விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

(விசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers or Viduthalai Siruthikal katchi) தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது தமிழ்நாடு மட்டும் அல்லாமல் பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆனது பரவி காணப்படுகிறது. இது 1972 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இயக்கமான அன்றைய தமிழக தலைவராக இருந்த மதுரையை சார்ந்த மலைச்சாமி அவர்களை படுகொலை செய்யப்பட்ட பிறகு அப்போது மதுரையில் தடயவியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த திருமாவளவன் மதுரையில் நடந்த மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தின் முடிவில் ஒருமித்த தலைவராக திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சாதி ஒழிப்பு, சாம்பவர் (பறையர்) மக்கள் எழுச்சி, தமிழ் தேசியம், மக்கள் விடுதலைக்கு திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று தமிழ் வழி பெயராக மாற்றம் செய்தார். [2][3] 2024 மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இக் கட்சி ஐந்தாவது மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. [4]

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தலைவர்முனைவர் தொல். திருமாவளவன்
பொதுச் செயலாளர்து. இரவிக்குமார், சிந்தனை செல்வன்
தொடக்கம்1982 - மலைச்சாமி என்பவரால் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் தமிழக கிளையாக தொடங்கப்பட்டது.
கொள்கை
கூட்டணி1) தமாகா - (விசிக சந்தித்த முதல் தேர்தல் 1999-2001)
2) திமுக-பாஜக (தேஜகூ) (2001-2004)
3) விசிக - ஐஜத மக்கள் கூட்டணி (2004-2006)
4) அதிமுக-(ஜனநாயக மக்கள் கூட்டணி) : (2006-2006)
5) திமுக-காங்கிரஸ் (ஐமுகூ) (2009-2014) & (2019-2021 வரை)
6) திமுக-(ஜமுகூ) : (2014-2015) (மமுகூ) (2021-தற்போது வரை)
7) மக்கள் நலக் கூட்டணி (2015-2016)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
2 / 543
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
4 / 234
[1]
இணையதளம்
http://www.vck.in/
இந்தியா அரசியல்

அரசியல் கட்சி வரலாறு

தொகு
  • இக்கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது.
  • ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.

கொடி

தொகு

விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும், சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் ஏற்றினார்.[5]

தேர்தல் நிலைப்பாடு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://indianexpress.com/article/cities/chennai/tamil-nadu-polls-vck-wins-four-seats-including-two-general-constituencies-7301502/
  2. ஆர். முத்துக்குமார், ed. (2010). தமிழக அரசியல் வரலாறு - பாகம் - 2. கிழக்கு பதிப்பகம். {{cite book}}: Text "ISBN: 9788184937893" ignored (help)
  3. Andrew Wyatt, ed. (2010). Party System Change in South India: Political Entrepreneurs, Patterns and Processes. Routledge.
  4. Kumaresan, S. (2024-06-05). "With 2 wins, VCK to become fifth political party in TN to get 'state party' tag". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  5. அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3
  6. வி.சி.க.விற்கு 6 தொகுதிகள்: தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு - தினமணி நாளிதழ் செய்தி (04-3-2021)

வெளி இணைப்புகள்

தொகு