வலைவாசல்:பங்களிப்பாளர்கள்

விக்கிப்பீடியர் அறிமுகம்

செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.

மேலும் சில விக்கிப்பீடியர்கள்...

உங்களுக்குத் தெரியுமா?

செய்திகளில்

தேனி. மு. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் கணினியியல் துறையிலான வகைப்பாட்டில் சிறந்த நூலாகப் பரிசு பெற்றது.

புதிய விக்கிப்பீடியர்கள்

ஒளிரும் விக்கிப்பீடியர்கள்

மலரும் நினைவுகள்...

திருச்சி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்பெப்ரவரி 19-20, 2011ல் விக்கிப்பட்டறையும் சிறுகடையும் வைத்து பரப்புரை. நிகழ்வுக்கு வந்திருந்த இளம் ஆங்கில விக்கிப்பீடியர் ராச்சேசுடன் தமிழ் விக்கிப்பீடியர்கள் சோடாபாட்டிலும் சிரீக்காந்தும்.

சிறப்பு நேர்காணல்

பூங்கோதை, கோயம்புத்தூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் இவர், 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த உரை திருத்துனரான இவர் புதுப்பயனர்களுக்கு உதவுவது, அனைத்து கட்டுரைகளையும் மேம்படுத்துவது முதலிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 2012 தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியை முன்னிட்டு தமிழ் விக்சனரியில் 6000க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுக் கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். 2012 விக்கிமேனியா நிகழ்வில் பங்கேற்றுள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான உலகளாவிய விக்கிமீடியா நிதி சேகரிப்பில் இவரது வேண்டுகோள் சிறப்பான இடம்பெற்றது. இருபடிச் சமன்பாடு, பரவளைவு, சார்பு, நீள்வட்டம், அதிபரவளைவு முதலியன இவர் பெரிதும் பங்களித்த கட்டுரைகளில் சில.