விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2017

புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.


சனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்





ஏப்ரல் 26, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சூரிய உதயத்தின்போது சர்க்கரைக்கட்டி மலை உட்பட்ட இரியோ டி செனீரோவின் காட்சி. இது பிரேசிலின் பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது.

படம்: Donatas Dabravolskas
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 19, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

முன்பு "சமாதான வாயில்" என்று அழைக்கப்பட்டு, பின்னர் பிரான்டென்போர்க் வாயில் என அழைக்கப்படும் வாயிலின் மேற்பகுதியில் உள்ள நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்ச் சிற்பம்.

படம்: Poco a poco
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 12, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஐரோப்பிய மயில் பட்டாம்பூச்சியின் 7500 மடங்கு பெரிதாக்கப்பட்ட உணர் கொம்பு. பொதுவாக பட்டாம்பூச்சிகளின் முகர்வுக்குப் பயன்படுத்தும் இதில் 16,000 இற்கு மேற்பட்ட முகர்வு உணரிகள் காணப்படும்.

படம்: Pavel Kejzlar
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 5, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாம்பல்நிற வாலாட்டிக் குருவி வாலாட்டிகள் இனத்தைச் சேர்ந்த சிறு பறவை ஆகும். ஒட்டு மொத்தமாக இக்குருவியின் நீலம் 18 முதல் 19 செ.மீ வரை இருக்கும்.வேகமாக ஓடும் ஆற்றின் ஓடைகளின் அருகே இவை கூடு கட்டியிருக்கும். 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.

படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 29, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நீல வசீகரன் என்பது ஆப்பிரிக்கா முதல் தென், தென் கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா வரை காணப்படும் பல துணையினங்களுடன் காணப்படும் வரியன்கள் குடும்ப பட்டாம்பூச்சி ஆகும்.

படம்: Jeevan Jose
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 22, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தகைவிலான் பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்.

படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 26, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆப்கானிஸ்தானின் கிழக்கு, தெற்கு பகுதிகளிலும், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணம், பலூச்சிஸ்தான், நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் வசிக்கும் பஷ்தூன் இன சிறார்கள். இவர்கள் கட்டடம் அற்ற பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.

படம்: John Severns
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 22, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பாறைக் குவிமாட சுவர் ஓடுகள். இவற்றை இணைக்க முதலாம் சுலைமான் ஓடு உருவாக்குனர்களை இசுதான்புல்லிலிருந்து எருசலேமுக்கு அனுப்பினார்.

படம்: Godot13
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 19, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான பெட்ரா. இது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர் ஆகும். பாறை வெட்டு கட்டடக்கலை, நீர்க்குழாய் முறைகளால் அது புகழ்பெற்றது.

படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 15, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

யூதத்தின் மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பான யோம் கிப்பூர் என்பதைக் குறிக்கும் ஓவியம். இது 1878 இல் நெய்யோவியமாக வரையப்பட்டது.

படம்: Maurycy Gottlieb
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 12, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பௌத்தநாத்து (பௌத்தநாத்து நினைவுத்தூணின் கண்கள்) நேபாள நாட்டின் திபெத்திய பௌத்தர்களின் பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் ஆகும். பௌத்தநாத்து கி பி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

படம்: Ggia
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 8, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, 3.5 செ.மீ விட்டம் கொண்ட, தென் கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சோடித் தோடுகள்.

படம்: -revi
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 5, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாமுராய் எனப்படுபவர் ஜப்பானில் தொழில் மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் இருந்து வந்த ஒரு வகுப்பினரைக் குறிக்கும். இவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றாகும்.

படம்: Britannica
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 1, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கோவில் மலையில் அமைந்துள்ள பாறைக் குவிமாடம். யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள இது யூதத் தேவாலயப் பகுதியாகவும், இசுலாமியர்களின் ஒரு புண்ணியத் தலமானவும் உள்ளது. உமையா கலீபகம் அப்ட் அல்-மலீகினால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் பல தடவைகள் புதுப்பித்தலுக்கு உள்ளானது.

படம்: Ralf Roletschek
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 29, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆசியக் காட்டுக் கழுதை என்பது குதிரைக்குடும்பத்தைச் சேர்ந்து ஒரு கழுதை. ஆசியா கண்டத்தைச் சேர்ந்த இவ்விலங்கு வேகமாக ஓடக்கூடியது.

படம்: Gideon Pisanty
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 25, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கை.

படம்: Augustus Binu
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 22, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் சிங்கத்தை அரிமா என்றும் ஏறு என்றும் கூறுவர்.

படம்: Martin Falbisoner
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 18, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கிமேஜி கோட்டைமனை என்பது சப்பானின் கிமேஜி எனுமிடத்தில் சிறு மலையின் மேல் அமைந்துள்ள சப்பானியக் கோட்டையகத் தொகுதியாகும். மேம்பட்ட பாதுகாப்புமுறைகளைக் கொண்ட பண்ணைமுறைக் கால 83 கட்டடங்களைக் கூட்டாகக் கொண்டது.

படம்: Bernard Gagnon
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 15, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

விசித்திர நசுகா கோடுகள் வெளிப்படுத்தும் மனிதனின் உருவம். பெருவில் அமைந்துள்ள நசுகா கோடுகள் 1994 இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. சிலர் 98 அடியுள்ள இவ்வுருவம் வேற்றுக்கிரகவாசி எனத் தெரிவிக்கின்றனர்.

படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 11, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

திருக்கல்லறைத் தேவாலய கூரை ஒன்றிலுள்ள ஓவியம். இது மதிலாலான பழைய நகரின் கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும்.

படம்: Godot13
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 8, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பனிமலை என்பது நன்னீரைக் கொண்ட பனியாறு, பனியடுக்கு போன்றவற்றில் ஏற்படும் பனித் தகர்வு செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி பனிக்கட்டியை மலைபோலக் கொண்ட அமைப்பாகும்.

படம்: Николай Гернет
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 4, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ரெய்க்ஸ்டாக் கட்டடம் என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின் இக்கட்டடம் பாவனைக்கு இல்லாதுபோனது.

படம்: Ansgar Koreng
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 1, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பொன்னாங் கழுகு என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினத்தில் ஒரு வகை ஆகும். இதில் மற்றொரு வகை வெண்டலைக் கழுகு. இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும்.

படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு