மன்னார் தள்ளாடி படைத்தளம் மீதும் கொழும்பு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர். (ஏஎஃப்பி)
கிளிநொச்சி, பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டு, 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
அக்டோபர் 27: அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரை விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)
ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் படையினர் செப்டம்பர் 2008 வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டு 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்ததாக இலங்கைப் படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. (புதினம்)
கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பாடசாலை ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
அக்டோபர் 19: அம்பாந்தோட்டை, கதிர்காமம் பகுதியில் படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாதோரினால் தாக்கியழிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். (சண்டே டைம்ஸ்)
அக்டோபர் 3: இலங்கை வானூர்திகள் கிளிநொச்சி நகரில் நடத்திய குண்டுத்தாக்குதலில் தழிழீழ காவல்துறை நடுவப்பணியகம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை, கணேசபுரத்தில் உள்ள யுனிசெஃப் அலுவலகம், அதன் அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் என்பன அழிக்கப்பட்டன. (புதினம்), (புதினம்)
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை செயலகம், சமாதான செயலகம் என்பன இலங்கை வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டன. (புதினம்)
கிளிநொச்சியில் இயங்கி வந்த உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது இலங்கை வான்படை குண்டுவீசி அழித்தது. (புதினம்)
கிளிநொச்சி நகரில் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். (புதினம்)