விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2013

புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.


ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்





திசம்பர் 29, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அல்லாஹு அக்பர் என்பது இறைவனே மிகப் பெரியவன் என்ற பொருள் தரும் அரபுத் தொடராகும். இது தக்பிர் என்றும் அழைக்கப்படுகிறது. இத்‌தொடர் முஸ்லிம்களால் பல்வேறு வேளைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ஐந்து முறை நடைபெறும் தொழுகை அழைப்பும் அல்லாஹு அக்பர் என்றே தொடங்குகிறது. திருக்குர்ஆனில் இத்தொடர் மூன்று இடங்களில் வருகிறது. படத்தில் இசுலாமியர் ஒருவர் தக்பிருக்கு முன்னதாகத் தன் கைகளை உயர்த்துவது காட்டப்பட்டுள்ளது.

படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 25, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பனித்தூவி என்பது மழை பெய்வது போல குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வகைகளில் உருவாவதைக் காணலாம். படத்தில் பனித்தூவி ஆய்வாளர் வில்சன் பென்ட்லி தொகுத்த பல வடிவங்கள் காட்டப்பட்டுள்ளது.

படங்கள்: வில்சன் பென்ட்லி; மூலம்: NOAA
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 22, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பாரிசிலுள்ள ஈபெல் கோபுரத்தை சூன் 3, 1902 அன்று இரவு 9.20 மணிக்கு மின்னல் தாக்கியபோது எடுக்கப்பட்ட படம் காட்டப்பட்டுள்ளது. ஒரு நகரப் பகுதியில் மின்னல் தாக்குவதைப் பற்றிய மிகப் பழைய படங்களுள் இதுவும் ஒன்று.

படம்: எம். ஜி. லோப்பெ; மூலம்: NOAA
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 18, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சோளம் என்பது புல் வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இது மனிதர்களின் முக்கியமான உணவுப் பொருள்களுள் ஒன்றாகவும் ஆப்பிரிக்காவின் முதன்மை உணவாகவும் இருக்கிறது. படத்தில் பல வண்ண சோளங்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: ஆஸ்பெஸ்டாஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 15, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 15, 2013
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 11, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புளூட்டோ என்பது நமது சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய குறுங்கோளும் சூரியனை நேரடியாக சுற்றிவரும் பத்தாவது பெரிய விண்பொருளும் ஆகும். கண்டுபிடிக்கப்பட்ட 1930இலிருந்து சூரியக் குடும்பத்தில் 9ஆவது கோளாக இருந்துவந்த இது 2006ஆம் ஆண்டு அத்தகுதியிலிருந்து நீக்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகத்துல்லியமாக பல்வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல படங்களின் கூட்டு அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

மூலம்: ஹபிள் தொலைநோக்கி; அசைபடம்: எய்னெயாஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 8, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கொத்தமல்லி அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும் கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்த இது 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. படத்தில் அதன் பாகங்கள் விளக்கப்படமாகக் காட்டப்பட்டுள்ளன.

படம்: முனைவர் ஓட்டோ வில்எம் தோமெ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 4, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நைல் வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் 6650 கிமீ நீளம் கொண்ட ஆறு. பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கும் இதனால் எகிப்தும் சூடானும் அதிகம் பயனடைகின்றன. பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஆற்றின் கரையோரம் அமைந்த எகிப்திய நகரங்கள் இரவு விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்வது காட்டப்பட்டுள்ளது. நீண்ட காம்பு போன்று நீண்டிருக்கும் நைலின் கரையிலேயே அனைத்து நகரங்களும் அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், மலர் போன்ற பகுதியின் ஒளிரும் மையம் கெய்ரோ நகரம் ஆகும்.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 1, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|300px|{{{texttitle}}}]]

ஐசாக் அசிமோவ் ஓர் அமெரிக்க அறிபுனை எழுத்தாளரும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியல் பேராசிரியராகவும் பணியாற்றியவராவார். அறிபுனைப் புத்தகங்களைத் தவிர வெகுசன அறிவியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார். அசிமோவ் அறிபுனை எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது படைப்புகளை இவ்வோவியத்தில் இவர் அமர்ந்திருக்கும் நாற்காலியிலுள்ள சின்னங்கள் காட்டுகின்றன.

ஓவியம்: ரொவேனா மோர்ரிள்; பதிவேற்றம்: க்சியாங்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 27, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

துர்க்கை இந்து சமய பெண் கடவுள் ஆவார். இவர் சிவபெருமானின் மனைவியான சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். துர்க்கா என்றால் தீய எண்ணத்தினை அழிப்பவள் என்று பொருளாகும். படத்தில் துர்க்கா வழிபாட்டிற்காக துர்க்கை (நடுவில்) இன்னபிற கடவுளர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

படம்: ஜொய்தீப்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 24, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கந்தக டைஆக்சைடு என்பது SO2 என்ற வேதிவாய்பாடு கொண்ட ஒரு சேர்மம். இது நச்சுத்தன்மை வாய்ந்த மிகவும் அழுகிய நாற்றம் வீசக்கூடிய ஒரு வளிமம் ஆகும். புவியின் வளிமண்டலத்தில் பில்லியன் துகள்களின் கனஅளவில் ஒன்று (ppbv) என்ற அளவில் காணப்படுகிறது. இது ஆக்சிஜனேற்றம் அடைந்து அமில மழை பெய்யக் காரணமாகிறது. படத்தில் புவியினுள்ளிருந்து வெண்புகை போன்று வெளியேறும் கந்தக டைஆக்சைடின் படம் காட்டப்பட்டுள்ளது.

படம்: புரோக்கன் இன்குளோரி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 20, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அமைதிக்கான நோபல் பரிசு என்பது ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ அவருக்குத் தரப்படவேண்டும்" என்ற காரணம்பற்றி ஆண்டுதோறும் ஓஸ்லோவில் நார்வே நாடாளுமன்றத்தினால் வழங்கப்படுகிறது. படத்தில் 1994 ஆண்டிற்கான பரிசினைப் பெற்ற யாசிர் அராஃபத், சிமோன் பெரெஸ், யிட்சாக் ராபின் (முறையே இடமிருந்து வலமாக) ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்.

பதிவேற்றம்: மாத்தன்யா; மூலம்: அரசு பத்திரிக்கை அலுவலகம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 17, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிகள் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. பன்றி இறைச்சி சத்து நிறைந்ததாக இருந்தாலும் பல கலாச்சாரங்களிலும் பல மதங்களிலும் இது குறித்து வெவ்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. படத்தில் படுத்துக் கொண்டிருக்கும் இரு பானைவயிற்றுப் பன்றிகள் காட்டப்பட்டுள்ளன.

படம்: ஜோவாகிம் ஆல்வெஸ் காஸ்பர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 13, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova} என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதைக் குறிக்கும். படத்தில் புவியில் இருந்து 6500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள 6 ஒளியாண்டுகள் அகலம் கொண்ட நண்டு நெபுலா காட்டப்பட்டுள்ளது.

படம்: ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி, நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 10, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சார்ந்த விலங்குகளாகும் இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் Anura என்றழைக்கப்படுகிறது. இவற்றில் ஏறக்குறைய 5000க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றுள் பலவும் நஞ்சுடையவை ஆகும். படத்தில் செங்கண்கள் கொண்ட மரத்தவளை ஒன்று காட்டப்பட்டுள்ளது. இவை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று செம்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

படம்: கேரிஜேம்ஸ்பால்போவா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 6, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தீயணைப்பான் என்பது சிறிய அளவிலான கட்டுப்படுத்தக்கூடிய தீப்பற்றலைத் தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு கருவி. இவ்வகை அணைப்பான்களில் வேதிவினை மூலம் உருவாகும் பொருள் தீயணைப்புக் காரணியாக பயன்படுகிறது. இதில் A என்பது திறப்பிதழ், B என்பது பாதுகாப்பு அமைப்பு, C என்பது இணைப்பி, D என்பது வெளியாக்கி, E என்பது CO2 வாயு, F என்பது CO2 திரவம், G என்பது உறிஞ்சி, H என்பது CO2 கலன் ஆகும்.

படம்: கார்ட்டா24
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 3, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

லம்போர்கினி ஓர் இத்தாலிய மகிழுந்து உற்பத்தி நிறுவனம். இது தொடங்கப்பட்டதிலிருந்து பலரது கைகளுக்கு மாறி இறுதியாக 1998இல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆடி ஏஜியினால் வாங்கப்பட்டு 2011 நிலவரப்படி 831 பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. படத்தில் லம்போர்கினி சூப்பர் டுரோஃபியோ என்ற வகை விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி (SUV) காட்டப்பட்டுள்ளது.

படம்: ஆங்மோகியோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 30, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பாதிப்புக்குள்ளான ஒரு பெருவிழுங்கியைச் சூழ்ந்திருக்கும் எச்.ஐ.வி வைரசுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. பச்சை நிறத் துகள்களே எச்.ஐ.வி. வைரசுகள் ஆகும்.

படம்: Public Library of Science ஆய்விதழ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 27, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆஸ்கார் வைல்டு ஓர் ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார்.

ஓவியம்: நெப்போலியன் சரோனி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 23, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஜெல்லி பீன் என்பது அவரை விதை வடிவில், கடின ஓட்டுடன், பசை போன்ற உட்பகுதியைக் கொண்டுள்ள இனிப்புப் பண்டமாகும். இதன் முக்கிய மூலப் பொருள் சர்க்கரை ஆகும். படத்தில் வெவ்வேறு வண்ணங்களுடைய ஜெல்லி பீன்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: எவான்-ஆமோஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 20, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

துடிப்பண்டம் என்பது விண்வெளியில் அமைந்திருக்கும் மின்காந்த ஆற்றலை உமிழும் மிகப்பெரும் மூலமாகும். தொலைநோக்கியில் இது ஒரு புள்ளி ஒளிமூலம் போன்று தென்படும். இவை அதிக சிவப்புப் பெயர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஓவியரின் கற்பனையில் துடிப்பண்டத்தின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

ஓவியம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 6, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பட்டாம்பூச்சியின் வளர்ச்சி நிலைகளைக் காட்டும் இப்படத்தில் புழு முட்டையிடுவதில் தொடங்கி, அது இலையுண்ணும் பருவத்தில் இருப்பது, இலைகளை உண்டு கொழுத்து கூட்டுப் புழுவாக மாறி இறுதியில் பட்டாம்பூச்சியாக மாறும் நிலைகள் காட்டப்பட்டுள்ளன.

கூட்டுப்படம்: நிக் நோப்குட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 2, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று அக்டோபர் 2 அன்று கொண்டாடப்படுகிறது.

படம் எடுத்தவர் யாரென்ற விபரம் இல்லை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 29, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியைக் காட்டும் இந்த வரைபடத்தில் 1000 கட்டுரை எண்ணிக்கையை எட்டிய 2005ஆம் ஆண்டு தொடங்கி 55,000 கட்டுரைகளை எட்டிய 2013 வரை வளர்நிலை காட்டப்பட்டுள்ளது. வரைபடத்திலிருந்து வளர்ச்சி தொடர்ந்து ஆண்டுதோறும் அதிகரித்து வருவது அறியப்படுகிறது. மேலும் பல மைல்கற்கள் இப்பக்கத்தில் தரப்பட்டுள்ளன.

படம்: நட்கீரன், சோடாபாட்டில், பிரஷாந், செல்வசிவகுருநாதன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 25, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மதிப்புகளின் தொகுதியை (array) அடுக்கும் முறைகளுள் ஒன்றான விரைவடுக்க முறையை (Quicksort algorithm) விளக்கும் அசைபடம் காட்டப்பட்டுள்ளது. சிவப்புப் பட்டையில் காட்டப்படும் உறுப்புகள் ஆதாரப்புள்ளிகளாகும். தொடக்கத்தில் வலது மூலையில் இருக்கும் உறுப்பு ஆதாரப்புள்ளியாகத் (pivot) தெரிவு செய்யப்படுகிறது.

அசைபடம்: ரோலண்ட் எச்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 22, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உரசிணைப்பி, பொறிக்கும் பற்சக்கரப் பெட்டிக்கும் இடையே உள்ள பாகமாகும். இது பொறியின் முழுத்திறனும் செலுத்த அமைப்புக்குச் (transmission system) செல்லாமலிருக்கப் பயன்படுத்தப்படுகிறது. படத்திலுள்ள கூம்பு-உரசிணைப்பியின் பாகங்களாவன 1 - கூம்புகள்; 2 - செலுத்தல் தண்டு; 3 - உராய்வுப் பொருள்; 4 - சுருள்; 5 - உரசிணைப்பிக் கட்டுப்பாடு; 6 - சுழல்திசை (இரு பக்கமும்).

படம்: ஸ்விபெர்.டீ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 18, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

குதிரையேற்றம் குதிரையின் மீது ஏறி அதனைக் கட்டுப்படுத்தி ஓட்டுதலை முதன்மையாகச் சுட்டுகின்றது. இது ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள ஒரு விளையாட்டாகும். படத்தில் ஒரு வீரர் குதிரையேற்றத்தில் ஒரு சவாலான ஏற்றச் செயலான எகிறிக் குதித்தலை மேற்கொள்ளுதல் காட்டப்பட்டுள்ளது.

படம்: பீட்டர்கீர்ட்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 15, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அப்பல்லோ 17 திட்டமானது அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் மனிதர் பயணித்த பதினோராவது மற்றும் கடைசித் திட்டமாகும். திசம்பர் 7, 1972 அன்று இது ஏவப்பட்டது. மூவர் அடங்கிய பயணக்குழுவின் ஆணையாளர் யூகன் செர்னான் நிலவுத் தரையூர்தியில் (lunar roving vehicle) பயணிக்கும் காட்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 8, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஊனுண்ணித் தாவரம் என்பது சிறு விலங்குகளையோ புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் தாவரம் ஆகும். இவை பூச்சியுண்ணும் தாவரங்கள் எனவும் அழைக்கப்படும். படத்தில் Drosera capensis காட்டப்பட்டுள்ளது. இதன் இலைகளில் உற்பத்தியாகும் பசை போன்ற பொருள் சூரிய ஒளியில் மின்னுவதைக் கண்டு பூச்சிகள் இவற்றிடம் சிக்குறுகின்றன.இவை பெரும்பாலும் நைட்ரசன் சத்துக்காகவே பிற உயிர்களை சார்ந்து வாழ்கின்றன.

படம்: பீட்ர் ட்லௌஹிய்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 4, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மாலே மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது போர்த்துக்கீசிய வணிகர்களால் 16ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. உலகிலேயே மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். 2004ஆம் ஆண்டு இந்தியப்பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் இத்தீவின் மூன்றில் இரண்டு பாகம் நீரில் மூழ்கியது.

படம்: ஷாஹீ இல்யாஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 1, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மாறுகண் அறுவை சிகிச்சை செய்யும்போது கண்ணின் பகுதிகளைப் பிடித்துக் கொள்ளும் முறை காட்டப்பட்டுள்ளது. இதில் கேஸ்ட்ரோவியெஜோ இடுக்கிகள் முதன்மைத் தசையைப் பிடித்துக் கொண்டுள்ளன. மேன்சன்-ஏய்ப்லி கத்திரிகளால் வெட்டப்படுகின்றது. கண்ணிமைகள் குக் விரிவாக்கியால் தாங்கப்பட்டுள்ளன.

படம்: பிடிக்கோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 25, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஜெர்மனியின் ஃப்யூச்ஸ்டாட்டிலுள்ள செயற்கைக்கோள் புவி மையங்களின் வானலை வாங்கிகளின் தொகுதி. இந்தப் புவி மையத்தில் 50 பரவளைய வானலை வாங்கிகள் உள்ளன. இவை உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகளுள் ஒன்றாகும். இது இன்டெல்சாட் எனும் அமெரிக்க நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படம்: ரெய்னெர் லிப்பெர்ட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 18, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் ஈன்று சிறிது நேரமே ஆன கன்றும் அதன் தாய்ப் பசுவும் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக, தாய்ப்பசு ஈன்றதும் கன்றின் மீதுள்ள பொருட்களையும் ஈரத்தையும் தன் நாவினால் நக்கி அதனைச் சுத்தப்படுத்தவும் அதே வேளையில் உலர வைக்கவும் செய்கின்றது.

படம்: உபெர்ப்ருஸ்டெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 7, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பெய்ரூத் லெபனான் நாட்டின் தலைநகரமாகும். இந்தப்படம் பிரெஞ்சுப் புகைப்படக்கலைஞர் பீலிக்சு போன்ஃபில்சு என்பவரால் எடுக்கப்பட்டது. இதன் காலகட்டம் தோராயமாக 19ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றாண்டுகளில் ஏதேனுமொன்றாக இருக்கக்கூடும்.

படம்: பீலிக்சு போன்ஃபில்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 4, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உலர்ந்த திராட்சை என்பது திராட்சையை உலர்த்திப் பெறப்படுவது ஆகும். இதில் உயிர்ச்சத்து பி, சுண்ணாம்புச்சத்து முதலியவை நிறைந்துள்ளன. படத்தில் உலர் திராட்சை வைக்கப்பட்டுள்ள கலம் காட்டப்பட்டுள்ளது.

படம்: ஜோஜோ_1
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 31, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் சனிக்கோளின் வளையங்கள் சாதாரண கட்புலனாகும் ஒளியிலும் ரேடியோ அலைகளிலும் தெரியும் விதம் காட்டப்பட்டுள்ளது. படத்தில் மேற்புறப்பகுதி கட்புலனாகும் ஒளியிலும் கீழே ரேடியோ அலையினாலும் எடுக்கப்பட்டதாகும்.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 28, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள் ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. படத்தில் காட்டில் வாழும் shortbeak echidna என்ற இனம் காட்டப்பட்டுள்ளது.

படம்: ஃபிர்0002
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 24, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வடிவியலின் இன்றியமையாத தேற்றங்களுள் ஒன்றான பிதாகரஸ் தேற்றம் அசைபடமாகக் காட்டப்பட்டுள்ளது. இத்தேற்றப்படி, ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற இரு பக்க நீளங்களின் இருமடிகளின் கூடுதலுக்குச் சமம் ஆகும்.

அசைபடம்: ஆல்வெஸ்காஸ்பெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 21, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஐரோ அல்லது யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். படத்தில் அந்நாணயக் குறியீட்டின் அதிகாரப்பூர்வ வடிவமைப்பு முறை விளக்கப்பட்டுள்ளது.

படம்: எரினா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 17, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மலையேற்றம் என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலைக் குறிக்கும். மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். படத்தில் மலையேறுபவர் ஒருவர் நேபாளத்திலுள்ள தீவுச்சிகரத்தின் (Imja Tse) உச்சியின் மீது 6,189 மீட்டரை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.

படம்: மௌன்டெனீயர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 14, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சோயூஸ் திட்டம் 1960களின் ஆரம்பப் பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது இத்திட்டத்தை உருசிய விண்வெளி நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. படத்தில் சோயூஸ் TMA-16 விண்கலம் பன்னாட்டு விண்வெளி மையத்தை அணுகிக்கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.

படம்: Expedition 20 குழு, நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 7, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும் அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை போன்சாய் எனப்படும். படத்தில் ஒரு மேப்பிள் மரம் போன்சாய் மரமாக மாற்றப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படம்: அமெரிக்க வேளாண் துறை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 3, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நமீபியா தெற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரம் உள்ள நாடாகும். இந்நாட்டிலுள்ள மிகப்பெரிய பாலைவனமான நமீப் பாலைவனத்தையே இந்நாட்டின் பெயர் குறிக்கின்றது. படத்தில் அப்பாலைவனத்தின் ஒரு பகுதி காட்டப்பட்டுள்ளது.

படம்: லூகா கலூசி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஜூன் 5, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் வாயு உலோக மின்வில் பற்றவைப்பு காட்டப்பட்டுள்ளது. பணிப்பொருளுக்கும் மின்வாய்க்கும் இடையில் ஒரு மின்வில் உருவாக்கப்பட்டு அது பற்றவைக்கப்பட வேண்டிய பணிப்பொருளைச் சூடாக்கி, உருகச் செய்து, இணைக்கிறது. ஒரு மந்தவாயு இந்தச் செயல்முறையில் மாசுப்பொருள் காப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.

அமைப்பு: அமெரிக்க வான்படை
படம்: வில்லியம் எம். ப்லேட் ஜூனியர்

தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஜூன் 2, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் மின் விளக்கின் கண்ணாடிப் பகுதி திறக்கப்பட்டு உள்ளே உள்ள மந்த வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. விளக்கு போடப்படும்போது டங்ஸ்டன் இழை ஆக்ஸிஜன் உள்ளே நுழைவதால் ஒரு வித புகையுடன் எரிகிறது.

படம்: ரிட்சி பிளாக்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 29, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராய நாசா அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும். படத்தில் அத்திட்டத்தில் இடம்பெற்ற கியூரியாசிட்டி (பெரியது), ஸ்பிரிட் (நடுத்தரம்), சோஜர்னர் (சிறியது) ஆகிய தரையுளவிகளோடு இரு அறிவியலாளர்கள் நின்றுள்ளனர்.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 26, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உருசியாவிலுள்ள புனித பேசில் பேராலயம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது 1555-61 வரையிலான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது ஐவானின் (Ivan the Terrible) ஆணையின் பேரில் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும்.

படம்: அல்வெஸ்காஸ்பர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 22, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தையல் இயந்திரம் துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். இது தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியை உந்திய ஒரு சாதனம். நூல் கோர்த்த ஊசி, எவ்வாறு மேலும் கீழும் நகர்ந்து நூலை இழுத்து பின்னிப் பிணைக்கின்றது என்பதைக் காட்டும் அசைபடம்.

அசைபடம்: நிக்கோலாய்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 19, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நிக்கல் மிகவும் அரிய ஒரு தனிமம். ஏனெனில் பூமியின் மேலோட்டுப் பகுதியில் இது 0.008 % மட்டுமே காணப்படுகின்றது. இது பெரும்பாலும் உலோகக்கலவை செய்யப் பயன்படுகிறது. படத்தில் மின்னாக்கமடைந்த நிக்கலும் 1 cm3 கனஅளவு கொண்ட நிக்கல் கட்டியும் காட்டப்பட்டுள்ளன.

படம்: அல்கெமிஸ்ட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 15, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில் இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஓர் அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். படத்தில் ஒரு சூரிய கிரகணத்தின் படிப்படியான நிலைகள் காட்டப்பட்டுள்ளன.

படம்: காலன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 12, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பெஞ்சமின் பிராங்கிளின் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர், எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னலில் மின்னாற்றல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து உலகிற்குச் சொன்னவர் இவர். ஸ்காட்லாந்து ஓவியர் டேவிட் மார்டின் வரைந்த ஓவியம் இதுவாகும். தற்போது இந்த ஓவியம் வெள்ளை மாளிகையில் இருக்கிறது.

ஓவியம்: டேவிட் மார்டின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 5, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கடுகு என்பது பிரேசிகா, சினாபிஸ் ஆகிய இரு பேரினங்களின் கீழுள்ள அனைத்துச் சிற்றின வகைகளையும் குறிக்கும். கடுகின் இலைகள், விதைகள், தண்டு ஆகியவை பொதுவாக உணவுப்பொருள்களில் சேர்க்கப்படுகின்றன. கடுகு விதைகள் காரத்தன்மை உள்ளவை. இதன் தன்மையைக் குறிக்கும் வகையில் தமிழில் "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்ற பழமொழியும் வழக்கிலுள்ளது. படத்தில், கடுகு விதைகளின் ஆறு விதமான வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: ரெய்னெர் சென்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 1, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். படத்திலுள்ளது விண்வெளியிலுள்ள நாசாவின் புவி ஆய்வு மையத்திலிருந்து எடுக்கப்பட்ட தென்சீனக் கடலின் மேலுள்ள வளிமண்டலத்தின் தோற்றம் ஆகும்.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 28, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பாலைவனக் கீரி என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு.கீரி வகைக் குடும்பத்தைச் சேர்ந்த இவை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. நமீபியாவில் உள்ள நமிப் பாலைவனத்திலும். தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் இவ்வகைக் கீரிகளைக் காணலாம். இவை கூட்டமாக வாழக்கூடியவை. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெண் கீரியே தலைமை தாங்கும். ஆண் கீரி அதற்குத் துணையாக இருக்கும்.

படம்: ப்யோரிங்கர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 24, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இந்த அசைவுப்படம் கனடாவின் மாகாணங்கள் ஒன்றிணைந்த வரலாறைக் காட்டுகின்றது. இது அன்றைய டொமினியனிலிருந்து (1867) இன்றைய கனடாவின் நிலை (2000) வரை அனைத்து எல்லைப் பிரிப்பு சேர்ப்புகளையும் காட்டுகிறது.

படம்: கோல்பெஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 21, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் இயற்கையில் எங்கும் காணப்படும் மின்காந்த நிறமாலை காட்டப்பட்டுள்ளது. இதில் முறையே இடமிருந்து வலமாக அனைத்தும் அலைநீளத்தினை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, காமா கதிர்வீச்சு, எக்ஸ் கதிர்கள், புறவூதாக்கதிர்கள், கட்புலனாகும் ஒளி, அகச்சிவப்புக் கதிர்கள், ரேடியோ அலைகள் ஆகும். இவை இவற்றின் அலைநீளத்தைப் பொறுத்துப் பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

படம்: டடௌட் & ஃப்ரூட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 17, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வாள்வீச்சு என்பது வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டையிடுவதைக் குறிக்கும். தற்காலத்தில் இது மேற்குநாட்டு விளையாட்டான Fencing-ஐக் குறிக்கின்றது. இது ஓர் ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து போட்டியாளர்கள் ஆயுதத்துடன் சண்டையிடுவர்.

படம்: ஜாஸ்ட்ரோவ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 14, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. படத்தில் ஒரு பொய்க்கால் குதிரையும் அதனருகில் மயிலாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மாதிரியுருவும் உள்ளன.

படம்: நற்கீரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 10, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உயரிய வாயுக்களை ஒரு கண்ணாடிக் குழாயில் அடைத்து அதில் 5 kV மின்னழுத்தத்தில் 20 mA மின்னோட்டத்தை 25 kHz அதிர்வெண்ணில் தரும்போது இதுபோன்ற ஒளிர்தல் நிகழும். இந்நிகழ்வே இந்த வாயுக்கள் பொதுவான குமிழ் விளக்குகளில் பயன்படுத்தப்படக் காரணம் ஆகும். படத்தில் இடமிருந்து வலமாக ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தனிப்படங்கள்: ஜுரி
ஒன்றிணைப்பு: அல்கெமிஸ்ட்-எச்பி

தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 7, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

த பீஸ்மேக்கர்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் மார்ச்சு 28, 1865 அன்று, திட்டமிடல் அமர்வில் வில்லியம் டெக்கும்ஷெ செர்மான், உலிசெஸ் எஸ். க்ராண்ட், ஆபிரகாம் லிங்கன், டேவிட் டிக்சன் போர்ட்டர் (இடமிருந்து வலமாக) ஆகியோர் கலந்தாலோசித்த வரலாற்று நிகழ்வைக்குறிக்கும் ஓவியம் ஆகும்.

ஓவியர்: ஜார்ஜ் பீட்டர் அலெக்சாண்டர் ஹீலி
புகைப்படம்: வெள்ளைமாளிகை வரலாற்றுக் கழகம்

தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச்சு 13, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆந்தை இரவில் திரியும் 174 வகை பறவையினங்களுள் ஒன்று. ஆந்தைகள் அவற்றின் தலைகளை 270o வரை திருப்பவல்லவை. இவை தூரப்பார்வை கொண்டவை. இருப்பினும் குறைவான வெளிச்சத்திலும் இவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். பல கலாச்சாரங்களில் ஆந்தைகளின் அலறல் கெட்ட சகுணமாகக் கருதப்படுகின்றது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பிப்ரவரி 20, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
கடற்குதிரை

கடற்குதிரை என்பது கடல் வாழ் உயிரியாகும். மீனைப் போலவே செவுள்கள், துடுப்புகள் கொண்டதெனினும் தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது. இவை முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்ல வல்லன. பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆணின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 27, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
திருமலைக்கோயில், பைம்பொழில்

திருமலை கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு சிறிய குன்றில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில். இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் 'திருமலை முருகன்' என்றும் 'திருமலை முத்துகுமாரசுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் 'திருமலை அம்மனுக்கான' ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது.

படம்: தென்காசி சுப்பிரமணியன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 13, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

பாரி பறம்பு மலையை ஆட்சி செய்த குறுநில மன்னர். கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர். படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலின் காரணமாக இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுகிறார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி இவ்வாரச் சிறப்புப் படமாக இடம்பெற்றுள்ளது.

படம்: அருணன்கபிலன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 6, 2013 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

கதைகூறல் என்பது, நிகழ்வுகளைச் சொற்கள், படங்கள், ஒலிகள் என்பவற்றின் மூலம் இன்னொருவருக்குச் வெளிப்படுத்துவது ஆகும். பெரும்பாலும் கதைகளைக் குறித்த நேரத் தேவைக்குப் பொருத்தமான உத்திகளுடனும், அலங்காரங்களுடனும் கூறுவது வழக்கம். பொழுதுபோக்குக்காகவும், கல்வி, பண்பாட்டுக் காப்பு, ஒழுக்க நெறிகளை உணர்த்துதல் போன்ற தேவைகளுக்காகவும் கதைகளைப் பரிமாறிக் கொள்வது எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றது. இளம் வால்ட்டர் ராலேக்கும் அவரது சகோதரருக்கும், கடலில் நிகழ்ந்தவை பற்றி ஒரு கடலோடி கதைகூறும் காட்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது. 1870 இல் சர் யோன் எவரெட் மிலாயிசு வரைந்த ராலேயின் இளம் பருவம் எண்ணெய் வண்ண ஓவியம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு