விடுதலை பாகம் 2

தமிழ்த் திரைப்படம் 2024
(விடுதலை பகுதி 2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விடுதலை பகுதி 2 (Viduthalai Part 2) என்பது ஆர். எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் கீழ் இணைந்து தயாரித்து வெற்றிமாறன் இயக்கத்தில் 2024 வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். விடுதலை பகுதி 1(2023) படத்தின் தொடர்ச்சியான இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையின் தழுவலாகும். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களான சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, ராஜிவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, சேத்தன் மற்றும் மூணார் ரமேஷ் ஆகியோர் இந்த படத்திலும் தொடர்ச்சியாக தங்கள் பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார்கள். மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், கென் கருணாஸ் மற்றும் சூர்யா விஜய் சேதுப்தி ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.

விடுதலை பாகம் 2
பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்புஎல்ரெட் குமார்
வெற்றிமாறன்
திரைக்கதைவெற்றிமாறன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புஆர். இராமர்
கலையகம்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடு31 சனவரி 2024 (2024-01-31)(ராட்டர்டேம், சர்வதேச திரைப்பட விழா)
20 திசம்பர் 2024 (India)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படம் முதலில் ஒரே பாகமாக எடுக்கவிருப்பதாக 2021 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் புகைப்படம் எடுக்கும் பணி 2020 திசம்பரில் தொடங்கியது. முக்கியமாக சத்தியமங்கலம் மற்றும் செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இருப்பினும், செப்டம்பர் 2022 இல், படம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் பகுதியின் படப்பிடிப்பு 2022 திசம்பர் பிற்பகுதியில் முடிவடைந்தது. அதே நேரத்தில் இந்த பகுதியின் படப்பிடிப்பும் அக்டோபர் 2024 தொடக்கத்தில் முடிவடைந்தது. இளையராஜா இசையமைத்த இந்தப் படத்திற்கு ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாம் பகுதியும் முதல் பகுதியுடன்,ராட்டர்டேமில் 31 ஜனவரி 2024 அன்று நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

வெளியீடு

தொகு

இந்த படம் திசம்பர் 20,2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீசு வாங்கியுள்ளது.[1]

படத்தின் மேலதிக ஊடக சேவை உரிமங்களை ஜீ5 வாங்கியுள்ளது. அதே நேரத்தில் செயற்கைக்கோள் உரிமங்களை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Watch: Vetri Maaran's 'Viduthalai' gets standing ovation at Rotterdam film festival". இந்தியா டுடே (in ஆங்கிலம்). 1 February 2024. Archived from the original on 29 August 2024. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  2. Viduthalai: வெற்றிமாறனின் விடுதலை படம் குறித்த சூப்பர் அப்டேட்! [Viduthalai: Super Update on Vetrimaran's Viduthalai!]. News18. 1 September 2022. Archived from the original on 19 July 2023. பார்க்கப்பட்ட நாள் 10 September 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை_பாகம்_2&oldid=4168313" இலிருந்து மீள்விக்கப்பட்டது