விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு12
monobook
தொகுhttp://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:NewPages&limit=500&offset=0 பக்கத்தில் நிர்வாகிகள் அல்லா பயனர்கள் உருவாக்கிய கட்டுரைகள் மஞ்சள் பின்னணியில் தெரிவது வசதியாக இருக்கிறது. அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் இது போல் வருமாறு யாராவது monobook கோப்பில் மாற்றித் தந்தால் அண்மைய மாற்றங்களை இன்னும் இலகுவாகக் கண்காணிக்கலாம்--ரவி 01:58, 12 ஏப்ரல் 2008 (UTC)
விக்சனரிக்கு துப்புரவாளர் தேவை
தொகுஒரு இலட்சம் சொற்சேர்ப்புக்குப் பிறகு விக்சனரியில் வாசகர் வரத்தும். பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஆனால், பல பக்கங்களில் பிழைகள் மிகுந்த காணப்படுகின்றன. புதிய பங்களிப்பாளர்களை வழிப்படுத்தவும் அனுபவமுள்ள விக்கியர்கள் தேவை. எனவே, விக்சனரி துப்புரவுப் பணியாளர் தேவையை நிறைவு செய்ய அலைகடலென திரண்டு ஒருத்தர் ரெண்டு பேராச்சும் வாரீர் என்று கேட்டுக் கொள்கிறேன் :) --ரவி 18:39, 16 ஏப்ரல் 2008 (UTC)
பதிவேற்றத்தை மாற்றியமைத்தல் வாக்கெடுப்பு
தொகுவிக்கிபீடியாவில் படிமங்களைப் பதிவேற்றுவதை எதிர்காலத்தில் Wikipedia:பதிவேற்றம் என்ற பக்கத்தூடாக செய்யலாம் என பரிந்துரைக்கிறேன். இம்முறை மலையாள, ஆங்கில விக்கிகளிலும் (எனக்கு தெரிந்த வரை) பொதுக்கோப்பகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பக்கத்தின் அமைப்பு வேலைகள் இன்னமும் முடிவடையவில்லை. இதன் போது Local.php யில் மாற்றமொன்று செய்யவேண்டும். இது தொடர்பான பொதுக்கோப்பகத்திலிருந்தான அறிவுரை //Some wikis report that the MediaWiki:licenses message (the list of the licenses in the drop-down box) fails to work properly and always just shows the default. This is bugzilla:11695. To make this work on your wiki, you will need to set this in LocalSettings.php:
அடுத்த முதற்பக்க இன்றைப்படுத்தல் - ஏப்ரல் 20, 2008 அன்று
தொகு- தற்போதைய தெரிவுகள்: Wikipedia:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 20, 2008
- வேறு பரிந்துரைகள், அல்லது விமர்சனங்கள் இருந்தால் தெரிவுக்கவும்.
- மேலும் அக்கட்டுரைகளை மேம்படுத்த முடியுமானாலும் நன்று.
- இது நல்ல முறை. இப்படி முன்கூட்டியே அறிவித்தால், அக்கட்டுரைகளை ஓரளவிற்காவது மேம்படுத்த இயலும். காலத்தை இன்னும் சற்று நீட்டித்தர வேண்டுகிறேன். குரைந்தது ஒரு கிழமையாவது (7 நாட்கள்) இருப்பது நல்லது. --செல்வா 21:53, 18 ஏப்ரல் 2008 (UTC)
நம் தளத்திற்கு வரும் வாசகர்கள்
தொகு- முதற்பக்கம் - 31,127 முறை சென்ற மார்ச்சுத் திங்களில் மட்டும் பார்க்கப்பட்டுள்ளது!
- மௌ டம் - 40 முறை + 7 முறை மௌடம் என்ற வழிமாற்றும் பார்க்கப்பட்டுள்ளது
- பொனொபோ - மார்ச்சு 15 முதல் 24 வரை காட்சிப்படுத்தப்பட்ட பொனொபோ 295 முறைகள் பார்க்கப்பட்டிருக்கிறது. முதல் நாள் 110 முறை பார்க்கப்பட்டு படிப்படியாய் குறைந்துள்ளது. அடிக்கடி தரமான கட்டுரைகளை முதல் பக்கத்தில் தர வேண்டும். ஏற்கெனவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.
- சுடோக்கு - 216 முறை, இது முதல் பக்கத்திற்கு வரும் முன்னரே சில முறை பார்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ரவி முதலானோர் வலைப்பதிவில் இணைப்பு பெறும் கட்டுரைகளுக்கான வரத்து என்ன என்பதை அறிய வேண்டும்.
-- சுந்தர் \பேச்சு 09:53, 19 ஏப்ரல் 2008 (UTC)
- காம சூத்திரம் - 1148 :-))) 121.247.81.24 10:00, 19 ஏப்ரல் 2008 (UTC)
- சே, என்னால் 400 வாசகர்களைத்தான் ஈர்க்க முடிந்தது ;) -- சுந்தர் \பேச்சு 10:05, 19 ஏப்ரல் 2008 (UTC)
ஃவுளூரின் - 120 முதல் பக்கத்தில் இணைப்பு பெற்ற அறிவியல் பகுப்பில் இரண்டாவதாக உள்ள கட்டுரை. ம் ... படிக்க மக்கள் காத்திருக்கிறார்கள். முதல் பக்கத்திலிருந்து பல தரமான கட்டுரைகள் நேரடியாகவோ, பட்டியல்கள், பகுப்புகள், பிற கட்டுரைகள் வழியாகவோ இணைப்பு பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:12, 19 ஏப்ரல் 2008 (UTC)
- சீம்பால் - மார்ச்சு 22 அன்று மட்டும் பத்து பார்வைகள். இது போன்றவை வலைப்பதிவுகளில் இணைப்பு பெறுவதால் வருவதாக இருக்குமோ? -- சுந்தர் \பேச்சு 10:24, 19 ஏப்ரல் 2008 (UTC)
- தமிழ் பற்றிய ஆ.வி. கட்டுரை - ~50,000 பார்வைகள்! - சுந்தர் \பேச்சு 10:29, 19 ஏப்ரல் 2008 (UTC)
அற்புதம் சுந்தர்!! மிகவும் பயனுடைய மென்மியக் கருவி! பல வழிகளில் பயனுடைய அளவீடுகள் செய்யலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளே ஒரே தலைப்பில் உள்ள கட்டுரைகளின் பாரவையீடுகளின் எண்ணிக்கையை நோக்கினால் ஆங்கில விக்கியில் தமிழ் விக்கியைப்போல நூறுபங்கு, ஆயிரம் பங்கு என்னும் அளவில் அதிகமுறை பார்க்கப்படுகின்றது. ஆனால், டாய்ட்சு மொழி, பிரான்சிய மொழி, சீன மொழி என்று பார்க்கும் பொழுதும், பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதும் விகிதங்கள் (=பிற/தமிழ்) குறைகின்றன. தனித்தனி நாட்களுக்கான புள்ளிக்குறிப்புகள் இருப்பதால், இன்னும் துல்லியமாக சில செய்திகள் தெரியவருகின்றன. எதிர்பாரா விதமாக நாள்மீன்பேரடை 140 முறை பார்க்கப்பட்டுளது, ஆனால் எக்காரணத்தாலோ மார்ச் 16 ஆம் நாள் மட்டும் 58 முறை பார்க்கப்பட்டுளது. தனிமங்கள், அறிவியலாளர்கள், பறவைகள், வேதிப்பொருள்கள், என்று பல துறை தலைப்புகளில், தமிழ்மொழிக் கட்டுரைகளைப் பிறமொழிக் கட்டுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் பல உண்மைகள் புலப்படுகின்றன. ஒரு மாதத்தில் 50 முறைக்கு மேலாக இருந்தால் மட்டுமே ஒரு சிலராவது பார்க்கிறார்கள் என்று பொருள். திருத்தங்கள் செய்வோரும், விக்கியைப் பின்பற்றி அமைக்கும் துணைக் கலஞ்சியங்களும், தேடுபொறி தானியங்கிகளின் கைவேலை என்று பல காரணங்களுக்காக பார்வை எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 30-50 என்னும் கணக்கில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். எப்படியாயினும், மிகவும் பயனுடைய ஒரு மென்மியக் கருவி. மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுந்தர்! --செல்வா 23:29, 19 ஏப்ரல் 2008 (UTC)
- நடப்பு நிகழ்வுகள் மட்டும் 5,200 தரம் மார்ச் 2008இல் மட்டும் பார்க்கப்பட்டுள்ளது. சராசரியாக 175/நாள். (மார்ச் 3, 4 களில் எந்தக்கட்டுரைக்கும் எத்தரவுகளும் இல்லை என்பதைக் கவனித்தீர்களா?). ஏப்ரலில் இதுவரையில் 4,589 தடவைகள். மிகவும் பயனுள்ள கருவி. மிக்க நன்றி சுந்தர்.--Kanags \பேச்சு 23:50, 19 ஏப்ரல் 2008 (UTC)
- சோழர் - 428
- Chola dynasty - 8437
செல்வா, நீங்கள் குறிப்பிட்டதுபோல் பொதுவாக ஆ.வி. கட்டுரைகளின் பார்வையீடுகள் ஒத்த த.வி. கட்டுரையைக் காட்டிலும் ஆயிரம் பங்கு என இருப்பினும் சோழர் கட்டுரைக்கு இவ்விகிதம் 20 என்ற அளவில் உள்ளது சிறப்பு. அது சிறப்புக் கட்டுரையாக இருப்பதால் ஆ.வி. கட்டுரையின் இடது சட்டத்தில் நாள்மீன் குறி சுவீடன் மற்றும் த.வி. கட்டுரை இணைப்புகளுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவும் பயனர்களின் கவனத்தை ஈர்த்திருக்கக் கூடும்.
தவி கட்டுரை ஒன்றிற்கான பார்வையீடுகளை அதன் கூறுகளாகப் பிரித்து என்றெழுதி பல கட்டுரைகளுக்கான புள்ளிகளை இதிலடைத்துப் பார்த்தால் கூறுகள் (ஆ.வி. கட்டுரைக்கான பார்வைகள், நமது முதல் பக்கத்திலிருந்து இணைப்பு முதலியன) மற்றும் அவற்றின் மதிப்பும் புலனாகும். -- சுந்தர் \பேச்சு 03:19, 20 ஏப்ரல் 2008 (UTC)
- நான் மேலே குறிப்பிட்ட சார்பு துல்லியமானதல்ல. சில கூறுகள் பெருக்கல் விளைவை ஏற்படுத்தக்கூடும் (எ.கா. முதல் பக்கத்திலிருந்து இணைப்புத் தொலைவு). வினோத், அண்ணா பல்கலையில் புள்ளியியலில் ஆர்வமுள்ளோர் இருப்பின் இதை மேலெடுத்துச் செல்லுமாறு கேட்டுப் பார்க்கலாம். இலங்கை நண்பர்களும் அவரவர் படிக்கும் கல்லூரிகளில் கேட்டுப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 04:20, 20 ஏப்ரல் 2008 (UTC)
கல்வித்திட்டத்தில் விக்கிப்பீடியா
தொகுதமிழில் அறிவியல் தேவையா? அது சாத்தியமா?
தொகுதமிழில் அறிவியல் முடியமா என்பதைப் பற்றி தமிழ் வழி மருத்துவக்கல்வி - சில கருத்துக்கள் என்ற இடுக்கையில் பயனர்:Mariano Anto Bruno Mascarenhas சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் ஒரு தமிழ் ஆர்வலரே. எனினும் யதார்த்தாமக பாக்கையில் தமிழ் மருத்துவக்கல்வி மாணவனுக்கு ஏன் நல்லதல்ல என்பதை விளக்கியுள்ளார். எ.கா மேற்படிப்பு செய்வது கடினம். மருத்துவம் ஒரு அறிவியல் துறை. இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன்.
இன்று உலகில் அறிவியல் ஆங்கிலத்திலேயே பெரிதும் வளர்கிறது என்பது நாம் அறிவோம்.
- இந்த அறிவியல் தமிழில் தேவையா?
- அல்லது தமிழை இன்ப இலக்கிய மொழியாகவே வைத்திருக்கலாமா?
- இன்ப இலக்கிய மொழியாக வைத்திருந்து கண்ட நன்மை என்ன?
- தமிழை அறிவியல் மொழியாக்குவது சாத்தியமா?
- யப்பான், இஸ்ரேல், உருசியா, ஜேர்மன், பிரேஞ் ஆகிய நாட்டோர் எப்படி தத்தம் மொழியில் அறிவியலைப் பேணக்கூடியதாக இருக்கிறது?
- தமிழில் அறிவியல் சாத்தியமில்லை என்றால், தமிழை தொடர்ந்து பேண வேண்டுமா?
- ஆங்கிலத்தை இணை மொழியாக கற்றாலும், தற்போதைய நிலையில் இது துறைசார் வல்லுனர்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்தாதா?
- வணிக மயமாக்கப்படிருக்கும் மருத்துவத்துறை மக்களை அன்னியப்படுத்த அதன் மொழி பிரிவினை உதவுமல்லவா?
- உடல் நலம் மருத்துவம் பற்றி பரந்த அறிவு தேவை இல்லையா?
மருத்துவம் மட்டுமல்ல, எந்தக் கல்வித்துறை அறிவும் தம் தாய்மொழியிலேயே இருப்பது சிறந்தது மட்டுமல்ல, அடிப்படைத் தேவை. ஆய்வுநிலையில், அறிவுத்துறையைப் பொறுத்து ஆங்கிலம் உட்பட பிற மொழிகளின் தேவை இருக்கலாம். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது 10,000 இல் ஒருவருக்குத்தான் தேவை. அதுவும் எப்பொழுதும் ஆங்கிலமாகவும் இருக்காது. ஆங்கிலேயராகிய நியூட்டன் கூட இலத்தீன் மொழியில் ஒரு காலத்தில் எழுதினார். காலத்திற்கு காலம் ஒரு சில மொழிகள் செல்வாக்கு பெற்று இருக்கும். மிக அண்மையில் கூட பிரான்சிய மொழி முதன்மை வாய்ந்த மொழியாக இருந்தது. அதே போல டாய்ட்சு மொழியும் மிகுந்த செல்வாக்குடைய மொழியாக இருந்தது. வருங்காலத்தில் சீன மொழி செல்வாக்கு உடையதாக வளர்ந்து எழலாம் . ஆனால் இதற்காக தம் கல்வியை தங்கள் தாய்மொழியில் இருந்து மாற்றிக்கொண்டு இருக்க முடியாது. தம் தாய் மொழியில் இயலுமா என்ற கேள்விக்கு ஒரு சிறிதும் இடமே கிடையாது, அதிலும் தமிழ் மொழி போன்ற செம்மொழிகளில், 75 மில்லியன் மக்களுக்கு மேலானவர்கள் தங்கள் தாய்மொழியாகக் கொண்ட மொழியில் இயலுமா என்று கேட்பதா!! கட்டாயம் இயலும் என்பது மட்டுமல்ல, எம்மொழிக்கும் இளைக்காத வழியில் சிறப்பாக அனைத்து அறிவுச்செல்வங்களையும் ஆக்கலும் வளர்த்தெடுத்தலும் இயலும். ஆக்குவதும் வளர்த்தெடுத்தலும் அம்மொழியாளர்களின் கடமை. அவர்கள் ஆக்கவில்லை என்றால் அம்மொழியாளர்களின் இயலாமையே தவிர மொழியின் இயலாமையோ, தேவையின் இன்றியமையாமையோ அல்ல. கல்வி கற்கும் பொழுது மேலோட்டமான அறிவு (passive learning), கிளர்வுறும் உள்ளறிவு, இயங்கறிவு (operative, inner creative learning called active learning) என்றும் கூறுவதுண்டு. தாய்மொழியில் கற்கும் பொழுது அறிவு ஊறும். அறிவு ஆழம் பெறும். குறைந்த ஆற்றலில் அதிக அறிவு பெறுதல் இயலும். இவற்றையெல்லாம் விளக்கி இங்கு எழுதினால் மிக விரிந்துவிடும். நெடுங்காலமாக தாய்மொழிவழிக் கல்வியின் உயர்வு நன்கு உணர்ந்தறியப்பட்ட ஒன்று. யுனெஸ்கோ (UNESCO) வை சேர்ந்த ஜான் டேனியல், கல்வித்துறையின் துணைச் செயலாளர்-இயக்குனர் (John Daniel, Assistant Director-General for Education) கீழ்காணுமாறு ஒரு செய்தி ஊடகத்திலே கூறுகிறார்:
"Years of research have shown that children who begin their education in their mother tongue make a better start, and continue to perform better, than those for whom school starts with a new language. The same applies to adults seeking to become literate. This conclusion is now widely implemented, although we still hear of governments that insist on imposing a foreign language of instruction on young children, either in a mistaken attempt at modernity or to express the pre-eminence of a social dominant group."
ஆங்கிலேயர்களும் நாளும் வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சிகளை அக்கறையுடன் தங்கள் மொழியில் பதிவு செய்து வளர்த்து வருகின்றார்கள்- பொதுக் கட்டுரைகள் எழுதுவது முதலாக, சிறப்பு நூல்கள் எழுதுவது வரை. அவற்றை அவர்கள் செய்யவில்லை என்றால் ஆங்கிலம் தன் முதன்மையை இழந்துவிடும். எனவே நாமும் நம் தேவைக்கு ஏற்றார்போல ஆக்கிவருவது கட்டாயம் தேவை. வருங்காலத்தில் தானியங்கி-வழி பெரும்பாலானவை மொழி பெயர்க்கவும் கூடும். உழைப்பவர்களுக்கே உலகம்! எனவே உழைப்போம், அது நம் கடமை. கடைசியாக, ஒன்றைச் சொல்ல வேண்டும். எல்லாத் துறையைக் காட்டிலும் மருத்துவத்துறையின் அறிவைத் தமிழில் வழங்குவது மிகவும் எளிது ! --செல்வா 02:50, 21 ஏப்ரல் 2008 (UTC)
- நன்றாகச் சொல்லியுள்ளீர்கள், செல்வா. இதைப்பற்றி ஆசுதிரேலியாவில் நடைபெற்ற ஆய்வரங்கு ஒன்றில் நல்ல சான்றுகோள்கள் கிட்டின. இணைப்பு கிடைத்தவுடன் இடுகிறேன். நேற்று கார்த்திக்பாலாவுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். தொடர்புடைய ஒரு செய்தி கிடைத்தது. அவர் தனது முனைவர் பட்டத்திற்காக இருசெல் (?) (diatoms) பாசிகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அத்துறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பெரும்பாலும் செருமன் மொழியில் உள்ளதாகவும் அதற்காக அம்மொழியைக் கற்று வருகிறார். அதேபோல் அவருக்குத் தெரிந்த அமெரிக்க ஆய்வர் ஒருவர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழ் கற்றதாகவும் குற்றாலக் குறவஞ்சியில் முன்னூறுக்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பற்றிய பயனுள்ள தகவல்கள் பதியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் சித்த மருத்துவம் படிக்கும் தோழி ஒருவர் தமிழ்வழிக் கல்வி படித்திருந்தால் இப்போது உதவியாக இருந்திருக்கும் என்றார். திருமூலர் திருமந்திரம் முதலாக எண்ணற்ற தமிழ் நூல்களைக் கற்கின்றனர். -- சுந்தர் \பேச்சு 04:12, 21 ஏப்ரல் 2008 (UTC)
பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு பன்னாட்டு மொழியாக இருந்தது. பின்னர் ஜெர்மன் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டது. ஆனால் அதிக காலம் நீடிக்கவில்லை. ஆங்கிலம் அந்த இடங்களைப் பிடித்துக் கொண்டது. இரசிய மொழி குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்று முன்னேறிவந்த போதும் சோவியத்தின் வீழ்ச்சி அதனைப் பாதித்துள்ளது. மண்டறின் இப்பொழுது மிக முக்கிய மொழியாக மாறி வருகிறது. பல வட்டார வழக்குக்களையும் பேசும் சீனர்கள் மண்டறினைத் தம் முதன்மை மொழியாகக் கற்கிறார்கள். சீனர்கள் இருவர் சந்தித்தால் எப்பொழுதும் சீனமொழியிலேயே பேசிக் கொள்கிறார்கள்.
//தானியங்கி-வழி பெரும்பாலானவை மொழி பெயர்க்கவும் கூடும்.// ஆம், இது நிச்சயம் நடக்கும். அந்த வகையில் எண்மிய உலகில் நுழையாத மொழிகள் அனைத்தும் இன்னும் 200 ஆண்டுகளில் காணாமற் போய்விடும். இன்னும் நூறாண்டுகளின் பின்னர் ஆங்கிலத்துக்கு இருக்கும் குக்கியத்துவம் குறைந்து விடும். ஏனெனில் தானியங்கி மொழிபெயர்ப்புக்களின் மூலம் உடனுக்குடன் அவரவர் தத்தம் மொழிகளில் மாற்றிக் கொள்வார்கள்.
தானியங்கி மூலம் ஒரு சொடுக்கலில் மொழிமாற்றலாம் எனும் நிலையில் மூலங்களை உருவாக்கியவர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்தும் பொருளாதார வலிமையுடைய மொழிகள் மிகப் பலமான நிலையில் இருக்கும். இதுவே சீனத்துக்கு வரக்கூடிய பலம்.
மிக வேகமான முன்னேற்றங்களுடனான கால கட்டத்தில் வாழ்கிறோம். சற்றே சிரமப்பட்டுத்தான் தாக்குப் பிடிக்க வேண்டும்.\
இந்தத் தானியங்கியைச் சாத்தியப்படுத்த பெருமளவு திருத்தமான உள்ளடக்கம் எண்மிய வடிவத்தில் வேண்டும். இந்த உள்ளடக்கத்தை வைத்துக் கொண்டுதான் தானியங்கிக்கான உள்ளீடு நடைபெறும். அதனால் திருத்தமான உள்ளடக்கம் என்பது முக்கியம்; அதே நேரம் அதிக அளவிலும் வேணும். கலைச்சொல்லாக்கம் மிக மிக மிக முக்கியமானது.
ஏற்கனவே உள்ள உள்ளடக்கங்களை எண்மிய வடிவத்துக்கு மாற்றுதல், எல்லாத் துறைகளிலுமான கலைச்சொல்லாக்கம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவமளிக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும்.
ஒரு கட்டுரையைப் புதிதாக எழுதுவது எவ்வளவு முக்கியமோ அந்தளவு முக்கியம் ஏற்கனவே இருக்கும் உள்ளடக்கங்களை அறிவதும் அவற்றை ஒட்டி மேலதிக அறிவை தமிழாக்குவதுமாகும். ஈழ- தமிழக கலைச்சொல் ஒப்பீடுகளும், ஆய்வு உள்ளடக்கங்களும், கலைக்களஞ்சியங்களும் இணையத்தில் மிக அவசியமானவை.
இதற்கான முயற்சிகளை இப்பொழுதே மேற்கொள்ளாமற் தாமதித்தாற் தவிக்க நேரிடலாம். ஏற்கனவே உள்ள உள்ளடக்கங்களுகான முக்கியத்துவம் தொடர்பில் நான் முன்னரும் தெரிவித்த கருத்துக்களை நினைவு கூருகிறேன். நன்றி. கோபி
தமிழில் அறிவியல் தேவையா, அது சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் - ஆம். ஆம்
அதே போல் தமிழில் மருத்துவக்கல்வி தேவையா என்றால் - தேவைதான் தமிழில் மருத்துவக்கல்வி சாத்தியமா என்றால் - சாத்தியம் தான்.
இதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ஆனால் இத்துறை குறித்த சில விளக்கங்களை நான் தருகிறேன்
ஆய்வுநிலையில், அறிவுத்துறையைப் பொறுத்து ஆங்கிலம் உட்பட பிற மொழிகளின் தேவை இருக்கலாம். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது 10,000 இல் ஒருவருக்குத்தான் தேவை என்பது சில துறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர மருத்துவத்துறைக்கு பொருந்தாது. தற்பொழுது தமிழகத்தில் உள்ள இளங்கலை இடங்கள் - சுமார் 1600 முதுகலை இடங்கள் - 914. இது 1: 10,000 அல்ல :)
அதே போல், இந்த 914லை 1600 உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். வளர்ந்த நாடுகளில் மருத்துவத்தை பொருத்த வரை இளங்கலை : முதுகலை = 1: 1
எனவே ”இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன்.” என்றால் தயவு செய்து மருத்துவத்துறையை ஒரு மாதிரியாக எடுக்க வேண்டாம். அதே போல் நான் கூறிய (மருத்துவத்துறைக்காக நான் கூறிய கருத்துக்களை) பிற துறைகளுக்கு பொருத்த வேண்டாம் என்பது என் வேண்டுகோள்
ஏனென்றால் மற்ற (பெரும்பாலான) துறைகளுக்கு இத்துறைக்கும் பாரிய வேறு பாடு நடைமுறையில் உள்ளது (விஞ்ஞான ரீதியாக வேறுபாடு இல்லாவிட்டாலும் கூட)
1. பிற துறைகளைப்போலன்றி நான் ஏற்கனவே கூறிய இளங்கலை : முதுகலை 1:1 (தற்பொழுது அது 5:3 ஆக இருந்தாலும் கூட அதை 1:1 ஆக்க வேண்டும்
2. முதுகலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 38 வகை இருக்கின்றது. அதற்கு மேல் சுமார் 20 சிறப்பு (டி.எம், எம்.சி.எச்) இருக்கிறது
தமிழக தவிர்த்த பிற இடங்களில் இன்னும் ஒரு 20 வகைப்படிப்புகள் இருக்கிறது
வேறு எந்த துறையிலும் இந்த அளவு இருக்குமா என்பது சந்தேகம்.
3. மற்ற துறைகளைப்போலன்றி இதில் கற்ற வேண்டிய பாடங்களின் அளவு சிறிதல்ல. உதாரணமாக இளங்கலை பொறியியல் கணினி படிப்பவர் 4 வருடங்களும் படிக்கும் மொத்த பக்கங்கள் (என் அறைநண்பனின் தம்பி படித்தது அது தான். அவன் புத்தகங்களை நான் பார்த்ததை வைத்து கூறுகிறேன்) மருத்துவத்துறையில் முதல் வருடமே படிக்க வேண்டும்.
4. மற்ற துறைகளைப்போலன்றி (கணினி விதிவிலக்கு) மருத்துவத்துறையில் ஒரு புத்தகம் 5 வருடங்களுக்கு மேல் உபயோகப்படாது. (உடற்கூற்றியல் போன்றவை 15 வருடங்கள் வரலாம். மருந்தியல், உடலியக்கவியல் 3 வருடங்கள் கூட அந்த புத்தகத்தை உபயோகிக்க முடியாது.
எனக்கு தெரிந்த வரை 1980ல் உள்ல சரித்திர புத்தகத்திற்கும், 2008ல் உள்ள சரித்திர புத்தகத்திற்கும் 1 சதவிதம் கூட வேறு பாடு இல்லை - காந்தி சுடப்பட்டது மாத்திரம் இடையில் எடுக்கப்பட்டது :) :) :) - அதே போல் 1980ல் உள்ள கணக்கு புத்தகத்திற்கும் இன்று உள்ள கணக்கு புத்தகத்திற்கும் 5 சதம் கூட வித்தியாசம் கிடையாது
மருத்துவத்துறையில் இது நடக்காது.
5. மேற்படிப்பில் சில பாடங்களில் 1 இடம் அல்லது இரு இடங்கள் மட்டும் தான். இப்படி இருக்க சுமார் 25000 பக்கங்களை மொழிபெயர்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த புத்தகம் 5 வருடங்களுக்கு மேல் உபயோகப்படாது. அதாவது ஒரு வருடத்தில் 25000 பக்கங்களை மொழிபெயர்த்தால் 4 வருடம் உபயோகிக்கலாம். அதன் பிறகு 4 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு வருடத்திற்குள் 25000 பக்கங்களை மொழி பெயர்க்க வேண்டும்
அந்த துறையில் 20 பேருக்கு குறைவாக இருக்கும் பொழுது யார் மொழி பெயர்க்க போகிறார்.
சரி அவர் மொழி பெயர்க்கிறார் என்றே வைத்துக்கொள்ளுவோம். அவ்வாறு மொழி பெயர்க்கும் நேரத்தில் அவர் அறுவை சிகிச்சை செய்தால் எத்தனை அறுவை சிகிச்சை செய்ய முடியும் ???
எனவே ”இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன்.” என்றால் தயவு செய்து மருத்துவத்துறையை ஒரு மாதிரியாக எடுக்க வேண்டாம். அதே போல் நான் கூறிய (மருத்துவத்துறைக்காக நான் கூறிய கருத்துக்களை) பிற துறைகளுக்கு பொருத்த வேண்டாம் என்பதும் என் வேண்டுகோள்
தமிழ் வழி மருத்துவக்கல்வி என்பதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன. அவை இத்துறைக்கே உள்ள சில பிரத்தியேக பிரச்சனைகள ஆகும். எனவே மற்ற துறைகளுக்கு சொல்லப்படும் கருத்துகளை வைத்து அந்த பிரச்சனைகள் தீராது. (மேலும் வளரலாம்).
நடை முறை சிரமங்கள் என்னவென்று பார்த்தால் நேரமின்னை ஆட்கள் இல்லாதது இரண்டும் தான்
12ஆம் வகுப்பு பௌதீக பாட புத்தகத்தை ஒருவர் ஒரு வாரத்தில் மொழி பெயர்த்தால் அதை 3 லட்சம் பேர் படிக்கலாம்
முதுகலை உடலியக்கவியல் புத்தகங்களை படிப்பவர்களை விட அதிகம் பேர் மொழிபெயர்க்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அப்படி மொழி பெயர்க்க கூடி அளவு போதுமான நபர்கள் இல்லை என்பது (வருதப்பட வேண்டிய) ஆனால் நிஜ செய்தி
- மருத்துவத்துறை முதுகலை படிக்க வேண்டிய மொத்த பக்கங்கள் எத்தனை
- சில படிப்புகளை படிப்பது மொத்தம் எத்தனை பேர்
என்று பார்த்தால் நான் கூற வருவது புரியும்
மற்றபடி, இதில் நான் கூறிய கருத்துக்கள் மருத்துவத்துறைக்கு மட்டும்தான். அதுவும் மேலே உள்ள கணக்கினால் (arithmetic of number of pages vs number of students) மட்டுமே இதை எடுத்து பள்ளிக்கல்வியில் தமிழுக்கு எதிராக உபயோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் 20:27, 21 ஏப்ரல் 2008 (UTC)
பிற சுட்டிகள்
தொகுஇவற்றையும் பாக்க
தொகு--Natkeeran 16:47, 20 ஏப்ரல் 2008 (UTC)
அறிவியல் தமிழ் - சில கருத்துக்கள்
தொகுபல்மொழிக் கல்வி தாய்மொழிக் கல்வியை விட சிறந்தது
தொகுதாய்மொழ்க் கல்வி நன்று என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல இருமொழிக் கல்வி நன்று என்றும் ஆய்வுகள் சுட்டுகின்றன. உலகமயமாதல் சூழலில் பல்மொழிக் கல்வியே சிறந்தது. தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு பெரும் தடைகள் இருக்கின்றன. தமிழ், ஆங்கில பிற மொழிகளை நாம் கற்க வேண்டும். அந்த விடயத்தில் நாம் சமரசம் செய்ய கூடாது. அது தற்போதைய யதார்த்தம் இல்லை என்றால் யதார்த்தை மாற்ற வேண்டும்.
தாய்மொழி எது?
தொகுஇயற்கையாகவே ஒரு குழந்தை அதூ கேட்கும் மொழியை தானும் பேச முற்படுகிறது. பெற்றோர்கள் ஆங்கிலம் அவ்வப்பொழுது பேசினாலோ, அல்லது ஊடகங்கல் ஆங்கில மயமாக இருக்கும் பொழுது ஒரு குழந்தையின் தாய் மொழி எதுவாக இருக்கும். ஆங்கில சூழலில் வளரும் ஒரு தமிழ் குழந்தையிம் தாய் மொழி தமிழா ஆங்கிலாம்? இந்த விடயத்தையும் தாய்மொழிக் கல்வியை பரிந்துரைப்போர் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழா, ஆங்கிலாம் என்பது ஒரு தலைமுறைப் பிரச்சினையா? (கனடாவில் அம்மாக்களுக்கு ஆங்கிலம் தெரியும், அம்மாவுக்கு தமிழ் தெரியும், பிள்ளைக்கு ஆங்கிலம் என்று ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார். அதாவது ஈழத்தில் முதலில் ஆங்கில கல்வி இருந்தது, பின்னர் அது தாய்மொழிக் கல்வியாக மாறியது, தற்போது பிள்ளை கனடாவில் ஆங்கிலச் சூழலில் வாழ்கிறாள்.)
ஏழைகளுக்கு/அல்லது தாழ்த்தப்பட்டோருக்கு தமிழ், மத்திய/மேல் வர்க்கத்துக்கு ஆங்கிலம், ஆக மேல் வர்க்கத்து ஆங்கிலமும் தமிழ் இலக்கியம்
தொகுதமிழ்நாட்டில் யாருக்கு ஆங்கிலம் எட்டுவதில்லை என்பது கருத்தில்கொள்ளப்பட வேண்டிய விடயம். ஏழைக்கு இல்லை. தாழ்த்தப்பட்டோருக்கு அந்த சூழல் இல்லை. அதாவது தாழ்த்தப்பட்டோர் ஆங்கில கல்வி எட்டினாலும், திறனாக பேச எழுத சிரமங்கள் இருக்கும். ஏன் என்றால் ஆங்கில தொடர்பு அல்லது வாய்ப்புக்கள் அரிதாக அவர்களுக்கு கிடைக்கிறது. எனவே தாய்மொழிக் கல்வி என்று இந்த மக்களுக்கு தமிழை திணிக்க கூடாது. தமிழ்க் கல்வி பற்றி அரச முடிவு அனைத்து மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக அமைய வேண்டும். ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் கூடிய உதவி தர வேண்டும்.
தமிழக அரசின் இணையத்தளங்கள் அனேகமானவை ஆங்கிலத்தில் மட்டும்
தொகுதமிழ்நாட்டில் அரச அலுவல் மொழியாக தமிழ் என்றுதான் அறிய முடிகிறது. ஆனால் அனேக இணையத்தளங்கள் ஆங்கிலம் மட்டுமே. ஆங்கிலத்திலாவது இருக்கின்றது எனபது ஒரு நல்ல விடயம்தான். ஆனால் ஏன் தமிழில் இல்லை?
- http://civil.tnhsp.net/ புருனோ மஸ்கரனாஸ் 00:04, 22 ஏப்ரல் 2008 (UTC)
பொறி மூல மொழிபெயர்ப்பு
தொகுஇது சாத்தியமானதே. பல மொழிகளில் இவை உண்டு. மேற்கில் Real Time Translation கருவிகளே தற்போது ஆய்வில் உள்ளன. ஆனால் ஆங்கில-தமிழ் பொறி மூல மொழிபெயர்ப்புக்கு இன்னும் 15 வருடங்களுக்கு மேலே பொறுக்க வேண்டும். தமிழ்க்கணிமை மிகவும் மந்த நிலையில் இருக்கிறது. எ.கா 2004 பின்னர் உத்தம மாநாடுகள் நடைபெறவில்லை. ஒருங்குறியிலும் சொதப்பி இருக்கிறோம்.
ஆங்கிலம் உலக மொழி என்பது முடிந்த கதை அல்ல
தொகுஇன்று ஒப்பீட்டளவில் ஆங்கில அறிவியல், அரசியல், வணிகவியல், பயண மொழியாக இருக்கின்றது. ஆனால் இது முடிந்த கதை அல்ல. மொத்த பேச்சாளார்களில் சீனமே முதல். ஆசியாவில் 4( இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர்) மட்டுமே அது அரச அலுவல் மொழி. எனினும் நாம் எல்லோரும் நமது தாய்மொழிகளைப் புறக்கணித்து ஆங்கிலத்துக்கு மாறினால் அதை சர்வதிகார உலக மொழியாக்கலாம்.
கொரியன், கேர்பிறூ, யப்பானிஸ், யேர்மன்
தொகுஇன்று இங்கிருக்கு பல இலத்திரனியல் உறுப்புகள் கடைக்கு போனால் அங்கு இருக்கும் பல பொருட்களில் கொரியனும் ஆங்கிலமும் வேறு மொழிகளும் இருக்கும். சில வேளைகாளில் கொரிய மொழி மட்டும் இருக்கும். கொரியாவின் பொருளாதார நுட்ப எழுச்சி மகத்தானது. ஆனால் அவர்கள் தங்கள் மொழியை தக்கவைத்து உள்ளார்கள். இப்படி பல மொழிகள் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றன.
மொழி துறந்து மேம்பாடு உண்டா?
தொகுஇதற்கு ஆபிரிக்கர்களையோ, ஆபிரிக்க அமெரிக்கர்களையோ, அல்லது அமெரிக்க முதற்குடிகளையோ எடுத்துகொள்ளலாம். இவர்கள் விரும்பி தமது மொழிகளை இழந்தவர்கள் இல்லை. காலனித்துவத்தால் பிற மொழி திணிக்கப்பட்டார்கள். இருப்பினும் இவர்களின் இன்றைய நிலை விரும்பத்தகக்து இல்லை. தமிழர்கள் தமிழை துறந்தால், அது அவர்களின் பூரண சுதந்திர முடிவாகா இருக்க செய்யும். விழைவுகள் ஏற்புடையாதக இருக்கமாட்ட என்பதே, வரலாறு சொல்லி தரும் பாடம்.
தமிழில் முடியுமா?
தொகுவிடை எளிது. நிச்சியம். பலர் கூறியது போல் தமிழிரால் முடிந்தால், தமிழால் முடியும். இருப்பினும் தமிழகம் அறிவியல் மயப்படுத்தப்படாமல், தமிழ் நிச்சியம் அறிவியல் மயப்பட முடியாது. ஆனால் தமிழகம் அறிவியல் மயப்படுத்தப்பட அறிவியல் தமிழ் உதவும்.
விக்கிப்பீடியா சமூகமும் அறிவியல் தமிழும்
தொகுவிக்கிப்பீடியாவில் பங்களிப்போர் பலரும் தமிழிலும் அறிவியல் தமிழிலும் நம்பிக்கை உடையவர்களே. இதில் என்ன சந்தேகம். ஆனாலும் பரந்த சமூகத்தில் எழும் கேள்விகளுக்கு நாம் திடமாக பதில் சொல்ல வேண்டும். நன்றி.
--Natkeeran 20:00, 21 ஏப்ரல் 2008 (UTC)
கோப்பைப் பதிவேற்று Not Working
தொகு--Natkeeran 22:51, 21 ஏப்ரல் 2008 (UTC)
நன்றி டெரன்சு. --Natkeeran 02:58, 22 ஏப்ரல் 2008 (UTC)
தமிழ் இணையம் / விக்கிப்பீடியாவில் தனித்தமிழ்ப் போக்கு
தொகுஅதீத தனித்தமிழ்ப் போக்கு --ரவி 00:34, 27 ஏப்ரல் 2008 (UTC)
ரவி, வேறு ஒரு நண்பர் சுட்டிக் காட்டினார். படித்தேன். சில கருத்துக்களை இங்கு வைக்க விரும்புகிறேன். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் வினோத், "நாசிசம்" "மொழி நாசிசமே அன்றி வேறில்லை." என்றெல்லாம் மிகக்கடுமையாக தாக்கியுள்ளார்.
- விக்கிப்பீடியா ஒரு அற்புதமான வரலாற்றுப் பதிவு. யார், எப்பொழுது, என்ன மாற்றம் செய்தார் என்னும் குறிப்புகள் துல்லியமாய் பதிவாகி இருக்கும் இடம். யாரும் பார்த்து ஆய்வு செய்யலாம்.
- விக்கிப்பீடியாவில் பிறமொழிச்சொற்கள் ஏராளமாக உள்ளன. அதீத தனித்தமிழ் போக்கு என்றால் எனக்கு வியப்பாக உள்ளது. நன்றாக கிளைத்து வளரும் சொற்களை நாம் இங்கு தேர்ந்து இயன்ற இடங்களில் ஆளப்பரிந்துரைப்பது தவறென்று நினைக்கவில்லை. அவை பெரும்பாலும் நல்ல தமிழாக இருப்பது தவறா? நல்ல தமிழாக இருப்பது ஏன் நல்லது என்பது பற்றி எத்தனையோ இடங்களில் விளக்கி உள்ளேன். அவற்றையும் ஓரிடத்தில் தொகுத்து வைப்பது நல்லது எனத் தோன்றுகின்றது. சுருங்கச்சொன்னால் நல்ல தமிழ்ச்சொற்கள் கிளைத்து வளரும், பிற சொற்களோடு இணக்கமாக இயங்கும். எனவே எங்கெல்லாம் இயலுமோ அங்கெல்லாம் நல்ல தமிழ்ச்சொற்கள் ஆள்தல் நல்லது. இது எளிதாக உணரக்கூடிய ஓர் உண்மை.
- விக்கிப்பீடியாவில் வினோ'த் வரும் முன்னரே ஏராளமாக கிரந்த எழுத்துக்கள் இருந்தன. ஏதோ அவர் வந்து போராடி கிரந்தத்தை நிலைநிறுத்தியது போல பேசி இருப்பது சரியல்ல. விக்கிப்பீடியா வரலாற்றுப் பதிவு. யாரும் உண்மையைப் பார்க்கலாம்.
- வினோத் தன்னுடைய மறுமொழியில் "தமிழ் விக்கிப்பீடியா பிரபலம் ஆகாததற்கு அதன் மிக கடுமையான மொழி நடையும் இதுவும் ஒரும காரணம்" என்னும் கருத்தை வைத்துள்ளார். தமிழ் விக்கி மட்டுமல்ல, இந்திய மொழி விக்கிகள் யாவுமே பின் தங்கிய நிலையில் உள்ளன, போதிய பரவலம் அடையவில்லை. . தமிழ் விக்கிப்பீடியா பரவலம் அடையாததற்கு அதன் "மிக கடுமையான மொழி நடை" என்பதை எப்படிக் கண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. இந்தி, கன்னட, விக்கிப்பீடியாக்களைப் போய்ப் பாருங்கள். குறிப்பாக கன்னட விக்கியில் பாருங்கள். அவர்கள் ஏராளமான சமசுகிருத மற்றும் ஆங்கில சொற்களைப் பொழிந்து எழுதி உள்ளார்கள். அவையெல்லாம் ஏன் இந்த பரவலம் அடையா நிலையில் உள்ளன?
- கடைசியாக ஒன்றைச் சொல்ல விழைகிறேன். தமிழ் மொழி விக்கியின் ஆக்கங்கள் வருங்காலத்தில் எத்தனை புகழ் ஈட்டுகின்றது என்று பாருங்கள். நல்ல மொழி நடையில், செறிவான கருத்துக்களை, பரந்த தலைப்புகளில் இடையறாது ஆக்கி வாருங்கள், பின்னர் நாம் எங்கு நிற்கிறோம், எங்கு செல்லுகிறோம் என்று பாருங்கள். எந்தத் தலைப்பை எடுத்தாலும் தரமான கருத்துகள் தமிழ் விக்கியில் கிடைக்கும் என்னும் நிலை கட்டாயம் வரும். இன்னும் மிக நிறைய பேர் வந்து ஆக்கம் தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இப்பொழுதே தமிழில் வேறு எங்கும் இல்லாத பல்லாயிரக்கணக்கான கருத்துகள் செய்திகள் தமிழ் விக்கியில் உள்ளன.
- மொழி நாசிசம் என்று தாக்குபவர்களுக்கும் இங்கு மறு மொழி இடுகிறேன் என்பதைப் படிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். தமிழ் விக்கியில் ஒரு "நிர்வாகி" பொறுப்பில் இருப்பவர் இப்படி கூறுவது சரியா என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
--செல்வா 02:46, 27 ஏப்ரல் 2008 (UTC)
செல்வா கூறியவற்றுடன் முற்றிலும் உடன்படுகிறேன். கிரந்த எழுத்துக்கள் தொடர்பாக எனது கருத்துக்கள் நான் யப்பானிய மொழி கற்றபின்பு மாறுதல் கண்டது இங்கே அவர்கள் கடன்வாங்கி பெயர்களை உச்சரிப்பதில்லை மாறாக தமது மொழியில் உள்ள ஒலியன்களைக் கொண்டே அதைச் செய்கிறார்கள். எனது பெயரை தெரன்சு என்று எழுதுகிறாகள். இப்படியிருக்க ஏன் தமிழில் மட்டும் கடன்வாங்கி எழுதவேண்டும். ரவி எங்கேயோ ஒரு பதிவில் எழுதியிருநததைப்போல அழிந்துப்போன மொழியின் எழுத்துக்களைக் கொண்டு அழியா தமிழை காக்கவிளைகிறார்கள்.
இங்கே நிர்வாக பொறுப்பிலிருக்கும்ஒருவர் தவியை நாசிசமாக எடுத்துகூறியிருப்பது வேதனைக்குறியதாக உள்ளது. இணையத்தில் தவியைப் போன்ற மக்களாட்சி நிலவும் இடத்தை காண்பது அறிது. பொது இணக்கப்பட்டுடனேயே எல்ல விதயங்களையும் மேற்கொள்கிறோம். இது அவருக்கும் தெரியும். தெரியாதவருக்கு விளங்கப்படுத்தலாம் தெரியாததைப் போல நடிப்பவருக்கு என் செய்ய?
நல்ல தமிழ்ச் சொற்களை ஆக்கி ஆளவேண்டியது காலத்தின் கட்டாயம். இது தமிழ் வரலாற்றில் தொடர்ந்து எற்பட்டுவந்த ஒன்றாகும். முன்னர் அரசவையிலும் தமிழ்ச்சங்களிலும் செய்தவற்றை இங்கே செய்கிறோம். தன்னை வளர்த்துக்கொள்ளாத எந்த மொழியும் அழிந்துவிடும் என்பதில்சந்தேகமில்லை. --Terrance \பேச்சு 03:34, 27 ஏப்ரல் 2008 (UTC)
- வினோத்-இன் காரமான கருத்துக்களுக்கு ஒருவகையில் நானும் காரணம் என்று நினைக்கிறேன். அவருடைய கட்டுரையில் தெறும, ஏந்தம், செலுத்தம், கட்டுறுத்தல் போன்ற மாற்றங்களை நான் செய்திருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது மேற்சுட்டிய பதிவிடுகையில் இருந்து தெரிகிறது. வேதிப்பொறியியல் துறையில் பெருமளவிற்குக் கட்டுரைகள் த.வி.யிலோ வேறு எங்கேனுமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்நிலையில் ஆரம்பம் முதலே நல்ல தமிழ் சொற்களை வைத்துக் கட்டுரைகள் எழுதினால் அவை நிலைத்து நிற்கும் என்று நான் எண்ணுகிறேன். இதற்காக இன்னொரு வேதிப்பொறிஞராகவும் தமிழறிஞராகவும் இருக்கும் இராம.கி அவர்களின் கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். பல சொற்களை அவரிடம் இருந்து எடுத்தாள்கிறேன். சிலசமயம் அது பலருக்கும் ஏற்புடையதாய் இல்லாதிருக்கலாம். எனக்கும் கூடச் சில சொற்கள் ஒவ்வாது போகின்றன. அதே சமயம், எனக்குப் பிடித்திருந்தாலும், தெறும போன்ற சொற்களை இங்கு பிறர் பெரும்பான்மையாக மறுக்கும் போது அவற்றை மாற்றிக் கொள்ள நான் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. த.விக்கு வெளியே நான் தெறும என்பதைப் பயன்படுத்துவேன். ஆனாலும், விக்கி ஒரு கூட்டு முயற்சி என்பதால், அந்தச் சொற்களை முன்வைப்பதில் எனக்கும் உரிமை உண்டு என எண்ணுகிறேன். இப்போதும் கூட refinery என்பதற்கு விள்ளெடுப்பாலை சரியாக இருக்குமா என்று இன்னொரு இழையில் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு வேளை அந்தச் சொற்களை மாற்றும் முன் பேச்சு பகுதியில் முன் வைத்திருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. த.வி யின் பொள்ளிகை அதுவா என்று நான் அறியாதிருந்தால் யாரேனும் தெளிவுபடுத்தவும். குறிப்பிட்ட இந்த இடுகையில் இந்த மாற்றங்கள் சரிதானா என்று கருத்துக்கள் வேண்டும் என்றும் நானே விவாதத்தைத் தொடங்கி வைத்திருந்தேன் என்பதையும் கவனிக்கவும்.
--இரா. செல்வராசு 04:30, 27 ஏப்ரல் 2008 (UTC)
- செல்வராசு, பொள்ளிகை என்பது policy என்னும் சொல்லோடு ஒத்திருக்குமாறும், தெறும என்பது thermal என்பதுடன் ஒத்திருக்குமாறும் நண்பர் இராம.கி அவர்கள் ஆக்கிய சொற்களாக இருக்கலாம். அவை இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பச் சொற்களுடன் பயனுடைய தொடர்பு காட்டும் கருத்தாடல்கள்கள் மறுக்கவில்லை. என் நண்பர் இராம.கியை அதற்காக பாராட்டுகிறேன். ஆனால், அத்தகைய பல சொற்கள் பொதுப் பயன்பாட்டுக்குப் பொருந்தாதவை, சில அறுதியாக தேவை இல்லாதவை. இவை இராம.கி மீது மதிப்பு வைத்திருக்கும் என் தனிக்கருத்துகள். வெப்பம், சூடு, சுர, காய், கொதி, வெது, வே என்று பற்பல வேர்ச்சொற்கள் இருக்கும் பொழுது தெறும என்று கூறுவது தேவையா என்று எண்ண வேண்டும். இந்திய-ஐரோப்பிய மொழிக்கு நெருக்கமான சொல்லாக இருக்கவேண்டும் என்பது தேவை இல்லாத முயற்சி என்பது என் தனிக்கருத்து. தொடர்பை புரிந்து கொள்ளுவது வேறு அதற்காக சொல்லையே எடுத்தாளவேண்டும் என்று நினைப்பது வேறு. வேறு சொல் இல்லாத நிலையில், பொருத்தம் இருந்தால் எடுத்தாளலாம். இது பற்றி மேலும் இங்கு உரையாடுவதற்கு மாறாக தனியான ஓர் இழையில் கட்டாயம் கருத்தாடலாம். --செல்வா 05:02, 27 ஏப்ரல் 2008 (UTC)
- செல்வராசு, கட்டுரையின் முதன்மைத் தலைப்பைத் தவிர பயன்பட்டிருக்கும் மற்ற சொற்களை நல்ல தமிழ் சொற்களாக மாற்றுதற்கு பேச்சுப்பக்கத்தில் கேட்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் மாற்றும் சொல் மிகுதியான பொதுப்பயன்பாட்டில் இருந்தால் அதை அடைப்புக்குறிகளுள் இடுவது நலம். தகவல் உண்மையோடு கலைக்களஞ்சியத்திற்கென தனிநடை எதற்காக வலியுறுத்தப்படுகிறதோ, அதற்காகத்தான் நல்ல தமிழ் சொற்களும் பரிந்துரைக்கப்படு்கின்றன. ஆங்கில விக்கியில் "brilliant prose" என்பது சிறப்புக் கட்டுரைகளுக்கான தேர்வில் முதன்மையானதொரு தேவை. மற்ற கட்டுரைக்ளையும் இத்தேவை பொருட்டு வேறு யாரும் கட்டுரையைத் திருத்தினால் அதில் தவறில்லை. அதேபோலத்தான் தமிழ் விக்கியிலும் நல்ல தமிழ்ச்சொல்லை எவர் வேண்டுமானாலும் "புகுத்தலாம்". ஆனால் எழுதுபவர்கள்மீது எந்தவிதக் கட்டாயமுமில்லை. இக்கொள்கை குறித்து விவாதிக்க விரும்பினால் வினோத் இங்கு செய்யட்டும். மற்றபடி வெளியில் போய் விக்கியைப் பற்றிய அறிமுகமில்லாதவர்களிடம் தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதுதொடர்பில் வினோத்திடம் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. -- சுந்தர் \பேச்சு 06:59, 27 ஏப்ரல் 2008 (UTC)
அனைவருக்கும், வினோத் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் இதைப் பற்றி எழுதியதில் தவறில்லை. தவிர, இதை தமிழ் விக்கிப்பீடியா குறித்த விமர்சனமாக கருதாமல் பொதுவாக தமிழ் இணையத்தில் பெருகி வரும் நல்ல தமிழ்ப் போக்கு, தனித்தமிழ்ப் போக்கு குறித்த விமர்சனமாக கொள்வோமே? எதைப் பற்றியும் தன்னுடைய கருத்துகளை தன் வலைப்பதிவில் அவர் எழுதலாம். அங்கு தனக்கு இயல்பான நடையில் அவரால் எழுத இயலும். என்னால் இயன்ற அளவு தமிழ் விக்கிப்பீடியாவின் உண்மை நிலையை அங்கு விளக்க முற்பட்டுள்ளேன். அதை மட்டுமே நம்மால் செய்ய இயலும்.
வினோத், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள "தமிழ் விக்கிப்பீடியா - இவை அன்று" கொள்கைகளை எழுதியதே நான் தான். 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவை. அதற்குப் பிறகான தமிழ் இணைய அனுபவத்திலும் எண்ண வளர்ச்சியிலும் அந்தக் கொள்கைகளில் இறுக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நல்ல தமிழ் எதிர்ப்பாளர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: ஆங்கிலம் முதன்மையாகப் பேசப்படாத நாடுகளில் ஓரிரு ஆண்டுகளாவது படித்து /பணியாற்றிப் பாருங்கள். உங்கள் கருத்துகளில் பெருமளவு மாற்றம் வரும் என்று உறுதியாக நம்புகிறேன். --ரவி 11:07, 27 ஏப்ரல் 2008 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
தொகு- ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று.
தமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையை கட்டுரைகளில் திணிப்பதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும்.
- ஓர் சீர்திருத்தக் களம் அன்று
எழுத்துச் சீர்மை, மொழிச் சீர்மை போன்றவற்றின்பால் தனிப்பட்ட விக்கிபீடியர்கள் பலருக்கு ஈடுபாடு இருக்கலாம். ஆனால், விக்கிபீடியாவின் அடிப்படைக் கொள்கையின்படி அதற்கென்று எந்த ஈடுபாடும் கிடையாது. பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழில் தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கருதலாம். இது சரியாகினும், தவறாயினும், யூனிகோடு நிர்வாக அமைப்பு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு முதலிய பிற அமைப்புகளிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, தமிழ் விக்கிபீடியாவில் முதலில் அறிமுகப்படுத்தக் கூடாது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் பொது வழக்கில் வந்தபின் இங்கு செயல்படுத்தலாம். சில சிக்கல்கள் மீடியாவிக்கி மென்பொருள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களினாலோ தமிழ் விக்கிபீடியாவிற்கு மட்டும் ஏற்படலாம். அவற்றிற்கான தீர்வை விக்கிபீடியர்கள் கூடி முடிவு செய்யலாம்.
121.247.218.159 06:03, 27 ஏப்ரல் 2008 (UTC) (வினோத்)
3000 விக்கிப்பீடியர்கள்
தொகுதற்பொழுது 3000 விக்கிப்பீடியர்கள், விக்கிப் பயனர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்! இது ஒரு குறிப்பிடத்தக்க நிலை. பதிவு செய்பவர்களில் ஒரு 10% பங்களித்தாலும், நாம் ஆகா ஓகோ என்னும் அளவில் வளர்வோம். வேண்டாம், ஒரு 1% பங்களித்தாலும் பெரும் முன்னேற்றம் அடைவோம். நானறிய பயனர்களில் ஓரளவிற்கு பங்களிப்பவர்கள் ஒரு 10-15 பேரே. மயூரனாதன் ஒருவரே 1700 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கி எழுதியுள்ளார். புது முனைப்போடு கட்டுரை ஆக்கத்தில் கருத்தைச் செலுத்துவோம். கட்டுரைகளை சீர்படுத்துவதில் கருத்தைச் செலுத்துவோம். ஒரு கணிசமான தொலைவு கடந்து வந்திருக்கின்றோம். பங்களித்த யாவருக்கும் நன்றிகள். --செல்வா 13:53, 28 ஏப்ரல் 2008 (UTC)
Gadgets
தொகுஆங்கில விக்கியிலிருந்து தேவைப்படும் எனக்கருதிய Gadgets(கருவிகள்?)ஐ தவியில் இணைத்துள்ளென். இவற்றை சிறப்பு:Preferences இல் உள்ள Gadgets என்னும் டப் மூலம் உங்கள் கணக்கிற்கு முடுக்கிவிடலாம். அவற்றை பயன்படுத்தி மகிழவும். ஜாவாநிரலில் இயங்கக்கூடிய தமிழ் தட்டச்சு செயலி இருந்தால் இங்கே இணைக்கலாம்.--Terrance \பேச்சு 15:37, 2 மே 2008 (UTC)
- இந்த வசதிகளை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி. சோதித்துப் பார்த்துச் சொல்கிறேன். தொடர்ந்து மீடியாவிக்கி / நுட்ப விசயங்களில் நீங்கள் கவனம் எடுப்பதில் மகிழ்ச்சி. firefox தமிழ்விசை ஜாவாவில் எழுதப்பட்டது தான் என்று நினைக்கிறேன். அதை இணைக்க முடியுமா பாருங்கள். (ஆனால், இது முக்கியத் தேவை இல்லை. எனவே, கூடுதலான நேரத்தைச் செலவிட்டு விட வேண்டாம்--ரவி 00:43, 3 மே 2008 (UTC)
- டெர்ரன்சு, கவனிப்புப் பட்டியல் மற்றும் அண்மைய மாற்றங்களில் பயன்படும் வசதிகளை ஏற்கெனவே ஆங்கில விக்கியில் பயன்படுத்தி வந்தேன். நம் தளத்தில் இல்லை என்று வருத்தப்பட்டிருந்த வேளையில், இந்த வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளீர்கள், மிக்க நன்றி. பகுப்புகளை சேர்க்கவும் நீக்கவுமான எளிய வசதியை இப்போதுதான் பார்த்தேன். மிக மிக அருமை. மிகப்பயன் தரவல்லது. பகுப்புகள் தொடர்பில் தெளிவான வழிகாட்டல் பக்கம் ஒன்றை உருவாக்கி விரைவில் செயல்படுத்த வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:36, 3 மே 2008 (UTC)
- ஒரு சிறு கருத்து: ஜாவா நிரல் என்பதை ஜாவாஸ்கிரிப்ட்டு அல்லது சாவாசுகிரிப்டு எனவே சொல்லலாமே. ஜாவா மொழி்யில் எழுதப்பெறும் நிரல்களுடன் குழப்பிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. -- சுந்தர் \பேச்சு 07:39, 3 மே 2008 (UTC)
- மிக்கநன்றி டெரன்சு. இப்படி நுட்ப முன்னேற்றங்களை பல செய்து மெருகூட்டுகிறீர்கள். --Natkeeran 17:03, 3 மே 2008 (UTC)
- டெரன்சு, மேற்கோள் வடிப்பதற்கான தத்தலை தொகுத்தல் பக்கத்திலுள்ள தத்தல் தொகுதியில் சேர்த்தது மிகப்பயனுள்ளதாக உள்ளது. தகவலுக்கு நன்றி. அனைவரும் இதைத் தங்கள் விருப்பத்தேர்வில் தேர்ந்து கொள்ளவும். -- சுந்தர் \பேச்சு 15:10, 10 மே 2008 (UTC)
பயனர்களின் பங்களிப்புகள்
தொகுதமிழ் விக்கிப்பிடியாவில் ஒரே ஓரெழுத்தைத் திருத்தி பங்களித்தவர்களுக்கும் நன்றி, ஆனால் பேராக்கம் தந்தவர்களை நினைத்து நாம் எல்லோருமாக ஊக்கம் பெறுவது இன்னும் இனியது. தொடங்கிய கட்டுரை எண்ணிகை மட்டுமே முக்கியமானதல்ல என்பதை நாம் யாவருமே உணருவோம்; பல பயனர்கள் பல அடிப்படையான வளம் சேர்க்கும் களப்பணிகளும் பின்புல ஆக்கங்களும் தந்து தமிழ் விக்கிப்பீடியாவை இன்றளவும் வளர்த்து, இந்திய மொழிகளில் ஒரு முன்னணி விக்கிப்பீடியாவாக நிலைநிறுத்தி வந்திருக்கின்றார்கள். எல்லோருக்கும் நன்றி. கீழே சில முன்னணி பயனர்கள் தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கைகளைப் பதிவு செய்கிறேன்:
- நிரோஜன் சக்திவேல் 2448
- மயூரநாதன் 1814
- கனகரத்னம் சிறீதரன் 1000
- கோபி 991
- நற்கீரன் 938
- சிவகுமார் 584
- டெர்ரன்சு 513
- உமாபதி 500
- செல்வா 494 + ~10 ஐ.பி முகவரி
- சிந்து 484
- Werklorum 276
- ரவி 245
- பேரா.வி.கே 150
- வினோத் 134
- பாலச்சந்திரன் 111
- கலாநிதி 110
- மு.மயூரன் 100
- சுந்தர் 89
- ஸ்ரீநிவாசன் 87
- ஜெ.மயூரேசன் 82
- இன்னும் பலர். பாப்படு, பயனர்:Gaayathiri, மற்றும் அண்மையில் சேர்ந்த வேந்தன் அரசு போன்றவர்கள் 10க்கும் குறைவான கட்டுரைகளே எழுதியிருப்பினும், அவை சிறப்பாக இருப்பது கவனிக்க வேண்டியது. மோகந்தாஸ்-31; Kurumban -22.அரசன்-20;விஜயஷண்முகம்-16; ஜேகே-15; பாலாஜி-13; நரசிம்மவர்மன்-11;பயனர்:Rselvarajசெல்வராசு-6;
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள மொத்தம் 13, 675 கட்டுரைகளில், மேற்கண்ட விக்கிப்பயனர்களில் 20 பேர் மொத்தம் 11,150 கட்டுரைகள் தொடங்கியுள்ளார்கள். இன்னும் ஒரு 10-15 பேர்கள் நல்ல முறையில் பங்களித்துள்ளார்கள். அண்மையில் சேர்ந்துள்ள சில விக்கிப்பயனர்கள் மிக அருமையாக ஆக்கங்கள் செய்து வருகின்றார்கள். புதிய ஊக்கத்துடன் இன்னும் விரைந்து முடுக்கதுடன் பணியாற்றுவோம்.--செல்வா 22:28, 3 மே 2008 (UTC)
--செல்வா 22:13, 3 மே 2008 (UTC)
- நன்றி செல்வா. உங்களின் ஊக்குவிப்பு அனைவருக்கும் மிக்க உற்சாகமாக இருக்கிறது. கட்டுரா எழுதுவது மட்டுமல்லாமல் மற்ற வேறு பணிகள் பல உண்டு. எ.கா ரவி சுந்தர் ஆகியோரின் நிர்வாகப் பணிகள் சிறப்பானவை. --Natkeeran 17:58, 3 மே 2008 (UTC)
- நன்கு அறிவேன், நற்கீரன். நீங்கள் சுட்டியதை நான் மேலே குறிப்பிட்டுளேனே! டெரன்சுபோல, சுந்தர் போல நுட்பியல் பின்புலப் பணிகள் அற்புதம் அன்றோ! கோபி, ரவி போல களப்பணிகள் அருமை அன்றோ! உங்களைப்போல தமிழர் தொடர்புடைய அனைத்து செய்திகளையும், கருத்துகளையும் திரட்டுவோர் அருமை அன்றோ! பேரா. வி.கே அவர்கள் தொடங்கிய கட்டுரைகள் 150ஆ அது 1000க்கு ஈடானதா என்று நாம் அறிவோம் அல்லவா? அமைதியாய் அரும்பணி ஆற்றும் சிவகுமார், புயலென 134 கட்டுரைகள் எழுதிய வினோத், இசை பற்றி மட்டுமல்லாமல், அமைதியாய் 500க்கு நெருங்கிய கட்டுரைகள் ஆக்கிய சிந்து என்று ஒவ்வொருவரும் ஆற்றிய பணிகள் அருமை அன்றோ! உமாபதி போல கணினி மற்றும் நாயன்மார்கள் வரலாறுகள் பற்றிய கட்டுரைகளும், கலாநிதி ஆக்கிய பொருளியில் கட்டுரைகள், பாலச்சந்திரனின் வானொலி கலைஞர்கள் பற்றியும், அண்மையில் வந்த Werklorum என்னும் பயனர் புயல் போல மிகக்குருகிய காலத்தில் மிக அதிகமான கட்டுரைகள், தொகுப்புகள் செய்து வியப்பூட்டியதும், அவ்வப்பொழுது மயூரன், மயூரேசன் ஆகியோரும் வந்து அமைதியாய் நல்லாக்கம் செய்தது என்று எல்லாமுமே அருமைதானே! நானறிய தமிழ் விக்கிப்பீடியாவில் பெரும் பங்கு அளித்தவர்கள் ஒரு 20-30 பேரைத் தாண்டாது, ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஒரே ஓரெழுத்தைத் திருத்தி உதவியவரும் போற்றத்தகுந்தவர்கள். அவரவர் அவரவர்களுக்கு இயன்றவாறுதானே பங்களிக்க முடியும். ஒரு பணியைத் தமிழ்விக்கியில் செய்ய எவ்வளவு காலமும் உழைப்பும் வேண்டும் என்பதை நான் நன்கு உணர்வேன். எனவே நான் எவருடைய பங்களிப்பையும் ஒரு சிறிதும் குறைத்துக் கூறமாட்டேன். மேலும் பலரும் வந்து நல்லாக்கம் தரவேண்டும் என்று ஊக்குவிக்கவே இப்பட்டியலை இங்கே இட்டுள்ளேன். யாரும் அருள்கூர்ந்து தவறாக எண்ணவேண்டாம்.--செல்வா 18:30, 3 மே 2008 (UTC)
- நன்றி செல்வா. உங்களின் ஊக்குவிப்பு அனைவருக்கும் மிக்க உற்சாகமாக இருக்கிறது. கட்டுரா எழுதுவது மட்டுமல்லாமல் மற்ற வேறு பணிகள் பல உண்டு. எ.கா ரவி சுந்தர் ஆகியோரின் நிர்வாகப் பணிகள் சிறப்பானவை. --Natkeeran 17:58, 3 மே 2008 (UTC)
நான் ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு முன் பங்களிக்கத் தொடங்கிய பொழுது, தமிழ் விக்கிப்பீடியா, உலக மொழிகளின் வரிசையில் 68 ஆம் இடம் முதல் 71 ஆம் இடம் வரை அலைந்து கொண்டிருந்தது, பயனர்:நிரோஜன் சக்திவேல் புயல்வேகத்தில் பங்களித்து ஓரு முறை தமிழ் விக்கிப்பீடியாவை 61 ஆவது இடத்திற்கு நகர்த்தினார், ஆனால், மீண்டும் நாம் பழைய இடத்திலேயே இருக்கின்றோம். பயனர்கள் இன்னும் சுறுசுறுப்பாக பங்களிக்க வேண்டும். --செல்வா 23:25, 3 மே 2008 (UTC)
- ஆம் செல்வா, நான் தவறாக எண்ணவில்லை. எனது பங்களிப்பும் சில மாதங்களாகக் குறைந்துவிட்டது மீண்டும் அதிகரிக்கவேண்டும். புதிய பயனர்களும் உத்வேகத்துடன் இணைந்து பணியாற்றவேண்டும். நல்லதோர் நலந்தரும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். --உமாபதி \பேச்சு 04:24, 4 மே 2008 (UTC)
- எவருடைய பணி்யையும் நீங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை நானறிவேன். இதுபோல் பல அளவைகளைக் கொண்டு நோக்குகையில் அந்தந்த முனைகளில் பலரது சிறப்பான பங்களிப்புகள் புலப்படுகின்றது. மற்றபடி விக்கியெனும் ஆக்கம் கூட்டாகத் தீட்டப்பட்ட ஒரு ஓவியம் போன்றது. இதில் எந்தக்கோடு ஓவியத்தின் அழகிற்குப் பின்னால் உள்ளது எனப்பிரித்துணர முடியாது. ஒவ்வொரு கோடும் அருகி்லுள்ள மற்ற கோடுகளுக்கு வலுச்சேர்க்கும். -- சுந்தர் \பேச்சு 05:48, 4 மே 2008 (UTC)
சுந்தர், நான் உங்களுக்கு "உவமைப் பயனர்" என்ற பட்டத்தை வழங்குகிறேன் :) செல்வா, விவரங்களை நேரம் எடுத்துத் தொகுத்துத் தந்ததற்கு நன்றி. நான் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் 2005ல் எழுதியவை. 200வர் பதக்கம் கிடைக்காது என்பதால் :) நானும் மற்றவர்களைப் போல பெரும் பங்களித்து ஆயிரவர் பதக்கம் வாங்க வேண்டும் என்று தூண்டுதலாக இருக்கிறது. நன்றி--ரவி 08:34, 4 மே 2008 (UTC)
- விக்கிப்பீடியாவின் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறைந்த வீதத்திலேயே இருந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனாலும் தற்போது எழுதப்பட்டுவரும் கட்டுரைகள் அளவில் பெரியவையாக இருக்கின்றன என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். நானும், எழுதும் கட்டுரைகள் 4000 பைட்டளவைத் தாண்ட வேண்டும் என்று முயல்வதால் முன்னரைப்போல் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுத முடிவதில்லை. எப்படியானாலும் பங்களிப்பவர் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிக்காமல் மொழிகள் பட்டியலில் தமிழ் விக்கியின் தரநிலையை ஆரோக்கியமாக உயர்த்துவது என்பது கடினமானது. அல்லது, பலதுறைகளையும் சேர்ந்த ஓரளவுக்கேனும் தரமான கட்டுரைகளைத் தானியங்கிகள் மூலம் உருவாக்குவதற்கு வழிகண்டுபிடிக்க வேண்டும். கூட்டு முயற்சிமூலம் இதை அடைய முடியுமா என்றும் எண்ணிப்பார்க்கலாம். தானியங்கிகளுக்கு உள்ளீடு செய்வதற்கு ஏற்ற தரவுகளைச் சேகரித்தல், அவற்றைத் தேவையான வடிவில் ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றைக் கூட்டுமுயற்சியாகச் செய்யமுடியும். மயூரநாதன் 18:00, 4 மே 2008 (UTC)
- உண்மை மயூரநாதன். ஆனால் நிறைய பேர் வந்து பங்கு கொள்வார்கள் என்று நம்புகிறேன். இன்னும் போதிய அளவு பரப்புரைகள் செய்யவில்லை. நன்றாகத் தெரிந்திருந்து பங்களிக்கவேண்டிய ஏராளமான இடங்களில் இன்னமும் தமிழ் விக்கியைப்பற்றி அறிந்திருக்கவில்லை. மெள்ளவே பரவினாலும், பெருமளவில் பரவ நல்வாய்ப்புகள் உள்ளன. கட்டாயம் பரவும். அண்மையில் நண்பர் கணேசன் தெரிவித்தவாறு இப்பொழுது ஆங்கிலம்-இந்தி மொழிகளுக்கிடையேயான மொழிபெயர்ப்புகள் கூகுள் வழி கிட்டுகின்றது.
பார்க்கவும். எந்த ஓர் இந்தியமொழிக்கு வந்தாலும், தமிழில் எளிதாக மாற்றிவிடலாம். இந்திய மொழிகள் எல்லாம், தமிழ்/திராவிட சொற்றொடர் அமைப்பு கொண்டவையே. ஆனால் பங்களிக்கும் பயனர்கள் எண்ணிக்கை பன்மடங்கு விரிவடைய வேண்டும். அதுவே சிறந்தவழி. விரிவடையும்.--செல்வா 18:14, 4 மே 2008 (UTC)
- Wikipedia:தமிழ் விக்கிபீடியாவில் பங்குபெற இருக்கும் தடைகள் கவனத்தில் கொள்க. பலருக்கு ஆர்வம் இருந்தும் தடைகள் இருக்கின்றன. --Natkeeran 18:54, 4 மே 2008 (UTC)
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்பு
தொகுஆங்கில விக்கிபீடியாவிற்கு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்பு பற்றி slashdotல் படித்த நியாபகம். இங்கும் இது போல ஏதாவது முயலலாமே. --V4vijayakumar 12:46, 8 மே 2008 (UTC)
- விஜய், அவர்கள் பங்களிப்பு பயன்தரும். அவர்களை ஈர்க்க என்னென்ன செய்யலாம்? -- சுந்தர் \பேச்சு 10:53, 16 மே 2008 (UTC)
விக்கிப்பீடியா கொள்கைகளும் புதியவர்களும்
தொகுகிரந்த எழுத்துப் பயன்பாடு போன்ற கொள்கைகளில் தமிழ் விக்கிப்பீடியாவிலேயே தெளிவான இறுக்கமான கொள்கை ஏதும் இல்லாத நிலையில் புதிய பங்களிப்பாளர்களிடம் இவை குறித்து உரையாடுவதைத் தவிர்க்கலாம். ஏனெனில் அதை அவர்களின் ஆர்வப்புலத்துக்கு எதிரானதாகவும் தனிப்படவும் புரிந்து கொள்ளப்பட்டு விக்கிப்பீடியாவுக்கு வெளியில் தவறான புரிந்துணர்வைப் பரப்பவே வித்திடும். வருங்காலத்தில் அவர்கள் வேறு புலங்களில் பங்களிக்கக்கூடிய நல்ல கட்டுரைகளும் நமக்கு கிடைக்காமல் போகக்கூடும். எனவே, புதியவர்கள் எப்படி எழுதினாலும் அவர்களை ஓரிரு மாதம் அப்படியே விட்டு அவர்களை விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொள்ளச் செய்வோம். தவிர பல கட்டுரைகளிலும் ஒரு ஏற்பில்லாத மாற்று நடை இருக்கும் போது, புதியவரின் ஒரு கட்டுரையில் மட்டும் உரையாடுவது சரியாக இருக்காது. வினோத் வந்த புதிதில் நடந்த மஞ்சுஸ்ரீ உரையாடல் அவரைச் சோர்வடையச் செய்ததும் பிறகு அவர் விக்கி நடைமுறைகள், நம்மைப் புரிந்து கொண்ட பிறகு உற்சாகமாகவும் இணக்கமாகவும் பங்களிக்க முன்வந்ததையும் கவனிக்கலாம். --ரவி 10:37, 16 மே 2008 (UTC)
- கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு இங்கு சீரற்றதாக உள்ளது. சில இடங்களில் ஏற்று ஆள்கிறோம் (ஆக்ஸிஜன், நைட்ரஜன்), ஆனால் சில இடங்களில் கூடாது என்று கருத்து வைக்கிறோம் (மஞ்சுஸ்ரீ, பஹாய், ராமானுஜம்). இது சரியான போக்கு இல்லை. இது பற்றி இறுக்கமான கொள்கைகள் இல்லாவிடினும், தெளிவான பரிந்துரைகள் இருப்பது தேவை என்று நினைக்கிறேன். கிரந்த எழுத்துக்களை எந்தத் தடையும் இல்லாமல் ஏற்பதால், தமிழைக் கெடுக்கும் முகமாக (ஆனால் துல்லியம் பாராட்டுகிறோம் என்னும் பார்வையில்) அளவிறந்து பயன்படுத்துகிறார்கள். சுவாமினாதன் என்பதை ஸ்வாமிநாதன் என்றும், சுந்தர் என்பதை ஸுந்தர் என்று சீனிவாசன் என்பதை ஸ்ரீநிவாஸன் என்றும் எழுதுவது போக பிற இடங்களிலும் வெகுவாக புகுத்துகிறார்கள். இப்படி எழுதுவதால் என்ன தீங்கு என்றால், எப்படி மணிப்பிரவாளம் என்னும் கலப்பு நடையால் தமிழ் அழிந்து சிதையும் நிலையில் இருந்ததோ, அது போல மீண்டும் ஒரு முறை தமிங்கில மற்றும் பல்மொழி குதறல் "மொழியாக" நம் மொழி மாறி தமிழுக்குப் பெருங்கேடு விளையும் வாய்ப்பிருக்கின்றது. தமிழில் எழுதும் பொழுது பெயர்ச்சொல்லாக இருந்தாலும், தமிழ் எழுத்துகளுக்குள் அடங்குமாறு திரித்து எழுதுதலே சிறந்தது. திரிபுறும் ஒலிகளைப் பற்றி கவலை கொள்வது தேவையில்லை. பயனர் கனகரத்னம் சிறீதரன் அண்மையிலும் குறிப்பிட்டது போல் நைதரசன், ஐதரசன் என்று கூறுவதால் பெரும் பிழை ஒன்றும் இல்லை. அவ்வகை சொல்லாடல்கள் இலங்கையில் பெரு வழக்காக உள்ளன. நாம் நைட்ரஜன், ஹைட்ரஜன் என்று எழுதுவது ஒலிப்புத் துல்லியம் கருதியே (தமிழ் நாட்டில் இப்படி ஒரு மனப்போக்கு உள்ளது). எனவே அறிவியல் கலைச்சொற்களில் கிரந்தம் கலந்தும், மற்ற இடங்களில், ஒருவர் பெயர்ச்சொல்லாகவோ, அல்லது ஓரிடத்தின் பெயர்ச்சொல்லாகவோ இருந்தாலும் கூட கிரந்த எழுத்து கூடாது என்பது முரண்பட்ட வழக்கம் (நாம் இப்படி பின் பற்றுவதற்குக் கரணியம் அளவிறந்து கிரந்தம் பெய்து எழுதும் போக்கு வலுக்கும் என்பதால் அதனை எதிர்க்கவே; மொழிநடை என்பது இங்கு நாம் பேண வேண்டிய கடமை). பொதுவாக தமிழில் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது தவறு. இதற்கு ஒப்புதல், ஏற்பு ஏதும் இல்லை. தமிழ் மொழி, இலக்கண ஒழுக்கம் மிக்க மொழிகளில் ஒன்று. இப்படி கிரந்தம் மிகக் கலந்து எழுதுவது அண்மைக் காலத்தில் (40-50 ஆண்டுகளில்) செய்தி ஊடகங்கள், சமசுகிருத சார்புடைய மேல் மட்ட மக்களின் மொழியைப் பெரும்பான்மை மக்கள் மீது திணித்து எழுதிப் பயன்படுத்தியதுதான் என்பது என் துணிபு. திராவிட இயக்கங்ளும் தனித்தமிழ் இயக்கங்களும் ஓரளவிற்கு இப்போக்கிற்கு மாற்றாக இயங்கி வந்துள்ளனர். பெரும்பான்மையான தமிழர்களின் நிலை இதற்கு இரண்டிற்கும் இடைப்பட்டது. பொது மக்கள் வழக்கில் கிரந்தம் ஏறத்தாழ அறவே கிடையாது. புதுப் பயனர்களிடமும், இதமுடன் நம் கொள்கைகளையும், பரிந்துரைகளையும் எடுத்துரைத்து வழிப்படுத்துவது தவறல்ல. அவரவர் அவரவர் விருப்பப்படி எழுதினால், விக்கித்திட்டம் சிதைந்து விடும். மொழிநடை பற்றி உறுதியாக இருப்பதில் தவறில்லை. அது ஒரு கலைக்களஞ்சியத்தின் கடமைகளுள் ஒன்று. முதலில் இருந்தே சீர்செய்து வளர்ப்பதே நல்லது. மஞ்சுசிரீ என்று எழுதுவதால் ஒன்றும் குறைந்து விடாது. ஆழ்வார்கள் எழுதியுள்ளார்கள். இங்கே (பிற இடங்களிலும்) கிரந்த எழுத்துக்களை வலியுறுத்தும் தமிழர்களில் சிலர் பிற மொழிகள் இவ்வாறு தம் அகரவரிசையையே மாற்றுவார்களா (அப்படியே ஒரு சில மொழிகள் செய்வதாயிருந்தாலும், நாம் ஏன் செய்தல் வேண்டும்? ஏன் ஒலித்திரிபுக் குறிகளைக்கொண்டோ, அல்லது திரித்தோ எழுதலாகாது ?) என்று எண்ணிப்பார்க்க வேண்டும். மஞ்சுஸ்ரீ என்னும் சொல்லை திபெத்திய, நிப்பானிய, சீன மொழிகள் எவ்வாறு ஆண்டுள்ளனர்? இத்தனைக்கும் அவர்களில் பலர் புத்தமதம் பின்பற்றுவோர்கள். ஒருசிலருக்குத் தமிழ் மொழி என்பது இவர்களுக்குக் கிள்ளுக்கீரை போல. மொழி முறைமைகளை மதிக்க வேண்டும் என்னும் அடிப்படை பண்பு போற்றாதவர்கள். நாம் பொறுமையுடன் தமிழ் முறைமைகளைப் போற்றும் கருத்தை எடுத்துக் கூறுவது கடமை. விக்கிப்பீடியா எளிய நடையில், நல்ல தமிழ் நடையில், எல்லாக் கருத்துக்களையும் சான்றுகோள் வலுவுடன் அழகாகத் தரும் ஒரு நல்ல கலைக்களஞ்சியமாக (பொது மக்கள் களஞ்சியமாக) இருக்க வேண்டும் என்பது என் தனிக்கருத்து. நம்மில் பலரும் இக்குறிக்கோளை விரும்புவர்கள் --செல்வா 13:56, 16 மே 2008 (UTC)
செல்வா, உங்கள் கருத்தை ஏற்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், புதியவர்களை வழிப்படுத்தும் முன் அது குறித்து தெளிவான கொள்கையும் அது எல்லா விக்கிப்பீடியா பக்கங்களிலும் செயற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், "அந்தக் கட்டுரையில் மட்டும் சமசுகிருதம் / கிரந்தம் இருக்கு, அதை விட்டுட்டு என் கட்டுரையில மட்டும் கேட்கிறீங்க" என்ற கேள்வி எழுதவது இயல்பு. அதற்குத் தகுந்த விடை நம்மிடம் இருக்காது. கடைசியில் ஒரு பங்களிப்பாளரைச் சோரச் செய்தது மட்டுமே மிஞ்சும். கிரந்த எழுத்து தவிர்த்து எழுதுதல், அல்லது குறைத்து எழுதுதல் போன்ற கொள்கைகள்,வழிகாட்டல்கள் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டு செய்ய வல்லவை. அத்தகைய முடிவெடுப்பில் பெரிய அளவிலான பங்களிப்பாளர்கள் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதியே ஏதேனும் ஒரு கொள்கை முடிவெடுப்பதைத் தாமதப்படுத்தி வருகிறோம். இல்லாவ்விட்டால், "முதலில் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய 4,5 பேர் சேர்ந்து தங்கள் மொழி நடையை மற்றவர் மேல் திணிக்கிறார்கள்" என்ற குற்றச்சாட்டு வரும். எத்தனை பங்களிப்பாளர்கள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும், இன்னும் எவ்வளவு காலம் பொறுப்பது என்று தெரியவில்லை. ஆனால், நாம் இன்னும் கொஞ்சம் பொறுக்கலாம் என்றே தோன்றுகிறது.--ரவி 17:08, 16 மே 2008 (UTC)
பன்மொழிகளின் வரிசையில் தமிழ் விக்கிப்பீடியா ஓரிடம் முன்நகர்வு!
தொகு13,803 கட்டுரைகள் எழுதி 75 மில்லியன் மக்களுடைய தமிழ்மொழி விக்கிப்பீடியா 68 ஆவது இடத்தில் இருந்து 67 ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. யாரைத் தாண்டி நாம் 67 ஆவது இடத்தைத் தற்பொழுது (!) பிடித்தோம்? இந்தோனேசியாவில் உள்ள சாவாத் தீவில் மேற்கே சுந்தா என்னும் மக்கள் பேசும் சுந்தனீசு அல்லது சுண்டனீசு மொழி விக்கிப்பீடியாவைத் தாண்டி வந்துள்ளோம். யார் நம் முன்னே இருக்கிறார்கள்? 1.6 மில்லியன் மக்கள் பேசும் லாத்வியன் மொழி விக்கிப்பீடியா. அதற்கும் முன்னே நிற்கும் மொழி? இத்தாலியின் வடமேற்கே 2 மில்லியன் மக்கள் பேசும் பீடெமாண்டெயீசு மொழி விக்கி நம்மைவிட 1600 கூடுதலான கட்டுரைகளுடன். அதற்கும் முன்னே சில ஆயிரம் மக்களே பேசும் செயற்கை மொழியாகிய ஈடோ என்னும் எசுபராண்ட்டோ செயற்கை மொழியின் கிளை மொழி!! இப்படியாக மிகச் சிறு தொகையாக உள்ள பிற மொழியாளர்கள் நம் முன்னே உள்ளனர். இக்கட்டுரை எண்ணிக்கை ஒரு பெரும் பொருட்டல்ல என்பது உண்மைதான். கட்டுரைகள் பயனுடைய கருத்துக்களைத் தாங்கி நல்ல தமிழ் நடையில் இருக்கவேண்டும் என்பதே நம் குறிக்கோள். என்றாலும் சிறிது போட்டி மனப்பான்மையுடன் முன்னேறவும் முனையலாம். விரைவில் 20,000 கட்டுரைகளை அடைய வேண்டும்!!----செல்வா 16:32, 16 மே 2008 (UTC)
பொதுவான உரைநடைப் பிழைகள்
தொகுபல கட்டுரைகளை உரை திருத்தும் போது சில உரைநடைப் பிழைகளைப் பரவலாகக் காண இயல்கிறது. இது பற்றி ஏற்கனவே சுட்டி இருந்தாலும் நினைவூட்டலுக்காக இன்னொரு முறை:
- அதுவோ அல்லது இதுவோ என்று எழுதுவது பிழை. அதுவோ இதுவோ என்று எழுதுவது தான் சரி. ஆங்கிலத்தில் உள்ள orஐ மனதில் கொண்டு அல்லது என்ற சொல்லை ஆள்வதனால் இந்தப் பிழை வருகிறது. பேச்சுவழக்கில் "அதுனாலும் சரி இதுனாலும் சரி; மாம்பழமோ கொய்யாவோ ஏதாச்சும் வாங்கி வா" என்று சொல்வதை நினைவில் கொள்ளலாம்.
- ஆங்கிலத்தில் உள்ள andக்கு ஈடாகப் பல இடங்களிலும் மற்றும் என்று எழுதப்படுகிறது. இந்த மற்றும் தேவையில்லை. வரிசையாக காற்புள்ளிகள் இட்டு எழுதினாலே போதுமானது. "அக்கா, அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க" என்று தான் பேச்சு வழக்கில் கேட்கிறோம். "அக்கா, அம்மா மற்றும் அப்பா எப்படி இருக்காங்க" என்று கேட்பதில்லை என்பதை நினைவில் கொள்ளலாம்.
- அசர அடிக்கும் அளவுக்கு எல்லா கட்டுரைகளிலும் தேவை இல்லாமல் பல இடங்களில் செயப்பாட்டு வினை வருகிறது. 1970ல் இந்நூல் வெளியானது என்று எழுதினாலே போதும். 1970ல் இந்நூல் வெளியிடப்பட்டது என்று சொல்லத் தேவை இல்லை. இதுவும் ஆங்கிலச் சொற்றொடர் அமைப்புகளை மனதில் கொண்டு தமிழாக்குவதால் வருவது.
கிரந்தம் தவிர்க்க எளிய வழிமுறைகள்
தொகு- கிரந்தம் தேவைப்படும் பிற மொழிச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இருந்தால் ஆளலாம்.
இஷ்டம் -> விருப்பம்.
சந்தோஷம் - > மகிழ்ச்சி
கஷ்டம் - > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்
ஸ்மைல் - > புன்னகை
- ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.
வருஷம் - > வருடம்; வருசம். ஆண்டு (ஆண்டுவிழா, ஆண்டுநிறைவு என்னும் வழக்குகள் நோக்குக)
விஷயம் - > விசயம், விதயம், விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி ("சேதி",) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்
விசேஷம் - > விசேசம், விசேடம், சிறப்பு, கொண்டாட்டம்
விஷம் - > விசம், விடம் (விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி :) ) நஞ்சு
ஷாந்தி -> சாந்தி
ஷங்கர் - > சங்கர்
ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் - > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)
ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி - > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி. (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)
மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.
- பொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது.
- இடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.
உரை திருத்தக் குழு
தொகுஉரை திருத்தும் ஆர்வலர் குழுவுக்கு ஆட்கள் தேவை. கோபி விடுப்பில் இருக்கிறார். சிவா, கனகு உரை திருத்தங்கள் செய்வதைக் காண இயல்கிறது. இன்னும் கூடுதலானோர் தங்கள் பெயரைத் தந்து அவ்வப்போது உதவினால், உரை திருத்தக் குழுவுக்கு என்று ஒரு பக்கம், திட்டம், வழிமுறை உருவாக்கலாம். --ரவி 23:34, 16 மே 2008 (UTC)
- என்னையும் இணைத்துக் கொள்ளவும்.--Terrance \பேச்சு 00:14, 17 மே 2008 (UTC)
- தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உரை திருத்துவதற்கென்று தனிக்குழு எதற்கு? எல்லோருமே (அ) எவரெவர்க்கு விருப்பம்/நேரம்/முனைப்பு இருக்கிறதோ அவரவர் அவ்வப்போது திருத்தியபடி செல்லலாமே? விக்கியின் அடிப்படையே அது தானே? இன்று கூட சில கட்டுரைகளில் ஒற்றுப்பிழைகளைக் களைந்தபடி சென்றேன். (புலி). இதற்கென குழு, தனி உரையாடல் தேவையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தனியான ஒரு பக்கத்தில் சில வழிமுறைகள், இத்யாதி இருப்பது புரிந்துகொள்ள முடிகிறது. --இரா. செல்வராசு 00:40, 17 மே 2008 (UTC)
செல்வராசு, விக்கிப்பீடியாவில் எல்லாரும் எல்லா பணிகளையும் தாராளமாகச் செய்யலாம். எந்தக் குழுவிலும் பதிந்து கொண்டவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், வார்ப்புரு திருத்த, பகுப்புகள் சேர்க்க, அழகுபடுத்த, விசமக்காரர்களைத் தடுக்க என்று குட்டிக் குட்டிப் பணிகளுக்குத் தனித்தனிக் குழுக்கள் அமைத்து, வழிகாட்டுப் பக்கங்கள் தருவது இந்தப் பணிகள் நோக்கிய உழைப்பைப் பெருக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவும். இது எல்லா விக்கிப்பீடியாக்களிலும் உள்ள வழமையே. எல்லா தகவல்களையும் ஆலமரத்தடியில் இடுவதற்குப் பதில் அந்தத் திட்டப் பக்கங்களில் இட உதவும். தமிழ் விக்கிப்பீடியாவிலேயே கூட ஏற்கனவே நாடுகள் திட்டம், மொழிகள் திட்டம் என்று பல திட்டக்குழுக்கள் உள்ளன.--ரவி 11:08, 17 மே 2008 (UTC)
Account created automatically ??
தொகுஅண்மையில் இப்படி Account created automatically என்று பல பயனர் கணக்குகள் உருவாகுகின்றனவே, இவை எதனால் என்று யாருக்கும் தெரியுமா? ஒரே பயனர் கணக்கைக் கொண்டு பல மொழி விக்கிகளில் பங்களிக்கலாம் என்னும் திட்டத்தின் பயனாக ஒருக்கால் இப்படி உருவாகின்றனவே என்று ஒரு ஐயம். தெரிந்தவர்களை விளக்க வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 20:09, 27 மே 2008 (UTC)
- ஆம். முதலில் வெள்ளோட்டமாக நிருவாகிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயனர் கணக்கு வசதி இப்போது அனைவருக்கும் வழங்கப்படத் துவங்கியுள்ளதோ என்னவோ. -- சுந்தர் \பேச்சு 14:29, 31 மே 2008 (UTC)
- ஆம் உறுதிபடத் தெரிந்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 14:33, 31 மே 2008 (UTC)
- நன்றி, சுந்தர். நானும் அப்படித்தான் நினைத்தேன். இதனால் ஒரு சிறு குழப்பம் வர வாய்ப்புள்ளது. உண்மையில் பங்குகொள்ளாமல், மொழி அறிவும் இல்லாமல், "பெயரளவில்" இத்தனைப் பயனர்கள் இந்த மொழி விக்கியில் உள்ளார்கள் என்று ஒரு தவறான எண்ணம் ஏற்படுத்த வாய்ப்புண்டு. தமிழறிந்தும், பங்களிக்கும் ஆற்றல், திறம் இருந்தும், பங்களிக்காமல் இருப்பவர்கள் போக இப்படியும் பலர் சேர இனி இயலும். திடீர் என்று ஆங்கில விக்கியில் உள்ள 7 214 799 (ஏழு மில்லியனுக்கும் கூட!) பயனர்களில் ஒரு 2-3 மில்லியன் பயனர்கள் வந்து சேருவார்களோ என்னவோ !!! :)--செல்வா 15:18, 31 மே 2008 (UTC)
- ஒருவேளை ஒருமுறையாவது தளத்திற்கு வராதவரை கணக்கில் சேர்க்க மாட்டார்களோ என்னவோ. பார்ப்போம். -- சுந்தர் \பேச்சு 05:04, 1 ஜூன் 2008 (UTC)
- ஆம் உறுதிபடத் தெரிந்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 14:33, 31 மே 2008 (UTC)
Wikipedia என்னும் இப்பகுப்பை (?) விக்கிப்பீடியா என தமிழில் மாற்ற வேண்டும்
தொகுWikipedia என்னும் இப்பகுப்பை (?) விக்கிப்பீடியா என தமிழில் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பயனர்களும், நிருவாகிகளும் என்ன நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிக்க WP என்று இடுவதுபோல, நாமும் இங்கு "விப்பீ" (= விக்கிப்பீடியா) என்று குறிக்கலாம் என்ரு நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.--செல்வா 20:16, 27 மே 2008 (UTC)
- செல்வா, இது வழு தான். ஏற்கனவே இது குறித்து மீடியாவிக்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா என்பது ஒரு பெயர்வெளி. பகுப்பு இல்லை. ஆங்கிலத்தில் wp என்று இருப்பது குறுக்கு வழி என்று தான் நினைக்கிறேன். அது ஒரு தனிப் பெயர்வெளி இல்லை. இங்கும் wp என்று குறுக்கு வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு WP:AM. விபீ என்று தமிழிலும் குறுக்கு வழி ஆக்க வேண்டும் என்றால் ஆக்கலாம். குறுக்குவழி என்பதால் அங்கு சந்திப் பிழை பார்க்க வேண்டாமே? இடையில் உள்ள ப் தேவை இல்லை என்று நினைக்கிறேன். --ரவி 21:19, 27 மே 2008 (UTC)
- சந்திப்பிழைக்காக சொல்லவில்லை, ரவி. சொல்லுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக (ஆங்கிலத்தில் சுருக்கு எழுத்துக்கூட்டல்களிலும், இப்படி ஒலிப்பதற்கு ஏற்ப ஆக்குவது மரபுதானே. ஒரு பரிந்துரைதான். இவையெல்லாம் நாமே ஆக்கிக்கொள்ளும் மரபுகள்தாமே. விக்கிப்பீடியா என்னும் பெயர்வெளி பிற மொழிகளில் அவரவர்கள் மொழியில்தானே உள்ளது--செல்வா 21:41, 27 மே 2008 (UTC)
ஆம், நிறைய மொழிகளில் அவரவர் மொழியில் தான் பெயர்வெளிகள் உள்ளன, தமிழில் மட்டும் விக்கிப்பீடியா,விக்சனரி என்று எல்லா இடங்களிலும் இந்த வழுக்கள். விரைவில் களைய வேண்டும். குறுக்குவழி என்பதால் வி என்று மட்டும் கூட அழைக்கலாம். வி என்று தொடங்கும் வேறு பெயர்வெளி ஏதும் இல்லை. வி என்று எழுத பெரும்பாலான விசைப்பலகைகளில் இரண்டு விசை அழுத்தங்கள் தேவை. விப்பீ என்று எழுதினால் 6 அழுத்தங்கள் தேவைப்படுகின்றன !!--ரவி 22:17, 27 மே 2008 (UTC)
இது பற்றிய வழு பதியப்பட்டு பல நாட்கள் ஆகிறது ஒரு முன்னேற்றத்தையும் காணோம். இங்கே சென்று நீங்களும் ஒரு முறை எடுத்துக் கூறினால் விரைப்படுமோ என்னவோ?--Terrance \பேச்சு 06:57, 1 ஜூன் 2008 (UTC)
- டெர்ரன்சு. நீங்கள் விடாமல் செய்தி விடுத்ததில் அவர்கள் வழுவைச் சரி செய்துள்ளனர்! இனி இரண்டே தான் செய்ய வேண்டியதுள்ளது. இடதுபுறமுள்ள படிமத்தை மாற்ற வேண்டும். இரவியும் பிற வலைப்பதிவர்களும் இந்த பெயர் மாற்றத்தை அறிவிக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 03:59, 7 ஜூன் 2008 (UTC)
நன்றி terrance. http://tamilwikipedia.blogspot.com/2008/06/blog-post.html இல் அறிவித்திருக்கிறேன். tamil wiktionary, wikibooks, wikisource தளங்களிலும் பெயர்வெளிகளைத் தமிழில் மாற்ற வழு பதிய வேண்டும்--ரவி 09:04, 7 ஜூன் 2008 (UTC)
மிக்க டெரன்சு! உங்கள் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆக்கம் தருகின்றது. நன்றி.--செல்வா 12:33, 7 ஜூன் 2008 (UTC)
ஒரு தவறு நடந்துவிட்டது. விக்கிப்பீடியா பேச்சு என்ற பெயர்வெளிக்கு மாறாக விக்கிப்பீடியா பேச்ச என்றாகியுள்ளது. -- சுந்தர் \பேச்சு 15:39, 7 ஜூன் 2008 (UTC)
இன்று (ஜூன் 2, 2008) 14,000 கட்டுரைகளை எட்டுவோமா?
தொகுநவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது. இன்றோ நாளையோ நாம் 14,000 கட்டுரைகளை எட்டுவோம். இப்படி 6 மாதங்களில் 2,000 கட்டுரை எழுதியிருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், இந்த விரைவு போதாது (அதற்காக செயற்கையாக, கட்டுரை எண்ணிக்கையை கருத்தில் கொண்டு எழுதவேண்டாம்.). சராசரியாக நாம் ஒரு நாளைக்கு 7-10 கட்டுரைகள்தாம் எழுதுகிறோம். இது குறைந்தது நாளொன்றுக்கு 30 கட்டுரைகளாக உயர்தல் வேண்டும். பல நல்ல புதிய பங்களிப்பாளர்கள் வந்து ஆர்வமாய் ஆக்கம் தருகிறார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. Werklorum, செல்வராசு (இவர் புதியவர் அல்ல :) ), கார்திக், முகுந்த் குமார், வேந்த அரசு போன்று இன்னும் பலர் வரவேண்டும். மதிபாலா, சிவமணியன், நகுலன், இமலாதித்தன், கார்த்திகேயன், Srihari (இவர் புதியவர் அல்ல!) , Srkris, போன்ற இன்னும் பலரும் வரவேண்டும். நிரோஜன் மீண்டும் களத்தில் இறங்கி இருக்கின்றார். எப்படியாவது நாளொன்றுக்கு 30 கட்டுரைகள் வீதம் எழுத முயலவேண்டும். அடுத்த 2,000 கட்டுரைகளை 3 மாதத்தில் முடிக்க முயலலாமா?--செல்வா 12:31, 2 ஜூன் 2008 (UTC)
14,000 கட்டுரைகள்
தொகுஜூன் 4, 2008 அன்று தமிழ் விக்கிப்பீடியா 14,000 கட்டுரை இலக்கை அடைந்துள்ளது.--செல்வா 03:54, 4 ஜூன் 2008 (UTC)
- வெர்க்குலோரமின் சென்னை ஓபன் அந்தப்பெருமையைப் பெற்றது என்று நினைக்கிறேன். நான் 14,000-ஆவது கட்டுரையை எழுத எண்ணினேன், அதற்குள் கணவாய் வந்து திசை திருப்பிவிட்டது. :-) -- சுந்தர் \பேச்சு 04:25, 4 ஜூன் 2008 (UTC)
- அந்தப் பெருமையைப் பிடிக்கவே இரிடியம் என்னும் குறுங்கட்டுரையை எழுதினேன் :) வெகுவாக விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரை. இப்போதைக்கு இவ் இடுகை. --செல்வா 13:12, 4 ஜூன் 2008 (UTC)
- இவ்வாண்டு இறுதிக்குள் டிசம்பர் 31, 2008க்குள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 கட்டுரைகள் எழுதினால் 18,000 கட்டுரைகள் இலக்கை அடைவோம். என் பேராவல் 20,000 ஐ எட்ட வேண்டும் என்பது. இப்பொழுது போகும் விரைசலில் சென்றால் 16,000 கட்டுரைகளை எட்டலாம். 20 பேர் தொடர்ந்து பங்களித்தால் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை எழுதினால், கட்டாயம் 18,000 கட்டுரைகளை அடையலாம். --செல்வா 13:18, 4 ஜூன் 2008 (UTC)
- கட்டாயம் முயல்வோம் செல்வா. நான் நாளுக்கொரு கட்டுரை எழுத முயல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:07, 5 ஜூன் 2008 (UTC)
- நன்றி, சுந்தர்! உங்களைப்போல இன்னும் பலர் முன்வந்தால், இடையறாது உழைக்கும் மயூரநாதன், கனகு, வெர்க்லோரும், நற்கீரன் போன்றோருக்கு நற்துணையாய் இருக்கும். சிறுதுளி பெரு வெள்ளம் என்னும் மந்திரத்தை நினைவில் கொள்ளவேண்டும். நித்தம் முடியாவிட்டாலும், 2-3 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு 4-5 வரிகள் கட்டுரையாவது எல்லோரும் எழுதுதல் வேண்டும். செல்வராசு பொன்றவர்கள் முன்வந்திருப்பது பெரும் ஊக்கத்தைத் தருகின்றது. ஒரு சிலர் இங்கு பங்களிக்காவிட்டாலும், வெவ்வேறு வழிகளில் தமிழ்ப்பணி ஆற்றுகிறார்கள் என்பதை அறிவேன். ஆனால் என் வேண்டுகோள் என்னவென்றால், எங்கு எது செய்யினும், இங்கு 3 நாட்களுக்கு ஒரு முறையாக ஒரு 4-5 வரிகள் கட்டுரையாவது தொடங்கி எழுதுங்கள் என்பதே!. உங்கள் முன்வருகைக்கு நன்றி, சுந்தர். நானும் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கட்டுரையாவது எழுதுதல் வேண்டும் என்று எண்ணியுள்ளேன். --செல்வா 16:23, 5 ஜூன் 2008 (UTC)
- கட்டாயம் முயல்வோம் செல்வா. நான் நாளுக்கொரு கட்டுரை எழுத முயல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:07, 5 ஜூன் 2008 (UTC)
- இவ்வாண்டு இறுதிக்குள் டிசம்பர் 31, 2008க்குள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 கட்டுரைகள் எழுதினால் 18,000 கட்டுரைகள் இலக்கை அடைவோம். என் பேராவல் 20,000 ஐ எட்ட வேண்டும் என்பது. இப்பொழுது போகும் விரைசலில் சென்றால் 16,000 கட்டுரைகளை எட்டலாம். 20 பேர் தொடர்ந்து பங்களித்தால் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை எழுதினால், கட்டாயம் 18,000 கட்டுரைகளை அடையலாம். --செல்வா 13:18, 4 ஜூன் 2008 (UTC)
- அந்தப் பெருமையைப் பிடிக்கவே இரிடியம் என்னும் குறுங்கட்டுரையை எழுதினேன் :) வெகுவாக விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரை. இப்போதைக்கு இவ் இடுகை. --செல்வா 13:12, 4 ஜூன் 2008 (UTC)
சீன மொழிச் சொற்களுக்கு ஒரு சீரான முறை தமிழில் வேண்டும்
தொகுசீன மொழிச் சொற்களை எப்படி தமிழில் ஓரளவுக்கு சீர் செய்து எழுதுதல் என்று எங்காவது கருத்தாட வேண்டும் (ஆலமரத்தடி?). ஏனெனில், ஒரு சீனக் கருத்தெழுத்தை ஓரிடத்தில் ஒருவாறு எழுதினால், எல்லா இடங்களிலும் அப்படியே எழுதுவது நல்லது. சீன மொழி இவ்வகையில் எளிதானதே (ஆங்கிலம் போல் இடத்துக்கு இடம் மாறுவதல்ல). சீன மொழியில், ஓரொலி குறைந்தது 4 வகையான துடி அல்லது ஆரோசையுடன் (pitch) வருவது ஒன்றுதான் புதிதாக கற்பவர்களுக்குக் கடினம். கீழிருந்து மேலோசை, மேலிருந்து கீழோசை, தாழ் ஓசை, உயர் ஓசை ஆகிய நான்கினையும் தமிழில் குறிக்க ஒரு வகை வகுக்கவேண்டும். நான் செய்து தர இயலும், ஆனால், வரவேற்பு இருக்குமா என அறியேன். புதிதாக ஒன்றை நுழைக்கிறேன் என்று எதிர்ப்பும் கிளம்பலாம். இவற்றின் தேவையை இன்னும் பலர் உணரவில்லை!--செல்வா 16:13, 5 ஜூன் 2008 (UTC)--செல்வா 16:15, 5 ஜூன் 2008 (UTC)
dopdf
தொகுபுதிய dopdf பதிப்பு வெளிவந்துள்ளது பீட்டாநியூஸ் தளத்தூடாகப் பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே நான் அனுப்பிய Bug Report இற்கு ஏற்பத் தமிழ் மெய் எழுத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் எனக்கு அறிவித்துள்ளனர். வேறேதேனும் தமிழ் எழுத்துக்களை மாற்றுவதில் பிரச்சினை இருந்தால் தயவுசெய்து ஆலமரத்தடியில் அறியத்தரவும். அவர்களை மீண்டும் நான் தொடர்பு கொள்கின்றேன். --உமாபதி \பேச்சு 18:44, 5 ஜூன் 2008 (UTC)
- உமாபதி, இரண்டு கேள்விகள்:
- பிடிஎப் கோப்புக்களில் தமிழ்ச் சொற்களைத் தேட முடிகிறதா?
- பிடிஎப் கோப்பில் இருந்து நகலெடுத்து, வேறொரு எடிட்டரில் (நோட்பேடு, வோர்டுபேடு முதலியன) ஒட்ட முடிகிறதா?
- நன்றி. --இரா.செல்வராசு 03:02, 7 ஜூன் 2008 (UTC)
- பி.டி.எஃப் கொப்புகளில் தமிழில் தாரளமாக தேட முடியும். எனினும் யூனிகோடு உரையை பிற உரைச்செயலிகளில் ஒட்டும் போது உயிர்மெய்யெழுத்துக்கள் Base Consonant + Combining Vowel Marker என்கிற ரீதியில் உடைந்து விடுகிறது. எகர ஏகார ஐகார ஒகர ஓகார ஔகார உயிர்மெய்யெழுத்துக்களில் இப்பிரச்சினை வருகிறது. எ.டு. 'இப்ேபாைதய ெபௗத்த ெபற்றிருந்தது, மேலும் தமிழ் கோப்புப்பெயர்களை பி.டி.எஃப் ஆவணம் ஏற்றுக்கொள்வதில்லை, தமிழ் பெயர்களை கொண்ட கோப்புறைக்குள் இருந்தாலும் பி.டி.எஃப் ஆவணகங்கள் வேலை செய்யாது. தமிழில் புக்மார்க்குகள் வேலை செய்யவில்லை. குறிப்பிட்ட தலைப்புகளை புக்மார்க் பகுதியில் காட்டினாலும் சொடுக்கினால் அந்த தலைப்புள்ள பக்கத்துக்கு செல்லவில்லை −முன்நிற்கும் கருத்து Vinodh.vinodh (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
செல்வராசு, பீடிஎப் ஒருங்குறியில் அமைந்த தேடல்கள் திருப்தி அளிக்கவில்லை. தமிழில் பெயருள்ள கோப்புக்களை அக்ரோபாட் றீடர் 7 திறக்கவில்லை ஆயினும் அக்ரோபாட் 8 இல் பிரச்சினை இல்லை. தமிழ்ப் பெயருள்ள கோப்புறையிலும் டூபீடிஎப் வேலை செய்கின்றது அக்ரோபாட் றீடர் 8 இருந்தால் சரி. பீடிஎப் ஒருவழிமுறையிலான மாற்றீடு போலவே தெரிகின்றது. புதிய வரவிருக்கும் பதிப்பில் எதாவது மாறுதல்கள் இருக்குமா தெரியவில்லை (பார்க்க http://www.betanews.com/article/Adobe_to_unveil_its_second_edition_of_PDF_Print_Engine/1212100052). நாள் மீண்டும் நீங்கள் குறிபிட்ட விடயங்களுடன் தொடர்பு கொள்கின்றேன். --உமாபதி \பேச்சு 17:47, 7 ஜூன் 2008 (UTC)
வாழும் தனி மாந்தர்களின் வரலாறுகள்
தொகுஇக் கொள்கையையும் பார்க்க வேண்டுகிறேன்: வாழும் தனி மனிதர்களின் வரலாறுகள். ஏன் எல்லா நடிகர்கள் நடிகைகள் பற்றியும் கட்டுரைகள் இருக்க வேண்டும்? நாடக, தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் பணியாற்றும் எல்லோருக்கும் தனிக் கட்டுரைகள் இருக்க வேண்டுமா? அப்படியென்றால், ஏன் மின்வாரியாத்தில் பணியாற்றும் ஒருவருக்கோ, பேருந்தில் நடத்துநராக பணியாற்றும் ஒருவருக்கோ தனி கட்டுரைகள் இருக்கலாகாது? தனி நேர்த்தி, தனிச்சிறப்பு ஏதும் எய்தாமல் இருந்தாலும் ஊடகத்துறையில் இருந்தால் மட்டும் தனிக் கட்டுரைகள் இருக்கலாமா? அதுவும் வாழும் தனி மாந்தர்களுக்கு? வேளாண்மைத் தொழிலில் பணியாற்றும் ஒருவர் பலருக்கு உண்மையான வாழ்வளிப்பது மட்டுமல்லாமல், தன் உணவு போக பலருக்கு அடிப்படையான உணவை விளைவித்துக் கொடுத்து உதவுகிறார். ஏன் ஒவ்வொரு வேளாண்மையரைப் பற்றியும் கட்டுரைகள் இருக்கலாகாது? வரும் செய்தியை படிப்பதால் அவர்கள் அரிய செயல்கள் செய்தவர்கள் ஆவார்களா? நான் இது பற்றி அதிகம் கருத்தாட விரும்பவில்லை, ஆனால் இது பற்றிய ஒரு தெளிவான சிந்தனை வேண்டும் என்று மட்டும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். --செல்வா 22:43, 9 ஜூன் 2008 (UTC)
- உண்மைதான் செல்வா, தனி மாந்தர்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதும் போது, அதுவும் வாழ்ந்துகொண்டு இருக்கிறவர்களைப்பற்றிக் கட்டுரைகள் எழுதும் போது கவனமாக இருக்கவேண்டும். ஒரு படம் நடித்தவர்கள், ஒரு கதை எழுதியவர்கள் பற்றியெல்லாம் கட்டுரைகள் விக்கிபீடியாவில் இருக்கின்றன. இவர்களில் பலர் சமூகத்துக்குப் பயன்படுகிறவர்கள் என்றோ செயற்கரிய சாதனைகளைச் செய்தவர்கள் என்றோ கூறமுடியாது. தனிப்பட்டவர்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதும்போது மேற்படி அம்சங்கள் நிச்சயமாகக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது எனது கருத்து. மயூரநாதன் 02:39, 10 ஜூன் 2008 (UTC)
- ஒரு படம் அல்லது நாடகம் மட்டுமே நடித்தவர்கள் மற்றும் தனிச்சிறப்பு ஏதும் எய்தாத ஊடகவியலாளர்கள் முதலானோரைப் பற்றிய உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். மற்றபடி, இங்கு கட்டுரை எழுதப்படும் தகுதி, அந்த நபரின் பயனுடைமையைப் பொருத்ததல்ல. அப்படி இருப்பின் ஒரு வேளாண்மையாளரோ, நடத்துனரோ ஊடகவியலாளர்களைக் காட்டிலும் பெரும்பயன் தருபவர்கள் என்பது பலரது நேர்மையான கருத்து. ஆனால், கட்டுரை பெரும் தகுதி சமூகத்தில் ஒரு நபர் எந்த அளவு அறியப்பட்டுள்ளார் என்பதைப் பொருத்தே அமைகிறது. அதனாலேயே பத்து சிறுமிகளைக் கொலை செய்த ஒரு நபரைப் பற்றியும் நாம் கட்டுரை எழுத வேண்டியுள்ளது. இதிலும் சில மாற்றுக்கருத்துகள் உண்டு. சமூகத்தில் பெரிதும் அறியப்பட்ட நபரா அல்லது ஆய்வுரைகள் போன்றவற்றில் எழுதப்பட்டிருக்க வேண்டுமா என்பது கேள்வி. சிலர் விக்கிப்பீடியா ஒரு தாளில் அச்சடிக்கப்பட்ட கலைக்களஞ்சியமில்லையாதலால் பொதுவாக அறியப்பட்டவர் எவரைப்பற்றியும் எழுதலாமென்கின்றனர். இதன் விளைவாக ஆங்கில விக்கியில் ஆடல் பாடல் கலைஞர்களைப்பற்றிய முழுநீள சிறப்புக்கட்டுரைகள் மலிந்துள்ளன. அதே வேளை, அண்மையில் எழுதப்பட்ட டல நபர் கட்டுரைகள் விளம்பரம் தேடும் வகையில் அமைந்துள்ளதாகவே உணர்கிறேன். தவிர அவர்கள் அந்த துறைகளில்கூட வெகுவாக அறியப்பட்டவர்கள் போலத் தெரியவில்லை. அத்தகு கட்டுரைகளை நீக்கவோ சுருக்கி பட்டியல்களில் இடவோ நாம் கொள்கை வகுக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:32, 10 ஜூன் 2008 (UTC)
- விளம்பரத்தைத் தவிர்ப்பது நன்று. ஆனால் இறுகிய வரையறை கொள்வது அவ்வளவு நல்லதல்ல. சிலரை அன்னியப்படுத்தக்கூடும். யார் இதை தீர்மானிப்பது?
- நடைமுறையில் நான் பார்ப்பது என்னவென்றால் ஊடகத்துறை (எழுத்து, திரை, வானொலி, தொலைக்காட்சி), மற்றும் சில கலைத்துறைகள், அரசியல் ஆகிய துறைகளில் இருப்பவர்களை மக்கள் இலகுவில் அறிந்து வைத்திருக்கின்றார்கள். எத்தனை அறிவியலாளர்களை, அல்லது சிறந்த பணியாற்றிய சேவையாளர்களை, போர் வீரர்களை பொது மக்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள். எனவே எல்லோருக்கு ஒரே அளவீடு இங்கே பயன்படுமா என்பது கேள்விக் குறியே? மேலும், அரசியல்வாதிகள் பற்றி பலரும் அறிந்துவைத்திருப்பது மக்களாட்சிக்கு நன்று. எனவே அனேக அரசியல்வாதிகள் பற்றி கட்டுரை எழுதுவது தகுமா? அல்லது நடுவண் அரசு அரசியல் வாதிகளைப் பற்றி மாத்திரம் கட்டுரைகளை எழுதி விட்டு பஞ்சாயத்து locals தேவையில்லையா? இதை மக்கள் அவ்வளவு அறிந்து வைத்திருக்க தேவையில்ல ஒரு துறையிடன் ஒப்பிட்டு பாக்கவும்.
- நடைமுறைச் சிக்கல்களையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். --Natkeeran 12:18, 10 ஜூன் 2008 (UTC)
- நடைமுறைச் சிக்கல்கள் புரிகின்றன, நற்கீரன். மக்கள் வெகுவாக அறிந்திருக்கக்கூடிய துறைகளில் இருப்பவர்களுக்கான குறைந்த அளவுத் தகுதியை உயர்த்தி அதன்பின்னர் அவர்களைக் குறிப்பிடலாமா என்று நோக்க வேண்டும். வாழும் நபரானால் அவரைப் பற்றி அவருக்குத் தொடர்பில்லாத ஏதேனும் ஒரு நம்பத்தகுந்த தளத்திலாவது குறிப்பு வந்திருக்கிறதா என்று பார்க்கவும். வலையில் இல்லாவிட்டாலும் பதிக்கப்பட்ட நூலிலோ ஓரளவேனும் அறியப்பட்ட இதழ்களிலோ அவர் குறிப்பிடப் பட்டிருத்தல் வேண்டும் என்ற குறைந்த அளவுத் தகுதியை வைத்துக் கொள்வோம். தேவைப்படும் இடங்களில் இணக்கமுடிவுக்கேற்ப தளர்த்திக் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 13:18, 16 ஜூன் 2008 (UTC)
தானியங்கிகளின் செயல்பாடுகள்
தொகுபலமுறை தானியங்கிகள் சில மொழி விக்கிகளுக்கான இணைப்பை சேர்க்கும்பொழுது, வேறு சில விக்கிகளுக்கான இணைப்பை விட்டுவிடுகின்றன அல்லது நீக்குகின்றன. இந்த தானியங்கிகளின் இயக்கங்களை யார் கண்காணிக்கிறார்கள்? இவை மாற்றி அமைக்கின்றன போலும்!! --செல்வா 21:09, 12 ஜூன் 2008 (UTC)--செல்வா 21:15, 12 ஜூன் 2008 (UTC)
சமுதாயம், சமூகம், குலம், குடும்பம் Society, Community, Tribe, Family, குமுகாயம், குமுகம் ???
தொகு"குமுகம் = சமூகம் (குமுகம் என்பது குமிந்து கிடக்கும் மக்கள் கூட்டம். கும் என்னும் வேர் சம் என்று திரிந்து சமூகம் என்ற இருபிறப்பிச் சொல்லை உருவாக்கும். தமிழ்ச்சொல் இருக்கும் போது கூடியமட்டும் இரு பிறப்பிச் சொல்லைத் தவிர்ப்பது நல்லது."
"குமுகங்களின் ஆயம் குமுகாயம்; (பல குமுகங்களின் தொகுதி குமுகாயம்) இதைச் சமுதாயம் என்று இருபிறப்பிச் சொல்லாய் அழைப்பதையும் தவிர்க்கலாம்."
http://valavu.blogspot.com/2006/07/blog-post.html
முன்னரும் பலர் பல இடத்தில் உரையாடி இருந்தாலும், குமுகம் என்ற சொல்லை Community ஈடாக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அப்படியானால், குமுக வாசல் என்றல்வா வரவும்.
சிக்கல் என்னவென்றால், தற்போது சமூகம் சமுதாயம் society குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.
தயவு செய்து இயன்றவரை பொது வழக்கத்தை கருத்தில் கொண்டு பதிற்குறி தரவும். நன்றி.
--Natkeeran 19:39, 13 ஜூன் 2008 (UTC)
- குமுகம் என்பது எக்காலத்திலும் தமிழில் வழங்கிய சொல்லாகத் தெரியவில்லை. எனவே அது திரிந்து சமூகம் என்னும் இருபிறப்புச் சொல்லை உருவாக்கிற்று என்பது சரிபோல எனக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்தின் com (comunity) என்பதுடன் இயைந்து வரவேண்டும் என்பதற்காக வலிந்து பெறப்பட்ட வேர்ச்சொல் தான் கும் என்பது எனது கருத்து. குமுகம், குமுகாயம் என்பனவெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட சொற்கள். வடசொற்களை நீக்கவேண்டும் என்பதற்காக வேறு புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் இல்லாத நிலையில், புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்பது உசிதமானது அல்ல. தமிழில் கலந்துவிட்ட பல்லாயிரம் சொற்கள் ஒவ்வொன்றுக்கும் முன்பின் பழக்கமற்ற தமிழ்ச்சொற்களை வலிந்து உருவாக்கிக் கலந்துவிட்டால் அது மக்கள் தமிழுக்குப் புறம்பான அதீத தமிழ்ப் பற்றாளர் தமிழொன்றைத்தான் உருவாக்கும். பொது மக்கள் அதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். புதுப் பொருள்களுக்கும் கருத்துருக்களுக்குமான சொற்களை வலிந்து உருவாக்கலாம். அதில் தவறில்லை.
- இராமகியின் முயற்சிகள் தொடர்பில் எனக்குக் கொள்கையளவில் மிகுந்த மதிப்பு உண்டு. ஆனாலும் சொற்கள் உருவாக்கம் தொடர்பாகச் சில விடயங்களில் அவருடைய முறைகளை என்னால் ஏற்க முடியவில்லை. முக்கியமாகச் சொற்களுக்கான கருத்துருக்களை பிறமொழி மூலங்களில் தேடுதல், ஆங்கிலச் சொற்களோடு ஒலித் தொடர்புகளை வலிந்து புகுத்துதல் என்பன அவற்றுட் சில. பிற மொழிச் சொற்களை நீக்க விரும்பும் நாம் இவ்வாறான கருத்துரு, ஒலிப்பியல் இயைபுகளை மட்டும் ஏன் விரும்புகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.
- தமிழில் இல்லாத சொற்களைப் புதிதாக உருவாக்கித் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால், பல நூறு ஆண்டுகள் புழக்கத்தில் உள்ள சொற்களுக்குப் பதிலாக வலிந்து உருவாக்கிய புதிய சொற்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவது குழப்பத்தையே உண்டாக்கும். தமிழ் விக்கிப்பீடியா ஒரு சோதனைக் களம் அல்ல. குமுகாயம், குமுகம் போன்ற சொற்களைவிட சமூகம், சமுதாயம் என்னும் சொற்களைப் பயன்படுத்துவதையே நான் விரும்புகிறேன். மயூரநாதன் 20:44, 13 ஜூன் 2008 (UTC)
- இங்கு குறிப்பிட்ட மயூரநாதனின் கருத்துக்களுடன் மிகப்பெரிதும் உடன்படுகிறேன். இராம.கி அவர்களுடைய சொல்லாக்கங்களைப் பற்றி மயூரநாதன் குறிப்பிட்டுள்ள கருத்தும் என் கருத்துக்கு மிக நெருக்கமானவையே. சமூகம், சமுதாயம் என்னும் சொற்கள் நன்றாக வழக்கூன்றிய சொற்கள், அவற்றை மாற்ற வேண்டும் என்னும் நினைப்பில் வேறு சொற்கள் புகுத்துவது நல்லதல்ல. நானும் குமுகம், குமுகாயம் என்னும் சொற்களைப் பல பயன்படுத்துபவன்தான். ஆனால் அதற்காக, எல்லோரும் எல்லா இடங்களிலும் குமுகம், குமுகாயம் என்னும் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்று பரிந்துரைக்க வில்லை. நான் இச்சொற்களை முதன்முதலாக 1968-1970 காலப்பகுதியில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தேவநேயப் பாவாணர் போன்றோர்களின் தனித்தமிழ் இயக்கம் சார்ந்த எழுத்துக்களில்தான் சந்தித்தேன். இச்சொற்கள் இன்றும் சிறுவழக்கு உடையனவே. சமுதாயம், சமூகம் முதலியன எப்பொழுதில் இருந்து வழக்கில் உள்ளன என்றோ, எவ்வளவு பரவலாக பயன்பட்டு வந்தன என்றோ அறியேன் (தமிழ் இலக்கியங்களில் உள்ளனவா, தேவார-திருவாசகம்-நாலாயிரத்திவ்விய பிரபந்தம் போன்ற சமய இலக்கியங்களில் உள்ளனவா என்றும் அறியேன். இருந்தால் மிக அருகியே இருக்கவேண்டும் - நான் பார்த்த நினைவில்லை). எப்படியாயினும் கடந்த 100 ஆண்டுகளிலாவது இச்சொற்கள், சில ஊடகங்களிலாவது நன்றாக வழக்கூன்றியவை. எனவே குமுகம், குமுகாயம் என்னும் சொற்களோடு ஒப்பிடும்பொழுது சமூகம், சமுதாயம் அதிகமாகப் புழங்கும் சொற்கள் (அதற்காக ஏற்கவேண்டும் என்பதல்ல என் முன்வைப்பு). ஆங்கிலத்தோடு அதிகம் உறவாடும் நாம் இன்று, society, community, commune, association போன்று பல சொற்களுக்கு இணையான சொற்கள் தமிழில் வழங்க வேண்டிய தேவை உடையவர்களாக இருக்கின்றோம், எனவே, புதிய சூழல்களில் பிற தமிழ்ச்சொற்களுக்கும் இடம் உள்ளது. ஆனால் ஒன்றைக் கட்டாயம் குறிப்பிடல் வேண்டும். குமுகம் என்னும் சொல் மிக வலுவான வேர் உள்ள சொல். கும், கும்முதல், கும்பல், கும்பம், கும்பிடு, கும்மாளம், கும்பினி, கும்மட்டி, குமிழி என்று பற்பல. குமட்டு, குமைதல் போன்ற பிற சொற்களும் தொடர்புடையவை. எனவே குமுகம், குமுகாயம் ஆகிய சொற்கள் வலுவான, ஆழமான தொடர்புடைய சொற்கள். நான் இச்சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்துவதற்கும் இதுவே கரணியம். சமூகம், சமுதாயம் அப்படிப்பட்ட சொற்கள் அல்ல. ஆனால், பொதுப்பயன்பாட்டுக்கு, அளவுக்கு மீறி இப்படி சொற்களை மாற்ற வேண்டாம் என்பதே என் கருத்தும். ஆனால் மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் சிலருக்கு வருவதற்கே அடிப்படை, தமிழின் முன்னுரிமைகளைப் பலரும் வலிந்து பறிப்பதே. ஒத்த மனமுடைய, ஒத்த உள்ளமுடைய என்னும் சொற்களைக்கூட மாற்றி சஹ்ருதய என்று பலர் எழுதுகிறார்கள். அப்படி அவர்கள் நுழைக்கும் பொழுது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மீண்டும் மீண்டும் எழுதி உருவேற்றுகிறார்கள். எதுகை, மோனை என்னும் சொற்களைக்கூட விடாது சமசுகிருதச் சொற்களில் எழுதுகிறார்கள். எனவே இவையெல்லாம் நாளும் நடக்கும் போராட்டங்கள். நாம் எளிமை கருதியும், பலருக்கும் சென்றைடைய வேண்டும் என்னும் நோக்கிலும், பிறமொழிச்சொற்களைத் தவிர்ப்பதில் அளவுக்கு மீறாமல்,ஆனால் கூடியமட்டிலும் நல்ல தமிழில் எழுதுவோம். --செல்வா 22:17, 13 ஜூன் 2008 (UTC)
- உங்கள் கருத்துக்களுடன் முற்றிலும் ஒத்துப்போகிறேன். நீங்கள் சொன்ன படி community=சமூகம், society=சமுதாயம் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால் த.வி society=சமூகம் என்றும், community=சமுதாயம் என்று எடுத்தாளப்பட்டுள்ளதே. அதில்தான் எனது இப்போதைய குழப்பம். --Natkeeran 22:25, 13 ஜூன் 2008 (UTC)
- Society = சமூகம்; Community = சமுதாயம் என்பது சரி என்று நினைக்கிறேன். அப்படித்தான் நான் எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். வேறு கருத்து இருந்தால் சற்று விளக்குங்கள். மயூரநாதன் 03:03, 14 ஜூன் 2008 (UTC)
- சமூகம் என்பது குழு எனவே community யைக் குறிக்கும். சமுதாயம் என்பது பரந்த society யைக் குறிக்கும். ஆங்கிலத்தில் சொசைட்டி என்னும் சொல் பரந்தவற்றுக்கும் குறுகிய அமைப்புகளுக்கும் என பல பொருள்களில் வழங்குகின்றது. சமூகம், சமுதாயம் என்பது தமிழில் வேரற்ற சொற்களாதலால் பொருள் உணர்வதும் அரிது. Macdonnell சமசுகிருத அகராதி பார்க்கவும்:
- samuha (p. 337) [ sam-ûhá ] m. V.: accumulation; C.: assemblage, mass, multitude, collection, ag- gregate (ord. mg.); corporation (rare); sum, essence (rare); -ûhana, a. sweeping to gether, heaping up (dust, --°ree;); -ûhin, a. forming an aggregate.
- சமுதாய என்று தேடினால் senagrasamudaya = assembled army.என்று தருகின்றது. பின்னர் என்னிடம் உள்ள ஆப்டேயின் சமசுகிருத அகராதியில் பார்த்து பொருள் எழுதுகிறேன். --செல்வா 12:20, 14 ஜூன் 2008 (UTC)
- Samūha - A Collection, assemblage, aggregate, heap, number Multitude, an Association, Corporation, Community, sum, totality, essence
- Samudhāya - Combination, Collection, Multitude, Mass, Totality, war, battle, reserve of an Army
விக்சனரி பயனர்களுக்கு பாராட்டுக்கள், நன்றி
தொகுநான் இன்று தேடிய பல சொற்கள் விக்சனரியிலேயே சிக்கின. சில பொருந்த விட்டாலும், என்றுமில்லாத வாறு இப்போது கூடிய சொற்கள் சிக்குகின்றன. நன்றி. --Natkeeran 15:11, 14 ஜூன் 2008 (UTC)
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Citizendium
தொகுபிற கலைக்களஞ்சியங்களில் என்ன நடக்கிறது என்று ஒரு முறை சென்று பாருங்கள்.
- http://en.citizendium.org/wiki/CZ:Workgroup_Weeks
- http://www.britannica.com/blogs/2008/06/collaboration-ownership-and-expertise/
- http://www.bbc.co.uk/dna/h2g2/
- http://googleblog.blogspot.com/2007/12/encouraging-people-to-contribute.html
--Natkeeran 14:29, 17 ஜூன் 2008 (UTC)
விக்கியிடை இணைப்புகள்
தொகுஎன்னால் சுந்தர்பாட்டை அடிக்கடி இயக்க முடியவில்லை. (இரவி, அதை இயக்க முன்வந்துள்ளார்.) நல்ல வேளையாக யாரோ (வெர்க்குலோரம்?) புதுக்கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியிலிருந்து இணைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இறுதித் தீர்வு வரவுள்ளது என நினைக்கிறேன். இந்தப் பக்கத்தைப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 04:12, 18 ஜூன் 2008 (UTC)
கட்டாயம் செய்ய வேண்டியது
தொகுநம் வாசகர்களைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு - m:General Survey Translation. நம்மில் சிலராவது இதில் இணைந்து கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:53, 18 ஜூன் 2008 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை
தொகுதமிழ் விக்கிப்பீடீயா என்ற பக்கம் முதற்பக்கத்து செல்கிறது. அதை ஒரு கட்டுரையாக ஆக்கவது கூடிய பொருத்தமாக இருக்கும். என்னிடன் ஏற்கனவே சில பந்திகள் உண்டு. பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran 19:00, 26 ஜூன் 2008 (UTC)
அரசாட்சி, பொருளாதாரம், சட்டம், சமூகம், சமயம், கருத்தியல்
தொகு- en:Legal systems of the world
- en:Social structure, en:Cultural system - நிலப்பிரவுத்துவம், சாதி,
- சமயங்கள்
- கருத்தியல்கள்: en:Ideology: பெண்ணியம், திராவிடம்,
மேலே சுட்டப்பட்ட கருத்துருக்கள் பல கட்டுரைகளுக்கு அடிப்படையாக அமைவதால், இயன்றவரை முக்கியத்துவம் தந்து தொடங்கி விரிபுபடுத்தவும். இவை சமூகம், பண்பாடு ஆகிய தாய்ப் பகுப்புகளுக்குள் வருகின்றன. இவ்வாறே பிற தாய்ப் பகுப்புகளுக்கும் அடிப்படைக் கருத்துக்கள் உண்டு என்பதும் இங்கு சுட்டத்தக்கது. --Natkeeran 15:54, 28 ஜூன் 2008 (UTC)