வகுத்தற்குறி
வகுத்தற்குறி அல்லது அரண (ஆங்கிலம்: Obelus) என்பது குறுகிய கிடைக் கோடு ஒன்றையும் அதன் மேலும் கீழும் ஒவ்வொரு புள்ளியையும் கொண்ட குறியீடு ஆகும். இக்குறியீடு முக்கியமாகக் கணிதத்தில் வகுத்தற் செயற்பாட்டைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.[1] ஆகவே, இது வகுத்தல் குறி எனப்படுகிறது.
வரலாறு தொகு
வகுத்தல் குறியானது முதன்முதலாக 1659இல் ஜோகன் ரான் என்பவரால் எழுதப்பட்ட நூலில் வகுத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டது.[2]
பயன்பாடுகள் தொகு
வகுத்தல் குறியானது பிரதானமாக வகுத்தலுக்கான குறியீடாகவே பயன்படுத்தப்படுகின்றது. இக்குறியீடே கணிப்பான்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் வகுத்தற் செயற்பாடு பின்னமாகவும் காட்டப்படுவதுண்டு. அவ்வாறு காட்டும்போது சாய்கோடே பயன்படுத்தப்படுகின்றது.
மைக்ரோசாப்ட் விண்டோசில் மாற்று விசை+0247 என்பதன் மூலம் வகுத்தல் குறி பெறப்படும்.[3]
ஒருங்குறியில் U+00F7 என்பதன் மூலம் வகுத்தல் குறியைப் பெறலாம்.[4]
லாடெக்சில் \div என்பதன் மூலம் வகுத்தல் குறியைப் பெறலாம்.[5]
மேற்கோள்கள் தொகு
- ↑ வகுத்தல் குறி (ஆங்கில மொழியில்)
- ↑ அரண (ஆங்கில மொழியில்)
- ↑ மாற்றுக் குறிமுறைகள்-கணிதம்/கணிதவியலுக்கான மாற்றுக் குறிமுறைகள் (ஆங்கில மொழியில்)
- ↑ ஒருங்குறி வரியுரு 'வகுத்தல் குறி (U+00F7)' (ஆங்கில மொழியில்)
- ↑ ["லாடெக்சில் கணித நிலையில் கிடைக்கக்கூடிய குறியீடுகள் (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2011-01-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110111180956/http://www.mpifr-bonn.mpg.de/div/konti/bookmarks/latex.html. லாடெக்சில் கணித நிலையில் கிடைக்கக்கூடிய குறியீடுகள் (ஆங்கில மொழியில்)]