வடக்கு பாக்கித்தான்

பாக்கித்தானின் நிலவியல்

வடக்கு பாகிஸ்தான் ( Northern Pakistan ) என்பது பாக்கித்தானின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஒரு சுற்றுலாப் பகுதியாகும். இது கில்கிட்-பால்டிஸ்தான் (முன்னர் வடக்கு நிலங்கள் என அறியப்பட்டது), ஆசாத் காஷ்மீர், கைபர் பக்துன்வா மாகாணம், இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் மற்றும் பஞ்சாப்பில் ராவல்பிண்டி பிரிவின் நிர்வாக அலகுகளை உள்ளடக்கியது.[1][2] முதல் இரண்டு பிரதேசங்கள் பரந்த காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.[b] இது இமயமலை, காரகோரம் மற்றும் இந்து குஃசு மலைத்தொடர்களை ஒட்டிய ஒரு மலைப் பிரதேசமாகும். இதில் உலகின் மிக உயர்ந்த சிகரங்கள் மற்றும் துருவப் பகுதிகளுக்கு வெளியே அமைந்துள்ள மிக நீளமான பனிப்பாறைகளும் சில உள்ளன.[3] பாக்கித்தானின் சுற்றுலாத் துறையின் பல இடங்களை வடக்கு பாக்கித்தான் கொண்டுள்ளது.[4]

வடக்கு பாக்கித்தான்
شمالی پاکستان
சங்க்ரிலா ஏரி
தேவ்சாய் சமவெளி
சித்த கதா ஏரி
பைபோ பனிச் சிகரம் (67 கி.மீ தூரம்)
ஜிக்கா காலி
நாடு பாக்கித்தான்
நிர்வாக அலகுகள் ஆசாத் சம்மு மற்றும் காசுமீர்
[[File:|23x15px|border |alt=|link=]] வடக்கு நிலங்கள்
 இசுலாமாபாத்
 கைபர் பக்துன்வா மாகாணம்
 பஞ்சாப் (ராவல்பிண்டி பிரிவு]])
பெரிய நகரம்இராவல்பிண்டி
பரப்பளவு
 • மொத்தம்210,954 km2 (81,450 sq mi)
 [a]
நேர வலயம்ஒசநே+05:00 (பாக்கித்தானின் சீர்நேரம்)

நிலவியல்

தொகு

வடக்கு பாக்கித்தானின் புவியியல் மலைப்பாங்கானது. மேலும், ஒவ்வொரு பகுதியிலும் நிலப்பரப்பு வேறுபட்டு காணப்படுகிறது.[5][6] கில்கிட் பால்டிஸ்தானில் உள்ள காரகோரம் மலைத்தொடர், இலடாக்கு மற்றும் சிஞ்சியாங் பகுதிகளில் பாக்கித்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான எல்லையை உள்ளடக்கியது.[3] பாக்கித்தானிலுள்ள இமயமலைத் தொடர் காஷ்மீர், ககன், கோஹிஸ்தான், தியோசாய் மற்றும் சிலாஸ் பகுதிகளில் பரவியுள்ளது. [3] இந்து குஷ் பாமிர் மலைகளின் தென்மேற்கே உயர்ந்து சுவாத் மற்றும் கோஹிஸ்தான் பகுதிகளுக்கு விரிவடைகிறது. கிழக்கில் காரகோரத்திலிருந்து சிந்து ஆற்றால் பிரிக்கப்படுகிறது. [3]

குளிர்காலத்தில் பனி அடிக்கடி விழுகிறது மற்றும் நாரன் போன்ற பல நகரங்கள் பனியால் முழுவதும் மூடப்பட்டிருக்கும்.[7]

காலநிலை

தொகு

வடக்கு பாக்கித்தானின் தட்பவெப்பநிலை நாட்டின் மற்ற பகுதிகளை விட மிகவும் குளிராக உள்ளது. மேலும் இது பல பனிப்பாறைகள் மற்றும் பனி மூடிய மலைகளைக் கொண்டுள்ளது. இது "பூமியின் 3 வது துருவம்" என்ற புனைப்பெயரையும் பெற்றுள்ளது.[8] குளிர்காலம் (நவம்பர்-மார்ச்) மிகவும் குளிர்ச்சியாகவும், வறண்டதாகவும் இருக்கும். அதே சமயம் கோடைக்காலம் (ஏப்ரல்-ஜூன்) சூடாகவும், அதிக மழையாகவும் இருக்கும். ஆண்டின் பிற மாதங்கள் வெப்பமாகவும் வெயிலாகவும் இருக்கும்.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு

கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட் பால்டிஸ்தான் பகுதிகள் மத்திய ஆசியா மற்றும் இமயமலையின் மலைகள் என இரண்டு பல்லுயிர் பெருக்கத்தின் பகுதிகளை உள்ளடக்கியது.[9] வடக்கு மலைப் பகுதிகள் மற்றும் போத்தோகர் பீடபூமியில் காணப்படும் சில வனவிலங்கு இனங்கள் ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை, இமயமலை ஆடு, மார்கோ போலோ செம்மறி, மர்மோட் ( தியோசாய் தேசிய பூங்காவில் ) மற்றும் மஞ்சள் தொண்டை மார்டன் மற்றும் பறவை இனங்கள் சுகர் பார்ட்ரிட்ஜ், ஐரோவாசியக் கழுகு ஆந்தை ஆகியவை அடங்கும். இமயமலை மோனல் மற்றும் இமயமலை ஸ்னோகாக் மற்றும் இமயமலை தேரை மற்றும் முரி மலை தவளை போன்றவையும் இங்கு காணப்படுகின்றன. அச்சுறுத்தும் இனங்களில் பனிச்சிறுத்தை, இமயமலை பழுப்புக் கரடி, இந்திய ஓநாய், செம்முகக் குரங்கு, மார்க்கோர் காட்டு ஆடு, சைபீரியன் ஐபெக்ஸ் மற்றும் வெள்ளை-வயிற்று கஸ்தூரி மான் ஆகியவை அடங்கும்.[10]

அமைவிடம்

தொகு

வடக்கு பாக்கித்தானின் மேற்குப் பகுதியில் சித்ரால், தீர், சுவாத், சாங்லா, கோலாய்-பாலாஸ், பட்டாகிராம், கோஹிஸ்தான் மற்றும் மன்சேரா ஆகியவை எல்லைகளாக உள்ளன. [11] சித்ரால், கலாசா பள்ளத்தாக்குகள், பஹ்ரைன் மற்றும் கலாம் பள்ளத்தாக்கு போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களும் இதில் அடங்கும். [12] [13]

காரகோரம் நெடுஞ்சாலையில் புகழ்பெற்ற ககன் பள்ளத்தாக்கு, பாபுசர் கணவாய், தேவதை புல்வெளிகள் , ராகபோசி, நங்க பர்வதம், அட்டாபாத் ஏரி மற்றும் லுலுசார் உள்ளிட்ட சுற்றுலாவின் முக்கிய இடங்கள் உள்ளன. [14] மன்செரா, பாலாகோட், கிவாய், நரான், ககன், படகுண்டி, ஜல்கட், தட்டா பானி, சிலாஸ், கில்கித், கரிமாபாத் மற்றும் பாஸ்சு போன்ற முக்கிய நகரங்களும் இதில் அடங்கும். [15] [16]

போத்தோகர் பீடபூமியின் கிழக்கே ஆசாத் காஷ்மீர் அமைந்துள்ளது. ஆசாத் காஷ்மீரின் முக்கிய நகரங்களில் முசாஃபராபாத், மிர்பூர், ராவலாகோட் மற்றும் சாரதா ஆகியவை அடங்கும். பன்ஜோசா ஏரி பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும்.

குறிப்புகள்

தொகு
  1. வடக்கு நிலங்கள், ஆசாத் காஷ்மீர், ராவல்பிண்டி பிரதேசம், இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணம் போன்ற பிராந்தியங்களின் மொத்த பரப்பளவு.
  2. காசுமீர் பிராந்தியத்தில் இலடாக்கு மற்றும் சம்மு காசுமீர் ஆகியவை உள்ளன, அவை நடந்து வரும் காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாக்கித்தானால் உரிமை கோரப்படுகின்றன. இந்த பகுதிகள் "உண்மையாக" இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன

மேற்கோள்கள்

தொகு
  1. Öztürk, Münir; Hakeem, Khalid Rehman; Faridah-Hanum, I.; Efe, Recep (2015-05-05). Climate Change Impacts on High-Altitude Ecosystems (in ஆங்கிலம்). Springer. p. 455. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-12859-7. The northern Pakistan covers Gilgit-Baltistan, Azad Jammu and Kashmir, the upper region of Khyber Pakhtunkhwa, including Chitral, and some parts of the central and northern regions of Pakistan.
  2. "Islamabad history". Pakistan.net. Archived from the original on 30 June 2008. Islamabad is the capital of Pakistan, and is located in the Potohar Plateau in the north of the country...
  3. 3.0 3.1 3.2 3.3 Öztürk, Münir; Hakeem, Khalid Rehman; Faridah-Hanum, I.; Efe, Recep (2015-05-05). Climate Change Impacts on High-Altitude Ecosystems (in ஆங்கிலம்). Springer. pp. 455–456. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-12859-7.
  4. "Explore Pakistan's wildest, most beautiful landscapes". National Geographic Society. 16 August 2022. Archived from the original on 25 February 2021.
  5. "Swat Valley, Mini Switzerland of Pakistan, Pakistan: Better Tips for Better Trips". 16 February 2017.
  6. "Northern Areas of Pakistan". 2 April 2019.
  7. "'Steps being taken to promote winter tourism'". 14 December 2021.
  8. "SERVIR Hindu Kush Himalaya - NASA" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  9. "Biodiversity Hot spots of Pakistan and the world - SU LMS". பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Anwar, M.B.; Jackson, R.; Nadeem, M.S.; Janečka, J.E.; Hussain, S.; Beg, M.A.; Muhammad, G.; Qayyum, M. (2011). "Food habits of the snow leopard and common leopard Panthera uncia (Schreber, 1775) in Baltistan, Northern Pakistan". European Journal of Wildlife Research 57 (5): 1077–1083. doi:10.1007/s10344-011-0521-2. 
  11. "List of Famous Northern Areas of Pakistan". 9 June 2022.
  12. "MyTrip - Swat and Chitral".
  13. "THE 10 BEST Parks & Nature Attractions in Chitral".
  14. "How to Travel the Karakoram Highway (Backpacker's Guide)". 7 April 2020.
  15. "Major cities, towns, valleys and villages along the Karakorum Highway".
  16. "سی پیک سیاحت: شاہراہِ قراقرم پر پہلا قدم (پہلی قسط)". 20 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_பாக்கித்தான்&oldid=4108621" இலிருந்து மீள்விக்கப்பட்டது