விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு20
தமிழ்நாட்டு உயிரினங்கள் பற்றி
தொகு--செல்வா 00:16, 6 மார்ச் 2009 (UTC)
தமிழ்நாடு கரையோரப் பகுதிகளைப் பற்றிய 133-பக்க தகவல் தொகுப்பு. பார்க்கவும்
--செல்வா 00:33, 6 மார்ச் 2009 (UTC)
தடுக்கப்பட்ட IPக்கள்
தொகுதடுக்கப்பட்ட ஐபி முகவரிகள் மற்றும் பயனர்பெயர்களின் பட்டியலில் பலர் காலவரையறையின்றித் தடுக்கப்பட்டுள்ளார்கள். இது எமது விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது எனது கருத்து.--Kanags \பேச்சு 08:16, 4 மார்ச் 2009 (UTC)
மார்ச்சு, 21, 2009 பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் தமிழ் விக்கிப்பீடியா அறிவகம்
தொகுமார்ச்சு, 21, 2009 பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் தமிழ் விக்கிப்பீடியா அறிவகம் பெங்களூருவில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நடைபெற இருக்கிறது.--கார்த்திக் 11:17, 24 பெப்ரவரி 2009 (UTC)
Institute = நிறுவனம்; Indian Institute of Science என்பதை IISc தமிழ்ப் பேரவை தற்பொழுது 'இந்திய அறிவியல் நிறுவனம்' என்றே பயன்படுத்தி வருகிறது. எனவே அவ்வாறே பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். --Arutchelvan 14:44, 27 பெப்ரவரி 2009 (UTC)
- நன்றி, அருட்செல்வன். நிறுவனம் என்று பயன்படுத்துவதில் எனக்கு ஏற்புள்ளது. மற்றவர்களின் கருத்தையும் அறிந்து கொள்வோம். -- சுந்தர் \பேச்சு 15:20, 27 பெப்ரவரி 2009 (UTC)
- Institute என்பது பொருளளவில் நிறுவனம் என்பது மிகப் பொருத்தமானதூ, ஆனால் பெரும்பாலும் கல்வி சார்பாக இருப்பதால் சில இடங்களில் கல்விநிறுவனம் என்று இருப்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. சுருக்கமாக கல்வியகம், கல்விக்கூடம் என்றும் கூடச் சொல்லலாம் என நினைக்கிறேன்.--செல்வா 15:36, 27 பெப்ரவரி 2009 (UTC)
- விக்கி கட்டுரையில் இருந்த பெயரையே இங்கும் வழங்கிவிட்டேன் :( IISc தமிழ்ப் பேரவை தற்பொழுது 'இந்திய அறிவியல் நிறுவனம்' என்றே பயன்படுத்தி வருகிறது. இந்திய அறிவியல் நிறுவனம் என்றே இனி அழைப்போம். இந்திய அறிவியல் கழகம் கட்டுரையையும் இந்திய அறிவியல் நிறுவனம் என்ற தலைப்பிற்கு மாற்றவேண்டும். சுந்தர் -> இதை பற்றிய உரையாடல் இந்திய அறிவியல் கழகம் பேச்சு பக்கத்தில் உள்ளது
300 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சில்
தொகு"There does not exist a single pamphlet on the art of making shirts, stockings, shoes, bread; the Encyclopedie is the first and unique work describing these arts useful to men, while the book trade is unundated with books on the vain and ridiculous science of armorial bearings." 300 ஆண்டுகளுக்கு முன்பு Diderot.
தமிழ் இலக்கியத்தை ஒப்பு நோக்கினாலும் இந்தக் கூற்று அன்றும் இன்றும் பொருந்தும். புராணம், சோதிடம், ஜாதகம், எண்சோதிடம், வாஸ்து, சனிபகவான், சினிமா, என தமிழ் எழுத்துலகம் இன்னும் இப்படி இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. --Natkeeran 00:50, 6 மார்ச் 2009 (UTC)
- மேற்கு மொழிகளின் வரலாற்றில் (சரி பார்க்கப்பட்டதோ, சரிபார்க்கபாடாததோ ஆகிய) கலைக்களஞ்சியம் தொகுப்பு போன்றவையே முதன்மையாக இருந்தன. அராபிய மொழியில் இருந்து கிரேக்க அறிவு நூல்களை சிறுகச் சிறுக மொழி பெயர்த்து இலத்தீனில் எழுதினர். பின்னர் இலத்தீன் வழிதான் பிரான்சிய மொழியும், இத்தாலிய மொழியும் அவற்றினை ஒட்டி பிறமொழிகளும் வளர்ந்தன. இன்றும் ஆங்கிலம் நாள்தோறும் நூல்களை பிற மொழிகளில் இருந்து மொழி பெயர்க்கின்றதுஎல்லாத்துறைகளிலும். உருசிய மொழியாளர்களும் நிப்பானிய மொழியாளர்களும் சீன மொழியாளர்களும் இதனையே செய்கின்றனர். உறங்கிக்கொண்டு இருப்பவர்கள் வெட்டி வாதம் செய்பவர்கள் குழுவில் தமிழர்கள். அதுவும் படித்தவர்களாகிய தமிழர்கள். 17 ஆவது நூற்றாண்டில் டச்சு மொழியாளர் மிக கவனமாக தொகுத்த இந்தோனீசிய செடிகொடிகளைப் பற்றிய புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார்கள். அதில் உள்ள செய்திகள் ஆங்கிலத்தில் இன்று வரை இல்லையாம். உழைப்பவர்களுக்கே உலகம். மிக அண்மைய்யில் தான் ஆங்கிலம் முன்னுக்கு வந்தது என்பதனை பலரும் நினைவில் கொள்வதில்லை (200 ஆண்டுகள், அதிலும்கடந்த 70 ஆண்டுகளில் செறிவான வளர்ச்சி)--செல்வா 01:47, 6 மார்ச் 2009 (UTC)
ஆங்கில மொழியின் வரலாற்றை நோக்கினால் உங்கள் கூற்று தெளிவாக புரியும். ஏன் நுட்பங்கள் பற்றி தமிழில் நூல்கள் எழுதப்படவில்லை என்று எண்ணுகையில், பிற மொழிகளிலும் (பிரான்சிய மொழி) 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலையே இருந்தது என்பது தெரிகிறது.
பொறிமுறை மொழிபெயர்ப்பு வரலாம். ஆனால் கருத்துருவாக்கப் பொறி வராது. தமிழ் மொழியின் நீண்ட இலக்கிய பின்புலத்தைப் பயன்படுத்தி, எமது சூழலுக்கேற்ப கருத்துக்களை உருவாக்கவேண்டும். ஒரு குயவன் எப்படி பானை செய்தான் எனபதை நாம் பதிவு செய்யவிட்டால், அடுத்த தலைமுறையினர் எவ்வளைவை இழப்பார் எனபதை எண்ணிப் பாக்க வேண்டும்.
இங்கிருக்கும் தமிழ் நூல் கடை, அல்லது நூலகங்களுக்கு செல்வதுண்டு. பெரியோருக்கான்ன பெரும்பாலான நூல்கள் (85%) சுத்த அலட்டல். புதினம், புராணம், சினிமா. ஆனால் குழந்தைகள் நூல்களில் ஒரு மாறுபாடு தெரிகிறது. குழந்தைகளுக்கான பல அறிவியல் நூல்கள் தமிழில் இங்கு நூலகங்களில் கிடைக்கின்றன. இந்த மாற்றத்தை நன்கு அவதானிக்க முடிகிறது. --Natkeeran 02:02, 6 மார்ச் 2009 (UTC)
- உண்மைதான் நற்கீரன். சென்னைக்குப் போனால் புத்தகக் கடைகளில் ஏறி இறங்குவது எனது முக்கிய வேலைகளுள் ஒன்று. இதிலிருந்து நான் அறிந்து கொண்டதின்படி, தமிழில் வெளிவரும் நூல்களில் தற்கால அறிவுத்துறைகள் சார்ந்த நூல்கள் மிகக் குறைவே. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் சோதிடம், வாஸ்து சார்ந்த நூல்களே மிக அதிகமாக விற்பனையானதாகப் பத்திரிகையில் படித்த ஞாபகம். நற்கீரன் குறிப்பிட்ட துறைகளில் வெளிவரும் நூல்களில் பலவும் கூட அவ்வத் துறைகளின் ஆய்வு சார்ந்தவையும் அல்ல. எடுத்துக்காட்டாக திரைப்படத் துறை சார்ந்த நூல்கள் பல வெளிவந்தாலும் அது தொடர்பான நுட்பங்கள், அறிவியல் போன்றவை தொடர்பிலோ, திரைப்பட அழகியல் தொடர்பிலோ அல்லது அதனை ஒரு கலையாகப் பார்த்தோ நூல்கள் வெளிவருவதில்லை. நான் புரிந்து கொண்டவரை, தமிழை அறிவியல், தொழில்நுட்ப அல்லது வேறு துறை ஆய்வு ஊடகமாகக் கருதும் போக்கு தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு என்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.
- சிறுவருக்கான அறிவுத்துறை அல்லது தொழில்நுட்ப நூல்களிலும் கூட பின்னடைவைத்தான் என்னால் காணமுடிகிறது. 1960 களில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் கலைக்கதிர் போன்ற அறிவியல் சஞ்சிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. "வேதியியல் காட்டும் புத்துலகம்", "கண்ணுக்குப் புலப்படும் புலப்படா கதிர்கள்", "இயந்திர மனிதன்" போன்ற தலைப்புக்களில் பல நூல்கள் வெளிவந்தன. ஒவ்வொன்றும் விலை ஒரு ரூபாய். நான் 10 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் "விஞ்ஞானி" என்னும் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு வந்தோம். அதில் போட்டிகள் வைத்துப் பரிசுகள் கொடுப்பதுண்டு. பரிசாக இத்தகைய நூல்களைத்தான் வாங்கிக் கொடுப்போம். இப்போது இம்மாதிரியான நூல்கள் எதையும் காணமுடியவில்லை. நூற்றுக்கணக்கில் மாத, வார சஞ்சிகைகள் தமிழில் வெளிவந்து இலட்சக்கணக்கில் பிரதிகள் விற்கும் இக்காலத்தில் கலைக்கதிர் போன்ற ஒரு சஞ்சிகை ஆயினும் வெளியிடமுடியவில்லை என்றால் அதன் பொருள் என்ன? தமிழ் மக்கள் மத்தியில், சிறப்பாகத் தமிழ் நாட்டில், ஒட்டுமொத்தமான சமுதாய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மயூரநாதன் 05:10, 6 மார்ச் 2009 (UTC)
- இன்னும் கலைக்கதிர் வந்துகொண்டிருக்கின்றது. சிறுவர்களுக்காக துளிர் என்று ஒரு இதழ் வந்துகொண்டிருந்தது ஆனால் அது நின்று விட்டதாகக் கேள்வி. சூழலியல் பற்றி சிற்றிதழாக புதுக்கல்வி என்னும் இதழ் வந்து கொண்டிருந்தது ஆனால், இன்னும் நடக்கின்றதா என அறியேன். விகடன் பிரித்தானியா சுருக்கக் கலைக்களஞ்சியம் கொண்டு வந்ததும் ஒரு நற்குறியே. பொருளியல் பற்றிய கருத்துகள் தாங்கி நாணையம் என்னும் இதழும் இது போல பற்பல இரு-கிழமை (இரு வார), கிழமை, மாத இதழ்கள் வருவது மிகவும் ஊக்கம் தருகின்றது. கிழக்கு பதிப்பகம் புதிய தலைப்புகளில் பல நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இவற்றின் தரம், நடை, பொறுப்புணர்வு யாவும் இன்னும் பல மடங்கு வளர வேண்டியன. தமிழில் 1960 களில் வெளியான தமிழ்க்கலைக்களஞ்சியம் இந்திய மொழிகளில் ஒரு பெரும் வரலாற்று நிகழ்வு. நாம் தமிழ் விக்கியை தமிழ்க்கலைகளஞ்சியத்தைக் காட்டிலும் பல மடங்கு சிறந்த (தகவல் விரிவு, செறிவு, தலைப்புகளின் பரப்பு, படம், நடை நேர்த்தி என்னும் கோணங்களில்) ஒன்றாக செய்து காட்டினால் பயன் மிகுந்த ஒன்றாக அமையும். எளிதென்று சொல்லவில்லை, ஆனால் கட்டாயம் செய்ய முடியும், செய்ய வேண்டும். தமிழ் விக்கிப்பீடியா நாளொன்றுக்கு 50,000 உக்கும் கூடுதலான எண்ணிக்கையில் பார்வை இடப்படுகின்றதே என்பதே ஒரு பெரும் வெற்றி அல்லவா? --செல்வா 13:37, 6 மார்ச் 2009 (UTC)
- இன்னும் கலைக்கதிர் வருகிறதா? கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 10 முறையாவது சென்னைக்குச் சென்றிருப்பேன். அங்கு போகும் போதெல்லாம் கலைக்கதிர் இருக்கிறதா என்று பார்ப்பதுண்டு. என் கண்ணில் படவில்லையே. அடுத்த தடவை பார்ப்போம். மயூரநாதன் 14:17, 6 மார்ச் 2009 (UTC)
- பெரும்பாலான செய்தித்தாள்/இதழ் விற்பனையாளர்கள் வருவித்து விற்பதில்லை, ஆனால் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. எங்கு கிடைக்கும் என்னும் செய்தியை கேட்டறிந்து தருகிறேன்.--செல்வா 14:34, 6 மார்ச் 2009 (UTC)
- இன்னும் கலைக்கதிர் வருகிறதா? கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 10 முறையாவது சென்னைக்குச் சென்றிருப்பேன். அங்கு போகும் போதெல்லாம் கலைக்கதிர் இருக்கிறதா என்று பார்ப்பதுண்டு. என் கண்ணில் படவில்லையே. அடுத்த தடவை பார்ப்போம். மயூரநாதன் 14:17, 6 மார்ச் 2009 (UTC)
- மலைபடுகடாம் பதிப்பகம் சூழியல் சார்ந்த நூல்களை வெளியிடுகிறார்கள், மேலும் 4/5 மாதங்களுக்கு ஒரு முறை காட்டுயிர் என்னும் சஞ்சிகை வெளிவருகிறது. சென்னை பாரதி புத்தகாலயம் குழந்தைகளுக்கான நூல்கள் எனத் தனி பிரிவையை உருவாக்கி உலகின் சிறந்த குழந்தை இலக்கியங்களைக் கொடுக்கிறார்கள். பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் பல்வேறு தலைவர்கள், விஞ்ஞானிகளை பற்றி சிறிய நூல்களை வெளியிட்டுள்ளனர். விகடனின் சுட்டி விகடன், அனைத்து விடயங்களையும் தமிழாங்கிலத்தில் கொடுக்கிறார்கள் (எ. கா: ஒரு சுட்டி விகடன் இதழில் படித்த ஞாபகம் மாங்குரோவ் காடுகள்; அலையாத்தி காடுகள் என்ற அழகு தமிழ் பெயர் கொல்லப்பட்டு :()
செல்வா குறியது போல் இவை அனைத்தின் தரம், நடை, பொறுப்புணர்வு யாவும் இன்னும் பல நூறு மடங்கு வளர வேண்டியுள்ளது--கார்த்திக் 08:45, 25 மார்ச் 2009 (UTC)
விக்கி பல்கலைக்கழகம்.
தொகுவிக்கிபீடியா பல்கலைக்கழகம் இன்னும் தமிழ் மொழியில் உருவாக்கப்படவில்லை.இலங்கை - இந்திய ஒப்பந்தம் பகுதியளவு உள்ளடக்கப்பட்டுள்ளது. மூலம்: சமாதான முயற்சியின் அடிச்சுவடுகள், அரசிலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பதிப்பிலிருந்து.
- மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளேன்.--Natkeeran 22:08, 8 மார்ச் 2009 (UTC)
மார்ச்சு 14 இல் திருச்செங்கோடு கல்லூரி பயிலரங்கு
தொகுமுனைவர் மு. இளங்கோவன் மார்ச்சு 14 இல் திருச்செங்கோடு கல்லூரியில் நடக்கும் பயிலரங்கில் அரை மணி நேரம் த.விக்கு ஒத்துக்க முன் வந்துள்ளார். ரவி போக முடியும் என்று கூறு உள்ளார். ரவி உறுதிப் படுத்த முடியுமா? கார்த்திக் சந்தர்ப்பம் வாய்த்தால் போவார். அருநாடனால் அங்கு போக முடியாது என்று கூறு உள்ளார். 400 வரையான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள். --Natkeeran 22:06, 8 மார்ச் 2009 (UTC)
திருச்செங்கோட்டில் பல கல்லூரிகள் உள்ளன, திருச்செங்கோடு கல்லூரி என எதுவும் இல்லை. கல்லூரியின் பெயர் என்னவென்று குறிப்பிடமுடியுமா? --குறும்பன் 14:16, 9 மார்ச் 2009 (UTC)
- கே.எசு.ஆர் கல்லூரியில் (KSR College) நிகழ்கின்றது. ரவி மார்ச் 14 ஆம் நாள் அங்கு கலந்து கொள்வார் என அறிவித்து உள்ளார் (நாசா நா. கணேசன் விடுத்திருந்த அழைப்பின் பேரில் அங்கு செல்கின்றார். எனக்கும் ஒரு படி விடுத்து இருந்தார்). தமிழ்மணம் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி. பேரா மு. இளங்கோவன் அவர்களின் அறிவிப்பு: http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_9901.html
--செல்வா 15:44, 9 மார்ச் 2009 (UTC)
ஆமாம், நற்கீரன். மார்ச்சு 14 பயிலரங்கில் கலந்து கொள்கிறேன். முனைவர். மு. இளங்கோவன் தொடர்ந்து தமிழ் இணையப் பட்டறைகளைப் பல இடங்களில் நடத்தி வருகிறார். வருங்காலத்திலும் விக்கிப்பீடியா சார்பாக இப்பட்டறைகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை அறிந்து கொண்டு இங்கு தெரிவிக்கிறேன். சென்னை, பெங்களூர் பட்டறைகளுக்குப் பிறகு ஓரிருவர் முனைப்புடன் பங்களிக்கத் தொடங்கி இருப்பதால், வருங்காலத்தில் களப் பரப்புரைகளில் நாம் கூடுதல் செலுத்துவது நல்லது--ரவி 04:12, 10 மார்ச் 2009 (UTC)
- நன்றி. ரவி...நீங்கள் படங்கள் எடுத்து சேர்க்க மறந்திடாதிங்கோ....--Natkeeran 23:36, 10 மார்ச் 2009 (UTC)
நாளைய திருச்செங்கோடு பட்டறை நேரடி ஒளிபரப்பு !!!--ரவி 17:42, 13 மார்ச் 2009 (UTC)
பட்டறையில் கலந்து கொண்டேன். முன்கூட்டியே நிகழ்ச்சியில் பங்கு கொள்வது பற்றிய திட்டமிடல் இல்லாததால் குறைவான நேரமே கிடைத்தது. விக்கிப்பீடியா பற்றிய சிறிய அறிமுகத்துடன், புதிதாக ஒரு கட்டுரை தொடங்கி எழுதுவது என்பது பற்றிய பயிற்சி அளித்தேன். விக்கிப்பீடியாவின் பயன்பாட்டை வியந்து பாராட்டினார்கள்.
Joomla போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி நான்கைந்து தளங்களை நிருவகிக்கும் அளவு நுட்ப அறிவுள்ள நண்பர் ஒருவருக்கே விக்கியில் எப்படி கட்டுரைகள் எழுதுவது என்று புரியவில்லை !! சுந்தர் போன்றோர் மேல் விக்கியில் இது பற்றி முறையிட்டு கூடிய விரைவில் WYSIWYG உரைத் தொகுப்பு வசதியைப் பெற்றுத் தந்தால் மிகவும் உதவும்.
புதிய கட்டுரை எழுதுவது எப்படி என்பது குறித்து ஒலி, ஒளி, உரை வழிகாட்டிகளை முதற்பக்கத்தில் இட வேண்டும்--ரவி 02:35, 15 மார்ச் 2009 (UTC)
- ரவி. இது நல்ல கருத்து (idea). அதாவது ஒலி, ஒளி. உரை வடிவங்களில் வழிகாட்டிகளை icon ஆக முதல் பக்கத்தில் இடலாம். --Natkeeran 02:42, 15 மார்ச் 2009 (UTC)
விக்கிமேனியா 2009
தொகுஆண்டுக்கொருமுறை நடக்கும் விக்கிமேனியாவில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை நான் பங்கேற்க விண்ணப்பிக்கவுள்ளேன். தமிழ் விக்கியின் வளர்ச்சி நிலைகள், எதிர்கொண்ட எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள், தமிழ் விக்சனரி தானியங்கித் திட்டம், இப்போது நாம் நடத்தி வரும் பட்டறைகள் போன்றவற்றிலிருந்து சிலவற்றைப் பொறுக்கி ஒரு கட்டுரை படிக்கலாமென்று நினைக்கிறேன். பயண உதவித்தொகை 50% கிடைத்தால் செல்வேன். மற்றவர்களும் இயன்றால் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:36, 13 மார்ச் 2009 (UTC)
- முயற்சிக்கு வாழ்த்துகள், சுந்தர். தொடக்கத்தில் இருந்தே தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பிற விக்கிமீடியா திட்டங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக நீங்கள் செயல்படுவது பயனுள்ளதாக இருக்கிறது--ரவி 02:38, 15 மார்ச் 2009 (UTC)
- Scholarship என்பதைச் சொல்லுகிறீர்களா. கட்டாயம் செய்யுங்கோ. வாழ்த்துக்கள். --Natkeeran 02:43, 15 மார்ச் 2009 (UTC)
- கட்டுரையின் தலைப்பை பற்றிக் கூறுங்கள்....முடிந்தால் சில கருத்துக்கள் பங்களிக்கிறேன். --Natkeeran 12:13, 15 மார்ச் 2009 (UTC)
- Wikipedia promotion in Indian Languagues
- The barriers to Indian Wikipedias growth
- Wikipedia and Indian languagues content development
- Longnow perspective for Indian Wikipedias
- --Natkeeran 12:20, 15 மார்ச் 2009 (UTC)
- நன்றி நற்கீரன். என்னுடைய திட்டம் தமிழ் விக்கிப்பீடியா துவக்க நாட்களில் இருந்து இன்றுவரை வளர்ந்த விதத்தையும், சந்தித்த சிக்கல்களையும், வருங்காலத் திட்டங்களையும் விரித்து "Tamil Wikipedia: A Case Study"போன்றதொரு தலைப்பில் கட்டுரை படிப்பது. இந்திய விக்கிகளுக்குப் பொதுவாக செய்வதை ஒரு panel உரையாடலாகப் பரிந்துரைக்கலாமோ? -- சுந்தர் \பேச்சு 12:10, 17 மார்ச் 2009 (UTC)
- பாக்க: விக்கிப்பீடியா பேச்சு:Tamil Wikipedia: A Case Study--Natkeeran 16:28, 28 மார்ச் 2009 (UTC)
பட்டறை வெளியீடு
தொகுபேரா.வி.கே. எதிர்வரும் பயிற்சிப் பட்டறையில் நிகழ்த்தவிருக்கும் தனது உரைக்குத் துணையாக 6-7 கணித கட்டுரைகளை அச்சிட்டு வந்தவர்களுக்குத் தரலாம் என்று பரிந்துரைத்தார். அச்சிலோ குறுவட்டிலோ இவ்வாறு தந்தால் அறைக்குத் திரும்பிய பின்னரும் நினைவுக்கு வர வாய்ப்பள்ளதால் எனக்கும் சரியாகவே தோன்றியது. கார்த்தியும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் செலவின்றி செய்ய முடியுமென்றார். அப்படியெனில் கணிதம் மட்டுமல்லாது பல துறைகளில் இருந்தும் பொறுக்கி நல்ல கட்டரைகள் சிலவற்றை ஒரு pdf கோப்பாக்கினால் போதும். விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி/தேர்ந்தெடுத்த கட்டுரைகள் என்ற பக்கத்தில் கட்டுரைகளைத் தொகுக்கலாமா? இன்றைக்குள் செய்தால் இரவி நாளைக்கு பங்குபெறும் திருச்செங்கோட்டுப் பட்டறையிலும் தர வாய்ப்புண்டு. செய்யலாமா? -- சுந்தர் \பேச்சு 06:45, 13 மார்ச் 2009 (UTC)
- ஆங்கில மற்றும் வேறு பல விக்கிகளில் விக்கிக் கட்டுரைகளை மின்னூலாக்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பார்க்க: en:Help:Books. தமிழில் இவ்வசதியை எப்படிப் பெறுவது?--Kanags \பேச்சு 07:32, 13 மார்ச் 2009 (UTC)
- நானும் கனகு கேட்கும் கேள்வியை இங்கு கேட்கவேண்டும் என 2-3 நாட்களாக எண்ணியிருந்தேன். இவ் வசதி தமிழ் விக்கியில் இருந்தால் நன்றாக இருக்கும். ஒருநாள் வரும்தான், ஆனால் நாம் முனைந்து வேண்டி முன்னமே பெற வேண்டும். பட்டறையில் பங்குகொள்வோருக்கு அச்சிட்டுத் தரவோ, வட்டில் பதிவித்துத் தரவோ எவ்வளவு செல்வாகும்? ஓரளவிற்கு நான் நேரடியான நன்கொடையாக கொடுக்க இயலும். சுந்தரோ வேறு யாரேனுமோ இது பற்றி மின்மடலில் உரையாட இயலும். --செல்வா 12:52, 13 மார்ச் 2009 (UTC)
- மின்னூல் ஒருவாக்கம் குறித்து வழு மற்றும் வசதி கோரல் தளத்தில் விண்ணப்பிப்போம். நன்கொடை அளிக்க முன்வந்ததற்கு நன்றி, செல்வா. ஏதாவது செலவு ஏற்பட்டால் பட்டறை முடிவில் கார்த்தியும் நானும் மின்னஞ்சல் செய்கிறோம். சற்றே பெரிய செலவானால் நன்கொடைகளைப் பெற்றுக் கொள்கிறோம். -- சுந்தர் \பேச்சு 04:22, 15 மார்ச் 2009 (UTC)
- இந்த வசதி இல்லாதபடியால் நாளைய பட்டறைக்கென நிரல் கிரலெல்லாம் எழுதி ஒருவாறு மின்னூல் உருவாக்கி கார்த்திக்கு அனுப்பியுள்ளேன். அவர் அதை அச்சிட்டு விடுவார். -- சுந்தர் \பேச்சு 10:59, 20 மார்ச் 2009 (UTC)
- பட்டறைகளுக்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சி. நாளை நடைபெறவுள்ள பட்டறை வெற்றிபெற வாழ்த்துக்கள்.மயூரநாதன் 11:32, 20 மார்ச் 2009 (UTC)
- மின்னூல் ஒருவாக்கம் குறித்து வழு மற்றும் வசதி கோரல் தளத்தில் விண்ணப்பிப்போம். நன்கொடை அளிக்க முன்வந்ததற்கு நன்றி, செல்வா. ஏதாவது செலவு ஏற்பட்டால் பட்டறை முடிவில் கார்த்தியும் நானும் மின்னஞ்சல் செய்கிறோம். சற்றே பெரிய செலவானால் நன்கொடைகளைப் பெற்றுக் கொள்கிறோம். -- சுந்தர் \பேச்சு 04:22, 15 மார்ச் 2009 (UTC)
- நானும் கனகு கேட்கும் கேள்வியை இங்கு கேட்கவேண்டும் என 2-3 நாட்களாக எண்ணியிருந்தேன். இவ் வசதி தமிழ் விக்கியில் இருந்தால் நன்றாக இருக்கும். ஒருநாள் வரும்தான், ஆனால் நாம் முனைந்து வேண்டி முன்னமே பெற வேண்டும். பட்டறையில் பங்குகொள்வோருக்கு அச்சிட்டுத் தரவோ, வட்டில் பதிவித்துத் தரவோ எவ்வளவு செல்வாகும்? ஓரளவிற்கு நான் நேரடியான நன்கொடையாக கொடுக்க இயலும். சுந்தரோ வேறு யாரேனுமோ இது பற்றி மின்மடலில் உரையாட இயலும். --செல்வா 12:52, 13 மார்ச் 2009 (UTC)
சுந்தர், கார்த்திக் - நீங்கள் அச்சடிக்க பயன்படுத்திய அந்த pdf கோப்பையும் பகிர்ந்தால் நன்று. அப்புறம், ஒவ்வொரு அச்சடிப்பதற்காக அல்லாமல் மின்னிதழாக வெளியிடுவதற்காக நாம் இது போன்ற பகுப்பு வாரி, மாதாந்திரத் தொகுப்புகளை pdf வடிவில் வெளியிடலாமே?!
- அறிவியலாளர்கள்
- தனிமங்கள்
- விலங்குகள்
- நாடுகள்
- மொழிகள்
- தமிழ்த் திரைப்படங்கள்
போன்ற வெவ்வேறு தலைப்புகளிலும், பல தலைப்புகளில் இருந்து சிறந்த பல நூறு கட்டுரைகளாகவும் தொகுத்து மின்னிதழ்களாக பரப்பலாம். இணையத்தில் இது போன்ற மின்னிதழ்கள் மிக அதிகமாக மின்மடல்கள், குழுமங்கள் மூலம் பரவ வாய்ப்புண்டு என்பதால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்ல விளம்பரமாக இருக்கும். இதே மின்னதழில் முதல் சில பக்கங்கள் த.விக்கு எளிய அறிமுகம், உதவிக் குறிப்புகள் தரலாம். இத்தகைய மின்னிதழ்களை இறுதி செய்யும் முன் குறிப்பிட்ட கட்டுரைகளை விரிவாக்கி, உரை திருத்தி, தரமுயர்த்த வேண்டியதும் முக்கியம். தமிழ் விக்கி அச்சு வடிவில் வெளிவருவதற்கான நேரம் கூடி வரும் வரை இத்தகைய மின்னிதழ்கள் உதவும்--ரவி 21:10, 22 மார்ச் 2009 (UTC)
- அந்த pdf கோப்பை இன்று மாலைக்குள் பதிவேற்றுகிறேன். மின்னிதழ்களை வெளியிடும் திட்டம் மிக நல்லது. இந்தத் திட்டத்தைப் போலச் செய்யலாம். மின்னிதழ் தொகுப்பதற்கு pediapress தமிழில் அவ்வளவு பயன் தராததால் இம்முறை நான் நிரல் எழுதினேன். அது முழு நிறைவு அளிக்கவில்லை. முகுந்திடமும் பீடியாபிரசைத் தமிழில் கொண்டு வருவது பொருட்டு பேசினேன். ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டால் பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:14, 23 மார்ச் 2009 (UTC)
- pdf வடிவில் வெளியிடவுள்ள கட்டுரைகளை முன்னரே முடிவு செய்தால், அவற்றில் இருக்கக்கூடிய எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் போன்றவற்றைத் திருத்தி மேம்படுத்தலாம். கூடியவரையில் முழுமைப்படுத்தவும் முடியும். மயூரநாதன் 16:23, 23 மார்ச் 2009 (UTC)
மகிழ்ச்சி
தொகு2009 ஆம் ஆண்டு த.வி.க்கு நல்ல ஆண்டாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆண்டு தொடக்கம் முதலே பட்டறைகள், தானியல் பாண்டியன், Bpselvam, சுப்ரமணி போன்றோரின் சிறந்த கட்டுரைப் பங்களிப்புகள் என்று மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அளிக்கிறது. என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்--ரவி 16:24, 18 மார்ச் 2009 (UTC)
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கும் அவற்றிற்கான கருத்துளுக்கும் ஓரு பக்கம் உருவாக்கல்
தொகுஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கும் அவற்றிற்கான கருத்துளுக்கும் ஓர் பக்கம் உருவாக்க வேண்டும். யாரேனும் உதவ முடியுமா? ரவி? கிரந்தம் பற்றி நற்கீரன் ஒரு முறை தொகுத்தார் என நினைவு. சுந்தரும் மிக நன்றாக உதவ முடியும். விக்கிப் பட்டறைக்குப் பின் செய்தாலும் போதும்.--செல்வா 16:40, 18 மார்ச் 2009 (UTC)
- விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு
- விக்கிப்பீடியா பேச்சு:ஒலிபெயர்ப்புக் கையேடு
- விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு
போன்றவற்றைச் சுட்டலாம்.--செல்வா 16:47, 18 மார்ச் 2009 (UTC)
- செய்வோம் செல்வா. -- சுந்தர் \பேச்சு 17:44, 18 மார்ச் 2009 (UTC)
- விக்கிப்பீடியா:அடிக்கடி கேட்கும் கேள்விகள் (செயப்பாட்டு வினையைத் தவிர்த்துள்ளது சரிதானே?): இந்தத் தலைப்பில் ஒரு தகவல் பக்கம் உருவாக்க வேண்டும். முதல் கட்டமாக ஆங்காங்கே இருக்கும் கொள்கை உரையாடல்களை இதன் பேச்சுப் பக்கத்திலிருந்து இணைப்பு தர வேண்டும். (நற்கீரன்?) அதன்பின் நான் சில கேள்வி-பதில்களைச் சேர்க்கிறேன். பின்னர் உரைச்செப்பம் செய்யலாம். ரவி அதைச் செய்தால் நன்றாக இருக்கும். மற்றவர்களும் இயன்றால் கட்டாயம் உதவுங்கள். -- சுந்தர் \பேச்சு 05:15, 24 மார்ச் 2009 (UTC)
நல்ல தமிழ் - விமர்சனம்
தொகுfrance : வ்றாங்ஸ் நாட்டில் வசிப்பவர்கள், தங்களை வ்றாங்ஸே(ஆண்) வ்றாங்ஸேஸ்(பெண்) எண்றும் தாங்கள் பேசும் மொழியை வ்றாங்ஸேஸ் எண்றும் அழைகிறார்கள். france எனனும் சொல்லை தமிழில் வ்றாங்ஸ் எனறு எழுதினால் எல்லோரும் (ஆங்கிலேயரை விட) சரியாக உச்சரிப்பார்கள். அல்லது கிரந்த எழுத்தாகிய pha வை பாரம்பரிய கோட்படுகளு கிணங்க உபயகிக்கலாம் , இந்த எழுத்து கிட்டத்தட்ட (வ) வணாவை பொலே தோற்றமழிக்கும். மேலும் இந்தச் செய்கை தமிழிற்கு எந்தவித கழங்கத்தையும் ஏற்படுத்தாது, எதிர்ராணது fி ஐயோ ஃபி யோ அல்லது ஃவி யோ உபயோகிப்பது. நிற்க, இந்த நாட்டை வ்றாண்ஸ் என்றும் மக்களை வ்றாண்ஸியர் என்றும் அவர்களி மொழியை வ்றாங்ஸேஸ் என்றும் அழைப்பதே தற்போதய உலகம் குறுகும் நிலைக்கு ஏற்பதாக அமைகிறது --வ்றாங்ஸே 19/03/09
- :) --ரவி 02:26, 19 மார்ச் 2009 (UTC)
பகுப்புகள் துப்பரவு விளக்கம்
தொகுதாய்ப் பகுப்புகள் துப்பரவு செய்யப்படுகின்றன. கப்பற்கலை -> கடல் போக்குவரத்துக்கு அடங்குவதால் அது நீக்கப்பட்டது (அதை நானே உருவாக்கியும் இருப்பன் என்று நினைக்கிறேன்). உணவு அறிவியல் பகுப்பில் ஒரே ஒரு கட்டுரை இருந்தால், அது அறிவியல் என்ற பொதுத் தலைப்பில் பொருந்தவில்லை என்றாலும் நீக்கப்பட்டது. பயன்பாட்டு அறிவியல் என்பது தொழில்நுட்பம் என்ற பகுப்புக்கு இணையானது என்று கருதுகிறேன். அப்படி இல்லாவிட்டால், ஒரு சில பகுப்புக்கள் வந்தவுடன் மீண்டும் உருவாக்கலாம். எதாவது ஆட்சோபனைகள் இருந்தால், வழக்கம் போல கருத்துக் கூறவும். நன்றி. --Natkeeran 01:50, 19 மார்ச் 2009 (UTC)
தனித்தமிழ் சொற்கள்
தொகுத.வி யில் தனித்தமிழ் சொற்களை அறிமுகப்படுத்துகிறோமா? அதாவது தனிக்கட்டுரை உள்ளதா? வரலாறு இதழ் http://www.varalaaru.com/Default.asp?articleid=845 தனித்தமிழ்க் கலைச்சொற்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. --குறும்பன் 16:00, 23 மார்ச் 2009 (UTC)
- தனித் தமிழ்ச் சொற்களைக் கூடியவரையில் கட்டுரைகளில் பயன்படுத்தி வருகிறோமேயன்றி அத்தகைய சொற்களை அறிமுகப்படுத்தும் பகுதி எதுவும் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை என்றே நினைக்கிறேன். உண்மையில் இத்தகைய பகுதியைத் தமிழ் விக்சனரியில் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். கட்டாயம் செய்யவேண்டியதும் ஆகும். மயூரநாதன் 16:15, 23 மார்ச் 2009 (UTC)
- நல்ல தமிழ்ச்சொற்கள் இருந்தாலோ, தெரிந்தாலோ அதனைப் பயன்படுத்தலாம். தனித்தமிழ் என்றோ அவற்றை அறிமுகம் செய்கிறோம் என்றோ இல்லை. தமிழ்ச் சொற்கள் பொருள் விளங்குவனவாக உள்ளன, அவை பிற இனமான தமிழ்ச்சொற்களுக்கு வலுவூட்டி நிற்கின்றன, சொற்பொருள் கிளைப்புக்கும், வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக உள்ளன என்று பல காரணங்களுக்காக நல்ல தமிழ்ச் சொற்களைப் பலர் பயன்படுத்துகிறாகள். ஒரு குறிக்கோள் (என் தனிக் கருத்துதான்) என்னவென்றால் எச்சொல் தமிழ் பேசும் மக்களில் பெரும்பாலுமோ அல்லது பரவலாகவோ பொருள் புரிந்து பயன்கொள்வார்கள் என்று அறிந்து அச்சொல்லைப் பயன்படுத்துதல் நல்லது. --செல்வா 15:58, 25 மார்ச் 2009 (UTC)
- அன்றாட வழக்குச் சொற்கள், பல்வேறு துறைசார் சொற்கள் உட்பட நல்ல தமிழ்ச் சொற்களை அடையாளம் கண்டு அவற்றின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். இது நல்ல தமிழில் எழுத, பேச விரும்புபவர்களுக்கு உதவும். இன்று நமக்குக் கிடைக்கக் கூடியதாக உள்ள தமிழ் அகரமுதலிகள் எதிலும் நல்ல தமிழ்ச் சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய வசதி கிடையாது. விக்சனரி இதற்கு மிகவும் வாய்ப்பான ஒரு இடம். மயூரநாதன் 16:14, 25 மார்ச் 2009 (UTC)
பயனர் கார்த்திக் நிர்வாகியாக பொறுப்பு பெறுகிறார்
தொகுசிறப்பாக பங்களித்து வரும் கார்த்திக் விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் ஏற்ப வாக்களித்த எல்லாப் பயனர்களின் ஆதரவுடன் நிர்வாகியாக பொறுப்பு பெறுகிறார். வாழ்த்துக்கள் கார்த்திக். --Natkeeran 00:38, 27 மார்ச் 2009 (UTC)
- எனக்கு இந்த வாய்ப்பை நல்கிய அனைவருக்கும் என் நன்றிகள்--கார்த்திக் 14:42, 28 மார்ச் 2009 (UTC)
- வாழ்த்துக்கள் கார்த்திக் :)--உமாபதி \பேச்சு 08:54, 31 மார்ச் 2009 (UTC)
- வாழ்த்துகள் நண்பரே...-Arutchelvan 09:56, 31 மார்ச் 2009 (UTC)
- வாழ்த்துக்கள் கார்த்திக் :)--உமாபதி \பேச்சு 08:54, 31 மார்ச் 2009 (UTC)
- வாழ்த்துக்கள் நண்பர் கார்த்திக்--கலாநிதி 16:26, 1 ஏப்ரல் 2009 (UTC)
மீள்வழி
தொகுகடாரம் என்பதற்கு மியான்மார் மீள்வழிப்பட்ட கட்டுரையாக உள்ளது. இது தவறு. கடாரம் மலேசிய தீபகற்பத்தில் இருந்த அரசாகும். கடாரம் பற்றி தனி கட்டுரை எழுத வேண்டும். எவ்வாறு தவறாக மீள்வழிப்படுத்தியதை சரி செய்வது? --குறும்பன் 18:47, 30 மார்ச் 2009 (UTC)
- இது பிழையான வழிமாற்று. கடாரம் என்பது மியன்மாரின் தமிழ்ப்பெயர் அல்ல. இதனை நீக்கிவிட்டு கடாரம் என்ற தலைப்பில் புதிய கட்டுரை எழுதவேண்டும். அல்லது வழிமாற்றை அழித்துவிட்டு இந்தப் பக்கத்திலேயே புதிய கட்டுரையை எழுதலாம். மயூரநாதன் 18:58, 30 மார்ச் 2009 (UTC)
மைக்ரோசாப்ட் என்கார்ட்டா கைவிடப்படுகின்றது
தொகுஇந்த ஆண்டுடன் மைக்ரோசாப்ட் என்கார்ட்டா கைவிடப்படுகின்றது. பார்க்க http://www.betanews.com/article/Microsoft-to-discontinue-Encarta-encyclopedia/1238487760. விக்கிப்பீடியாவிடன் போட்டியிட முடியாமையும் ஒரு காரணம் எனப்படுகின்றது. --உமாபதி \பேச்சு 08:47, 31 மார்ச் 2009 (UTC)
வடமொழி எழுத்துப் பயன்பாடு
தொகுத.வி-யின் உன்னத பயன்பாடு அனைவரும் நன்கு அறிந்ததே. தகவல் களஞ்சியமாக மட்டுமில்லாமல் நல்லத் தமிழ் எழுத்துமுறைக்குச் சான்றாகவும் இங்குள்ளக் கட்டுரைகள் திகழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்குமோ?. அந்த நோக்கத்தை மறந்து, வடமொழி எழுத்துக்களைத் தாராளமாகப் பயன்படுத்துவதுத் தமிழைக் கெடுக்கும் செயலாகும். த.வி-யில் காணப்படும் இந்தப் போக்கு வேதனை அளிக்கிறது. பங்களிப்பாளர்கள் அனைவரும் தாங்கள் இதுவரை எழுதியவற்றில் உள்ள வடமொழி எழுத்துக்களைச் சரியான முறையில் தமிழ்ப்படுத்தினால், அது தமிழுக்குச் செய்யும் பெருந்தொண்டாக அமையும். த.வி-யின் விதிகள்/கொள்கைகளில் ஒன்றாக ‘வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது’ என்பதைச் சேர்க்கவும் வேண்டுகிறேன்.
வடமொழி எழுத்துக்கள் தமிழ் அல்ல என்ற உண்மை தமிழர் நெஞ்சில் ஆழமாகப் பதிய வேண்டும். தமிழ்ப் படைப்புகளை தமிழ் எழுத்துக்களைக் கொண்டு மட்டுமே எழுத வேண்டும் என்று தமிழர் ஒவ்வொருவரும் உறுதி பூன வேண்டும் என்பதே என் அவா.
சகப் பங்களிப்பாளர்களின் கருத்தை வரவேற்கிறேன்.---தாமரைப்பூ 00:12, 2 ஏப்ரல் 2009 (UTC)
- வணக்கம் தாமரைப்பூ: உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த விடயம் மிகவும் விரிவாக இங்கு பல முறை அலசப்பட்டுள்ளது. அந்த உரையாடல்களில் இருந்து நாம் இயன்றவரை நல்ல தமிழில், தமிழ் ஒலிப்பு முறைக்கு அமைய எழுதுவதே நன்று என்று முடிவு செய்துள்ளோம். இலங்கை, தமிழ்நாடு, பிற நாடுகளிலும் கிரந்தம் தமிழ் கல்வியில் ஒர் அங்கமாக இல்லை. எனவே பலருக்கு கிரந்தைதைப் படிப்பதும் கடினமாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (இது தனிப்பட்ட அனுபவம்) அதேவேளை, நடைமுறையில் கிரந்த ஏழுத்துக்கள் பயன்பாட்டில் உள்ளன என்பதை நாம் கருத்தில் கொள்கிறோம். குறிப்பாக கிரந்ததை மையாமாக வைத்து, தமிழ் விக்கியை பயனர்கள் புறக்கணிக்க கூடாது என்பதைப் பற்றியும் நான் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒருவரின் எழுத்தில் கிரந்தம் கலந்து இருந்தால், அவர் இங்கு பங்களிக்க தயங்காமல் இருக்க வேண்டும் என்று கருதுகிறேம். அதேவேளை ஒருவர் திட்டமிட்டு கிரந்தைத்தை மிகுந்து கலந்தால், அதை நாம் வரவேற்பதில்லை. அப்படியும் சிலர் செய்துள்ளனர். இது தொடர்பாக அண்மைக்காலமாக நாம் கூடிய தெளிவாக செயற்படுகிறேம் எனலாம். மேலும் விபரம்: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு--Natkeeran 00:22, 2 ஏப்ரல் 2009 (UTC)
வணக்கம் Natkeeran: உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதே. நன்றி. கொள்கைகள்/வழிகாட்டுதல்கள் பகுதியில் இதனைக் குறித்தால் (ஒருக் கட்டாயமாக இல்லாமல் பரிந்துரையாக) அவற்றைப் படிக்கும் பங்களிப்பாளர்கள் இதனை மனதிற்கொண்டுச் செயல்படுவார்கள் என்று எண்ணுகிறேன்.--தாமரைப்பூ 00:55, 2 ஏப்ரல் 2009 (UTC)
- கிரந்த எழுத்துக்களைக் கலக்காமல் எழுத வேண்டும் என்பதில் பெரும்பாலான தமிழ் விக்கிப்பீடியாப் பங்களிப்பாளர்கள் தெளிவான சிந்தனைகளைக் கொண்டுள்ளார்கள். கிரந்தம் கலந்து எழுதுவதால் தமிழுக்கு ஏற்படக்கூடிய கெடுதல்களைக் கருத்தில் கொண்டு கூடியவரை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமலிருக்கவே முயற்சிக்கிறோம். ஆனாலும், விக்கிப்பீடியா போன்ற ஒரு திட்டத்தில் இதனைக் கட்டாயப்படுத்துவது முடியாது. இதனால், உரையாடல்கள் மூலம் இதன் கெடுதல்களை எடுத்துரைத்துப் பெருமளவுக்குக் கிரந்த எழுத்துக்களைக் குறைக்க முயன்று வருகிறோம். பல சொற்களில் மிக இலகுவாக எவ்வித விளக்கக் குறைவும் இல்லாமல் கிரந்த எழுத்துக்களை நீக்கிவிட முடியும். வேறு சில சொற்கள் சிக்கலானவை. நடைமுறையில் பெருமளவில் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவுக்கு இருப்பதால் படிப்படியாகவே இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது நல்லது. தமிழ் மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் முயற்சிக்க வேண்டும்.மயூரநாதன் 01:28, 2 ஏப்ரல் 2009 (UTC)