விழுப்புரம் பேருந்து நிலையம்
விழுப்புரம் பேருந்து நிலையம் (Villupuram Bus Stand) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேருந்து நிலையம் ஆகும். இங்கு விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அமைந்துள்ளது.
விழுப்புரம் பேருந்து நிலையம் | |
---|---|
விழுப்புரம் பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதி | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | திருச்சி சாலை, விழுப்புரம், தமிழ்நாடு. அஞ்சல் குறியீட்டு எண் – 605602. இந்தியா |
ஆள்கூறுகள் | 11°44′30″N 78°57′46″E / 11.7416°N 78.9627°E |
உரிமம் | விழுப்புரம் நகராட்சி |
இயக்குபவர் | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்[1] |
நடைமேடை | 3 (67 தடுப்புகள்) |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | |
மற்ற தகவல்கள் | |
பயணக்கட்டண வலயம் | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் மண்டலம்)[2] |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2000 |
பயணிகள் | |
பயணிகள் | 50,000 (தினந்தோறும்) |
அமைவிடம்
தொகுஇப்பேருந்து நிலையமானது திருச்சி சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து கிழக்கு பாண்டி சாலையில் 2 கி.மீ தொலைவில் பழைய பேருந்து நிலையமும் (அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்), தமிழ்நாட்டின் தென்னக இரயில்வேயின், மிகப் பெரிய இரயில் நிலையங்களின் ஒன்றான விழுப்புரம் இரயில் நிலையம் 2.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையமானது நகரப் பேருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து
தொகுஇப்பேருந்து நிலையமானது தென் தமிழகத்தை இணைக்கும் முக்கியப் பேருந்து நிலையமாகும். தலைநகரம் சென்னையில் இருந்து தென்தமிழகமான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்தை வந்தடைந்த பின்னே செல்கிறது. இங்கிருந்து வடக்கு திசையில் 160 கி.மீ தொலைவில் சென்னையும், தெற்கு திசையில் 160 கி.மீ தொலைவில் திருச்சியும், கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் புதுச்சேரியும், மேற்கு திசையில் 38 கி.மீ தொலைவில் திருக்கோவிலூரும், தென்கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் கடலூரும், வடமேற்கு திசையில் 60 கி.மீ தொலைவிலும் திருவண்ணாமலையும் மற்றும் 44 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டையும் மற்றும் ஆரணி 93 கிமீ தொலைவிலும், தென்மேற்கு திசையில் 144 கி.மீ தொலைவில் சேலமும் அமைந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி வழியாக கடலூர், விருத்தாச்சலம், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமில்லாமல் செஞ்சி, ஆரணி வழியாக வேலூருக்கும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது
நடைமேடைகள்
தொகுஇப்பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள், அரசு விரைவுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், கருநாடக அரசுப் பேருந்துகள் போன்றவை அனுமதிக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையத்தில் 3 நடைமேடைகளும், 67 தடுப்புகளும் உள்ளன.
நடைமேடை | செல்லும் பேருந்து |
---|---|
1 | புதுச்சேரி, வேலூர், திண்டிவனம், திருக்கோவிலூர் , ஆரணி, திருப்பதி, திருவண்ணாமலை, கிருட்டிணகிரி, தருமபுரி, |
2 | சென்னை, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், பண்ருட்டி, நெய்வேலி, கடலூர் |
3 | திருவனந்தபுரம், மதுரை, திருநெல்வேலி, பழனி, ஈரோடு , திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், உளுந்தூர்பேட்டை , சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Objective of Departments". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/transport/handbook-transport.pdf. பார்த்த நாள்: 2012-10-07.
- ↑ "TNSTC Viluppuram". Tamil Nadu State Transport Corporation.