லிபரான் மக்களவைத் தொகுதி
லிபரான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Libaran; ஆங்கிலம்: Libaran Federal Constituency; சீனம்: 利巴兰联邦选区) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு; சண்டக்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P184) ஆகும்.[5]
லிபரான் (P184) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Libaran (P184) Federal Constituency in Sabah | |
லிபரான் மக்களவைத் தொகுதி (P184 Libaran) | |
மாவட்டம் | சண்டக்கான் மாவட்டம் சண்டக்கான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 72,332 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | லிபரான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சண்டக்கான்; தெலுபிட் சுங்கை மணிலா |
பரப்பளவு | 930 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சுகைமி நாசர் (Suhaimi Nasir) |
மக்கள் தொகை | 171,452 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
லிபரான் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து லிபரான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சண்டக்கான் மாவட்டம்
தொகுசண்டக்கான் மாவட்டம் என்பது சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் சண்டக்கான் நகரம். மலேசியா-பிலிப்பீன்சு எல்லை (Malaysia–Philippines Border), இந்த மாவட்டத்தின் கிழக்கே 28 கி.மீ. தொலைவில்; மிக அருகில் உள்ளது.
சபா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையில் சுலு கடல் உள்ளது. அதை எதிர்நோக்கியவாறு அமைந்துள்ள இந்த மாவட்டம், இதர மாவட்டங்களான பெலுரான் மாவட்டம், கினபாத்தாங்கான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.[7]
சண்டக்கான் நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிற்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய நகரமாக விளங்குகிறது. வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோவின் (British North Borneo) தலைநகராகவும் இருந்தது. [8]
லிபரான் மக்களவைத் தொகுதி
தொகுலிபரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லிபரான் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P160 | 1995-1999 | அக்பர் கான் அப்துல் ரகுமான் (Akbarkhan Abdul Rahman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999-2004 | ஜுசுலி அசிரோல் (Juslie Ajirol) | ||
11-ஆவது மக்களவை | P184 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | சக்காரியா இட்ரிசு (Zakaria Edris) | ||
2018-2019 | சுயேச்சை | |||
2019-2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020-2022 | சபா மக்கள் கூட்டணி (GRS) (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சுகைமி நாசர் (Suhaimi Nasir) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சுகைமி நாசர் (Suhaimi Nasir) | பாரிசான் நேசனல் (BN) | 22,969 | 51.58 | 2.33 | |
பீட்டர் நயிந்தின் (Peter Jr Naintin) | பாக்காத்தான் (PH) | 10,351 | 23.24 | 23.24 | |
பொக்ரத்தா அசன் (Sh Bokrata Sh Hassan) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 9,185 | 20.63 | 26.74 ▼ | |
ஜெப்ரி அமாட் புடான் (Jefri @ Amat Pudan) | தாயக இயக்கம் (GTA) | 826 | 1.85 | 1.865 | |
அட்னான் தும்போங் (Adnan Tumpong) | சுயேச்சை (Independent) | 659 | 1.48 | 1.48 | |
நோர்டி கானி (Nordi Khani) | சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி (PPRS) | 541 | 1.21 | 1.21 | |
மொத்தம் | 44,531 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 44,531 | 97.59 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,101 | 2.41 | |||
மொத்த வாக்குகள் | 45,632 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 72,332 | 61.56 | 16.18 ▼ | ||
Majority | 12,618 | 28.34 | 26.46 | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகஸ்ட் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Sandakan to Kota Kinabalu Distance". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
- ↑ "Sandakan, city in Malaysia - Sandakan remains Sabah's second most important port, after Kota Kinabalu (KK)". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
- ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.