ழுஹர் தொழுகை

இசுலாமியர்கள் பகலில் தொழும் இரண்டாவது தொழுகை


ழுஹர் தொழுகை (அரபு மொழி: صلاة الظهر‎, ṣalāt aẓ-ẓuhr) நண்பகலுக்கு பின்னரான தொழுகையாகும் (அஸ்ர் அதான் சொல்ல முன்னர்) ழுஹர் தொழுகை முஸ்லிம்களது நாளாந்த ஐவேளை தொழுகைகளில் ஒரு நேர தொழுகையாகும். ஐவேளை தொழுகையானது இஸ்லாமிய மார்க்க கடமைகள் ஐந்தில் இரண்டாவதாகும்.[1] இது நான்கு ரக்அத்துக்களைக் கொண்டது.[2] எனினும், பிரயாணங்களின் போது விதிமுறைகளுக்கு இரண்டு ரக்அத்தாக சுருக்கி அஸ்ர் தொழுகையுடன் சேர்த்துத் தொழ முடியும்.

வயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் முக்கிய நோக்கம் இறைவனை நினைவு கூறுவதாகும்

வெள்ளிக் கிழமையன்று ழுஹர் தொழுகைக்கு பதிலாக ஜும்ஆ தொழுகை தொழப்படும்.[2][3]

தொழுகையில் பஜ்ர் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், ழுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும். ஐவேளை தொழுகைக்கான அழைப்பான அதான்(தொழுகைக்கான அழைப்பு) பள்ளிவாசலால்நியமக்கப்பட்டிருக்கும் முஅத்தின் என்பவரால் சொல்லப்படும். அதற்காக பள்ளிவாயில்களில் மினாராக்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள் மீது பொருத்தப்படுகின்றன. இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன.

பெயர் வேறுபாடுகள்

தொகு
Region/country Language Main
Arab World Arabic صلاة الظهر

(Ṣalāh aẓ-ẓuhr)
Iran, Afghanistan Persian نماز ظهر

(namâz-e zohr)
Pakistan, North India Urdu نماز ظہر

(namaaz e zuhr)
Turkey Turkish Öğle namazı
Kazakhstan Kazakh Бесін намазы

(Besin namazy)
Azerbaijan Azeri Zöhr namazı
Albania Albanian Namaz i mesditës
Balkans Serbo-Croatian, Bosnian Podne-namaz
Bangladesh, East India Bengali যুহর, যোহর (Juhor, Johor)
Greater Somalia (Somalia, Djibouti, Somali Region) Somali Salaada Duhur
Malaysia, Singapore, Brunei, Indonesia (nationwide) Bahasa Indonesia, Bahasa Melayu Salat zuhur, Solat zuhur
Indonesia (West Java, Banten) Basa Sunda Lohor
Uzbekistan Uzbek Peshin namozi
Iraqi Kurdistan Sorani نوێژی نیوەڕۆ

ழுஹர் தொழுகை நேரம்

தொகு
  • நேரம் துவங்குவது: சூரிய உதயத்திற்கும் சூரியன் மறைவுக்கும் இடையில் சரியாக வானில் உயர்ந்த இடத்தை (உண்மையான நண்பகல்) சூரியன் கடந்துவிட்டால் போது இது நிகழ்கிறது.[4]
  • நேரம் முடிவடைதல்: தினசரி அஸர் தொழுகையின் நேரம் (பிற்பகல் தொழுகை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Significance of Offering The Isha Prayer and Its Benefits". www.quranreading.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  2. 2.0 2.1 "Salat al-Duhr - Oxford Islamic Studies Online". www.oxfordislamicstudies.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  3. "salat | Definition & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
  4. ழுஹர் Conducting Zohr Prayers , qul.org வலைத்தளம், 2/3/2019 இல் பெறப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழுஹர்_தொழுகை&oldid=3647467" இலிருந்து மீள்விக்கப்பட்டது