விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்

பட்டியலில் உள்ள 15360 பைட்டுக்கு அதிகமான கட்டுரைகளை நீக்க வேண்டும். பகுதி 1.4 வரை சரி பார்த்துள்ளேன். அதற்கு அடுத்து "இதற்குக் கீழே உள்ள கட்டுரைகளின் பைட்டு அளவைச் சரி பார்க்க வேண்டும்" என்று குறித்துள்ளேன். யாரேனும் இந்தப் பணியில் உதவ விரும்பினால், திருத்தங்களைச் செய்து விட்டு, மேற்கண்ட குறிப்பை இட்டு விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 15:25, 13 மே 2013 (UTC)Reply

தெளிவு தேவை...

தொகு

இங்கு மின்னியல் - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எனும் பிரிவின்கீழ் உள்ள அலை மின்சாரம் எனும் தலைப்பு, Tidal power என்பதனைத்தான் குறிக்கிறதா? அப்படியெனில் நீர்ப்பெருக்கு ஆற்றல் எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. இப்பட்டியலில் நாம் திருத்த வேண்டும். ஏனெனில் அலை மின்சாரம் எனும் பெயரில் கட்டுரை ஒன்றினை பயனர் ஒருவர் துவக்கியுள்ளார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:47, 7 சூன் 2013 (UTC)Reply

en:Tidal power என்பது நீர்மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் (high tide,low tide) கொண்டு உருவாக்கப்படும் ஆற்றலாகும். இது நீர்ப்பெருக்கு ஆற்றல் என கட்டுரையாக வடிக்கப்பட்டுள்ளது. en:Wave power என்பது கடலில் எழும் அலைகளின் ஆற்றலைப் பயன்படுத்துவதாகும். எனவே இதனை அலை மின்சாரம் என்று கட்டுரை வடிப்பது சரியே.--மணியன் (பேச்சு) 04:03, 10 சூன் 2013 (UTC)Reply


ஐக்கிய அமெரிக்க வரலாறு

கட்டுரை போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் வரலாறு என்ற இணைப்பு இருக்கிறது. ஆனால் ஐக்கிய அமெரிக்க வரலாறு என்ற கட்டுரை ஏற்க்கனவே உள்ளது. சிவகார்த்திகேயன் (பேச்சு) 15:14, 2 திசம்பர் 2013 (UTC)Reply

சிவகார்த்திகேயன்,அந்தக் கட்டுரை 15360 பைட்டை தாண்டிவிட்டதால் அது விரிவான கட்டுரைக்கான தலைப்பாக எடுத்துக் கொள்ளலாம். 15360 பைட்டுக்கு கீழ் இருக்கும் கட்டுரைகள் இரண்டு விதமான போட்டிகளுக்கும் ஏற்புடையது ஆகும்.அதாவது அதிக எண்ணிக்கையில் கட்டுரை எழுதவும் அதை தொகுக்கலாம்,அல்லது விவான கட்டுரைக்காகவும் தொகுக்கலாம். நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:29, 2 திசம்பர் 2013 (UTC)Reply
தகவலுக்கும் தெளிவுபடுத்தியமைக்கும் நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 06:45, 5 திசம்பர் 2013 (UTC)Reply

தப்பை

தப்பை என்பது பறையிளிருந்து வேறுபட்ட ஒரு இசைக்கருவியாக தெரியவில்லை, விளக்கவும். மேலும் பறையாட்டம் இதனையை குறிப்பது போல தெரிகிறது சிவகார்த்திகேயன் (பேச்சு) 06:46, 5 திசம்பர் 2013 (UTC)Reply

acrobatics

https://ta.wiktionary.org/wiki/acrobatics செப்பிடு வித்தை களரி விளையாட்டுகள்.

கட்டுரைப் போட்டியில் அரிய செயல் திறன் என்றுள்ளது. எது சரி? சிவகார்த்திகேயன் (பேச்சு) 21:59, 24 திசம்பர் 2013 (UTC)Reply

solidarity - உலக ஒருமைப்பாடு என்ற கட்டுரை பொருந்துமா ?? சிவகார்த்திகேயன் (பேச்சு) 21:59, 24 திசம்பர் 2013 (UTC)Reply

சந்தேகம்

தொகு

இதில் இருந்து இல்லாத பெயர்களை தலைப்புக்களில் இணைக்கலாமா? --ஆதவன் (பேச்சு) 15:13, 23 சூன் 2013 (UTC)Reply

சேர்க்கலாம் 15360 பைட் அளவைக் கவனித்தல் நல்லது.
ஆங்கிலப் பட்டியலுக்கும் தமிழுக்கும் இற்றைப்படுத்தலில் சிறு வேறுபாடு உண்டு. 15360 பைட்டு அளவைத் தாண்டிய கட்டுரைகளையும் தலைப்புகளில் இருந்து தவிர்த்து உள்ளோம். இருக்கிற தலைப்புகளை விரிவாக்கி முடித்த பிறகு, புதிய தலைப்புகளைச் சேர்ப்போமே?--இரவி (பேச்சு) 13:06, 26 சூன் 2013 (UTC)Reply
சிலவேளைகளில் தாம் தேடிவந்த தலைப்பு இல்லாவிடில் பங்குகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லவா?--ஆதவன் (பேச்சு) 14:22, 26 சூன் 2013 (UTC)Reply

கூகுள் கட்டுரைகள்

தொகு

முக்கிய கட்டுரைகளின் தரத்தின் அடிப்படையிலான பட்டியலில் தமிழில் உள்ள நீண்ட கட்டுரைகள் பகுதியைப் பார்த்தபோது அவற்றில் பல கூகுள் கட்டுரைகளாக இருப்பதைக் கண்டேன்.(உ-ம்: ஐக்கிய அமெரிக்கா, மும்பை) இது ஒரு எதிர்மறையான விளைவல்லவா. முதலில் இவ்வாறான குப்பைக் கட்டுரைகளைச் சீர்படுத்துவதில் கவனம் செலுத்துவது நன்று.--பிரஷாந் (பேச்சு) 06:03, 29 சூன் 2013 (UTC)Reply

தற்போதும் கூட மாக்கேடா கட்டுரையில் இயந்திர மொழிபெயர்ப்புச் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் தடுக்கப்பட ஆவன செய்யவும்.--பிரஷாந் (பேச்சு) 06:32, 29 சூன் 2013 (UTC)Reply

இன்னும் யார் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள், எதற்காக எனப் புரியவில்லை. தகவலுக்கு நன்றி, பிரசாந்து. தொடர்ந்து செய்தால் அத்தகைய கணக்குகளை முடக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:34, 1 சூலை 2013 (UTC)Reply

பிரசாந்து, கூகுள் கட்டுரைகள் மட்டுமே ஏறத்தாழ ஆயிரம் உள்ளன. இவற்றில் முக்கியக் கட்டுரைகள் 100ஐத் தொடும். இவற்றைச் சீராக்க வேண்டியது முக்கியப்பணி தான். ஆனால், அதைச் செய்ய முனைந்தாலே அயர வைத்து விடுவதாகப் பல பயனர்களும் சொல்லியுள்ளார்கள். முதலில் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவோம். அடுத்து இவற்றைச் சீராக்க முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:59, 1 சூலை 2013 (UTC)Reply

மாக்கோடா என்ற குறிப்பிட்ட கட்டுரையில் தானியங்கி கொண்டு மொழிமாற்றம் செய்து சேர்க்கப்பட்ட பகுதிகள் உடனடியாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றை கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரையாக இனங்காணக் கூடாது. அப்பகுதியை இப்போது நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:18, 1 சூலை 2013 (UTC)Reply
நன்றி சிறீதரன். நான் மீளமைக்க முயன்றேன், மேலே பிரசாந்தின் தொகுப்பு இருந்தபடியால் எளிதாய் இல்லை. நீங்கள் செய்தமைக்கு நன்றி. இனி இதுபோன்ற தொகுப்புகள் வந்தால் உடனடியாக நீக்கிவிடுவோம். -- சுந்தர் \பேச்சு 08:31, 1 சூலை 2013 (UTC)Reply

ஏற்கனவே விரிவடைந்த கட்டுரைகளை நீக்கி விடலாமா?

தொகு

இப்பட்டியலில் நிறைய கட்டுரைகள் சென்ற மாதமும் சில அதற்கு முன்னரேவும் இற்றைப்படுத்தப் படுத்தப்பட்டவை. அவற்றை நீக்கினால் மீதி கட்ட்யுரைகளை எளிதாக கண்டறியலாம். அவற்றை இதிலிருந்து நீக்கிடலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:08, 1 சூலை 2013 (UTC)Reply

..லாம் :)--இரவி (பேச்சு) 12:09, 1 சூலை 2013 (UTC) ..நீக்கப்பட்டன.--மணியன் (பேச்சு) 10:56, 2 சூலை 2013 (UTC)Reply

இங்கு வலைவாசல்:கிறித்தவம்/தேவைப்படும் கட்டுரைகள் என்பதும் இணைந்துள்ளதே,. அதிலுள்ள கட்டுரைகளையும் விரிவு செய்யலாமா?. அல்லது தேவை்பபடும் கட்டுரைகளை மட்டும் விரிவு செய்ய வேண்டுமா என தெளிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:55, 4 சூலை 2013 (UTC)Reply

அவை கிறித்தவ வலைவாசலின் ஒரு பகுதியாகத்தானே உள்ளன? அதில் என்ன குழப்பம்?? உங்கள் கேள்வி சரியாக புரியவில்லை. நாம் போட்டிக்காக விரிவுபடுத்த வேண்டியது இங்குள்ள கட்டுரைகளை மட்டுமே.--அராபத் (பேச்சு) 07:13, 4 சூலை 2013 (UTC)Reply
அராபத் அவர்களே இந்த தலைப்புகளின் பட்டியலில் சமயம் என்பதன் கீழ் உள்ளவற்றை நோக்க வேண்டுகிறேன். வலைவாசலின் ஒரு பகுதியாக உள்ள வலைவாசல்:கிறித்தவம்/தேவைப்படும் கட்டுரைகள் என்பதும் இங்கு இணைந்துள்ளது. தேவைப்படும் கட்டுரைகள் என்பது பட்டியல் கட்டுரையாகும். அதனால் ஒரு ஐயம் உருவாகுகிறது. வலைவாசல்:கிறித்தவம்/தேவைப்படும் கட்டுரைகள் என்பதை போட்டியின் அளவிற்கு விரிவு செய்து பட்டியலில் இணைத்துக் கொள்ளலாமா?. அல்லது தேவைப்படும் கட்டுரைகள் என்பதில் உள்ள கட்டுரைகளையும் விரிவு செய்து இணைத்துக் கொள்ளலாமா என்பதே என் ஐயம். தெளிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:26, 4 சூலை 2013 (UTC)Reply
ஓ!! இப்போது புரிந்தது :) விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் பகுதியில் ஒரு பயனரால் தவறுதலாக சேர்க்கப்படது, அப்படியே இங்கும் இரவியால் கவனிக்கப்படாமல் படியெடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் நோக்கமே, அனைத்து மொழி விக்கிகளிலும் இருக்க வேண்டியவை என அடையாளப்படுத்தப்பட்ட கட்டுரைகளை விரிவாக்குவதுதான். எனவே அதை நீக்கிவிட்டேன். --அராபத் (பேச்சு) 08:31, 4 சூலை 2013 (UTC)Reply
தவறுதலாக இணைக்கப்பட்டதா?. :-) பட்டியல் கட்டுரை இருப்பது கண்டு குழப்பம் அடைந்துவிட்டேன். தெளிவு செய்தமைக்கு மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:38, 4 சூலை 2013 (UTC)Reply

தாவரவியல்

தொகு

ஏங்க! இந்திய நாட்டில் வாழும் பெரும்பான்மையினரை ஏன் ஒதுக்கிவிட்டீர்கள்? வேளாண்மை, தமிழகம் குறித்து ஒன்றும் இல்லையே? எது எப்படியோ? நான் நம் நாட்டின் தாவர வளத்தை பற்றி, குறிப்பாக மூலிகைகள் பற்றிய, சித்தமருத்துவம் பற்றிய கட்டுரைகளை உருவாக்குவேன்.வணக்கம்--≈ உழவன் ( கூறுக ) 13:27, 13 சூலை 2013 (UTC)Reply

மின்னியல்

தொகு

இங்கு மின்னியல் எனும் தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள கட்டுரையின் பெயர்களுக்கு அத்தலைப்பு பொருத்தமானதாக இல்லை. http://meta.wikimedia.org/wiki/List_of_articles_all_languages_should_have எனும் இணைப்பில் 'Energy and fuels' என்கின்ற தலைப்பின் கீழ் இக்கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழில் 'ஆற்றலும் எரிபொருட்களும்' என்பது பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன். நன்றி. --Praveenskpillai (பேச்சு) சூலை 2013 (UTC)

பெயர் திருத்தம் தேவை

தொகு

ஆயுதங்கள் பிரிவில் tank என்பதிற்க்கான தமிழாக்க பெயர் குழப்பம் இருப்பதை கவனித்தேன் அதற்கு "கவசமிட்ட பீரங்கி வாகனம்" என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றேன்.. Muthuraman99 (பேச்சு) 05:53, 7 ஆகத்து 2013 (UTC)Reply

இசுலாமியப் பொற்காலம் கட்டுரை உள்ளது. இஸ்லாமியப் பொற்காலம் இனைப்பை மாற்ற வேண்டும். 122.164.143.192 19:49, 21 திசம்பர் 2013 (UTC)Reply

பழைய கட்டுரைகளை அகற்றல்

தொகு

இப்பக்கம் காக்கப்பட்டுள்ளதால் விரிவாக்கப்பட்ட கட்டுரைகளை அகற்ற முடியாமல் உள்ளது. இதனால் ஒரே கட்டுரையையே இருமுறை தொகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணம், சமணம். எனவே உடனுக்குடன் அதிகாரி தரத்திலுள்ளோர் விரிவாக்கி முடியும் கட்டுரைகளை அகற்றுமாறு வேண்டுகிறேன்.--பிரஷாந் (பேச்சு) 10:40, 11 ஆகத்து 2013 (UTC)Reply

இப்பணியை ஏதேனும் bot மூலம் செய்யவியலுமா ?--மணியன் (பேச்சு) 11:37, 11 ஆகத்து 2013 (UTC)Reply

வேதியியல்

தொகு

மூலக்கூற்று இடைவிசை என்னும் கட்டுரையைச் சில நாட்களுக்கு முன் தான் ஆரம்பித்திருந்தேன். இப்போது தான் இப்பட்டியலிலும் அது மூலக்கூற்றிடை விசை என்று இருப்பதைக் கண்டேன். அதனைத் திருத்தினால் இணைப்புச் சரியான கட்டுரைக்குச் செல்லும். கூடுதல் தகவலுக்கு: இதன் இணையாக மூலக்கூற்று உள்விசை என்றும் ஒன்றைத் தொடங்கி வைத்திருக்கிறேன். --இரா. செல்வராசு (பேச்சு) 21:46, 1 செப்டம்பர் 2013 (UTC)

கிசா நெக்ரோபோலிஸ்

தொகு

[1] - இந்தப் பட்டியலின் படி தமிழில் இல்லாத முக்கிய கட்டுரையாக Giza Necropolis காட்டப்பட்டுள்ளது. எனினும் இங்கேயுள்ள பட்டியிலில் இந்தத் தலைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுரையை எழுதினால் அது கட்டுரைப் போட்டியில் தகுதி பெறுமா? --சிவகோசரன் (பேச்சு) 05:29, 3 செப்டம்பர் 2013 (UTC)

இப்பகுதியில் இல்லாத கட்டுரைகளை விரிவாக்கலாமா?

தொகு

என் விருப்பத்தலைப்பில் குறுகிய அளவுள்ள கட்டுரைகள் இப்பட்டியலில் இல்லை. அவற்றை நான் எப்படியேனும் விரிவாக்கதான் போகிறேன். ஆனால் அவற்றை கட்டுரை போட்டியில் சேர்க்க முடியுமா? (துடுப்பாட்ட மற்றும் மற்ற விளையாட்டு ஒப்போலை அணிகள்) --Fireishere (பேச்சு) 15:02, 4 திசம்பர் 2013 (UTC)Reply

எனக்கும் பட்டியலில் இல்லாத பல தலைப்புகளை விரிவாக்க ஆசைதான்! போட்டியின் முதன்மை நோக்கம் ஒன்று உள்ளது. அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் அடிப்படையில், மொழிகளின் தரவரிசைப் பட்டியல் உண்டு. அதில் 25 சதவீதம் தான் தமிழ் பெற்றுள்ளது. நூறு சதவீதத்தை அடைவதற்கு ஒரே வழி, பட்டியலில் உள்ள கட்டுரைகளை விரிவாக்குவதே! இதுவே அதன் நோக்கம். பிற கட்டுரைகளுக்கு அனுமதி இல்லை என்றே நினைக்கிறேன். விதியை மீண்டும் ஒரு முறை படிக்கவும் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:21, 4 திசம்பர் 2013 (UTC)Reply
நன்றி தமிழ்க்குரிசில். அப்போ கட்டுரை போட்டிக்கு நான் வரவில்லை. எனக்கு பிடித்தவற்றை நான் தொடர்கிறேன். -−முன்நிற்கும் கருத்து Fireishere (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஐயய்யோ, அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க. போட்டியின் நிர்வாகிகளை கேட்டால், ஒருவேளை அனுமதி தரக் கூடும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:47, 4 திசம்பர் 2013 (UTC)Reply

தமிழ்க்குரிசில், கட்டுரைப் போட்டிக்கு நிருவாகி, நடுவர் என்றெல்லாம் யாரும் இல்லை. அன்டனும் தென்காசி சுப்பிரமணியனும் ஒருங்கிணைப்புப் பணிகளைக் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக இன்னும் சிலர் கை கொடுத்தால் நன்றாக இருக்கும். அனைத்து விதிகளும் புறவயமாகவே உள்ளன. அவற்றைப் படித்துப் பார்த்து எந்தவொரு விக்கிப்பயனரும் ஏற்புடைய கருத்தை முன்வைக்கலாம்.

போட்டியின் முதல் நான்கு மாதங்களில் வந்த பயனர்களின் கருத்துகளை அடுத்து நிறைய மாறுதல்களைச் செய்திருக்கிறோம். தொடர்ந்து விதிகளை மாற்றிக் கொண்டிருப்பது நன்றாக இருக்காது. தற்போது 10,000 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவையும் போதாது என்றால், வழக்கம் போல விக்கிப்பீடிய கட்டுரைகளை விரிவாக்க வேண்டிது தான் :) அவை போட்டிக் கணக்கில் வாரா--இரவி (பேச்சு) 16:50, 7 திசம்பர் 2013 (UTC)Reply

நாங்கள் தேடும் தலைப்பு உள்ளதா என இலகுவில் பார்க்க தேடிக்கண்டு பிடித்து மாற்றவும் கருவி உதவும். ஆனால் இப்பக்கம் காக்கப்பைட்டுள்ளதால் முடியவில்லை. இல்லாவிடில் கடினப்பட்டு தேட வேண்டி உள்ளது. இதை புகுபதிந்த பயனர்கள் மட்டும் தொகுக்கும் வகையில் காக்க முடிந்தால் நன்று, நிர்வாகிகள் உதவுக........--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 17:22, 26 பெப்ரவரி 2014 (UTC)
Return to the project page "2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்".