விகார்-உல்-உம்ரா

இந்திய அரசியல்வாதி

சர் விகார் உல்-உமாரா (Viqar ul-Umara) பாய்கா அமீர் எச். இ . நவாப் சர் விகர்-உல்-உம்ரா பகதுார் (சிக்கந்தர் ஜங், இக்பால்-உத்-தெளலா மற்றும் இக்தாதர் -உல்-முல்க், நவாப்  முகமது  பசாலுதீன்  கான்) (பிறப்பு: 1856 ஆகத்து 13 - இறப்பு 1902 பிப்ரவரி 15) ஐதராபாத் இராச்சியத்தின் முதன்மை அமைச்சராக 1893 முதல் 1901 வரை பணியாற்றினார். மேலும் அமீர் இ பைகாவாகவும் 1881 முதல் 1902 வரை பணியாற்றினார்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள விகராபாத் நகரம் மற்றும் செகுந்தர் குடா கிராமத்திர்கு இவரது பெயரிடப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் வம்சாவளிதொகு

விகார்-உல்-உம்ரா 1856 ஆகஸ்ட் 13 ஆம் தேதி முகம்மது பசுலுதீன் கானாக ரசிதுதீன் கான் மற்றும் அசுமதுன்னிசா பேகம் ஆகியோருக்குப் பிறந்தார். [1] விகர்-உல்-உம்ராவின் தாய்வழி பாட்டி ஐதராபாத்தைச் சேர்ந்த எச்.எச். நிசாம் அலிகான் நிசாம் மற்றும் பெராரின் மகள் பசிருன்னிசா பேகம் ஆவார். [2]

விகார்-உல்-உம்ரா பைகா குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த குடும்பம் ஐதராபாத்தின் நிசாமிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது. குடும்ப உறுப்பினர்கள் நிசாமின் தீவிர விசுவாசிகளாக இருந்தனர். [3] குடும்பம் ராசிதீன் கலீபாக்களிடமிருந்து வந்தது. குடும்பத்தின் மூதாதையர்களில் ஒருவர் சூபி துறவியான பரித்துதீன் கஞ்ச்சகர் என்பவராவார். மற்றொரு மூதாதையர் முகம்மது அபுல் கைர் கான் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சியின் நிர்வாக அமைப்பினுள் இருந்த இராணுவ பிரிவின் தலைவராவார். [4]

பிரதமராக பதவிக்காலம்தொகு

 
ஒரு சிறிய மோட்டார் வாகனத்தில் விகார் உல்-உமாரா (1900)
 
ஐதராபாத்தில் சர் விகார் உல் உம்ராவின் கல்லறை

இவர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித்துறையில் மதிப்புமிக்க பங்களிப்புகளை செய்துள்ளார். கல்வித் துறை, பொறியியல் பள்ளி, சட்ட வகுப்புகள், சட்டசபை மற்றும் அசாஃபியா நூலகம் ஆகியவை இவரது காலத்தில் கீழ் திறக்கப்பட்டன. [5]

இவர் ஒரு உன்னத குடும்பமான பைகாக்களின் ஐந்தாவது அமீர் ஆவார். மேலும் மூன்றாம் ஆசாஃப் ஜாவின் தாய்வழி பேரன் ஆவார். சர் முகம்மது பசுல் உத்-தின் தனது அரண்மனையாக பாணுமா அரண்மனை போன்ற அற்புதமான அரண்மனையை கட்டினார். இதை கட்ட 9 ஆண்டுகள் ஆனது. மேலும், 1893இல் நிறைவடைந்தது.

இவர் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியில் அற்புதமான பைகா அரண்மனையை கட்டினார். பாலாக்ணுமா அரண்மனையை மகபூப் அலி கான், ஆறாம் ஆசாஃப் ஜா என்பவருக்கு வழங்கிய பின்னர், இவர் உசேன் சாகர் ஏரிக்கு அருகில் விகார் மன்சில் என்ற அரண்மனையைக் கட்டி தனது வாழ்க்கையை கழித்தார்.

கட்டிடக்கலைதொகு

விகார்-உல்-உம்ரா 1887இல் ஐதராபாத்தின் பேகம்பேட்டையில் இசுபானிய மசூதியை (அசல் பெயர்: ஜமா மஸ்ஜித் ஐவான்-இ-பேகம்பேட்டை) நிறுவினார். இசுபெயினுக்கு தனது ஒரு பயணத்தின் போது இசுபானிஷ் கட்டிடக்கலை மூலம் ஈர்க்கப்பட்ட பின்னர் அதன் கட்டுமானத்தைத் தொடங்கினார். இது மூரிஷ் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. வனப்பெழுத்து, குதிரைவாலி வளைவுகள் மற்றும் ரோமானிய கட்டிடக்கலைகளின் தாக்கங்களைக் கொண்டுள்ளது. [6] [7] [8]

விகார்-உல்-உம்ரா 1893இல் பாலாக்ணுமா அரண்மனையை கட்டினார். பின்னர் நிஜாம் மஹ்புப் அலிகான் இந்த அரண்மனையை வாங்கினார். இந்த அரண்மனை இத்தாலிய மற்றும் டியூடர் கட்டிடக்கலைகளின் கலவையுடன் கட்டப்பட்டது. மேலும் இதன் உச்சவரம்பு சிதை ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சாப்பாட்டு அறையைக் கொண்டுள்ளது. இதில் ரோஸ்வுட்டால் செய்யப்பட்ட நாற்காலிகள் உள்ளன. தற்போது, இது தாஜ் விடுதிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் தங்கிய குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் உருசியாவின் இரண்டாம் நிக்கோலஸ், அக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் , ராணி மேரி, நரேந்திர மோடி மற்றும் இவாங்கா டிரம்ப் ஆகியோர் அடங்குவர். [9] [10]

நிசாம் பாலாக்ணுமா அரண்மனையை வாங்கிய பிறகு, விகார்-உல்-உம்ரா பைகா அரண்மனையை (முதலில் ஐவான்-இ-விகார் என்று அழைக்கப்பட்டது) தனக்காகக் கட்டினார். அதில் உள்ள ஜெனானா மகால் நியோ கோதிக், இந்தோ-சரசானிக் மற்றும் முகலாய கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையுடன் கட்டப்பட்டது. அரண்மனையின் ஒரு பகுதி அமெரிக்க துணைத் தூதரகத்தை கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதி இவரது சந்ததியினரால் வசிக்கப்படுகிறது. [11] 1900 ஆம் ஆண்டில், ஹைதராபாத் மாநிலத்தில் ஏராளமான நினைவுச்சின்னங்கள், பொது கட்டிடங்கள், அணைகள், நீர் தேக்கங்கள், செயற்கை ஏரிகள் மற்றும் சுமார் 21 அரண்மனைகள் மற்றும் மாளிகைகளை இவர் கட்டினார். [12]

விகார்-உல்-உம்ரா, இந்தியாவின் இன்றைய தெலங்காணா மாநிலத்தில் விகராபாத் நகரத்தை நிறுவினார். இந்த ஊருக்கு இவரது பெயரிடப்பட்டது. அனந்தகிரி மலைகளின் சிறு மலைப்பகுதியைக் கொண்ட இந்த அழகான நகரத்தில், இவர் நவாப் சுல்தான்-உல்-முல்க் என்ற தனது மகனுக்காக, தபால் அலுவலகம், காவல் நிலையம், மருத்துவமனை, சுகாதார மையம், விகராபாத் கடைவீதி, கோட்பள்ளி அணை, விகராபாத் ஏரி மற்றும் 1882 இல் இலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட வேட்டை விடுதிகள் போன்றவற்றை எழுப்பினார் . [13]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

1873இல், விகார்-உல்-உம்ரா ஜகந்தெருன்னிசா பேகம் என்பவரை மணந்தார்.[14] இவர்களது மகன் முக்தாருதீன் கான் 1875 நவம்பர் 3, அன்று பிறந்தார். பின்னர் வர் அமீர்-இ-பைகா-விகார்-உல்-உம்ரா (விகார்-உல்-உம்ரா கிளையின் அமீர்-இ-பைகா) ஆனார். [1] இவர்களுக்கு லியாகாதுன்னிசா பேகம் என்ற ஒரு மகள் இருந்தாள் .

1878 ஆம் ஆண்டில், விகார்-உல்-உம்ரா நவாப் ஹம்ஸா அலிகான் பகதூரின் மகள் முனிருன்னிசா பேகத்தை மணந்தார். இவர்களது மகன் வாலியுதீன் கான் 1880 மார்ச் 13 அன்று பிறந்தார். பின்னர் ஐதராபாத் முதல் அமைச்சராக பணியாற்றினார். இவர்களுக்கு தகாரக்னிசா பேகம் என்ற ஒரு மகள் இருந்தாள் . [1]

விகார்-உல்-உம்ராவின் முந்தைய திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும், இவர் ஐதராபாத் மருத்துவர் குல்பாய் விக்காஜி என்ற மருத்துவர் மீது மீது காதல் கொண்டிருந்தார். இவர்கள் முதலில் மும்பையில் சந்தித்தனர். [14] 1900இல், இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். விசுவாசத்தினால் மருத்துவர் ஒரு சொராட்டிரியராக இருந்ததால் ( பார்சி என்று பேச்சுவழக்கில் அறியப்பட்டார்). விகாரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இசுலாத்திற்கு மாறினார். மேலும் நூர் ஜஹான் பேகம் என்ற பெயரும் வழங்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, மருத்துவர் தனது மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, விகார் அரண்மனையில் பர்தாவில் வசித்து வந்தார். [14]

1902 பிப்ரவரி 15 அன்று யல்கடாப் - கானாபூர் ( தெலங்காணாவின் நிசாமாபாத் மாவட்டத்தில் ) என்ற இடத்தில் வேட்டையாடுகையில் விகார் -உல்-உம்ரா இறந்தார். அவர் பைகா கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டார். [1]

போலோதொகு

விகார்-உல்-உம்ரா போலோவின் தீவிர வீரர். ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் போது விளையாட்டைக் கற்றுக்கொண்ட இவர் பின்னர் அதை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார். இவர் மாநிலத்தின் பிரபுக்களிடையே விளையாட்டை பிரபலப்படுத்தினார். இவர் மாநிலத்தில் போலோ மைதானத்தையும் கட்டினார் . மேலும் அரச குடும்பங்களுக்கிடையே போலோ போட்டிகளையும் ஏற்பாடு செய்தார். [15]

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விகார்-உல்-உம்ரா&oldid=2948660" இருந்து மீள்விக்கப்பட்டது