விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2008
- கருங்குழிகள் (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
- ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு ஆட்சி மொழியாக இருக்கிறது.
- மங்கோலியப் பேரரசு அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.
- தமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த இனிமே நாங்கதான் ஆகும்.
- தானுந்து வழிகாட்டி என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.
- அமெரிக்க உள்நாட்டுப் போர் ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.
- பண்டைச் சீனாவின் சிறந்த நான்கு கண்டுபிடிப்புகளாக திசைகாட்டி, வெடிமருந்து, காகிதம், அச்சுத் தொழில்நுட்பம் ஆகியவை கருதப்படுகின்றன.
- அபிதானகோசம் (1902), அபிதான சிந்தாமணி (1910) ஆகியவை தமிழில் வெளியிடப்பட்ட முதல் இரு இலக்கிய கலைக்களஞ்சியங்கள் ஆகும்.
- சராசரி மனிதரின் ஆயுள் எதிர்பார்ப்பு சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.
- வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.
- இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு டிம் பேர்னேர்ஸ்-லீ (படம்) கண்டுபிடித்தார்.
- தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும்.
- பெர்ள் நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.
- யூரி ககாரின் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.
- பிரெஞ்சுப் புரட்சி விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.