முட்டம், இடுக்கி மாவட்டம்


முட்டம் (மலையாளம்: മുട്ടം ) கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து. கொச்சியிலிருந்து சுமர் 66 கிலோமீட்டர் கிழக்கு தென் திசையில் இருக்கிறது. இங்கு இந்துக்கள், கிறித்தவர்கள், இசுலாமியர்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

முட்டம்
—  கிராம பஞ்சாயத்து  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் இடுக்கி
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி முட்டம்
மக்கள் தொகை 10,228 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இதே பெயர் கொண்ட இடங்கள்

தொகு

கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் "முட்டம்" என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.

  1. தொடுபுழா(தொடுபுழை) - முட்டம்
  2. கன்னியாகுமரி - முட்டம்,
  3. ஹரிப்பாடு- முட்டம்,
  4. சேர்த்தலா(சேர்த்தலை) - முட்டம்,
  5. ஆலுவா - முட்டம்,
  6. கண்ணூர் - முட்டம், (பய்யங்காடி)
  7. தொடுபுழா - ஏழுமுட்டம்
  8. காசர்கோடு - முட்டம்
  9. கோயம்புத்தூர் - முட்டம் (கொங்கு பகுதியில்)
  10. கடலூர் - முட்டம் (காட்டுமன்னார்கோயில் தாலுக்கா),
  11. நாகப்பட்டினம் - முட்டம்

சுற்றுலாத் தலங்கள்

தொகு
 
மலங்கரை அணைக்கட்டின் தோற்றம்
 
குடையாத்தூரில் காலைப் பொழுதில் எடுக்கப்பட்ட படம்

மலங்கரா அணைக்கட்டு

தொகு

இது தொடுபுழாயாறில் அமைந்திருக்கும் ஒரு அணை. மூலமற்றம் இடுக்கி மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியே வருகிற் தண்ணீரை சேமிப்பதற்காகக் கட்டின அணையாகும். இங்கு ஒரு பூங்கா மற்றும் படகுத்துறையும் சுற்றுலா பயணிகளுக்காக அமைந்திருக்கிறது.

இலவீழாபூஞ்சிரா

தொகு

இந்த சுற்றுலாத் தலம் முட்டத்திலிருந்து 10 கிமீ, தொடுபுழாவிலிருந்து 18 கிமீ, கோட்டயத்திலிருந்து 55 கிமீ தொலையளவில் இருக்கிறது.இலவீழாபூஞ்சிரா என்ற பெயரின் கருத்து இலை உதிராமல் இருக்கிற ஒரு பசுமையான பள்ளத்தாக்கு. பல பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர் குறிப்பாக மலையேறுபவர்கள்ககாக ஒரு சிறந்த சுற்றுலா தலம். இங்கு நீங்கள் நான்கு குன்றுகள் நடுவிலேயே ஒரு பசுமையான தாவரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கு பார்க்க முடியும். இந்த மலைகளின் ஒரு மலையான குடயத்தூர் விந்தியன் உச்சியிலிருந்து இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் திருச்சூர்மாவட்டங்களில் பெரும் பகுதிகளை பார்வையிட முடியும்.

சுகாதாரம்

தொகு

மக்கள் முக்கியமாக சுகாதார தேவைகளுக்கு அலோபதி மற்றும் ஆயுர்வேதம் சார்ந்தது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் இங்கு இயங்குகின்றன.

கல்வி நிறுவனங்கள்

தொகு
  • மகாத்மா காந்தி பொறியியல் பல்கலைக்கழக கல்லூரி தொடுபுழா இந்த கிராமத்தில் அமைந்துள்ளது.
  • அரசு பாலிடெக்னி கல்லூரி, முட்டம்
  • தொழில்நுட்ப மேல்நிலைப்பள்ளி, முட்டம்
  • அரசு உயர்நிலை பள்ளி, முட்டம்
  • புனித தாமஸ் உயர்நிலை பள்ளி, துடங்கநாடு
  • ஷாந்தாள் ஜோதி பப்ளிக் பள்ளி, முட்டம்.
  • பஞ்சாயத்து எல்பி பள்ளி, இல்லிசாரி.
  • ஷ்ரபுல் இஸ்லாம் மதராசா
  • அரசு உயர்நிலை பள்ளி: முந்தைய அது ஸ்ரீ லக்ஷ்மி விலாசம் சம்ச்க்ரிதா பாடாசாலா என்று அழைக்கப்பட்டிருந்தது. இது இந்த கிராமத்திலேயே ஒரு பழைய கல்வி நிறுவனம் ஆகும்.

வங்கிகள்

தொகு
  • திருவாங்கூர் ஸ்டேட் வங்கி (விவசாயம்) முட்டம் - துடங்கநாடு
  • பெடரல் வங்கி, முட்டம்.
  • தொடுபுழா நகர வங்கி, முட்டம்.
  • முட்டம் சேவை கூட்டுறவு வங்கி, முட்டம்
  • இடுக்கி மாவட்ட கூட்டுறவு வங்கி, முட்டம்
  • துடங்கநாடு சேவை கூட்டுறவு வங்கி, துடங்கநாடு
  • தென் மலபார் கிராமின் வங்கி, முட்டம்.

மேற்கோள்கள்

தொகு