் கால்கள் உடலில் பின்னால் தள்ளி இருக்கும். முன் விரல்கள் மூன்றும் தரமாக வளர்ந்திருக்கும். விரல்களின் இரு புறமும் தட்டையான இலை போன்று அகன்ற பாகங்கள் உண்டு.

படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 7, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Jaguar (Panthera onca palustris) male Rio Negro 2.JPG

சிறுத்தைப்புலி சிங்கம், புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பூனையின மிருகமாகும். உலகின் மேற்குக் கோளத்தில் இதுவே மிகப்பெரிய, மிகுந்த வலிமை வாய்ந்த பூனை இனம்.

படம்: Charlesjsharp
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகத்து 3, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Uranus diagram.svg

யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது.

படம்: Kelvinsong
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 29, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Nelumno nucifera open flower - botanic garden adelaide2.jpg

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது.

படம்: Peripitus
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 26, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
BBG - Carissa macrocarpa var. Horizontalis - Cascade by Frank Okamura.jpg

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும்.

படம்: PierreSelim
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 22, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Iglesia de Nuestra Señora de La Blanca, Cardejón, España, 2012-09-01, DD 02.JPG

சூரியகாந்தி அமெரிக்க நாடுகளில் தோன்றிய பூக்கும் தாவரம். மொட்டு நிலையிலுள்ள சூரியகாந்திகள் ஒளிதூண்டு திருப்பகுணம் கொண்டுள்ளன. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் கழியும் போது, அவையும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றன. இரவில் அவை மீண்டும் கிழக்கு திசைக்குத் திரும்புகின்றன.

படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 19, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Lamprotornis hildebrandti -Tanzania-8-2c.jpg

கில்டேபிராண்டு சரக்கிளி என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இவை எத்தியோப்பியா, சோமாலியா முதல் கென்யா வரை காணப்பட்டன. இப்பறவை சேர்மானிய ஆய்வாளரும் மாதிரியை கொண்ட முதல் ஐரோப்பியருமாக "யோகானஸ் கில்டேபிராண்டு" என்பவரின் பெயரைக் கொண்டுள்ளது.

படம்: Noel Feans
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 15, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Water drop 001.jpg

நீர் H
2
O
என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஒட்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் பங்கீட்டுவலுப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்ட வெப்ப ழுத்தத்தில் நீர் ஒரு திரவம் ஆக இருந்தாலும், இது புவியில் திட வடிவில் பனியாகவும், மற்றும் வளிம வடிவில் நீராவி ஆகவும் காணப்படுகிறது.

படம்: José Manuel Suárez
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 12, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Cygnus olor flirt edit.jpg

பேசாத அன்னம் என்பது அன்ன இன, அன்ன மற்றும் வாத்து குடும்பத்தைச் சேர்ந்த வாத்து உறுப்பு பறவையாகும். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது. இதன் நீளம் 125 - 170 சென்டிமீற்றர்கள் ஆகும். வளர்ந்த அன்னம் இறகு முழுவதும் வெண்மையாகவும் கருப்பு ஓரத்தையுடடைய செம்மஞ்சள் அலகுடன் காணப்படும்.

படம்: Richard Bartz
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 8, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Grand Prismatic Spring and Midway Geyser Basin from above.jpg

பிரம்மாண்ட பட்டக ஊற்று என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய வெந்நீரூற்றும் நியூசிலாந்து, டொமினிக்கா ஆகிய நாடுகளை அடுத்த உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும். இது கிட்டத்தட்ட 370 அடிகள் விட்டமும் 121 அடிகள் ஆழமும் கொண்டது.

படம்: Brocken Inaglory
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 5, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Ardea alba modesta composite - Gould's Lagoon.jpg

பெரிய கொக்கு உடல் முழுவதிலுமே வெள்ளை நிறத்தில் தோகையைக் கொண்டு காணப்படுகிறது. இப்பறவை நின்ற நிலையில் 1 மீட்டர் உயரமும், 80 முதல் 104 செமீ நீளமும் கொண்டு, சிறகுகள் விரிந்த நிலையில் 131 முதல் 170 செமீ அகலம் கொண்டு காணப்படுகிறது.

படம்: JJ Harrison
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசூன் 1, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Amphiprion ocellaris (Clown anemonefish) by Nick Hobgood.jpg

கோமாளி மீன் அழகுக்காக வளர்க்கப்படும் ஓர் மீன் வகையாகும். இவ்வகை மீன்கள் வெப்பநிலை கூடிய இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரப் பிரதேசங்களில் வாழ்பவையாகும். இவற்றை பவளப்பாறைகளருகில் அதிகம் அவதானிக்கலாம்.

படம்: Nick Hobgood
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 29, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
London Eye at sunset 2013-07-19.jpg

இலண்டனின் கண் இலண்டனில் உள்ள தேம்சு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் சக்கரம் ஆகும். இதன் உயரம் 135 மீட்டர்களாகவும், விட்டம் 120 மீட்டர்களாகவும் உள்ளன. இது ஐரோப்பாவில் மிக உயரமான சக்கரமாகவுள்ளது.

படம்: Bob Collowân
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 25, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Jaguar head shot-edit2.jpg

சிறுத்தைப்புலி பெரிய பூனை இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இது அமெரிக்காவில் காணப்படும் ஒரே ஒரு பாந்தெரா இன விலங்கு ஆகவுள்ளது. இது சிங்கம், புலி என்பவற்றிற்கு அடுத்தபடியான மூன்றாவது பெரிய பூனையின மிருகமாகும்.

படம்: Cburnett
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 22, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Tower Bridge from Shad Thames.jpg

கோபுரப் பாலம் இலண்டனிலுள்ள தேம்சு ஆற்றுக்கு குறுக்காக உள்ள எடைக்கட்டு மற்றும் தொங்கு பாலம் இணைந்த ஓர் பாலமாகும். இலண்டன் கோபுரத்திற்கு அருகில் காணப்படும் இது, இலண்டனின் முக்கியத்துவ அடையாளமாக விளங்குகிறது.

படம்: Colin
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 18, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Black-winged stilt courtship behaviour.jpg

நெடுங்கால் உள்ளான் பறவைகள் இரண்டு இனப்பெருக்க காலத்தில் தங்கள் இனப்பெருக்க நடத்தையினை வெளிப்படுத்துகின்றன. அவற்றின் கால்கள் மென் சிவப்பு நிறத்திலும், அலகுகள் நீண்ட மெல்லிய கருமையாகவும் காணப்படும். மென் சிவப்பு நிறக் கால்களையும், கருமையான நீண்ட மெல்லிய அலகுகினையும் உடைய இவற்றில் 5 முதல் 7 வரையான துணையினங்கள் காணப்படுகின்றன.

படம்: Ryzhkov Sergey
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 15, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Vincent van Gogh - Dr Paul Gachet - Google Art Project.jpg

வின்சென்ட் வான் கோ வரைந்த, வைத்தியர் காசெட்டின் இரண்டாவது ஓவியம். 1990 இல், இதன் முதலாவது ஓவியம் மொத்தமாக 82.5 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நியுயோர்க்கில் ஏலத்திற்கு விற்பனையானது.

படம்: வின்சென்ட் வான் கோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 11, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
2015 Kaczka krzyżowka w wodzie (samiec).jpg

காட்டு வாத்து அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மிதவெப்பமண்டல மற்றும் அயன அயல் மண்டலங்களில் இனப்பொருக்கம் செய்யும், ஆவுத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட "அனாட்டினே" துணை இனப் பறவையாகும்.

படம்: Jacek Halicki
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 8, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Polar Bear with its tongue sticking out.jpg

பனிக்கரடி (துருவக் கரடி) கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். ஆர்ட்டிக்கு மாக்கடல் என்று இவ் உறைபனிப் பகுதியைக் கூறுவதால், இக்கரடியை வெண் கடற்கரடி என்றும் கூறுவதுண்டு.

படம்: Cmichel67
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 4, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Brooklyn Botanic Garden New York May 2015 panorama 2.jpg

நியூயார்க் நகரத்தின் ஐந்து நியூயார்க் நகரத்தின் மாவட்டங்களில் மிகக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட புரூக்ளினில் உள்ள தாவரவியல் பூங்கா. 52 ஏக்கர் பரப்புள்ள இப்பூங்கா 1910 இல் உருவாக்கப்பட்டது.

படம்: King of Hearts
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 1, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Veiled in Red.jpg

முக்காடு தலை, முகம் போன்ற சில பகுதிகளை மறைக்க, பெரும்பாலும் பெண்கள் அணியும் துணியாகும். வெயிலை மறைக்கவும் சமயக் காரணங்களுக்காகவும் சில திருமண வைபவங்களிலும் இது அணியப்படுகிறது.

படம்: Charlie Marshall
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 27, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Stelzenläufer (Himantopus himantopus).jpg

நெடுங்கால் உள்ளான் பறவை நீண்ட கால்களைக் கொண்ட கரைப்பறவைகளுள் ஒன்றாகும். வளர்ந்த பறவைகள் 33–36 செ.மீ (13–14 அங்குலம்) நீளமுடையன. அவற்றின் கால்கள் மென் சிவப்பு நிறத்திலும், நீண்ட மெல்லிய அலகுகள் கருமையாகவும் காணப்படும்.

படம்: Andreas Trepte
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 24, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Red rose with black background.jpg

உரோசா (முளரிப்பூ) ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரம். இதில் நூற்றுக்கணக்கான வகைகளும் பலவித வண்ணங்களும் உள்ளன. இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறு மணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.

படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 20, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Common bluebottle, Keitakuen, Osaka.jpg

நெட்டிலி அழகி பட்டாம்பூச்சிகள் தெற்காசியா, தென்கிழக்காசியா, கிழக்கு ஆத்திரேலிய பகுதிகளில் காணப்படும் அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்தவை. வெவ்வேறு பகுதிகளில் வாழும் 16 உள்ளினங்கள் இவற்றில் கண்டறிப்பட்டுள்ளன.

படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 17, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Love padlocks on the Butchers' Bridge (Ljubljana).jpg

காதல் பூட்டு காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பூட்டில் தங்கள் பெயரை எழுதி அதை பாலம், வேலி, வாயில், போன்ற பொது இடத்தில் பூட்டுவது சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. சுலோவீனியாவின் லியுப்லியானா என்ற இடத்தில் உள்ள பாலத்தில் இப்பூட்டுக்கள் உள்ளன.

படம்: Petar Milošević
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 13, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Egretta garzetta 2015-06-17.jpg

சின்னக் கொக்கு கொக்கு இனத்தில் சிறிய வகை வெள்ளைக் கொக்கு ஆகும். வளர்ந்த சிறு வெண் கொக்கு 55–65 செ.மீ (22–26 அங்குலம்) நீளமுடையதாகவும், இதன் கால்கள் நீண்டு கறுப்பாவும், பாதங்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 10, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Monaco Panorama 2015.jpg

மொனாக்கோ என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும்.

படம்: Villy Fink Isaksen
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 6, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Florence Duomo from Michelangelo hill.jpg

புளோரன்ஸ் பேராலயம் இத்தாலியின் புளோரன்சில் உள்ள ஓர் பிரதான தேவாலயம். கோதிக் கட்டடப்பாணியில் 1296 ஆரம்பிக்கப்பட்ட இது, 19 ஆம் நூற்றாண்டு கோதிக் மறுமலர்ச்சி விபரங்களுடன் எமிலியோ டி பப்ரிசினால் வடிவமைக்கப்பட்டது.

படம்: Petar Milošević
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 3, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Spiral stairs (спирално степениште).jpg

இடவசதி, அழகியல் நோக்கம், மற்றும் பலவற்றைக் கருத்தில் கொண்டு, படிக்கட்டுகள் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்படுவதுண்டு. நேர்ப்படிக்கட்டு, இடையில் திசைமாறும் படிக்கட்டுகள், வளைவான படிக்கட்டுகள், சுருளிப் படிக்கட்டு எனப் படிக்கட்டுகள் பலவகையாக உள்ளன.

படம்: Petar Milošević
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 30, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Germany and Argentina face off in the final of the World Cup 2014 -2014-07-13 (5).jpg

செருமனிக்கும் ஆர்ஜெண்டினாவுக்கும் இடையில் 2014 உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டி இடம்பெற்ற, பிரேசிலின் இரியோ டி செனீரோவிலுள்ள மரக்கானா விளையாட்டரங்கம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 27, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Helen KellerA.jpg

ஹெலன் கெல்லர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்த ஓர் அமெரிக்கப் பெண். எனினும் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கினார். 1904 ஆம் எடுக்க்கப்பட்ட கெல்லரின் ஒளிப்படத்தை இடப்புறம் காணலாம்.

படம்: ஆக்குனர் அறியப்படவில்லை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 23, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Peacock butterfly (inachis io) 2.jpg

ஐரோப்பிய மயில் ஐரோப்பாவிலும் மிதமாக ஆசியாவிலும் குறிப்பாக யப்பானிலும் காணப்படும் வண்ணமயமான பட்டாம்பூச்சியாகும். இது தன் எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் தன்மை கொண்டதுடன், அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாகவும் உள்ளது.

Charlesjsharp
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 20, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Okinawa Aquarium.jpg

நீர்வாழ் உயிரினங்களை ஒரு வரையறுக்கப்பட்ட ஊடுருவிப் பார்க்கக்கூடிய கண்ணாடி இடங்களில் அடைத்துவைத்து காட்சிப்படுத்தும் இடங்கள் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை எனப்படுகின்றன. மீன், இறால், நண்டு, கணவாய், நீர்த் தாவரங்கள், ஈரூடகப் பிராணிகள் எனப் பல்வேறு உயிரினங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. படத்தில் சப்பானில் ஓக்கினாவாவில் உள்ள ஒரு காட்சிசாலையைக் காணலாம்.

படம்: ஜோர்டி மியாவ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 16, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Caqui chocolate em fundo preto 03.jpg

சீமைப் பனிச்சை உண்ணத்தக்க பழமாகும். நன்கு பழுத்த பழம் செம்மஞ்சள் அல்லது இளம் பொன்னிறத்திலிருந்து கரும் செம்மஞ்சள் நிறம் வரை அதன் வகை மற்றும் இனத்திற்கேற்ப வேறுபட்டுக் காணப்படும். இது 1.5 முதல் 9 செ.மீ வரையான (0.5 - 4 அங்குலம்) விட்டத்தில் காணப்படும்.

படம்: Rodrigo.Argenton
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 13, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Harnai Bullock cart.jpg

மாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், சீனா போன்ற பகுதிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.

படம்: Cj.samson
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 6, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Penguin in Antarctica jumping out of the water.jpg

பென்குயின் தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு மிகச் சிறப்பாக இசைவாக்கம் பெற்றுள்ளன. இவற்றின் சிறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் நீரில் பென்குயின்கள் பிரமிக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. படத்தில் பேரரசப் பென்குயின் ஒன்று நீரில் இருந்து வெளியே தாவுகிறது.

படம்: கிறித்தோபர் மிசேல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச் 2, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 2, 2016
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 28, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Stairway Monsanto Castle April 2015-1.jpg

படிக்கட்டு வெவ்வேறு மட்டங்களில் உள்ள தளங்களைப் போக்குவரத்துக்காக இணைப்பதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். கடக்க வேண்டிய நிலைக்குத்துத் தூரத்தைச் சிறு சிறு தூரங்களாக ஏறிக் கடப்பதற்காகச் செய்யப்படும் ஒழுங்கு இது. இவ்வாறு பிரிக்கப்பட்ட ஒரு பிரிவு நிலைக்குத்துத் தூரத்தை ஏற உருவாக்கிய அமைப்புப் படி எனப்படுகின்றது. எனவே படிக்கட்டு பல படிகள் கொண்ட ஒரு தொகுதி. படத்தில் போர்த்துகலின் மான்சாண்டோ கோட்டையில் உள்ள ஒரு கருங்கல் படிக்கட்டைக் காணலாம்.

படம்: ஹோக்கீம் கஸ்பார்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 24, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Pistachio macro whitebackground NS.jpg

பசுங்கொட்டை (பொதுவாக பிஸ்தா என்றழைக்கப்படுகிறது) விரும்பி உண்ணப்படும் முந்திரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொட்டை வகையாகும். மத்தியக் கிழக்கு நாடுகளான ஈரான், துருக்கி, ஆப்கானிசுத்தான், துருக்மேனியா ஆகிய நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா, ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும் இது தற்போது பயிரப்படுகிறது. இது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் Pistachio எனப்படுகிறது. உப்பிட்டு வறுக்கப்பட்ட ஒரு பசுங்கொட்டை படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: முகமது மகிதி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 21, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Sant Vasily cathedral in Moscow.JPG

பேராலயம் கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் ஆயரின் தலைமை ஆலயமாகும். கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில லூதரனிய மெதடிச திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகைப் பயன்பாடு உள்ளது. படத்தில் மாஸ்கோ நகரின் புனித பசில் பேராலயம் காணப்படுகிறது.

படம்: பெதார் மிலோசேவிக்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 17, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Pluto-01 Stern 03 Pluto Color TXT.jpg

புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளும் சூரியனை நேரடியாகச் சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் சூரியனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்து பின்னர் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.

புளூட்டோவை சூலை 14, 2015 அன்று நாசாவின் நியூ ஒரைசான்ஸ் விண்கலம் எடுத்த முதல் உயர்-நுணுக்கப் (HD) படம் காட்டப்பட்டுள்ளது. இது இரால்ஃப்/பன்னிறமாலை புகைப்படக்கருவி மூலம் எடுக்கப்பட்ட நீல, சிவப்பு, அகச்சிவப்பு படங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் பல நில அமைப்புகள் வெளிர் நீலம், மஞ்சள், ஆரஞ்சு, அடர் சிவப்பு போன்ற குறைவான அளவு பல நிறங்களில் காட்டப்பட்டுள்ளன.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 14, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Iguana Iguana from Margarita Island.jpg

அமெரிக்கப் பேரோந்தி வெப்ப மண்டலத்தில் வாழும் முதுகெலும்புள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இது நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவின் வட பகுதியிலும் கரிபியத் தீவுகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது. அமெரிக்கப் பேரோந்திகள் ஓந்தி-பல்லி குடும்பத்துக்குத் தொடர்புடைய ஒரு விலங்கினம். அதிக அளவாக ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியது.

படம்: தி ஃபோட்டோகிராஃபர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 10, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Mixed onions.jpg

வெங்காயம் அல்லியம் (Allium) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் பல வண்ண வெங்காயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படம்: கோலின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 7, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Royal Air Force Chinook helicopter firing flares over Afghanistan MOD 45158742.jpg

உலங்கு வானூர்தி வானூர்தி வகைகளில் ஒன்று. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பு விசையைப் பெறுகிறது. போக்குவரத்துக்கும், போரிலும் உலங்கு வானூர்திகள் பயன்படுகின்றன. படத்தில் பிரித்தானிய வான்படையின் சினூக் ரக வானூர்தி ஒன்று தாக்குதலில் ஈடுபடுவதைக் காணலாம்.

படம்: கார்ப்பரல் லீ கொடார்டு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 3, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

பனிக்கரடி (துருவக் கரடி) புவியின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்ல கொன்றுண்ணிப் பாலூட்டி. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம் எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் காலத்தில் கருத்தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20,000 பனிக்கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டு அழிந்துவரும் இனங்களுள் இவை சேர்க்கப்பட்டுள்ளன. காணொளியில் இரு பனிக்கரடிகள் விளையாட்டுக்காக சண்டையிடுவது காட்டப்பட்டுள்ளது.

காணொளி: புரோக்கன் இனாக்ளோரி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 31, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Enrique Simonet - La autopsia - 1890.jpg

பிணக்கூறு ஆய்வு இறந்த உடலை நன்கு ஆராய்ந்து இறப்பின் காரணத்தையும் ஏற்பட்ட விதத்தையும் அறிவதும் உடலிலிருந்த நோய் அல்லது காயத்தினை மதிப்பிடுவதும் ஆகும். இந்த மருத்துவமுறையை பொதுவாக நோயியலில் சிறப்பான பயிற்சி பெற்ற மருத்துவர் மேற்கொள்வார். படத்தில் என்ரிக்கு சிமோனே என்பார் வரைந்த ஒரு ஓவியம் உள்ளது.

படம்: என்ரீக்கு சிமோனே, மலாகா அருங்காட்சியகம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 27, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Corpses in the courtyard of Nordhausen concentration camp.jpg

பெரும் இன அழிப்பு (Holocaust) என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் செருமனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். இது அக்காலத்தில் செருமனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் இட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச செருமன் தொழிலாளர் கட்சியின் (நாசி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர், நாடோடிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பிறழ்ந்தவர், தற்பாலீர்ப்புள்ளோர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்ட பலரும் கொல்லப்பட்டனர்.

படத்தில் மிட்டெல்பௌ-டோரா நாசி வதை முகாமில் பசியினாலும் துப்பாக்கியில் சுடப்பட்டும் இறந்தவர்களுள் பாதிக்கும் குறைவானவரது உடல்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: ஜேம்ஸ். இ. மையெர்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 24, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Seagate ST33232A hard disk inner view.jpg

வன் தட்டு நிலை நினைவகம் என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இது நிலை நினைவகம் எனப்படுகிறது. படத்தில் சீகேட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் வன் தட்டு நிலை நினைவகத்தின் உள்தோற்றத்தைக் காணலாம்.

படம்: எரிக் காபா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 20, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
US President Barack Obama taking his Oath of Office - 2009Jan20.jpg

பராக் உசேன் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய குடியரசுத் தலைவர். 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமெரிக்க வரலாற்றின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் சனவரி 20, 2009ஆம்ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவராக முதன்முறையாகப் பதவியேற்கும் படம் காட்டப்பட்டுள்ளது.

படம்: செசிலியோ ரிகார்டோ, அமெரிக்க வான்படை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 17, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
STS-116 spacewalk 1.jpg

விண்வெளி நடை என்பது விண்வெளி வீரர்கள் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை ஆகும். இவை பெரும்பாலும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளியே நடைபெறுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகங்களில் ஏற்படும் இயந்திரக் குறைபாடுகளை சரி செய்யவோ அல்லது புதிய பாகங்களை இணைக்கவோ இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 10, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Don Quijote de La Mancha, Teresa Carreño Teather 2.jpg

இசை நாடகம் ஒரு வகையான நிகழ் கலை. பாடல்கள், வசனம், நடனம், நடிப்பு ஆகியவற்றை ஒரு சேர கலந்து வழங்குகின்றது. இசை நாடகங்கள், இசை, பாடல் வரிகள், வசனங்கள், நடன் அசைவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்தப்படும் கதையின் உணர்ச்சிகளை (நகைச்சுவை, காதல், சினம், மகிழ்ச்சி போன்றவை) வெளிக்கொணருகின்றன. படத்தில் டான் குய்க்ஸோட் கதையை பாலே நடன வடிவில் நிகழ்த்தும் இசை நாடகத்தில் இருந்து ஒரு காட்சியைக் காணலாம்.

படம்: தி ஃபோட்டோகிராஃபர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 3, 2016 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
Pieter Bruegel the Elder - The Tower of Babel (Vienna) - Google Art Project - edited.jpg

பாபேல் கோபுரம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. அனைவரும் ஒரே இடத்தில் குடியேறும்படி வானளாவிய பாபேல் கோபுரம் ஒன்றைக் கட்டினர். இதனை விரும்பாத கடவுள் பல மொழிகளை உருவாக்கி குழப்பம் உண்டாக்கினார். மக்கள் சிதறுண்டு உலகின் பல இடங்களுக்குச் சென்றனர்.

படம்: பீட்டர் பிரியூகல் மூத்தவர், கூகுள் கலைத்திட்டம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு